Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. காவல்துறையினருக்கு கூல்டிரிங்ஸ் வழங்கிய பெண்மணிக்கு சல்யூட் அடித்து ஆந்திர டிஜிபி நன்றி தெரிவித்தார். இந்தியாவில் ஊரடங்கு அமலில் இருப்பதால், பொதுமக்கள் அனைவருமே அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வெளியே வருகிறார்கள். அதுவும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் மட்டுமே தொடர்ச்சியாகப் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுடைய பணிக்கு பிரதமர் மோடி, முதல்வர்கள், திரையுலகப் பிரபலங்கள் என அனைவருமே பாராட்டி வருகிறார்கள். இதனிடையே, கடந்த சில நாட்களாகவே ஆந்திராவில் உள்ள காவல்துறையினருக்குப் பெண்மணி ஒருவர் பெரிய கூல்டிரிங்ஸ் கொடுக்கும் வ…

  2. கொரோனாவுக்கு எதிரான போரில் உலக நாடுகளுக்கு உதவும் இந்தியா; ஐ.நா. பாராட்டு.! கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இந்தியா தன்னால் முடிந்த உதவிகளை ஏனைய நாடுகளுக்குச் செய்து வருவதற்கு சல்யூட் செய்கிறோம் என்று ஐ.நா. சபை பாராட்டியுள்ளது. இதுகுறித்து, ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்ஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜரிக் (Stephane Dujarric de la Rivière) நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு காணொளி தொடர்பாடல் மூலம் பேட்டியளித்தார். இதன்போது, உலக நாடுகளுக்கு மலேரியா மாத்திரையான ஹைட்ரோக்ஸி குளோரோகுயினை இந்தியா அனுப்புவது குறித்து கேட்டனர். இதற்கு அவர் கூறுகையில் “அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளுக்கும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை இந்தியா அனுப்பி …

  3. சுவிற்சர்லாந்து ஆல்ப்ஸ் மலையில் தோன்றிய இந்திய தேசியக் கொடி! கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடிவரும் இந்தியாவுக்கு நம்பிக்கைதரும் விதமாக, சுவிற்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் மேட்டர்ஹான் என்ற மலையில் இந்திய தேசியக் கொடியை பரதிபலிக்கும் வெளிச்சம் காண்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் இந்தியாவுக்கு உறுதுணையாக இருப்போம் என சுவிற்சர்லாந்து தனது ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் உலகில் கடும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதன் தீவிரத் தாக்கம் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் தீவிரமாக உள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதேவேளை, சுவிற்சர்லாந்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவல் பாதிப்ப…

  4. சீனாவில் இருந்து மட்டும் வரவில்லை.. இந்தியாவில் பரவும் கொரோனா 3 வகையான கொரோனா சென்னை: இந்தியாவில் பரவும் கொரோனா வைரஸ் மொத்தம் 3 வகையை சேர்ந்தது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா, சீனா, ஈரானில் பரவும் கொரோனா வகை வைரஸ்கள் இந்தியாவிலும் பரவி வருகிறது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக மருத்துவர்கள் கூறுகிறார்கள். பொதுவாக இரண்டு வகையான வைரஸ்கள் உலகில் உள்ளது. ஒன்று டிஎன்ஏ வகை வைரஸ்கள், இன்னொன்று ஆர்என்ஏ வகை வைரஸ்கள் உள்ளது. இதில் டிஎன்ஏ வகை வைரஸ்கள் தன்னை உருமாற்றி தகவமைத்துக் கொள்ளாது. அதாவது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் போது டிஎன்ஏ வகை வைரஸ்களில் எந்த விதமான மாற்றமும் இருக்காது. இதனால் டிஎன்ஏ வகை வைரஸ்களுக்கு எளித…

  5. கொரோனா வைரஸ்: ஊரடங்கை மீறி கோயில் தேர் இழுக்க கூடிய கூட்டம் இம்ரான் குரேஷி பிபிசி ANI கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவை மீறி கர்நாடகாவின் கலபுரகி மாவட்டத்தில் உள்ள கோயில் ஒன்றின் தேர் திருவிழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். கோவிட்-19 தொற்றுக்கு இந்தியாவில் நிகழ்ந்த முதல் மரணம் கலபுரகி மாவட்டத்தில்தான். அந்த மாவட்ட நிர்வாகம் தற்போது திருவிழா நடத்தப்பட்ட ரெவூர் கிராமத்தின் எல்லைகளை மூடி அதை தனிமைப்படுத்திவிட்டது. மேலும் சித்தபுர் தாலுகாவின் வட்டாச்சியர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர், சமூக விலகளை மீறும் வகையில், தேர் திருவிழாவை தடுக்காமல் இருந்ததற்காக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். …

