அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3272 topics in this forum
-
அயோத்தி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம். அயோத்தி நிலப் பிரச்சனையை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் இறுதி விசாரணை புதன்கிழமை (இன்று) முடிவடைந்தது. மற்ற வாதங்களை அடுத்த மூன்று நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக சமர்பிக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த 23 நாட்களுக்குள் இதன் தீர்ப்பு வெளியிடப்படும் என்று உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளதாக இந்து மகாசபையின் வழக்கறிஞர் வருண் சின்ஹா ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார். விசாரணையின் கடைசி நாளான இன்று நிர்மோனி அக்காரா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுஷி…
-
- 1 reply
- 341 views
-
-
ஹேமமாலினி கன்னத்தை போல் பளபளவென சாலை... சர்ச்சையில் சிக்கிய ம.பி. அமைச்சர். ஹேமமாலினி கன்னத்தை போல் பளபளவென புதிதாக சாலைகள் போடப்படும் என பேசி மத்திய பிரதேச மாநில அமைச்சர் பி.சி.சர்மா சர்ச்சையில் சிக்கியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜகவை எதிர்த்து பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் அங்கு ஆட்சி அமைத்திருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் அமைச்சர் பி.சி.சர்மா பாஜக எம்.பியும், நடிகையுமான ஹேமமாலினி கன்னத்தை உவமையாக கொண்டு பேட்டியளித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.சாலை பழுதடைந்துள்ளதாக வந்த புகார்களை அடுத்து ஆய்வு நடத்திய அமைச்சர் சர்மா, தற்போதுள்ள சாலைகள் குண்டும், குழியுமாக பாஜக தலைவர் விஜய்வர்கியாவின் கன்னங்களை ப…
-
- 0 replies
- 287 views
-
-
சிறுவர்களை ஆபாசமாக காணொளி எடுத்த விவகாரம் – எழுவருக்கு எதிராக வழக்கு தாக்கல்! ஜேர்மனியில் சிறுவர்களை ஆபாசமாக காணொளி எடுத்து வெளியிட்ட சர்வதேசக் கும்பலுடன் தொடர்புடைய ஏழு இந்தியர்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஜேர்மனியின் லுபெக் நகரில் சாச்சே ட்ரெப்கே என்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சோதனையில் சிறுவர் தொடர்பான ஆபாசப் படங்கள் பகிரப்படும் 29 வட்ஸ் அப் குழுக்கள் (whatsapp Group) இருந்தமை கண்டறியப்பட்டது. அதில் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 483 பேர் உறுப்பினராக இருந்தமையும் கண்டறியப்பட்டது. அதில் 7 இந்…
-
- 0 replies
- 248 views
-
-
ஆப்கானிஸ்தானுக்கு இரண்டு அதி நவீன போர் ஹெலிகொப்டர்களை வழங்கியது இந்தியா ஆப்கானிஸ்தான் இராணுவத்திற்கு இரண்டு அதி நவீன போர் ஹெலிகொப்டர்களை இந்தியா வழங்கியுள்ளது. கடந்த 2015-16ம் ஆண்டுகளில் நான்கு ஹெலிகொப்டர்களை இந்தியா வழங்கியிருந்தது. அத்துடன், அவற்றுக்கு மாற்றாக நான்கு அதிநவீன எம்ஐ-24 ரக அதி நவீன போர் ஹெலிகொப்டர்களை பரிசாக வழங்குவதாக இந்தியா உறுதியளித்திருந்தது. இந்தநிலையில் இதன் ஒருபகுதியாக கடந்த மே மாதம் 2 ஹெலிகொப்டகளை இந்தியா ஆப்கானிஸ்தானிடம் வழங்கியது. இந்தியா அளித்த உறுதியின் படி ஆப்கானிஸ்தானுக்கு வழங்க வேண்டிய எஞ்சியுள்ள இரண்டு அதிநவீன ஹெலிகொப்டர்களை இந்திய தூதர் வினைய்குமார் ஆப்கானிஸ்தான் இராணுவத்திடம் வழங்கியுள்ளார். http://athavannews…
-
- 0 replies
- 216 views
-
-
இந்தியாவுக்கு சொந்தமான நீர் பாகிஸ்தானுக்கு 70 வருஷமாக போகுது.. அதை மோடியாகிய நானே தடுப்பேன்.! டெல்லி: ஹரியானாவுக்கு வரவேண்டிய தண்ணீர் பாகிஸ்தானுக்கு போய்கொண்டிருக்கிறது அதை ஹரியானா மாநிலத்திற்கே மோடி ஆகிய நான் கொண்டுவருவேன் என ஹரியானா மாநில தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார். ஹரியானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 21-ம் தேதி தேர்தல் நடக்கிறது. அதைத் தொடர்ந்து 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. இதற்காக அங்கு ஆளும் கட்சியாக உள்ள பாஜக மற்றும் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் ஹரியானாவில் உள்ள சார்கி தாத்ரி எனும் இடத்தில் பாஜக சார்பில் நடந்த தேர்தல் …
