யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். மேலதிக விளக்கங்களை / விதிகளை இங்கே பார்வையிடலாம்.
94 topics in this forum
-
உலகில் அடக்குமுறைகளுக்கு எதிராக, சுரண்டல்களுக்கு எதிராக விடுதலை வேண்டி போராடும் மக்களுக்கு எந்த ஆதிக்கவாதிகளிடமிருந்து உண்மையான ஆதரவு கிடைப்பதில்லை. போராடும் மக்களிடமிருந்தே எதையாவது பறித்து எடுக்கலாம் என்ற சுயநலன்களே ஆதரவு என்று வரும் ஆதிக்கவாதிகளின் உள்நோக்கமாக இருக்கும். கைகள் விலங்குகளால் கட்டப்பட்டிருப்பவர்கள் மட்டுமே ஒருவருக்கு ஒருவர் இதயசுத்தியுடன் கூடிய ஆதரவைக் காட்டமுடியும். என்னுடையது போராட்டம், உன்னுடையது கோமாளித்தனம் என்று அவர்களில் ஒருவர் இன்னொருவரை ஏளனம் செய்தால், ஏளனம் செய்யும் அந்த ஒருவரின் போராட்டமே போலியாகி, அர்த்தம் இழந்து விடுகின்றதல்லவா. ***************************************** கைவிலங்குகள் ------------------------- என் மண்ணிற்காக என் விலங்கை உட…
-
-
- 8 replies
- 665 views
-
-
பம்மாத்து (Pretensions) - சுப.சோமசுந்தரம் உலகில் பம்மாத்து அல்லது பாசாங்கிற்கு எக்காலத்தும் பஞ்சம் இருந்ததில்லை. இவற்றில் நன்மை விளையும் பம்மாத்தும் உண்டு - பொய்மையும் வாய்மையிடத்த என்பது போல. யானறிந்து தமிழ்நாட்டிற்கு நன்மை விளைவித்த ஒரு தலைசிறந்த பம்மாத்து, நான் பெரிதும் போற்றும் அறிஞர் அண்ணா அவர்கள் திருமூலரை எடுத்தாண்டு "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று பறைசாற்றியது. சமூகத்திற்காகப் போராடுவதை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்ட திராவிடர் கழகத்தில் இயங்கிய அண்ணாவும் அவர்தம் தம்பிமார் சிலரும், மக்களுக்கான திட்டங்களை இயற்றுவது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினால் மட்டுமே கைகூடும் என்ற உயரிய நோக்கத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்துக் களம் கண்டனர். மக்களி…
-
-
- 16 replies
- 886 views
- 1 follower
-
-
ஒரு காலத்தில் எமது முன்னோர்கள் வயல்வெளிகளின் அருகாமையில் கோவில் கட்டி அதற்காக,குளங்களை வெட்டினார்கள்,கேணிகளை உருவாக்கினார்கள்..மன்னர்கள் ஆட்சியில் அல்லது வேளான்மை சமுகம் உருவான காலத்தில் இது ஒர் சமுக கட்டமைப்பு ..சகல கிராமங்களிலும் உள்ள பழைய கோவில்களில் இந்த டெம்பிளெட்டை அவதானிக்கலாம்.. இதற்கு பணம் எங்கிருந்து வந்திருக்கும்? ஊர்மக்கள் அல்லது மன்னர்கள் கொடுத்திருப்பார்கள் அநேகமாக பொதுமக்கள் பொதுநோக்குடன் கொடுத்த பணமாக த்தான் இருக்க வேண்டும் ...அந்த பணம் மக்களின் நலன் கருதி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை . எமது கண் முன்னே குளங்கள்,கேணிகள்(மருதடி கேணி..காக்கா சுயா),கிணறுகள் இன்றும் சாட்சியாக இருக்கின்றது... இன்று புலம் பெயர் நாடுகளிலிருந்து கி…
-
-
- 22 replies
- 848 views
-
-
