Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மக்கள் தொகை கட்டுப்பாடு... சட்டம், விரைவில் : பிரகலாத் சிங் படேல் இந்தியாவில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டம் அமுலுக்கு வரும் என மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் தெரிவித்தார். சட்டிஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த சட்டம் கொண்டுவர இருப்பதாகவும் இதற்காக பெரியளவில் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் பிரகலாத் பட்டேல் கூறினார். இந்த சட்டமே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் அடுத்த பெரிய திட்டம் என்றும் பிரகலாத் சிங் பட்டேல் குறிப்பிட்டார். https://athavannews.com/2022/1284865

  2. கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் மரணம் - நரேந்திர மோதி, ஹாரிஸ் ஜெயரஜ் உள்ளிட்டோர் அஞ்சலி 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத், மே 31-ஆம் தேதியன்று, மாரடைப்பால் உயிரிழந்தார். நேற்று கொல்கத்தாவில் ஒரு நிகழ்ச்சியில் அவர் பாடிக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. நிகழ்ச்சியின்போது அவருக்கு ஏற்பட்ட பிரச்னையால், சிஎம்ஆர்ஐ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர், உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். 54 வயதான கேகே என்றழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத், இந்திய சினிமா துறையில் குறி…

  3. மாயமான நேபாள விமானம்: மோசமான வானிலையால் திரும்பி வந்த தேடுதல் ஹெலிகாப்டர்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANI நேபாளத்தில் பயணிகள் விமானம் ஒன்று மாயமாகியுள்ளது. டாரா ஏர்லைன்ஸின் ட்வின் ஓட்டர் ரக இரட்டை இஞ்சின் விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை காற்று கட்டுப்பாட்டு அமைப்புடனான தொடர்பை இழந்தது. இந்த விமானத்தில் நான்கு இந்தியர்கள் உட்பட மொத்தம் 22 பேர் இருந்தனர். காத்மாண்டு போஸ்ட் செய்தியின்படி, இந்த விமானம் நேபாளத்தில் உள்ள பொக்காராவில் இருந்து ஜோம்சோம் நோக்கி சென்று கொண்டிருந்தது. விமான நிலைய அதிகாரிகளின் கூற்றுப்படி, உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 9:55 மணிக்கு விமானத்துடனான தொடர்…

  4. ரஷ்யா-இந்தியா நட்புறவு சங்கமான ‘திஷா’, மூன்று டன் அளவு பொருட்களை மனிதாபிமான உதவியாக ரஷ்யாவுக்கு அனுப்பியுள்ளது. இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் ரஷ்ய தூதரகம் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்தியாவில் இருந்து ரஷ்யாவிற்கு அனுப்பட்ட மருந்து பொருட்கள் மனிதாபிமான உதவியாக மருந்துகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள், குர்ஸ்கில் உள்ள ரஷ்ய ஆயுதப்படைகளின் மருத்துவ நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அதில் இந்திய மருந்து நிறுவனமான பன்பியோ பார்ம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மருந்துகள் அடங்கும். ரஷ்ய - உக்ரைன் மோதல் நடந்து வரும் சூழலில், பலதரப்பு கொள்கையின்படி இந்தியாவின் சமநிலையான நிலைப்பாட்டை மேற்கத்திய நாடுகள் விமர்சித்…

  5. இந்தியா, ரஷ்யாவுடன்... கொண்டுள்ள நிலைப்பாட்டை, மதிக்கின்றோம் – ஜேர்மனி உக்ரைன் போர் தொடர்பாக இந்தியா, ரஷ்யாவுடன் கொண்டுள்ள நிலைப்பாட்டை மதிப்பதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது. ஜேர்மனியின் இந்தியாவுக்கான தூதர் வால்டர் லிண்டர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு நாடும் தனது சொந்த நலன் சார்ந்து செயல்படும் உரிமை உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் ஐநா.சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டபோது, ரஷ்யாவின் படையெடுப்பை இந்தியா கண்டிக்கும் என எதிர்பார்க்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நடுநிலை வகித்ததால் இந்தியா, ஜேர்மனி இடையே உறவில் பாதிப்பு எதுவும் இல்லை எனவும் அவர் விளக்கமளித்தார். https://athavannews.com/2022/1284296

