Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இந்தியா – சீனா இடையே 15ஆவது சுற்று பேச்சுவார்த்தை குறித்த அறிவிப்பு! இந்தியா – சீனா இடையே 15ஆவது சுற்று பேச்சுவார்த்தை எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக ஜனவரி மாதம் இரு நாடுகள் இடையே 14ஆவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், சுமூக முடிவு எட்டப்படாதமையினால் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. கடந்த 2020 ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா – சீன இராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது. https://athavannews.com/2022/1271114

  2. இந்தியா – சீனா எல்லைத் தகராறு மோடி- ஷீ சந்திப்பால் தீருமா? Bharati October 17, 2020 இந்தியா – சீனா எல்லைத் தகராறு மோடி- ஷீ சந்திப்பால் தீருமா?2020-10-17T06:28:55+05:30அரசியல் களம் FacebookTwitterMore கேணல் ஆர் ஹரிஹரன் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷீ ஜின்பிங் ஆகிய இருவரும், நவம்பர் 17ந் தேதி ரஷ்யாவின் தலைமையில் நடக்கவிருக்கும் ப்ரிக்ஸ் என்ற நான்கு நாடுகள் (பிரேசில், ரஷ்யா, சீனா, இந்தியா, தெற்கு ஆப்ரிக்கா) கூட்டமைப்புத் தலைவர்கள் சந்திப்பின் போது நேரடி பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று செய்திகள் கூறுகின்றன. அந்த சந்திப்பு, விடியோவில் நிகழும் மெய்நிகர் (virtual) பேச்சுவார்த்தையானாலும், லடாக்கில…

  3. இந்தியா – சீனா புவிசார் அரசியல் பொறியிலிருந்து விலகி புதிய பாதையை கண்டுபிடிக்க வேண்டும் - சீன தூதர் By NANTHINI 27 OCT, 2022 | 03:04 PM சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள ஆழமான உறவுகளையும், பொதுவான நிலையையும் எடுத்துரைத்த இந்தியாவுக்கான சீனத் தூதர் சன் வெய்டாங், தனது பிரியாவிடை அறிக்கையில், புவிசார் அரசியல் பொறியிலிருந்து நாம் வெளியேறி, வித்தியாசமான புதிய பாதையை கண்டறிய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சீனாவும் இந்தியாவும் ஒன்றாக வளர்ச்சியடைய உலகில் போதுமான இடமுள்ளது. மேலும், இரு நாடுகளும் மக்களும் அமைதியுடன் வாழ்வதற்கான வழியை கண்டுபிடிப்…

  4. இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் 12½ கோடி பேர் உயிரிழக்கும் ஆபத்து: அதிர்ச்சி தகவல் இந்தியா – பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப்போர் மூண்டால் 12½ கோடி பேர் உயிரிழக்கும் ஆபத்து உள்ளதாக ஜேர்மன் நாட்டின் ஆய்வு அறிக்கையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கா‌‌ஷ்மீரில் உள்ள புல்வாமாவில், விடுமுறை முடிந்து கடந்த ஆண்டு பெப்ரவரி 14ஆம் திகதி பணிக்கு திரும்பிக்கொண்டிருந்த துணை இராணுவத்தினரின் வாகனங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தினர். ஜம்மு – ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் மனித வெடிகுண்டைக்கொண்டு நடத்திய தாக்குதலில், 40 வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டு வருகிற ஜெய்‌‌ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய இந்த …

  5. இந்தியா – பாகிஸ்தான் பதற்றமான நிலைமை: ஐ.நா கண்டிப்பு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நீடிக்கும் பதற்றமான நிலைமையை ஐ.நா கண்டித்துள்ளது. ஐ.நாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த ஐ.நா ஊடாக் பேச்சாளர் ஸ்டெப்பான் டுஜாரிக் இந்த கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும், புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானே முழு காரணம் என இந்தியா தெரிவித்து வரும் நிலையில் அதனை பாகிஸ்தான் மறுத்து வருகின்றது. இந்த நிலையில், ஏற்பட்டுள்ள பதற்றமான நிலைமையை தணிக்க ஐ.நாவின் தலையீடு அவசியம் என இரு நாடுகளும் கோரியிருந்தமை குறிப்பிடதக்கது. இதுகுறித்து ஐ.நா செயலாளர் நாயகம் என்டோனியோ குட்டரெஸ், “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையி…