இந்த பாடலை கர்ணன் படத்தில் வரும் கண்டா வரச்சொலுங்க பாடல் மெட்டில் பாடவும். கண்டா வரச் சொல்லுங்க மாடி வீட்டில் பிறந்த புள்ள செல்வத்துக்கு பஞ்சமில்ல மாடி வீட்டில் பிறந்த புள்ள செல்வத்துக்கு பஞ்சமில்ல நாயக்கரு பெத்த புள்ள நல்லவழி சொன்ன புள்ள கண்டா வரச்சொல்லுங்க கிழவனை கையோட கூட்டி வாருங்க அவன கண்டா வரச்சொல்லுங்க கிழவனை கையோட கூட்டி வாருங்க ********* அரசாங்கம், பள்ளிகூடம் அத்தனையும் மனுவின் வசம் அரசாங்கம், பள்ளிகூடம் அத்தனையும் மனுவின் வசம் தடி கொண்டு அடிச்சான் பாரு தகர்ந்து போச்சு நூலின் பலம் கண்டா வரச்சொல்லுங்க கிழவனை கையோட கூட்டி வாருங்க அவன கண்டா வரச்சொல்லுங்க கிழவனை கையோட கூட்டி வாருங்க ********* ஊரெல்லாம் கோயிலப்பா போக வழி இல்லையப்பா ஊரெல்லாம் கோயிலப்பா போக வ…
-
-
- 16 replies
- 789 views
-
-
"எங்களுக்கும் காலம் வரும்" இன்றைக்கு குறைந்தது ஏழு, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையின் வட மாகாணத்தில் இடைவிடாது பெய்து வருகின்ற கனமழை காரணமாக அனைத்து குளங்களும் நிறைந்து அதிகளவில் வான் பாய்கின்ற நிலைமை ஏற்பட்டது. அதன் காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது மாத்திரமல்லாமல் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்கின்ற நிலையும் உருவாகியது. அந்தவகையில், வவுனியா குளம், நொச்சிக்குளம், பத்தினியார் மகிழங்குளம், தாண்டிக்குளம், வைரவபுளியங்குளம், அரசமுறிப்புகுளம், பாவற்குளம், பேராறு நீர்த்தேக்கம் போன்ற பல்வேறு குளங்களை அண்டி வாழ்ந்த மக்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருத்திதான் கனகம்மா. அவள் கடந்த காலப் போரில், விசா…
-
- 0 replies
- 227 views
-
-
"நெஞ்சோடு நிழலாடுதே" & "ஒளிரட்டும் புத்தாண்டு மிளிரட்டும் நம்வாழ்வு" "நெஞ்சோடு நிழலாடுதே" "இதமான கனிவில் அன்பு ஊற்றி இளமை துள்ளும் காலம் காட்டி இடையின் வண்ணத்தில் மயக்கம் தந்து இதய வீட்டில் என்னை நிறுத்தி இனிமை கொட்டும் காதல் விதைத்தவளே!" "வஞ்சகம் இல்லா இனிமைப் பேச்சும் கொஞ்சும் சலங்கையின் மணி ஓசையும் நஞ்சு கலக்கா காமப் பார்வையும் பிஞ்சு உள்ளத்தின் உண்மையைக் கட்டிட நெஞ்சோடு நிழலாடுதே உன் அழகு!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................................. "ஒளிரட்டும் புத்தாண்டு மிளிரட்டும் நம்வாழ்வு" "ஒளிரட்டும் புத்தாண்டு மிளிரட்டும் நம்வாழ்வு வளரட்டும் மனிதம் தளைக்கட்டும் அன்பு மலரட்டும…
-
- 0 replies
- 213 views
-
-
"கந்துவட்டி" தமிழ்நாட்டின் பசுமையான பண்டைய சோழர்களின் முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்றாக விளங்கிய பூம்புகார் கிராமத்தில் ராஜன் குடும்பம் வாழ்ந்து வந்தது. அவர்கள் ஒரு காலத்தில் தங்கள் செழிப்பு மற்றும் மகிழ்ச்சிக்காக அறியப்பட்டனர். இருப்பினும், அவர்கள் கந்துவட்டியின் பிடியில் சிக்கியபோது விதி ஒரு கொடூரமான திருப்பத்தை எடுத்தது. பொதிய மலை, இமய மலை போலத் தனிப்பெருமை வாய்ந்தது பூம்புகார். பொதிய மலையும், இமய மலையும் நடுங்குவது இல்லை. அதுப்போல, புகாரில் மிகுந்த செல்வமும், பகையின்மையும் சேர்ந்து விளங்குவதால், இங்கு வாழ்ந்த பழங்குடி மக்கள் புகாரை விட்டு எங்கும் செல்வதில்லை. இதனால் பூம்புகார், நாகலோகம் போலப் போகத்திலும், தேவலோகம் போலப் புகழிலும் சிறந்து விளங்கியது என்று சிலப்பதி…
