அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3273 topics in this forum
-
பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் உயிருடன் எரித்துக் கொலை 67 Views இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் ஆதிக்கச் சாதியினரால் அடித்து உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். மாநிலத்தின் அமெத்தி தொகுதியின் பதோயா கிராமத் தலைவர் சோட்கா தேவியின் கணவர் அர்ஜுன் கோரி உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார். தேர்தலில் நிலவிய போட்டியின் காரணமாக அவர் எரித்துக்கொல்லப்பட்டதாகக் குடும்பத்தினர் கூறுகிறார்கள். இது தொடர்பாக ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த ஐந்து நபர்களுக்கு எதிராகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கடந்த வியாழன் அன…
-
- 0 replies
- 251 views
-
-
பீகாரில் நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு! பீகாரில் 94 தொகுதிகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனிடையே மத்தியப் பிரதேசத்தில் 28 தொகுதிகள், குஜராத்தில் 8 தொகுதிகள், உத்தரப்பிரதேசத்தில் 7 தொகுதிகள் உள்ளிட்ட 11 மாநிலங்களில் 56 தொகுதிகளுக்கும் நாளை இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. பீகார் மாநிலத்தின் முதற்கட்ட தேர்தலில் ஒட்டுமொத்தமாக 54 சதவீத வாக்காளர்கள் வாக்களித்ததாகத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை மொத்தம் 63 இடங்கள் காலியாக உள்ளபோதும் தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 235 views
-
-
பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது – நரேந்திர மோடி by : Krushnamoorthy Dushanthini http://athavannews.com/wp-content/uploads/2020/09/மோடி-1-720x450.jpg பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக பழைய நிலைக்கு திரும்பி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், “ பொருளாதாரத்தைத் தொடர்ந்து மீட்டெடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஒட்டுமொத்த பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிசெய்து சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை மத்திய அரசு உறுதி செய்யும். நிலக்கரி, வேளாண்மை, தொழிலாளர், ப…
-
- 0 replies
- 454 views
-
-
கேரளா: ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று சகோதரிகளுக்கு ஒரே நாளில் திருமணம்! சிந்து ஆர் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று பெண்களுக்கு திருமணம் தன் ஐந்து பிள்ளைகளுக்கும் ஒரே நாளில், ஒரே மேடையில் திருமணம் செய்து வைக்க விரும்பினார் கேரளாவைச் சேர்ந்த ரமாதேவி. கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் போத்தன்கோடு பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் - ரமாதேவி தம்பதிக்கு ஐந்து குழந்தைகள். ஐந்து குழந்தைகளும் ஒரே பிரசவத்தில், சில நிமிட இடைவெளியில் பிறந்தவர்கள். 1995-ம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ம் தேதி ஓர் ஆண் குழந்தை, நான்கு பெண் குழந்தைகள் என நிகழ்ந்த ரமாதேவியின் பிரசவம், கேரளாவில் கொண்டாடப்பட்டது. ஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து குழந்தைகள் என கேரள மீடிய…
-
- 1 reply
- 542 views
-
-
சீனா, பாகிஸ்தானுடன் போர் புரிவதற்கான தேதியை பிரதமர் மோடி முடிவு செய்துவிட்டார்.. பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு.! பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனும் போர் புரிவதற்கான தேதியை பிரதமர் மோடி முடிவு செய்துவிட்டதாக உத்தரபிரதேச மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திரதேவ் சிங் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திரதேவ் சிங்கின் சர்ச்சைக்குரிய பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக ஏற்பாடுகளை செய்தது போல் சீனா மற்றும் பாகிஸ்தான் உடனும் போர் புரிவதற்கான தேதியை …
-
- 0 replies
- 305 views
-
-
