அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3312 topics in this forum
-
கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு தீவிர திட்டங்களை அறிவித்தது மத்திய அரசு! கொரோனா தொற்று உள்ளவர்கள் இதுவரை 274 மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு மேலும் தீவிரமாகாமல் தடுப்பதற்கு மத்திய அரசு பல திட்டங்களைக் கொண்ட ஆவணத்தை வெளியிட்டுள்ளது. H1N1 எனப்படும் பன்றிக் காய்ச்சலோடு ஒப்பிடும்போது கொரோனா தொற்று அதிகம்பேரை பாதித்திருந்தாலும், பரவிய பகுதிகள் இரண்டிற்கும் ஒரேமாதிரியாக இருப்பதாகவும், எனவே கொரோனா நாடு முழுவதும் சீராகப் பரவ வாய்ப்பில்லை என்றும் அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு வெவ்வேறு விதமான அணுகுமுறைகளைக் கையாள வேண்டும் என்பதையே இது காட்டுவதாகவும் ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த …
-
- 0 replies
- 229 views
-
-
புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிவைத்தார் பிரதமர் டெல்லியில் பிரமாண்டமாக அமையவுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) அடிக்கல் நாட்டினார். டெல்லியில் தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டடம் 100 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. இதையொட்டி அதன் அருகே புதிய கட்டடத்தைக் கட்டுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 971 கோடி ரூபா செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்கு முன்பு புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்டுவதற்கான பணியில் மத்திய அரசு மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. 4 தளங்களுடன் அமையவுள்ள புதிய கட்டடத்தில் மக்களவை உறுப்பினர்கள் 888 பே…
-
- 0 replies
- 288 views
-
-
பாகிஸ்தானில் தலிபன்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில், சீன தூதர் இலக்கு வைக்கப்பட்டதாக சந்தேகம்? பாகிஸ்தானின் கொயட்டா நகரத்தில் உள்ள சொகுசு விடுதியில், தலிபன்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாகிஸ்தானுக்கான சீன தூதர் இலக்கு வைக்கப்பட்டதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. எனினும், அவர் அதிஷ்டவசமாக தாக்குதல் நடந்த நேரத்தில், சீனாவின் தூதர் நோங் ராங் ஒரு விழாவில் இருந்தர் எனவும், அப்போது அவர் சொகுசு விடுதியில் இல்லை எனவும் பாகிஸ்தானின் உட்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் தெரிவித்துள்ளார். ஆனால், இந்ததாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்ததோடு 11பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதல் நடந்த பிறகு, இது தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வர…
-
- 0 replies
- 308 views
-
-
இந்தியா-மியன்மார் எல்லை பகுதியில் வலுவான நிலநடுக்கம் மியன்மார் -இந்திய எல்லைப் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 6.1 ரிச்டெர் அளவில் ஆழமற்ற மற்றும் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மிசோரத்தில் தென்கிழக்கில் இருந்து 73 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பங்களாதேஷில் உள்ள சிட்டகாங்கிலும், கிழக்கு இந்தியாவின் கொல்கத்தா வரையிலும் உணரப்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையத்தின் (EMSC) இணையதளத்திலும் கூறியுள்ளது. நிலநடுக்கம் தொடர்பிலான உயிர் அல்லது உடைமை சேதம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வரவில்லை. https://www.virakesari.lk/article/117892
-
- 0 replies
- 165 views
-
-
குஜராத்தில் தொடர்ந்து 7-வது முறையாக பாஜக வெற்றிபெற்றுள்ளது. குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை முக்கிய கட்சிகளாக களமிறங்கின. 182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் பெரும்பான்மைக்கு 92 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். இதனிடையே, தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆரம்பம் முதலே பாஜக முன்னிலையில் இருந்து வந்தது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் பாஜக வேட்பாளர்கள் ஆயிரக்கணக்கான வாக்குகள் முன்னிலையில் இருந்து வந்தனர். இந்நிலையில், குஜராத்தில் பாஜக வெற்றி உறுதியாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, மொத்தமுள்ள 182…
-
- 0 replies
