நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
ஒல்லி பெல்லி! சாத்தியமா? உடான்ஸா? எடை குறைய என்ன வழி? 'மச்சி, ரெண்டு கிலோ எடையைக் குறைக்கிறதுக்கு... ஊரெல்லாம் தெருத் தெருவா ஓடுறேன்டா! அந்த டி.வி. புரோகிராம்ல 30, 40 கிலோனு எப்பிடிடா குறைச்சாங்க?' - விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவில், நூறு நாட்களில் உடல் எடையை 40 கிலோ வரை குறைத்த ஒரு பெண்மணியைப் பார்த்து வந்த பொறாமைப் புலம்பல் இது. 'ஒல்லி பெல்லி’ நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் பலரின் கேள்வி இதுதான்! ஜிம்முக்குப் போகாமலேயே, உடல் எடையைக் குறைக்க மாத்திரைகளில் ஆரம்பித்து ரோப், எலக்ட்ரானிக் பெல்ட் என ஆசை வார்த்தை காட்டும் விளம்பரங்களின் எண்ணிக்கை அதிகம். ''ஆறேழு கிலோ எடையைக் குறைப்பதற்கே அல்லாடுபவர்கள் இருக்கும் நிலையில், மிகக் குறுகிய காலத்தில் எப்படி இவ்வளவு எடைய…
-
- 3 replies
- 3.8k views
-
-
இதை நம் வீட்டிலேயே சுலபமாக வளர்க்கலாம். இது சுமார் 50cm வரை வளரக்கூடியது. சாம்பார்,ரசம் இவற்றில் தழையாகவே பயன்படுத்தப்படும் வாசனை மிகுந்த ஒரு கீரை வகைச்செடியாகும். இதன் இலை, தண்டு மற்றும் வேர் மருத்தவ குணம் கொண்டவை. இதில் மிளகு,புளி,உப்பு இட்டு துவையலாக உண்ணலாம். கொத்தமல்லி கீரை இரத்த உற்பத்திக்கும் , இரத்த சுத்திக்கும் மிக சிறந்த இயற்கை மருந்தாகும். இது ஒரு வாசனை பொருளாக சமையலில் சேர்க்ப்படுகிறது. கொத்தமல்லியில் வைட்டமின் ஏ, பி, பி1 சி, சுண்ணாம்பு மற்றும் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன. இது மாலைக்கண் நோய்,சிறுநீரகக் கோளாறு முதலியவற்றை போக்கும் வல்லமை உடையது. சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அதிகம் இருப்பதால் மூளையை பலப்படுத்தும். பித்தம் , வாந்தி…
-
- 0 replies
- 616 views
-
-
அதிகமாக டி.வி., பார்ப்பவர்கள் சீக்கிரமாக இறந்து விடுவார்கள் என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. டிவி பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் இந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழ்வில் உற்சாகம் தரும் ஒவ்வொரு பொருளும் நமது உடல் நிலையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு டிவி மட்டும் விதிவிலக்கல்ல. பொழுதுபோக்கு அம்சமாக நினைத்து அனைவரும் விரும்பிப் பார்க்கும் டிவி, உடல்நிலையை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. டிவி மனிதர்களின் வாழ்விலும், உடல்நிலையிலும் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளின் மூலம், அதிகம் டிவி பார்த்தால் ஆயுள் குறையும் என்ற அதிர்ச்சி தகவல் …
-
- 4 replies
- 569 views
-
-
ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்கம் இன்றியமையாதது. எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதுடன், சாப்பிட்ட பின் செய்யும் விஷயங்களும் உடல்நலனைப் பாதிக்கும். அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, சாப்பிட்ட பின் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன? #சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதலை விளைவிக்கும். பல சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் புற்றுநோய் ஏற்பட எந்த அளவு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டோ, அவ்வளவு பெரிய தீமை இது. #உணவு சாப்பிட்ட உடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது, அது கெடுதல். அது காற்றை வயிற்றுக்குள் அனுப்பி, வயிறு உப்புசத்துக்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது. எனவே, சா…
-
- 0 replies
- 640 views
-
-
கைக்குத்தல் அரிசியின் பலன்கள்.... அரிசியை தவிட்டுடன் சேர்த்து சாப்பிடும் போது உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். அதுபோல் அரிசியில் அடங்கியுள்ள மாவுப் பொருளை எளிதில் ஜீரணிக்கச் செய்யும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எனும் பழமொழியை நாம் அறிந்திருப்போம். எந்தவொரு பொருளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே இதன் பொருள். ஆனால் அதை முறியடிக்கும் மருந்தும் அந்த உணவிலேயே இருக்கிறது என்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள். இதைத்தான் சித்தர்கள் சத்துரு (பகைவன்) மித்துரு (நண்பன்) என்கின்றனர். அதாவது, மாம்பழம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால், அதோடு சிறிதளவு மாம்பருப்பையும் சேர்த்து சாப்பிட்டால…
-
- 5 replies
- 1.2k views
-
-
செல்போனில் ‘வாட்ஸ் ஆப்’ செயலியைப் பயன்படுத்தி தகவல்களை பரிமாறிக்கொள்ளும் போக்கு அண்மைக்காலங்களில் பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் இளம் வயதினர் வாட்ஸ்-ஆப்-ஐ பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதனால், நூல்களைப் படிக்கும் வழக்கம் அவர்களிடையே குறைந்து வருகிறது. காலை நேரங்களில் படிப்பு, வேலை என்று இருக்கும் இளைஞர்கள் இரவு நேரங்களில்தான் தங்களது நண்பர்களுடன் தொடர்பு கொள் கின்றனர். இன்டர்நெட் வசதி கொண்ட ஸ்மார்ட் போன் இருந்தால், வாட்ஸ் ஆப், வைபர், ஹைக் போன்ற குறுஞ்செய்தி ஆப்-களை (செயலி) சுலபமாக பயன்படுத்த முடியும். இந்த ஆப்-களை கைபேசிகளில் பதிவிறக்கம் செய்து கொண்டால், அதன் மூலம் உலகின் எந்த மூலையில் இருப்பவரோடும் இலவசமாக தகவல்களைப் பரிமாறலாம், பேசவும் செய்யல…
-
- 5 replies
- 906 views
-
-