வெளிநாட்டு மண்ணிலும் இந்தியா சண்டையிடும் – அஜித் தோவல் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழுந்தால் வெளிநாட்டு மண்ணிலும் இந்தியா சண்டையிடும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷ் பரமாா்த் நிகேதன் ஆசிரமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “இந்தியா எந்தவொரு நாட்டின் மீதும் முதலில் தாக்குதல் நடத்தாது. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழுந்தால் மட்டுமே, தகுந்த பதிலடியை உடனடியாக கொடுக்க வேண்டும் என்பதை புதிய பாதுகாப்பு உத்தியாக இந்தியா கொண்டுள்ளது. இந்தியா அதன் சொந்த மண்ணிலும் தேவைப்பட்டால் வெளிநாட்டு மண்ணிலும் உறுதியுடன் போரிடும். அந்…
-
- 0 replies
- 396 views
-
-
சட்டவிரோத குடியேறிகளுக்கு ‘நவராத்திரி’ உணவா?: உணவகங்களுக்கு மிரட்டல்? 47 Views நவராத்திரியை முன்னிட்டு தில்லி நகரில் ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளுக்கு உணவுகளை வழங்கியதற்காக மூன்று உணவகங்கள் மிரட்டப்பட்டுள்ளன. ரோஹிங்கிய முஸ்லீம்களுக்கு உணவு வழங்கிய செய்தி ஏ.என்.ஐ. ஊடகத்தின் டீவிட்டர் பக்கத்தில் வெளியாகியதும், உணவக உரிமையாளர்களை மிரட்டும் வெறுப்பு பிரச்சாரம் சமூக ஊடகங்களில் நடந்தாகக் கூறுகிறார் சிவம் சேகல் எனும் உரிமையாளர். “உணவகத்தின் தொலைப்பேசி வாயிலாக எனக்கு வந்த அழைப்புகளில், சட்டவிரோத குடியேறிகளுக்கு உணவளித்தது ஏன் என்றார்கள். ஒவ்வொருவருக்கும் விளக்க முயற்சித்தேன். அ…
-
- 0 replies
- 427 views
-
-
நேபாள பிரதமரை 'ரகசியமாக' சந்தித்த இந்திய உளவு பிரிவின் தலைவர் - வெடித்தது புதிய சர்ச்சை சஞ்சீவ் கிரி பிபிசி நியூஸ் நேபாளி பட மூலாதாரம், RSS படக்குறிப்பு, நாராயண் கஜி ஷ்ரேஸ்தா இந்திய உளவு அமைப்பான, ஆய்வு மற்றும் பகுப்பாய்வு பிரிவின் (ரா) தலைவர் சமந்த் குமார் கோயல் நேபாளத்தின் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலியை நேரில் சந்தித்துள்ளது புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. குறிப்பாக, ஆளும் நேபாள பொதுவுடைமை கட்சிக்குள்ளேயே இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பிபிசியின் நேபாளி மொழி சேவையிடம் பேசிய அந்த கட்சியின் செய்தித்தொடர்பாளர் நா…
-
- 0 replies
- 672 views
-
-
இந்தியாவில் ஒரேநாளில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன! by : Krushnamoorthy Dushanthini http://athavannews.com/wp-content/uploads/2020/10/Coronavirus-PCR.jpg இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக நேற்று மட்டும் 14.42 இலட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவரை கண்டறிவதற்கும், வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கும் அதிகளவான பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டிய நிலை காணப்படுகிறது. அதிகளவிலான பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் தொற்றாளர்களை விரைவில் கண்டுப்பிடிக்கவும், அவர்கள் மூலம் சமூகத்தில் பரவுவதை கட்டுப்படுத்தவும் …
-
- 1 reply
- 372 views
-
-
அதி நவீன ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா! by : Krushnamoorthy Dushanthini http://athavannews.com/wp-content/uploads/2020/10/ஏவுகணை-720x450.jpg எதிரி நாடுகளின் கப்பல்களை தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. கடலில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் பிரபாலில் ((INSPrabal) இருந்து கப்பல்களை தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணையை இந்தியா செலுத்தி சோதனை நடத்தியுள்ளது. அந்த ஏவுகணை கடலில் இன்னொரு இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த இன்னொரு சிறிய கப்பலை மிக துல்லியமாக தாக்கி அழித்துள்ளதுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லடாக் எல்லையில் சீனாவுடன் தொடர்ந்து பதற்ற…
-
- 0 replies
- 212 views
-
-