-
- 0 replies
- 211 views
-
-
"பாலியல் வன்கொடுமை" பாலியல் வன்கொடுமை பெண்களுக்கு வஞ்சகமே பாவச் செயல்களின் பிறப்பிடமும் அதுவே! பாவை பிருந்தாவின் பாலியல் வல்லுறவுத் தெரியுமா பாதக நடத்தையை திருவிளையாடல் என்கிறதே! விண்ணில் இருப்பவன் உதாரணம் தரவேண்டாமா மண்ணில் இருப்பவன் அதைத் தொடர! எண்ணத்தில் அதை நன்கு பதித்தவன் கண்ணை மூடி வல்லுறவு செய்கிறானே! காமம் கூத்தாடும் கதைகளைத் தவிர்த்து காதல் பேசும் புராணம் பரவட்டும்! காலம் அறிந்து பழையதை எறியுங்கள் காந்தையை மதித்து அவளை வாழவிடுங்கள்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 152 views
-
-
"கிராமியக் கலைஞன்" ஆழமான வேரூன்றிய பாரம்பரியங்களுக்கும் துடிப்பான நாட்டுப்புறக் கலைகளுக்கும் பெயர் பெற்ற, யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட இலங்கையின் வடமாகாணத்தில், தமிழ்செல்வன் அச்சுவேலி என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தான். அவன் சிறு வயதிலிருந்தே, ‘அரிச்சந்திரா” கூத்து என்றால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வரும், காங்கேசன்துறையைச் சேர்ந்த நடிகமணி வி.வி.வைரமுத்துவின் [பெப்ரவரி 11, 771924 - ஜூலை 8, 1989] 'மயானகாண்டம்' நாடகதின் மேலும் பாசையூர் அண்ணாவியார் கலாபூஷணம் முடியப்பு அருள்பிரகாத்தின் 'சங்கிலியன்' நாட்டுக்கூத்து மேலும் கொண்ட பற்றினால், பாரம்பரிய இசையின் தாளங்களாலும், கரகாட்டம், கோலாட்டம், கூத்து போன்ற நாட்டுப்புற நடனங்களின் துடிப்பான அசைவுகளாலும் கவரப்பட்டு, அவ…
-
-
- 2 replies
- 298 views
-
-
போந்தைக் கண்ணிப் பொறைய! கேட்டருள் கொற்கையி லிருந்த வெற்றிவேற் செழியன் பொற்றொழிற் கொல்லர் ஈரைஞ் ஞாற்றுவர் ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு ஒருபக லெல்லை யுயிர்ப்பலி யூட்டி - நீர்ப்படைக் காதை 130 ஞாயிற்றுக்கிழமை. நெருப்பு எரிந்து முடிந்தாலும் பூமியும் பாதாளமும் கனன்று கொண்டிருந்த மதுரையில், சுருங்கியிருந்த வைகையின் சலசலப்பு, முணுமுணுப்பாக மாறிப் புகையில் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தது. கண்ணகியின் கோபம், புயல் போல், பாண்டிய அரசுகட்டிலைக் கரியாக மாற்றியது. ஆனால் நெருப்பாறு கூடப் பாண்டிய மன்னர்களின் பாவங்களைக் கழுவ முடியவில்லை. திரும்பும் இடமெங்கும் வறட்சியும் ஏக்கமும். பஞ்சம் நகருக்குள் எட்டிப்பார்க்கத் துவங்கி, இப்போது குசலம் விசாரிக்கும் அளவுக்கு வந்து விட்டது . …
-
-
- 7 replies
- 542 views
- 1 follower
-
-
