அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3272 topics in this forum
-
இந்தியாவிற்கு 7 ஆயிரம்கோடி ரூபாய் மதிப்பிலான கடற்படை பீரங்கிகள் மற்றும் போர்த்தளவாடங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்திய கடற்படையின் வலிமையை அதிகரிக்கும் வண்ணம் போர்க்கப்பல்களில் பயன்படும் விமான எதிர்ப்பு பீரங்கிகளை அமெரிக்காவிடம் இருந்து வாங்க சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன்படி 5 அங்குல விட்டம் கொண்ட 13 எம்கே 45 ரக பீரங்கிகளை இந்தியாவுக்கு விற்பனை செய்ய டிரம்ப் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தவகை ஆயுதங்கள் தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளும் திறனை இந்தியாவுக்கு வழங்கும் என்று அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு மையம் கூறியுள்ளது. இதன் மூலம் இந்தியாவும், அமெரிக்காவும் பரஸ்பரம் நட்பை அதிகப்படு…
-
- 0 replies
- 309 views
-
-
‘‘சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினரை அடையாளம் காண, நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும்’’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். கடந்த 1971ம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் போர் மற்றும் வங்கதேச விடுதலைப் போரைத் தொடர்ந்து, வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து ஏராளமானோர் சட்டவிரோதமாக அசாம் மாநிலத்தில் குடியேறினர். இதனால், கடந்த 1971 மார்ச் 25ம் தேதிக்குப் பிறகு சட்டவிரோதமாக குடியேறியவர்களை கணக்கெடுக்க தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) புதுப்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்தாண்டு வெளியான இதன் வரைவு அறிக்கையில் 40 லட்சம் பேரின் பெயர் விடுபட்டதால் நாடு முழுவதும் கடும் எதிர்ப்ப…
-
- 0 replies
- 265 views
-
-
கண் பார்வையில்லைன்னா.. எதுக்காக போராட்டத்துக்கு வந்தே? ஜேஎன்யூ மாணவன் மீது போலீஸ் தடியடி பார்வையற்றவர்னா ஏன் போராட்டத்துக்கு வந்தே என ஜேஎன்யூ போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவனிடம் கேட்டு விடாமல் லத்தியால் தாக்கிய போலீஸாருக்கு கண்டனங்கள் குவிகின்றன. டெல்லியில் உள்ள ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் விடுதி கட்டணங்கள் 300 சதவீதம் உயர்த்தப்பட்டன. மேலும் போராட்டங்களை முன்னெடுக்கும் மாணவ அமைப்புகளின் தலைவர்களுக்கான அபராதத் தொகையும் மிக கடுமையாக அதிகரிக்கப்பட்டது. இவற்றை திரும்ப பெற கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சப்தர்ஜங் சமாதி பகுதியில் கூடியிருந்த மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். அப்போது நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல ம…
-
- 1 reply
- 457 views
-
-
படத்தின் காப்புரிமை Hindustan Times Image caption சுப்பிரமணியம் ஜெய்சங்கர் பிரதமர் நரேந்திர மோதியின் புதிய அமைச்சரவையில் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் என்ற பெயர் இடம் பெற்றிருந்தது பலருக்கும் ஆச்சரியம் தரும் விஷயமாக அமைந்தது. பெரும்பாலும், கடந்த அமைச்சரவையில் இடம் பெற்றவர்களே இந்த முறையும் இடம் பெற்றிருக்கிறார்கள். பதவியேற்று கொண்ட 25 கேபினட் அமைச்சர்களில் மூன்று பேர் மட்டுமே புதுமுகங்கள். அதில் ஒருவர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர். இவர் இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்தவர். கடந்த முறை வெளியுறவுத்துறை அமைச்சர…
-
- 8 replies
- 1.1k views
-
-
