Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ரஷ்யாவுக்கு எதிராக... மோடியை அழைக்க, தீர்மானம்? ரஷ்யாவுக்கு எதிராக சர்வதேச கூட்டணியை உருவாக்கும் முயற்சியாக அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி7 உச்சமாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடியை அழைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜுன் மாதம் 26 ஆம் திகதி பவேரியன் ஆல்ப்ஸில் ஆரம்பமாகும் இந்த மாநாட்டில் இந்தோனேசியா, தென்னாப்பிரிக்கா, செனகல் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். இதில் பங்கேற்க சிறப்பு அழைப்பாளராக மோடியை அழைப்பது எனவும், ரஷ்யாவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்க ஜெர்மனி பிரதமர் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1279544

  2. டெல்லியில் காருடன் இழுத்துச் செல்லப்பட்ட பெண்ணுக்கு நடந்தது என்ன? – களத்தில் பிபிசி கட்டுரை தகவல் எழுதியவர்,தில்நவாஸ் பாஷா பதவி,பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் கஞ்சாவ்லா வழக்கை விசாரித்து வரும் தில்லி போலீஸார் செவ்வாய்கிழமை மதியம் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, இந்த விவகாரத்தில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது என்று தெரிவித்தனர். "பாதிக்கப்பட்ட பெண்ணுடன் மற்றொரு பெண் இருந்தார். விபத்தில் அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. விபத்து நடந்தவுடன் அவர் எழுந்து சென்று விட்டார்,” என்று டெல்லி காவல்துறையின் சிறப்பு கமிஷனர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சாகர்ப்ரீத் ஹூடா கூறி…

  3. இந்தோனேசியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஆசிய விளையாட்டு போட்டிகள் இடம்பெற்று வரும் இந்தோனேசியாவின் லெம்பெக் தீவில் நேற்று மாலை மீண்டும் 6.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூகம்பங்களை அடிக்கடி சந்திக்கும் பூமியின் நெருப்புக் கோளம் பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில் உள்ள லெம்பெக் தீவில் சில வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 460 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கிடையே, இந்தோனேசியா தலைநகரான ஜகார்த்தாவில் இருந்து சுமார் 1500 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள தீவின் கிழக்கு பகுதியில் நேற்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பெலண்டிங் நகரில் இருந்து தென்மேற்கே சுமார் 7 கிலோமீ…

  4. எம்என்சி நிறுவனங்களிடம் கன்னட பணியாளர்களின் எண்ணிக்கை கேட்கும் அமைச்சர் – தமிழர்களுக்கு பிரச்னையா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 25 பிப்ரவரி 2024 கர்நாடகா கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி, சமீபத்தில் அம்மாநிலத்தில் அலுவலகங்கள் வைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் (MNC) அங்கு ‘எத்தனை கன்னட பணியாளர்கள் உள்ளனர் என்ற தகவலை அறிவிப்பு பலகைகளில் வெளியிட வேண்டும்,’ எனப் பேசியது, அரசியல் களத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இது உண்மையில் சாத்தியமா? இதனால் யாருக்கு பாதிப்பு ஏற்படும்? சமீப காலமாகவே கர்நாடக மாநிலத்தில…

  5. தலைப் பக்கமாக ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை வெற்றிகரமாக பிரித்துள்ளனர் லண்டனை சேர்ந்த மருத்துவர்கள். 55 மணி நேரம் நடந்த நான்குகட்ட அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு குழந்தைகள் இருவரும் தனித்தனியாக நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. இரட்டையர்களின் தாயான சைனாப்பிற்கு ஏழு குழந்தைகளின் பிரசவமும் வீட்டிலேயே நடந்தது. எனவே சைனாப் இந்த இரட்டையர்களை கருத்தரித்து இருந்தபோதும் வீட்டிலேயே பிரசவம் செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. …