ஓணாண்டி அன்போட கோஷான் நான் எழுதும் கடிதமே! நண்பர் @பாலபத்ர ஓணாண்டி எனக்கு மிகவும் பிடித்த கருத்தாளர். அற்புதமான நகைச்சுவை உணர்வு கொண்டவர். என்னை யாழில் வா தல, போ தல என உரிமையோடு ஒருமையில் எழுதும் ஒரே ஒருவர், நான் அப்படி ஒருமையில் விளிக்கும் ஒரே ஒருவர். அண்மையில் ஒரு கருத்தை சொல்லி விட்டு அதை நிறுவ முடியாமல் போய் விட, தன் credibility உடைந்து விட்டதென கூறி யாழில் கருத்து எழுதுவதை விட்டு விட்டார் (படங்கள் இணைக்கிறார்). இதெல்லாம் சப்பை மேட்டர், எல்லோருக்கும் நடந்ததுதான் என அவருக்கு நன்கு தெரியும். அத்தோடு என்னை போலவே குப்புற படுத்து கிடந்து இந்த பெரும் பிரபஞ்சத்தில் நாம் ஒரு தூசு கூட இல்லை என அடிக்கடி உணர்பவர் ஓணாண்டி. ஆகவே இந்த சப்ப மேட்டரை …
-
-
- 10 replies
- 641 views
- 1 follower
-
-
இன்றைய அதிசயம் ------------------------------ பிள்ளையார் இயேசு பெருமான் புத்த பெருமான் இப்படி பல தெய்வங்களில் இருந்து நீர் பால் இரத்தம் கூட உலகில் அங்கங்கே வடிந்து கொண்டிருக்கின்றது இது அதிசயம் ஒரு துளி ஈரமும் வருடங்களாக காணாமல் வறண்டு வெடித்து ஒரு இடம் அங்கே ஒரு வெள்ளைக் கொக்கு ஓடின ஓணாணை பிடித்து அப்படியே முழுங்கியது இதுவும் அதிசயம் கடுங்குளிர் காலத்திலும் நெருப்பாக வெயில் எரிய அனல் காற்றும் சேர அந்த இடமே பற்றி எரிந்தது இது அவலமான அதிசயம் இ…
-
-
- 14 replies
- 892 views
- 1 follower
-
-
"நீயில்லா வாழ்வு" நீயில்லா வாழ்வு பாலைவனம் ஆகுமே நீரற்ற உலகு வெறிச்சோடி இருக்குமே நீதியிழந்த நாடு சமாதானம் காணாதே நீலக் கருங்குயிலே என்னைத் தழுவாயோ? காதல் இல்லையேல் குடும்பம் அழியுமே காமம் ஒழிந்தால் பரம்பரை மறையுமே காதணி அணிந்த அழகு வஞ்சியே காலம் தாழ்த்தாமல் அருகில் வருவாயோ? உன்னைக் காணாத கண்ணும் விழியல்ல உள்ளம் சேராத இல்லமும் வீடல்ல உவகை கொண்டு உயிர்கள் நிலைக்க உண்மை உணர்ந்து அன்பு பொழியாயோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
-
- 2 replies
- 259 views
-
-
முழிக்கும் மொழி --------------------------- இருமொழிக் கொள்கையா அல்லது மும்மொழிக் கொள்கையா எது சரி, எந்த வழியில் போவது என்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இடத்தில் வார்த்தைப் போர்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இது வெறுமனே வார்த்தைப் போர்கள் தான். இந்தப் போர்க் களத்தில் நிற்கும் பெரும்பாலான முன்னணி தளபதிகளின் குடும்பங்களில் மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படுகினறன. ஆனாலும் தமிழைக் காப்பதற்காக, தமிழை வளர்ப்பதற்காக தாங்கள் மும்மொழிக் கொள்கைக்கு எதிரானவர்கள் என்று இவர்கள் வெளியில் சொல்லிக் கொள்கின்றனர். இதில் பலரும் மும்மொழிகளும் படிப்பிக்கும் தனியார் பாடசாலைகளின் உரிமையாளர்களாகவும் கூட இருக்கின்றனர். வழமையான அரசியல் தான் இங்கேயும். மேடையில் ஏறி வாக்குகளுக்காகவும், கைதட்டலுக்காக…
-
-
- 14 replies
- 688 views
-
-
