Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இந்தியா-சீனா எல்லை பதற்றம்: கைலாய மலையை கைப்பற்றியதா இந்திய இராணுவம்? #BBCFactCheck உண்மை கண்டறியும் குழு பிபிசி இந்தி சேவை 19 செப்டெம்பர் 2020 பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் லடாக்கில் மெய்யான கட்டுப்பாட்டு கோட்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம் தொடர்கிறது. இந்த வரிசையில், லடாக்கின் வெவ்வேறு இடங்களைப் பற்றி தினசரி செய்திகள் வெளிவருகின்றன. இந்திய இராணுவம் கைலாய மலையையும் மானசரோவரையும் கைப்பற்றியதாக சமூக ஊடகங்களில் கடந்த ஒரு வாரமாக, கூறப்பட்டு வருகிறது. இது பற்றிய செய்திகள…

  2. பிரணாப் குமார் முகர்ஜி மறைந்த வசந்த் குமார் மறைவிற்குப் பின்பு சமூக வலைதளத்தில் ஏதாவது ஓர் இடத்தில் அவரைப் பற்றி தவறான அபிப்பிராயம் கொண்டவர்கள் யாராவது எழுதுவார்களா? என்று கூர்மையாகக் கவனித்துக் கொண்டே வந்தேன். ஆனால் என் பார்வையில் அப்படியொரு தகவல் கண்ணில்படவே இல்லை. 99 சதவிகிதம் அவரைப் பற்றி உண்மையான நேர்மையான அருமையான அஞ்சலி செய்திகள் தான் கண்ணில்பட்டது. அவர் அரசியல்வாதி, தொழில் அதிபர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர், சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தற்போது பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வகித்தவர். 400 கோடிக்கும் மேல் என் சொத்து உள்ளது என்று கம்பீரமாகத் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தவர். இதற்கு மேலாக அம்பானி அதானி என்று பேசிக்கொண்டிருக்கும் தமி…

  3. இந்திய பொருளாதாரச் சரிவும், அந்நிய கார்ப்பரேட்களின் வரவும் – இதயச்சந்திரன் கொரோனாவால் மோசமாகப் பாதிப்புற்றுள்ள இந்தியாவிற்கு, 750 மில்லியன் அமெரிக்க டொலரைக் கடனாக வழங்கவுள்ளது ஆசிய உட்கட்டுமான முதலீட்டு வங்கி. சீன தேசத்தால் உருவாக்கப்பட்ட இவ் வங்கியில் (AIIB), இந்தியா உட்பட, அமெரிக்கா-ஜப்பான் தவிர்ந்த, பல மேற்கு நாடுகள் இணைந்துள்ளது கவனிக்கத்தக்கது. இந்திய-சீன மோதல் குறித்த அதிகளவில் கொம்பு சீவி விடும் இந்திய தொலைக்காட்சி ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் யாவும் இந்தக் கடன் விவகாரத்தை ஏன் மறைக்கின்றன?. புதிதாக கொண்டுவரப்பட்ட விவசாய மசோதாக்கள், வெளிநாட்டு கார்ப்பரேட் வணிகர்களுக்கு புதிய வாசல்களை அகலத் திறந்துள்ளது. இது குறித்தும் இந்த ஊடகங்கள் பேசுவதில்லை. …

  4. முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்: மறைவுக்கு மோடி இரங்கல்..! இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் காலமானார். உடல்நலக்குறைவால் இராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி தனது, 82 வயதில் இன்று காலை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமைச்சருமாக இருந்தவர் ஜஸ்வந்த் சிங். வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சிக்காலத்தில் வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் நிதித்துறை பொறுப்புகளை வகித்த ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது. …