ஜி.எஸ்.டியை எளிமைப்படுத்துவது குறித்து நிர்மலா சீதாராமன் ஆலோசனை! ஜி.எஸ்.டியை எளிமைப்படுத்துவது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தியுள்ளார். குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று (சனிக்கிழமை) டெல்லியில் இடம்பெற்றது. இதன்போது ஜி.எஸ்.டி.யை தாக்கல் செய்பவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பற்றி எடுத்து கூறப்பட்டது. மேலும் குறிப்பிட்ட நிகழ்கால வருமானத்தை தாக்கல் செய்வது மற்றும் அதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் பற்றியும் கூட்டத்தில் கவலை வெளியிடப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி. வரியை மேலும் எளிமைப்படுத்தவும் குறைகளை களைய உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். http://athavannews.com/ஜி-எஸ்-டியை-எள…
-
- 0 replies
- 414 views
-
-
பாபர் மசூதி இடிப்பு -அயோத்தி கோயில் நில விவகாரத்தில் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரப்படும் என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் இன்று தெரிவித்துள்ளது. ஒரு மாதத்திற்குள் மறு ஆய்வுமனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கரை ஒரு கோவிலுக்கு ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் மசூதிக்கு 5 ஏக்கர் நிலத்தை முக்கிய இடத்தை வழங்க உத்தரவிட்டதையும் குறிப்பிட்டு “மசூதிக்கு பதிலாக எந்த நிலத்தை வழங்கினாலும் ஏற்க முடியாது” என்று சட்ட வாரியம் இன்று தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை சவாலாக எடுத்து செய்யப்போவதில்லை. மாறாக சன்னி வக்ஃப் வாரியத்திற்கு இந்த நிலம் வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வழக்கறிஞர்கள் மறு ஆய்வு மனுவை விரும்புக…
-
- 0 replies
- 237 views
-
-
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது – பெண்களுக்கான பாதுகாப்பு நீக்கம் சபரிமலையில் மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது. இந்நிலையில், சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு வழக்கப்படாது என கேரள அரசு தெரிவித்துள்ளது. இதனால் சபரிமலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுடைய பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளித்து, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்து சமீபத்தில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. அதேசமயம், முன்னைய தீர்ப்புக்கு தடை எதுவும்…
-
- 1 reply
- 298 views
-
-
பிரேசிலில் பிரதமர் மோடியுடன் பேச்சு நடத்திய போது இந்தியாவுக்கு ரஷ்யாவின் எஸ்.400 ஏவுகணைத் தடுப்பு ஆயுதங்களை விற்பது தொடர்பான ஆலோசனை நடந்திருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார், கடந்த ஆண்டு இந்தியா ரஷ்யாவிடமிருந்து எஸ்.400 ஏவுகணைத் தடுப்புகளை வாங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. சீனாவின் எல்லை அச்சுறுத்தலை எதிர்கொள்ள இவை தேவைப்படுவதாக இந்திய பாதுகாப்புத் துறை தெரிவித்தது. இந்த ஒப்பந்தத்தின் படி அனைத்து நடவடிக்கைகளும் சுமுகமான முறையில் நடைபெற்று வருவதாக பிரேசிலில் செய்தியாளர் சந்திப்பின்போது புதின் தெரிவித்துள்ளார். தனது இறையாண்மையை பெரிதாக மதிக்கும் இந்தியாவுக்கு 135 கோடி மக்கள் தொகை இருப்பதாகவும் குறிப்பிட்ட புதின், இந்தியாவுடன் தொழில்நுட்பம் மிகுந்த ஆயுத…
-
- 1 reply
- 436 views
-
-
"திருமணங்கள் நடக்கின்றன; இந்திய பொருளாதாரம் நன்றாக உள்ளது" - பாஜக அமைச்சர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைSAM PANTHAKY VIA GETTY IMAGES முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினத்தந்தி: "மக்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள்: இந்திய பொருள…
-
- 2 replies
- 501 views
- 1 follower
-
-