    • 3 replies
    • 639 views
  6. 'ஆதார் அட்டை நகலை பகிராதீர்கள்' - இந்திய அரசு எச்சரிக்கை 29 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MINT / GETTY IMAGES ஆதார் எண் தவறாகப் பயன்படுத்தப்படும் என்பதால் உங்கள் ஆதார் அட்டையின் நகலை யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்று இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை அந்த அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் முக்கியத் தகவல்கள் இதோ. 1. ஆதார் அட்டையின் நகலை வழங்குவதற்கு பதிலாக, ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்கள் மட்டுமே தெரியும் வகையில், எண்கள் மறைக்கப்பட்ட (masked) ஆதார் அட்டையைப் பயன்படுத்தவும். 2. https://myaadhaar…

  7. கீதாஞ்சலி ஸ்ரீ: சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் இந்திய மொழி எழுத்தாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANDREW FOSKER/SHUTTERSTOCK/BOOKER PRIZES இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ இலக்கியத்திற்காக வழங்கப்படும் புகழ்வாய்ந்த சர்வதேச புக்கர் பரிசை வென்றுள்ளார். இதன்மூலம், சர்வதேச புக்கர் பரிசை வெல்லும் முதல் இந்திய மொழி எழுத்தாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவரது நாவலான 'ரெட் சமாதி' (Ret Samadhi) என்ற நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'டூம் ஆஃப் சாண்ட்'க்கு (Tomb of Sand) இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு குடும்பக் கதை இது. இந்நாவல், கணவர் இறந்…

  8. பாலியல் தொழில் பற்றி உச்ச நீதிமன்றம்: 'வயதுவந்த, சுய ஒப்புதலோடு இதில் ஈடுபடுவோர் மீது குற்ற நடவடிக்கை கூடாது' சுசித்ரா கே.மொகந்தி பிபிசி செய்திகளுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES வயதுவந்த, சுய ஒப்புதலோடு பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் விஷயத்தில் போலீஸ் தலையிடவோ, அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவோ கூடாது, அவர்கள் கண்ணியத்தோடு நடத்தப்படவேண்டும் குற்றவாளிகளைப் போல நடத்தப்படக்கூடாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. 2011ம் ஆண்டு கொல்கத்தாவில் பாலியல் தொழிலாளி ஒருவர் மீது வழக்குத் தொடரப்பட்டதை தாமாக முன்வந்…

  9. கோதுமை ஏற்றுமதி மீதான... தடையை நீக்க, இந்தியாவிடம் வேண்டுகோள்! கோதுமையின் ஏற்றுமதி மீதான தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்தியாவிடம் சர்வதேச நாணய நிதியம் கேட்டுக் கொண்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச உணவுப் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இந்தியா பங்காற்ற முடியும் என்றும் தெரிவித்துள்ளது. 135 கோடி மக்களுக்கு உணவளிக்க வேண்டி இந்தியா எடுத்த இந்த முடிவை பாராட்டுவதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் ஏற்றுமதி தடையை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக நீக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். https://athavannews.com/2022/1283727

  10. https://www.facebook.com/100079744693894/videos/710579476817197 பிரதமர் மோடியை... கண்டு கொள்ளாத , அமெரிக்க ஜனாதிபதி.