தேர்தலில் வெற்றிப்பெற்றால் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் ; பா.ஜ.க உறுதி! பீகார் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டார். குறித்த அறிக்கையில் கொரோனா தடுப்பூசி சோதனைகள் பல கட்டத்தில் இருப்பதாகவும், பெருமளவிலான உற்பத்தி நிலையை எட்டியவுடன் பீகார் மக்கள் இலவசமாக போடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகாரின் நகர் மற்றும் கிராமங்களில் 2022ம் ஆண்டுக்குள் 30 லட்சம் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் …
-
- 0 replies
- 294 views
-
-
இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழப்பு! இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் காற்று மாசுபாட்டால் உயிரிழந்துள்ளதாக சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டேட் ஆஃப் குளோபல் ஏர் (State of Global Air) வெளியிட்ட அறிக்கையில் மேற்படி குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2019 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் சுமார் 1 இலட்சத்து 16 ஆயிரம் குழந்தைகள் காற்று மாசுபாடு காரணமாகப் உயிரிழந்துள்ளனர். காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படும் தாய்மார்கள் பெற்றெடுக்கும் க…
-
- 0 replies
- 431 views
-
-
அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்கள்: தி.மு.க. பலவீனமாக இருக்கிறது அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி தி.மு.க. பலவீனமாக இருப்பதால் அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார். பதிவு: அக்டோபர் 22, 2020 04:36 AM சென்னை, தி.மு.க.வை பொறுத்தவரை அக்கட்சி பலவீனமாக இருக்கிறது. எனவே தான் அடிக்கடி ஆலோசனை கூட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இன்றைக்கு (நேற்று) கூட ஆலோசனை கூட்டம் நடத்தி இருக்கிறார்கள். இது அக்கட்சியின் பலவீனத்தைத்தானே உணர்த்துகிறது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை நாங்கள் வலுவாகவே இருக்கிறோம். ஆரம்ப கட்டத்தில் இருந்தே மக்களோடு மக்களாக பயணிக்கிறோம். தேர்தல் நேரத்தில் தைரியமாக தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெறுவோம். த…
-
- 0 replies
- 374 views
-
-
அபாயகரமான நிலையை எட்டியுள்ள இந்தியாவின் காற்றின் தரம் தலைநகர் டெல்லி மற்றும் ஏனைய வடக்கு நகரங்களில் கடந்த இரண்டு வாரங்களில் காற்றின் தரம் வேகமாக மோசமடைந்துள்ளமையினால் இந்தியாவில் காற்று மாசுபாடானது அபாயகரமான நிலையினை எட்டியுள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் இது ஒரு மிகவும் கவலையான செய்தி என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளானர். காரணம் உலகெங்கிலும் பல ஆய்வுகளில் கொவிட்-19 நோயாளர்கள் உயிரிழப்பதற்கு காற்றின் தரக் குறைவும் காரணம் என்றும் கூறப்படுகிறது. ஒரு கியூபிக் மீட்டர் பரப்பளவில் உள்ள காற்றில் ஒரே ஒரு மைக்ரோகிராம் அளவுக்கு, மாசை உண்டாக்கும் பி.எம் 2.5 துகள்கள் அதிகரித்தாலும் கொரோனா வைரஸால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் 8 சதவீதம் அதிக…
-
- 1 reply
- 544 views
-
-
ஒலியை விட வேகமாகச் செல்லும் இந்தியாவின் ஏவுகணை பரிசோதனை வெற்றி! ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பலில் இருந்து அரபிக்கடலில் ஏவப்பட்ட பிரமோஸ் சூப்பர்சொனிக் ஏவுகணை (BrahMos Missle) சோதனை வெற்றியடைந்துள்ளது. இந்த ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கியதாக இந்திய இராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (Defence Research and Development Organisation) ருவிற்றரில் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த ஏவுகணையை வெற்றிகரமாகப் பரிசோதனை செய்த டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் மற்றும் பிரமோஸ் ஏவுகணைத் திட்ட அதிகாரிகள் மற்றும் இந்திய கடற்படையினருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இந்திய இராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ரஷ்யாவுடன்…
-
- 3 replies
- 941 views
-
-