-
- 0 replies
- 802 views
-
-
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி 'ஈஸ்டர் ஞாயிறு' தினத் தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரான் அமைப்புடன் தொடர்புடைய 127 பேர் இந்தியாவில் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு முகாமை அதிகாரி அலோக் மிட்டல் தெரிவித்துள்ளார். இந்திய தேசிய புலனாய்வு முகமையின் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இக் கூட்டத்தில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தேசிய புலனாய்வு முகமை இயக்குநர் யோகேஷ் சந்தர் மோடி உட்பட பல முக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் கலந்துகொண் டனர். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த இந்திய தேசிய புலனாய்வு முகாமை அதிகாரி அலோக் மிட்டல், சர்வதேச தீவிரவாத இயக…
-
- 0 replies
- 208 views
-
-
இந்திய பொருளாதாரம் தடுமாறுகிறது – நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி… October 15, 2019 இந்தியப் பொருளாதாரம் தடுமாற்றத்தில் இருக்கிறது. தற்போதைய புள்ளிவிவரங்களின்படி பார்த்தால், விரைவில் அது மீண்டு எழும் என்று உறுதியாக கூற முடியாது என நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார். பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, அமெரிக்கவாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொல்கத்தாவை சேர்ந்த ஊடகம் ஒன்று, அமெரிக்காவில் உள்ள அபிஜித் பானர்ஜியிடம் மேற்கொண்ட செவ்வியின்போது, இந்திய பொருளாதாரம் குறித்து கருத்து வெளியிட்ட அவர், இந்திய பொருளாதாரம் தடுமாற்றத்தில் இருக்கிறது. தற்போதைய புள்ளிவிவரங்களின்படி பார்த்தால், வ…
-
- 0 replies
- 374 views
-
-
காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் மேற்கொண்டுள்ள ‘2020 வாக்கெடுப்பு’ பிரசாரம் போலியானது என அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ஸ்வர்தன் ஷ்ரிங்லா கூறியுள்ளார். சீக்கியர்களுக்கு காலிஸ்தான் என்ற தனிநாடு உருவாக்க வேண்டும் என அம்மதத்தின் பிரிவினைவாத அமைப்பை சேர்ந்த சிலர் 1970ம் ஆண்டுகளில் இருந்தே கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதற்கு சீக்கியர்கள் இடையே கூட போதுமான ஆதரவு இல்லை. இருந்தாலும் அமெரிக்காவில் உள்ள சீக்கியர்கள் சிலர் இந்த கோரிக்கைக்கு இன்னும் உயிர் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இதற்காக உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்களிடம் ஆதரவும் கோரும் வகையில் ‘2020 வாக்கெடுப்பு’ என்ற பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள குருத்வார…
-
- 0 replies
- 247 views
-
-
இந்தியர் உள்ளிட்ட மூவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு! இந்தியாவினைச் சேர்ந்த அபிஜித் பேனர்ஜி உள்ளிட்ட மூவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அபிஜித் பேனர்ஜி, எஸ்தர் டுஃப்லோ, மைக்கேல் கிரமெர் உள்ளிட்ட மூவரே இவ்வாறு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசினை பகிர்ந்து கொள்கின்றனர். உலக அளவில் வறுமை ஒழிப்பிற்கான அணுகுமுறைகளை வழங்கியதற்காகவே இந்த நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது. அபிஜித் பேனர்ஜி கொல்கத்தாவில் பிறந்து அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/இந்தியர்-உள்ளிட்ட-மூவருக/
-
- 0 replies
- 240 views
-
-
அயோத்தி வழக்கில் இறுதிகட்ட விசாரணை இன்று! உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. மேலும் அரசியல் ரீதியில் மிகவும் முக்கியமான வழக்கு என்பதால், அயோத்தி மாவட்டத்தில் டிசம்பர் 10 ஆம் திகதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்,14 மேல்முறையீட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு மூன்று பேர் கொண்ட சமரச குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தும், தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில், நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அரசிய…