  6. தாராவியை மிரட்டும் கரோனா; தொற்று 86 ஆக உயர்வு; பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு மும்பை தாராவியில் மட்டும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது, கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 23 பேர் பலியாகியுள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது உயிரிழந்தோர் எண்ணிக்கை 437 ஆகவும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 1,007 ஆக அதிகரித்து 13 ஆயிரத்து 387ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 187 ஆக…

  7. 699 சிங்கப்பூர் குடிமக்கள் இந்தியாவிலிருந்து சொந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டனர்! உலக அரக்கன் கொரோனாவினால், உலக நாடுகள் திடீரென எந்தவொரு நகர்வு அற்ற நிலையில் இருக்க வேண்டிய கட்டாயத்தால், விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இவ்வகையில் சிங்கப்பூர் குடிமக்கள் இந்தியாவில் பயணம் மேற்கண்ட போது தங்களது நாட்டிற்கு திரும்ப இயலாத நிலை உருவானது. இந்த சிக்கலை தீர்வுக்கு கொண்டு வர, சிங்கப்பூர் வெளியூறவுத்துறை எடுத்த நடவடிக்கையால், 699 சிங்கப்பூர் குடிமக்கள் நேற்று (10-04-2020) தங்களது நாட்டிற்கு சிறப்பு விமானம் மூலம் சிங்கப்பூர் சங்கி விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிங்கப்பூர் சென்ற அவர்களை சிங்கப்பூர் அரசு உடனடியாக விடுதி…

    • 1 reply
    • 423 views
  8. 2021-22இல் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும்- ரிசேர்வ் வங்கி by : Litharsan எதிர்வரும் 2021-2022ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருப்பதாக ரிசேர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். நாடுமுழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகள் முடங்கியுள்ள நிலையில் சக்திகாந்த தாஸ் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய நிலையில் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் தெரிவிக்கையில், “க…

    • 0 replies
    • 315 views
  9. இந்தியாவின் குஜராத்தின் அஹமதாபாத்தின் மருத்துவமனையொன்றில் கொரோனா நோயாளிகள் மதஅடிப்படையில் தனித்தனியாக பிரிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலால் சர்ச்சை உருவாகியுள்ளது. கொரோனா வைரஸ் நோயாளிகளும் பாதிக்கப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களும் அஹமதாபாத் சிவில் மருத்துவமனையில் தனித்தனியாக பிரித்து அனுமதிக்கப்பட்டுள்ளனர் என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மாநில அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் இந்து நோயாளிகளிற்கு என ஒரு பகுதியும் முஸ்லீம்களிற்கு என தனியான ஒரு பகுதியும் உருவாக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரி குன்வந் ராத்தோட் தெரிவித்துள்ளார். வழமையாக ஆண்நோயாளிகளும் பெண் நோயாளிகளும் தனித்தனியாக பிரித்து அனுமதிக்கப்பட்டு கிசிச்சை வழங்க…

    • 1 reply
    • 390 views
  10. கொரோனாவை விரைவாகக் கண்டுபிடிக்க உதவும் ரபிட் ரெஸ்ற் கிற் உற்பத்தி உள்நாட்டில் தொடங்கியது கொரோனா வைரஸ் தொற்றை விரைவாகக் கண்டுபிடிக்க உதவும் ரபிட் ரெஸ்ற் கிற்றுகளைத் (Rapid Test Kit) தயாரிக்கும் பணியில் இரண்டு இந்திய நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் உரிமங்களைப் பெற்று டெல்லியில் உள்ள வன்கார்ட் டயக்னொஸ்ரிக்ஸ் (Vanguard Diagnostics) என்ற நிறுவனமும், கேரளாவில் உள்ள இந்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் லேற்றக்ஸ் நிறுவனமும் ரபிற் ரெஸ்ற் கிற்றுக்களின் உற்பத்தியை தொடங்கியுள்ளன. இந்துஸ்தான் லேற்றக்ஸ் நிறுவனம் இன்னும் 4 அல்லது 5 தினங்களில் ஒரு இலட்சம் கிற்றுக்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வன்கார்ட் நிறுவனம், 3 வாரங்கள…

