அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3273 topics in this forum
-
இந்திய மீனவர் மரணம் – விசாரணை அறிக்கையை எதிர்பார்ப்பதாக ஜெய்சங்கர் அறிவிப்பு 15 Views இந்திய மீனவர்கள் நால்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பெறுபேறுகளை தாம் எதிர்பார்த்திருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர்தெரிவித்திருக்கின்றார். இந்திய மேல் சபையில் நேற்று வியாழக்கிழமை எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த இந்திய அமைச்சர், “இந்த விவகாரம் தொடர்பில் நாம் எமது எதிர்ப்பை மிக மிக கடுமையாக சிறிலங்கா அரசாங்கத்துக்குத் தெரிவித்திருக்கின்றோம். அதற்குப் பதிலாக இச்சம்பவம் குறிதத விசாரணைகளை ஆரம்பிப்பதாக இலங்கை அரசாங்கம் உறுதியளிததிருந்தது” எனவும் கூறினார். …
-
- 0 replies
- 323 views
-
-
நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற கைதிகளில் ஒருவரான அக்ஷய் குமார் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நீதிபதி ஆர்.பானுமதி மற்றும் அஷோக் பூஷன், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனு மீது இன்று (புதன்கிழமை) விசாரித்து தீர்ப்பை வழங்கியது. இதனிடையே, உச்ச நீதிமன்றம் அனைத்து குற்றவாளிகளின் மறு ஆய்வு மனுக்களையும் நிராகரித்துள்ளதால் தாங்கள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்ய விரும்புகிறீர்களா எனத் தெரிவிக்க வேண்டி ஒரு வார கால நோட்டீஸ் அளிக்குமாறு நிர்பயா வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ள திகார் சிறை அதிகாரிகளுக்கு பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் இன்று அறிவுறுத்தியுள்ளது . இதைக் கேட்டு நிர்பயாவின்…
-
- 0 replies
- 323 views
-
-
எல்லைப் பதற்றத்தை அதிகரிக்கும் சீனா : நவீன இராணுவ டாங்குகளை எல்லையில் நிறுத்தியது! எல்லைப் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் சீனா தனது இராணுவ டாங்குகளை எல்லைப் பகுதியில் நிறுத்தியுள்ளது. ரெசாங் லா, ரெச்சின் லா, முகோசிரி ஆகிய மலைப்பாங்கான எல்லைப் பகுதிகளில் 30 முதல் 35 இராணுவ டாங்குகளை சீனா நிறுத்தியுள்ளது. இந்திய நிலைகளை குறிவைத்து நிறுத்தப்பட்டுள்ள சீனாவின் டாங்குகள் இலகுரக நவீன ரகத்தை சேர்ந்தவை எனவும் கூறப்படுகிறது. அதே நேரம் சீனா வாலாட்டினால் நமது இராணுவம் தக்க பதிலடி கொடுக்க தயார் நிலையில் உள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த பகுதிகளில் சீனாவின் அத்துமீறலை தடுக்க 17 ஆயிரம் அடி உயரத்தில் நமது டாங்குகளும் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிர…
-
- 0 replies
- 323 views
-
-
ரஷ்யா-இந்தியா நட்புறவு சங்கமான ‘திஷா’, மூன்று டன் அளவு பொருட்களை மனிதாபிமான உதவியாக ரஷ்யாவுக்கு அனுப்பியுள்ளது. இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் ரஷ்ய தூதரகம் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்தியாவில் இருந்து ரஷ்யாவிற்கு அனுப்பட்ட மருந்து பொருட்கள் மனிதாபிமான உதவியாக மருந்துகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள், குர்ஸ்கில் உள்ள ரஷ்ய ஆயுதப்படைகளின் மருத்துவ நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அதில் இந்திய மருந்து நிறுவனமான பன்பியோ பார்ம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மருந்துகள் அடங்கும். ரஷ்ய - உக்ரைன் மோதல் நடந்து வரும் சூழலில், பலதரப்பு கொள்கையின்படி இந்தியாவின் சமநிலையான நிலைப்பாட்டை மேற்கத்திய நாடுகள் விமர்சித்…
-
- 4 replies
- 323 views
-
-