  5. அயோத்தியின் தீர்ப்பை தொடர்ந்து மதுரா ஈத்கா மசூதியை அகற்றி கிருஷ்ண ஜென்மபூமியையும் மீட்க புதிய வழக்கு அயோத்தியின் தீர்ப்பை தொடர்ந்து மதுராவில் ஈத்கா மசூதியை அகற்றி கிருஷ்ண ஜென்மபூமியையும் மீட்க புதிய வழக்கு ஒன்று உள்ளூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு உள்ளது. பதிவு: செப்டம்பர் 26, 2020 15:42 PM மதுரா, உத்தரபிரதேசம்: அயோத்தியின் ராமர் கோவிலுக்கான வரலாற்றுத் தீர்ப்பை இந்திய சுப்ரீம் கோர்ட் வழங்கிய ஒரு வருடம் கழித்து, மதுராவில் உள்ள கிருஷ்ண ஜன்மபூமியையும் "மீட்க" ஒரு புதிய வழக்கு இப்போது மதுரா சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. "நிலத்தின் ஒவ்வொரு அங்குலமும் ... ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் இந்து சமூகத்தின் பக்தர்களுக்கு புனிதமானது". வக்கீல…

  6. உலகின் செல்வாக்கு மிகுந்த, 100 பேரில் இடம்பிடித்த நரேந்திர மோடி..! அமெரிக்காவில் இருந்து வெளியாகும், 'டைம்' இதழ் வெளியிட்டுள்ள, உலகின் செல்வாக்கு மிகுந்த, 100 பேரின் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி இடம் பெற்றுள்ளார். டைம் இதழ் ஒவ்வொரு ஆண்டும், உலகின், செல்வாக்கு மிகுந்த, 100 பேரின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. வாசகர்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில், 100 பேர் கொண்ட பட்டியல், ஆசிரியர் குழுவால் தீர்மானிக்கப்படும். இந்நிலையில், டைம் இதழ் வெளியிட்டுள்ள '2020ஆம் ஆண்டுக்கான, செல்வாக்கு மிக்க 100 தலைவர்கள்' பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி இடம் பெற்றுள்ளார். இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமெரிக்க தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில், …

  7. சுரேஷ் அங்காடி மரணம் - இந்திய ரயில்வே இணை அமைச்சருக்கு என்ன நடந்தது? இந்திய ரயில்வே இணை அமைச்சரும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவருமான சுரேஷ் அங்காடி (65) இன்று உயிரிழந்தார். டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனையில் (எய்ம்ஸ்) அவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் உயிரிழந்த தகவல் வெளிவந்துள்ளது. சுரேஷ் அங்காடியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், கர்நாடகா மக்களுக்காக அயராது உழைத்தவர் அவர் என்று கூறியுள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 அவரது மறைவுக…

  8. இந்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை வெளியிட்ட காலாண்டு அறிக்கையில், இந்திய அரசின் கடன் படிப்படியாக உயர்ந்து வந்திருப்பதும், அது நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 7 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொரோனா சூழலால் இந்த அளவு கடன் வாங்கப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக மொத்த கடன் அளவு நூறு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. மார்ச் இறுதியில் 94.6 லட்சம் கோடி ரூபாயாக இருந்த கடன் அளவு ஜூன் இறுதியில் 101.3 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் கடந்தாண்டு, அதாவது ஜூன் 2019ஆம் ஆண்டு ரூபாய் 88.18 லட்சம் கோடியாக இருந்தது. ஜூன் மாத இறுதி நிலவரப்படி, தேசிய சிறு சேமிப…

  9. கொரோனா வைரஸ் தடுப்புக்காக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கம், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்ட காலத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்கள் பதிமூன்றாயிரத்துக்கும் அதிகமாக பதிவாகியுள்ளதாக இந்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்தத்துறையின் அமைச்சர் ஸ்மிரிதி இரானி மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில் தேசிய குற்ற ஆவணங்கள் காப்பகத்துறை, தேசிய குழந்தைகள் நல உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், பொது நல சிறார் அமைப்பு ஆகியவை சேகரித்த தரவுகள் விவரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த மார்ச் 1 முதல் செப்டம்பர் 18ஆம் தேதிவரையிலான காலத்தில் குழந்தைகள் பா…

