யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.
58 topics in this forum
-
மொழி ஆதிக்கம்..! ************ சிங்கள நகரமெல்லாம் சீன எழுத்துக்கு முதலிடமா.. சிங்களம் ஆங்கிலம் அதற்கு கீழே இருப்பது சிரிப்பைத் தருகிறது. ஊர் பலகையில்-தமிழ் மொழி இல்லையென்று உனக்கு மகிழ்வு இருந்தால் விரைவில்.. உன் மொழியும் அழிந்து உலக மொழியொன்று வியாபிக்கும்.. இது உண்மை. அப்போதும் உணருவாயோ தெரியவில்லை ஏனென்றால் இப்போது தேசத்தின் கீதம் கூட குயிலாக இருந்தாலும் மயிலாக இருந்தாலும் சிங்கம் போலத் தான் கர்ச்சிக்க வேண்டுமாமே. உன்நாட்டில்.. அன்புடன் -பசுவூர்க்கோபி-
-
-
- 7 replies
- 1.3k views
-
-
அன்று போருக்கும் போராடியவர்களுக்கும்.. அதற்கு துணை நின்றவர்களுக்கும் கை தடியாய் நின்றது யாழ். இன்று போர் செய்தவர்களும் இல்லை, போராடியவர்களும் இல்லை.. போராட்டுத்துக்காக குரல் கொடுத்தவர்களும் இல்லை. கைத்தடி மட்டும் தனியே நிற்கிறது. கை தாங்கலாய் போராட்டத்தை தாங்கியவர்கள் எல்லோருமே உடலாலும் மனதாலும் கை கால் இழந்து நிற்கின்றனர், இழந்தது மட்டும் இல்லை அது தரும் வலியைகூட வெளியே சொல்ல முடியாமல் அவஸ்தை படுகின்றனர். பலர் நம்பிக்கையிழந்து இந்த மாற்று திறனாளி வாழ்வு இனிமே வேண்டாம் என்று ஓடியே போய்விட்டனர். சிலர் மாற்றங்கள் இனிமேலும் வரும் என்ற ஒற்றை புள்ளி நம்பிக்கையில் இந்த கைதடியை பிடித்தபடி காலம் கழிக்கின்றனர். அன்று நமக்கெதிராய் சிவப்பு புள்ளி உயிர் செலவா…
-
-
- 17 replies
- 2.6k views
- 1 follower
-
-
முற்குறிப்பு: சிலருக்கு வாசிக்கும் போது சங்கடமாக இருக்கலாம் கதை: வழக்கமாக ராசுக்குட்டி சுச்சு போகின்றபோது ஒரு பாட்டை விசிலடிச்சுக் கொண்டோ, இல்லை ஊரில சுவரில் எட்டுப் போட்ட காலத்தை நினைச்சுக் கொண்டோ அல்லது விட்டத்தை பார்த்துக் கொண்டோ தான் போவது வழக்கம். ஆனால் அன்றைக்குப் பார்த்து ஏதோ ஒரு நினைவில் போய் கொமர்ட்டில் (commode) நீரில் கலந்தும் கலக்காமலும் விட்ட சுச்சுவை உற்றுப்பார்த்து வினையை தேடிக்கொண்ட கதைதான் இப்ப நான் சொல்லப் போற கதை. உற்றுப்பார்த்த ராசுக்குட்டிக்கு திடுக்கிட்டுப் போனார். சிவப்பாக ஒன்றிரண்டு துளிகள் சின்னஞ் சிறு வட்டங்களாக மிதந்து கொண்டு இருந்ததை கண்டு வெலவெலத்துப் போனார். ஐயய்யோ சுச்சுவில் இரத்தம் கலந்து வருகின்றதோ என்று ஆடிப்போயிட்டார். வாழ…
-
-
- 45 replies
- 5.3k views
- 2 followers
-
-
லொக்டவுண் வதனிக்கு அதிகாலையிலேயே விழிப்பு வந்து விட்டது. பக்கத்தில் தூங்கிக்கொண்டிருந்த நந்தனை திரும்பிப் பார்த்தாள் நல்ல தூக்கம். இன்று சனிக்கிழமை வேலையில்லாததால் அசந்து தூங்கிக்கொண்டிருந்தான். இப்பொழுதெல்லாம் இந்த லொக்டவுணால் வீட்டில் இருந்தேதான் வேலை செய்கிறார்கள். வீட்டில் வேலை செய்வதென்பது இலேசான காரியமில்லை. வேலையிடத்துக்கு போனோமா வேலை செய்தோமா நாலு நண்பர்களுடன் அரட்டை அடித்து வெளி உலகம் பார்த்து கடைக்கு போய் மாலையில் பிள்ளைகளுடன் விளையாடி என்று இருந்த காலம் மாறி இப்பொழுதெல்லாம் வீடே கதி என்று வீட்டின் சுவர்களுக்குள்ளேயே முட்டி மோதி பேசிக்கொண்டு சீ இதென்ன வாழ்க்கை? அடிக்கடி மனதுக்குள் அங்கலாய்ப்;பு ஏற்பட்டாலும் இதுவும் கடந்து போகும் என்று மனதைத் தேற்றி…