- 193 views
-
-
டெல்லி குடியரசு தின விழாவில் 50 போர் விமானங்கள் பங்கேற்பு! டெல்லியில் 26-ந் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் 50 போர் விமானங்கள் பங்கேற்கின்றன. எகிப்து படைப்பிரிவும் அணிவகுப்பில் கலந்து கொள்கிறது. பொதுமக்களுக்கு 32 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகின்றன. நாட்டில் அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்த ஜனவரி 26-ந் தேதி, ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, கொரோனா தொற்றை கட்டுப்படுத்திய நிலையில் தலைநகர் டெல்லியில் குடியரசு தினவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல் சிசி கலந்து கொள்கிறார்.கடமை பாதை என்று இப்போது பெயர் சூட்டப்பட்டுள்ள ராஜபாதையில் கண்க…
-
- 0 replies
- 299 views
-
-
அயோத்தி ராமர் கோவிலின் முதல் தீபாவளி; மோடி வாழ்த்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு வாழ்த்தை தெரிவித்துள்ளார். 500 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த வருட தீபாவளி ராமருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த தீபாவளியாக அமையவுள்ளது என தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தந்திராஸ் பண்டிகை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள். இத் தீபாவளி மிகவும் சிறப்பானது. சுமார் 500 வருடங்களுக்குப் பின்னர் கடவுள் ஸ்ரீ ராமர் அயோத்தியில் வீற்றிருக்கிறார். முதல் முறையாக அவர் இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாட உள்ளார். எனவே, இத் தீபாவளி பண்டிகை நம் அனைவருக்கும் பிரம்மாண்ட…
-
- 0 replies
- 330 views
-
-
முடிவுக்கு வரும் ரகசியம்.. சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் பட்டியல் நாளை வெளியாகிறது. சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை நாளை முதல், இந்திய அதிகாரிகள் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் இன்று ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது: கருப்பு பணம் மீட்பு நடவடிக்கைகள் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்த யார் யாரெல்லாம் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்து இருந்தார்களோ அவர்களுடைய அனைத்து தகவல்களையும் அந்த வங்கி இந்திய அதிகாரிகளுக்கு வழங்க உள்ளது.செப்டம்பர் 1ம் தேதி முதல் இந்த தகவல்களை ஸ்விஸ் வங்கி வழங்க உள்ளது இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட…
-
- 1 reply
- 456 views
-
-
பாகிஸ்தானில் பஸ் விபத்து : 26 பேர் உயிரிழப்பு பாகிஸ்தானில் நேற்று இடம்பெற்ற பஸ் விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியத்தில் உள்ள ஸ்கார்டு நகரில் இருந்து பஞ்சாப் மாகாணத்தித்தில் உள்ள நகரொன்றுக்கு சென்ற பஸ்ஸில் 50 பயணிகள் பயணித்துள்ளனர். பஸ்ஸில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சாரதியின் கட்டுபாட்டை இழந்த பஸ், சாலையின் அருகில் உள்ள மலையில் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த இவ்விபத்தில் பொதுமக்கள் உற்பட சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். அத்தோடு கடந்த மாதம் இவ்வாறான பஸ் விபத்தில் 24 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. https://…
-
- 0 replies
- 330 views
-
-
இஸ்லாமாபாத்: இந்திய படைகளுக்கு எதிராக ஆசாத் காஷ்மீர் மக்கள் புனிதப் போர் புரியக்கூடாது என்றும், அது பாகிஸ்தானின் நலன்களுக்கு எதிரானதாகும் எனவும் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்ததை தொடர்ந்து, இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தொடர்ந்து தலையிட்டு வந்த பாகிஸ்தானில், தீபாவளி திருநாளான நேற்று காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் கருப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. அதில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் மக்கள் பேரணியில் ஈடுபட்டும், போராட்டம் மேற்கொண்டும் இந்தியாவுக்கு எதிரான தங்களின் கருத்தை வெளிப்படுத்தினர். இதை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் இ…
-
- 2 replies
- 425 views
-
-