-
- 0 replies
- 223 views
-
-
அயோத்தியில் திடீர் 144 தடை.. காஷ்மீரை போலவே பாதுகாப்பு.. என்ன நடக்கிறது? அரசின் திட்டம் என்ன? சிறப்பு அதிகாரத்தை நீக்கியதன் மூலம் காஷ்மீர் பிரச்சனையை அதிரடி நடவடிக்கை மூலம் முடிவிற்கு கொண்டு வந்த பாஜக அடுத்து அயோத்தி பிரச்சனையை தீர்க்க முடிவு செய்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் தற்போது 144 தடை உத்தரவு போடப்பட்டு இருக்கிறது . அயோத்தி வழக்கு வரும் அக்டோபர் 17ம் தேதி முடிய உள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் நவம்பர் 17ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதனால் தற்போது அங்கு 144 தடையை உத்தரவு போடப்பட்டு உள்ளது. அங்க…
-
- 0 replies
- 212 views
-
-
சீன அதிபர் ஷி ஜின்-பிங் சென்னைக்கு வருவதையொட்டி சென்னையிலும் மாமல்லபுரத்திலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவரது வருகைக்கான ஒத்திகைகளும் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன. சீன அதிபர் ஷி ஜின்-பிங் 2 நாள் அரசு முறை பயணமாக வெள்ளிக்கிழமையன்று சென்னை வருகிறார். நாளை பிற்பகல் 2.10 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடையும் அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. விமான நிலையத்திலிருந்து கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர விடுதிக்குச் செல்லும் ஷி ஜின்-பிங், மாலை 4 மணி அளவில் மாமல்லபுரத்துக்கு புறப்பட்டு செல்கிறார். மாமல்லபுரத்திற்குச் செல்லும் வழியில் 34 இடங்களில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படவிருக்கிறது. மாலை …
-
- 3 replies
- 654 views
-
-
“PM Modi இதை சொல்லியிருக்கலாம்ல..?” - காஷ்மீர் பற்றி China-வின் கருத்துக்கு Congress பதிலடி! Modi - Jinping meet: இந்திய அரசுத் தரப்பு, ‘காஷ்மீர் (Kashmir) எங்கள் உள்நாட்டு விவகாரம். அதில் பிற நாடுகள் கருத்து தெரிவிக்கக் கூடாது’ என்று கூறியுள்ளது. China அரசிடம் நாம் கேட்க நிறைய இருக்கிறது என்றும் கூறி, ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி Manish Tewari. New Delhi: சீன அதிபர் ஸி ஜின்பிங் (Xi Jinping) இந்தியாவுக்கு வரவுள்ள நிலையில் சீன…
-
- 0 replies
- 409 views
-
-
ரஃபேல் போர் விமானங்களை, ஆயுத பூஜையுடன்... பிரான்சிடம் இருந்து இன்று பெறுகிறார் ராஜ்நாத்சிங்! பிரான்சிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று பெற்றுக் கொள்கிறார். ரஃபேல் போர் விமானத்துக்கு 'ஆயுத பூஜை' வழிபாடு நடத்தப்பட உள்ளது. பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ60,000 கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களைப் பெற பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2016-ல் ஒப்பந்தம் செய்தது. பிரான்சில் தயாரிக்கப்பட்ட முதல் ரஃபேல் போர் விமானம் இன்று அதிகாரப்பூர்வமாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.பிரான்ஸின் பார்டியாக்ஸ் நகருக்கு அருகே உள்ள மெரிக்னாக் விமான படை தளத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்த …
-
- 5 replies
- 559 views
-
-
இந்தியாவிற்கு சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை! இந்தியா பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ளும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா இதனைத் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் இறுதியில் 90 சதவீத நாடுகள், பொருளாதார மந்தநிலையை சந்திக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகப் பொருளாதாரமானது ஒருங்கிணைந்த மந்தநிலையைச் சந்தித்து வருவதாகவும் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா கூறியுள்ளார். பிரெக்ஸிற் மற்றும் அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தகப் போர் ஆகியவை தான் இதற்குக் காரணம் எனவும் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா தெரிவித்துள்ளார். உலக அளவில் பொருளாதார வளர்ச்சி விகிதமானது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவடைய நேரிடும் எனவ…