இந்தியா – சீனா எல்லைத் தகராறு மோடி- ஷீ சந்திப்பால் தீருமா? Bharati October 17, 2020 இந்தியா – சீனா எல்லைத் தகராறு மோடி- ஷீ சந்திப்பால் தீருமா?2020-10-17T06:28:55+05:30அரசியல் களம் FacebookTwitterMore கேணல் ஆர் ஹரிஹரன் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷீ ஜின்பிங் ஆகிய இருவரும், நவம்பர் 17ந் தேதி ரஷ்யாவின் தலைமையில் நடக்கவிருக்கும் ப்ரிக்ஸ் என்ற நான்கு நாடுகள் (பிரேசில், ரஷ்யா, சீனா, இந்தியா, தெற்கு ஆப்ரிக்கா) கூட்டமைப்புத் தலைவர்கள் சந்திப்பின் போது நேரடி பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று செய்திகள் கூறுகின்றன. அந்த சந்திப்பு, விடியோவில் நிகழும் மெய்நிகர் (virtual) பேச்சுவார்த்தையானாலும், லடாக்கில…
-
- 0 replies
- 429 views
-
-
சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல்: அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியலில் வங்காள தேசம், நேபாளம், பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளை விட இந்தியாவை பின்தங்கியிருப்பது கவலையை அளிக்கிறது. பதிவு: அக்டோபர் 17, 2020 17:46 PM புதுடெல்லி உலகளவில் பட்டினியால் வாடும் மக்கள் நாடுகள் ஊட்டச்சத்துக் குறைந்த மக்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து பட்டியல் தயாரிக்கப்படுகிறது.இந்த பட்டியலை வெல்த்தங்கெர்ஹைல்ஃப் மற்றும் கன்சர்ன் வேர்ல்ட்வைட் இணைந்து வெளியிட்டடு உள்ளது. இந்த பட்டியலில் நேபாளம் 73வது இடத்திலும், வங்காள தேசம் 75 மற்றும் பாகிஸ்தான் 88-வது இடத்திலும் உள்ளன. இந்தியா 94 வது இடத்தில் உள்ளது, இந்த பட்டியலில், இந்தியாவ…
-
- 0 replies
- 395 views
-
-
இந்தியாவின் இறையாண்மையில் அண்டை நாடுகள் தலையிட கூடாது - ஜெய்சங்கர். இந்தியாவின் இறையாண்மையில் அண்டை நாடுகள் தலையிட கூடாது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர ஜெய்சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எல்லைப் பகுதியில் பதற்றங்கள் நீடித்து வரும் நிலையில், புளூம்பர்க் பொருளாதார அமைப்பின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், இந்தியா – சீனாவிற்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில் சீனா இதுவரை ஒப்புக்கொண்டபடி படைகளை விலக்கிக் கொள்ள மறுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் லடாக் எல்லையில் சீனா படைகளைக் குவிப்பதால் பதற்றம் நீடித்து வருகின்ற நிலையில், இருநாட்டு இராணுவ அதிகாரிகள் மட்டத்தில…
-
- 0 replies
- 369 views
-
-
பங்களாதேஷில் பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை: புதிய சட்டத்துக்கு ஒப்புதல்! பங்களாதேஷில் பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டமூலத்துக்கு அந்நாட்டின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சர்கள் கூட்டத்தில், அமைச்சர்கள் ஒரு மனதாக ஒப்புதல் அளித்துள்ளனர். இதனிடையே பாலியல் துஷ்பிரயோக வழக்குகளை குறிப்பிட்ட நேரத்தில் விரைந்து முடிக்கும்படி பிரதமர் ஷேக் ஹசீனா வலியுறுத்தியதாக அமைச்சரவை செயலர் அன்வருல் இஸ்லாம் தெரிவித்தார். இது குறித்து அந்நாட்டின் சட்ட அமைச்சர் அனிஷுல் ஹூக் கூறுகையில், ‘இந்த சட்ட சட்டமூலத்துக்கு பங்களாதேஷ் அப்துல் ஹமித் ஒப்புதல் அளிப்பார். தற்போது கொவிட்-19 கால சூழ்நிலை காரணமாக நாடாளுமன்றம் கூட…
-
- 1 reply
- 1.3k views
-
-
விவசாயிகளை பயங்கரவாதிகளாக பதிவிட்ட நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு.! விவசாயிகளை பயங்கரவாதிகளாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நடிகை கங்களா ரணாவத் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கோர்ட்டு உத்தரவின்பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்திய மத்திய அரசு வேளாண் சீர்திருத்த சட்டம் உள்ளிட்ட 3 சட்ட திருத்தங்களை சமீபத்தில் அமல்படுத்தியது. இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாகவும், இந்த சட்ட திருத்தங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடிகை கங்கனா ரணாவத் தனது டுவிட்டர் பக்கத்தில், "மத்திய அரசின் வேளாண் சீர்திருத்த சட்ட…
-
- 1 reply
- 554 views
-
-
