நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3021 topics in this forum
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,முருகேஷ் மாடக்கண்ணு பதவி,பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கல்லீரல் அழற்சி எனப்படும் ஹெபடைடிஸ் தொடர்புடைய பாதிப்புகள் காரணமாக ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பதாகவும் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 30 லட்சம் பேர் கல்லீரல் அழற்சி பாதிப்புக்கு உள்ளாகுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஹெபடைடிஸ் பாதிப்பை நாம் சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால், 2040ஆம் ஆண்டளவில் எச்.ஐ.வி, காசநோய் மற்றும் மலேரியா இறப்புகளை விட ஹெபடைடிஸ் காரணமாக ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கி…
-
- 0 replies
- 671 views
- 1 follower
-
-
ஒன்றோடொன்று பேசிக்கொள்ளும் மனித உடல் உறுப்புகள் மனித உடல் உறுப்புக்கள் ஒன்றோடு ஒன்று சமிக்ஞைகள் வாயிலாப் பேசிகொள்வதாக சென்னை ஐ.ஐ.டி.யின் உயிரியல் துறை பிரிவின் ஆராய்ச்சியாளர் மணிகண்ட நாராயணன் தெரிவித்துள்ளார். மல்ட்டிசென்ஸ் என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள மருத்துவ ஆய்வறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.குறித்த ஆய்வறிக்கையின் படி ” மூளை மற்றும் வயிறு ஒன்றோடொன்று ஜீன் மூலம் பேசிக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மனித உடலை பொறுத்தவரை சுமார் 20 000 க்கும் மேற்பட்ட ஜீன்கள் உள்ளன. இந்த ஜீன்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் வேலை செய்வதில்லை. அது ஒவ்வொரு உறுப்பின் தேவைகளை அறிந்து தங்களது பணிகளை செய்கின்றன. இதன்மூலம் அனைத்து உடல் உறுப்புகளு…
-
- 0 replies
- 1.2k views
-
-
அல்சைமர் நோய்க்கான மருந்து கண்டுபிடிப்பு அல்சைமர் நோய்க்கான சிகிச்சையாக அமெரிக்க மருந்து நிறுவனம் ஒன்று டொனனெமாப் என்ற புதிய மருந்தை உருவாக்கியுள்ளது. அல்சைமர் நோய் படிப்படியாக மனித நினைவாற்றலைக் குறைக்கும் தன்மை கொண்டது. இந்த மருந்து பயன்பாடு சுமார் 60 சதவிகிதம் மெதுவாக்கும் என்று ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. நோயின் ஆரம்ப கட்டத்தில் மூளையில் படிந்திருக்கும் புரதத்தை இந்த மருந்தைப் பயன்படுத்துவதன் மூலம் அகற்ற முடியும் என்பதும் தெரியவந்துள்ளது. ஆனால், மரபணு காரணங்களால் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 40 சதவீதம் பேருக்கு பக்கவிளைவாக மூளை வீக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக மற்ற பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. http…
-
- 0 replies
- 689 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 16 ஜூலை 2023, 11:05 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தி தொடர்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை டெபினா பானர்ஜி தனது இரண்டாவது மகள் திவிஷாவை 'அதிசய குழந்தை' என்று அழைக்கிறார். டெபினா பானர்ஜி தனது பல நேர்காணல்களில் தனது இரண்டாவது கர்ப்பத்தை தன்னால் நம்ப முடியவில்லை என்று கூறியுள்ளார். திவிஷாவின் பிறப்பு அவருக்கு ஒரு அதிசயம் போன்றது. அவருக்கு ஏப்ரல் 2022 இல், முதல் மகள் லியானா செயற்கை கருத்தரிப்பு முறைகளில் ஒன்றான ஐ.வி.எப் (In Vitro Fertilization) தொழில்நுட்ப முறையில் பிறந்தார். சில நாட்களுக்குப் பிறகு அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமானார். இந்த கர்ப்பம் முற்றிலும் …