-
- 2 replies
- 743 views
-
-
இலங்கை – மாலைதீவு பாராளுமன்றங்களை ஒருங்கிணைத்து செயற்படுவதன் மூலம் ஆலோசனை மற்றும் பங்களிப்பை பகிர்ந்துகொள்வது தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் மாலைதீவு சபாநாயகர் முஹம்மட் நசீட்டுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று (09) மாலைதீவு பாராளுமன்றத்தில் நடைபெற்றது. சார்க் உயர்கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அங்கு பல்வேறு உயர்மட்ட கலந்துரையாடல்களில் கலந்துகொண்டார். நேற்று (08) மாலைதீவை சென்றடைந்த அமைச்சர் ரவூப் ஹக்கீமை அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் ஏ.பி. தோரதென…
-
- 0 replies
- 271 views
-
-
NDTV சேகரித்த விவரங்களின்படி கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து 111 கும்பல் தாக்குதல் (Lynching) நடந்துள்ளது. இதில் 44 பேர் உயிரிழந்துள்ளளனர். இந்த விவகாரத்தில் இந்துத்துவ அமைப்புகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. Nagpur: கும்பல் தாக்குதல் (Lynching) என்பது மேற்கத்திய கலாசாரம் என்றும், அதனை இங்கு செய்து இந்தியாவின் பெயரைக் கெடுக்க வேண்டாம் என்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கண்டித்துள்ளார். நாக்பூரில் நடைபெற்ற தசரா விழாவில் பங்கேற்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியதாவது- இந்திய அரசியலமைப்பு சட்டம் வகுத்த எல்லைக்குள் மக்கள் கட்டுப்பட்டு நடக்க வேண…
-
- 3 replies
- 926 views
-
-
இந்த தீபாவளிக்கு அனைத்து மகள்களையும் லட்சுமியாக வணங்கி கொண்டாட வேண்டும்.. மோடி .! டெல்லி: இந்த தீபாவளிக்கு அனைத்து மகள்களையும் லட்சுமியாக வணங்கி கொண்டாட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், சிறப்புப் பூஜைகளும் நாடு முழுவதும் நடந்தது.டெல்லி அருகே துவாரகாவில் நடந்த தசரா பண்டிகை கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று ராவணன் சிலை மீது அம்புவிட்டார். அதன்பின்னர் அவர் விழாவில் பேசுகையில், இந்த தீபாவளிக்கு அனைத்து பெண் குழந்தைகளையும் லட்சுமியாக பாவித்து வணங்கி கொண்டாட வேண்டும். மான் கி பாத் உரையில் நான் ஏற்கனவே க…
-
- 0 replies
- 282 views
-
-
Automatic Exchange Of Information ஒப்பந்தத்தின் மூலம் இந்த விவரத்தை சுவிஸ் வங்கி இந்தியாவுடன் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள், பெரும்பாலும் அந்த பணத்தை தங்களது சுவிஸ் வங்கி கணக்கில் வைத்திருக்கிறார்கள். எனவே கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் பட்டியலை வெளியிட வேண்டுமென எதிர்க்கட்சிகள், ஆளும் கட்சியை அவ்வப்போது கேட்டுக் கொண்டே இருக்கும். பாஜக, காங்கிரஸ் என இதில் வித்தியாசம் காண முடியாது. கேட்கும் போதெல்லாம் ஆளும் கட்சியும் ஏதாவது ஒரு பதிலை சொல்லி வைப்பார்கள். இந்தியர்கள் மட்டுமின்றி, உலக நாடுகளில் அனைத்திலிருந்தும் சுவிஸ் வங்கியில் முதலீடு செய்யப்படுகிறது. சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் டெபா…
-
- 1 reply
- 481 views
-
-
பிரபலங்கள் மீதான தேச துரோக வழக்கு : அரசுக்கு சம்பந்தமில்லை என்கிறார் பிரகாஷ் ஜவடேகர்! இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீதான தேச துரோக வழக்கில் அரசுக்கு சம்பந்தமில்லை என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சிறுபான்மையினர் மீதான வன்முறை தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இயக்குநர் மணிரத்னம் உட்பட 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினர். இதற்கு எதிராக குறித்த 49 பிரபலங்கள் மீதும் தேச துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், “49 பிரபலங்களுக்கு எதிராக மத்திய அரசு எந்த வழக்கும்…
-
- 0 replies
- 278 views
-
-
