Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தொடர்ச்சியாக... உணரப்படும், நில நடுக்கங்களால் அச்சத்தில் மக்கள்! ஹைதராபாத்தின் தெற்கு பகுதியில் இன்று (திங்கட்கிழமை) மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 4.0 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் இதனால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. அதேநேரம் சிக்கிம் மாநிலத்திலும் 4.0 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இவ்வாறு இந்தியாவின் பல பாகங்களிலும் அண்மைக்காலமாக நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக மக்கள் அச்சத்தை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1230619

  2. "பெகாசஸ்" மென்பொருள் விவகாரம் : நாடாளுமன்ற நிலைக்குழு மூலம் விசாரணை நடத்த திட்டம்! பெகாசஸ் மென்பொருள் மூலமாக இந்தியாவைச் சேரந்த முக்கிய அரசியல் பிரமுகர்களின் தொலைப்பேசி உரையாடல்கள் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசிதரூர் தலைமையில் எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனத் கூறப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ என்ற நிறுவனம் தயாரித்திருக்கும் பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் 50 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரலங்களின் தொலைப்பேசி உளவு பார்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய…

  3. பிரான்ஸில் இருந்து 3 ரஃபேல் விமானங்கள் இந்தியா வருகை! பிரான்ஸில் இருந்து மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்வனவு செய்ய ஒப்பந்தம் செய்தது. முதல் கட்டமாக 5 ரஃபேல் போர் விமானங்கள் கொண்டுவரப்பட்டன. இதனையடுத்து ஏழாம் கட்டமாக 3 விமானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனையடுத்து இந்திய விமானப்படையில் தற்போது 24 ரஃபேல் போர் விமானங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1229959

  4. நாடு கடத்தினால்... நிரவ்மோடி, தற்கொலை செய்துகொள்வார் – வழக்கறிஞர் தெரிவிப்பு! தொழிலதிபர் நிரவ் மோடியை நாடு கடத்தும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அவர் நாடுகடத்தப்பட்டால் தற்கொலை செய்துகொள்வார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், ‘நிரவ் மோடியின் சிறுவயதில், அவரது தாய், தற்கொலை செய்துள்ளார். அதிலிருந்து நிரவ்மோடி மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். மனநல ஆலோசனைகளையும் அவர் முறையாக பெறவில்லை. இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டால் அவர் தற்கொலை செய்துகொள்வார்’ எனத் தெரிவித்துள்ளார். பிரபல தொழிலதிபரான நிரவ்மோடி மற்றும் மெஹுல் சோக்சி, ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் இர…

  5. ஒக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை – மத்திய அரசு! ஒக்சிஜன் தட்டுப்பாட்டால் எந்த மாநிலத்திலும், யூனியன் பிரதேசத்திலும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் அதிகளவான உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒக்சிஜன் தட்டுப்பாடு காரணமாகவே மேற்படி உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இது குறித்து ராஜ்யசபாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் பாரதி பிரவீன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், ‘தினமும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் வ…

  6. செளதிக் பிஸ்வாஸ் பிபிசி நியூஸ் இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்தில் 40 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. முந்தைய சில ஆண்டுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை விட கொரோனா காலகட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்பதை ஒப்பிட்டு இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது. இந்தப் பெருந்தொற்று காலத்தில் இறந்தவர்களில் கோவிட்-19 பாதிப்பால் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதைக் கூறுவது கடினமென்றாலும், அந்தத் தொற்றால் ஏற்பட்ட ஒட்டுமொத்த பாதிப்பை அளவிடுவதற்கான எண்ணிக்கையாக இது உள்ளது. இதுவரை இந்தியாவில் 4,14,000-க்கும் அதிகமானவர்கள் கோவிட்-19 தொற்று காரண…

  7. பாகிஸ்தானுக்கான... ஆப்கானிஸ்தானின், தூதுவரின் மகள் கடத்தல் பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தானின் தூதுவரின் மகள் கடத்தப்பட்டது சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வெள்ளிக்கிழமை வீட்டிற்கு செல்லும் வழியில் அவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டார் என்றும் அவரது உடலில் காயங்கள் காணப்படுவதாகவும் ஆப்கானிஸ்தானின் வெளிவிவகார அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது. இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் நீண்ட காலமாக சிதைந்து போயுள்ள நிலையில் 20 வயதான ஆப்கானிஸ்தானின் தூதுவரின் மகள் கடத்தப்பட்டுள்ளார். விடுதலையின் பின்னர் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் கு…

