Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பாக்கிஸ்தானிலிருந்து இந்தியாவை நோக்கி புறப்பட்ட புகையிரதத்தை வாஹா எல்லையில் பாக்கிஸ்தான் தடுத்து நிறுத்தியுள்ளது. பாக்கிஸ்தானிலிருந்து புறப்பட்ட சம்ஜௌதா எக்பிரஸை இன்று ஒரு மணியளவில் பாக்கிஸ்தான் அதிகாரிகள் வாஹா எல்லையில் தடுத்து நிறுத்தியுள்ளனர். நாங்கள் சம்ஜௌதா புகையிரதசேவையை நிறுத்த தீர்மானித்துள்ளோம் என பாக்கிஸ்தானின் புகையிரசேவைகளிற்கான அமைச்சர் சேக் ரசீட் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். நான் அமைச்சராகயிருக்கும்வரை சம்ஜௌதா புகையிரதம் சேவையில் ஈடுபடாது என அமைச்சர் தெரிவித்துள்ளார். காஸ்மீர் விவகாரம் தொடர்பில் இந்தியாவுடனான இராஜதந்திர உறவுகளை குறைத்துகொண்டுள்ளதாக அறிவித்துள்ள பாக்கிஸ்தான் இந்தியாவுடனான இரு தரப்பு வர்த்தக உறவுகளை இடைநி…

    • 0 replies
    • 658 views
  2. இந்தியாவிற்கு அமைதிப் புறாவை டுவிட்டரில் தூதுவிட்ட இம்ரான் கான்!!! பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றிருக்கும் இம்ரான் கான் அமைதிப் பேச்சுவார்த்தை நடாத்த வருமாறு இந்தியாவிற்கு தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடாத்திக் கொண்டு மறுபுறம் பயங்கரவாத தாக்குதல்களை கடந்த கால நவாஷ் ஷெரீப் தலைமையிலான அரசாங்கம் ஊக்குவித்தமையால் இந்தியா பாகிஸ்தானுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை நிறுத்திக்கொண்டது. தற்போது பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் எற்பட்டுள்ள நிலையில் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றுள்ளார். பிரதமராக பதிவியேற்றுள்ள இம்ரான் கான் அதிரடியாக பல செயற்பாடுகளில் …

  3. இந்தியாவிற்கு ஆயுதங்களை வழங்க அமெரிக்க ஒப்புதல்! இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டொலர் மதிப்புள்ள 13 கடற்படை துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அமெரிக்க அரசாங்கம் இந்தியாவிற்கு 13 எம்.கே.45 ரக கடற்படை துப்பாக்கிகள் மற்றும் இராணுவ உபகரணங்களை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்கள், உதிரி பாகங்கள், அவற்றை கையாள்வதற்கான பயிற்சி, தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் போக்குவரத்து செலவ…

  4. இந்தியாவிற்கு சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை! இந்தியா பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ளும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா இதனைத் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் இறுதியில் 90 சதவீத நாடுகள், பொருளாதார மந்தநிலையை சந்திக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகப் பொருளாதாரமானது ஒருங்கிணைந்த மந்தநிலையைச் சந்தித்து வருவதாகவும் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா கூறியுள்ளார். பிரெக்ஸிற் மற்றும் அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தகப் போர் ஆகியவை தான் இதற்குக் காரணம் எனவும் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா தெரிவித்துள்ளார். உலக அளவில் பொருளாதார வளர்ச்சி விகிதமானது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவடைய நேரிடும் எனவ…