இந்த பாடலை கர்ணன் படத்தில் வந்த “கண்டா வரச்சொல்லுங்க” மெட்டில் பாட/வாசிக்கவும். தலைவரை கண்டா வரச்சொல்லுங்க வல்லையிலே பிறந்த புள்ள இனம் வாழவென வந்த புள்ள… வல்லையிலே பிறந்த புள்ள இனம் வாழவென வந்த புள்ள… வேலுப்பிள்ளை பெத்த புள்ள.. விடுதலைய தந்த புள்ள… கண்டா வரச்சொல்லுங்க…. தலைவரை கையோட கூட்டி வாருங்க… அவர கண்டா வரச்சொல்லுங்க தலைவரை கையோட கூட்டி வாருங்க… ******* ஊரெங்கும் ரத்தவாசம் ஒடுங்கி போச்சு நம்ம இனம்…ஊரெங்கும் ரத்தவாசம் ஒடுங்கி போச்சு நம்ம இனம்… வீர்கொண்டெழுந்தார் பாரு விரிந்ததங்கு தமிழர் தேசம்… கண்டா வரச்சொல்லுங்க…. தலைவரை கையோட கூட்டி வாருங்க… அவர கண்டா வரச்சொல்லுங்க தலைவரை கையோட கூட்டி வாருங்க… ********* ஊரு நம்ம ஊரு அப்பா.. துண்டுபட்டு போனதப்பா.. ஊரு நம்ம ஊர…
-
-
- 16 replies
- 808 views
-
-
"மீட்டாத வீணை.." வரலாறும், கலாச்சாரமும், இயற்கை அழகும் நிறைந்த யாழ்ப்பாண மாவட்டமானது எழில் கொஞ்சும் கடற்கரையினையும் ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான காலப்பகுதிகளில் அதிக வெப்பநிலையினையும் டிசம்பர் - பெப்ரவரி வரை குளிரான காலநிலையினையும் கொண்டு இருப்பதுடன் தரைத் தோற்றத்தினை அவதானிக்கு மிடத்து கரையோர சமவெளியினை கொண்டும், அழகியத் தீவுகளினையும், பல்லுருவத்தன்மை கொண்ட கடற் கரைகளினையும், பாரிய மணல் மேடுகளினையும், நாற்புறமும் பனை சூழவும் காணப்படுகின்றது. அங்கு தான் கவிதா என்ற ஒரு இளம் பட்டதாரி ஆசிரியை, பெற்றோருடனும் சகோதர, சகோதரிகளுடனும் வாழ்ந்து வந்தார். அழகு மற்றும் நாகரிகம் என்ற வார்த்தைகளுக்கு அவளே உதாரணம். அவள் படிக்கும் காலத்திலும் சரி, இன்று ஆசிரியையாக பணிபுரியும் காலத்தில…
-
- 0 replies
- 292 views
-
-
"உன்னோடு வாழ்வது உவப்பானதே" & "புது விடியல்" "உன்னோடு வாழ்வது உவப்பானதே" "உன்னோடு வாழ்வது உவப்பானதே என்றாலும் உயிரோடு போராடும் நோயாளி இவனால் உரிமையோடு இன்பம் சுவைத்திட முடியுமா? உண்மையோடு வாழா வாழ்வும் வாழ்வா?" "மண்ணோடு மண்ணாய் போகும் உடலுக்கு பெண்ணோடு இணையும் ஆசை எதற்கு? பண்போடு சொல்கிறேன் விலகிச் செல்லாயோ? விண்ணோடு பறக்க நேரம் குறித்தாச்சே!" "என்னோடு நீயும் காலத்தை வீணாக்காமல் துன்பத்தின் சுமையை தோளில் சுமக்காமல் அன்புடன் வாழ்த்துகிறேன் விடையும் தருகிறேன்! இன்பத்தின் சுவையை அனுபவித்து மகிழ்வாயே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .................................................................. "புது விடியல்" "புது விடியல…
-
- 1 reply
- 225 views
-
-
காலை நேரக் குளிர் ஊசியாய்க் குத்த எழும்பவே மனமின்றி தடித்த போர்வையால் முகம் தவிர்ந்த அனைத்துப் பாகங்களையும் குளிர் புகா வண்ணம் போர்த்து மூடியபடி படுத்துக் கிடக்கிறேன் நான். லண்டனில் சினோ விழுவதில்லை. குளிர் குறைவு என்ற பேர்தான். ஐந்து பாகை குளிர்கூட மைனஸ் பத்துப்பாகை போல் குளிரும். அத்துடன் ஊசிக்காற்றும் சேர்ந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். வெளியே செல்லக்கூட மனமின்றிப் போகும். முன்னர் பதினெட்டு ஆண்டுகள் ஜெர்மனியில் இருந்தபோது நான்கு மாதங்களாவது பனி கொட்டும். பார்க்குமிடமெல்லாம் வெண்பனித்துகள்கள் வந்து அள்ளி விளையாடு என்று அழைக்கும். வெளியே சென்றால் கூட லண்டனில் குளிர்வதுபோல் குளிர் இருக்காது. ஆனால் இங்கு.............நினைத்துப் பார்த்தவளுக்குச் சிரிப்பும் வந்தது. அங்கு இளமை…