-
-
- 33 replies
- 4k views
- 1 follower
-
-
வளர்ந்து வா மகனே ! - சுப.சோமசுந்தரம் தமிழக தேர்தல் 2021 முடிவு வருமுன் அவசரம் அவசரமாக அனைத்துக் கட்சிக் கூட்டம் எனும் பெயரில் கூடி, ஆக்ஸிஜன் மட்டும் தயாரிக்க அனுமதிக்கலாம் எனப் பம்மாத்து வேலையாக ஸ்டெர்லைட்டைத் திறக்க வழி செய்த அனைத்துக் கட்சித் துரோகத்தை எழுதிய சிறிய பதிவு. சில காலம் முன்பு நிகழ்ந்த ஒரு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போராட்டத்தின் பின்னணியில். வளர்ந்து வா மகனே! நீயே இப்போது விடிவெள்ளி. நீயென்பது ஓட்டுக் கட்சிகளால் இன்னும் மூளைச்சலவை செய்யப்படாத உன் தலைமுறையினர். நாங்கள் பாசிசவாதிகளையும் அடிமைகளையும் என்றுமே நம்பியதில்லை; அதனால் அவர்கள் எங்களை ஏமாற்றவில்லை. முழுமையாக இல்லாவிட்டாலும் ஏதோ ஒட்டுப் போட்ட திராவிடக் கட்சி, நொண்டி ந…
-
- 0 replies
- 1.6k views
- 1 follower
-
-
ஈழத்தமிழினத்தின் இனறைய நிலையை எவ்வாறு புரிந்து கொள்வது?? எந்தவகையில் நீ போராடினாலும் எந்த வகையிலும் நீ கவனிக்கப்படமாட்டாய் இது சிறீலங்கா சொல்வதல்ல உலகம் ஏன் மக்களை காப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஐநா சொல்வது? இன்றைய ஈழத்தமிழினத்தின் மௌனநிலை என்பதும் கூட மற்றவர்களால் கேட்கப்பட்டு அல்லது தேவைப்பட்ட ஒன்றல்ல ஈழத்தமிழினம் தன்னால் இதற்கு மேல் அழிவை சந்திக்கமுடியாது இதற்கு மேலும் தன்னிடம் போராடும் வலு கிடையாது என்பதனால் வந்தது அப்போ ஈழத்தமிழினத்தின் அடுத்த கட்டம் என்ன?? மீண்டும் உண்ணாவிரதம் ஊர்வலங்கள்? ஒன்றை மதிப்பவரிடம் அல்லது மனித மாண்புகளை கொண்டோரிடம் நாம் பரீட்சிக்கவேண்டியவை இவை கொலைகாரர்களி…
-
-
- 24 replies
- 3.1k views
-
-
அன்பான யாழ் உறவுகளுக்கு.. எனது இந்த கவிதை முனைவர் முபா ஐயா அவர்கள் தமிழ் நாடு புதுக்கோட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படித்திருந்தார் அவர்களுக்கு நன்றிகள். பார்கின்ற உங்களுக்கும் நன்றிகள்.
-
-
- 4 replies
- 2.3k views
-
-
நான் ஐரோப்பிய நாட்டுக்கு வந்து முதல்,முதல் கொட்டிப்பார்த்த.. வெண்பனித்தூறல் நான் பிறந்த மண்ணின்(ஈழம்) வாசனையே என்னுக்குள் வந்து எழுத வைத்தது. வெண்பனித்தூறல்..! ***************** மார்கழி தொடங்கிவிட்டால் வானம் மந்திரித்துக் கொட்டுமிந்த-வெண்மைநிற தேங்காய்த் துருவலோ? தேசமெல்லாம் பூத்திருக்கும் மல்லிகையோ!முல்லையோ! வெள்ளை நிற றோஜாவோ? வெண்தாமரை இதழ்தானோ-ஏன் கடல் களைத்து கரையொதுங்கும் நுரையலையோ.. கண்சிமிட்டிக் கொட்டுகின்ற விண்மீனோ.. வெட்டுக்களி எழுப்பும் வெண்புளுதிப் படலமோ வெற்றிலைக்கு போட்டுமெல்லும் வெண்நிறத்துச் சுண்ணாம்போ பாலாறு ஓடி தயிர் படிந்து உறைந்ததுவோ ப…
-
-
- 9 replies
- 1.5k views
-