கை, கால் மூட்டுக்களில் லேசான வலி வந்தால், டாக்டர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது. 'இது வாத நோய்; இதற்கு மருந்தில்லை' என, நினைக்க வேண்டாம். அலட்சியம் காட்டினால், முடக்குவாதமாகி, எலும்பு மூட்டுக்கள் இணைந்து, சிக்கலான நிலை ஏற்பட்டு விடும் 1. முடக்கு வாதம் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது? கை, கால் மற்றும் விரல்களில் மூட்டுகளில், மெல்லிய ஜவ்வு உள்ளது. இந்த ஜவ்வு வீக்கம் அடைவதால், கை, கால் மற்றும் விரல்களை மடக்குவதில் சிரமம் ஏற்படும். இணைப்பு மூட்டுக்களில் உள்ள வழுவழுப்பு தன்மையுடன் கூடிய, 'ஜெல்' போன்ற திரவம் குறைவாலும், இணைப்பு மூட்டுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதையே, முடக்குவாதம் என்கிறோம்.சிறுவர்களுக்கும் இந்த பாதிப்பு வர வாய்ப்பு உள்ளது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்று,…
-
- 0 replies
- 2.5k views
-
-
செல்வன் உணவு அல்லாத பொருட்களை எல்லாம் உணவு எனச் சொல்லிக்கொண்டு இருப்பதாலும், சூப்பர் மார்க்கட்டுகளில் விற்கப்படும் "உணவு மாதிரியான பொருட்கள்" அடிப்படையில் குப்பை என்பதாலும் போதுமான ஊட்டச் சத்துகள் அவற்றில் கிடைப்பது இல்லை. அது தவிர தம் உணவுப் பொருட்கள் ஆரோக்கியமானவை என்பதைக் காட்ட இக்கம்பனியினர் சீரியலில் வைட்டமின்களை கலந்து "ஹார்ட் ஹெல்தி (heart healthy)" எனச் சொல்லி விற்று வருகிறார்கள். கொக்கோகோலா கம்பனி ஒரு படி மேலே போய், தண்ணீரை விட ஆரோக்கியமான பானம் ஒன்றை அறிமுகப்படுத்தியது (!). அப்பேர்ப்பட்ட மாய மந்திர பானம் என்ன எனக் கேட்கிறீர்களா? வைட்டமின் வாட்டர் தான். நீரில் சிந்தடிக் வைட்டமின்களையும், ஸ்ப்ளெண்டா மாதிரி செயற்கை சர்க்கரைகளையும், பிரசர்வேடிவ்களையும் கெமிக்…
-
- 0 replies
- 1.5k views
-
-
உடலில் உள்ள எந்த உறுப்பையும்விட அதிக அளவு ஆக்ஸிஜனை எடுத்துக்கொள்வது மூளைதான். தேவையான சத்துணவு, தேவையான அளவு கிடைக்காதபோது மூளைக்குக் கிடைக்கும் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது. அதனால் மூளையின் செல்கள் அழிந்துவிடுதல், ‘அல்ஸீமர்ஸ்’ என்ற ஞாபகமறதி நோய், ஞாபகச் சக்தியை - ஒருமுகக் கவனத்துடன் செயல்படும் ஆற்றலை இழப்பது, பலவீனம், குழப்பம், நோய் தாக்குதல் முதலியவை ஏற்படுகின்றன. மூளைக்கு எப்போதும் ஞாபகசக்தி இருக்க வேண்டும். அதற்குக் கொழுப்பு, வெண்ணெய், நெய் முதலியவற்றிலிருந்து கிடைக்கும் கொழுப்பு தீங்கானது. மூளைக்கு உதவும் சரியான உணவைத் தேர்ந்தெடுக்க ஓர் எளிய வழி உண்டு. ஒளிரும் நிறத்தில் இருக்கும் உணவு வகைகள் மூளையின் பசியைப் போக்கும் முக்கிய உணவு வகைகளாகும். ஏனென்றால், இந்த உணவு வகைகளில…
-
- 0 replies
- 450 views
-
-