-
- 4 replies
- 321 views
-
-
வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம். வாழும்வரை போராடு....... 01. யாழ்ப்பாணம் முற்றவெளியில் இருக்கும் அந்தப் பிரமாண்டமான கோட்டை போத்துக்கேயரால் முற்றிலும் மனித வலுவைப் பயன்படுத்திக் கட்டப்பட்டது. அது பகலில் மிகவும் அழகாகவும் இரவில் மிக மிகப் பயங்கரமாகவும் தோற்றம் தரும். அந்த மாலை நேரத்தில் சூரியன் தன் பொற் கதிர்களைத் தெறிக்கவிட்டு மறைவதையும், அதே நேரத்தில் வெண்ணிலவு மேலெழும்புவதையும் சில காலங்களில் தரிசிக்க முடியும். அன்றும் அதுபோன்றதொரு நாள் அருகில் இருக்கும் முனியப்பர் கோவிலின் மாலைப் பூசையின் மணியோசை அந்த அமைதியை ஊடறுத்துக் கொண்டு கேட்கின்றது. …
-
-
- 32 replies
- 1.6k views
-
-
"கரை கடந்த புயல்" நவம்பர் 27, 2024 அன்று காலை கடற்கரை நகரமான திருகோணமலை அபாய எச்சரிக்கையுடன் விழ்த்தெழுந்தது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பின்னர் புயலாக வலுப்பெற்ற, பெஞ்சல் புயலாக [Fengal Cyclone] வலுவடைந்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. செல்வராஜா குடும்பத்தினருக்கு இந்தப் புயல் இயற்கைப் பேரிடரை விட அதிகம்; இது அவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாளை சீர்குலைக்கும் அச்சுறுத்தலாக இருந்தது. மீன்பிடி தொழிலாளியான செல்வராஜாவுக்கும், மீனா என்ற அவரின் மனைவிக்கும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களது மூத்தவரான 18 வயது கவிதா, தனது குழந்தைப் பருவ காதலியான அரவிந்துடன் நவம்பர் 29ஆம் தேதி திருமணத்தை பதிவு …
-
-
- 9 replies
- 529 views
-
-
பூனைகளின் பேச்சுவார்த்தை ----------------------------------------------- எவ்வளவு பெரிய பூனையாலும் எவ்வளவு சின்ன சுண்டெலியையும் அடித்துப் பறிக்க இயலாத ஒரு காலம் பூமியில் வந்திருந்தது அந்த ஒரு நாளில் ஒரு சுண்டெலியை சில பூனைகள் கூப்பிட்டன வரச் சொல்லி சமாதான காலம் தானே என்று கூட்டமும் சுற்றி நிற்கும் தானேயும் என்று துணிந்து உள்ளே வந்தது சுண்டெலி சுண்டெலியின் வீரம் தீரம் போற்றி ஆரம்பித்த பூனைகள் அடுத்ததாக அடித்துப் பறிக்க முடியாததை எழுதிப் பறிக்க ஆயத்தமாகின கேட்கிறதை கொடுக்கின்றேன் ஆனால் இன்னொரு அநியாயப் பூனை அது அங்கே என் வேலியில் எந்நேரமும் நிற்கின்றது அதை பதிலுக்கு தடுங்கள் என்றது பேச வந்த சுண்டெலி 'ராஜதந்திரமாக அணுக வேண்டும்.....' என்றது பெரிய பூனையின் உதவிப் பூன…
-
-
- 22 replies
- 963 views
-
-
