நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
காயத்ரி மந்திரம் மருத்துவரீதில் சிறந்தது தான் விஞ்ஞான ரீதியில் பார்த்தாலும் இது மிகப் பெரும் உடற்பயிற்சி தான். விளக்கம் அடியில் இருக்கிறது. ஓம் பூர் புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோன: ப்ரசோதயாத் என்று ஆரம்பிக்கும் இம் மந்திரத்தில் ஏதோ சக்தி இருக்கிறது என்பதை கட்டாயம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இதை முறையாக ஒரு முறை செய்து பார்த்தால் வாழ்வில் வரும் மாற்றங்களை வைத்து நீங்கள் உணரலாம். சமைப்பதென்றால் கூட ஒரு முறையிருக்கிறதல்லவா. அப்படித்தான் இதுவும். இதற் கென்றொரு முறையிருக்கிறது. இம் மந்திரத்தை விசுவாமித்திர முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின் ) மூன்றாவது மண்டலத்தில் (3.62.10 உள்ள ஒரு அருட்பாடல் …
-
- 0 replies
- 967 views
-
-
ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும் வேதிப் பொருள் மிளகாயில்.. காரசாரமான உணவிற்கு முக்கிய காரணமாய் இருப்பது மிளகாய். நமது சமையலில் மிளகாய்க்கு சிறப்பான இடம் உண்டு. இது ஊசி மிளகாய், குண்டு மிளகாய், குடமிளகாய் என மூன்று வகைகளைக் கொண்டது. இவை காரத்தன்மையால் வேறுபடுகின்றன. குடமிளகாய் காரம் குறைந்தது. இத்தாவரத்தின் காய் சமையலுக்கும், கனிந்த கனிகள் மற்றும் விதைகள் நறுமணப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் இத்தாவரத்தில் ஒலியோரெசின், கேப்சைசின், கரோடினாய்டுகள், பிளேவனாய்டுகள், எளிதில் ஆவியாகும் எண்ணெய் மற்றும் ஸ்டிராய்டல், சபோனின்கள், கெப்சைசிடின்ஸ் – (விதைகள் ) பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும் வித…
-
- 0 replies
- 15.7k views
-
-
நீரிழிவைக் கட்டுப்படுத்தும் கொய்யா. கொய்யாக்கனியின் சுவையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கொய்யா முக்கனியான மா, பலா, வாழை இவற்றிற்கு இணையாக வர்ணிக்கப்படும் பழமாகும். மிகக் குறைந்த விலையில் அதிக சத்துக்களைத் தன்னகத்தே கொண்ட பழம் இது. கொய்யா கோடைக்காலங்களில் தான் அபரிமிதமாக விளையும். தற்போது உயிரி தொழில் நுட்ப முறையில் வருடம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது. கொய்யாவில் பலவகைகள் உள்ளன. தற்போது விற்பனைக்கு வரும் பழங்களில் உள் சதைப்பகுதி வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் உள்ளன. ஒரு சில வகை கொய்யாவின் சதைப்பகுதி ரோஸ் நிறத்தில் காணப்படும். இவை அனைத்தின் மருத்துவப் பயனும் ஒன்றுதான். கொ…
-
- 18 replies
- 13.4k views
-
-
ஈகரை இணையதளம் வழங்கும் காய்கறி மருத்துவம் கசப்பு அமுதம் பாகற்காயின் கசப்புச் சுவைக்கு பயந்தே பலர் அதை ஒதுக்கி விடுகிறhர்கள். ஆனால் கசப்புத் தன்மை அவர்கள் நினைப்பது போல விஷம் அல்லது. மாறhக அமுதத்துக்கு சமமானது. நம்முடைய உடம்பு தனக்கு வேண்டிய அளவு இந்தச் சத்தை உறிஞ்சிக் கொண்டு எஞ்சியவற்றை கழிவுப் பொருட் களாக வெளித் தள்ளிவிடும். பாகற்காய் சூடு உண்டாக்கும். கொம்பு பாகற்காய், மிதி பாகற்காய் என இரண்டு வகைகள் உண்டு. இரண்டுமே கறி சமைத்து உண்ணக் கூடியவை. இது கசப்புள்ளதாக இருந்தாலும் பருப்பு, தேங்காய் முதலியவற்றைச் சேர்த்து சமைத்தால் உண்பதற்கு சுவையாக இருக்கும். இது உணவுப்பையில் உள்ள பூச்சிகளைக் கொல்லும். பசியைத் தூண்டும். பித்தத்தை தணிக்கும். மலத்தை…