  8. நீர்மூழ்கிக் கப்பலை... தாக்கி அழிக்கும், விமானம் இந்தியா வருகை! நீர்மூழ்கிக் கப்பலை தாக்கி அழிக்கவல்ல பி-8ஐ போர் விமானம் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘கடந்த 2016 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2ஆவது போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிப்பதோடு மட்டுமல்லாமல், பேரிடர் மீட்புப் பணிகளிலும் பி-8ஐ போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. போர் விமானங்களை இயக்குவதில் இந்திய கடற்படையினருக்கு போயிங் நிறுவனமே பயிற்சி அளித்து வருகிறது. அந்தப் போர் விமானங்களுக்குத் தேவையான உபகரணங்கள், பராமரிப்பு சேவைகள் உள்ளிட்டவற்றையும…

  9. லடாக் பகுதி எல்லை பிரச்சினை : இந்திய – சீன இராணுவ மட்ட கலந்துரையாடல் எல்லை நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் இந்திய – சீன இராணுவ மட்ட கலந்துரையாடலுக்கான ஒப்புதல்கள் இருதரப்பிலிருந்தும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறானதொரு நிலையில், உண்மையான கட்டுப்பாட்டு எல்லை மாற்றுவது ஏற்புடையதல்ல என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சீன வெளிவிவகார அமைச்சர் வோங் ஹீயை சுட்டிக்காட்டியே இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார் . எனவே பதற்றங்களுக்கு வழிவகுக்காது எல்லையில் காணப்பட கூடிய அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வை எட்டும் வகையில் மூத்த இராணுவ அதிகாரிகள் மட்ட கலந்துரையாடல் அமைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சின் …

  10. தலிபான்களின் தாக்குதலில் பிரபல இந்திய புகைப்பட செய்தியாளர் பலி ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மேற்கொண்ட தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்படச் செய்தியாளர் தனிஷ் சித்திக் உயிரிழந்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இராணுவத்தினருக்கும் தலிபான்களுக்கும் இடையே கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளை அடக்குவதற்காக இராணுவம் தாக்குதல் நடத்துவதும், இராணுவத்தினர் மீது தலிபான்கள் வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழ்த்துவதும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்படச் செய்தியாளர் தனிஷ் சித்திக் உயிரிழந்துள்ளார்…

  11. இமாச்சல பிரதேசத்தில்... பெய்த கனமழை காரணமாக, 13 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிப்பு! இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணமாக 13 பேர் காணாமல்போயுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த பகுதியில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் சுற்றுலாப் பணிகள் மலைப்பகுதிகளுக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், வெள்ளப்பெருக்கு அதிகமாக இருப்பதால் கரையோரங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இமாச்சல பிரதேசத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1228336

  12. பழங்குடி மக்களின் காட் பாதர் ஸ்டேன் சுவாமி மீது "அதிகாரங்கள்" ஆத்திரமடைந்தது ஏன்? - உலக ஆதிவாசிகள் நிலைமை.! மும்பை: சமூக செயற்பாட்டாளர், பாதிரியார், ஸ்டேன் சுவாமி 2020ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 8ம் தேதி இரவு என்.ஐ.ஏ போலீசாரால் கைது செய்யப்பட்டபோது மத்திய இந்தியாவின் பல பகுதிகளும் அதிர்ந்து போயின. 70 வருடங்களாக அந்த பிராந்திய ஆதிவாசி மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவராயிற்றே ஸ்டேன் சுவாமி. 83 வயதான ஸ்டேன் சுவாமி, தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டார். 2018ம் ஆண்டு மகாராஷ்டிராவின், பீமா - கொரேகான் வன்முறையை தூண்டியதாகவும், எல்கார் பரிஷத் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதன் மூலம் வன்முறையை ஏற்படுத…