பாபர் மசூதி தீர்ப்பு: வரலாற்றை கேவலப்படுத்தல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 நவம்பர் 21 வரலாற்றை விளங்குவதன் அவசியம், தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. வரலாற்றைப் பதிவதும், வரலாற்றை ஆவணமாக்குவதும் எவ்வளவு முக்கியமானதோ, அந்தளவுக்கு முக்கியமானது, வரலாற்றை விளங்கிக் கொள்வது. வரலாற்றைத் தவறாக விளங்குவதும் விளக்குவதும் நிகழக் கூடாத விடயங்கள். இதன் பயங்கரத்தை, அண்மைய நிகழ்வொன்று காட்டி நிற்கின்றது. அண்மையில், பாபர் மசூதி இருந்த இடத்தின் மீதான, உரிமை கோரும் வழக்கின் தீர்ப்பை, இந்திய உச்சநீதிமன்றம் வழங்கியிருந்தது. இத்தீர்ப்பு, பல்வேறு வாதப் பிரதிவாதங்களைத் தோற்றுவித்திருக்கிறது. இராமர் பிறந்த இடத்தில், மசூதி அமைக்கப்பட்டுள்ளது என்ற பிரசாரமும…
-
- 0 replies
- 380 views
-
-
இந்தியாவின் முதல் வாக்காளர், ஷியாம் சரண் நேகி கவலைக்கிடம்.. ஹிமாச்சலில் சோகம் இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகி கவலைக்கிடமான நிலையில் உள்ளார். அவருக்கு ஹிமாச்சலில் உள்ள தனது வீட்டில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். ஹிமாச்சல் பிரதேசத்தில் கின்னார் மாவட்டம் கல்பாவைச் சேர்ந்தவர் ஷியாம் சரண் நேகி (103). 1951-ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவில் முதல்முதலாக பொதுத் தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தல் 1949-இல் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் சாசனத்தின் கீழ் நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் இந்தியாவில் முதல் ஆளாக வந்து வாக்களித்தவர் ஷியாம் சரண் நேகி. அதுமுதல் இவர் முதல் வாக்காளராக கொண்டாடப்படுகிறார். இதனால் இவர் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிராண்ட் அம்பாசிடரான…
-
- 0 replies
- 245 views
-
-
படக்குறிப்பு, அமீபா பாதிப்பால் உயிரிழந்த ராம்லா மற்றும் ஷாஜி கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ''வீட்டில் இருந்தபோது திடீரென அவருக்கு வலிப்பு வந்தது. ஆனால் 108 ஆம்புலன்ஸ் வந்ததும், வீட்டிலிருந்து நடந்து சென்றுதான் அதில் ஏறினார். அங்கே நடந்த பரிசோதனையில்தான் இந்த தொற்று பாதிப்பு தெரியவந்தது. பல நாட்கள் நினைவு திரும்பாமலே இருந்த அவர் அங்கேயே இறந்து விட்டார். நடந்து சென்றவரை சடலமாகத்தான் திரும்பக் கொண்டுவந்தோம்!'' அதற்கு மேல் பேசமுடியாமல் வெடித்து அழத்தொடங்கினார் பிந்து. கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா தொற்று பாதிப்பால் செப்டம்பர் 10-ஆம் தேதி இறந்துபோன 48 வயது கூலித்தொழிலாளி ஷாஜியின் மனைவி அவர். கடந்த ஆண்டில் அமீபா தொற்று ப…
-
- 0 replies
- 145 views
- 1 follower
-
-
நாகாலாந்து மீண்டும் பதற்றப் பகுதியாக பிரகடனம்- ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டம் நீட்டிப்பு - படையினருக்கு சிறப்பு அதிகாரம் டெல்லி: நாகாலாந்து மாநிலம் முழுவதும் மீண்டும் பதற்றப் பகுதியாகவும் ஆபத்து நிறைந்த பகுதியாகவும் மத்திய அரசால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு படையினருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. தனி நாடு கோரிக்கை நாகாலாந்து இந்தியாவுடன் இணைக்கப்பட்டது முதலே கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தனிநாடு கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கான ஆயுதப் போராட்டங்களும் நடைபெற்றன. நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (ஐசக் மூய்வா) பிரிவினர் இந்த தனிநாடு போரா…
-
- 0 replies
- 449 views
-
-
கடத்தப்பட்ட சிலைகளை... மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க, அவுஸ்ரேலியா முடிவு! தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடத்தப்பட்ட சிலைகளை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க அவுஸ்ரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி தமிழகத்தை சேரந்த இரண்டு உலோக சிலைகள், உட்பட ஆறு உலோக சிலைகள், ஆறு பழமையான ஓவியங்கள், இரண்டு கற்சிலைகளை திருப்பி இந்தியாவிடம் ஒப்படைக்க அந்நாட்டு தேசிய அருங்காட்சியகம் தீர்மானித்துள்ளது. 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த குறித்த சிலைகள் கடத்தப்பட்ட நிலையில், அவுஸ்ரேலியாவுக்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1231442
-
- 1 reply
- 975 views
-
-