ஒலியை விட வேகமாகப் பயணிக்கக் கூடிய ஏவுகணையைச் சோதிக்கும் இந்தியா! இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒன்றை சோதிக்க தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பொதுவாக ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு வேகமாக அல்லது அதற்கும் அதிகமான வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டவையாகும். அந்தவகையில் உலகின் வேகமான மற்றும் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதங்களில் ஒன்றாக இது அடையாளப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மூத்த DRDO விஞ்ஞானியும், பிரம்மோஸ் ஏரோஸ்பேஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் சுதிர் குமார் மிஸ்ரா சமீபத்தில் இதை உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன் ஹைப்பர்சோனிக் எஞ்சின…
-
- 0 replies
- 323 views
-
-
போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு – இருவர் உயிரிழப்பு மங்களூருவில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக மங்களூருவில் போராட்டம் நடத்தியவர்களை கலைக்க பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். http://athavannews.com/2-dead-in-mangaluru-after-violence-at-anti-caa-protests-report/
-
- 1 reply
- 323 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாடே பதவி, பிபிசி செய்தியாளர், பாட்னாவிலிருந்து 3 மணி நேரங்களுக்கு முன்னர் பிகாரில் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புள்ளிவிவரங்களின்படி, பீகாரின் மொத்த மக்கள் தொகை 13 கோடியே 7 லட்சத்து 25 ஆயிரத்து 310 என தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்களன்று அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, மாநிலத்தில் மிகப்பெரிய மக்கள்தொகை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். இது மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 36% ஆகும். பட மூலாதாரம்,ANI பிகாரின்…
-
- 2 replies
- 323 views
- 1 follower
-
-
பாகிஸ்தானில்... இந்திய நீர்மூழ்கி கப்பல், தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு! பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் நுழைய முயன்ற இந்திய நீர்மூழ்கி கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது. தற்போதுள்ள பாதுகாப்பு நிலவரங்கள் கருத்தில் கொண்டு பாகிஸ்தான் கடற்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் கடந்த 2016 மற்றும் 2019இல் இந்திய இராணுவத்தின் இது போன்ற ஊடுருவல் முயற்சியை பாகிஸ்தான் கடற்படை முறியடித்துள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1245786
-
- 0 replies
- 323 views
-
-
காவல்துறையினருக்கு கூல்டிரிங்ஸ் வழங்கிய பெண்மணிக்கு சல்யூட் அடித்து ஆந்திர டிஜிபி நன்றி தெரிவித்தார். இந்தியாவில் ஊரடங்கு அமலில் இருப்பதால், பொதுமக்கள் அனைவருமே அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வெளியே வருகிறார்கள். அதுவும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் மட்டுமே தொடர்ச்சியாகப் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுடைய பணிக்கு பிரதமர் மோடி, முதல்வர்கள், திரையுலகப் பிரபலங்கள் என அனைவருமே பாராட்டி வருகிறார்கள். இதனிடையே, கடந்த சில நாட்களாகவே ஆந்திராவில் உள்ள காவல்துறையினருக்குப் பெண்மணி ஒருவர் பெரிய கூல்டிரிங்ஸ் கொடுக்கும் வ…
-
- 0 replies
- 323 views
-
-
‘ஜிசாட்-31’ செயற்கைக்கோள் விண்ணுக்கு வெற்றிகரமாக சென்றடைந்தது ‘ஜிசாட்-31’ என்ற செயற்கை கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘இஸ்ரோ’ உருவாக்கி உள்ளது.இந்த செயற்கை கோள், இன்று அதிகாலை 2.33 மணியளவில் பிரெஞ்ச் கயானாவில் உள்ள கொரூவ்வில் இருந்து கனரக ஐரோப்பிய ராக்கெட்டான ‘ஏரியன்-5’ மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. ஜிசாட்-31’ செயற்கைகோள் 2 ஆயிரத்து 535 கிலோ எடை கொண்டதாகும். இதன் ஆயுள் காலம் 15 ஆண்டுகள் ஆகும். இது ‘இஸ்ரோ’வின் ‘1-2கே பஸ்’ வகையின் மேம்படுத்தப்பட்ட செயற்கை கோள். இதன்மூலம் இந்தியாவின் மையப்பகுதியும், தீவுப்பகுதியும் பலன் அடையும். ‘ஜிசாட்-31’ செயற்கை கோள், விசாட் நெட்வொர்க், டெலிவிஷன் இணைப்பு, டிஜிட்டல் செயற்கைகோள் செய்தி …