    • 2 replies
    • 743 views
  5. இந்தியாவிற்கு... அழுத்தம் கொடுக்க, உலகில் எந்த சக்தியும்... இல்லை – பியுஷ் கோயல் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்க உலகில் எந்த சக்தியும் இல்லை என மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார். உலக வர்த்தக அமைப்பின் 12வது அமைச்சர்கள் மாநாட்டில் பேசிய அவர், கொரோனா காலத்தில் ஏழை நாடுகளை காக்க உலக வர்த்தக அமைப்பு தவறிவிட்டதாக குற்றம் சாட்டினார். இந்நிலையில் தற்சார்பு இந்தியா திட்டத்திற்கு யாராலும் அழுத்தம் கொடுக்க முடியாது என்றும் இதனால் ஏற்படும் சவாலை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். இதேவேளை மீனவர்களுக்கான மானியத்தை குறைப்பதற்கான உலக வர்த்தக அமைப்பின் முன்மொழிவுக்கு பியூஷ் கோயல் எதிர்ப்பும் வெளியிட்டார். https://athavannews.…

  6. இந்தியாவிற்கு... உதவ தயாராக இருப்பதாக, அமெரிக்கா அறிவிப்பு! சீனாவின் கடற்படை நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் வகையில் இந்தியாவிற்கு உதவ தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அமெரிக்க அதிகாரி ஒருவர் மேற்படி தெரிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடல் பகுதியில் தடையற்ற வெளிப்படையான வர்த்தகத்திற்கும் அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்தியா தனது இராணுவத்தை நவீனமயமாக்கவும், இந்திய இராணுவத்தினர் ரஷ்யாவின் பூர்வீகமான ஆயுதக் கொள்முதலை சார்ந்து இருக்காமல் இருப்பதற்கும் அமெரிக்கா உதவும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவ…

  7. இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு இதர நாடுகளைப் போன்றது அல்ல – மோடி இரண்டு நாள் விஜயமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதன்போது இருநாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டு நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி ட்ரம்பினை வரவேற்று உரையாற்றினார். இதன்போது கருத்து தெரிவித்த மோடி, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா உங்களை மனதார வரவேற்பதாக தெரிவித்தார். அத்துடன் இந்தியாவின் பன்முகத் தன்மையை எடுத்துக்காட்டுவதாக அகமதாபாத் திகழ்வதாகவும் குறிப்பிட்டார். மேலும் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு இதர நாடுகளைப் போன்றது அல்ல எனவ…

  8. இந்தியாவிற்குள்... பயங்கரவாதம் ஊடுருவினால், ஒடுக்கப்படும்: முப்படை தளபதி ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் பயங்கரவாதம் ஊடுருவினால் அதனை ஒடுக்குவதற்கு தயார் என இந்திய முப்படைத் தளபதி விபின் ராவத் தெரிவித்துள்ளார். தலிபான்கள் அந்நாட்டினை முழுமையாக கைப்பற்ற இரண்டு மாதங்களாகும் என எதிர்பார்த்த நிலையில் அதற்கு மாறாக குறுகிய காலத்துக்குள் அவர்கள் நாட்டை கைப்பற்றியமை ஆச்சரியமளிப்பதாகவும் கூறினார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் அங்கிருந்து இந்தியாவிற்குள் எவ்வாறு பயங்கரவாத நடவடிக்கைகள் ஊடுருவக் கூடும் என்பதில் இந்தியா கவனம் செலுத்தியுள்ளது என்றும் இந்திய முப்படைத் தளபதி குறிப்பிட்டுள்ளார். தெற்காசியாவில் பயங்கரவாதம் இல்லாத சூழல் இருக்க வேண்ட…

  9. இந்தியாவில் முடக்கல் உத்தரவுகள் உட்பட ஏனைய விதிமுறைகைளை மீறுவோர்களிற்கு எதிராக இந்திய டுகாவல்துறையினர் நடந்துகொள்ளும் விதம் குறித்து சர்ச்சைகள் தோன்றியுள்ளன. இந்திய காவல்துறையினர் விதிமுறைகளை மீறுவோரை கடுமையாக தண்டிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. உத்தரபிரதேசத்தின் நகரமொன்றில் வீதியில் பயணிப்பவர்களை முதுகில் பைகளுடன் தாவித்தாவி செல்லுமாறு காவல்துறையினர் பலவந்தப்படுத்துவதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்திய அரசாங்கத்தின் முடக்கல் உத்தரவை தொடர்ந்து வேறு பகுதிகளில் பணியாற்றிவிட்டு தமது பகுதிக்கு திரும்பிக்கொண்டிருந்த தொழிலாளர்களையே காவல்துறையினர் தாவிதாவிச் செல்லுமாறு உத்தரவிட்டுள்ளனர். தொழிலாளர்களை பிடித்த காவல்துறையினர் அவர்களின் மன்ற…