அயோத்தியில் ராமர் கோயில்: உச்ச நீதிமன்றம் ஒரு மனதாக தீர்ப்பு! மின்னம்பலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் இனி ராமர் கோயில் அறக்கட்டளைக்கு வழங்கப்படும் என்றும், 3 மாதத்துக்குள் இஸ்லாமியர்களுக்கு அயோத்திக்குள்ளேயே மாற்று இடத்தை வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து பேர் அமர்வு அளித்த தீர்ப்பில், “ 1934 ஆம் ஆண்டு கலவரங்கள் மற்றும் 1949 இல் ஏற்பட்ட பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட இடத்தில் உள் முற்றம் இருந்திருப்பதைக் காட்டுகின்றன. ஆனால் 1857 க்கு முன்னர், இந்துக்கள் உள் முற்றத்தில் வழிபடுவதற்கு தடை விதிக்கப்படவில்லை என்று ஆவணங்கள் காட்டுகின்றன. 1857 ஆம் ஆண்டில் வெ…
-
- 13 replies
- 1.9k views
- 1 follower
-
-
ஒசாமா பின்லேடன் போன்றவர்கள் தான் பாகிஸ்தானின் ஹீரோக்கள் என, அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த ஃபர்ஹதுல்லா பாபர் என்ற அரசியல் பிரமுகர் முஷரபின் பேட்டி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தேதி குறிப்பிடப்படாத அந்த வீடியோவில், காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானிற்கு வந்தவர்களை வரவேற்று, இந்திய ராணுவத்திற்கு எதிராக சண்டையிட அவர்களுக்கு பயிற்சி அளித்ததாக பர்வேஸ் முஷரப் தெரிவித்துள்ளார். மேலும், ஒசாமா பின்லேடன் மற்றும் ஜலாலுதின் ஹக்கானி ஆகியோர் தான் பாகிஸ்தானின் ஹீரோக்கள் எனவும் முஷரப் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். https://www.polimernews.com/dnews/88736/ஒசாமா-பின்லேடன்-போன்றோர்தான்-பாகிஸ்தானின்ஹீரோக்கள்-…
-
- 0 replies
- 228 views
-
-
மோடியை திருடர் என்று, ராகுல் காந்தி விமர்சித்த வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு! பிரதமர் மோடியை திருடர் என்று விமர்சனம் செய்த மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. ரபேல் வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இன்று ரபேல் தொடர்பான இரண்டு வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. ரபேல் ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்பது தொடர்பான வழக்கு தற்போது விசாரிக்கப்பட்டு முடிவிற்கு வந்துள்ளது.உச்ச நீதிமன்றம் இந்த மறுசீராய்வு வழக்கை விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இன்னொரு பக்கம் ரபேல் வழக்கில் பிரதமர் மோடியை ராகுல் கா…
-
- 0 replies
- 282 views
-
-
தெலங்கானாவில் கள்ளநோட்டு கும்பலிடம் இருந்து சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கம்மம் மாவட்டம் சத்திப்பள்ளி பகுதியை சேர்ந்த மாதர் என்பவன் தலைமையிலான கும்பல், 80 லட்சம் ரூபாய் கொடுத்தால், அதற்கு பதிலாக ஒரு கோடி ரூபாய் தருவதாக கூறி, பலரிடம் மோசடி செய்துள்ளது. பணக்கட்டுகளுக்கு மேலேயும் கீழேயும் மட்டும் உண்மையான ரூபாய் நோட்டுகளை வைத்து இடையில் கள்ள நோட்டுகள் மற்றும் வெற்று காகிதங்களை வைத்து கொடுத்து இந்தக் கும்பல் மோசடி செய்துள்ளது. ஏமாற்றப்பட்டவர்கள் யாரும் காவல்துறையினரை நாடாத நிலையில் ஒருவர் மட்டும் புகார் செய்திருக்கிறார். அவரிடம் தகவல்களை பெற்ற அம்மாநில போலீசார் மாதர் என்பவனையும், அவனது கூட்டாளிகள் ஆறு பேரையும் கைது …
-
- 0 replies
- 328 views
-
-
இந்த ஆண்டின் முதல் காலாண்டில், கடந்த ஆறு ஆண்டுகள் காணாத 5 சதவீத ஜிடிபி வீழ்ச்சி ஏற்பட்ட பின்னர், 2019 ம் ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையான மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 4.2 சதவீதமாக மேலும் சரியும் என்று எஸ்பிஐ பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர் என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 2020ம் நிதியாண்டு முழுவதும் முன்பு எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி விகிதமான 6.1 சதவீதத்திற்கு பதிலாக 5 சதவீதமாக குறையலாம். “ஆனால், 2020ம் நிதியாண்டு ஜிடிபி சரிவு உலக மந்தநிலைோடு ஒப்பிட்டு பார்க்கப்பட வேண்டும்” என்று இந்த பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட…
-
- 1 reply
- 323 views
- 1 follower
-
-
