நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்வது சிறுநீரகம். அதனை செய்ய முடியவில்லை என்றால், உடலில் அதிக நீர்மம் சேர்ந்து கை, கால்கள், முகம் போன்ற இடங்களில் வீக்கம் ஏற்படும். எனவே சிறுநீரை குறிப்பிட்ட நேர இடைவெளியில் கழிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் சிறுநீரக கல் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் ஏற்படும். உடலில் உள்ள கழிவுகள் மற்றும் அதிகளவில் உள்ள நீர்மத்தை அகற்றுவதே சிறுநீரகத்தின் வேலை. சிலருக்கு சிறுநீர் கழிக்கும்போது சிரமமாக இருக்கும். சிலருக்கு வலி, எரிச்சல் ஏற்படலாம். சிறுநீரக பாதையில் தொற்று காரணமாக இந்த பாதிப்புகள் ஏற்படும். இந்த தொற்று சிறுநீரகங்களுக்கு பரவினால் காய்ச்சல் உண்டாகி, பின்பக்கம் வலியும் உண்டாகும். சிறுநீரக நோயின் முதல் அறிகுறியே சிறுநீர…
-
- 0 replies
- 1k views
-
-
30 வயசுதான் ஆச்சு. அதுக்குள்ள ஹார்ட் அட்டாக்காம்', 'நல்லாத்தான் பேசிட்டிருந்தார். திடீர்னு மைலடு அட்டாக்' இப்போதெல்லாம் இப்படியான உரையாடல்களை அடிக்கடி கேட்க நேரிடுகிறது. ஹார்ட் அட்டாக் என்பது எங்கோ, எப்போதோ, யாருக்கோ என்று இருந்த நிலை மாறிவிட்டது. இதயம் காப்பது என்பது இன்று எல்லோருக்கும் மிக முக்கியம். ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 29ம் தேதி உலக இதய தினமாகக் கொண்டாடப்படுகிறது. உலகின் நம்பர் 1 உயிர்க்கொல்லியாக இருக்கும் இதய நோய் பற்றிய போதிய விழிப்புஉணர்வு இல்லை.ஆண்டுதோறும் 1.73 கோடி பேர், உலகம் முழுவதும் இதய நோயால் உயிர் இழக்கின்றனர். 2030ம் ஆண்டில் இது 2.3 கோடியாக உயரும் என்று எச்சரிக்கின்றனர். இந்த உயிர் இழப்புகளைத் தவிர்க்க முடியும். இதயத்தில் ஏற்படும் பிரச்னைகள், காரணங…
-
- 0 replies
- 4.4k views
-
-
அலறவைக்கும் ஆஸ்துமா..! தீர்வு என்ன..? பெருகியுள்ள நோய்களில் முக்கியமானது! [saturday 2014-09-27 21:00] நகரமயமாக்கலின் காரணமாக பல்கிப்பெருகியுள்ள நோய்களில், இன்றைய நிலையில் ஆஸ்துமாதான் முக்கியமான இடத்தில் உள்ளது. இரவு முழுவதும் உறங்க முடியாமல், மூச்சுவிடவே சிரமப்பட வைக்கும் ஆஸ்துமாவைப் பற்றித் தெரிந்து கொண்டால் முடிந்த வரையில் ஆஸ்துமா வராமல் தடுக்கலாம். ஆஸ்துமா என்றால் என்ன? ஆஸ்துமா என்பது நுரையீரலைத் தாக்கக் கூடிய ஒரு நோய். சுவாசக் குழாயில் உள்ள தசைகள் வீங்கிப்போய், சுவாசிப்பதே சிரமமாக இருக்கும். ஆஸ்துமா எதனால் வருகிறது? 1. சிகரட் புகை 2. கயிறு துகள், மரத்தூள் 3. செல்லப் பிராணிகளின் முடி 4. சுவாசிக்கும் காற்றில் இ…
-
- 1 reply
- 5.4k views
-
-