-
- 0 replies
- 306 views
- 1 follower
-
-
உணவு சுவையூட்டி குறித்து WHO எச்சரிக்கை! அஸ்பார்டேம் என்பது உணவு மற்றும் பானங்களில் பயன்படுத்தப்படும் ஒரு செயற்கை இனிப்பு சுவை ஆகும். குறைந்த சர்க்கரை இனிப்பு பானங்கள் மற்றும் குறைந்த சர்க்கரை உணவுகள் தயாரிப்பில் இந்த இனிப்பு அதிகம் பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், அஸ்பார்டேம் என்ற செயற்கை இனிப்பு மூலம் மனித உடலில் கடுமையான புற்றுநோயை உண்டாக்கும் செல்கள் வளரக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. உலகின் முன்னணி நிறுவனமொன்று செயற்கை சுவையூட்டும் முகவர் தொடர்பில் இவ்வாறு வெளிப்படுத்துவது இதுவே முதல் முறை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2023/1339399
-
- 1 reply
- 663 views
- 1 follower
-
-
இஸ்ரேல் மருத்துவர்கள் 12 வயது சிறுவனுக்கு மிகவும் அசாதாரணமான மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சையை செய்து கிட்டத்தட்ட அதிசயம் நிகழ்த்தியுள்ளனர். சுலைமான் அச்சன் என்ற அந்தச் சிறுவன், சைக்கிள் ஓட்டிச் சென்றபோது அவன் மீது கார் மோதியுள்ளது. இதில் அவனது தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. தசைநார்கள் கிழிந்து முதுகுத்தண்டின் மேற்பகுதியிலிருந்து அவரது மண்டை ஓடு பிரிந்து விட்டது. கிட்டத்தட்ட அவனது கழுத்து துண்டான நிலைதான் இருந்துள்ளது. விபத்து ஏற்பட்ட உடனேயே அந்தச் சிறுவன் விமானம் மூலம் ஹடாசா மருத்துவ மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளான். பின்னர் நீண்ட அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவர்கள் மிகக் கடுமையாக முயற்சி செய்து மரணத்தின் விளிம்பில் இருந்து …
-
- 0 replies
- 434 views
- 1 follower
-
-
சிறு குழந்தைகள் ஆனாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி, மழை வரும்போது அதில் நனைய வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். அதேபோல், எப்போதுமே இருக்கும் மற்றொரு விஷயம், மழையில் நனைவது உடலுக்கு நல்லதா கெட்டதா என்ற குழப்பம். மழையில் நனைந்தால் காய்ச்சல் வரும், சளி பிடிக்கும் என்று சொல்லி நம் அனைவரும் ஒருமுறையேனும் மழையில் நனைவதிலிருந்து தடுக்கப்பட்டிருப்போம். ஆனால், சமீப காலமாக மழையில் நனைவது நன்மை தரும், அதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும் என்று பல்வேறு கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன. இவற்றில் எது சரி? இந்தக் கூற்றுக்களில் எவ்வளவு உண்மை இருக்கிறது? இக்கேள்விகளுக்கு பதில் தெரிந்துகொள்ள, தொற்றுநோயியல் நிபு…
-
- 0 replies
- 400 views
-
-
கல்லீரல்: நீரிழிவின் நடுநாயகம் "In Buckingham Palace, the butler is more powerful than the King" "பக்கிங்ஹாம் அரண்மணையில், அரசரை விட பற்லருக்கு பவர் அதிகம்" – ஒரு உள்ளூர் பிரிட்டிஷ் சிலேடை. இப்படிப் பட்ட ஒரு பற்லரைப் பற்றி இன்று பேசுவோம். நீரிழிவு தொடர்ந்து நிலைக்கவும், அதன் விளைவுகள் உடலைப் பாதித்து ஏனைய பக்க விளைவுகளைக் கொண்டு வரவும் அவசியமான கல்லீரல் பற்றிப் பேசுவது நீரிழிவைப் புரிந்து கொள்ள உதவும். கல்லீரலின் தொழில்கள் எவை? கல்லீரலுக்கு எங்கள் உடலில் பெரிதும் சிறிதுமாக பல தொழில்கள் இருக்கின்றன. முக்கியமாக, கல்லீரல் உடலின் அனுசேபத்தோடு தொடர்பான அங்கம். இதனால் தான் அது நீரிழிவிலும் பெரிய பங்கை வகிக்கிறது. ஆனால், கல்லீரலின் பல தொழில்கள் உடல…