  10. இந்திய அரசின் துரோகத்துக்கு முகங்கொடுத்திருக்கும் காஷ்மீர் அரசியல்வாதிகள் எதிர்காலத்தைப் பொறுத்தவரையில் இந்தியாவுடன் இணைந்திருப்பதே நன்மை பயக்கக்கூடியது என்று காஷ்மீர் மக்களுக்கு நம்பிக்கை அளித்து வந்தவர் சக்கீனா இற்றூ (Sakina Itoo). முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற இப்பிரதேசத்தின் தன்னாட்சியை பறித்தெடுக்கின்ற முடிவை கடந்த ஆகஸ்ட் மாதம் புதுடெல்லி எடுத்த பின்னர், மக்கள் முன்னே தன்னால் செல்ல முடியாதிருப்பதாகவும் தனக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் 48 வயது நிரம்பிய இந்திய சார்பு நிலையைக் கொண்டிருக்கும் அரசியல்வாதியான சக்கீனா இற்றூ தெரிவித்தார். “மக்கள் நடுவில் மீண்டும் என்ன முகத்தோடு செல்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. எங்களிடமே எந்தவிதமான பதில்களுமில்லா…

  11. ‘லவ் ஜிகாத்துக்கு’ எதிராக அவசரச் சட்டம் – யோகி ஆதித்யநாத் முடிவு காதல் என்ற பெயரில் மதமாற்றத்தை தடுக்கத் தேவைப்பட்டால் அவசரச் சட்டம் கொண்டு வருவதற்கான வழிமுறைகளை ஆராய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். இது தொடர்பாக பெயர் கூற விரும்பாத அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்குக் கூறும்போது, “காதல், திருமணம் என்ற பெயரில் சமீபமாகக் கூட பெண்களை மயக்கி மதம் மாற்றி பிறகு கொடுமைப்படுத்தி கொலை வரையிலும் நடைபெறுகிறது. இதுகுறித்து அவதானம் செலுத்தியுள்ள முதல்வர் இத்தகைய சம்பவங்களைத் தடுக்க நல்ல உபாயத்தை வழிவகுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதை நல்ல ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் செய்ய வேண்டும். இத்தகைய குற்றங்களைத் தடுப்பதும் …

  12. கேரளாவில் எதிர்க்கட்சிகள் போராட்டம்; போலீஸ் தடியடி ரத்தம் சொட்ட, சொட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஓடியதால் பரபரப்பு திருவனந்தபுரம், மந்திரி ஜலீல் பதவி விலக கோரி கேரளாவில் எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் பல இடங்களில் போலீசார் தடியடி நடத்தினர். இந்த தாக்குதலில் ரத்தம் சொட்ட, சொட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கேரளாவில் தங்கம் கடத்தல் வழக்கு பெரும் புயலை கிளப்பி உள்ளது. ஆளுங்கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படும் இந்த விவகாரம் தொடர்பாக மந்திரி கெ.டி.ஜலீலிடம் 2 முறை என்.ஐ.ஏ விசாரணை நடத்தி உள்ளது. இதனை தொடர்ந்து அவர் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நட…

  13. மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images பெய்ஜிங்கை தலைமையிடமாக கொண்ட ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடமிருந்து நரேந்திர மோதி அரசு 9 ஆயிரம் கோடி மதிப்பிலான இரு கடன்களை பெற்றுள்ளது. கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்க இக்கடன் பெறப்பட்டதாக மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூர் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் குமார் சிங் மற்றும் பிபி செளத்ரி மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அனுராக் தாகூர் இவ்வாறு கூறி உள்ளார். பட மூலாதாரம், Getty Images …