    • 0 replies
    • 312 views
  10. இந்தியாவில் நான்காவது கொரோனா தடுப்பூசியும் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக அறிவிப்பு! இந்தியாவில் நான்காவது கொரோனா தடுப்பூசி எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினர் வைத்தியர் பால் தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசியின் இரண்டு கட்ட சோதனைகள் நிறைவடைந்த நிலையில், அதன் முடிவுகள் மத்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர்களிடம் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் பயோடெக்னோலஜி துறையுடன் சேர்ந்து உருவாக்கப்படும் இந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை நடவடிக்கை விரைவாக ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே கொவிஷீல்ட் மற்றும் கொவேக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், ரஷ்யாவி…

  11. இரண்டாம் உலகப்போரின்போது இமயமலையில் இருக்கும் ஒரு ஆழமான பள்ளத்தாக்கில் ஹரிகிருஷ்ணன் மதுவால் என்ற வனத்துறை ரேஞ்சர் அங்கு ஏரி ஒன்றை கண்டு பிடித்தார். 4800 மீட்டர் உயரத்தில் ஒரு சிறிய பனிக்கட்டி ஏரியில் சுத்தமான தண்ணீரில் மர்மமான சில விஷயங்களை அவர் பார்த்தார். அந்த ஏரி முழுவதும் மனித எலும்புக்கூடுகள் நிரம்பியிருந்தது. தற்போது ரூப்குந்த் ஏரி அல்லது "எலும்புகூடு ஏரி" என்று அது கூறப்படுகிறது. பிரிட்டிஷ் கட்டுப்பாட்டுக்குள் இருந்த இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற ஜப்பானிய ராணுவ வீரர்களின் எலும்பு கூடுகளாக அவை இருக்கலாம் என அதிகாரிகள் அஞ்சினர். ஆனால் அந்த எலும்புக்கூடுகள் சுமார் 500 ஆண்டுகள் பழமையானதாக இருந்தன. அதனால் அதற்கு வாய்ப்பில்லை. …

  12. இந்தியாவில் 1 இலட்சத்து 70 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை! இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. இதன்படி நேற்று புதிதாக 7300 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 65 ஆயிரத்து 386 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 177 பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4711 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 70 ஆயிரத்து 920 பேர் சிகிச்சைகளுக்குப் பின் வீடு திரும்பியுள்ளதுடன் 89 ஆயிரத்து 755 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். …

  13. இந்தியாவில் 1.2 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல் Published By: RAJEEBAN 22 FEB, 2023 | 11:21 AM இந்தியாவில் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு பட்ஜெட்டில் தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்ட போதிலும் இன்னும் 1.2 லட்சம் பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு ரூ.1.13 லட்சம் கோடியைமத்திய அரசு ஒதுக்கியுள்ளது. முந்தைய 2022-23-ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் பள்ளி மற்றும்உயர்கல்விக்கான திட்டமிடப்பட்டசெலவினம் சுமார் 8.3 சதவீதம்அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இந்தியாவில் கல்வித் தரத்தை மேம்படுத்த …

  14. இந்தியாவில் 11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதியவர் ; விசாரணை இந்தியாவில் 84 வயது நிரம்பிய முதியவர் 11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பீகார் மாநிலம் மதிபுரா மாவட்டம் ஓரை கிராமத்தை சேர்ந்த 84 வயதான முதலியவர் அஞ்சல் துறையில் வேலை செய்து ஒய்வு பெற்றவர் ஆவார். இவர் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் தற்போது வரை 11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார். மார்ச், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் என அடுத்தடுத்து இவர் தடுப்பூசி செலுத்திகொண்டுள்ளார். பல முறை இவர் தனது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை கொண்டு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ள…