நமது விமானத்தை நாமே சுட்டு வீழ்த்தியது மிகப்பெரிய தவறு – பதாரியா நமது ஹெலிகொப்டரை நாமே சுட்டு வீழ்த்தியது மிகப்பெரிய தவறு என விமானப்படை தளபதி ரகேஷ் சிங் பதாரியா தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி பதான்கோட் தாக்குதலுக்குப் பின் நமது விமானப்படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர். அப்போது வானில் பறந்த நமது எம்ஐ-17 ரக விமானம் நம்முடைய ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த 6 விமானப்படை வீரர்களும் உயிரிழந்தனர். நமது ஹெலிகாப்டரை நாமே சுட்டு வீழ்த்தியது மிகப்பெரிய தவ…
-
- 1 reply
- 797 views
-
-
ரத்த வெள்ளத்தில் மிதந்த இஸ்ரோ விஞ்ஞானி.. கொலைக்கான காரணம் இதுதானா? கொலையாளி வாக்குமூலம் தன் பாலின உறவு வைத்துக் கொண்ட இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ் குமார், அதற்கு பேசிய படி பணம் தராததால் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கேரளாவை சேர்ந்தவர் இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ் குமார் (56). 20 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த இவர் ஹைதராபாத் அமீர்பேட்டை அன்னப்பூர்ணா குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். அவரது மனைவி இந்திரா சென்னையில் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சுரேஷ் பணிக்கு வரவில்லை. இதனால் அவருடன் வேலை செய்பவர்கள் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அவர் தொலைபேசியை எடுக்கவே இல்லை.இதையடுத்து அவரது மனைவிக்கு தகவல் கொட…
-
- 0 replies
- 218 views
-
-
கும்பல் கொலைகளுக்கு எதிராக இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு கூட்டு கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம், இந்தியாவில் நடைபெற்று வரும் கும்பல் கொலைகள் குறித்து கவலை தெரிவித்து, இயக்குநர்கள் மணிரத்னம், அனுராக் காஷ்யப் மற்றும் அடூர் கோபால கிருஷ்ணன், வரலாற்றாசிரியர் ராமசந்திர குஹா, நடிகை ரேவதி உள்ளிட்ட பலர் பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் ஒன்றை எழுதினர். அந்த கடிதத்தின் மூலம், 49 பிரபலங்கள் "நாட்டின் பிம்பத்தை களங்கப்படுத்தியதுடன், பிரதமரின் செயல்திறனைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியதுடன், பிரிவினைவாத போக்குகளை ஆதரித்ததற்காக" இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக புகார்தாரரான வழக்கறிஞர் ச…
-
- 0 replies
- 204 views
-
-
வாஷிங்டன்: இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால் ஒரே வாரத்தில் 12.5 கோடி பேர் பலியாவார்கள் என்று அமெரிக்க ஆய்வறிக்கை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள கொலராடோ போல்டர் மற்றும் ரட்ஜெர் பல்கலைக் கழகங்கள் இணைந்து `எதிர்பாராத எதிர்க்கால மோதல் மற்றும் உலக பாதிப்பு’ என்ற தலைப்பில் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வறிக்கை `சயின்ஸ் அட்வான்ஸ்’ என்ற இதழில் வெளியாகி உள்ளது. அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:தற்போதைய சூழலில் இந்தியா, பாகிஸ்தானிடம் தலா 150க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் உள்ளன. இதன் எண்ணிக்கை வரும் 2025ம் ஆண்டில் 200 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இரு நாடுகளுக்கு இடையே அணு ஆயுதப்போர் ஏற்பட்டால், 6 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த இரண…
-
- 2 replies
- 380 views
-
-
காந்தியின் உருவப்படத்தில் துரோகி என எழுதிய நபர்கள் அஸ்தியை திருடிச்சென்றனர்- மத்தியபிரதேசத்தில் சம்பவம் காந்தியின் 150 வது பிறந்தநாளை உலகம்கொண்டாடிக்கொண்டிருந்தவேளை அவரது அஸ்தியை இனந்தெரியாத நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். மத்திய பிரதேசத்தின் ரேவாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த பகுதியில் உள்ள மகாத்மாகாந்தி நினைவிடத்தில் 1948 முதல் வைக்கப்பட்டிருந்த அஸ்தியை இனந்தெரியாதவர்கள் திருடிச்சென்றுள்ளனர். மகாத்மாகாந்தியின் உருவப்படத்தில் பச்சை நிறமையினால் துரோகியெனவும் அவர்கள் எழுதிச்சென்றுள்ளனர். இந்த சம்பவம் தேசத்தின் ஐக்கியத்திற்கு ஆபத்தானது அமைதியை குலைக்ககூடியது என்ற அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாப…
-
- 0 replies
- 560 views
-