-
- 0 replies
- 4.2k views
-
-
காய்கறிகளின் மருத்துவக் குணங்கள் - எந்தெந்தக் காய்கறிகள் உங்கள் உடல் கோளாறுகளைக் குணமாக்கும்? ஆஸ்துமா குணமாக: முட்டைக் கோஸ், முருக்கைக்காய், புதினா, வெள்ளைப்பூண்டு, மணத்தக்காளி, பசலைக்கீரை, தக்காளி, லெட்டூஸ், செலரி. இருமல் குணமாக: சுரைக்காய், வெண்டைக்காய், இஞ்சி, புதினா, வெள்ளைப்பூண்டு, முட்டைக்கோஸ். இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு முதலியவற்றைக் குணப்படுத்த: காரட், பச்சைப் பட்டாணி, காலிஃபிளவர், புடலங்காய், முருங்கைக்காய், முள்ளங்கி, வெண்டைக்காய், வெங்காயம், வெள்ளைப் பூண்டு, மணத்தக்காளி, இஞ்சி, வெங்காயம், காளான், பூசணி, பசலைக்கீரை, லெட்டூஸ், சோயா, செலரி, கொத்துமல்லி. இளமைத்துடிப்புடனும் இளமையான தோற்றத்துடனும் உட…
-
- 0 replies
- 884 views
-
-
காய்கறிகளின் வயாகரா முருங்கைக் காயைத்தான் காய்கறிகளின் வயாகரா என்று சொல்லக் கேட்டு இருப்பீர்கள். அதில் உண்மையில்லை. அதைவிட அதிக பாலுணர்வைத் தூண்டக் கூடியது வெங்காயம். இதில் அப்ரோடிஸியாக் பொட்டன்ஷியல் மற்றும் பாலுணர்வைத் தூண்டும் பொருட்கள் உள்ளன. தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னசிலேயே இடம் பிடித்திருக்கிறhர்;. மிகச் சிறிய குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் உயிருக்கு ஆபத்தாகக் கூட முடிந்துவிடுவது உண்டு. தேனீ போன்றவை கொட்டிவிட்டால் இளம் வயதினர் துடித்துப் போவார்கள். ஆனால் வயதானவர்கள், தேனீ கொட்டி விட்டதா? வெங்காயத்தை எடுத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள் என்பார்கள். வெங்காயத்தில் உள்ள ஒர…
-
- 11 replies
- 3.9k views
-
-
காய்கறிகளே என் தெய்வமான கதை நம்முடைய உடலின் பல செயல்பாடுகளை வழிநடத்தும் மென்பொருள் ஒன்று இருக்கிறது. ஆம் நிஜமாகவே இருக்கிறது. ஆனால் அது நாம் நினைப்பது போல நம் மூளையிலோ, ஹார்மோன்களிலோ, மரபணுக்களிலோ இல்லை. நம் மூளையையும் ஹார்மோன்களையும் வழிநடத்தும், ஒருங்கிணைக்கும் மென்பொருள் அது - அது நமது உடலில் - குடல் பகுதியில் - வாழும் நுண்ணுயிர்கள். இவையே 90% மேல் நமது மரபணுக்களாகவும் உருப்பெற்றிருப்பதால் நாம் 10% மட்டுமே மனிதர்கள் என தனது 10% Human: How Your Body’s Microbes Hold the Key to Health and Happiness எனும் நூலில் ஆலனா கோலன் சொல்கிறார். உடல் நலம் குறித்து, குறிப்பாக ஹார்மோன்களும், மூளையும் நமது விருப்பங்களும், தேர்வுகளும் எப்படி நுண்ணியிர்களால் கட…
-
- 0 replies
- 996 views
- 1 follower
-
-
