Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கொவிஷீல்ட் தடுப்பூசியின் விலை உயர்வு – சீரம் நிறுவனம் கொவிஷீல்ட் தடுப்பூசியின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது கோவாக்சின் மற்றும் கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. மே முதலாம் திகதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தடுப்பூசி விலைப்பட்டியலை புனே சீரம் நிறுவனம் வெளியிடப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் ரூ.400-க்கும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.600-க்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி உற்பத்தியில் 50 சதவீதம் அரசுக்கும் 50 சதவீதம் தனியார் தொகுப்புக்கும் வழங்கப்படும் என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.…

  2. எதுவுமே என் கையில் இல்லை; மக்களே தங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம்: பிரதமர் பேச்சு குறித்து காங்கிரஸ் கிண்டல் பிரதமர் மோடி | கோப்புப் படம். புதுடெல்லி எதுவுமே என் கையில் இல்லை. மக்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள வேண்டும். பிரதமர் மோடியின் பேச்சில் ஒன்றும் இல்லை. வெறும் பேச்சு மட்டும்தான் என்று காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்துள்ளது. நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்து, நாள்தோறும் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகிறார்கள். தடுப்பூசி பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது. அதை விரைவில் தீர்க்கக் கோரி மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. …

  3. ஆக்சிஜன் கசிவால் 22 பேர் பலி: ரூ.5 லட்சம் நிதியுதவி! மின்னம்பலம் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் ஆக்சிஜன் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு உயிரிழந்த 22 பேர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நிலைமையை மேலும் மோசமாக்கும் விதமாக நாட்டில் பல இடங்களில் ஆக்சிஜன், தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால், ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, வெளி மாநிலங்க…

  4. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. "மிதமான அறிகுறிகள் தென்பட்டப்பின் எனக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள்," என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி - ட்விட்டரில் அறிவிப்பு - BBC News தமிழ்

  5. பிரதமர் நரேந்திர மோதி உரை: “கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்தால் ஊரடங்கு தேவையில்லை” பட மூலாதாரம், NARENDRA MODI இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை குறித்து பிரதமர் நரேந்திர மோதி நேரலையில் இன்று உரையாற்றினார். இந்தியா கொரோனா இரண்டாம் அலையால் மோசமாக பாதிக்கப்பட்டு வரும் சூழலில் நாட்டு மக்களிடம் உரையாற்றியுள்ளார். நாட்டில் ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிப்பது, மக்கள் நடைமுறைகளை சரியாக பின்பற்றுவதன் தேவை போன்ற அம்சங்கள் குறித்து உரையாற்றினார் மோதி. பிரதமர் மோதியின் உரையிலிருந்து: "கொரோனாவுக்கு எதிராக நாடு பெரிதாக போராடிவருகிறது. சில வாரங்களுக்கு முன் நிலைமை சரியாகிக் கொண்டிருந்த நிலை…

  6. இலங்கை விரைவில் மாகாணசபை தேர்தல்களை நடத்தவேண்டும் – இந்தியா எதிர்பார்ப்பு 6 Views இலங்கை விரைவில் மாகாணசபை தேர்தல்களை நடத்தவேண்டும் என இந்தியா எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது. மாகாணசபைகளுக்கு தேர்தல்களை நடத்துவது உட்பட்ட நடவடிக்கைகள் மூலம் அதிகாரங்களை பகிர்வது குறித்த தனது அர்ப்பணிப்பை நிறைவேற்றவேண்டும் என்ற சர்வதேச சமூகத்தின் கோரிக்கையை இந்தியா ஆதரிக்கின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரைக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் ஜெய்சங்கர் இதனை தெரிவித்துள்ளார். இது இலங்கையின் 13வது திருத்தத்தின் அடிப்படையில் அனைத்து மாகாணசபைகளும் பலனளிக்ககூடிய வி…

  7. இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததையடுத்து கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தற்போது அவர் எய்மஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமுலில் உள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள…

  8. இலங்கை குறித்த ஜெனீவா தீர்மானம் : இந்தியாவின் நிலைப்பாடு எழுத்துபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜெய்சங்கர் தெரிவிப்பு! ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணையை இந்தியா புறக்கணித்தாலும், தன் நிலைப்பாட்டை இந்தியா எழுத்துப் பூர்வமாக அறிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டவும், இலங்கை அரசு சமாதான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு முயற்சி செய்ய வேண்டும் என அதிமுக ராஜ்சபா உறுப்பினர் தம்பிதுரை வலியுறுத்தியுள்ள நிலையில், அதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ள அவர், ‘ இலங்கை தமிழர்களின் உரிமைகளை நிலைநா…