-
- 9 replies
- 1.4k views
-
-
மருத்துவ குணம் நிறைந்த கற்பூரவல்லியை, நமது முன்னோர்கள் துளசியுடன் சேர்த்து வளர்த்து வந்தார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடலில் உண்டாகும் கபத்தை நீக்கும் சக்தி கொண்டது கற்பூரவல்லி. மழையும், வெயிலும் மாறி மாறி தோன்றும் பருவகாலத்தில் சளி, இருமல், தொண்டையில் கிருமித்தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படும். இவை அனைத்துக்கும் சிறந்த தீர்வாக இருப்பது கற்பூரவல்லி. இது கொடுக்கக்கூடிய மருத்துவப் பலன்கள் ஏராளம். வீட்டில் எளிதாக வளரக்கூடிய மூலிகைப் பொருட்களில் கற்பூரவல்லியும் ஒன்று. . மருத்துவ குணம் நிறைந்த கற்பூரவல்லியை, நமது முன்னோர்கள் துளசியுடன் சேர்த்து வளர்த்து வந்தார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடலில் உண்டாகும் கபத்தை நீக்கும் சக்தி…
-
- 1 reply
- 767 views
- 1 follower
-
-
நீரிழிவும் எங்கள் நரம்புகளும் “Magic is organizing chaos” "குழப்பத்தை ஒழுங்கமைப்பது தான் மாயாஜால வித்தை" - The Witcher தொடரில் ஒரு பாத்திரம். என்னுடைய நண்பர் ஒருவருக்கு அடிக்கடி சமிபாட்டுப் பிரச்சினை, வாய்வு என்பன ஏற்படும். இவை ஏற்படும் சமயங்களிலெல்லாம் நீரிழிவு நோயாளியான அவரது இரத்த குழுக்கோஸ் அதிகரிக்கும். என்ன காரணத்தினாலோ, தனது சமிபாட்டுப் பிரச்சினையினால் தான் குழுக்கோஸ் அதிகரிக்கிறது, நீரிழிவுக் குணம் காட்டுகிறது என அவர் நம்ப ஆரம்பித்தார் (இதற்கு சமூக வலை ஊடகங்களில் பரவும் போலி மருத்துவத் தகவல்களும் காரணமாக இருக்கக் கூடும்). இதை அவரது மருத்துவரிடமும் கூறி, சமிபாட்டுப் பிரச்சினையை முதலில் தீர்த்தால் தனது நீரிழிவு மருந்தைக் குறைக்கலாம் என்று ஆலோசன…
-
- 9 replies
- 1.3k views
- 1 follower
-
-
இறந்தவர் இதயத்தை மீண்டும் துடிக்க வைக்கும் தொழில்நுட்பம் - 'இயற்கைக்கு விரோதமானது' என விமர்சனம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பி.ஆர்.என். நுட்பம் இதயத் துடிப்பை மீட்டெடுப்பதன் மூலம் இறந்த நபரை இயற்கைக்கு முரணாக உயிர்ப்பிக்கிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், செசீலியா பாரியா பதவி, பிபிசி நியூஸ் 13 நிமிடங்களுக்கு முன்னர் மருத்துவ உலகில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை கண்டுபிடிக்கப்பட்டது பெரிய புரட்சியாக அமைந்தது. அதனால் நாள்தோறும் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்…
-
- 0 replies
- 341 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ராபெர்ட்டா ஆங்லெனு பதவி, பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் நமது உடலில் ஏற்படும் கட்டிகள் மற்றும் அவற்றைச் சுற்றிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் நுண்ணுயிரிகளான பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளைப் புரிந்துகொள்வது, புற்றுநோய் எவ்வாறு உருவாகிறது என்பது மட்டுமல்லாமல் அதற்கு எவ்வாறு சிகிச்சையளிப்பது என்பதைப் புரிந்துகொள்வதற்கும் உதவியாக இருக்கலாம். நாம் வாழும் போது, நமது உடலில் ஏராளமான பிற நுண்ணுயிர்களும் வாழ்ந்துவருகின்றன. உடல் உறுப்புக்களான குடல் , வாய், மூக்கு மற்றும் தோல் ஆகியவை பல்வேறு வகையான நுண்ணுயிரிகளின் வாழ்விடங்களாக உள்ளன. அவை நம் ஆரோக்க…
-
- 0 replies