இந்த ஆண்டின் இறுதிக்குகள் கொவிட் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படும் – மத்திய அரசு! கொரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆரம்பமாகும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டெல்லியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பிற நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவதில் இந்தியா உறுதி பூண்டுள்ளதாகவும், மற்ற நாடுகளுக்கான ஏற்றுமதி உள்நாட்டின் தடுப்பூசி திட்டத்திற்கான தேவைகளை பாதிக்கக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை இந்தியாவில் இதுவரை 102 கோடிக்கும் மேற்பட்ட கொவிட் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளமை…
-
- 0 replies
- 226 views
-
-
பாகிஸ்தான் இராணுவத்தினருக்கு எதிராக தொடரும் போராட்டம் பலுசிஸ்தான் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த இரண்டு மாணவர்களை பாகிஸ்தான் இராணுவத்தினர் கடத்திச் சென்றமையைக் கண்டித்து போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அனைத்து கல்வி நிறுவனங்களிலும் வகுப்புகள் மற்றும் பரீட்சைகளைப் புறக்கணிக்குமாறு மாணவர் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளதாக எக்ஸ்பிரஸ் டெய்லி தெரிவித்துள்ளது. கடத்தப்பட்டவர்கள் பலுசிஸ்தானின் நோஷ்கி மாவட்டத்தில் வசிக்கும் லால் மொஹமட்டின் புதல்வர்களான ஃபசிஹ் பலூச் சோஹைல் அஹமட் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்களை கடந்த திங்கட்கிழமையன்று பல்கலைக்கழக விடுதியில் இருந்து பாகிஸ்தான் இராணுவத்தினர் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதையடுத்து வலுக்கட்டாயமாக காணா…
-
- 0 replies
- 146 views
-
-
இந்தியாவின் ஏற்றுமதி... 417.8 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பு! இந்தியாவின் ஏற்றுமதி கடந்த மார்ச் மாதத்துடன், 417.8 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இது குறித்து பேசிய மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்திய பொருளாதாரம் பல சாதனைகளை முறியடிக்கும் வகையில் வளரும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார். அதேநேரம் இந்தியாவின் ஏற்றுமதி வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமானது எனவும், அவர் கூறியுள்ளார். இதேவேளை தற்போது எட்டப்பட்டுள்ள இந்தச் சாதனை முந்தைய ஆண்டை விட 14.53 விழுக்காடு அதிகமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1274697
-
- 0 replies
- 151 views
-
-
வான் தாக்குதலை... வானத்திலேயே முறியடிக்கும், ஏவுகணையை... உருவாக்கும் இந்தியா வான்வழி தாக்குதலை வானத்திலேயே முறியடிக்கும் வகையில் ஏவுகணையை உருவாக்கி வருவதாக இந்தியா அறிவித்துள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகள் குறித்த ஏவுகணையை தயாரித்துள்ளதாக அறிவித்துள்ளது. இவ்வாறு தயாரித்துள்ள இந்த உள்நாட்டு ஏவுகணை 300 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து எதிரியின் வான் தாக்குதலை முறியடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மற்றொரு ஏவுகணை 160 கிலோமீட்டர் தூரம் வரை தாக்கும் வகையில் கட்டமைக்கப்படுகிறது என்றும் இந்தியா அறிவித்துள்ளது. ஒஸ்ட்ரா எம்.கே. 2 மற்றும் எம்.கே.3 ஆகிய இந்த இரண்டு ஏவுகணைகளும் அடுத்த இரண்டு ஆண்ட…
-
- 0 replies
- 157 views
-
-
சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் யாழ்ப்பாண தமிழர்! சிங்கப்பூரில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட சிங்கப்பூர் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் களம் இறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைத் தமிழர் தர்மன் சண்முகரத்தினம் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் யாழ்ப்பாணம் – ஊரெழு மற்றும் உரும்பிராய்ப் பகுதியை தாய் தந்தையரின் பிறப்பிடமாகக் கொண்டவராவார். இவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக மக்கள் செயல் கட்சியில் இருந்து பதவி விலகல் செய்வதுட…
-
- 25 replies
- 1.9k views
- 1 follower
-
-
சுவையாக இருந்தாலும் புற்றுநோயை உண்டாக்கும் நிறமிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாகக் கூறி கர்நாடகாவில் கோபி மஞ்சூரியனுக்கு அம்மாநில அரசு தடை விதித்திருக்கிறது. விதிகளை மீறினால் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கோபி மஞ்சூரியனில் என்ன பிரச்னை? தமிழ்நாட்டிலும் இதற்கு தடை விதிக்கப்பட்டுமா? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்...