  11. பசிக்கொடுமை; நிர்கதியான தொழிலாளர்கள்’ - குப்பையிலிருந்து உணவு தேடும் அவலம் முறையான உணவு இல்லாததால் குப்பைகளில் இருக்கும் பழங்களைப் பொறுக்கி உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள். ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் தற்போது பெரும் எதிரியாக மாறியுள்ளது கொரோனா வைரஸ். கண்ணுக்கே தெரியாத உயிரினத்துக்கு எதிராகக் கடந்த மூன்று மாதங்களாக உலகமே போர் நடத்தி வருகிறது. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், ஏழை நாடுகள் என யாருக்கும் எந்த வித்தியாசமும் காட்டாமல் அனைவருக்கும் ஒரே மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த வைரஸ். கொரோனா என்ற வார்த்தை காதுகளில் கேட்காத விடியலுக்காகப் புவியே தவம் கிடந்துகொண்டிருக்கிறது. …

  12. லாக் டவுன்: மூன்று முக்கிய கேள்விகள்-ராஜன் குறை April 15, 2020 - ராஜன் குறை · சமூகம் இந்தியா கொரோனோ நாம் பலரும் பேச்சிலும், வழக்கிலும் “வரலாறு காணாத” என்றொரு சொற்சேர்க்கையை பயன்படுத்துவோம். அந்த வார்த்தைகளின் முழுப் பொருளையும் எதிர்கொள்ளும் ஒரு சூழலை மானுடம் சந்தித்துள்ளது என்பதில் ஐயமில்லை. இந்த சூழல் அனைவரையுமே திகைப்பிலும், குழப்பத்திலும், பதட்டத்திலும் ஆழ்த்தியுள்ளது எனலாம். அதனால் நம்மால் தர்க்க ரீதியாக சிந்திக்க முடியுமா என்பதே சவாலாக உள்ளது. இந்த சிறு கட்டுரையின் நோக்கம் தர்க்க ரீதியாக சில கேள்விகளை உரத்துக் கேட்பது. இதற்கான பதில்களை ஆட்சியாளர்கள்தான், குறிப்பாக இந்தியாவின் மத்திய அரசுதான் இக்கேள்விகளுக்கான முழுமையான பதில்களை அளிக்க முடியும். அவ்வி…

    • 3 replies
    • 603 views
  13. எதிர்வரும் 20 இற்கு பின்னர் – எவையெல்லாம் இயங்கலாம்? எதற்கெல்லாம் தடை? எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் பிறகு ஊரடங்கு தளர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மே 3 ஆம் திகதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். எனினும் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் சில நிபந்தனைகளுடன் தளர்வுகள் இருக்கும் எனவும் அதுகுறித்து வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு இன்று வெளியிடும் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் என்னென்ன தளர்வுகள்… அதன் வழிகாட்டு நெறிமுறைகள் என்ன என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. * ஏப்ரல் 20 முதல் விவசாயம், தோட…

  14. தமிழகம், கேரளாவில் வவ்வால்களில் கொரோனா வைரஸ்; ஐ.சி.எம்.ஆர். ஆய்வறிக்கை உலக நாடுகளில் பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவிலும் தீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,076 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 377 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இதுபற்றி ஆய்வு மேற்கொண்டு ஆய்வறிக்கை ஒன்றை சமர்ப்பித்து உள்ளது. இதனடிப்படையில் 10 மாநிலங்களில் உள்ள 2 வகையான வவ்வால் இனங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. …

    • 4 replies
    • 468 views
  15. பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் நேர்காணல்: கொரோனா 40 நாள் ஊரடங்கின் விளைவுகள் எப்படி இருக்கும்? Getty Images கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கு மே 3ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுமென பிரதமர் நரேந்திர மோதி அறிவித்திருக்கிறார். ஆனால், இந்த நீட்டிப்பு எவ்விதமான விளைவுகளை பொருளாதாரத்திலும் சமூகத்திலும் ஏற்படுத்தக்கூடும் என்பது குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார் பேராசிரியர் டாக்டர் ஜெ. ஜெயரஞ்சன். பேட்டியிலிருந்து: கே. ஊரடங்கு மே 3ஆம் தேதிவரை, மேலும் பல நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவுகள் என்னவாக இருக்கும்? ப. இந்தியா பொருளாதார ரீதியில் மிக வலுவான இடத்தில் இருப்பதாக சொல்லிவந்தோம். அதாவது உலகிலேயே ஐந்தாவது மிகப் பெரிய …