- 271 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாதிக்கப்பட்ட குழந்தைகள் பலவித அறிகுறிகளை வெளிப்படுத்துவார்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,ஃபெர்னாண்டா பால் பதவி,பிபிசி செய்திகள் 2 ஜூலை 2023 "முதல் முறை இந்த அனுபவம் ஏற்பட்டபோது, அவன் மயக்கத்தில் இருந்ததாகவே நான் உணர்ந்தேன். அதனால் அவனை எழுப்ப முயன்றேன். அமைதியாக இருக்கச் சொன்னேன். ஆனால், அவன் வேறு ஏதோ ஒரு உலகில் மிகத்தொலைவில் இருந்ததைப் போல் நடந்துகொண்டான்." சாண்டியாகோ டி சிலியில் வசிக்கும் ஒலிவியா கார்சியா 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தனது மகன் ஜுவான் - அப்போது 4 வயது - இரவு நேரத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையி…
-
- 0 replies
- 339 views
- 1 follower
-
-
“அதிகமான மக்கள் குறிப்பாக மேற்குலக நாட்டைச் சேர்ந்தவர்கள், ஒரு முக்கியமான வேலையை தவறாகச் செய்து கொண்டு வருகிறார்கள்” இப்படி சமூக வலைத்தளத்தினூடாகச் சொல்லி அதற்கான விளக்கங்களையும் தந்திருக்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு வைத்திய நிபுணர். பிரிட்டிஷ் சுகாதாரத் திணைக்களத்தில் சத்திரச் சிகிச்சை நிபுணராகப் பணியாற்றும் வைத்தியர் கரண் ராஜன், தரை மட்டத்தில் உள்ள கழிப்பறையில்தான் உண்மையில் அற்புதமான ஒரு குவியலைக் காண முடியும் என்றும் இந்த நிலை சீனா முதல் பாகிஸ்தான் வரையிலான ஆசிய நாடுகளில்தான் இருக்கிறது என்றும் கூறுகிறார். குந்தி இருப்பது கொஞ்சம் சிரமமாக இருக்கலாம் , ஆனால் இது மிக வேகமாக மலத்தை வெளியேற்ற உகந்தது மட்டுமல்ல, ஆரோக்கியமானதும் கூட உதாரணமாக இது மூல நோய்…
-
- 6 replies
- 1.1k views
- 1 follower
-
-
உடற்பருமனால் கவலைகொள்பவர்களுக்கு நற்செய்தி உடற்பருமன் என்பது வயது வித்தியசமின்றி உலகம் முழுவதும் உள்ள ஒரு பொதுவான பிரச்சினையாக உள்ளது. உடற்பருமனைக் குறைக்க பல்வேறு மாத்திரைகள் இருந்தாலும், பெரும்பாலான சிகிச்சைக்கு ஊசி வழி மருந்துகளே பரிந்துரைக்கப்படுகிறன. இவை சிகிச்சையைப் பெற்றுக் கொள்பவர்களுக்கு மிகுந்த வலியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்நிலையில் உடல் பருமனைக் குறைக்க வெகோவி” (Wegovy) என்ற வீரியம் மிக்க மாத்திரையொன்றை டென்மார்க்கைச் சேர்ந்த நோவோ நோர்டிஸ்க் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. “ஜி.எல்.பி.-1 அகனிஸ்ட்” எனப்படும் ஒரு புதிய மருந்து வகையில், “ஸெமாக்ளூடைட்” எனும் மூலப்பொருள் கொண்டு குறித்த மாத்திரை தயாரிக்கப்படுவதாகத் தெரிவிக்க…
-
- 0 replies
- 468 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,முருகேஷ் மாடக்கண்ணு பதவி,பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் விட்டிலிகோ என்று அழைக்கப்படும் வெண்புள்ளி என்பது சருமம் சார்ந்த ஒரு நோய். வெண்புள்ளி தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 25ஆம் தேதி உலக வெண்புள்ளி தினமாகக் (World Vitiligo Day) கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கருபொருள் `விட்டிலிகோ- எதிர்காலம் குறித்து பார்ப்பது` என்பதாகும். தேசிய சுகாதார நிறுவனங்களின் (NIH) கூற்றுப்படி, இந்தியாவில் வெண்புள்ளி பாதிப்பு 0.25% முதல் 4% வரை உள்ளது. குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இந்த பாதிப்பு 8.8 ச…
-
- 0 replies
