Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. புதுடில்லி: 'கொரோனாவை கட்டுப்படுத்த, தென் கிழக்கு ஆசிய நாடுகள், உடனடி தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என, உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் கிழக்கு ஆசியாவில் உள்ள, 11 நாடுகளில் எட்டு நாடுகளில் தற்போது, கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவியிருக்கிறது. அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில், இந்தியா இரண்டாவது இடத்தை எட்டியுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் தென் கிழக்கு ஆசிய இயக்குநர் பூனம் கெட்ரபால் சிங் தெரிவித்துள்ளதாவது: தென் கிழக்கு ஆசிய நாடுகளில் தற்போது, கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. நேற்று (17ம் தேதி) மாலை நிலவரப்படி, தாய்லாந்து - 177, இந்தியா - 147, இந்தோனீசியா - 134, இலங்கை - 19, மாலத்தீவுகள் - 13, வங்கதேசம் - 5, நேபாள் மற்றும் ப…

    • 0 replies
    • 270 views
  2. காலிதா ஜியா: 'கூச்ச சுபாவமுள்ள' ஒரு இல்லத்தரசி ராணுவத்தையே எதிர்த்து நின்று பெரும் தலைவரான கதை பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,காலிதா ஜியா வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமராக இருந்தார். 1991 முதல் 1996 வரையிலும் 2001 முதல் 2006 வரையிலும் ஆட்சி செய்தார். 30 டிசம்பர் 2025, 08:22 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரான காலிதா ஜியா, தனது 80 வயதில் காலமானார். நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அவரது கணவர் ஜியாவுர் ரஹ்மான், 1977-ல் அதிபராகப் பொறுப்பேற்றார். அந்த நேரத்தில், தனது இரண்டு மகன்களுக்காக அர்ப்பணிப்புடன் இருந்த ஒரு "கூச்ச சுபாவமுள்ள இல்லத்தரசி" என்று காலிதா ஜியா விவரிக்கப்பட்டார். ஆனால், 1…

  3. தேச விரோத மற்றும் ஏழை விரோத சக்திகள் இந்தியாவில் வெறுப்பு மற்றும் வன்முறையை பரப்புவதாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் சத்தீஸ்கர் மாநிலத்தில் புதிய சட்டமன்ற கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் காணொளி காட்சி வாயிலாக உரையாற்றிய அவர், இந்திய ஜனநாயகத்தில் சர்வாதிகாரத்தின் தாக்கம் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோதியையோ அவரது அரசையோ நேரடியாகக் குறிப்பிடாத அவர், "இந்திய மக்கள், பழங்குடியினர், பெண்கள், இளைஞர்கள் ஆகியோர் தங்கள் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். கருத்துரிமை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. ஜனநாயகம் அழி…

  4. விவசாயிகளை பயங்கரவாதிகளாக பதிவிட்ட நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு.! விவசாயிகளை பயங்கரவாதிகளாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நடிகை கங்களா ரணாவத் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கோர்ட்டு உத்தரவின்பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்திய மத்திய அரசு வேளாண் சீர்திருத்த சட்டம் உள்ளிட்ட 3 சட்ட திருத்தங்களை சமீபத்தில் அமல்படுத்தியது. இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாகவும், இந்த சட்ட திருத்தங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடிகை கங்கனா ரணாவத் தனது டுவிட்டர் பக்கத்தில், "மத்திய அரசின் வேளாண் சீர்திருத்த சட்ட…

  5. இந்தியாவின், உணவு தானியங்கள் ஏற்றுமதியை... உலகமே எதிர்பார்த்து இருப்பதாக... பியூஷ் கோயல் தெரிவிப்பு இந்தியாவின் உணவு தானியங்கள் ஏற்றுமதியை உலகமே எதிர்பார்த்து இருப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். உலக வர்த்தக அமைப்பு அனுமதித்தால் உலகத்துக்கே உணவுப் பொருட்களை வழங்க இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் மோடி கூறியதை அடுத்து இதனை பியூஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார். உலகளாவிய சூழல்களால் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உக்ரைன் போரால் விலைவாசி உயர்ந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தானிய உற்பத்தியால் இந்தியா உணவுப் பொருள் ஏற்றுமதியை எதிர்நோக்குவதாகக் கூறிய பியூஷ் கோயல், கடந்த சில வாரங்களில் 20 முதல் 30 இலட்சம் தொன்கள்…

  6. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிலாவல் பூட்டோ, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கட்டுரை தகவல் எழுதியவர்,வினீத் கரே பதவி,பிபிசி செய்தியாளர், டெல்லி 2 மணி நேரங்களுக்கு முன்னர் அடுத்த மாதம் கோவாவில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ ஸர்தாரி இந்தியா வரவுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. எஸ்சிஓ என்பது பிராந்தியத்தின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட பல்வேறு நாடுகளின் கூட்டமைப்பாகும். இது ஜூன் 2001இல் ஷாங்காயில் உருவாக்கப்…