  6. இந்தியா – பாகிஸ்தான் மோதலை முடிவுக்கு கொண்டுவர முக்கிய பங்கு வகித்ததாக ட்ரம்ப் மீண்டும் தெரிவிப்பு! வர்த்தக அச்சுறுத்தல்களைப் பயன்படுத்தி இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராணுவ மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் தான் முக்கிய பங்கு வகித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (06) மீண்டும் ஒருமுறை கூறியுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் மோதல்கள் அதிகரித்திருந்த நிலையில், அணு ஆயுதம் ஏந்திய இரண்டு நாடுகளையும் போர் நிறுத்தத்தை நோக்கித் தள்ளியது அவரது ஆக்ரோஷமான வரி உத்தி என்று கூறிய ட்ரம்ப், தான்தான் உலகளாவிய அமைதியை நிலைநாட்டுபவர் என்று கூறினார். அவரது வரி அச்சுறுத்தலைப் பாராட்டிய அவர், அது வொஷிங்டனுக்கு “நூற்றுக்கணக்கான பில்லியன் டொலர்களை” ஈட்டித் தரு…

  7. இந்தியா – பாகிஸ்தான்: சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள் சீனா வலியுறுத்தல் இந்தியாவும் – பாகிஸ்தானும் சுய கட்டுப்பாட்டை கடைபிடித்து பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளுங்கள் என்று சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கெங் ஷூவாங் (Geng Shuang) தெரிவித்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கெங் ஷூவாங் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்த அவர், “இந்தியாவும் – பாகிஸ்தானும் தெற்கு ஆசியாவில் முக்கியமான நாடுகள். இந்த பிராந்தியத்தில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலவ இரு நாடுகளிடையே நிலையான இருதரப்பு நல்லுறவு நிலவுவது அவசியம். தெற்கு ஆசியா கடைப்பிடித்து வரும் ஒ…

  8. இந்தியா – மாலைதீவுக்கிடையே படகு போக்குவரத்து – ஒப்பந்தம் கையெழுத்து June 9, 2019 இந்தியா மற்றும் மாலைதீவுக்கிடையே படகு போக்குவரத்து தொடங்குவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்திருக்கும் மாலைதீவுகக்கு இந்தியாவில் இருந்து விமான போக்குவரத்து நடைபெற்று வருகின்ற நிலையில் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து படகு போக்குவரத்தையும் ஆரம்பிக்க இருநாடுகளும் திட்டமிட்டிருந்தன. இந்த நிலையில் 2 நாள் பயணமாக நேற்றையதினம் மாலைதீவு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்த நாட்டு ஜனாதிபதி இப்ராகிம் முகமதுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இருநாடுகளுக்குமிடையே படகு போக்குவரத்தை தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டு இறு…

  9. Published By: DIGITAL DESK 3 11 JUL, 2023 | 10:05 AM இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் ஓடிவி என்ற தனியார் தொலைக்காட்சி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் லிசா என்ற மெய்நிகர் செயற்கை செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தியுள்ளது. அச்சு அசலான இளம்பெண் வடிவத்தில் தோற்றமளிக்கும் அந்த செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர், ஆங்கிலம் மற்றும் ஒடியா மொழிகளில் செய்திகளை வாசிக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. தலைநகர் புவனேஸ்வரில் இதற்கான அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. தொலைக்காட்சி ஊடகத் துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஓடிவி நிறுவனம், அதிவேக தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொண்டும், காலத்தின் தேவைக்கு ஏற்பவும் இந்த …

  10. பல்வேறு துறைகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கையானது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாளில் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 2018-19 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதன் முக்கிய தகவல்கள்: 2019 - 20 ஆம் ஆண்டு நிதியாண்டின் பேரியல் பொருளாதாரம் அதிக வளர்ச்சியைக் காணும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி அடுத்த நிதியாண்டில் 7% ஆக இருக்கும். கடந்த நிதியாண்டில் 6.4% ஆக இருந்த நிதி பற்றாக்குறை இந்த நிதியாண்டில் 5.8% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2020 நிதியாண்டில் கடன் வளர்ச்சி அதிகமாகக் காணப்படும். இந்த நிதியாண்டில் கச்சா எண்ண…