  11. இந்தியா உள்ளிட்ட... 16 நாடுகளுக்கு, செல்ல தடை இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல சவுதி அரேபியா தடை வித்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதி முதல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. பெரும்பாலான நாடுகளில் தடுப்பூசி அறிமுகத்திற்கு வந்த பிறகு கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இருப்பினும் ஒரு சில நாடுகளில் மட்டும் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சவுதி அரேபியாவில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினசரி தொற்று விகிதம் கடந்த சில வாரங்களாக உயர்ந்து வர்கிறது. இதையடுத்து சவுதி அரேபிய மக்கள் இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியா, லெபன…

  12. காங்கிரஸ் கட்சியை, வலுப்படுத்த வருமாறு... நிர்வாகிகளுக்கு, சோனியா காந்தி அழைப்பு. கட்சி நிர்வாகிகள் திறந்த மனதுடன் விவாதித்து கட்சியை வலுவான அமைப்பாக உருவாக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தொடங்கிய நிலையில் அங்கு உரையாற்றிய போதே சோனியா காந்தி இந்த கோரிக்கையை விடுத்தார். கட்சி நிர்வாகிகள் தனிப்பட்ட லட்சியங்களுக்கும் மேலாக கட்சி அமைப்பை வைத்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கட்சியில் மாற்றங்கள் செய்யவேண்டியது காலத்தின் தேவை என்று குறிப்பிட்ட சோனியா காந்தி, இதற்கு செயன்முறையை மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். https://athavannews…

  13. பெட்ரோல் ரூ. 9.50, டீசல் ரூ.7, சிலிண்டர் ரூ.200 வரை குறைந்தது - நரேந்திர மோதி அரசின் புதிய அறிவிப்புகள் - பின்னணி என்ன? 21 மே 2022, 14:42 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு, பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 9.50, டீசல் விலையை லிட்டருக்கு ரூ.7, சிலிண்டர் ஒன்றின் விலையை ரூ.200 வரை குறைத்து அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்த பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரி குறைக்கப்பட்டதன் மூலம் இந்த அறிவிப்பு சாத்தியமாகியிருக்கிறது. இந்தியாவில் பல்வேறு மாநில அரசுகள் பெட்ரோலிய பொருட்கள் மீதான மாநில அளவிலான மதிப்புக் கூட்டு வ…

  14. அசாமில் தேயிலை தோட்ட தொழிலாளர்களை கொல்லும் காளான்கள் - என்ன நடக்கிறது? திலீப் ஷர்மா மற்றும் சோயா மாதீன் அசாம், டெல்லி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2022ஆம் ஆண்டு, ஏப்ரல் 8ஆம் தேதி, அஞ்சலி காரியா தனது மகளுடன் இரவு உணவை உண்ண உட்காரும்போது, அதுதான் அவளுடன் உண்ண போகும் கடைசி உணவை என அவருக்கு தெரியவில்லை. அசாம் மாநிலத்தின் சபதோலி கிராமத்தில் நீண்ட நேர வேலைக்கு பிறகு, மலைகளில் உள்ள வளைவுகளை கடந்து, தனது வீட்டிற்கு சென்றார். பின், சாப்பிட்டு, உறங்கி விட்டார். அன்று அதிகாலை மூன்று மணிக்கு, தனது ஆறு வயது மகள் சுஷ்மிதா வாந்தி எடுக்கும் சத்தத்தில் எழுந்தார். பிறகு, சுஷ்மித…

  15. ஹைதராபாத் என்கவுன்டர் 'போலி': உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ஆணையம் அறிக்கை - முழு விவரம் 20 மே 2022, 12:05 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடந்த பாலியல் வல்லுறவு சம்பவத்தில் சந்தேக நபர்களாகக் கைது செய்யப்பட்ட நான்கு பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது ஒரு போலியான நடவடிக்கை என்று அது தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த ஆணையத்தின் அறிக்கையை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை பதிவு செய்து கொண்டது. அந்த அறிக்கையை சீலிட்ட கவரிலேயே வைத்திருக்க வேண்டும் என்று தெலங்கான அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் விடுத்…