கனவுலகின் மர்மக் கோட்டைகளில் புது வெளிச்சம் இன்று காலை நான் ஒரு கனவு கண்டேன். தொடர்கதை போல நடந்து கொண்டிருந்தது. அது மிகவும் வியப்பூட்டும் கனவாக இருந்தது. நான் கனவுதான் காண்கிறேன் என்பதை உணரக் கூடியதாக இருந்தது. அதைப் பதிவு செய்து வைக்க வேண்டும் என அக்கணத்தில் நினைத்தேன். இப்பொழுது இந்தக் கட்டுரையை சமகாலத்திற்காக எழுத ஆரம்பித்தபோது அது பற்றி எழுதவும் எண்ணினேன். ஆனால் எத்தனை முயன்றும் அது என்ன கனவு என்பது ஞாபகத்தில் வரவேயில்லை. கனவுகள் அற்புதமானவை. அதில்தான் எத்தனை வகைகள் விழித்திருக்கும் போது கனவுகனில் மிதப்போம். பகற்கனவு என்று அதனை எள்ளலும் செய்வோம். ஆழ் தூக்கத்தில் கனவுகள் காண்போம். அவற்றைக் கண்டது பற்றிய நினைவு கூட நித்திரைவிட்டு எழும்பியதும் இருக்காது. …
-
- 0 replies
- 628 views
-
-
வெங்காயம் வெங்காயம் வெறும் உணவுப் பண்டமாக மட்டுமின்றி அற்புதமான மருத்துவ ஆற்றல் படைத்த ஒரு பண்டமாகவும் இருக்கிறது என்ற உண்மையை மிகவும் தொன்மைக் காலத்திலேயே நமது நாட்டு மக்கள் அறிந்திருந்தார்கள் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. வெங்காயத்தின் தாயகம் தமிழகமோ அல்லது பாரத நாட்டின் பிற மாநிலங்களோ அல்ல. எகிப்து நாடு. உலகிலேயே முதன் முதலாக எகிப்து நாட்டு மக்கள்தான் வெங்காயத்தைச் சரியாகவும், அதிகமாகவும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். எகிப்திய மக்கள் அந்நாளில் வெங்காயத்தை தெய்வீக அம்சம் பொருந்தியதாகக் கருதி வந்துள்ளனர். பக்தி பூர்வமாகச் செய்யப்படும் பெரிய பூஜைகளின்போது வெங்காயமும், வெள்ளைப் பூண்டும் பூசனைக்குரிய மூர்த்திகள் போன்ற மதிப்புடன் மரியாதையுடன் பூஜையில் இடம் பெ…
-
- 1 reply
- 18.8k views
-
-
தினமும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை 'தின ஒழுக்கம்’ என்கிறது சித்த மருத்துவம். இந்தக் குளியல் தரும் பலன்கள் எண்ணில் அடங்காது. நமது சருமம்தான், உடலில் பெரிய அளவிலான உறுப்பு. பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப, சுற்றுச்சூழல் உஷ்ணமானாலும், குளிர்ச்சியானாலும் தோல்தான் முதலில் பாதிப்புக்கு உள்ளாகும். தோல், எண்ணெயை உறிஞ்சும் தன்மைகொண்டது. மாசுக்களால் பாதிப்பு சுற்றுச்சூழல் மாசு காரணமாக, வெளியில் இருந்து வந்து குவியும் தூசு தோலின் மீது படிந்துவிடும். இந்தத் தூசு எல்லாமே, தண்ணீரில் கரைவது இல்லை. சோப்பு போட்டுக் குளிப்பது வெளிப்புற அழுக்கைப் போக்குமே தவிர, சருமத்தின் உள் ஊடுருவிய அழுக்கு, தூசியைப் போக்காது. அழுக்கு அப்படியே படிந்து, அழகைக் குலைத்து, சரும நோய்களை ஏற்படுத்திவிடும். இந்த வக…
-
- 0 replies
- 2.9k views
-
-