  6. மணிப்பூரில் பதற்றம் – இணையசேவைகள் முடக்கம்! பதிவேற்றுனர்: தமிழ்விழி திகதி: 09 Jun, 2025 மணிப்பூரில் மெய்தி அமைப்பின் தலைவரை கைது செய்தமையால் போராட்டக்காரர்கள் தீக்குளிக்கப் போவதாக அறிவித்தல் விடுத்துள்ளனர் . வன்முறைகளை அடுத்து மணிப்பூரில் 5 நாட்களுக்கு இணைய சேவையை மாநில அரசு தடை செய்துள்ளது. ஜூன் 7 நள்ளிரவிலிருந்து 5 மாவட்டங்களில் இணைய சேவையும், தொலைபேசி சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளன.மணிப்பூரில் மெய்தி சமுதாயத்தின் ஆரம்பை டேங்கோல் அமைப்பின் தலைவர் உட்பட ஏனைய உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டதால், மணிப்பூரின் 5 மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது.இருப்பினும், கைது செய்யப்பட்டவர்கள் குறித்த தகவல்களையோ அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளையோ வெளியிட பொ…

    • 0 replies
    • 157 views
  7. ஜெனிவா: ஐநா. மனித உரிமை மாநாட்டில் பாகிஸ்தானுக்கு பத்து விதமான அறிவுரைகளை இந்தியா வழங்கியுள்ளது. குடியுரிமை திருத்த சட்டம், ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் மோதல் அதிகமாகி இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்க பாகிஸ்தான் எல்லா வகையிலும் முயற்சி செய்து வருகிறது. ஐநா.வில் இப்பிரச்னையை அடிக்கடி எழுப்பி வருகிறது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்து வருவதால், அதன் முயற்சிகள் தோல்வியில் முடிந்து வருகிறது. இந்நிலையில், ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 43வது கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஜம்மு காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. இதற்கு ஐநா.வுக்கான இந்திய நிரந்தர தூதர் விமர்ஷ் ஆரியன் …

  8. நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரின் அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிந்துவிட்டதால், நாளை அதிகாலை 5.30 மணிக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என திஹார் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிர்பயா வழக்கில், தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி, குற்றவாளிகள் 4 பேரும் டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் இறுதியாகத் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதால் நாளை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. குற்றவாளிகளில் முகேஷ் சிங், பவன் குப்தா, அக்சய் சிங் ஆகியோர் தாக்கல் செய்த 2-வது கருணை மனுக்களையும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு இன்று அடுத்தடுத்து தள்ளுபடி செய்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்…

  9. அமெரிக்காவிடம் இருந்து துப்பாக்கிகளை கொள்வனவு செய்ய இந்தியா திட்டம்! அமெரிக்காவிடம் இருந்து தானியங்கி இயந்திரத் துப்பாக்கிகளை கொள்வனவு செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. சுமார் 72 ஆயிரம் தானியங்கி இயந்திர துப்பாக்கிகளை கொள்வனவு செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் அமெரிக்காவின் சிக்சாவார் நிறுவனத்திடம் இருந்து 500 மீட்டர் ரேஞ்ச் திறன்கொண்ட 647 கோடி ரூபாய் மதிப்பிலான 72 ஆயிரம் துப்பாக்கிகள் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக துப்பாக்கிகள் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை எல்லையில் சீனா – இந்தியாவிற்கு இடையிலான பதற்றம் …

  10. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: மருத்துவ சான்றிதழ்கள் அவசியம் ஒவ்வொரு வருடமும், நவம்பர் மாதம் ஆரம்பித்து ஜனவரி மாதம் வரை, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஐயப்பன் பக்கதர்கள் தரிசனத்திற்காக விடப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக, பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே நடை திறக்கப்பட்டுள்ளது. பம்பை, நிலக்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், வழைமையை போலல்லாது, இவ்வருடம் 10 வயது முதல் 60 வயது வரையிலான பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்ப…