  16. மாசுபாட்டால் இறந்த லட்சக்கணக்கான இந்தியர்கள்: அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட் சொல்வது என்ன? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காற்று மாசுபாடு வீசும் காற்றில் விஷம் பரவினால் வாழ்க்கை மோசமாகும் என்பது நீங்கள் அறிந்ததுதான். ஆனால், வீசும் காற்றே விஷமாக மாறினால் விளைவு எப்படி இருக்கும் என்பதை அண்மையில் வெளியான லான்செட் அறிக்கையின் தரவுகள் இதை நமக்கு புரியவைக்கின்றன. சுற்றுச்சூழல் மாசுபாட்டால் கடந்த 2019ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 23 லட்சம் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. அதில் 16 லட்சம் காற்று மாசுபாட்டாலும், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நீர் மாசு…

  17. தேவசகாயம்: புனிதர் நிலைக்கு உயர்த்தப்படும் முதல் தமிழர் - 1700களில் கிறிஸ்துவத்துக்கு மதம் மாறியதால் கொல்லப்பட்டவர் மரிய மைக்கேல் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,அமலகிரி எழில் படக்குறிப்பு, புனிதராக உயர்த்தப்படும் தேவசகாயம் இந்தியாவில் முதல் மறைசாட்சியாக அறிவிக்கப்பட்ட தேவசகாயம், மே மாதம் 15ஆம் தேதி புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுகிறார். ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி பகல் 1.30 மணிக்கு இந்த நிகழ்வு வத்திக்கானின் செயின்ட் பீட்டர் பசிலிக்காவில் நடைபெறுகிறது. இதுவரை புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்ட புனித அல்போன்சாள், புனித அன்னை தெரசா…

  18. ரஷ்யா – உக்ரைன் போர்... இந்தியாவிற்கு, ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது – நிர்மலா சீதாராமன் ரஷ்யா – உக்ரைன் போர் இந்தியாவிற்கு புதிய ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஆகவே இது போன்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு ஏற்றுமதியாளர்களுக்கு உதவத் தயாராக உள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் ஏற்றுமதியாளர்களுடனான கூட்டத்தில் பேசிய அவர், தோல் பொருட்கள் மட்டுமில்லாமல் துணி மற்றும் சிப் உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தொழில்துறை வளர்ச்சிக்கு உகந்த முறையில் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கவ…

    • 3 replies
    • 264 views
  19. டெல்லியில்... பயங்கர தீ விபத்து : 27 பேர் பலி, 40 பேர் வைத்தியசாலையில் ! இந்தியாவின் மேற்கு டெல்லியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில், நேற்று மாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்ததோடு 40 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். அத்துடன், 60 முதல் 70 பேர் வரை குறித்த கட்டடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேற்கு டெல்லியான முண்டக் பகுதியின் புகையிரத நிலையத்துக்கு அருகே உள்ள ஒரு வணிக வளாக கட்டடத்தில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தை அடுத்து ஏற்பட்ட இந்தத் தீப்பரவலைக் கட்டுப்படுத்த சுமார் 24 தீயணைப்பு குழுவினர் நடவடிக்கை எடுத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டட…

  20. இந்திய எல்லைப் பகுதியில்... யார் அத்துமீறினாலும், பதிலடி கொடுக்கப்படும் – அமித்ஷா இந்திய எல்லைப் பகுதியில் யார் அத்துமீறினாலும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். எல்லைப்பகுதியில் சீனா பாலம் அமைத்து வருகின்ற நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், ”அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் மாத்திரமே எல்லையில் அத்துமீறும் நாடுகளுக்கு பதிலடி கொடுத்து வந்ததாகவும், தற்போது இந்தியாவும் அந்த வரிசையில் இணைந்துள்ளதாகவும், கூறினார். இந்திய எல்லைக்குள் அத்துமீறமுடியாது என்பது, இப்போது... உலக நாடுகளுக்கும் தெரிந்திருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். https://athavan…