    • 2 replies
    • 392 views
  16. இந்தியா, பீகார் மாநிலம் கயா மாவட்டத்தை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் தனது கணவருடன் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 27 ஆம் திகதி இருவரும் சொந்த ஊர் திரும்பியுள்ள நிலையில், குறித்த கர்ப்பிணிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டதால் உறவினர்கள் அவரை அங்குள்ள அரசு மருத்துவக்கல்லூரி வைத்தியசாலையில் சேர்த்தனர். அப்போது அவருக்கு கொரோனா அறிகுறிகள் தெரிந்ததால் உடனே அவரை வைத்தியசாலையில் உள்ள தனியறையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ள நிலையில், பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்தது. இதையடுத்து கடந்த 3 ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார். வீடு திரும்பிய 3 ஆவது நாளில் அந்த பெண்ண…

    • 1 reply
    • 337 views
  17. இந்தியாவில் மே 03 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மே மாதம் 3ஆம் திகதி வரை நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மார்ச் மாதம் 25ஆம் திகதியிருந்து இன்று வரை 21 இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், நினைத்தது போன்று கொரோனா வைரஸ் கட்டுக்குகள் வரவில்லை. இந்த 21 நாள் காலக்கட்டத்தில்தான் கொரோனா வைரசின் வீரியம் அதிகமாக இருந்து வருகிறது. இன்று காலை இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் பெரும்பாலான மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தியது. இந…

  18. கொரோனா வைரஸ்: ஏப்ரல் 20 முதல் அமலுக்கு வரும் மத்திய அரசின் நெறிமுறைகள் இவைதான் - விரிவான தகவல் Getty Images கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவின்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும், விலக்கு அளிக்கப்பட்ட சில நடவடிக்கைகள் குறித்த தகவல்களையும் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நேற்று மோதி கூறியது Getty Images கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகப் பரவி வரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு அவசியம் என நேற்று கூறிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, மே 3-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று அறிவித்து இருந்தார். …

    • 1 reply
    • 283 views
  19. கரோனா சிகிச்சையின் இருண்ட பக்கம்: 1984 போபால் விஷ வாயுக்கசிவினால் சுவாசப்பாதை பாதிக்கப்பட்ட 4 பேர் கரோனாவுக்குப் பலியான துயரம் - மருத்துவமனைகளில் சேர்க்க மறுப்பு போபால் பி.எம்.ஹெச்.ஆர்.சி. மருத்துவமனை மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் கோவிட்-19 காய்ச்சல் பாதித்த 5 பேர்களில் மரணமடைந்த நால்வர் 1984 போபால் விஷவாயுக் கசிவினால் கடும் சுவாசக்குழல் பிரச்சினையினால் அவதிப்பட்டு வந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. யூனியன் கார்பைடு நிறுவனத்தின் விஷவாயுக் கசிவினால் பலருக்கும் சுவாசப்பாதை பிரச்சினைகள் ஏற்பட்டன, இதனால் இவர்கள் தற்போது கரோனா தொற்றுக்கு இலக்காகி வருகின்றனர். இதில் ஒரு நோயாளிக்கு ஆம்புலன்ஸ் சேவையும் இரு தனியார் மருத்துவமனைகளில் அனு…

  20. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கரம் கோர்க்கிறது தென்கிழக்காசிய பிராந்தியம் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளில் இணைந்து செயற்பட தென்கிழக்காசிய நாடுகளின் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இந்தோனேசியா, வியட்னாம், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், கம்போடியா, லாவோஸ், மியன்மார், உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளின் தலைவர்கள் தமது பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பில் இன்று காணொளி மூலம் கலந்துரையாடினர். குறித்த பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் அவ்வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பில் இதன்போது விவாதிக்கப்பட்டது. இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மிகப்பாரிய சுக…