-
- 0 replies
- 323 views
-
-
“இந்தியா வாருங்கள்” – போப்பாண்டவருக்கு மோடி அழைப்பு ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி போப்பாண்டவர் பிரான்சிஸை இந்தியாவுக்கு வர அழைப்பு விடுத்துள்ளார். ஜி 20 உச்சி மாநாடு இன்றும் நாளையும் இத்தாலியின் ரோம் நகரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியா உட்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடி, கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார மீட்பு குறித்து உரையாற்றுகிறார். இந்த மாநாட்டில் 20 உலக நாடுகளின் தலைவர்கள், கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் மற்றும் பருவ நிலை மாற்றம், நீடித்த வளர்ச்சி, உணவு பாதுகாப்பு உள்ளிட்ட விடங்களை விவாதிக்கின்றன. இந்நிலையில் போப்பாண்டவர் பிரான்சிஸ…
-
- 3 replies
- 323 views
-
-
கொரோனா வைரஸ்: இந்த ஜவுளி நகரம் `இந்தியாவின் இத்தாலியாக' ஆகப் போகிறதா? மொஹர் சிங் மீனா பிபிசி இந்தி படத்தின் காப்புரிமை Getty Images மார்ச் 8 ஆம்தேதி உள்ளூர் நேரப்படி அதிகாலை 5 மணிக்கு (கிரீன்விச்நேரப்படி 23.30 மணி) ராஜஸ்தானில் ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு 52 வயதானஆண்ஒருவர் நிமோனியா பாதிப்புடன் கொண்டுசெல்லப்பட்டார். அவருக்கு மூச்சுத்திணறலும் இருந்தது. பில்வாராவில் உள்ள பிரிஜேஷ் பங்கார் நினைவு மருத்துவமனையில், இந்தப் புதிய நோயாளியை 58 வயதான டாக்டர் அலோக் மிட்டல் பரிசோதனை செய்திருக்கிறார். நோயாளி வெளிநாடு சென்று வந்தாரா என்பது பற்றி யாரும் கேட்கவும் இல்லை, அவராகவும் சொல்லவும் இல்லை. தீவிர சிகிச்சைப்பிரிவில்…
-
- 2 replies
- 323 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption ஜாகிர் நாயக் இந்தியாவில் சில குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்துமாறு மலேசியப் பிரதமர் மகாதீர் மொஹமத்தை ரஷ்யாவில் சந்தித்தபோது இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தினார். பண மோசடி உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தியாவால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள ஜாகிர் நாயக், கடந்த 2016ஆம் ஆண்டு முதல் மலேசியாவில் தங்கியுள்ளார். அவருக்கு அங்கு நிரந்தர வசிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டும் என இந்தியா தொடர்ந்து …
-
- 1 reply
- 322 views
-
-
கொரோனா வைரஸ்: ஊரடங்கை மீறி கோயில் தேர் இழுக்க கூடிய கூட்டம் இம்ரான் குரேஷி பிபிசி ANI கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவை மீறி கர்நாடகாவின் கலபுரகி மாவட்டத்தில் உள்ள கோயில் ஒன்றின் தேர் திருவிழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். கோவிட்-19 தொற்றுக்கு இந்தியாவில் நிகழ்ந்த முதல் மரணம் கலபுரகி மாவட்டத்தில்தான். அந்த மாவட்ட நிர்வாகம் தற்போது திருவிழா நடத்தப்பட்ட ரெவூர் கிராமத்தின் எல்லைகளை மூடி அதை தனிமைப்படுத்திவிட்டது. மேலும் சித்தபுர் தாலுகாவின் வட்டாச்சியர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர், சமூக விலகளை மீறும் வகையில், தேர் திருவிழாவை தடுக்காமல் இருந்ததற்காக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். …
-
- 0 replies
- 322 views
-
-
Oommen Chandy: இளம் வயதில் Politics; ஒரே தொகுதிக்கு 50+ Years Service. மூத்த அரசியல்வாதி மறைந்தார்.