மேற்கு வங்கம்: 8 ஆம் வகுப்பு தகுதிக்கான வன உதவியாளர் பணிக்கு பி.எச்டி மாணவர்கள் விண்ணப்பம் மால்டா மேற்கு வங்கத்தில் 8 ஆம் வகுப்புத் தேர்ச்சியை தகுதியாகக் கொண்ட வன உதவியாளர்கள் பணிக்கு பொறியியல், முதுகலை, பி.எச்.டி ஆராய்ச்சி முடித்த மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக மூத்த வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கும் மனித-விலங்கு மோதலைத் தடுப்பதற்கும் ஒப்பந்த அடிப்படையில் வன உதவியாளர்கள் 2000 பேரைப் பணியமர்த்த மேற்கு வங்க அரசு முடிவு செய்தது. மாநிலத்தில் இதற்கான அறிவிப்பு வெளியான உடனே ஏராளமான விண்ணப்பங்கள் குவியத் தொடங்கின. இவற்றில் பெரும்பாலும் உயர்கல்வி படித்தவர்கள் விண்ணப்பித்துள்ளது தெரியவந்துள்ளது. இது…
-
- 0 replies
- 358 views
-
-
காலமானார் ராம்விலாஸ் பாஸ்வான் மின்னம்பலம் மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவன தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான் இன்று அக்டோபர் 8ஆம் தேதி மாலை டெல்லி தனியார் மருத்துவமனையில் காலமானார். 74 வயதான ராம்விலாஸ் பாஸ்வான் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சராக பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களாகவே இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட பாஸ்வான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்த நிலையில்... இன்று மாலை அவர் காலமாகி விட்டதாக பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தலித் தலைவர்களில் குறிப்பிடத்தக்க தலைவராக உருவெடுத்த…
-
- 0 replies
- 606 views
-
-
தற்சார்பு இந்தியா போன்ற கொள்கைகள் கடந்த காலத்தில் பலனளிக்கவில்லையே; மேக் இன் இந்தியாவின் மறுவடிவம்தானே: ரகுராம் ராஜன் கருத்து உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்க வேண்டும் எனும் நோக்கில் கொண்டுவரப்பட்ட ஆத்மநிர்பார் பாரத் (தற்சார்பு இந்தியா) வெளிநாட்டு வர்த்தகத்தில் சிக்கலை ஏற்படுத்திவிடக்கூடாது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். ஐசிஆர்ஐஇஆர் நிறுவனம் சார்பில் பொருளாதாரம் சார்ந்த கருத்தரங்கு காணொலியில் நேற்று நடந்தது. இதில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: ''கரோனா வைரஸால் ஏற்பட்ட பிரச்சினையிலிருந்து விடுபட வளர்ந்து வரும் நாடுகள் அதிகமா…
-
- 0 replies
- 260 views
-
-
ரஷ்யா தயாரித்துள்ள தடுப்பு மருந்தை பெரும் எண்ணிக்கையிலான நபர்களுக்குச் செலுத்த அனுமதி மறுப்பு by : Dhackshala http://athavannews.com/wp-content/uploads/2020/09/923645-russian-coronavirus-vaccine-sputnik-v-720x450.jpg கொரோனாவைக் குணப்படுத்த ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக் தடுப்பு மருந்தைப் பெரும் எண்ணிக்கையிலான நபர்களுக்குச் செலுத்திச் சோதிக்க இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அனுமதி மறுத்துள்ளது. இந்தியாவில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்டச் சோதனையை நடத்தவும் மருந்தை விநியோகிக்கவும் டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் நிறுவனம் உடன்பாடு செய்துள்ளது. இதையடுத்துப் பெரும் எண்ணிக்கையிலான நபர்களுக்கு மருந்தைச் …
-
- 1 reply
- 531 views
-
-
முன்னாள் சிபிஐ தலைமை இயக்குனர் தற்கொலை! மின்னம்பலம் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் முன்னாள் இயக்குனரும், முன்னாள் நாகாலாந்து ஆளுநருமான அஸ்வனி குமார் நேற்று (அக்டோபர்7) புதன் கிழமை சிம்லாவில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். இது அதிகார மற்றும் அரசியல் வட்டாரங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. சிம்லா போலீஸ் கண்காணிப்பாளர் மோஹித் சாவ்லா முன்னாள் ஆளுநரான அஸ்வனிகுமார் தூக்கில் தொங்கியிருப்பதை உறுதிப்படுத்தினார், ஆனால் மேலதிக விபரங்களை வெளியிட மறுத்துவிட்டார். இந்த விவகாரம் விசாரணையில் உள்ளது என்றார் இமாச்சல பிரதேச காவல்துறை வட்டாரங்களின்படி, அவர் தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். சம்பவ இடத்திலிருந்து தற்கொலைக் குறிப்ப…
-
- 0 replies
- 902 views
-