  15. இந்தியாவில் 13.5 கோடி பேருக்கு வேலை பறிபோகும் அபாயம்! பொருளாதார பாதிப்பால் இந்தியாவில் மட்டும் 13.5 கோடி பேருக்கு வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச மேலாண்மை ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சர்வதேச மேலாண்மை ஆலோசனை நிறுவனமான ஆர்தர் டி லிட்டில் ‘இந்தியா கொரோனா வைரஸ் பாதிப்பு உருவாக்கும் பொருளாதார சவால்களை சமாளித்தல்’ என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது “கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியா முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக 1 இலட்சம் கோடி டொலர் வாய்ப்பை இந்தியா இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்ய 5 இலட்…

  16. இந்தியாவில் வருகிற 15-ந்தேதி முதல் மீண்டும் ரெயில் சேவைகளை தொடங்க தயாராக இருக்குமாறு அனைத்து மண்டலங்களுக்கும் ரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. பதிவு: ஏப்ரல் 05, 2020 04:15 AM புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் வருகிற 14-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சரக்கு ரெயில் சேவை தவிர்த்து அனைத்து பயணிகள் ரெயிலும் வருகிற 14-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் 15-ந் தேதி முதல் பயணிகள் ரெயில் சேவையை மீண்டும் தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகளில் ரெயில்வே நிர்வாகம் இறங்கியுள்ளது. ரெயில்வே பாதுகாப்பு, செயல்பாடு உள்ளிட்ட துறைகளின் அனைத்து ஊழியர்கள், ரெயில்வே கார்டு…

  17. இந்தியாவில் 156 மருந்துகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி தீர்மானம். இந்தியாவில் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் 156 மருந்துகளுக்கு தடை விதிக்க தீர்மானித்துள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறித்த மருந்துகளின் பயன்பாடு மனித உடலுக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ள நிலையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி குறித்த மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகம் ஆகியவற்றுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. முன்னதாக 2018 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் 328 மருந்துகளுக்கு தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1397047

  18. இந்தியாவில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை; வைக்கோல் எரிக்கவும் கட்டுப்பாடு -சி.எல்.சிசில்- நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசடைதலைக் குறைக்கும் நடவடிக்கையாக, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்ய இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, சிகரெட் பக்கெட்டுகள் முதல் பிளாஸ்டிக் போத்தல்கள் வரை மட்டுமின்றி வைக்கோல் எரிப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலுள்ள விவசாயிகள் தங்கள் விளைச்சலை அதிகரிக்க பெரிய அளவில் வைக்கோலை எரித்து வருகின்றனர், இது நாட்டில் காற்று மாசை ஏற்படுத்துகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோட…

  19. உலகம் முழுவதும் வாழும்இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர், இந்தியாவின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர். வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் இந்தியர்கள் தங்களது அடையாளத்தை நிலைநாட்டி வருகின்றனர். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிக்காக பி.எம்.கேர்ஸ் நிதிக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாராளமாக நிதியுதவி வழங்கினர். உங்களது பங்களிப்பால் நாட்டின் சுகாதார துறை சேவைகள் மேம்பட்டுள்ளன. உலகின் பல்வேறு மூலைகளில் நாம் வாழ்ந்தாலும் இணையம் வாயிலாக இணைந்துள்ளோம். நமது உள்ளம் பாரத மாதாவுடன் ஒன்றிணைந்துள்ளது.உலகளாவிய அளவில் தேநீர் முதல்ஜவுளி வரை பல்வேறு துறைகளில் இந்தியாவின் பங்களிப்பு இருக்கிறது. மருத்துவ துறையிலும் இந்தியா சிறப்பாக சேவையாற்றி வருகிறது. …