-
- 0 replies
- 322 views
- 1 follower
-
-
அஃப்ரீன் பாத்திமா வீட்டை இடித்துத் தரைமட்டமாக்கிய உபி அரசு - யார் இவர்? 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFREEN FATIMA படக்குறிப்பு, அஃப்ரீன் பாத்திமா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள மாணவர் தலைவர் அஃப்ரீன் பாத்திமா வீட்டை அரசு இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது. இவரது தந்தை ஜாவேத் முகமது வெல்ஃபர் பார்ட்டி ஆஃப் இந்தியா என்ற கட்சியின் தலைவர். முகமது நபி குறித்து பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நூபுர் ஷர்மா தெரிவித்த ஆட்சேபகரமான கருத்துகளைக் கண்டித்து, நடவடிக்கை எடுக்கக் கோரி வெள்ளிக்கிழமை பிரயாக்ராஜில் நடந்த போராட்டத்தில் வெடித்த வன்முறைக்கு சதித்திட்டம் தீட்டியதாக ஜாவேத…
-
- 1 reply
- 322 views
- 1 follower
-
-
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்லும்போது தங்கள் நாட்டின் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க மாட்டோம் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி வரும் 21-ம்தேதி முதல் தனது அமெரிக்க பயணத்தை தொடங்கவுள்ளார். செப்டம்பர் 27-ம்தேதி வரையில் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகள், கூட்டங்களில் மோடி கலந்து கொள்ளவிருக்கிறார். இதற்காக அவரது விமானம் பாகிஸ்தான் வழியே அமெரிக்காவுக்கு செல்லவிருந்தது. இந்த நிலையில், இந்தியா உடனான உறவில் பாகிஸ்தான் விரிசலை ஏற்படுத்தி இருப்பதால், மோடி அமெரிக்க செல்வதற்கு தங்கள் நாட்டின் வான்வெளியை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 322 views
-
-
பாகிஸ்தானுக்கான... ஆப்கானிஸ்தானின், தூதுவரின் மகள் கடத்தல் பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தானின் தூதுவரின் மகள் கடத்தப்பட்டது சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வெள்ளிக்கிழமை வீட்டிற்கு செல்லும் வழியில் அவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டார் என்றும் அவரது உடலில் காயங்கள் காணப்படுவதாகவும் ஆப்கானிஸ்தானின் வெளிவிவகார அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது. இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் நீண்ட காலமாக சிதைந்து போயுள்ள நிலையில் 20 வயதான ஆப்கானிஸ்தானின் தூதுவரின் மகள் கடத்தப்பட்டுள்ளார். விடுதலையின் பின்னர் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் கு…
-
- 0 replies
- 322 views
-
-
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது சாத்தியமில்லாத ஒன்று – மருத்துவ குழு எச்சரிக்கை! கொரோனா சமூகப் பரவல் நாட்டில் ஏற்கெனவே அதிகரித்துள்ள நிலையில், நோய்த் தொற்று தாக்குதலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்பது சாத்தியமில்லாத செயல் என எய்ம்ஸ் மருத்துவர்கள், ஐ.சி.எம்.ஆர் உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு எச்சரிக்கைவிடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய (திங்கட்கிழமை) நிலைவரப்படி 1.9 இலட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். அத்துடன் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் 16 பேர் கொண்ட மருத்துவர் நிபுணர் குழு அறிக்கையொன்றை தயாரித்து பிரதமர் நரேந்திர மோடியிட…
-
- 2 replies
- 321 views
-
-
Published By: DIGITAL DESK 3 12 JAN, 2024 | 11:28 AM புத்தரின் மறு அவதாரம் என அழைக்கப்படும் சர்ச்சைக்குரிய நேபாள மதத்தலைவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 'குட்டிப் புத்தர்' என்று அழைக்கப்படும் ராம் பகதூர் போம்ஜன் என்ற மதத்தலைவரே சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் பல வருடங்களாக தலைமறைவாக இருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார். நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவின் தெற்கே உள்ள பாரா மாவட்டத்தில் உள்ள அவரது ஆசிரமத்தில் சீடராக வசித்து வந்த "சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கில்" அவருக்கு எதிராக 2020 ஆம் ஆண்டு கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. …
-
-
- 2 replies
- 321 views
- 1 follower
-
-