  7. பட மூலாதாரம்,GETTY IMAGES 9 மே 2024, 10:02 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் நீண்ட காலமாகவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, கெளதம் அதானி ஆகியோரை பிரதமர் நரேந்திர மோதியுடன் இணைத்து விமர்சித்து வருகிறார். ஆனால், அதற்கெல்லாம் பதில் பேசாமல் இருந்த மோதி, முதல் முறையாக தேர்தல் பரப்புரையின்போது அதே அம்பானி, அதானியின் பெயரைச் சொல்லி காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ளார். புதனன்று தெலங்கானாவின், கரீம்நகர் தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த மோதி, “தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து ராகுல் காந்தி அம்பானி மற்றும் அதானி என்ற பெயர்களை உச்சரிப்பதையே நிறுத்தி விட்டார்,” என்று கூறினார். ர…

  8. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை அண்மையில் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் இந்த தடை தொடர வேண்டுமா? என தீர்மானிப்பதற்காக இந்திய மத்திய அரசு , உயர்நீதிமன்ற நீதிபதி சங்கீதா திங்ரா ஷேகல தலைமையில் தீர்ப்பாயம் ஒன்றினை அமைத்துள்ளது. தி 1991-ம் ஆண்டு முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை மத்திய அரசு தடை செய்ததுடன் இந்த தடை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடை தொடர்வதற்கு போதுமான காரணங்கள் இருக்கிறதா? இல்லையா? என்பது பற்றி தீர்மானிக்க மத்திய உள்துறை அமைச்சகத்தினால் குறித்த …

  9. அபிநந்தன் பாகிஸ்தான் வீரர்களிடம் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை – பழி வாங்கலா? இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் பாகிஸ்தான் வீரர்களிடம் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை பாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கேலி செய்யும் விதமாக கராச்சியில் உள்ள பாகிஸ்தான் விமான படை அருங்காட்சியகத்தில் அபிநந்தனின் உருவ பொம்மை வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வீரர் ஒருவர் அபிநந்தனை சிறைப்பிடித்து அழைத்து செல்வது போன்று அது வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானப் படையைச் சேர்ந்த எப்-16 ரக விமானத்தை இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் மிக்-21 ரக விமானத்தைக் கொண்டு தாக்கி அழித்தார். இந்த ந…

  10. 24 APR, 2025 | 05:17 PM இந்திய விமானங்களிற்கு தனது வான் எல்லையை மூடியுள்ள பாக்கிஸ்தான் இந்தியாவுடனான அனைத்து வர்த்தகநடவடிக்கைகளையும் இடைநிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவிற்கு சொந்தமான இந்தியாவிலிருந்து இந்தியாவிலிருந்து இயங்கும் அனைத்து விமானங்களிற்கும் தனது வான் எல்லையை மூடுவதாக பாக்கிஸ்தான் அறிவித்துள்ளது என ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. பாக்கிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு செல்லும் அல்லது மூன்றாவது நாட்டிலிருந்து பாக்கிஸ்தான் ஊடாக இந்தியாவிற்கு செல்லும் பொருட்கள் உட்பட வர்த்தக நடவடிக்கைகளை இடைநிறுத்துவதாகவும் பாக்கிஸ்தான் அறிவித்துள்ளது. பாக்கிஸ்தானிற்கு என ஒதுக்கப்பட்ட நீரோட்டத்தை தடை செய்யவோ அல்லது திருப்பிவிடவோ மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கையையும் போர…

  11. கோலாலம்பூர்: மலேசியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அங்குள்ள மசூதி ஒன்றில் தொழுகையில் ஈடுபட்டவர்களுக்கே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 3ல் 2 பகுதியிலானோர் தொழுகை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் 7900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மலேசியாவில் இதுவரை 673 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இருவர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஸ்ரீ பெடாலிங் மசூதியில் கடந்த பிப்.,27ம் முதல் மார்ச் 1 வரையிலான 4 நாள் தொழுகை நடைபெற்றது. இதில் கனடா, நைஜீரியா, இந்தியா, ஆஸ்திரேலியா உ…

    • 2 replies
    • 349 views
  12. இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டட பணிகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி பட மூலாதாரம், OM BIRLA OFFICIAL TWITER PAGE இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தை கட்டுவதற்கு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளது. நாடாளுமன்ற புதிய கட்டட திட்ட வடிவமைப்பின், அமலாக்கத்தில் விதி மீறல்கள் இருப்பதாக குற்றஞ்சாட்டி பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த நிலையில், இந்த தீர்ப்பை மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இன்று (ஜனவரி 5) வழங்கியுள்ளது. முன்னதாக, இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாடாளுமன்ற புதிய கட்டடம் மற்றும் அதையொட்டிய…