    • 0 replies
    • 304 views
  20. 28 JUL, 2023 | 12:51 PM புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரை மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள், 18 வயதுக்கு கீழ் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் பிள்ளைகள் காணாமல் போனதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau, சுருக்கமாக: NCRB), இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்கள் ஆகியவற்றால் வரையறுக்கப்பட்ட குற்றப் புள்ளிவிவரங்களை சேகரித்து வெளியிடுகிறது. அதன்படி தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அண்மையில் ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வர…

  21. இந்தியாவில் 2021ம் ஆண்டில் ஒரே நாளில் 2.87 லட்சம் கொரோனா பாதிப்புகள் ஏற்படும்! அதிர்ச்சி தகவல் இந்தியாவில் தடுப்பு மருந்து இல்லாத நிலையில் 2021ம் ஆண்டு இறுதியில் ஒரே நாளில் 2.87 லட்சம் கொரோனா பாதிப்புகள் ஏற்படும் என ஆய்வொன்று தெரிவிக்கின்றது. பதிவு: ஜூலை 08, 2020 17:14 PM புதுடெல்லி, உலக அளவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1.19 கோடியாக உயர்ந்து உள்ளது. இதேபோன்று 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதேபோன்று, இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமுடன் அதிகரித்து வருகிறது. 6 லட்சமாக இருந்த கொரோனா பாதிப்பு 5 நாட்களில் 7 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் முதல் 1 லட்சம் பேரை பாதிப்புக்கு உள்ளாக்க கொரோனா 110 நாட்கள் எடுத்து கொண்டது…

  22. இந்தியாவில் 33 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 74 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் வைரஸ் அதிவேகமாக பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் பரிசோதனைகளை அதிகரிக்க அதிகரிக்க, புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இறப்பு விகிதமும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று(வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில…

  23. இந்தியாவில் 47 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உலகில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் 47 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது டெல்லி, உத்தரப்பிரதேசம், கேரளாவில் எர்ணாகுளம் ஜம்மு, கர்நாடகாவில் பெங்ளூர், பஞ்சாப் மற்றும் புணே ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேநேரம் மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த நபருக்கு கொரோனா தொற்று இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் கடந்த ஜனவரி மாதம் முதல் சீனா உள…

  24. Published By: RAJEEBAN 04 APR, 2023 | 10:16 AM இந்தியாவில்66.9 கோடி பேரின் தனிப்பட்ட விவரங்களை விற்பனைக்கு வைத்தது தொடர்பாக 3 வங்கிகள் உட்பட 11 நிறுவனங்களுக்கு போலீஸார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். ஹைதராபாத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 16.8 கோடி பேரின் தனிப்பட்ட விவரங்களை சில நிறுவனங்கள் மூலம் சேகரித்துஇ அவற்றை சிலர் விற்பனை செய்ய முன்வந்த தகவல் தெரிய வந்தது. இது தொடர்பாக சைபராபாத் போலீஸார் 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் வங்கிகளில் கடன் வாங்க விண்ணப்பித்தோர் தனியார் வாகன பதிவு காப்பீடுக்காக விண்ணப்பித்தோர் ஆன்லைனில் பொருட்கள் வாங்க முழு விவரங்களை வழங்கியோர் டிஜிட்டல் பணப் பரிவர்தனை செய் வோர…

  25. இந்தியாவில் 95 சதவீதமானோர் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக அறிவிப்பு! இந்தியாவில் 95 சதவீதமானோர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறையின் அறிவிப்பின்படி இதுவரை 164 கோடியே 35 இலட்சத்திற்கும் மேற்பட்ட டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் 75 சதவீதமானோருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 10 கோடியே 30 இலட்சம்பேர் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டதாகவும், சிறார்களுக்கு 4 கோடியே 42 இலட்சம் டோஸ் போடப்பட்டுள்ளதாகவும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

    • 0 replies
    • 183 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.