  13. காஷ்மீர் அரசியல் மாற்றத்தைக் காணுமா? ஜம்மு - காஷ்மீரின் தலைவர்களுடனான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அண்மையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டம் இப்பகுதியில் மாற்றத்தைத் தூண்டுவதோடு புதிதாக யூனியன் பிரதேசத்தில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் என்பதே நம்பிக்கைகளாகியுள்ளன. கடந்த வாரம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் நான்கு முன்னாள் முதலமைச்சர்கள் உட்பட 14 தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்திய மத்திய அரசுக்கும் ஜம்மு-காஷ்மீர் அரசியல் தலைவர்களுக்கும் இடையில் 370 வது பிரிவு இரத்து செய்யப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற இரண்டாவது சந்திப்பாக இது கருதப்படுகின்றது. ஜம்மு - காஷ்மீர் அரசியல் தலைவர்களுடன் சுமார் மூன்று மணிநேரம் இடம்பெற்ற இந்த பேச்சுவா…

  14. ராஜஸ்தானில்... மின்னல் தாக்கி, 18 பேர் உயிரிழப்பு! ராஜஸ்தான் மாநிலத்தில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி 18 பேர் உயிரிழந்துள்ளனர். ஜெய்பூர் அருகே உள்ள அரண்மனையை பார்வையுற்ற சுற்றுலா பயணிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 5 சிறுவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேநேரம் கோடா, ஜலாவர், பரண் ஆகிய பகுதிகளில் மின்னல் தாக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவுள்ளதாக முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். https://athavannews.com/2021/1228107

  15. தலிபான் முன்னேற்றத்தால் ஆப்கானிலிருந்து 50 அதிகாரிகளை வெளியேற்றியது இந்தியா ஆப்கானிஸ்தானின் காந்தஹாரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் சுமார் 50 தூதர்கள் மற்றும் பிற ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தெற்கு நகரத்தைச் சுற்றியுள்ள முக்கிய பகுதிகளை தலிபான் போராளிகள் கைப்பற்றியதை அடுத்து, இந்திய விமானப்படை விமானத்தில் காந்தஹாரில் இருந்து சுமார் 50 தூதர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை இந்தியா வெளியேற்றியுள்ளது. தூதரகத்தில் இருந்த பணியாளர்கள் விமானப்படை விமானங்களினூடாக டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். "ஆப்கானிஸ்தானில் உருவாகி வரும் பாதுகாப்பு நிலைமையை இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. எங்கள் பணியாளர்களின் பாதுகாப்பும…

  16. கங்கை நதியில்... கொரோனா வைரஸின் தடையங்கள் கிடைக்கவில்லை – ஆய்வில் தகவல்! கங்கை நதியில் கொரோனா வைரஸின் எந்த தடயங்களும் கண்டுப்பிடிக்கப்படவில்லை என அரசு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரின் சில மாவட்டங்களை ஒட்டி, கங்கை நதியில் சில சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. குறித்த சடலங்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுடையதாக இருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டது. இதனையடுத்து கங்கை நதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வுகளின் அடிப்படையில் மேற்படி முடிவு வெளியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://athavannews.com/2021/1227485

  17. அமைச்சரவை, விரிவாக்கம் குறித்த அறிவிப்பு! பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று (புதன்கிழமை) விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இருபது புதிய அமைச்சர்கள் பதவி வகிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே நாட்டின் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தும் வகையில் தனி அமைச்சகம் ஒன்றை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நலத்திட்டங்களின் பலன் அடித்தட்டு மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்கு இந்த அமைச்சகம் பாலமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1227118

  18. உலகின், மருந்தகமாக... இந்தியா விளங்குகிறது – ராம்நாத் கோவிந்த் உலகின் மருந்தகமாக விளங்கும் இந்தியா கொரோனா தொற்று பாதிப்பு சிகிச்சைக்கான மருந்துகளை உலக நாடுகளுக்கு வழங்கியுள்ளதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். கொலம்பியா, உருகுவே, ஜமைக்கா, ஆர்மீனியா ஆகிய நாடுகளுக்காக புதிதாக நியமிக்கப்பட்ட தூதுவர்கள் தங்கள் சான்றுகளை குடியரசு தலைவரிடம் அளிக்கும் நிகழ்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘கொரோனா தொற்று பாதிப்பு சூழலில் கொரோனா தொற்று தடுப்புக்கான அத்தியாவசிய மருந்துகளை உலக நாடுகளுக்கு இந்தியா வழங…

  19. வேளாண் சட்டங்களுக்கு எதிராக, நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் – விவசாயிகள் அறிவிப்பு! வேளாண் சட்டமூலங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 22 ஆம் திகதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தவுள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகி 19 நாட்கள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது எதிர்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையிலேயே மேற்படி போராட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பு, ‘வேளாண் பெருமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வக…