கால்கள், இடுப்பு உள்பட உடலுக்கு வலுவூட்டும் வஜ்ராஜசனம் பற்றி கடந்த தொடரில் பார்த்தோம். இப்போது ஒட்டு மொத்த உடலின் பாகங்களுக்கும் பலம் தரும் சர்வாங்க ஆசனம் பற்றி பார்க்கலாம். பொதுவாக ஆசனங்களை ஒரு குறிப்பிட்ட வரிசைக்கிரமத்தில் தான் செய்ய வேண்டும். உதாரணமாக சர்வாங்க ஆசனத்தை போன்றே மற்றொரு ஆசனமான சிரசானத்தை செய்து முடித்த பின் கண்டிப்பாக ஏகபாத ஆசனம் என்ற மற்றொரு ஆசனத்தை தொடர்ந்து செய்து விட்டு தான் மற்ற ஆசனங்களை செய்ய வேண்டும். அதாவது சிரசானம் செய்யும் போது உடல் தலைகீழான நிலையில் இருக்கும். தலையை தரையில் ஊன்றிய நிலையில் இருப்பதால் இரத்தம் படுவேகமாக தலைப்பகுதியில் பாய்ந்தபடி இருக்கும். இப்படி நிலையில் சிரசில் தேங்கிய இரத்தத்தை உடனடியாக கீழே இறக்க உதவுவது ஏகபாத ஆசனம் மட்டும…
-
- 0 replies
- 4.2k views
-
-
காலையில் கண் விழித்ததும் பெட் காபியுடன் தான் பலருக்கு அன்றைய பொழுது விடிகிறது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வெறும் வயிற்றில் லிட்டர் லிட்டராகத் தண்ணீர் குடிப்பது, தேன் கலந்த வெந்நீர் அருந்துவது, காலையில் நடைப்பயிற்சிக்குச் செல்லும் வழியில் மூலிகைச் சாற்றை அருந்துவது, பச்சை முட்டை குடிப்பது என்று அவரவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதைச் செய்கிறார்கள். உண்மையில் காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம், எவற்றைச் சாப்பிடக் கூடாது? உடலின் பல நோய்கள் நம் வயிற்றுப் பகுதியில்தான் ஆரம்பிக்கின்றன. மலச்சிக்கல், வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் எனச் சாதாரணமாகத் தொடங்கும் பிரச்னைகள்கூட பல மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும். பொதுவாக, முந்தைய நாள் இரவு நாம் சாப்பிட…
-
- 0 replies
- 6.2k views
-
-
தூங்காத கண் ஒன்று உண்டு. துடிக்கின்ற மனம் ஒன்று உண்டு’ தூக்கமின்மையால் மனம் துடிப்பது மட்டுமின்றி நோய்களும் குடிகொள்ளும். தூக்கமில்லாத பலர் இன்று இருக்கிறார்கள். போதிய தூக்கம் இல்லாமல் போவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள். தானாகத் தேடிக்கொள்ளும் தூக்கமின்மை ஒரு வகை. படிப்பென்றும் வேலையென்றும் நீண்ட நேரம் விழித்தருப்பதால் போதிய தூக்கம் இல்லாதவர்கள் இவர்கள். தேடாமலே வந்து ஒட்டிக் கொள்ளும் தூக்கமின்மை மற்றொரு வகை. எவ்வளவுதான் நேரம் கிடந்தாலும், எவ்வளவு நேரம்தான் படுத்துக்கிடந்தாலும் தூங்கம் வராதவர்கள் மற்றவர்கள் காரணம் எதுவாக இருந்தாலும் போதிய தூக்கம் இல்லாவிட்டால் உடல் சோர்வாக இருக்கும். வாழ்க்கை சினமாக இருக்கும், வேலைகளில் மூளையைச் செலுத்த முடியாது. வினைத்திறன் குறைந்து…
-
- 0 replies
- 567 views
-
-