- 270 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 20 ஜூன் 2023, 05:51 GMT புதுப்பிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர் லண்டனில் உள்ள பல்கலைக்கழக கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் வழக்கமாக அவ்வப்போது சிறிது நேரம் தூங்குவது மூளைக்கு மிகவும் நல்லது என்றும், அதனால் மூளை சுருங்குவதை நீண்ட காலத்துக்கு தடுக்க முடியும் என்றும் தெரியவந்துள்ளது. இது போல் தூங்குபவர்களின் மூளை வழக்கமாக இருப்பதைவிட 15 கன சென்டி மீட்டர் பெரிதாக இருப்பதாகவும், இதனால் அவர்களின் வயது 3 முதல் 6 ஆண்டுகள் குறைவாகத் தோன்றுவதாகவும் இந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இது போல் தூங்கும் போது, அது அரைமணிநேரத்துக்குக் குறைவான தூக்கமாக இருக்கவேண்டும் என வி…
-
- 7 replies
- 739 views
- 1 follower
-
-
சமையலுக்கு எந்த எண்ணெய் சிறந்தது? Which Oil is Best for Cooking? (Tamil) Dr.P.Sivakumar உடல் நலத்திற்கு சிறந்த மற்றும் கேடு விளைவிக்கும் சமையல் எண்ணெய் எது? (Tamil) Dr.P.Sivakumar
-
- 1 reply
- 597 views
-
-
நான் இதை ஆங்கில மருத்துவர்களை விமர்சிப்பதற்காக கேட்கவில்லை. இது ஒரு எளிய சந்தேகம் மட்டுமே. சில உடற்பிரச்சினைகளுக்கு எளிய வீட்டுத்தீர்வுகள் இருக்கையில் ஏன் ஆங்கில மருத்துவர்கள் விலைமதிப்பான களிம்பு, மாத்திரைகள் போன்றவற்றை வாங்கி பயன்படுத்தக் கோருகிறார்கள்? தோலில் வரும் பூஞ்சான் தொற்றை எடுத்துக் கொண்டோம் என்றால் அதற்கு வேப்பெண்ணெய் மிகச்சிறந்த உடனடி தீர்வு. ஆனால் எந்த ஆங்கில மருத்துவரும் அதைப் பரிந்துரைத்து நான் கண்டதில்லை. உடனடியாக சில மாத்திரைகள், களிம்புகள் என ஆயிரம் ரூபாயாவது நம்மை செலவு பண்ண வைத்துவிடுவார்கள். இதே போலத்தான் உணவு ஒவ்வாமையால் வரும் நுரையீரல் பிரச்சினைகள். என்னுடைய மாணவர் ஒருவருக்கு அவர் உண்ட ஓட்டல் உணவினா…
-
- 1 reply
- 587 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ஜானெட் ரோட்ரிக்ஸ் பல்லேரஸ் பதவி,தி கான்வர்சேஷன்* 3 மணி நேரங்களுக்கு முன்னர் 1970 ஆம் ஆண்டு மார்ச் மாதம்… அமெரிக்காவின் பிரபல நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான ராபர்ட் ஜே. ஒயிட், கிளீவ்லேண்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் வழக்கத்திற்கு மாறான அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொண்டார். குரங்கு ஒன்றின் தலையை எடுத்து மற்றொன்றின் உடலில் பொருத்துவதுதான் அது. சிக்கலான அந்த அறுவை சிகிச்சை, கிட்டத்தட்ட 18 மணி நேரம் நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அந்த குரங்கு கண் விழித்தவுடன் அதனால் பார்க்கவும், நுகரவும், ஏன் கடிக்கவும் கூட முடிந்தது. குரங்கிற்கு மேற்கொள…
-
- 1 reply
- 403 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,மருத்துவர் பிரதீபா லக்ஷ்மி பதவி,பிபிசிக்காக 11 ஜூன் 2023, 05:34 GMT புதுப்பிக்கப்பட்டது 38 நிமிடங்களுக்கு முன்னர் ஆந்திராவின் விஜயநகரத்தில் அண்மையில் நடந்த நிகழ்வு ஒன்று சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. தனது மகளை கதாநாயகியாக்க வேண்டும் என்று விரும்பிய பெண் ஒருவர் மகளுக்கு ஹார்மோன் ஊசிகளைச் செலுத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத மகள் இதுதொடர்பாக குழந்தைகள் உதவி எண்ணுக்குத் தொடர்புகொண்டு கூறியதையடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தற்போது சிறுமி, அரசு பாதுகாப்பு காப்பக்கத்தில் உள்ளார். பணம…
-
- 0 replies