    • 1 reply
    • 379 views
  11. இந்தியா அதிரடி: தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்தியது இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொவிட் -19 தடுப்பூசியின் அனைத்து ஏற்றுமதிகளையும் இந்திய தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. உள்ளூர் தேவை அதிகரித்ததன் காரணமாகவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ன. இந்நிலையில், இந்தியாவிடம் 1 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான முன்பதிவை இலங்கை செய்திருந்தது. திட்டமிட்டதன் பிரகாரம் அந்த தடுப்பூசி இன்னும் இரண்டு மாதங்களுக்குள் கிடைக்குமென நம்பிக்கைத் தெரிவித்த இராஜாங்க அமைச்சரான பேராசிரியர் சன்ன ஜயசுமான, இந்தியாவின் தற்காலிக இடைநிறுத்தம் இலங்கைக்கு எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றார். …

  12. இன்னும் 5 நாட்கள்தான்.. இந்தியா இன்னொரு தாக்குதலுக்கு திட்டமிடுகிறது.. பாக். பரபரப்பு குற்றச்சாட்டு! இந்திய விமானப்படை பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக பாகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டி இருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் என்று பாலக்கோடு உட்பட நான்கு இடங்களில் தாக்குதல் நடத்தியது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் 3 அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் இதை மறுத்தது. அதன்பின் பாகிஸ்தான் விமானப்படை இந்திய எல்லைக்குள் புகுந்து தாக்க முயன்றது. இதனால் பெரிய அளவில் போர் பதற்றம் நிலவி வந்தது.பாகிஸ்தானில் பிடிபட்ட…

  13. இந்தியா முன்னுதாரணமாக மாறப்போகிறது.. நாட்டு மக்களுக்கு மோடி அதிரடி கடிதம்.. தொழிலாளர் பற்றி உருக்கம். டெல்லி: நரேந்திர மோடி தலைமையில், பாஜக கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சியமைத்த, முதலாவது ஆண்டு நிறைவு தினம் மே 30ம் தேதியான இன்று அக்கட்சி தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ அரசு முதன்முதலில் 2014 மே 26 அன்று ஆட்சிக்கு வந்தது. பின்னர், கடந்த 2019ம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது, மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அந்த தேர்தலில், பாஜக மகத்தான வெற்றியைப் பெற்று பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் மோடி. பாஜக ஆட்சிக்கு வந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் அனைத்து முன்னணி பத்திரிகைகளில் வெளியாகும் வகையில் ஒர…

  14. இந்தியா உள்ளிட்ட... 16 நாடுகளுக்கு, செல்ல தடை இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல சவுதி அரேபியா தடை வித்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதி முதல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. பெரும்பாலான நாடுகளில் தடுப்பூசி அறிமுகத்திற்கு வந்த பிறகு கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இருப்பினும் ஒரு சில நாடுகளில் மட்டும் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சவுதி அரேபியாவில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினசரி தொற்று விகிதம் கடந்த சில வாரங்களாக உயர்ந்து வர்கிறது. இதையடுத்து சவுதி அரேபிய மக்கள் இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியா, லெபன…

  15. இந்தியா எனும் வார்த்தையை இந்துஸ்தான் அல்லது பாரத் என மாற்றக்கோரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் ஜூன் 2-ல் விசாரணை கோப்புப்படம் புதுடெல்லி இந்திய அரசியலமைப்பில் திருத்தம் செய்து இந்தியா எனும் வார்த்தையை மாற்றி இந்துஸ்தான் அல்லது பாரத் என மாற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு வரும் ஜூன் 2-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. டெல்லியைச் சேர்ந்த ஒருவர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே இல்லாததால், அந்த மனு நேற்று பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது. வரும் ஜூன் 2-ம் தேதி விசாரிக்…

  16. இந்தியா ஒரு முறை தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு 10 முறை தாக்குதல் நடத்தப்படும் – பாகிஸ்தான் : October 14, 2018 இந்தியா தங்கள் நாட்டின் மீது ஒரு முறை துல்லிய தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு 10 துல்லிய தாக்குதல்கள் நடத்தப்படும் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியப்பிரதமர் மோடி கடந்த செப்டம்பர் 30ம் திகதி வானொலி நிகழ்ச்சியில் பேசிய பொழுது, நமது நாட்டின் அமைதிக்கும், வளர்ச்சி சூழலுக்கும் பங்கம் ஏற்படுத்தும் முயற்சிகளில் யார் இறங்குகிறார்களோ, நமது ராணுவத்தினர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பார்கள் என பாகிஸ்தானை மறைமுகமாக குறிப்பிட்டு பேசியிருந்தார். இந்த நிலையில் பிரித்தானியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி குவாமர் ஜா…