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் கத்தரிக்காய இதில் பல வண்ணங்கள் உண்டு என்றாலும் அனைத்திலும் உள்ள சத்து ஒன்றேதான். பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. முற்றின கத்தரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கைக் கொண்டு வரும். இதில் தசைக்கும், இரத்தத்திற்கும் உரம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் போகும். அதனால் தான் பத்தியத்துக்கும் இக்காயைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் இதை உண்டு நல்ல பயன் பெறலாம். அவரைக்காய இதிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரைப் பிஞ்சை நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உண்ணலாம். இதை சமைத்து உண்டால் உடலை உரமாக்கும் காம உணர்ச்சியைப் பெ…
-
- 2 replies
- 2.7k views
-
-
இருமல் , சளி குணமாக : கொஞ்சம் தேனை ( Honey ) ஒரு தேக்கரண்டி எடுத்து அப்படியே வாயில் விடுங்கள். அடுத்த சில நிமிடங்களில் இருமல் காணாமல் போய் விடுவதைப் பார்த்து ஆச்சரியமடைவீர்கள். குழந்தைகளுக்குக் கூட நம்ம ஊரில் இதனைக் கொடுப்பதுண்டு.இகுருவி இன்னும் கொஞ்சம் விரிவான மருந்து வேண்டும் என நினைப்போர் - தேன், எலுமிச்சம் பழச் சாறு, இஞ்சிச் சாறு ஆகியவற்றை கலக்கி சாப்பிடலாம். சரசரவென இருமலும், சளியும் ஓடிப் போய் விடும். கூடவே சாதாரண காய்ச்சல் இருப்போர் நம்மூர் மிளகு ரசத்தையும் வைத்துச் சாப்பிடலாம். நம்மூர் மிளகு ரசம் தேவையான பொருட்கள் o புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு o மிளகுப் பொடி - 2 1/2 தேக்கரண்டி o துவரம்பருப்பு - 6 மேசைக்கரண்டி o பெருங்காயம் - ஒரு சிறு …
-
- 11 replies
- 17.2k views
-
-
[size=4]உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கும் ஆற்றல் மிளகாய் வற்றலுக்கு இருக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். காரசாரமாய் உணவில் மிளகாய் வற்றலை சேர்த்து சாப்பிடுபவர்கள் உடல் எடையைப் பற்றி இனி கவலைப்படத்தேவையில்லை என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.[/size] [size=4]இந்திய சமையலில் சுவைக்காகவும், வாசனைக்காகவும் பொருட்களை சேர்க்கின்றனர். சீரகம், வெந்தையம், மிளகு, பூண்டு, மிளகாய் என பல பொருட்களை கலந்துதான் சமையல் செய்யப்படுகிறது. இனிப்பு, காரம், புளிப்பு என அறுசுவைகளையும் சமையலில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் பல பொருட்களை சமையலில் பயன்படுத்திவருகின்றனர் முன்னோர்கள்.[/size] [size=4]நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொரு…
-
- 0 replies
- 526 views
-
-
காரட் என்ன இருக்கு : விட்டமின் ஏ, கார்போஹைட்ரேட், தாது உப்புகள், மெலோனிசைட்ஸ் என்ற நிறமி அணுக்கள். யாருக்கு நல்லது : அசிடிட்டி தொந்தரவு உள்ளவர்களுக்கு குழந்தைகளுக்கு. கர்ப்பிணிப் பெண்களுக்கு. யாருக்கு வேண்டாம்: குழந்தை பேறு இல்லாதவர்கள் அதிகம் சேர்க்க வேண்டாம். சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது. பலன்கள்: கண் பார்வைக்கு உகந்தது. உடல் பரும னாகாமல் காக்கும். காரட் சாறுடன் பத்து மிளகு சேர்த்து சாப்பிட்டுவர உடல் கழிவுகள் வெளியேறும். யாருக்கு நல்லது: ரத்தச் சோகை உள்ளவர்கள் தொடர்ந்து 45 நாட்கள் பீட்ரூட் சூப் சாப்பிட்டு வர சோகை அடியோடு விலகும். வளரும் குழந்தைகள் அடிக்கடி சாப்பிட்டால் கண், நகம், பல் நன்கு வளரும். யாருக்கு வேண்டாம்: சர்க்கரை நோய…