  14. கொரோனா வைரஸ் பாதிப்பு; உலக அளவில் 4வது இடம் நோக்கி பயணிக்கும் இந்தியா உலக நாடுகளில் பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசுக்கு அமெரிக்கா அதிக இலக்காகி உள்ளது. அந்நாட்டில் இதுவரை 1.15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 20.6 லட்சத்துக்கும் கூடுதலானோர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனை தொடர்ந்து அமெரிக்க கண்டத்தில் உள்ள பிரேசில் நாட்டில் 7.7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலி எண்ணிக்கை 39 ஆயிரத்து 700க்கும் கூடுதலாக உள்ளது. 3வது இடத்தில் ரஷ்யா (பாதிப்பு எண்ணிக்கை 5.02 லட்சம்), 4வது இடத்தில் இங்கிலாந்து (பாதிப்பு எண்ணிக்கை 2.90 லட்சம்) மற்றும் 5வது இடத்தில் ஸ்பெயின் (பாதிப்பு எண்ணிக்கை 2.89 லட்சம்) ஆகிய நாடுகள் இருக்கின்றன. …

  15. இந்தியாவின் முக்கிய அதிகாரிகள் 10 ஆயிரம் பேரை சீனா உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு! இந்தியாவின் முக்கிய அதிகாரிகள் உட்பட 10 ஆயிரம் பேரை சீனா உளவுப்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து உலக நாடுகள் சீனா மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்ற நிலையில், சீனா உளவு பார்க்கும் நாடுகளின் பட்டியலில் இந்திய உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பட்டியலின்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த், எதிர்கட்சி தலைவர் சோனியா காந்தி, இந்திய தலைமை நீதிபதி பாப்டே, இராணுவத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 10 ஆயிரம் முக்கிய அதிகாரிகளை சீன உளவுப்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விவ…

  16. போர் சூழ்நிலையை சீனா விரும்பினால் உளவியல் ரீதியில் கடினப்படுத்தப்பட்ட வீரர்களை சந்திப்பார்கள் – இந்திய இராணுவம் எச்சரிக்கை! சீனா போர்கள் இன்றி வெல்வதையே நோக்கமாக கொண்டிருக்கும். எனவே அவர்கள் போருக்கான சூழ்நிலையை உருவாக்கினால் உளவியல் ரீதியாக கடினப்படுத்தப்பட்ட இந்திய வீரர்களை சந்திப்பார்கள் என இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது. சீனாவின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் இந்தியாவால் குளிர்காலத்தில் திறம்பட செயற்பட முடியாது என இந்திய படை பலத்தை குறைத்து மதிப்பிட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இந்தியா மேற்படி தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வடக்கு பிராந்திய இராணுவ கட்டளையின் செய்தி தொடர்பாளர், “ லடாக்கில் உயரமானது முதல் மிக உயரமானது வரையிலான …

  17. இந்தியா - சீனா எல்லை பதற்றம்: தீர்வு காண ஐந்து அம்ச திட்டத்துக்கு இருநாடுகளும் ஒப்புதல் ANI இந்தியா, சீனா இடையே நிலவிவரும் எல்லை பதற்றத்தை குறைக்க, அமைதியை நிலைநாட்டுவது, மற்றும் துருப்புகளை பின்வாங்கிக் கொள்வதை வலியுறுத்தி ஐந்து அம்ச திட்டத்திற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. வியாழக்கிழமை அன்று ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற சந்திப்பில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இருவரும் எல்லை பிரச்சனைக்கு தீர்வு காணும் வழியில் பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டு மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையின் போது, கிழக்கு லடாக் பகுதியில் சமீ…