  20. ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா: இவ்வளவு அதிகாரம் கொண்டதா? திரையுலகினர் கூறுவதென்ன? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவின் ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா அரசுக்கு அளப்பரிய சென்சார் அதிகாரத்தை வழங்கும் என்று இந்தியாவின் முன்னணி சினிமா இயக்குநர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், அது சென்சார் சான்று வழங்கப்பட்டு வெளியான படத்தை கூட மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த வழி ஏற்படும். இந்தியாவில் தயாரிக்கப்படும் சினிமாக்களுக்கு மும்பையில் இருக்கும் சென்சார் குழு சான்றளிக்காமல், அதை பொதுவெளியில் திரையிட முடியாது. சென்சார் குழுவுக்கு வட்டார அலுவலகங்களும் இருக்க…

  21. சிறுவர்களை... கொத்தடிமைகளாக, விற்க முயற்சி! உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 40 சிறுவர்கள் உள்ளிட்ட 80 பேரை கொத்தடிமைகளாக விற்பதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த மாநிலத்தில் இருந்து பஞ்சாப் செல்லும் கர்மபூமி எக்ஸ்பிரஸ் ரயிலில் 80 பேரும் அழைத்து செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது மீட்கப்பட்ட 40 சிறுவர்களும் 15 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் என தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தப்பி சென்றுள்ள நிலையில், அவர்களை தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1226314

  22. ட்ரோன் தாக்குதல் போன்ற புதிய ராணுவ சவால்களை எதிர்கொள்ள இந்தியா தயாரா? ராகவேந்திர ராவ் பிபிசி செய்தியாளர் 2 ஜூலை 2021, 05:01 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ட்ரோனை பயன்படுத்தும் இந்திய ராணுவம். ஜூன் 27 அன்று, இந்திய விமானப்படையின் ஜம்மு விமான தளத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல், இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு எச்சரிக்கை மணி எழுப்பியுள்ளது. ட்ரோனில் வெடிபொருட்களை வைத்து இந்திய ராணுவத்தை குறிவைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட இத்தகைய சம்பவம் இது தான் முதல் முறை என்று கூறப்படுகிறது. ஜம்மு விமானப்படை தளத்தின் தொழி…

  23. "ஸ்புட்னிக் லைட்" தடுப்பூசியின் பரிசோதனைக்கு தடை! ஸ்புட்னிக் லைட் கொரோனா தடுப்பூசிக்கான 3 ஆம் கட்ட சோதனை நடவடிக்கைக்கான அனுமதியை மத்திய அரசு மறுத்துள்ளது. ஒருமுறை மட்டுமே செலுத்தும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட பரிசோதனையை இந்தியாவில் டொக்டர் ரெட்டீஸ் நிறுவனம் மேற்கொள்ள இருந்தது. இந்நிலையிலேயே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே இரண்டு முறை செலுத்தப்படும் கோவிஷீல்டு, கோவேக்சின் மற்றும் ஸ்புட்னிக் வி உள்ளிட் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், ஒரு சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் மொடர்னா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1226127

  24. அக்னி பிரைம் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை! அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒடிசா கடற்கரைக்கு கிழக்கே அப்துல் கலாம் தீவில் உள்ள 4 ஆம் ஏவுதளத்தில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளது. இதன்போது அக்னி பிரைம் ஏவுகணை இலக்குகளை மிக துல்லியமாக எட்டியதாக டிஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அக்னி பிரைம் ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து 1000 முதல் 2000 கிலோமீற்றர் தூரம்வரை பறந்து சென்று எதிரிகளின் இலக்கை தாக்கும் வல்லமை கொண்டதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1225533

  25. பதுங்கிப் பாயும் திட்டத்தில் சீனா.. சமாளிக்கத் தயாராகும் இந்தியா! - எல்லையில் நடப்பது என்ன? வருண்.நா சீன எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் ( Twitter/@adgpi ) இந்திய-சீன எல்லையில் மீண்டும் பதற்றம் நிலவத் தொடங்கியிருக்கிறது... என்ன காரணம்? விகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...! எக்ஸ்க்ளுசிவ் நியூஸ் கட்டுரைகள் தினமும் உங்களை தேடி…! Get Our Newsletter இந்தியா - சீனா இடையே பல ஆண்டுகளாக எல்லைக் கோட்டை நிர்ணயிப்பது தொடர்பான பிரச்னை நீடித்து வரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.