-
- 1 reply
- 2.9k views
-
-
[size=4]பொதுவாக நீரிழிவுகள் உடலில் இன்சுலின் குறைவாக சுரப்பதனால் தான் ஏற்படுகிறது. இந்த பிரச்சனை தற்போதைய அனைத்து வயதினருக்கும் வருகிறது. இதனால் அவர்கள் உண்ணும் உணவுகளில் பெரிதும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியுள்ளது. மேலும் அவற்றை கட்டுப்படுத்த இன்சுலின் ஊசிகள், சர்க்கரை இருக்கும் உணவுகளை சாப்பிடாமல் இருப்பது என்று இருக்கிறோம். ஆனால் அத்தகையவர்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. அதுதான் காரமான உணவுப் பொருட்களை உண்டால் நீரிழிவு கட்டுப்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அத்தகைய காரமான உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அதனை சாப்பிட தொடங்கலாமே. இப்போது அந்த உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!![/size] [size=4][/size] [size=4]இலவங்க பட்டை : நீரிழிவைக் கட்டு…
-
- 0 replies
- 729 views
-
-
கண்வலிக்கிழங்கு கண்வலிக்கிழங்கு. 1) மூலிகையின் பெயர் -: கண்வலிக்கிழங்கு. 2) தாவரப்பெயர் -: GLORIOSA SUPERBA. 3) தாவரக்குடும்பம் -: LLIACEAE. 4) வேறு பெயர்கள் -: கலப்பைக்கிழங்கு, செங்காந்தள்மலர்,வெண்தோன்றிக் கிழங்கு, கார்த்திகைக் கிழங்கு, காந்தள்மலர்ச்செடி, நாபிக்கொடி, போன்றவை. 5) வகை -: க்ளோரியோசா சிற்றினங்கள், சிங்களேரி என்பன. 6) மூலப்பொரிட்கள் -: கோல்ச்சிசின் (Colchicines) மற்றும் சுப்பர்பின் (Superbine) 7) தாவர அமைப்பு -: இதற்கு வடிகால் வசதியுடைய மண்ஏற்றது. செம்மண், பொறை மண் ஏற்றது. மண்ணின் அமிலத்தன்மை 6.0 - 7.0 ஆக இருத்தல் நல்லது. கடினமான மண்உகந்தது அன்று. சிறி…
-
- 0 replies
- 859 views
-
-
கார்போஹைட்ரேட் இல்லாத உணவுகள் உடல்நலத்துக்கு நல்லதா? உடல் எடை குறைக்க உதவுமா? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இணையத்தில் அதிகம் தேடப்படும் உணவுமுறைகளாக, ஆட்கின்ஸ் முதல் கீட்டோ வரையிலான கார்போஹைட்ரேட் குறைவான உணவுமுறைகள் உள்ளன. இந்த உணவுமுறைகள் உடல் எடை குறைப்பு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைப்பு, அவ்வளவு ஏன் டைப் 2 வகை நீரிழிவு நோயைக்கூட குணமாக்கிவிடும் என கூறப்படுகிறது. ஆனால், கார்போஹைட்ரேட்டுகளை முழுவதும் நம் உணவிலிருந்து நீக்கிவிடுவது, நாம் பின்பற்றுவதற்கான ஆரோக்கியமான உணவுமுறைதானா? கார்போஹைட்ரேட்டுகள் என்றால் என்ன? கார்போஹைட்ரேட்டுகள் உணவு மற்றும் பானங்களில் காணப்படும் மூன்று மேக்ரோ-நியூட்ரியண…
-
- 0 replies
- 544 views
- 1 follower
-
-
கார்போஹைட்ரேட்டில் இருக்கும் ஆபத்து - மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாற்று உணவுகள் என்னென்ன? 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தினமும் வீட்டில் சமைத்த உணவையே சாப்பிட்டு சலிப்புத் தட்டியதால், எங்கள் அலுவலகத்திற்குப் பக்கத்தில் இருக்கும் கடைகளுக்குச் சென்றேன். நான் முதலில் பார்த்தது நூடுல்ஸ் மற்றும் மஞ்சூரியன் கிடைக்கும் கடைகள். சாலையில் மேலும் முன்னோக்கிச் சென்றபோது, கெட்டியான எண்ணெயில் உருளைக்கிழங்குகளை வறுத்து, ரொட்டித் துண்டுகளுடன் பரிமாறும் ஒரு கடையைக் கண்டேன். இதில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளதால் தயக்கத்துடன் வேறொரு கடைக்குச் சென்றேன். அங்கு, எண்ணெயில் அரிசியை வறுத்துக் கொண்டிரு…