சபரிமலையில் 10 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை விழாவுக்காக கோயில் நடை திறக்கப்படுகிறது. இதனைமுன்னிட்டு 10 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் எதிர்வரும் 16 ஆம் திகதி மாலை கோயில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலை செல்லும் பக்தா்கள் நவம்பர் 17 ஆம் திகதி மாலை அணிந்து விரதம் தொடங்கவுள்ளனா். சபரிமலை கோயிலில் கார்த்திகை முதல் திகதியில் இருந்து 41 நாள்களுக்கும் தொடர்ந்து பல்வேறு சிறப்பு வழிபாடுகள் இடம்பெறும். அதிகாலையில் நிர்மால்ய பூஜை, சந்தன, நெய் அபிஷேகம் லட்சார்ச்சனை, படிபூஜை உள்ளிட்டவை தொடர்ந்து நடைபெறும். மண்டல பூஜை டிசம்பர் 27 ஆம் திகதி நடைபெறும். மண்டல கால பூஜைக்கு லட்சக்கணக்கான பக்தர…
-
- 0 replies
- 337 views
-
-
அயோத்தி தீர்ப்பு கலக்கம் தருகிறது: முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கங்குலி 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி நீதிபதி அசோக் குமார் கங்குலி, அயோத்தி தீர்ப்பு தமது மனதில் ஒரு சந்தேகத்தை உருவாக்கியுள்ளது என்றும் தாம் "மிகவும் குழம்பிப்போய் உள்ளதாகவும்" தெரிவித…
-
- 1 reply
- 650 views
- 1 follower
-
-
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான 5 ஆண்டு தடையை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டபின், விடுதலைப்புலிகள் அமைப்பு மீது மத்திய அரசு தடை விதித்தது. அதன்பின் அந்த தடை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விடுதலைப்புலிகள் மீதான தடையை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மே 14ம் தேதி மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்தது.இதுகுறித்து விளக்கம் அளித்த உள்துறை அமைச்சகம், ‘‘இலங்கை போரில் கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பு வீழ்த்தப்பட்டாலும், ஈழம் கொள்கையை விடுதலைப்புலிகள் அமைப்பு கைவிடவில்லை. இதற்காக தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு நிதிதிரட்டி வருகிறது. இந்…
-
- 3 replies
- 837 views
- 1 follower
-
-
குரு நானக்: சடங்குகளை எதிர்த்த சீக்கிய குரு பற்றிய 7 தகவல்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைEPA இன்று சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குரு நானக் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. அவர் குறித்த 7 சுவாரஸ்யமான தகவல்களை இங்கே பகிர்கிறோம். குரு நானக் ஏப்ரல் 15ஆம் தேதி 1469 ஆம் ஆண்டு பிறந்தார். ஆனால…
-
- 0 replies
- 410 views
- 1 follower
-
-
அயோத்தி தீர்ப்பும் நீதியும்! November 11, 2019 - ஆர்.அபிலாஷ் · அரசியல் / கட்டுரை அயோத்தி வழக்கில் தீர்ப்பு கூறியுள்ள உச்சநீதிமன்றம் சர்ச்சைக்குரிய (மசூதிஅமைக்கப்பட்டுள்ள) நிலத்தில் மசூதியை அகற்றி இடித்துவிட்டு அங்கு ராமர் கோயிலை எழுப்ப ஆணையிட்டுள்ளது. இந்த ஆலய நிர்மாணத்துக்கு மூன்று மாத காலக்கெடுவை விதித்து அதற்கு பொறுப்பாக ஒரு இந்து அறங்காவலர் குழுவை அமைக்கவும் அதுஅரசுக்கு ஆணையிட்டுள்ளது. மற்றொரு பக்கம் இடிக்கப்பட்ட மசூதிக்கு ஈடாக 5 ஏக்கர் நிலமொன்றில் மற்றொரு மசூதியை கட்டுவதற்கு வக்ப் அமைப்புக்கு நீதிமன்றம் அளித்துள்ளது. ஆனால், திருமாவளவன் குறிப்பிடுவதைப் போல, இந்த மசூதியை ஒன்று மையஅரசோ மாநிலஅரசோ கட்டலாம் எனச் சொல்லும் நீதிமன்றம் இதன் மூலம் கட்டுமானப்பணி…
-
- 1 reply
- 915 views
-
-
அபிநந்தன் பாகிஸ்தான் வீரர்களிடம் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை – பழி வாங்கலா? இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் பாகிஸ்தான் வீரர்களிடம் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை பாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கேலி செய்யும் விதமாக கராச்சியில் உள்ள பாகிஸ்தான் விமான படை அருங்காட்சியகத்தில் அபிநந்தனின் உருவ பொம்மை வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வீரர் ஒருவர் அபிநந்தனை சிறைப்பிடித்து அழைத்து செல்வது போன்று அது வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானப் படையைச் சேர்ந்த எப்-16 ரக விமானத்தை இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் மிக்-21 ரக விமானத்தைக் கொண்டு தாக்கி அழித்தார். இந்த ந…