உத்தரகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வரான ஷிருஷ்டி கோஸ்வாமி ஷிருஷ்டி கோஸ்வாமி ஹரித்துவார், ஹரித்துவார் மாவட்டத்தில், தவுலதாப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் 19 வயதான மாணவி ஷிருஷ்டி கோஸ்வாமி. அவர் ரூர்கியில் அமைந்துள்ள கல்லூரியில் பி.எஸ்.சி வேளாண்மை பயின்று வருகிறார். தற்போது உத்தரகண்ட் மாநிலத்தின் குழந்தைகள் சட்டமன்ற முதலமைச்சராக பணியாற்றி வருகிறார். கோஸ்வாமியின் தந்தை தொழிலதிபராகவும், தாய் இல்லதரசியாகவும் உள்ளனர். இந்நிலையில் உத்தரகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வரான 19 வயது ஷிருஷ்டி கோஸ்வாமி இன்று செயல்பட இருக்கிறார். இன்று ஒருநாள் முதலமைச்சராக பொறுபேற்கும் அவர், அம…
-
- 0 replies
- 321 views
-
-
நிலைமாறா பொருளாதாரக் கொள்கை : அசுர வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் இந்தியா By NANTHINI 19 OCT, 2022 | 12:10 PM (எம். மனோசித்ரா) உலகில் நிலப்பரப்பின் அடிப்படையில் 7ஆவது பெரிய நாடாகவும், சனத்தொகை அடிப்படையில் 2ஆவது பெரிய நாடாகவும் காணப்படும் இந்தியா வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தையே கொண்டுள்ளது. எனினும், ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டால் கூட நிலைமாறா பொருளாதாரக் கொள்கையை பின்பற்றி, 2047ஆம் ஆண்டாகும்போது, தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியை 40 டிரில்லியன் டொலர் வரை விரிவாக்கும் இலக்கை நோக்கி இந்தியா பயணித்துக்கொண்டிருக்கிறது. இந்திய தொழிற்துறை கூட்டமைப்பானது (Confederation of Indian Industry - CI…
-
- 0 replies
- 321 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், ராகவேந்திர ராவ் பதவி, ஜம்முவிலிருந்து திரும்பிய பிபிசி நிருபர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ரியாசி, கதுவா, ரஜோரி, டோடா – இவை ஜம்முவில் சமீபத்தில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்த பகுதிகள். ஜம்மு காஷ்மீர் சட்டசபைத் தேர்தலை செப்டம்பர் மாத இறுதியில் நடத்த மத்திய தேர்தல் ஆணையம் தயாராகி வரும் வேளையில் இந்தத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்தப் பிரச்னை விரைவில் கட்டுப்படுத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். கதுவாவை தவிர, இந்தத் தாக்குதல்களுக்குக் காரணமானவர்கள் பிடிபடவோ, கொல்லப்ப…
-
- 0 replies
- 321 views
- 1 follower
-
-
வங்கதேசத்தவருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதாக வாக்குறுதி அளித்தால் பாதி வங்கதேசமே காலியாகிவிடும் என மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் ரவிதாசர் ஜெயந்தியையொட்டி நடந்த விழா ஒன்றில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி பேசியதாவது, 'மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டில் வாழும் 130 கோடி இந்தியர்களுக்கும் எதிரானது என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ரெட்டியால் நிரூபிக்க முடியுமா?'என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, பேசிய அவர், வங்கதேசத்தவருக்கு இந்திய குடியுரிமை அளிப்பதாக வாக்குறுதி அளித்தால், அந்நாட்டு மக்களில் பாதி பேர் இங்கு வந்துவிடுவார்கள்'. அதற்கு யார் பொறுப்பேற்க முடியும்? ராகுல் காந்தியா? அல்லது சந்திரசே…
-
- 0 replies
- 320 views
-
-
புதுடில்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, 2,500 பேருக்கான தனிப்பிரிவுகளை ஏற்படுத்த முப்படைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சீனா உட்பட 70 நாடுகளில் வேகமாக பரவி வரும் உயிர் கொல்லியான 'கொரோனா வைரஸ்' தாக்குதலுக்கு பலியானவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. சீனாவில் கொரோனாவுக்கு இதுவரை 2,943 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவிலும் 3 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டது நேற்று உறுதி செய்யப்பட்டது. இன்று மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டில்லியில் ஒருவருக்கும், தெலுங்கானாவில் ஒருவருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், மார்ச் 18ம் தேதி விசாகபட்டினத்தில் நடைபெறவிருந்த சர்வதேச கடற்படை…
-
- 2 replies
- 320 views
-