-
- 0 replies
- 294 views
- 1 follower
-
-
காற்றிலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கான ஆதாரங்கள் – உலக சுகாதார ஸ்தாபனம் கொரோனா வைரஸ் காற்றில் பரவுகிறது என்பதற்கான ஆதாரம் அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ள நிலையில் வைரஸ் பரவுவது குறித்த வழிகாட்டலை புதுப்பிக்குமாறு விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர். ஜெனிவாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இந்த அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவின் தலைவரான மரியா வன் கெர்கோவ், காற்று வழியாகவும் கொரோனா பரவுவதற்கான சாத்தியத்தையும் தற்போது விவாதத்திற்கு ஏற்று இருப்பதாக தெரிவித்தார். கொரோனாத் தொற்று பரவல் குறித்து 32 நாடுகளைச் சேர்ந்த 239 விஞ்ஞானிகள் கையெழுத்திட்டு கடிதத்தை உலக சுகாதார அமைப்புக்கு எழுதியுள்ளனர். இதில் கொரோனா காற்று வழியாகப் பரவுகிறது என்பதற்கான ஆதாரங்க…
-
- 0 replies
- 396 views
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, டெல்லியில் போக்குவரத்து காவலர் ஒருவர் காற்று மாசுபாட்டில் இருந்து தற்காத்துக் கொள்ள முகமூடி அணிந்துள்ளார் கட்டுரை தகவல் எழுதியவர், ஒனூர் எரம் பதவி, பிபிசி உலக சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நம்மை கொல்லும் ஒரு ஆபத்து சத்தமில்லாமல் தெருக்களில் உலாவிக்கொண்டிருக்கிறது. அதை நம்மால் பிடிக்க முடியாது. அதிலிருந்து நாம் ஒளிந்துகொள்ள பாதுகாப்பான இடம் என்று எதுவும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் நாற்பது லட்சம் இறப்புகளை ஏற்படுத்தும் மற்றும் உலக மக்கள்தொகையில் 99 சதவிகிதத்தினரை பாதிக்கும் காற்று மாசுபாடு ஒரு பெரிய பொது சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மாசுபடுத்திகளா…
-
- 0 replies
- 524 views
- 1 follower
-
-
உங்கள் உடலில் காற்றுப் பிரிகை நிகழ்வது மிகவும் இயல்பானதுதான். சராசரியாக நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு 5 லிருந்து 15 முறை வாயு வெளியேறும். உங்களுக்கு உண்டாகும் சிறு அசௌகரியங்கள் மற்றும் சங்கடங்களை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் மனித உடலிலிருந்து காற்று வெளியேறுவது என்பது நீங்கள் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறீர்கள் என்பதையே குறிக்கும். மனித உடலில் இருந்து காற்று வெளியேறக் காரணமான உணவுகள் இதயத்தை நல்ல நிலையில் வைத்துக் கொள்ள உதவுபவை. கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து மிகுந்த சில உணவுகளை உங்கள் உடலின் செரிமான மண்டலத்தால் உடைத்து நுணுக்க முடியாது. ஆனால் செரிமான மண்டலத்தில் இருக்கும் பாக்டீரியாக்கள் அந்த வேலையை திறம்படச் செய்யும். …