  11. டெல்லி சலோ... வெற்றி ரகசியம்... விவசாயிகளின் வியூகத்தால் விழிபிதுங்கும் பி.ஜே.பி அரசு! துரை.நாகராஜன் போராட்டம் போராட்டம் பிரீமியம் ஸ்டோரி இந்தப் போராட்டத்தை நிலைகுலைய வைப்பதற்காக, எதிர்க்கட்சிகளிடம் விளையாட்டுக் காட்டுவதுபோல தந்திர வேலைகள் சிலவற்றை மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு கையில் எடுத்தது. ஆனால், அவையெல்லாம் துளியும் பலன் கொடுக்கவில்லை. உறுதியாகக் களத்தில் நின்று போராடி வருகின்றனர் விவசாயிகள். வழக்கம்போல ஆன்ட்டி இன்டியன் உள்பட பல்வேறு சித்துவேலைகளைக் காட்டியும் விவசாயிகளிடம் மோடியின் பாச்சா பலிக்கவில்லை. இதற்கெல்லாம் காரணமே... தற்போது விவசாயிகள் முன்னெடுத்திருக்கும் போராட்ட வடிவமே! எப்போதுமே போராட்டம் …

  12. “இது என் கடைசி காலை வணக்கமாக இருக்கலாம்” முக நுாலில் பதிவிட்ட மருத்துவர் கொரோனாவுக்கு பலி! 44 Views “இது கடைசியாக நான் சொல்லும் காலை வணக்கமாக இருக்கலாம். இதன்பின்னர் உங்களை நான் சந்திக்க முடியாது போகலாம்“ என கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது முக நுாலில் பதிவிட்ட இந்திய பெண் மருத்துவர் மறுநாள் உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாம் அலையை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பதால், பல மாநிலங்களும் சமாளிக்க முடியாமல் திணறுகின்றன. இந்தியாவிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தர பிரதேசம்தான், தற்போது அதிகமாக பதிக்கப்பட்டுள்ள மாநிலம் ஆகும். மேலும் இ…

  13. காஷ்மீர் அரசியல் மாற்றத்தைக் காணுமா? ஜம்மு - காஷ்மீரின் தலைவர்களுடனான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அண்மையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டம் இப்பகுதியில் மாற்றத்தைத் தூண்டுவதோடு புதிதாக யூனியன் பிரதேசத்தில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் என்பதே நம்பிக்கைகளாகியுள்ளன. கடந்த வாரம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் நான்கு முன்னாள் முதலமைச்சர்கள் உட்பட 14 தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்திய மத்திய அரசுக்கும் ஜம்மு-காஷ்மீர் அரசியல் தலைவர்களுக்கும் இடையில் 370 வது பிரிவு இரத்து செய்யப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற இரண்டாவது சந்திப்பாக இது கருதப்படுகின்றது. ஜம்மு - காஷ்மீர் அரசியல் தலைவர்களுடன் சுமார் மூன்று மணிநேரம் இடம்பெற்ற இந்த பேச்சுவா…

  14. அருணாச்சல இளைஞரை தேடும் இந்திய ராணுவம் - எந்த வேகத்தில் முயற்சி உள்ளது? திலீப் குமார் சர்மா பிபிசி இந்திக்காக 21 ஜனவரி 2022 பட மூலாதாரம்,TWITTER@TAPIRGAO படக்குறிப்பு, மிரம் தரோம் அசாமின் தேஜ்பூரில் உள்ள ராணுவ மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவர் இது குறித்து, "அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞர் மிரம் தரோம், மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டியதால் சீன ராணுவமான பிஎல்ஏவால் பிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்திய ராணுவம் உடனடியாக பிஎல்ஏவை ஹாட்லைன் மூலம் தொடர்பு கொண்டது. விதிமுறைகளின்படி, அவரைப் பற்றிய தகவல் அறியவும் அவரை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க…

  15. முகமது நபிக்கு எதிராக இந்திய அரசியல்வாதிகள் சர்ச்சைக்குரிய கருத்து : கட்டார், குவைத், ஈரான், சவுதி கடும் கண்டனம் முகமது நபிக்கு எதிராக இந்திய அரசியல்வாதிகளான பாஜக தலைவர்கள் நூபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் கூறியுள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கு அரபு நாடுகள் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளன. இதனை தொடர்ந்து, குவைத், கட்டார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அதிகாரபூர்வமாக எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டன. சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இந்த மூன்று நாடுகளிலும், எகிப்து, சவுதி அரேபியா மற்றும் ஓமன் ஆகிய நாடுகளிலும் ஆட்சேபனைக்கு வழிவகுத்தன. இந்த சர்ச்சை விவகாரத்தில் அரபு நாடுளுக்கு இந்தியா பதிலளித்துள்ளது. அரபு நாடுகளின் எதிர்ப்பை தொடர்ந்து, பாஜ…