-
- 0 replies
- 461 views
-
-
அயோத்தியில் இராமர் கோயில் கட்ட, ஏப்ரலில் அடிக்கல் அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதற்கு வரும் ஏப்ரலில் அடிக்கல் நாட்ட ஆர்.எஸ்.எஸ்.அமைப்பும், விசுவ இந்து பரிஷத்தும் தீவிரம் காட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இராம நவமி தினம் ஏப்ரல் மாதம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அடிக்கல் நாட்ட இந்த இரு அமைப்புகளும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விசுவ இந்து பரிஷத் அமைப்பின் உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட இராமஜென்ம பூமி நிவாஸ் என்ற அறக்கட்டளை சார்பில் இராமர் கோயில் கட்டுவதற்காக ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகின்ற நிலையில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றி பணிமனையின் பொறுப்பாளர் அன்னு பாய்சோம்புரா கூறுகையில், “இராமர் கோயிலுக்கான தூண்கள் செதுக்கு…
-
- 0 replies
- 356 views
-
-
அயோத்தி நில உரிமை வழக்கு: நவ.13-ல் தீர்ப்பு வழங்குகிறார் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்? அயோத்தி நில உரிமை வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 13-ந் தேதி தீர்ப்பு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் வழக்கு, சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கிலும் தீர்ப்பு வழங்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய நிலம் ராம் லல்லா, நிர்மோனி அகாடா மற்றும் சன்னி வக்ஃபு வாரியம் ஆகியவை சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்பது 2010-ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்…
-
- 1 reply
- 491 views
- 1 follower
-
-
"இந்திய பொருளாதாரத்தின் கறுப்புநாள் இன்று" - "ஆம், கறுப்புப் பணத்தை ஒழித்த நாள்" - ட்விட்டரை அதிர வைக்கும் நெட்டிசன்கள் 7 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைPRAKASH SINGH இந்திய அரசு, உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்களை மதிப்பு நீக்கி நடவடிக்கை எடுத்து, இன்றுடன் (நவம்பர் 😎 மூன்று ஆண்டுகள் நிறைவடைகிறது. இது…
-
- 0 replies
- 323 views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை Mail Today / getty images "திருவள்ளுவரை போலவே எனக்கும் காவி சாயம் பூசப்பார்க்கிறார்கள், நானும் மாட்ட மாட்டேன், திருவள்ளுவரும் மாட்ட மாட்டார்" என்று கூறியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். மேலும், தமிழகத்தில் சரியான ஆளுமைக்கு இன்றும் வெற்றிடம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினிகாந்த் இவ்வாறு கூறியுள்ளார். சமீபத்தில் பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் திருவ…
-
- 0 replies
- 724 views
-
-
அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளதால் மத்திய பாதுகாப்புப் படையினர் 4000 பேர் உத்தரப்பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எட்டு இடங்களில் தற்காலிக சிறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி, பாபர் மசூதி தொடர்பான 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் இம்மாத ஒரு வாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு, வன்முறைகள் எதுவும் நிகழாமல் இருப்பதற்காக உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பதற்றம் நிறைந்த இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அம்பேத்கர் நகர் மாவட்டத்தி…
-
- 0 replies
- 318 views
-