  17. இந்தியா குறைந்தளவான அணுவாயுதங்களை கொண்டுள்ளது : ஸ்வீடன் ஆய்வு நிறுவனம் தகவல்! இந்தியா குறைந்தளவிலான அணு ஆயுதங்களை வைத்துள்ளதாக ஸ்வீடனை சேர்ந்த பிரபல ஆய்வு நிறுவனம் நேற்று (திங்கட்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் இந்தியா, சீனா இரு நாடுகளும் 2019-ஆம் ஆண்டில் கையிருப்பில் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன. 320 அதன் மூலம் சீனாவிடம் இப்போது அணு ஆயுதங்களும், இந்தியாவின் கையிருப்பில் 150 அணு ஆயுதங்கள் உள்ள அதேவேளை பாகிஸ்தானிடம் 160 அணு ஆயுதங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு நிறுவனத்தின் கடந்த 2019-ஆம் ஆண்டு அறிக்கையின்படி சீனாவிடம் 290 அணு ஆயுதங்களும் இந்தியாவிடம் 130 முதல் 140 எண்ணிக்கையிலான அணு ஆயுதங்களும் இருக்க …

  18. பட மூலாதாரம்,WTO 8 மணி நேரங்களுக்கு முன்னர் உலக வர்த்தக சபையின் கூட்டத்தில் அரிசி விவகாரத்தில் இந்தியா மீது குற்றஞ்சாட்ட தாய்லாந்து முயன்றது. இது இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ’இந்தியா பொது விநியோக முறைக்காகக் குறைந்த விலையில் அரிசியை வாங்கி, சர்வதேச அரிசி ஏற்றுமதி சந்தையை ஆக்கிரமிப்பதாக’ உலக வர்த்தக அமைப்பிற்கான தாய்லாந்தின் தூதர் பிம்சானோக் வோன்கோர்போன் பிட்ஃபீல்ட், குற்றம் சாட்டினார். தாய்லாந்தின் இந்தக் கருத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட சில குழு உரையாடல்களில் பங்கேற்கவும் இந்திய பிரதிநிதிகள் மறுத்துவிட்டனர் என்று ஊடக அறிக்கைகள் தெ…

  19. இந்தியா உருவாக்கி வரும் விமானந்தாங்கி கப்பலான விக்ராந்தில் பொருத்தப்பட்டிருந்த மிக முக்கியமான டிஜிட்டல் சாதனம் மாயமான சம்பவம் இந்திய பாதுகாப்பு துறையினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கேரளாவின் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் விமானந்தாங்கி கப்பலில் பொருத்தப்பட்டிருந்த டிஜிட்டல் சாதனமே காணாமல் போயுள்ளது. 2009 முதல் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த கப்பலில் பொருத்தப்பட்டிருந்த நான்கு கணணிகள் மற்றும் முக்கிய பொருட்கள் காணாமல்போயுள்ளனஎன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போர்க்கப்பல்களின் வடிவமைப்பு விமானங்கள் எந்த பகுதிகளில் இறங்கவேண்டும் எங்கு ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்கும் போன்ற விபரங்கள் அடங்கிய ஹார்ட்டிஸ…

  20. இந்தியா பலவீனமான நாடில்லை என்பதை சீன படைகளுக்கு நினைவூட்டுகிறோம் – ராஜ்நாத் சிங்! இந்தியாவை தாக்க முயன்றால் கடுமையான பதிலடிகொடுக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு உச்சி மாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் இதனை தெரிவித்தார். இதேவேளை போர் தொடுக்க எல்லா காலகட்டத்தில் நாம் இருக்கவேண்டும் என்றும் அமைதி காலகட்டத்திலும் நாம் தயார் நிலையில் இருத்தல் அவசியம். மேலும் நிலம், வான், கடல் என எந்தவழியிலும் எவரேனும் இந்தியாவை தாக்கினால் அவர்களுக்குக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். ம…