  9. உச்சத்தில் கொரோனா: இங்கிலாந்து பிரதமரின் இந்திய வருகை ரத்து! மின்னம்பலம் இந்தியாவில் கொரோனா தாக்குதல் தீவிரம் அடைந்திருக்கும் நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளார். கொரோனா வைரஸ் இரண்டாவது அலை இந்தியாவில் உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத் துறை அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாகி இன்று (ஏப்ரல் 18) வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “ ஏப்ரல் 25-26 தேதிகளில் ஜான்சன் இந்தியா வர திட்டமிடப்பட்டிருந்தது. இதை அறிவித்த , ’தற்போதுள்ள கொரோனா நிலைமையைக் கருத்தில் கொண்டு, இங்கிலாந்து ப…

  10. சீனா ஆதரவாளரை தூதுவராக ஏற்றுக்கொள்ள இந்தியா இணக்கம் 20 Views இந்தியாவுக்கான இலங்கை தூதுவராக மிலிந்த மொரகொடவை ஏற்றுக்கொள்வதற்கு தாம் தயாராக இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறீலங்காவின் இந்த நியமனத்தை இந்தியா ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற ஊகங்கள் முன்னர் வெளியிடப்பட்டிருந்தன. சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒரு நெருக்கமான பிணைப்பை ஏற்றுடுத்துவதில் முன்னின்று உழைத்ததுடன், சீனாவின் ஆதரவாளராக மொரகொட இருப்பதே இந்தியா அவரது நியமனத்தை ஏற்றுக்கொள்ளாது என்பதற்கான காரணங்களாக கூறப்பட்டன. ஆனால் இந்தியா தற்போது மொரொகொடாவை ஏற்றுக்கொள்ளும் தனது முடிவில் மாற்றமில்லை எனவும், அவரின் பதவியேற்பில்…

  11. Kumbh Mela ( AP Photo/Karma Sonam ) கடந்த இரண்டு நாள்களில் மட்டும் கும்பமேளாவில் பங்கேற்ற சுமார் 1,000 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அங்கே ஒன்றுகூடுவதால் அதன் மூலம் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்று பலரும் எச்சரிக்கின்றனர். கொரோனா இரண்டாவது அலை இந்தியாவை உலுக்கிக் கொண்டிருக்கும் வேளையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் நடக்கும் கும்பமேளாவில் பல லட்சம்பேர் பங்கேற்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 14-ம் தேதி ஒருநாள் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு அங்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பலரையும் கலங்கடித்திருக்கிறது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கடந்த 1-ம…

  12. கொரோனா வைரஸ்: பதைபதைக்க வைக்கும் குஜராத் நிலவரம்! - என்ன நடக்கிறது அங்கே? திலகவதி கொரோனா பரிசோதனை ( Channi Anand ) கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியா முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கும் சூழலில், குஜராத்திலிருந்து வரும் செய்திகள் அனைத்தும் நடுங்க வைப்பவையாகவுள்ளன. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனை படுக்கைகள் இல்லை என்றும், அவசர ஊர்திகள் இல்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது எல்லாவற்றையும்விட இடுகாடுகளில் வழக்கத்தை காட்டிலும் மூன்றிலிருந்து நான்கு மடங்கு அதிகமான உடல்கள் எரியூட்டப்படுகின்றன என்று வரும் செய்திகள் அச்சத்தை தருபவையாக உள்ளது. கொரோனா பாதிப்…

  13. மம்தாவை வீழ்த்துகிறதா மோடியின் வியூகம்?