செப். 29 - உலக இதய நாள் # நம் நாட்டில் ஒவ்வொரு நிமிடத்துக்கும் 30 - 50 வயதுக்கு உட்பட்ட 4 பேர் மாரடைப்பால் உயிரிழக்கிறார்கள். # 25 சதவீத மாரடைப்பு மரணங்கள் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஏற்படுகின்றன. # ஒவ்வொரு நாளும் சராசரியாக 900 பேர் இதய நோயால் உயிரிழக்கிறார்கள். இவர்களில் குறிப்பிடத்தக்க அளவினர் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். உலக அளவில் மரணத்தை ஏற்படுத்தும் பட்டியலில் மாரடைப்பு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. இதய நோயால் ஏற்படும் இறப்புகள்தான் உலகில் அதிகம் என்று உலகச் சுகாதார நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது. ஆண்டுதோறும் சுமார் 1 கோடியே 73 லட்சம் பேர் மாரடைப்பால் இறக்கின்றனர். ஆண்டுக்கு 10 லட்சம் குழந்தைகள் பிறக்கும்போதே இதயக் குறைபாட்டுடன் பிற…
-
- 0 replies
- 524 views
-
-
"இபோலா".... உலகை உலுக்கும், புதிய வகை நோய். வாஷிங்டன்: எபோலோ ஆப்பிரிக்காவில் மட்டுமல்லாமல் வேறு சில நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. இருந்தாலும் இதுகுறித்து யாரும் பீதி அடையத் தேவையில்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். அமெரிக்காவின் இன்டியானா மாகாணத்தைச் சேர்ந்த எம்.பி. டொனால்ட் டிரம்ப் இதுகுறித்துக் கவலை தெரிவித்துள்ளார். நமது நாட்டுக்கு நாம் எபோலோவை இறக்குமதி செய்யக் கூடாது என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இவர் மத்திய அமெரிக்காவிலிருந்து வரும் அகதிக் குழந்தைகள் மூலம் அமெரிக்காவிலும் எபோல பரவி விடுமோ என்று அச்சம் தெரிவித்துள்ளார். இவர் மட்டுமல்லாமல் டிவிட்டரில் இப்படித்தான் பல அமெரிக்கர்கள் பீதியுடன் பேசிக் கொண்டிருக்கின்றனர். பலர் எபோலா நோயா…
-
- 29 replies
- 6.2k views
-
-
உடலை கட்டமைப்புடன் வைக்க முயலும் போது கண்டிப்பாக தவறுகளில் ஈடுபடக்கூடாது. நல்ல கட்டமைப்புடன் இருக்கும் ஒரே காரணத்திற்காக தான் உடற்பயிற்சிகள் செய்யப்படுகிறது. ஆனால் உடலை அப்படி கட்டமைப்புடன் வைப்பதில் ஈடுபடும் போது பல ஆண்கள் சில தவறுகளில் ஈடுபடுகின்றனர். இந்த பொதுவான தவறுகளை சுலபமாக தவிர்க்கலாம். ஜிம்களில் ஈடுபடும் சில பயிற்சிகள் பிரத்யோகமாக ஆண்களுக்காகவே உள்ளது. உதாரணத்திற்கு, ஜிம்மில் உள்ள எடை பயிற்சி பிரிவுக்கு சென்றால் அங்கே ஆண்களை மட்டுமே அதிகமாக காணலாம். உடல் கட்டமைப்பில் ஆண்கள் செய்யும் பொதுவான தவறுகள் எடை பயிற்சியுடன் தான் பெரும்பாலும் தொடர்பில் உள்ளது. இதுப்போன்று வேறு: நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!! இவ்வகை கட்டமைப்பு தவறுகள் ஏற்பட கா…
-
- 0 replies
- 10.8k views
-
-