  21. ஏழை மக்களின் அவதி: கலங்க வைக்கும் வீடியோ; சாலையில் சிந்திய பாலுக்காகப் பறக்கும் மனிதனும் தெரு நாய்களும் ஒரு புறம் மருந்தில்லா கரோனா நோயைக் கட்டுப்படுத்த லாக்-டவுன் அவசியம் என்றாலும் அது ஏலாதவர்களையும் ஏழைகளையும் கடுமையாகப் பாதிப்பதையும் மறுப்பதற்கில்லை, ஆங்காங்கே ஒரு பிடி சோறுக்காக அலையும் மக்கள் இருக்கவே செய்கின்றனர். அதில் ஒருசிலதான் நம் பார்வைக்கு வருகிறது. இந்த வகையில் வயிற்றைக் கலக்கும் ஒரு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஆக்ராவில் சாலையில் சிந்திய பாலுகாக ஆலாய்ப் பறக்கும் ஒரு மனிதன் மற்றும் தெருநாய்கள் பற்றிய வீடியோவாகும் இது. இன்று காலை ஆக்ராவில் உள்ள ராம் பாக் சவ்ராஹா சாலையில் பால் கொண்டு செல்…

  22. வாஷிங்டன்: பாகிஸ்தானில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள் என சிறுபான்மையின மக்களுக்கு உணவு, நிவாரண உதவி மறுக்கப்பட்டு வருவதாக சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க கமிஷன் குற்றம்சாட்டியுள்ளது. பாகிஸ்தானி்ல் கொரோனாவுக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் நேற்று யு.எஸ்.சி.ஐ.ஆர்.எப். எனப்படும் சர்வதேச மதசுதந்திரத்திற்கான அமெரிக்க கமிஷன் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பாகிஸ்தானில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள் என சிறுபான்மையினர் உள்ள பகுதிகளில் உணவு, நிவாரணம் மறுக்கப்படுகிறது. குறிப்பாக கராச்சியில் ஊரடங்கால் முடங்கியுள்ள சிறுபான்மையினர…

    • 1 reply
    • 434 views
  23. ஊரடங்கு நேரத்தில் சுற்றித்திரிந்த வெளிநாட்டினர்: ‘என்னை மன்னித்து விடுங்கள்’ என 500 முறை எழுத வைத்த பொலிஸார் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஊரடங்கை மீறி சுற்றித்திருந்த வெளிநாட்டினரிடம் விசாரணை மேற்கொண்ட பொலிஸார், அவர்களுக்கு வித்தியாசமான தண்டனையை வழங்கியுள்ளனர். அதாவது, அவர்களிடம் ‘என்னை மன்னித்து விடுங்கள்’ என 500 முறை எழுத வைத்து நூதன தண்டனை வழங்கினர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகின்ற நிலையில் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய காரணங்களுக்கு அல்லாமல் மக்கள் யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில சமயங்களில் ஊடரங்கை மீறுபவர்க…

  24. சிறுபான்மையினருக்கு எதிரான பொய்ச் செய்திகள்: பொலிஸார் உடனடி நடவடிக்கை சிறுபான்மையினருக்கு எதிரான பொய்ச் செய்திகள் மீது உத்தரப் பிரதேசக் பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில் இதனை பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர். தப்லீக் ஜமாத்தினரின் இஸ்திமா மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாட்டவராலும் கரோனா பரவல் அதிகமாகி உள்ளது. இந்தச் சூழலில் இந்தப் பரவலுக்கு மதச்சாயம் பூசும் வகையில் சமூக விரோதிகள் சிலர், தப்லீக் ஜமாத்தினர் மற்றும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக பொய்யான செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இதுபோன்ற பொய்ச் செய்திகளுக்கு எதிராக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. எனவே, பொய்ச் செ…

  25. கொரோனா ஊரடங்கால், இந்தியாவில், கிட்டத்தட்ட 4 கோடி குழந்தைகள் பசியில் தூங்க செல்வதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. பதிவு: ஏப்ரல் 12, 2020 10:49 AM புதுடெல்லி இந்தியாவில், கிட்டதட்ட 47.2 கோடி குழந்தைகள் உள்ளன. இந்தியா உலக அளவில், அதிக குழந்தைகள் கொண்ட நாடாகும்.இதில், கிட்டத்தட்ட 4 கோடி குழந்தைகள் தினக்கூலி வேலைகள் செய்து பசியாற்றி கொள்கின்றனர். அவர்கள், விவசாயம் தொடர்பான வேலைகள், சாலைகளில் பொருட்கள் விற்கும் வேலைகள் ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர். இந்த குழந்தைகளின் வாழ்க்கை ஊரடங்கால், பல இன்னல்களை சந்தித்து வருகிறது. அவர்கள் என்ன உண்பது எப்படி நாட்களை கழிப்பது போன்றவற்றில் மிக குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. …

    • 3 replies
    • 446 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.