தும்மினால் கூட எலும்புகள் உடையலாம்! வைட்டமின்- - டி மற்றும் கால்சியம் சத்து குறைபாட்டால், தும்மினால் கூட எலும்புகள் உடையலாம்! வைட்டமின்- - டி மற்றும் கால்சியம் சத்து குறைபாட்டால்பெண்கள் தும்மினால் கூட எலும்புகள் உடையும் நிலை ஏற்படுவதாக கூறுகிறார், மருத்துவர் ராஜா: சென்னையை சேர்ந்த நான், எலும்பு முறிவு மற்றும் முடநீக்கியல் பிரிவு நிபுணராக பணியாற்றுகிறேன். நம் உடலில், வைட்டமின்- - டி, குறைந்தபட்சம், ஒரு மிலி லிட்டர் ரத்தத் தில், 30 நானோகிராம் அளவுக்கு இருக்க வேண்டும். இதில், குறைபாடு ஏற்படும் போது, 'ஆஸ்டியோபோரோசிஸ்' என்ற நோய் உண்டாகிறது. இதனால், 40 வயதிற்கு மேல் எலும்புகள் மிகவும் பலவீனமாகி, சிறு அடி பட்டாலும், ஏன், உட்கார்ந்து எழுந்தால் கூட, எலும்புகள் நொறுங்கி விடுகின்ற…
-
- 0 replies
- 625 views
-
-
தேங்காய்க்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த எத்தனையோ விஷயங்கள் முன்வைக்கப் படுகின்றன. ஆனால், அதில் சிறிதளவுகூட ஆதாரபூர்வமானது இல்லை என்பது நிதர்சனம். பாரம்பரிய உணவு சார்ந்த அறிவைத் துறந்துவிட்டு, சந்தை பிரபலப்படுத்தும் உணவுக்கு மாறுவதால் பல்வேறு வகைகளில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருகிறது. ஊட்டச்சத்து குறைபாடு என்பது, ஊட்டச்சத்து போதாமல் இருப்பது மட்டுமல்ல, ஊட்டச்சத்து என்ற போர்வையில் விற்பனை செய்யப்பட்டு இவற்றை உட்கொள்வதும்கூடத்தான். பதப்படுத்தப்பட்ட (Processed) பாலிஅன்சாச்சுரேடட் எண்ணெய் வகைகளை ஆரோக்கியமான கொழுப்பு, ஆரோக்கியமான எண்ணெய் என்ற அடையாளத்துடன் திணிப்பது என்று உணவு சார்ந்த தொழில் நிறுவனங்கள் முடிவு செய்துவிட்ட பிறகு, குற்றவாளிக் கூண்டில் அதிகம் நிறுத்தப்பட்டது…
-
- 1 reply
- 851 views
-
-
காதில் ஏன் மெழுகு போன்ற திரவம் உருவாகிறது, இதன் பயன், அவசியம் என்ன? சாப்பிட்ட பிறகு ஏன் ஏப்பம் வருகிறது? உடலுக்கு எப்படிச் சக்தி கிடைக்கிறது, அது எந்த வடிவத்தில் இருக்கும்?... இது போன்ற மருத்துவம் சார்ந்த கேள்விகளை உங்கள் குழந்தைகள் கேட்கிறார்களா? அதற்குப் பதில் தெரியவில்லையா? கவலைப்படாதீர்கள். இது போன்ற அடிப்படை மருத்துவ அறிவைத் தருகிறது ஓர் இணையதளம். அது மட்டுமல்லாமல் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து அறிய மருத்துவர்களைத் தேடிச் செல்வதற்கு முன்பாக, குழந்தைகள் நலம் குறித்து அடிப்படைத் தகவல்களையும் இந்தத் தளம் விரிவாகத் தருகிறது. குழந்தை நலம் குறித்த விரிவான தகவல்களைக் கொண்ட இணையதளம் http://kidshealth.org/ இந்த இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் பெற்றோர் தளம் (Parents Sit…
-
- 0 replies
- 551 views
-
-