  21. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் முழு பிராந்தியத்திற்கும் மிக முக்கியமான நிகழ்வாகும் (குறியீட்டு படம்) கட்டுரை தகவல் எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாரே பதவி, பிபிசி நிருபர் 40 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வருகிறது. வியாழக்கிழமை இரவு, ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூர் ராணுவ நிலையங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும், அவை முறியடிக்கப்பட்டதகவும் இந்தியா கூறியது. இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் மறுத்துள்ளார். "நம்பகமான தகவலின்படி, லாகூரில் ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கப்பட்டுள்ளது" என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது . 25 இந்திய ஆளில…

  22. இந்தியா பாக்கிஸ்தானில் பனிச்சரிவில் சிக்கி70 பேர் பலி இந்தியா பாக்கிஸ்தானில் பனிச்சரிவில் சிக்கி70 பேர் பலியாகியுள்ளனர். பாக்கிஸ்தானில் 57 பேர் பலியாகியுள்ளனர் எனவும் இரண்டுபேர் காணாமல்போயுள்ளனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாக்கிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஸ்மீரிலேயே இந்த இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதேவேளை இந்தியாவின் காஸ்மீரிலும் பனிச்சரிவு காரணமாக பத்துபேர் உயிரிழந்துள்ளனர். பாக்கிஸ்தானின் நீலும் பள்ளத்தாக்கில் கடும் மழையின் பின்னர் இடம்பெற்றுள்ள பனிச்சரிவு காரணமாக பல கிராமத்தவர்கள் சிக்குண்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பகுதியில் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகள் இடம்பெறுகின்றன பலர் காணாமல்போயுள்ளனர் அவர…

  23. இந்தியா பெரும் ஆபத்தில் இருப்பதாக ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை! கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் இந்தியா பெரும் ஆபத்தில் இருப்பதாக ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டனியோ குட்ரஸ், கவலை வெளியிட்டுள்ளார். தாய்லாந்தில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். முன்பு கணிக்கப்பட்டதை விட தற்போது கடல் மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. கிளைமேட் சென்ட்ரல் எனும் பருவ நிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்யும் அமைப்பின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பூமியின் வெப்பம் 1.5 டிகிரி செல்சியசுக்கு மிகையாகாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்…

  24. இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும்.. அமெரிக்காவின் மிரட்டலால் பரபரப்பு.. என்ன நடந்தது? இந்தியாவின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட இருப்பதாக அமெரிக்க அரசு தெரிவித்து இருக்கிறது. இந்தியாவும் அமெரிக்காவும் நீண்ட காலமாக நட்பு நாடுகளாக இருந்து வருகிறது. நிறைய ஒப்பந்தங்கள் மூலம் இந்தியா அமெரிக்காவுடன் நட்பு பாராட்டி வருகிறது. ஆசியாவிலேயே அமெரிக்காவிற்கு மிகவும் நெருக்கமான நாடு என்றால் அது இந்தியாதான். இந்த நிலையில் இந்த உறவில் பெரிய விரிசல் ஏற்பட்டு உள்ளது.இந்தியா கடந்த சில வருடங்களாக ரஷ்யாவுடன் நெருக்கமாக இருந்து வருகிறது. அதன் ஒரு வகையாக இந்தியா ரஷ்யாவிடம் இருந்து போர் விமானங்களை வாங்கி வருகிறது. இந்த நிலையில் போர் விமானங்கள் மட்டும் இல்லாமல் விண்ணில் …

  25. இந்தியா மீது பொருளாதார தடைகளை விதிக்கக் கூடாது எனக் கோரிக்கை! ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகளை கொள்வனவு செய்வதால் இந்தியா மீது பொருளாதார தடைகளை விதிக்கக் கூடாது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு இரு முக்கிய அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இதன்படி இந்தியா நம்முடைய மிகச் சிறந்த நட்பு நாடு. ஏற்கனவே செய்த ஒப்பந்தத்தின்படி ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகள் வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் நாட்டின் நலனையும் நட்பையும் கருத்தில் கொண்டு இந்தியா மீது பொருளாதார தடைகளை விதிக்கக் கூடாது. காட்சா சட்டத்தின் படி இந்தியாவிற்கு விலக்களிக்க அதிபருக்கு அதிகாரம் உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் காட்சா சட்டத்தின்படி அமெரிக்கா பொரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.