    • 0 replies
    • 443 views
  14. பிரமாண்டமான அணையை கட்ட சீனா முடிவு : இந்தியாவுக்கு பெரும் சிக்கல் திபெத்தின் மொசோ மாவட்டத்தில் உள்ள பள்ளத் தாக்கில் பிரமாண்ட மான அணை ஒன்றைக்கட்ட சீனா முடிவு செய்துள்ளது. இந்நிலையில், சீனா இந்த அணையை கட்டினால் இந்தியாவுக்கு பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். உலகிலேயே மிகவும் நீளமான மற்றும் ஆழமான பள்ளத்தாக்கில் இந்த அணையை சீனா கட்டுகின்றது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4 ஆயிரத்து 900 அடி உயரத்தில் இந்த அணையை கட்ட சீனா திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சேமிக்கும் நீரைக் கொண்டு 30 ஆயிரம் கோடி கிலோவாட்ஸ் மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சீனாவின் 14 ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்த அணை க…

    • 14 replies
    • 1.4k views
  15. இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 140 இலட் சத்தை தாண்டியது இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 140 இலட் சத்தை தாண்டியது என அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளி யிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,00,739 பேர் கொரோனா தொற் றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் நேற்றைய தினம் 1038 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மொத்தமாக 140 இலட்சத்து 74 ஆயிரத்து 564 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 124 இலட்சத்து 29 ஆயிரத்து 564 பேர் குணமடைந் துள்ளனர், 14 இலட்சத்து 71 ஆயிரத்து 877 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் …

  16. எஸ் 400 ஏவுகணை தடுப்பு அலகுகள் குறித்த ஒப்பந்தம் உறுதியாகியுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு! எஸ் 400 ஏவுகணை தடுப்பு அலகுகள் தொடர்பான ஒப்பந்தத்தை செயற்படுத்துவதில் இந்தியாவும், ரஷ்யாவும் உறுதியாகவுள்ளதாக இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் நிகோலெய் குதாசேவ் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், எஸ் 400 மற்றும் பிற ஒப்பந்தங்களை பொறுத்தவரை ஒப்புக்கொள்ளப்பட்ட காலக்கெடு மற்றும் பிற கடப்பாடுகளை பூர்த்தி செய்ய இந்தியாவும், ரஷ்யாவும் கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அத்துடன் இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 அலகுகளை கொள்வனவு செய்வதற்கு இந்தியா கடந்த 2018 ஆம் ஆண்டு ஒப்…

  17. திடீரென பெரும் செல்வந்தர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி அயல்நாடுகளுக்கு செல்வது ஏன்?

  18. இந்தியா முழுக்க கொரோனா மிகக் கடுமையாக பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கும்பமேளா திருவிழாவை முன்னிட்டு கங்கை நதியில் நீராட ஆயிரக்கணக்கான மக்கள் குழுமி இருக்கின்றனர். வட இந்தியாவில், இமய மலை அடிவாரத்தில் இருக்கும் உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் நகரத்தில் கும்பமேளா திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. இத்திருவிழாவில் புனித நீராட, இன்று (ஏப்ரல் 12 திங்கட்கிழமை) மக்கள் லட்சக் கணக்கில் குவிந்துள்ளனர். மக்கள் கூட்டம் மிக அதிகமாக இருப்பதால் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறிக் கொண்டிருக்கின்றனர் கங்கையில் நீராடுவதால் தங்களின் பாவங்கள் விலகி, மோட்சம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக இருக்கி…

  19. இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது - அமெரிக்க உளவுத்துறை அறிக்கை இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது என அமெரிக்க அரசின் தேசிய உளவுத்துறை கவுன்சில் அறிக்கை தெரிவித்து உள்ளது. பதிவு: ஏப்ரல் 14, 2021 16:56 PM புதுடெல்லி: கடந்த காலத்தைப் போல் இல்லாமல் பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில் பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் செயல்களுக்கு , இந்தியா உடனடியாகப் பதிலடி கொடுத்து வருவதாக அமெரிக்க உளவு அமைப்பு அறிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்க அரசின் தேசிய உளவுத்துறை கவுன்சில் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகளாவிய அச்சுறுத்தல்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டு வருகிறது.தற்போது தேசிய புலனாய்வு இயக்குனரின் அலுவலகத்த…