-
- 0 replies
- 814 views
-
-
நாமெல்லாம் வெளிநாட்டுக்கு வந்து ப்ளாட்களிலும் நாலு சுவத்துக்குள்ளும் அடைந்துகிடைக்கும் வாழ்க்கை வாழுபவர்கள்..வேலை விட்டு வந்தால் குளிர்,நேரமின்மை மற்றும் காரணங்களால் எங்களின் பெரும்பாலான பொழுதுகளை வீட்டுக்குள்ளேயே செலவழிக்கிறோம்..அந்தவீட்டைக்கூட பலர் குளிர்காலங்களில் திறப்பதில்லை..திறந்தால்போல் சுத்தமான் காற்று வரப்போவதும் இல்லை நகர்ப்புறங்களில்..அதனால் வீட்டுக்குள்ளே வளர்க்ககூடிய காற்றை சுத்தப்படுத்தும் ஆறுவகையான தாவரங்களையும் அவற்றின் பயன்களையும் பார்ப்போம்.. 1. Bamboo Palm: இது காற்றில் உள்ள நச்சுத்தன்மையான எரிவை உண்டாக்கும் மெதனல்(formaldehyde)வாயுவை நீக்குகிரது...அத்துடன் இது இயற்கையான காற்று ஈரப்பதமூட்டியாகும்.. 2. Snake Plant: இது காற்றில் உள்ள தீய வா…
-
- 10 replies
- 1.1k views
-
-
கால நிலையின் மாற்றத்தால் ஏற்படும் மூக்கடைப்பு. நம்முடைய மூக்கின் உட்பகுதி , தொண்டையின் உட்பகுதி, சைனஸ் எனப்படும் முக மற்றும் தலை எழும்புகளின் காற்று நிரம்பிய இடைவெளிகளின் உட்பகுதி என்பவை மிகவும் நுணுக்கமானவை. குறிப்பாக நாம் சுவாசிக்கும் போது காற்றோடு சேர்ந்து செல்லும் சில தூசி துணிக்கைகள் ( கண்ணுக்குத் தெரியாத) இந்த பகுதிகளின் உட்புறத்திலே படும் போது அந்தப் பகுதியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம். இந்த மாற்றங்கள் உண்மையில் அந்த துணிக்கைகளின் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாக்கவே ஏற்படுகிறது. இவ்வாறு நம்மை பாதுகாக்க ஏற்படும் மாற்றங்களே நமக்கு சில அசௌகரியங்களை ஏற்படுத்தலாம். அதுவே அலர்ஜி (allergic reaction)எனப்படுகிறது. சில குறிப்பிட்ட காலப்பகுதியில் காற்றிலே…
-
- 2 replies
- 836 views
-
-
கிராமங்களில் இன்றும் 'கருப்பட்டி' காபி என்றால் எக்ஸ்டிரா ஸ்பெஷல்தான். பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம், மருத்துவ குணம் அதிகம் இருக்கிறது. அதிலும் இனிப்புக்காக மட்டும் இதைப் பயன்படுத்த வில்லை. இந்த கருப்பட்டியில் கூடுதலான மருத்துவத் தன்மை இருப்பதாலும்தான் அதைப் பயன்படுத்தினார்கள். பனங்கருப்பட்டி யில் சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து தின்பண்டமாகவும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்படி உடல் நலனுக்கு மிகவும் உகந்தது என்பதால் இப்போது நகர மக்களிடையேயும் கிராக்கி அதிகரித்து வருகிறது. # இப்போது பரவலாகக் காணப்படும் டெங்கு நோயைக் குணப்படுத்த கரும்பு கருப்பட்டியும் சின்னவெங்காயமும் சிறந்த மருந்தாகும். என இலங்கை கரும்பு ஆராய்ச்சி ந…
-
- 0 replies
- 617 views
-
-