நீர்ச்சத்து, புரதம், சுண்ணாம்புச் சத்து நிறைந்த சுரைக்காய் - ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும்! உடல் சூட்டைத் தணிக்கும் வல்லமை கொண்டது சுரைக்காய். இதன் சுபாவம் எப்பவுமே குளிர்ச்சியாக இருப்பது. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது. ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும். எல்லோரும் பகலில் மட்டும் சாப்பிடலாம். இதயத்துக்கு வலிமை சேர்க்கும். ரத்தத்தை வளப்படுத்தி தாது பலம் சேர்க்கும். ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும்.…
-
- 0 replies
- 1.2k views
-
-
அதிகமான சர்க்கரை ஆரோக்கியத்துக்கு எதிரி நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும் சர்க்கரையின் ஒரு நாளைக்கு சுமார் 15 கிராமாக குறைக்கவேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள். இதனை ஊக்குவிக்க அரசுகள் சர்க்கரை வரி என்கிற புதிய வரியை விதிக்கலாம் என்றும் அவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். உலக சுகாதர நிறுவனமும், இங்கே பிரிட்டனின் சுகாதார நிபுணர்களும் சமீபத்தில் அன்றாட உணவில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவை சரிபாதியாக குறைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்கள். இன்றைய நிலையில் ஒருவரின் அன்றாட உணவில் இருந்து உடலுக்கு பெறப்படும் சக்தியின் அளவில் அதிகபட்சமாக 10 சதவீதம் வரை உணவில் சேர்க்கப்படும் சர்க்கரையில் இருந்து கிடைக்கலாம் என்று மருத்துவர்கள் அ…
-
- 0 replies
- 462 views
-
-
எமது உடலின் முக்கிய உறுப்புகளில் கண்ணும்.. முக்கிய புலன்களில் பார்வைப்புலனும் அடங்குகிறது. கட்ராக் (கண்புரை) என்றால் என்ன..??! யாருக்கு வரும்..??! கண்ணின் வில்லைப் பகுதியில் ஏற்படும்.. பாதிப்பே கட்ராக் எனப்படுகிறது. தெளிவான கண்ணாடியால் ஆன வில்லைகள் போன்று இருக்கும் கண்வில்லைகள் வயதாக ஆக.. புகாரடைந்த கண்ணாடியாக மாறிவிடுகின்றன. குளிர்காலங்களில் கார் கண்ணாடிகளில் புகார் படிந்திருப்பது போல. இதனால் பார்வைத் தெளிவின்மை மற்றும் நிறங்களை சரியாக அடையாளம் காண்பதில் பிரச்சனைகள் தோன்றும்.(நிறக்குருடு என்ற பாரம்பரிய நோய் உள்ளவர்களில் நிறங்களை அடையாளம் காண்பதில் இருக்கும் நிலை வேறு. இது வேறு.) பாரம்பரிய முறையாகவும் இது வரலாம். மற்றும் உடலிரசாயனச் செயற்பாட்டு பிறழ்வுக…
-
- 9 replies
- 2.3k views
-
-
அதிகமான சர்க்கரை ஆரோக்கியத்துக்கு எதிரி நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும் சர்க்கரையின் ஒரு நாளைக்கு சுமார் 15 கிராமாக குறைக்கவேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள். இதனை ஊக்குவிக்க அரசுகள் சர்க்கரை வரி என்கிற புதிய வரியை விதிக்கலாம் என்றும் அவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். உலக சுகாதர நிறுவனமும், இங்கே பிரிட்டனின் சுகாதார நிபுணர்களும் சமீபத்தில் அன்றாட உணவில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவை சரிபாதியாக குறைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்கள். இன்றைய நிலையில் ஒருவரின் அன்றாட உணவில் இருந்து உடலுக்கு பெறப்படும் சக்தியின் அளவில் அதிகபட்சமாக 10 சதவீதம் வரை உணவில் சேர்க்கப்படும் சர்க்கரையில் இருந்து கிடைக்கலாம் என்று மருத்துவர்கள் அ…