  20. மகாராஷ்டிராவில் ஏப்ரல் 14 முதல் முழு பொது முடக்கம் - 15 நாட்களுக்கு 144 தடை 13 ஏப்ரல் 2021 பட மூலாதாரம், UDDHAV THACKERAY மகாராஷ்டிராவில் கடுமையாக உயர்ந்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் ஏப்ரல் 14 இரவு 8 மணி முதல் முழு பொது முடக்கத்தை அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே. இது தொடர்பாக தமது சமூக ஊடக பக்கங்கள் வாயிலாக மாநில மக்களிடையே பேசிய உத்தவ் தாக்கரே, "மாநிலத்தில் உள்ளவர்கள் அத்தியாவசிய தேவைகள் நீங்கலாக வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது," என்று தெரிவித்தார். "தற்போது மாநிலத்தில் 523 பரிசோதனை நிலையங்கள் உள்ளன. 4,000 கோவிட் மருத்துவ நிலையங்கள் உ…

  21. அதிகரிக்கும் கொரோனா – போராட்டத்தை கைவிட விவசாயிகளிடம் வலியுறுத்தல் 44 Views இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்திருப்பதால் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை கைவிட வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,68,912 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.மேலும் இந்தியாவில் தற்போது வரையில், 1,35,27,717 பேர் கொரோனாவால் பாதிப்படைந்து, 1,70,179 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில் ‘‘வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு எப்போதும் தயாராக…

  22. "அஸ்ட்ராஜெனெகா" கொவிட்- 19 தடுப்பூசி: இந்தியாவிடம் ஐரோப்பிய ஒன்றியம் முக்கிய கோரிக்கை சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியாவிடமிருந்து 10 மில்லியன் டோஸ் அஸ்ட்ராஜெனெகாவின் கொவிட் -19 தடுப்பூசியை வாங்க அனுமதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக் கொண்டுள்ளது. அரசாங்க அதிகாரியொருவர் ரொய்ட்டர் செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் நிறுவனத்தின் தயாரிப்பினை ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகிறது. ஐரோப்பிய ஒன்றிய கோரிக்கைக்கு எந்தவொரு விரைவான ஒப்புதலும் சாத்தியமில்லை. இருப்பினும் இந்தியா தனது சொந்த உள்நாட்டு தடுப்பூசி இயக்கத்தை விரிவுபடுத்துகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார். இ…

  23. கொரோனா தொற்றில் பிரேஸிலை பின்னுக்குத் தள்ளிய இந்தியா இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 168,912 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந் நாட்டு சுகாதார அமைச்சகம் இன்று காலை தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையின் மூலமாக கொரோனா வைரஸ் அதிகளவாக பதிவான நாடுகளின் பட்டியலில் பிரேஸிலை பின்னுக்குத் தள்ளி இந்தியா இரண்டாம் இடத்துக்கு வந்துள்ளது. தரவுகளின்படி இந்தியாவின் ஒட்டுமொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 13.53 மில்லியனை எட்டியுள்ளது, பிரேஸிஸல் 13.45 மில்லியன் கொரோனா நோயாளர்களை கொண்டுள்ளது. அதேநேரம் 31.2 மில்லியன் நோயாளர்களை கொண்டுள்ள அமெரிக்கா உலகில் அதிகளவான கொரோனா நோயாளர்களை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதேவேளை இந…

  24. காஷ்மீரில் தேடுதல் நடவடிக்கை – 12 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை காஷ்மீரில் , பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இரண்டு மாவட்டங்களில் பொலிஸாரும் பாதுகாப்பு படையினரும் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையில் அவர்கள் கொல்லப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் பொலிஸ் தலைவர் தில்பாக் சிங் தெரிவித்துள்ளார். கடந்த 72 மணி நேரத்தில் 4 என்கவுன்டர்கள் நடத்தப்பட்டதாகவும் இதில் டிரால் மற்றும் சோபியானில் 7 தீவிரவாதிகளும் அல் பதர் மற்றும் ஹரிபோராவில் 3 தீவிரவாதிகளும் பிஜிபெஹ்ராவில் 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார். தீவிரவாதிகளின் நடமாட்டம் குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கூட்டு தேடுதல் நடவ…

  25. மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி அருகில் துப்பாக்கிச் சூடு- நால்வர் உயிரிழப்பு! மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவரும் நிலையில் வாக்குச் சாவடி ஒன்றின் அருகில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. கூச் பிகார் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடி அருகில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் நால்வர் கொல்லப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் வாக்களிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது நடந்த குழப்பத்தின்போது மத்திய துணை இராணுவ வீரர்களே வாக்காளர்களைச் சுட்டுக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வாக்காளர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து நாளைய தினம், முதல்வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.