முதுகு வலி எனப்படும் ‘பேக் பெயின்’ ஒரு காலத்தில் முதியவர்களுக்கான பிரச்சினையாக மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால், இன்றைய நிலைமை தலைகீழ். 25 - 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்குக்கூட இந்தப் பிரச்சினை தற்போது பரவலாகிவிட்டது. பெருகிவரும் இந்தப் பிரச்சினைக்கு ஆயுர்வேத சிகிச்சையை நாடுவோர் அதிகரித்து வருகிறார்கள். ஆயுர்வேத சிகிச்சையில் முதுகு வலி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியுமா? அது எப்படிச் சாத்தியம்? இந்த அவசர உலகில் 80 சதவீதம் பேருக்கு ஏதோ ஒரு வகையில் முதுகு வலி இருக்கிறது. முதுகுத் தண்டுவடத்தில் ஏற்படும் வலிதான் பேக் பெய்ன் எனப்படும் முதுகு வலி. இதில் பல வகைகள் உண்டு. ஜவ்வு வீங்குல், ஜவ்வு விலகுதல், எலும்புத் தேய்மானம், எலும்பு பலவீனம் அடைதல், அடிபடுதல் எனப் பல காரணங…
-
- 0 replies
- 1k views
-
-
நம் எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு முக்கியத் தேவை கால்சியம். பால் மற்றும் பால் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களில் தான் கால்சியம் அதிகமாக உள்ளது. ஆனால் சிலருக்குப் பாலே பிடிக்காது. அவர்களுக்குக் கால்சியம் சத்து அதிகம் தேவைப்படுகிறது. என்ன செய்வது? கால்சியம் சத்து அதிகம் உள்ள மாற்று உணவுகளை நாட வேண்டியது தான், வேறு என்ன செய்ய? மீன், நட்ஸ் வகை உணவுகள், உலர்ந்த பீன்ஸ் உள்ளிட்ட பல உணவுப் பொருட்களில் கால்சியம் சத்து நிறைய உள்ளது. ஆகவே பால் பிடிக்காதவர்கள் இதுபோன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நலம். குறிப்பாக, மீன் சாப்பிடும் போது, அதன் எலும்புகளை நன்றாக மென்று தின்றால் தான் அதிக கால்சியம் கிடைக்கும். மேலும் இதுபோன்ற பொருட்களை உணவில் சேர்த்துச்…
-
- 0 replies
- 767 views
-
-
வயிற்றில் குழந்தை அசைவதை இனி ஆண்களும் உணரலாமாம்! [Tuesday 2014-07-15 19:00] 'காது கொடுத்துக் கேட்டேன், ஆஹா குவாகுவா சத்தம்', எனக் காவல்காரன் படத்தில் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தோன்றும் ஒரு பாடல் காட்சி உண்டு. இனி ஆண்கள், காது கொடுத்து மட்டும் கேட்க வேண்டியதில்லை. குழந்தை அசைவதை நேராகவே உணரலாம். கருவுற்று, வயிற்றுக்குள் சிசு மெல்ல மெல்ல வளர்வதும் அதை உணர்வதும் இதுநாள் வரை பெண்களுக்கே மட்டுமே உரித்தான அனுபவமாக இருந்தது. ஆனால், இப்போது ஆண்களுக்கும் இந்த அனுபவம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஹக்கீஸ் (Huggies) நிறுவனம் இதற்கெனப் புதிய பட்டையைத் தயாரித்துள்ளது. இதை ஒரே நேரத்தில் கருவுற்ற பெண்ணும் அவர் கணவரும் அணிந்துகொள்ள வேண்டும். அப்போது, பெண்ணின் வயிற்றில் குழந்தை அ…
-
- 1 reply
- 509 views
-
-
விலையைக் கொடுத்து… வினையை வாங்கி..! தொப்பையைக் கரைக்கும் பெல்ட்… உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள, முந்தைய தலைமுறையினர் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம், உடற்பயிற்சி, யோகா என்று நேரம் ஒதுக்கினார்கள். அடுத்த தலைமுறை, ‘ஜிம்’ சென்றார்கள். இன்றைய இளையதலைமுறையினர் பீட்ஸா, பர்கர் என ஜங்க் ஃபுட்டுக்கு