-
- 0 replies
- 806 views
-
-
பழங்கள் அசைவ உணவுகள் திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள். ஆப்பிள்கள் ஒரு மாதம். சிட்ரஸ் பழங்கள் 2 வாரங்கள். அன்னாசி (முழுசாக) 1 வாரம். (வெட்டிய துண்டுகள்) 2-3 நாட்கள்.வறுத்த இறைச்சி மற்றும் கிரேவி 2-3 நாட்கள். சமைத்த மீன் 3-4 நாட்கள். பிரஷ் மீன் 1-2 நாட்கள். ஓட்டுடன் கூடிய நண்டு 2 நாட்கள். பிரஷ்ஷான இறால்(சமைக்காதது) ஒரு நாள். உலர்ந்த மீன் அல்லது மீன் ஊறுகாய் ஒரு வாரம். பிரஷ்ஷான கோழி இறைச்சி துண்டுகள் 1-2 நாட்கள். சமைத்த கோழி இறைச்சி 2-3 நாட்கள். காய்கறிகள் புரோக்கோலி, காய்ந்தபட்டாணி 3-5 நாட்கள். முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி, ஓம இலை 1-2 வாரங்கள். வெள்ளரிக்காய் ஒரு வாரம். தக்காளி 1-2 நாட்கள். காலிபிளவர், கத்தரிக்காய் 1 வாரம். காளான் 1-2 நாட்கள். பால…
-
- 0 replies
- 630 views
-
-
பலருக்கும் பிடித்தமான அசைவ உணவு பிராய்லர் சிக்கன். அது தீவனத்துக்குப் பதிலாக ஆன்ட்டிபயாட்டிக் ஊசி போட்டு வளர்க்கப்படுகிறது. இந்த சிக்கனை சாப்பிடுவதால் காய்ச்சலுக்கும் மற்ற பிரச்சினைகளுக்கும் நாம் சாப்பிடும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் செயலிழந்து போகலாம் என்பதை அறிவியல், சுற்றுச்சூழல் மையம் நடத்திய ஆராய்ச்சி தெரிவிக்கிறது. ஹைதராபாத்திலிருந்து பெங்களூரு செல்லும் சாலை வரலாற்று முக்கியத்துவம் கொண்டது. இந்த வழியில் வரும் பங்கனப்பள்ளி, 1700-கள் வரை வைரச் சுரங்கங்களுக்குப் புகழ்பெற்ற இடமாக இருந்தது. இங்கிருந்து வெட்டி எடுக்கப்பட்ட வைரங்கள் நிஜாம் ஆண்ட ஹைதராபாத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டன. 1800-களின் இறுதிவரை இங்கே வைரங்கள் வெ…
-
- 0 replies
- 551 views
-
-
நவீன மருத்துவ உலகில் இன்று பாவிக்கப்படும் சொற்களில் டயாலிசிஸ் (dialysis) உம் ஒன்று. இதுபற்றி கேள்வி பதில் வடிவில் இப்போ அறிந்து கொள்வோம்..??! டயாலிஸிஸ் என்றால் என்ன..??! வெளியக குருதி சுத்திகரிப்புச் செயன்முறை என்று சொல்லலாம். இதனை குருதி மாற்றீடு (blood transfusion) என்று சொல்வதில்லை. அது வேறு. இது வேறு. டயாலிசிஸின் தேவை..?! குறிப்பாக சிறுநீரக பாதிப்பு நிகழ்ந்திருந்தால் இந்த டயாலிசிஸ் குறித்து மருத்துவர்கள் சிந்திப்பார்கள். சிறுநீரகம் என்றால் என்ன..??! சிறுநீரகம் என்பது எமது வயிற்றுப் புற பின்பகுதியில் அவரை வடிவில் உள்ள இரண்டு வடிகட்டி அங்கங்கள். இவை இரத்தத்தில் உள்ள யூரியா போன்ற நச்சுக்களையும் மேலதிக உப்பு மற்றும் நீரையும் வடிகட்டி சிறுநீராக …