- 220 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 6 ஜூன் 2023, 13:00 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரேயொரு ரத்தப் பரிசோதனையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வகையான புற்றுநோய்களை கண்டறியும் பரீட்சார்த்த முயற்சியில் நேர்மறையான முடிவுகள் கிடைத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர் பிரிட்டன் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளைச் சேர்ந்த, புற்றுநோய் அறிகுறிகளுடன் தங்களின் பொதுநல மருத்துவர்களை அணுகிய 5,000 பேர்களிடம், ‘கெலரி’ (Galleri) என்று அழைக்கப்படும் இந்த ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மூன்றில் இரண்டு வகை புற்றுநோய்கள் சரியாக அடையாளம் காணப்பட்டுள்ளன. கெலரி ரத்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட…
-
- 1 reply
- 295 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 5 மணி நேரங்களுக்கு முன்னர் பிரபல ஹாலிவுட் நடிகரான அல் பசினோ, தான் தந்தையாகியிருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். அவருடைய வயது 83! இவர் தன்னுடைய 29 வயது காதலி நூர் அல்ஃபல்லாவுடன் தன்னுடைய குழந்தையை பெற்றிருக்கிறார். முன்னதாக மற்றொரு ஹாலிவுட் நடிகரான 79 வயது ஆல்பெர்ட் டி நிரோவும், தான் தந்தையாகி இருப்பதை கடந்த மாதம் அறிவித்தார். இந்த உலகில் முதுமையான வயதில் குழந்தை பெற்றுக்கொண்டது இவர்கள் மட்டுமல்ல. இதற்கு முன்னதாக எத்தனையோ பேர் முதுமையில் பெற்றோர்கள் ஆகியிருக்கின்றனர். குறிப்பாக அமெரிக்காவில் நடிகர்கள், இசைத்துறையைச் சார்ந்தவர்கள், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகள் கூட தங்களுடைய வாழ்க்கையில் மிக தாமதமான வயதி…
-
- 18 replies
- 1.3k views
- 1 follower
-
-
4 மணி நேரங்களுக்கு முன்னர் உலகில் அறியப்பட்டுள்ள, ’இரண்டு மரபணு பிறழ்வுகளை’ கொண்டிருக்கும் ஒரே நபர் ஜோ கேமரூன் ஆவார். இதன் காரணமாக அவர் கிட்டத்தட்ட வலியை உணர்வதில்லை மற்றும் எந்த காயம் ஏற்பட்டாலும் விரைவிலேயே குணமடையும் திறனையும் அவர் பெற்றுள்ளார். பிறழ்வுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்களுக்கு 10 ஆண்டுகள் தேவைப்பட்டன. 2013 ஆம் ஆண்டில் அப்போது 65 வயதாக இருந்த அவரது கையில் ஒரு வழக்கமான அறுவை சிகிச்சை செய்யப்பட்டபோது, ஒரு மரபணு பிறழ்வு கண்டுபிடிக்கப்பட்டது, இது அவரது வலி உணர்திறன் இல்லாமையை விளக்கியது. "என் கையில் மூட்டுவலிக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். நான் மயக்க மருந்து நிபுணரிடம் பேசிக் கொண்டிருந்தேன். இது …
-
- 1 reply
- 518 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யாரோ உடன் இருப்பது போன்ற உணர்வு நிலையில் இருப்பவர்கள், மனநோயாளிகள், பார்கின்சன் நோய்க்கு ஆளானவர்கள் போன்றவர்களுடனும் தொடர்புடையது. 5 மணி நேரங்களுக்கு முன்னர் அதிக மனஅழுத்தம் அல்லது மலையேற்றம் போன்ற அதிதீவிர செயல்களில் இருக்கும்போது மனிதன் தன்னுடன் வேறு யாரோ இருப்பதை போல உணர்கிறான். இது மாயத்தோற்றம் இல்லையென்றால் உண்மையில் என்ன? கடந்த 2015 இல், லூக் ராபர்ட்சன் அண்டார்டிகாவில் தனியாக பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தார். அப்போது பரந்து விரிந்த அந்த பகுதியில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பனியும், பனிக்கட்டிகளுமாகவே காட்சி அளித்தன. தென் துரு…
-
- 0 replies
- 439 views
- 1 follower
-