  18. பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் நேற்று திங்கட்கிழமை, மிக மோசமான பாலியல் குற்றங்கள் செய்பவர்களுக்கு ரசாயன விதைநீக்கம செய்து தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் தாயொருவர் வாகனத்தில் எரிபொருள் முடிந்த நிலையில் தவிப்பதை வாய்ப்பாக பயன்படுத்தி பிள்ளைகளுக்கு முன்னாலேயே துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை நாடுமுழுவதும் எதிர்ப்பாளர்களை உருவாக்கியது. ஒரு ஆண் துணையில்லாமல் இரவில் வாகனம் ஓட்டியதற்காக பாதிக்கப்பட்ட பெண்ணை ஒரு பொலிஸ் அதிகாரி குற்றம் சாட்டியதால் இந்த வழக்கு கூடுதல் கோபத்தை மக்கள் மத்தியில் உருவாக்கியது. இந்த வழக்கைப் பற்றி கேட்டபோது பதிலளித்த பிரதமர் இம்ரான் கான், மிக மோசமான பாலியல் குற்றங்கள் பொது தூக்கிலிடப்பட்ட…

  19. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை குறைக்கும் சட்டமூலம் அறிமுகம்! கொரோனா பாதிப்பால் அதிகரித்த செலவினங்களை ஈடுகட்டும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஊதியத்தை ஓராண்டுக்கு 30 சதவீதம் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டமூலத்தை நேற்று (திங்கட்கிழமை) நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி மக்களவையில் தாக்கல் செய்தார். கொரோனா பாதிப்பின் போது மக்களுக்கு விரைவான நிவாரணம், உதவிகள் வழங்கவேண்டியதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு இந்த அவசரச் சட்டமானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் திகதி மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு ஏப்ரல் 7-ஆம் திகதி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/நாடாளுமன்ற-உறுப்பினர்க-18/

  20. பூடான் மீதும் கண் வைத்த சீனா.. அடுத்த ஆக்கிரமிப்பு.. . இந்தியாவுக்கு பாதகமாகும் பகீர் முயற்சி.! திம்பு: லடாக் மற்றும் தென்சீனக் கடலை தொடர்ந்து பூடானின் சில பகுதிகளை ஆக்கிரிமிக்க சீனா திட்டமிட்டுள்ளது. மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் ராணுவ உள் கட்டமைப்பை உருவாக்கி எல்லை நிலையை சீனா மாற்ற முயற்சிக்க உள்ளதாகவும், வரவிருக்கும் 25 வது சுற்று எல்லை பேச்சுவார்த்தைகளில் இதை சாத்தியப்படுத்த சீனா திட்டமிடுவதாகவும் இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்கள் சொல்கிறார்கள். இந்தியாவின் சிலிகுரி பகுதிக்க அடுத்தபடியாக பூட்டான் இருப்பதால் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு மையமாக உள்ளது. ஆனால் சீனாவுடன் நடத்த உள்ள ச்சுவார்த்தையில் பூட்டான் மேற்கொள்ளப்போகும் எந்தவொரு பிராந்திய சமரசமும…

  21. லடாக் எல்லையில் இந்திய – சீன இராணுவத்தினர் நேருக்கு நேர் அணிவகுத்துள்ளதாக தகவல்! லடாக் எல்லையில் ஸ்பாங்கர் கேப் எனுமிடத்தில் இந்திய – சீன இராணுவத்தினர் நேருக்கு நேராக கைக்கெட்டும் தூரத்தில் அணி வகுத்திருப்பதாக இராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒருபுறம் சீனா இந்தியாவுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், மறுபுறம் படைகளைத் திரும்பப்பெற மறுத்து வருகிறது. சீனாவின் ஏராளமான பீரங்கிகளும் அங்கு அணிவகுத்துள்ளன. சிகரங்களில் இந்தியா தனது தேசியக் கொடியைப் பறக்கவிட்ட நிலையில் அந்த சிகரங்களில் உள்ள இந்தியப் படையினரை அங்கிருந்து வெளியேற்ற சீனா முயன்று வருகிறது. சீனப்படைகள் முன்னேற விடாமல் தடுக்க இந்தியாவும் பெருமளவுக்கு படைகளைக் குவித்துள்ளது. …