  13. மனித மிருகம் ஒன்று ராஜஸ்தான் மாநிலத்தில் பெண் ஒருவருக்கு அறுவைசிகிச்சை நிகழ்ந்து, ஒக்சியன் வழக்கப்பட்ட நிலையில் icu ல் இருந்த நிலையில், கணவர், இரவு தங்க முடியாது என்று சொல்லப்பட்டதால் வீடு சென்ற நிலையில், அங்கிருந்த வார்டு பாய் அந்த பெண் மீது பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். யாருக்காவது சொன்னால், அனைத்தையுமே பிடுங்கி எறிந்து, கொலை செய்து விடுவேன் என்று வேறு சொல்லி இருக்கிறான். இரவு முழுவதும் அழுத படியே இருந்த பெண், காலையில் வந்த கணவருக்கு, தனக்கு நிகழ்ந்ததை சொல்ல, அந்த கயவன், கைதாகி உள்ளான். Source: thatstamil.com

  14. ஜூன் 21 முதல் அனைவருக்கும் தடுப்பூசி இலவசம்: பிரதமர் மோடி மின்னம்பலம் வரும் ஜூன் 21-ஆம் தேதி முதல் இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்றும் தடுப்பூசியை ஒன்றிய அரசு மொத்தமாகக் கொள்முதல் செய்யும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இன்று ஜூன் 7 மாலை 5 மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர்....." நாட்டில் நிலவும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை விரைவில் கட்டுப்படுத்தப்படும். தடுப்பூசி முகாம் களை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொடிய தொற்று நோய் உலகத்தையே பாதித்து வருகிறது. இந்த நிலையில் நாம் கொரோனாவுக்கு எதிராக கடுமையாக போராடி வருகிறோம்.…

    • 6 replies
    • 450 views
  15. கேரளாவில் தொலைத்த குழந்தையை மீட்ட தாயின் நீண்ட போராட்டம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,VIVEK NAIR படக்குறிப்பு, தனது அனுமதியின்றி தன் தந்தை தனது குழந்தையை எடுத்துச்சென்றுவிட்டதாக அனுபமா எஸ் சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார் இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவில் காணாமல் போன தனது குழந்தையைத் தேடும் ஒரு தாயின் ஒராண்டு கால தேடல் புதன்கிழமை முடிவுக்கு வந்தது. நீதிமன்றம் குழந்தையை அவரிடம் ஒப்படைத்தது. மக்களிடையே கோபத்தையும், அரசியல் புயலையும் கிளப்பிய இந்த சர்ச்சைக்குரிய விஷயம் தொடர்பாக சௌதிக் பிஸ்வாஸ் மற்றும் அஷ்ரப் படானாவும் வெளியிட்ட விவரங்கள் இதோ. காணாமல் போன தங்கள் க…

  16. ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்... இந்தியா வருகை! ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லியென் ஏப்ரல் மாதம் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் இந்தியா வருகைத்தரவுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு வருகை தரும் அவர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ஐரோப்பிய ஆணைய தலைவரின் இந்திய வருகை முக்கியதுவம் மிக்க விடயமாக பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2022/1277438

  17. குடியரசு தலைவர் தேர்தல் ஹைலைட்ஸ்: பிபிஇ ஆடையுடன் ஓபிஎஸ், நிர்மலா - தனி விமானத்தில் வந்த உதயநிதி - சர்ச்சையான சுயேச்சை எம்எல்ஏ ஓட்டு - ஹைலைட்ஸ் 43 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, பிபிசி கவச ஆணையுடன் வாக்குரிமை செலுத்தும் ஓ.பன்னீர்செல்வம் (இடது) இந்தியாவின் அடுத்த குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு திங்கட்கிழமை (ஜூலை 18) மாலையில் நிறைவடைந்தது. இந்த தேர்தலையொட்டி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டமன்ற வளாகங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவில் பதிவான ஓட்டுகள் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டு, ஜூலை 21ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும். அன்றே முடிவகள் அற…

  18. இந்தியாவை எதிர்க்க பிலாவல் பூட்டோ பின்பற்றும் 'தாத்தா வழி அரசியல்' கட்டுரை தகவல் எழுதியவர்,இக்பால் அகமது பதவி,பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோவின் அறிக்கை ஒன்று சமீப நாட்களில் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளது. 2022 டிசம்பர் 15 ஆம் தேதி நடந்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் கூட்டத்திற்குப் பிறகு அவர் பிரதமர் நரேந்திர மோதியை 'குஜராத்தின் கசாப்புக்காரர்’ என்று அழைத்தார். முன்னதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பாகிஸ்தானை 'பயங்கரவாதத்தின் மையம்' என்று குறிப்பிட்டி…