    • 3 replies
    • 271 views
  21. இந்தியாவில்... எரிசக்தித் துறையில் முதலீடு செய்யுமாறு, ஜெர்மன் நிறுவனங்களிடம் கோரிக்கை! இந்தியாவில் எரிசக்தித் துறையில் முதலீடு செய்ய வருமாறு எரிசக்தி அமைச்சர் ஆர்.கே.சிங் ஜெர்மன் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஜெர்மனியின் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை மூலம் அழைப்பு விடுத்துள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார். கிரீன் ஹைட்ரஜன், கிரீன் அமோனியா மற்றும் பேட்டரி சேமிப்பில் சொந்த தேவையையும் உலகத் தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்தியா உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடல் காற்றில் இருந்து 30 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அவர், அதிக திறன் கொண்ட 50 ஆயிரம் மெகாவொட் சூரிய மின்கலங்கள் உற்பத்…

  22. இலங்கையில் பாஜக கட்சி ஆரம்பிக்கிறதா? - அண்ணாமலை கூறியது என்ன? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்வதற்கு இந்தியர்களுக்கு இலவச விசா நடைமுறையொன்றை இலங்கை அரசாங்கம் அமல்படுத்த வேண்டும் என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அண்ணாமலை, கொழும்பில் நேற்று (மே 03) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார். கச்சத்தீவில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவுக்கு இந்திய பக்தர்களை அனுமதிக்கும் வகையில், ஆண்டுக்கு ஒரு முறை இலவச விசா நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பதே தனது கோரிக்கை…

  23. இந்திய எல்லைப் பகுதியில்... பாலம், அமைக்கும் சீனா! எல்லைப் பகுதியில் சீனா தற்போது புதிதாக சாலைகளை அமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. லடாக்கிற்குள் எளிதில் ஊடுருவும் வகையில் சீனா புதிய சாலைகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதை காட்டும் செயற்கைக்கோள் ஒளிப்படங்கள் வெளியாகியுள்ளன. வீரர்கள் மற்றும் பொருட்களை விரைவாக அனுப்புவதற்கு ஏதுவாக இந்த சாலைகள் அமைக்கப்படுவதாக கூறப்படுகின்றது. https://athavannews.com/2022/1279827

  24. ரஷ்யாவுக்கு எதிராக... மோடியை அழைக்க, தீர்மானம்? ரஷ்யாவுக்கு எதிராக சர்வதேச கூட்டணியை உருவாக்கும் முயற்சியாக அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி7 உச்சமாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடியை அழைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜுன் மாதம் 26 ஆம் திகதி பவேரியன் ஆல்ப்ஸில் ஆரம்பமாகும் இந்த மாநாட்டில் இந்தோனேசியா, தென்னாப்பிரிக்கா, செனகல் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். இதில் பங்கேற்க சிறப்பு அழைப்பாளராக மோடியை அழைப்பது எனவும், ரஷ்யாவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்க ஜெர்மனி பிரதமர் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1279544

  25. உள்நாட்டு தொழிநுட்பத்தில்... தயாரிக்கப்பட்ட பீரங்கி பரிசோதனை, வெற்றியளித்துள்ளதாக அறிவிப்பு! நீண்ட தூர இலக்கை அழிக்கும் மேம்படுத்தப்பட்ட உயர் ரக ஏடிஏஜிஎஸ் பீரங்கி பரிசோதனை வெற்றியளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பீரங்கியில் இருந்து சென்ற குண்டுகள் இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததுடன், சுவீடன் தயாரிப்பான Bofors பீரங்கிகளுக்கு பதிலாக இது பயன்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உள்நாட்டு தொழிநுட்பத்தில் மேம்படுத்தப்பட்ட பீரங்கியை தயாரித்து உள்ளது. டாடா மற்றும் பாரத் போர்ஜ் நிறுவனங்களின் உதவியுடன் இந்த பீரங்கி தயாரிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1279654

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.