-
- 11 replies
- 18.2k views
-
-
சிலர் எப்போதும் ஒருவித டென்சனுடனே காணப்படுவர். இந்த டென்சனை குறைப்பதற்கு எத்தனையோ வழிகளை கையாள்வார்கள். சிலர் உணவுகள், பானங்கள் சாப்பிடுவது, வெளியே செல்வது என்பனவற்றை மேற்கொள்வார்கள். சிலர் நறுமணங்கள் மூலம் சரிசெய்வார்கள். காபி உண்மையில் காப்பியின் சுவையை விட, அதன் நறுமணம் மிகவும் அருமையாக இருக்கும். மேலும் அதன் நறுமணமே உடலில் ஏற்படும் சோர்வை நீக்கி, அதிக புத்துணர்ச்சியை தரும். சிட்ரஸ் சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றில் நறுமணத்தை நுகர்ந்து பார்த்தால், குமட்டல் வருவதை தடுக்கும். மேலும் இந்த நறுமணம் மனதிற்கு ஒருவித சந்தோஷத்தை தரும். யூகலிப்டஸ் அதிகமான குளிர்ச்சியினால், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகல் போன்றவை இருந்தால் அதனை சரிசெய்ய, 2 துளிகள் யூகலிப்டஸ…
-
- 1 reply
- 518 views
-
-
எப்படிப்பட்ட வலிமையான மனிதரையும், மனச்சோர்வு எளிதில் வீழ்த்திவிடும். ஆனந்தமும் வேதனையும் கலந்தது தான் வாழ்க்கை. ஆனாலும் மனச்சோர்வுடன் இருக்கும் போது நம் வாழ்க்கையில் நிகழ்ந்த சோகமான காரியங்கள் மட்டுமே நினைவுக்கு வரும். நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாளர்கள், அண்டைவீட்டார், கடவுள் நம்பிக்கை இருக்கிறவர்களுக்கு கடவுள் என நம்முடைய சோகங்களையும், மகிழ்ச்சிகளையும் பகிர்ந்து கொள்ளும் பலர், நம் உலகத்தில் இருக்கிறார்கள். மனச்சோர்விலேயே உழன்று கிடப்பதால் சாதிக்கப் போவது ஒன்றும் இல்லை. அதிலிருந்து வெளியே வந்தால், நம்மை போல மனச்சோர்வில் அகப்பட்டவர்களுக்கும் உதவலாம். இதனால் நம்மை போன்ற பிற மனிதர்களுடைய வாழ்க்கையும் இனிமையாக இருக்க வகை செய்யலாம். இத்தகைய மனச்சோர்வில் இருந்து வெளிவரு…
-
- 1 reply
- 591 views
-
-
ஆற்று நீர், ஊற்று நீர், ஏரி நீர், குளத்து நீர், என உள்ளது. மறைநீர் என்று ஒன்று உள்ளது. இவை விளை பொருளை உருவாக்க மண்ணில் இருந்து உறிஞ்சப்பட்ட நீரே, மறைநீர் ஆகும். இதனை டோனி ஆலன் என்பவர் கண்டுபிடித்தார். மனித மூளையின் வளர்ச்சி பிறக்கும் போது 340 கிராம், 6வது மாதத்தில் 750 கிராம், 1 வயதில் 970 கிராம், 2 வயதில் 1150 கிராம், 3 வயதில் 1200 கிராம், 6 வயதில் 1250 கிராம், 9 வயதில் 1300 கிராம், 12 வயதில் 1350 கிராம், 20 வயதில் 1400 கிராம், 12 ஆண்டுகளுக்கு பின்பு மூளை 8 ஆண்டுகள் வரை 50 கிராமே வளர்கிறது. அரளிச் செடிகள் விபத்தை குறைக்கிறது ஏனெனில் வாகனங்களில் இருந்து வரும் ஒளியின் பிரதிபலிப்பை உட்கிரகித்து குறைக்கும் தன்மையை பெற்றுள்ளன. அதனால் தான் பைபாஸ் சாலை மற்றும் நான்கு வழிச…
