யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
-
-
CD; ,DPஆTச்F;f தலைப்பை மட்டும் தமிழில் திருத்தியுள்ளேன் - யாழ்பாடி
-
- 19 replies
- 2.3k views
-
-
எல்லாருக்கும் வணக்கமுங்கோ!! ---------------- - அக்னி புத்திரன்
-
- 20 replies
- 3.1k views
-
-
யாழ் இந்துவில் கல்வி, மொரட்டுவையில் உயர் கல்வி, கொழும்பில் வேலை இது தான் நான் பாருங்கோ. இலங்கையில் எஞ்சி இருக்க போகும் தமிழன் எண்டு சொல்ல முடியாது, இப்ப மிஞ்சி இருக்கிற பல லட்சம் தமிழர்களில் நானும் ஒருத்தன். நல்ல காலம் பாருங்கோ என்ட தங்கு மடம் கொழும்பு விடுதி இல்லை. இல்லாட்டி எங்க இஞ்ச வந்து எழுத போறன். யாழ் பழசுதான் எனக்கு. இஞ்ச தான் எல்லாம் புதுசாக, முகங்களும். அன்போட ஆதரிப்பியல் எண்டு நம்பிறன்.
-
- 18 replies
- 2.6k views
-
-
வணக்கம் நண்பர்களே! நான் ஒருமாதிரி யாழ் களத்துக்குள்ள வந்திட்டன் யாழ்ப்பாணத்தில தான் கியூவில நிக்கணுமெண்டா இங்கயுமா?
-
- 20 replies
- 2.9k views
-
-
-
வணக்கம் நண்பர்களே..... நான் பித்தன்... என் மொழி மீதும் இனம் மீதும் என்றுமே தணியாத பித்துக் கொண்டிருப்பவன்.... இன்று உங்கள் அனைவரையும் இந்தத் தளத்தின் மூலமாகச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.... தமிழுக்கு அமுதென்று பெயராம்... அந்த அமுதை உங்களோடு சேர்ந்து பருகிட ஒடோடி வந்திருக்கிறேன்.... என்னையும் உங்களோடு சேர்த்துக் கொள்வீர்களா நண்பர்களே.....? வணக்கங்களுடன்..... பித்தன்.
-
- 14 replies
- 2.3k views
-
-
அன்பான வணக்கங்கள். தமிழ் மீது கொண்ட பற்றால் என்னை யாழ் தளத்தில் மகிழ்வுடன் இணைத்துக் கொள்கிறேன். என்னை உங்களில் ஒருவராய் ஏற்றுக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. என்றும் அன்புடன், தேவப்பிரியா
-
- 14 replies
- 2.6k views
-
-
வணக்கம் மை டியர் ஈழதமிழர்கள். நான் ஒரு யாழ்ப்பாண ஆட்டோக்காரன். கம்பியூட்டர் டிகிறி செய்ய ஆசை, ஆகையால் கம்பியூட்டர் வாங்கினேன். அப்ப இங்க வந்து ஆட்டோ ஒடினால் என்ன என்று தோணிச்சுது தமிழில், அதனால் வந்தேன்...அடியுங்கோ ஒரு சலூட் எனக்கு...அடிக்கமாட்டீங்களா? நீங்க வெளிநாடு என்றா, நான் உள்நாடு யோவ்...நீங்க பேசுறது தமிழ ஆங்கிலம், ஆனா நான் பேசுவதோ பச்சைத்தமிழ். பாட்டு வேற பாடுவேனுங்க. உங்களால தமிங்கிலம் கதைக்கமுடியுது ஆனா நான் ஒரிஜினல் தமிழனுங்கோ. இப்ப அடியுங்கோ வந்தனம்கள்..கிகிகிகி
-
- 23 replies
- 3.3k views
-
-
அன்புடைய யாழ் கள அன்பு நெஞ்சங்களுக்கு, பூமகளின் அன்பான வணக்கங்கள். தமிழ் மீது கொண்ட பற்றால் என்னை யாழ் தளத்தில் மகிழ்வுடன் இணைத்துக் கொள்கிறேன். என்னை உங்களில் ஒருவராய் ஏற்றுக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. என்றும் அன்புடன், பூமகள்.