  19. கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.700 கோடி வழங்கப்படும் என்று ஐக்கிய அரபு அமீரகம் ஒரு போதும் அறிவிக்கவில்லை என்று அந்நாட்டுத் தூதர் அகமது அல்பானா விளக்கம் அளித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதியுதவியை ஏற்க மறுப்பதாக மத்திய அரசு மீது கேரளா குற்றம்சாட்டி வந்த நிலையில், அந்நாட்டின் தூதர் இவ்வாறு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் பெய்த மழை காரணமாக அம்மாநிலம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு மத்திய அரசு இதுவரை ரூ.600 கோடியை வெள்ள நிவாரணமாக வழங்கியுள்ளது. இந்நிலையில், கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ஐக்கிய அரபு அமீரகம் நாடு ரூ.700 கோடியை அறிவித்துள்ளதாக அம்மாநில மு…

    • 0 replies
    • 393 views
  20. 19 AUG, 2023 | 10:46 AM இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்கும் வகையில் சீலிங் மின்விசிறிகளில் தற்கொலை தடுப்பு சாதனத்தை பொருத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தற்கொலையை தடுக்கும் வகையில் கல்லூரி விடுதிகளில் ஸ்பிரிங் கொண்ட மின்விசிறிகளில் பொருத்தப்பட்டு வருகின்றன. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஐஐடி - ஜேஇஇ நுழைவுத் தேர்வு நீட் நுழைவுத் தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் வந்து தனியார் கோச்சிங் மையங்களில் தங்கிப் படிப்பதுண்டு. இந்நிலையில் நேற்றிரவு ஐஐடி நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி மேற்கொண்டுவ…

  21. மேகதாது.. தமிழகத்திற்கு எதிராக கர்நாடகா போராட்டம்.. நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார் ! டெல்லி: மேகதாது அணை கட்டுவது தொடர்பாக டெல்லியில் கர்நாடக எம்.பிக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர். இந்த போராட்டத்தில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான நிர்மலா சீதாராமனும் கலந்து கொண்டு தமிழகத்திற்கு எதிராக கோஷமிட்டு போராடப் போகிறார். மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக தமிழக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் போராடி வருகிறார்கள். தமிழகத்தை சேர்ந்த அனைத்து எம்.பிக்களும் தினமும் நாடாளுமன்றத்தில் போராடி வருகிறார்கள்.இதனால் நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடரே முடங்கி உள்ளது. இந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு எதிராக கர்நாடக எம்.பிக்கள் முடிவு செய்துள்ளனர…

  22. February 25, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn பாகிஸ்தானுக்கு இந்திய விவசாயிகள் காய்கறிகளை அனுப்ப மறுத்து ஏற்றுமதியை முற்றிலும் நிறுத்திவிட்டதால், அங்கு காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஜம…

  23. இந்தியாவுடனான வர்த்தக நடவடிக்கைகளை முறித்துக்கொள்ள அமெரிக்கா உத்தேசம் இந்தியா மற்றும் துருக்கி உடனுடனான வரி தீர்வை மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான பொது உடன்பாட்டை முறித்துக் கொள்வதற்கு அமெரிக்கா உத்தேசித்துள்ளது. அதன்படி குறித்த நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் அமெரிக்காவிற்குள் கொண்டுவரப்படுவதற்கு தடை விதிக்கப்படவுள்ளது. அதன் சந்தைகளுக்கு நியாயமான அணுகலை வழங்குவது தொடர்பாக இந்தியா அமெரிக்காவிற்கு உறுதியளிக்க தவறியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த உடன்பாட்டில நீடிப்பதற்கு துருக்கி தகுதியற்றது என்ற அடிப்படையில் அதனுடனான செயற்பாடுகளையும் முறித்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீனாவிற்கு…

  24. இந்தியாவுடன் எதிர்பாராத விதமாக போர் மூண்டு விட வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை வாபஸ் பெறுவதற்கான அரசியலமைப்பின் 370வது பிரிவின் விதிகளை இந்தியா ரத்து செய்து அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்த பின்னர், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. தீவிரவாதிகளை இந்தியாவிற்குள் ஊடுருவச் செய்ய, பாகிஸ்தான் கடும் முயற்சிகளை எடுத்து வருவதாக, இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்ட குரேஷி, கூட்டத்தின் இடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளி…

    • 0 replies
    • 399 views
  25. அயோத்தி தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி அயோத்தி தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. குறித்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது. இதில் அயோத்தி தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட 18 சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். நெடுங்காலமாக சர்ச்சையில் இருந்த அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 9ஆம் திகதி வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. அயோத்தியில் பிரச்சினைக்குரிய நிலத்தில் இராமர் கோயில் கட்டிக்கொள்ளலா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.