  16. இந்தியாவில் கிடைத்த புதைபடிவங்கள்: டைனோசர் குட்டிகளை விழுங்கிய சனாஜே பாம்புகளைக் கண்டுபிடிக்க உதவிய தொல்லெச்சம் கமலா தியாகராஜன் ㅤ 2 நவம்பர் 2022 பட மூலாதாரம்,ALAMY மிகப்பெரும் டைனோசர் முட்டைகள் முதல் அறிவியலுக்கே புதிதான வரலாற்றுக்கு முந்தைய வினோதமான உயிரினங்கள் வரை, பல ஆச்சரியமான புதைபடிவங்கள் இந்தியாவில் உள்ளன. ஆனால், அவை வெறுமனே பூமிக்கு அடியில் உள்ளன. 2000ஆம் ஆண்டு நாக்பூரில் உள்ள மத்திய அருங்காட்சியகத்திற்கு நான் சென்றபோது, பழங்கால ஆராய்ச்சியாளர் ஜெஃப்ரி ஏ வில்சன், தான் இதுவரை கண்டிராத ஒரு புதைபடிவத்தினைக் கண்டார். அது, அவருடன் பணியாற்றிய ஒருவரால் 1984ஆம் ஆண்ட…

  17. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 9 அன்று அவரது நினைவு தினம், ஆப்கானிஸ்தான் முழுவதும் 'மசூத் தினமாக' கொண்டாடப்பட்டு வந்தது கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி நியூஸ் 10 செப்டெம்பர் 2023, 04:40 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் ஒரு பயணி வந்திறங்கியிருந்தால், முதலில் அவருடைய கண்ணில் படுவது அஹ்மத் ஷா மசூத்தின் பெரிய போஸ்டராகத்தான் இருக்கும். இதுமட்டுமின்றி, காபூலின் முக்கிய போக்குவரத்து வட்டத்திற்…

  18. ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப்பெற தீர்மானம் December 21, 2018 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மறைவுக்கு பின்னர் அவரை கௌரவிக்கும் வகையில் அளிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப்பெற டெல்லி சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1991-ம் ஆண்டு தேர்தல் பிரசாரம் செய்யவந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 21-5-1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். நாட்டுக்காக தனது உயிரை தியாகம் செய்த ராஜீவ் காந்தியின் மறைவுக்கு பின்னர் அவரை கௌரவிக்கும் வகையில் நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அவருக்கு கடந்த ஆண்டில் வழங்கப்பட்டிருந்தது. இந்த விருதினை திரும்பப்பெற வேண்ட…

  19. நீருக்கு அடியில் இந்தியாவின் முதல் ரயில் சேவை! இந்தியாவில் முதல் முறையாக நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆரம்பித்து வைத்துள்ளார். கொல்கத்தா மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் ஹவுரா மைதான் – எஸ்பிளானேட் மெட்ரோ வழித்தடத்தில் 32 மீற்றர் ஆழத்தில் குறித்த மெட்ரோ ரெயில் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த திட்டத்திற்கு 5,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1372463

  20. பட மூலாதாரம்,GETTY IMAGES 17 மார்ச் 2024 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் 18வது மக்களவை தேர்தலுக்கான தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்படும். தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் அட்டவணையை வெளியிடுவதற்கு முன், தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் எவ்வாறு தயாராகி வருகின்றது என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் விளக்கினார். மேலும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படுவது ஏன் என்பது குறித்தும் அவர் ஊடகங்களுக்கு விளக்கினார். இந்த கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) குறித்…