அடிமையாகி, ஆண்களும், பெண்களும் 30 வயதிலேயே இலவச இணைப்பாக தொப்பையை வாங்கிக்கொள்கிறார்கள். இதைச் சரிசெய்ய நேரமும், பொறுமையும் இல்லாத இவர்களை எல்லாம் கவரும் விதமாக, ‘உடலைக் குறைக்க, தொப்பையைக் கரைக்க’ என உணவாகச் சாப்பிடும் பவுடரில் இருந்து, உடற்பயிற்சிக் கருவிகள் வரை பலவும் சந்தைக்கு வந்துகொண்டிருக்கின்றன. உச்சபட்சமாக, ‘உடற்பயிற்சி இல்லாமலேயே உடல் எடையைக் குறைக்கலாம். குறி…
-
- 1 reply
- 715 views
-
-
தமிழில் ஒரு ஃபிட்னஸ் தொடர்: முன்னோட்டம் கொஞ்ச நாளாவே திருவள்ளுவர் கனவுல வந்து தமிழ் கூறும் நல்லுலகுக்கு நீ ஆற்றிய சேவை என்னன்னு கேள்வி மேல கேள்வியா கேக்குறாரு. எதுவுமே பண்ணாம இருக்கறதுதான் நான் ஆற்றும் மிகப்பெரிய சேவைன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன், ஒத்துக்கற மாதிரி இல்ல, கடைசியில அவரே, நீ ஏன் தமிழ்ல அதிகமா எழுதப்படாத ஒரு விசயத்த தொடர் பதிவா எழுதக்கூடாதுன்னு கேட்டாரு. நமக்கு அப்படி எழுதுறதுக்கு என்ன தெரியும்ன்னு யோசிச்சுப் பார்த்தா, நாமதான் பெரிய அறிவாளி ஆச்சே, அதனால எதுவுமே சிக்கல. சரி, இந்த கொஞ்சநாளா நாம பண்ணிக்கிட்டு இருக்கறத பத்தி எழுதலாம்னா, இப்போ நடப்புல இருக்கறது ஹெல்த் ஆண்ட் ஃபிட்னஸ். ஓகே, அதப்பத்தியே எழுதிடலாம்ன்னு ஒரு விபரீத முடிவுல இறங்கியிருக்கோம். …
-
- 1 reply
- 4.5k views
-
-
(அக்குஹீலர் ஸ்ரீரஞ்சன், அக்குபஞ்சர் & மருந்தில்லா மருத்துவ நிபுணர்) உனக்கு பி.பி (Blood pressure) இருக்கா? பார்த்துப்பா..! ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்... நேரம் தவறாம மாத்திரை போட்டுக்கோ.. இல்லேன்னா ஆளையே தூக்கிடும். அங்க இங்க அலையாதே.. டென்சன் ஆகாதே.. என்று மேலும் மேலும் டென்சனாக்குபவர்கள் தான் இன்று அதிகம். அதைக் கேட்பவருக்கோ பி.பி. மேலும் எகிறும். படபடப்புடன் தலைசுற்றுவது போலவும் இருக்கும். உடனே ஓடிப் போய் பி.பி செக் செய்துகொள்வார்... நாலு கலர் மாத்திரையை எடுத்துப் போட்டுக்கொள்வார். உடனே நார்மலாகி விடுவார். இதுதான் இன்றைய பி.பி. நோயாளிகளின் பரிதாப நிலை. வாழ்நாள் நோய்க்கு பாலிசி எடுத்துக்கொண்ட பி.பி நோயாளிகளே, முதலில் பி.பி என்றால் என்ன? ஏன் வந்தது? என்பதைத் த…
-
- 0 replies
- 716 views
-
-
ஆழ்ந்த நித்திரை உடல் நலத்துக்கு சிறந்தது என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. ஆழ்ந்த நித்திரையினால் நினைவாற்றல் மற்றும் கற்றல் ஆற்றல்கள் அதிகரிப்பதாக அண்மைய ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது. ஆழ்ந்த நித்திரை தொடர்பாக எலிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், ஆழ்ந்து தூங்கிய எலிகள் பயிற்சிகளை மிக எளிதாக கற்றுக் கொண்டுள்ளன. இதனடிப்படையில் ஆழ்ந்து தூங்கும் மனிதர்களின் நினைவற்றலும், கல்வி அறிவும் அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஆழ்ந்த தூக்கம் காரணமாக நியூரோன்களுக்கு இடையில் புதிய இணைப்பு ஏற்பட்டு அதன் மூலம் நினைவாற்றல் தூண்டப்படுகிறது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் நன்றாக உறங்குவதன் ஊடாக நினைவாற்றல்களை அதிகரித்து …