  22. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கில் பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன. ஆனால், ஒரு சில சம்பவங்கள்தான் மிக ஆழமாக மனதுக்கு சங்கடத்தை தரக்கூடியவையாக இருக்கின்றன. அத்தகைய ஒரு சம்பவம்தான் இந்திய தலைநகர் டெல்லியில் நடந்துள்ளது. இதில் முப்பதுகளை கடந்த நபர், 86 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறார். இது பற்றி பிபிசியிடம் விவரித்த டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால், கடந்த திங்கட்கிழமை மாலையில் வழக்கமாக தனது வீட்டுக்கு வரும் பால் வியாபாரிக்காக காத்திருந்த மூதாட்டியை புதிதாக வரும் நபர் அணுகியதாக கூறினார். "வழக்கமாக வரும் பால் விநியோக நபர் இன்று வரமாட்டார். அதனால் என்னுடன் வாருங்கள். நான் உங்களுக்கு பால் எங்கு கிடைக்கும்…

  23. குழந்தைகள் மீதான வன்முறைக்கு தீவிரவாதமே காரணம் – ஐ.நாவில் இந்தியா வலியுறுத்து! உலகம் முழுவதும் குழந்தைகள் மீதான வன்முறைக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தீவிரவாதமே காரணமாக இருப்பதாக இந்தியா ஐ.நா மாநாட்டில் தெரிவித்துள்ளது. ஆகவே உலக நாடுகள் குழந்தைகளை பாதுகாக்க தீவிரவாதத்தை உறுதியுடன் எதிர்க்க வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. குழந்தைகள் மற்றும் ஆயுதப் போராட்டங்கள் என்ற தலைப்பில் ஐ.நாவில் நடைபெற்ற கருத்தரங்கில் இந்தியா மேற்படி குறிப்பிட்டுள்ளது. தீவிரவாதத்தை தூண்டுவோர், அதற்கு நிதியுதவி அளிப்போர், தீவிரவாதத்திற்கு துணை நிற்போரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் இந்தியா சார்பில் விடுத்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதத்தால் எல்…

  24. லடாக்கின் எல்லையில் சீன இராணுவத்தினர் படைகளை குவித்து வருவதாக தகவல்! லடாக்கின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் சீன இராணுவம் தங்களது படைகளை குவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி ரெச்சின்லா என்னும் இடத்தில் ஒரு படையணியையும், ஸ்பாங்குர் ஏரி அருகில் மற்றொரு படையணியையும் சீன இராணுவம் நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை கடந்த திங்கட்கிழமை முக்ரி என்ற இடத்தில் சீன இராணுவத்தினரின் ஊடுருவலை இந்திய இராணுவத்தினர் தடுத்துள்ளதாகவும் இந்தியா குறிப்பிட்டுள்ளது. இருநாட்டுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை அதிகரித்து வரும் நிலையில் மிகப்பெரிய தாக்குதல் வரும் நாட்களில் நிகழ்க்கூடும் என அரசியல் அவதானிகள் எதிர்வுக்கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. h…

  25. அதிவேக ஏவுகணை வாகனம் ; வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக அறிவிப்பு! ஹைபா்சோனிக் தொழில்நுட்பத்திலான ஏவுகணை செலுத்து வாகனம் நேற்று (திங்கட்கிழமை) வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒலியின் வேகத்தைவிட சுமாா் 6 மடங்கு வேகத்தில் ஏவுகணையை ஏவும் திறன் கொண்ட குறித்த வாகனம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் கண்டுப்பிடிக்கப்பட்டதாகும். இந்த ஏவுகணை வாகனம் நீண்ட தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்குகளைத் தாக்கி அழிக்கவல்ல ஏவுகணைகளைச் செலுத்துவதற்கு பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் பரிசோதனையின்போது எந்தவித குறைபாடுகளுமின்றி ஹைபா்சோனிக் வாகனம் இயங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.