  21. இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் விமான நிலையத்தில் இருந்து ராகுல் காந்தி, குலாம் நபி அசாத், திருச்சி சிவா, டி.ராஜா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் டெல்லிக்கு திருப்பிப் அனுப்பப்பட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள், குலாம் நபி அசாத், ஆனந்த் ஷர்மா, கே.சி.வேணுகோபால், மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சீதாராம் யெச்சூரி, திமுகவின் திருச்சி சிவா, ஷரத் யாதவ், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா ஆகியோர் அங்கு சென்றனர். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிறகு அங்கு நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை ஆராய சென்றதாக காங்கிரஸின் டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அங்குள்ள அரசியல் தலைவர்களை சந்திக்க சென்றுள்ளன…

    • 0 replies
    • 481 views
  22. தவறாக நடந்த பூசாரி.. கோவிலுக்குள் நுழைந்து அடித்து உதைத்து நிர்வாணமாக்கிய பெண்கள்: சிசிடிவி-யில் சிக்கிய காட்சி இந்தியாவில் பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்ட கோவில் பூசாரி மீது சரமாரி தாக்குதல்." இந்தியாவில் பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்ட கோவில் பூசாரி மீது சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் உள்ள பவானிபுரத்திலே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. கோவிலுக்கு வந்த பெண் ஒருவரிடம் பூசாரி தவறாக நடந்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், குழுவாக கோவிலுக்குள் நுழைந்த பெண்கள், பூசாரி மீது மிளகாய் பொடியை வீசி, துணிகளைக் கிழித்து அடித்து உதைத்து நிர்வாணமாக்கியுள்ளனர். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் இரண்டு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். வ…

  23. எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை வெளியானது ! குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 12 ஆம் திகதி இடம்பெற்ற எயார் இந்தியா விமான விபத்தில் 229 பயணிகள், 12 பணியாளர்கள் மற்றும் தரையில் இருந்த 19 பேர் உட்பட 260 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த விமான விபத்து புலனாய்வுப் பணியகத்துக்கு மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி தனது முதல்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பணியகம், மத்திய அரசிடம் தனது அறிக்கையை கடந்த 8-ம் திகதி சமர்ப்பித்தது. இந்த அறிக்கை விவரங்கள் விரைவில் பொது…

  24. ஊரடங்கிற்கு பிந்தைய திட்டம் என்ன என விஞ்ஞானிகள்-மருத்துவர்கள் அடங்கிய 800 பேர் மத்திய அரசிற்கு கேள்வி விடுத்து உள்ளனர். பதிவு: ஏப்ரல் 02, 2020 17:15 PM புதுடெல்லி 800 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் ஏப்ரல் 1 ம் தேதி ஒரு அறிக்கையை வெளியிட்டனர், கொரோனா தொற்றுநோயின் முக்கிய அம்சங்கள் குறித்து கவனத்தை ஈர்த்ததுடன், இது தொடர்பாக சில முக்கியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியது. அதில் கையொப்பமிட்டவர்களில் டிஐஎஃப்ஆர், மும்பை, என்சிபிஎஸ், பெங்களூரு, ஐஐடி, ஐஐஎஸ்இஆர், ஐஐஎஸ்சி, பெங்களூரு, மற்றும் அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான இந்திய மருத்துவர்கள் சங்க உறுப்பினர்கள் அதில் அ…

  25. உலகின் செல்வாக்கு மிகுந்த, 100 பேரில் இடம்பிடித்த நரேந்திர மோடி..! அமெரிக்காவில் இருந்து வெளியாகும், 'டைம்' இதழ் வெளியிட்டுள்ள, உலகின் செல்வாக்கு மிகுந்த, 100 பேரின் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி இடம் பெற்றுள்ளார். டைம் இதழ் ஒவ்வொரு ஆண்டும், உலகின், செல்வாக்கு மிகுந்த, 100 பேரின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. வாசகர்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில், 100 பேர் கொண்ட பட்டியல், ஆசிரியர் குழுவால் தீர்மானிக்கப்படும். இந்நிலையில், டைம் இதழ் வெளியிட்டுள்ள '2020ஆம் ஆண்டுக்கான, செல்வாக்கு மிக்க 100 தலைவர்கள்' பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி இடம் பெற்றுள்ளார். இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமெரிக்க தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில், …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.