-
- 0 replies
- 411 views
-
-
பூமியில் உள்ள 97 சதவீதம் உப்பு தண்னீரால் ஆனது, மீதமுள்ள 3 சதவீதம் தூய்மையான நீர் என குறிப்பிடப்படுகிறது. அவற்றில் 2 சதவீதம் பனிக்கட்டிகளாகவும் பனிப்பாறைகளாகவும் காணப்படுகிறது. இதன் மூலம் 3 இல் 1 சதவீதம் தூய்மையான தண்ணீர் தான் ஆறுகள், ஏரிகள் மற்றும் பூமிக்கு அடியிலும் காணப்படுகிறது. பூமியின் பரப்பளவில் 10 இல் ஒரு (1/10) பங்கு பனிக்கட்டிகளால் ஆனது. மேலும் பனிக்கட்டிகளின் 90 சதவீதம் அண்டார்டிகாவைச் சார்ந்தே இருக்கிறது, ஆயினும் அங்குள்ள எரிபஸ் (Erebus) என்ற எரிமலை புகையை வெளியிட்டு வருகிறது. பனிக்கட்டியின் மீதமுள்ள 10 சதவீதம் பனிப்பாறைகளாகக் காணப்படுகிறது. பனிக்கட்டிகள் உப்பு தண்ணீரால் ஆனாலும், எவ்வித உப்பையும் பெற்றிருக்காது. எஸ்கிமோஸ் போன்றப் பனிப் பிரதேசங்களில் வாழும் …
-
- 0 replies
- 437 views
-
-
தினமும் 30-45 நிமிடங்கள் வீதம், வாரத்துக்கு ஐந்து நாட்கள் நடைப்பயிற்சி செய்வோம். நடைப்பயிற்சி செய்வது... உயர் ரத்த அழுத்தத்தைக் தடுக்கிறது... கட்டுப்படுத்துகிறது. டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. சீரான உடல் எடையைப் பராமரிக்க உதவுகிறது. மன அழுத்தம் குறைகிறது. கொழுப்பை எரிக்கிறது. கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பின் (எச்.டி.எல்.) அளவை அதிகரிக்கச் செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட உதவுகிறது. எலும்புகளை வலுப்படுத்துகிறது. ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு ஊட்டச்சத்தை இழந்து அடர்த்தி குறையும் பிரச்னையைத் தடுக்க…
-
- 0 replies
- 1.7k views
-
-
நீரிழிவு நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி : புதிய அரிசி கண்டுபிடிப்பு. நீரிழிவு நோயின் தலைநகரமான, இந்தியாவில் தற்போது, 6.24 கோடி நீரிழிவு நோயாளிகளும், 7.72 கோடி பேர், நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையிலும் உள்ளனர். இத்தகைய நிலைக்கு காரணம், துரிதமான பொருளாதார மற்றும் உணவு முறை மாற்றமே காரணம். இன்றைய நகரமயமாக்கலின் தாக்கத்தால் ஏற்பட்ட உணவு முறை மாற்றத்தில் சுத்திகரிக்கப்பட்ட மாவுப் பொருட்கள், கொழுப்பு மற்றும் விலங்குகளிலிருந்து பெறப்படும் உணவு வகைகளால், இந்த சத்துணவு மாற்றம் பெருமளவு நிகழ்கிறது. இந்த உணவு முறை மாற்றம் நீடித்த அல்லது நாட்பட்ட நோய்கள் தோன்றுவதற்கு முக்கிய பங்காற்றுகிறது. மனிதனுக்குத் தேவையான சத்துகளை வழங்குவதில், தானிய வகைகள் பெரும் பங்காற்றுக…
-
- 14 replies
- 1.9k views
-