-
- 36 replies
- 5.3k views
-
-
என் அன்புக்கும் பண்புக்கும் உரித்தான யாழ் களக கண்மணிகளே! என் உடன் பிறவாத சகோதர சகோதரிகளே, என் மேல் பற்றுவைத்து இன்றுவரை என்னை எதிர்பார்த்திருந்த உங்கள் பலரிடம் நான் யார் என்ற ஒரு கேள்வியை உங்களிடம், நீங்களே கேட்டகவேண்டும் என்று விட்டு விட்டு, பல களம் கண்டு, கொடி நாட்டி, என் தங்கத்தலைவனை அடைமானம் வைக்காது, கொண்ட கொள்கையிலே உறுதியாக இருந்து இந்திய மண்ணிலே ஈழத்தமிழனின் கொடியை ஏற்றிவிட்டு, மீண்டும் உங்களிடம் வருகின்றேன்....என்ன யாரங்கே?....நான் தானுங்கோ நல்லா எழுதுவன் என்று அங்கே பல களங்களில் இந்திய மக்களை ஒன்றினைக்க ஈழவனுடனுடனும், தூயாவுடனும் சேர்ந்து, கஸ்டப்பட்டு, குண்டு வீசி, எதிரிகளை கலங்கடிக்கப்பண்ணி,களத்தினை விட்டு ஓடாது நின்று, ஒரு குழுவை உருவாக்கிவிட்டு பல ஈழதமிழ…
-
- 28 replies
- 4.6k views
-
-
அன்பின் இனிய யாழ் கள உறவுகள், இது தான் என் முதல் முயற்சி, தமிழில் எழுதி உரையாடுவது. கடந்த 2 வருசமாக யாழ் வாசிக்கிறேன். ஏழுத்து பிழைகள் வந்தால் மன்னிக்கவும் (எப்படி தமிழில் தலைப்பு இடுவது- நேரிடையாக?)
-
- 20 replies
- 3.1k views
-
-
-
வணக்கம் யாழ் கள உறவுகளே, நீண்டநாள் யாழ் கள வாசகனான நான் உங்களுடன் கருத்துப் பரிமாற்றங்களில் கலந்து கொள்ளப் போவதை இட்டு மகிழ்சி அடைகிறேன். நண்றி வணக்கம் பி.கு: இணையவன் உங்கள் ஊக்கிவிப்பிற்கு நண்றி.
-
- 23 replies
- 3k views
-
-
யாழ் களத்தில் உள்ள உறவுகளுடன் இனைந்ததில் மகிழ்சி
-
- 30 replies
- 4.6k views
-
-
ஏன் வரவேற்பு பகுதியில் மூன்று கருத்துக்கள் எழுத வேண்டும். வரவேற்ர்பு பகுதியில் என்னை அறிமுகம் செய்யும் கருத்தோடு ஏன் எம்மை மறு பக்கங்களில் கருத்து எழுத அனுமதிபதில்லை? இந்த முறைமைக்கான காரணம் என்ன?
-
- 21 replies
- 3.3k views
-
-
எனது அருமை நண்பர்களே வணக்கம். என் பெயர் குள்ளநரி. நான் ஜேர்மனி எசம் நகரில் இருக்கிறேன். நீண்ட நாட்களாகவே யாழ் இணைய வாசகன். நானும் கருத்தாடவேண்டும் எனும் எண்ணம் இருந்தும் தமிழ் சரியாக கணனியில் எழுத முடியாமையினால் அது அன்று கைகூடவில்லை. இருந்தும் விடாமுயற்சியினால் ஈ கலப்பை எனும் மென்பொருளை கண்டேன் அதனை தரவிறக்கி பயிற்சிசெய்து இன்று யாழ்களத்தில் கருத்துக்கள் எழுத வந்துள்ளேன்.
-
- 23 replies
- 3.3k views
-
-
-
வணக்கம், நான் பலகாலங்களாக யாழ் வந்து போய்யுள்ளேன் ஆயினும் இன்றுதான் அறிமுகம் செய்தல் பற்றி அறிந்தேன். நன்றி மீண்டும் வணக்கம்
-
- 25 replies
- 4.5k views
-
-
-
கருத்துக்கள உறவுகள் அனைவருக்கும் வணக்கங்கள்!!! நண்பர்கள் வட்டத்தில் "சாரு" என்று அறியப்படும் நான்... நோர்வேயிலிருந்து "தம்பை சிவா"!! (தம்பசெட்டி) நீண்ட நாள் யாழ் இணைய வாசகன் என்றாலும் உங்களுடன் உறவாடும் ஆவல் பிறந்து சில நாட்களே... அந்த வகையில் என்னையும் உங்களில் ஒருவனாக ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன். அன்புடன் சிவா!
-
- 24 replies
- 3k views
-
-
வணக்கம் ரொம்ப நாளா இங்கே வந்து பார்த்து விட்டுப் போயிருக்கிறேன். உங்கள் எல்லோரது எழுத்துக்களையும் பார்க்கையில் எனக்கும் எழுதத் தோன்றும். ஆனாலும் ஏதோ ஒரு அச்சம் எனக்குள் இருந்ததால் எழுத முடியவில்லை. உண்மையைச் சொல்லி விடுகிறேனே. எனது எழுத்தில் ல,ள,ழ,ர,ற,ன,ண என்று எழுத்துக்கள் தட்டுத் தடுமாறும். அதுவேதான் எனது அச்சத்துக்குக் காரணம். குளிரும் என்பதால் குளத்தில் இறங்காமல் இருக்க முடியுமா? அதனால்தால் துணிந்து களத்தில் குதித்திருக்கிறேன். எழுத்தில் பிழை இருந்தால் மெதுவாகச் சொல்லித் தாருங்கள். கருத்தில் பிழை இருந்தால் மெதுவாக தட்டிச் சொல்லுங்கள். நன்ரி
-
- 24 replies
- 2.9k views
-
-