"தனிமையை இனிமையாக்கிய கனிமொழியே" வண்ணக் கோலத்தில் அழகு சொல்லி கண்கள் இரண்டாலும் காதல் பேசி மண்ணின் வாசனையை ஆடையில் காட்டி ஆண்மையை இயக்கும் பெண்மையை வாழ்த்துகிறேன்! மாலைக் கதிரவன் அடிவானம் தொட சேலை ஒப்பனையில் அடிமனதைக் கிளறி சோலை வனப்பில் ஆசை தெளித்து அலையாய் என்னை முட்டி மோதுகிறாயே! கன்னத்தில் கைவைத்து சோர்ந்து இருந்தவனுக்கு புன்னகை பொழிந்து அருகில் நெருங்கியிருந்து அன்பான வார்த்தைகளால் ஊக்கம் கொடுத்து என் தனிமையை இனிமையாக்கிய கனிமொழியே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 188 views
-
-
"சர்க்கரைப் பந்தலிலே தேன்மாரி பொழிகிறதே!" சர்க்கரைப் பந்தலிலே தேன்மாரி பொழிகிறதே பார்த்து அனைத்து இனிமை கொட்டுகிறதே வார்த்து எடுத்த சிலையாய் நின்று கூர்மை விழியால் என்னைக் கொல்லுகிறதே! அருகில் வந்து ஏதேதோ சொல்லுதே அமைதியாக உறங்க மடியைத் தருகிறதே அழகு மலராய் பூத்துக் குலுங்கி அன்பு சொரிந்து ஆசை ஊட்டுகிறதே! மோதல் இல்லாக் கூடல் கொண்டு இதழ்கள் சுவைக்கும் இன்பம் கண்டு இதயம் இரண்டும் பின்னிப் பிணைந்து காதல் தோட்டத்தில் தேன்மாரி பொழிகிறதே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 182 views
-
-
"இளங்கவியும் 'ஏடிஎச்டி' யும் [ADHD]" பரபரப்பான திருகோணமலை நகரில், இளங்கவி என்ற சாதாரண மனிதர் வாழ்ந்து வந்தார். தனது வாழ்க்கையின் முதன்மையான ஆண்டுகளை பொறியியலாளராக அர்ப்பணித்த இளங்கவி, பிற்பகுதியில் சூழ்நிலை காரணமாக ஒரு நிறுவனத்தின் கிளையில் மேலாளராக பணியாற்றி இன்று ஓய்வு பெற்றுவிட்டார். ஓய்வு பெற்ற பிறகு, ஒரு பொழுது போக்காக தமிழர்களின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை மையமாக வைத்து எழுதும் ஆர்வத்தை அவர் ஏற்படுத்தினார். அவரது கட்டுரைகள், கவிதைகள் மற்றும் சிறு கதைகள் வலைத்தளங்களில் ஓரளவு ஆழமாக எதிரொலித்தது, அவருக்கு ஒரு அங்கீகாரத்தையும் பாராட்டையும் பெற்றது. ஒரு முறை சிரிப்பும் உரையாடல்களும் அவரின் வீட்டின் காற்றில் நிறைந்திருக்க, இளங்கவி ஒரு மூலையில் அமைதியாக அமர்ந்து தன் சொந்…
-
-
- 2 replies
- 255 views
-
-
சுற்றுலா, வேலை, நண்பர்கள் சந்திப்பு, கொண்டாட்டம் என்று வெளியே சில நாட்கள் நாம் போய் இருந்து விட்டு வந்தாலும், வீட்டுக்கு திரும்ப வந்து சொந்தக் கட்டிலில் நித்திரை கொள்வது எப்போதும் மகிழ்ச்சியையும், அமைதியையும் நிம்மதியையும் தரும். அது தான் வீட்டின் தனித்துவமான தன்மை. ஆனால் தனது வீட்டில், தனது கட்டிலில் படுத்திருக்கும் காஞ்சனாவுக்கு மட்டும் நித்திரையும் வரவில்லை. அமைதியும் கிடைக்கவில்லை. இருட்டில் விழித்தபடி இருந்தாள். “நல்ல பெடியன், எங்கடை ஊர். ஓரளவு தூரத்துச் சொந்தம். நல்ல குடும்பம் எண்டு என்ரை அம்மா சொல்லுறா. இந்தக் கலியாணத்தைக் கட்டு. நல்ல வாழ்க்கை உனக்குக் கிடைக்கும்” அவளது தந்தை சொன்ன போது அவள் பதில் சொல்லவில்லை. யேர்மனியில் பிறந்து வேறு ஒரு கலாச்சாரத்துக்குள் வாழும…
-
-
- 16 replies
- 516 views
-