-
- 0 replies
- 574 views
-
-
நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு(KIDNEY FAILURE),சிறு நீரகக் கல், மூட்டுக்களில் வலி (RHEUMATOID ARTHRITIS)கழுத்து,முழங்கை,முன்கை மணிக்கட்டு,கீழ்முதுகு வலி,முதுகுத் தண்டுவட எலும்பில் வலி,முழங்கால் மூட்டு வலி,கணுக்கால் எலும்பில் வலி,குதிகால் வலி,போன்ற வாத நோய்கள் உண்டாக வாய்ப்பு அதிகம். யோக வாழ்வியலின்படி , சன்னலை மூடித் தூங்கினால் காற்று தீட்டுப்பட்டுவிடும் என்று யோகிகள் கூறுகிறார்கள். முன்பெல்லாம் இது என்ன கூத்து, காற்றுக்கும் தீட்டா என்று நான் எண்ணியதுண்டு.இதைப்பற்றிய விளக்கங்களைப் பல குருமார்களிடம் கேட்டுத் தெளிவு பெற்றிருக்கிறேன்.அப்போதெல்லாம் விளங்க ம…
-
- 2 replies
- 955 views
-
-
இன்றைய இயந்திரமயமான வாழ்க்கைச் சூழலில், உடலுழைப்பு என்பது அனைவருக்கும் குறைந்துவிட்டது. நம் உணவு முறையும் மாறிவிட்டது. இயற்கை உணவு வகைகள், நம்மை விட்டு ரொம்பவே விலகிவிட்டன. செயற்கை உணவு வகைகளும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளும் நம்மை ஆக்கிரமித்துவிட்டன. இதனால், இளமையிலேயே உடற்பருமன், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் என்று நோய்களின் வரிசை நீள்கிறது. இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டுமென்றால், உடற்பயிற்சி செய்வதுதான் சிறந்த வழி. உடலுக்கு நன்மை செய்யும் உடற்பயிற்சிகளில், நடைப்பயிற்சி மிகவும் முக்கியமானது; சிரமமில்லாதது; எல்லோருக்கும் ஏற்றது. உச்சி முதல் உள்ளங்கால் வரை உடல் முழுமைக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி கொடுக்க வேண்டுமானால், அது நடைப்பயிற்சியால் மட்டுமே…
-
- 6 replies
- 13.4k views
-
-
வைட்டமின்கள் - சிறு வயதில் இருந்து அறிவியலில் நாம் அடிக்கடி படித்தது ஞாபமிருக்கிறதா? "வைட்டமின்கள் என்றால் என்ன?" எனக் கேட்டால், உடனே நீங்கள் என்ன பதிலளிப்பீர்கள்? வைட்டமின் சத்துக்கள் உடலுக்கு மிகவும் தேவை என்று தானே..ஆனால், உண்மையில் வைட்டமின் எந்தவிதமான சத்துக்களையும் தருவதில்லை என்பதுதான் உண்மை. வைட்டமின்களின் வேலை என்னவென்றால் நம் உணவில் உள்ள கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு முதலிய உணவுச்சத்துக்கள் இயல்பான வளர்சிதை மாற்றம் அடைந்து உடலில் செயல்படுவதற்குத் தேவையான ஒன்றாகும். வைட்டமின்கள் பல வகைப்படும். இதில் வைட்டமின் -டி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், இது நமக்கு இலவசமாகக் கிடைக்கிறது. எப்படி என்கிறீர்களா? வீட்டில் இருந்து வெளி உலகுக்குக் காலை, மாலை வேளைகளில் வெ…