இன்றைய உலகில் பலருக்கு தூக்கமின்மை என்பது ஒரு வியாதியாகவே இருந்துவருகிறது. இவ்வியாதிக்கு மருந்தை தேடுபவர்கள், பாட்டி கூறும் வைத்தியம் முதல் நவீன மருத்துவர்கள் கூறும் சிகிச்சை முறைகள் வரை அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் முடிவுக்கு வருகின்றனர். உடலின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் ஆணையிட பல்வேறு திரவங்கள் மற்றும் சுரப்பிகள் செயல்பட்டுவருகிறது. இதில் நமக்கு தூங்க கட்டளையிடும் ஒரு வேதியியல் பொருள் மெலடோனின். இதன் குறைபாட்டாலேயே இன்று பலர் தூக்கமின்மை வியாதிகளால் தவித்துவருகின்றனர். மருத்துவத்துறையில் உள்ள தூக்க மாத்திரைகளில் இது கட்டாயம் இருக்கும். ஆனால் யாரோ தயாரித்த வேதியியல் பொருளை சாப்பிட்டு தூங்க முயற்சி செய்யும் நாம், இயற்கை அளித்துள்ள வரப்பிரசாதங்களை பயன்…
-
- 0 replies
- 574 views
-
-
• காலிஃப்ளவர் பூ வகையைச் சேர்ந்தது. • இது சாதாரணமாக வெள்ளையாகவோ இளம் மஞ்சளாகவோ காணப்படும். இவற்றில் வயலட் கலர் காலிஃப்ளவரும் உண்டு. • காலிஃப்ளவர் பூவைவிட பூவை மூடியிருக்கும் பச்சை இலைகளில் அதிக கால்சியம் சத்து உள்ளது. • காலிஃப்ளவர் உணவு வகைகளில் பூண்டைச் சேர்த்துக்கொண்டால் வாயுத் தொந்தரவும் ஏற்படாமல் தடுக்கலாம். • இதில் வைட்டமின் பி1, 2, 3, 4, 5, 6 மற்றும் பி9 வைட்டமின்கள் காணப்படுகின்றன. • காலிஃப்ளவரை வாரம் இருமுறை உட்கொண்டால் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும். • இதில் சல்போராபேன் மற்றும் இண்டோல்-3- கான்ஃபினோல் போன்ற கலவைகள் இருப்பதால் புற்றுநோயை எதிர்க்கும் சக்தி கொண்டது. • காலிஃப்ளவரை அலுமினியம், இரும்பு பாத்திரத்தில் வ…
-
- 7 replies
- 698 views
-
-
காலிபிளவரில் கால்சியம் சத்து அதிகம் ! சுரைக்காய் வீரிய விருத்தியை உண்டாக்கும்! காலிபிளவரில் கால்சியம் சத்து அதிகம் கொண்டது. நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. அதிக எடை போடாமல் இருக்க உதவுவது. பாஸ்பரஸ் அதிகம் உள்ளதால், வாயுத் தொந்தரவு தரும். காலி பிளவரின் குணங்கள்: வாரத்திற்கு ஒரு நாள் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. சாலட் செய்து சாப்பிடுவது, கோபி மஞ்சூரி செய்து சாப்பிடுவது, நன்கு வேக வைத்து வெறும் உப்பு, சீரகம், பச்சை மிளகாய் தாளித்துச் சாப்பிடுவது போன்றவை காலி பிளவரில் செய்யக் கூடிய உணவு வகைகள். காலி பிளவரில் பூவை விட, பூவை மூடியிருக்கும் பச்சை இலைகளில் அதிக அளவு கால்சியம்சத்து உள்ளது. பெரியவர்களை விட குழந்தைகள் அதிகம் சாப்பிடலாம். காலி ப…
-
- 1 reply
- 969 views
-
-
04/08/2012 Dr.M.K.Muruganandan ஆல் நாற்றம் மூக்கைப் பிடுங்கியது. குடலைப் பிரட்டிக் குமட்டிக் கொண்டு வந்தது. அவரைப் படுக்கையில் விட்டு அவரது வயிற்றைப் பரிசோதிக்க முனைந்த நான் எனது எண்ணத்தை மாற்றினேன். ‘சொக்சைக் கழற்றுங்கோ’ என்றேன். இப்பொழுது என் முன்னுரிமை வேறாயிற்று. பாதத்தில் கண்கள் மேய்ந்தன. கல்லும் குளியுமான தெருவைப்போல அவரது பாதம் பள்ளமும் திட்டியுமாக அசிங்கமாத் தோற்றமளித்தது. பிற்றட் கெரெட்டோலைசிஸ் (Pitted keratolysis) என்பது பாதத்தைப் பாதிக்கும் சரும நோயாகும். தோலை அரித்து நாற்றத்தை எழுப்பும் பாத நோய் (Pitted keratolysis) நோயாளி பரிசோதனை அறைக்குள் நுழையும் முன்னரே இது என்ன நோயென மோப்ப சக்தி குறைவில்லாத மருத்துவரால் நிர்ணயிக்க முடியும். அறிகுறிகள்…
-
- 0 replies
- 1.6k views
-