-
- 0 replies
- 364 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கட்டுரை தகவல் எழுதியவர், வினீத் கரே பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மக்களவைத் தேர்தல் 2024 ஏழு கட்டங்களாக நடந்து வரும் நிலையில், தேர்தல் பிரசாரங்களில் 'முஸ்லிம்களுக்கு எதிரான' கருத்துகளைப் பரப்புவது வெளிநாடுகள் உட்பட பல்வேறு தரப்பினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பொதுத் தேர்தலில் பிரதமர் மோதி தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெறுவார் எனப் பல நிபுணர்கள் கணித்து வரும் நிலையில் பாஜக தேர்தல் பிரசார பாணி தொடர்பான விமர்சனங்கள் எழுந்துள்ளன. சமீபத்திய தேர்தல் பிரசாரம் குறித்து, பெயர் குறிப்…
-
- 1 reply
- 448 views
- 1 follower
-
-
78 வது சுதந்திர தினம் – வளர்ந்த பாரதம் எனும் கருப்பொருளில் கோலாகல கொண்டாட்டம். ஜனநாயக இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினம் இன்றாகும். இந்தியாவை பிரித்தானியர்கள் சுமார் 200 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். அவர்களிடமிருந்து 1947 ஆம் ஆண்டு விடுதலை பெற்ற பிறகு 78 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் முதல் தேசியக் கொடியை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி டெல்லி செங்கோட்டையில் ஏற்றினார். அன்றிருந்து வருடந்தோறும் ஒகஸ்ட் 15 ஆம் திகதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதற்கமைய , இந்த ஆண்டுக்கான சுதந்திர தின விழா, கொண்டாட்டங்கள் ‘வளர்ந்த பாரதம்’ என்ற கருப்பொருளில் நடைபெறுகின்றன. சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி இன்று …
-
- 3 replies
- 459 views
-
-
இந்தியாவிற்கு அல்-கொய்தா தீவிரவாத அமைப்பு பகிரங்க மிரட்டல்.! காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசிற்கும், ராணுவத்திற்கும் மிரட்டல் விடுக்கும் வகையில் அல்-கொய்தா தீவிரவாத இயக்கம் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. “Mujahideen in Kashmir” என்று தலைப்பிலான இந்த வீடியோவில் அல்-கொய்தா இயக்கத்தின் தலைவர் அய்மன் அல்-ஸவாகிரி தோன்றி பேசியுள்ளார். காஷ்மீர் அரசு மற்றும் இந்திய ராணுவத்தினர் மீது இடைவிடாத தாக்குதல்களை அரங்கேற்றுமாறு தீவிரவாதிகளுக்கு அதில் அவர் கட்டளையிட்டுள்ளார். வீடியோவில் அல்-ஸவாகிரி பேசுகையில், “காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் முதலில் ஒரே எண்ணத்துடன் இந்திய ராணுவம் மீதும் அரசின் மீதும் தொடர் தாக்குதல்களை அரங்கேற்ற வேண்டும், அப்போது தான் இந்திய பொருளாத…
-
- 0 replies
- 299 views
-
-
காஸ்மீரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறுவர்கள்- பிபிசி அதிர்ச்சி தகவல்- தந்தையை விடுவிப்பதற்காக 14 வயது மகன் கைது இந்திய அரசாங்கம் காஸ்மீரில் பெருமளவு சிறுவர்களை கைதுசெய்து தடுத்துவைத்துள்ளது என தனக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. காஸ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியதன் காரணமாகவும் அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதன் காரணமாகவும் காஸ்மீரின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதாக பிபிசி தெரிவித்துள்ளது. இந்திய அரசாங்கத்திற்கு எதிரான உணர்வுகளை கட்டுப்படுத்துவதற்காக சிறுவர்களையும் இளைஞர்களையும் அதிகாரிகள் கைதுசெய்கின்றனர் என காஸ்மீரில் பல பகுதிகளில் பொதுமக்கள் தெரிவித்தனர் என பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார…
-
- 0 replies
- 352 views
-