-
- 0 replies
- 2.3k views
-
-
அதிகமாக மது அருந்துகிறீர்களா? குடியை விட ஆசை, ஆனால் முடியாமல் போகிறதா? அப்படினெனில் இதை தொடர்ந்து படியுங்கள். தற்போது குடி என்பது ஒரு ஃபேஷனாகிவிட்டது. மாணவர்கள், அலுவலக வேலையில் உள்ளவர்கள், தொழிலாளிகள் என பலரும் இதை அருந்துகிறார்கள். அதனுடைய பின்விளைவுகளை அறியாது, தானும் கெட்டு, தன் குடும்பத்தையும் நடுத்தெருவுக்கே கொண்டு வந்து விடுகிறார்கள். குடியால் அழிந்த குடும்பங்கள் எத்தனையோ உள்ளன. இதற்கு வீதிக்கு வீதி அமைந்திருக்கும் பார்களும் காரணமாகும். குடியை விட்டு விடலாம் என்று மனவுறுதியோடு இருப்பவர்கள் கூட, சரியில்லாத நட்பினால் மீண்டும் மீண்டும் குடியில் தள்ளப்படுகின்றனர். தற்போது இந்த குடியால் ஒட்டுமொத்த சமுதாயமே சீரழிந்து கொண்டிருக்கிறது. குடி போதையால் கொலை, கொள்ளை, பாலியல் வ…
-
- 2 replies
- 1.4k views
-
-
நேர்காணல்: எம்.ஜே. பிஸ்ரின் முஹம்மத் 'இலங்கையில் பாலியல் நோய்களின் அதிகரிப்பை அவதானிக்க முடிகிறது. பாதுகாப்பற்ற பாலியல் உறவுகள் அதிகரித்தமைதான் தற்போது இந்நோய்கள் வேகமாக பரவுவதற்கு காரணமாக இருக்கின்றன. இது கவலைக்குரிய நிலையாக உள்ளது. நம்பகத்தன்மையான துணையுடன் மாத்திரம் பாலியல் உறவு வைத்துக் கொள்வதனூடாக பாலியல் நோய்களை கட்டுப்படுத்த முடியும். பாலியல் நடவடிக்கைகளின் போது மிகவும் பாதுகாப்பாக செயற்பட வேண்டும்' என்கிறார் பாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் நோய்த்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்திய அதிகாரி சிசிர லியனகே. கேள்வி: பாலியல் நோய்கள் எவை? பதில்: பாலியல் செயற்பாடுகளின் ஊடாக பரவுகின்ற நோய்களேயே நாம் பாலியல் நோய்கள் என அடையாளப்படுத்துக்கின்றோம். இருபதுக்கு அத…
-
- 0 replies
- 1.5k views
-
-
புத்திசாலியாக இருப்பதற்கும் ஞாபகசக்திக்கும் தொடர்பு இல்லை என்பதற்கு, வால்ட் டிஸ்னி, வின்ஸ்டன் சர்ச்சில், அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்... எனப் பல உதாரணங்கள் உண்டு. ஆனாலும், 'நேத்து படிச்சது இன்னைக்கு ஞாபகம் இல்லைன்னா எப்படி... மண்டைக்குள்ள அப்படி என்ன ஓடுது?’ எனும் கவலை நம்மில் பலருக்கும் உண்டு. ஒன்பது வகையான அறிவாற்றல்கள் இருப்பதாக நவீன அறிவியல் சொன்னாலும், படித்ததை ஞாபகம் வைத்து, அப்படியே வாந்தி எடுக்கும் ஸ்கூல் இயந்திரத்தை, 'பல தொழிலுக்கும் தகுதியானவர்’ என்று தேர்ந்தெடுப்பதுதான், அந்த ஒன்பது அறிவாற்றல்களில் ஞாபகசக்தியை மட்டும் சமூகம் உசத்திப் பிடிக்கக் காரணம்! எப்படியோ முக்கி முனகிப் படித்து, வேலை தேடி, உழைத்து, ஓடி, ஓயும் சமயத்தில் மீண்டும் அந்த 'ஸ்கூல் மனப்பாடப் பிரச்…
-
- 0 replies
- 914 views
-