வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5814 topics in this forum
-
இராணுவ மயமாகும் தமிழர் தாயகம் புதிய கடற்படை தலைமையகம் கோத்தபாய திறந்து வைத்தார். பறி போகும் ஈழமண் பாருங்கள் புகைப்படங்களாக.... மாவிரர்களே மன்னிதுக்கொளுங்கள் உங்கள் உறங்கும் இடத்தை கூட உருக்குலைக்கும் போது வராத ரோசமா இனி எமக்கு வரபோகுது . உறங்கியது உங்கள் உடல்கள் இல்லை ...உறங்கியது எமது நாடி . http://www.tharavu.com/2010/09/blog-post_417.html
-
- 0 replies
- 956 views
-
-
கனடாவில் தமிழ் இளைஞர் கொலை கனடாவின் ரொறன்ரோ பெரும்பாகத்தில் உள்ள மார்க்கம் பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்டவர் மார்க்கம் பகுதியைச் சேர்ந்த கேதீஸ் நாகராஜா வயது 18 என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை 3.00 மணியளவில் Birchmount & Steele சந்திப்பில் அப்ரோன் வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து சண்டை நடைபெறுவதாகக் கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் காயமடைந்த நிலையிலிருந்த இளைஞரை சனிபுறுக் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். எனினும் சிகிச்சை பயனளிக்காத நிலையில் இவர் அங்கு உயிரிழந்துள்ளார். இந்த இளைஞரின் கொலைக்கு துப்பாக்கி …
-
- 0 replies
- 1.1k views
-
-
சுவிஸில் வாகன விபத்து – 12 இலங்கையர்கள் காயம் சுவிஸில் வாகன விபத்து – 12 இலங்கையர்கள் காயம் சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 12 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து நேற்று இடம்பெற்றது எனத் தெரிவிக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளை ஏற்சிச் சென்ற பேருந்தே விபத்துக்குள்ளாகியது. இதில் 15 பேர் காயமடைந்தனர் எனவும் அதில் 12 பேர் இலங்கையைச் ச…
-
- 0 replies
- 832 views
-
-
தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023 பிரித்தானியாவில் எக்ஷல் மண்டபத்தில் உணர்வுப்பூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. நிகழ்வின் ஆரம்பமாக பொதுச்சுடரினை வடக்கு கிழக்குப் பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் நீண்ட காலப் பணியாளரான அப்பன் என்று அழைக்கப்படும் செல்லையா கனகரத்தினம் ஏற்றிவைத்துள்ளார். தொடர்ந்து தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023ம் ஆண்டிற்க்கான பிரித்தானிய தேசியக் கொடியினை இளையோர் அமைப்பு ராஜன் ஏற்றிவைத்துள்ளார். தொடர்ந்து மாவீரர்ககளுக்கான கொடி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பெரும்பாலான …
-
- 0 replies
- 1k views
-
-
அவுஸ்திரேலியாவின் டார்வின் பிராந்தியத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கார் விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இரு தமிழ் இளைஞர்கள் பலியாகியுள்ளதுடன் மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். டார்வினின் நாகரா நகரில் ட்ரவர் வீதியில் இவர்கள் பயணம் செய்த கார் மரத்துடன் மோதியே இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் பலியானவர்கள் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் இலங்கையிலிருந்து அகதிகளாக படகில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றவர்கள் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டு நேரப்படி அதிகாலை 1.10 மணிக்கு இடம்பெற்றுள்ள இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் 32,35 வயதுடையவர்கள் என்றும் காயமுற்று ரோயல் டார்வின் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும…
-
- 0 replies
- 367 views
-
-
சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பில் ஆஸி.யில் இலங்கையர் கைது இலங்கை சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுடன் தொடர்புகளைப் பேணியதாக கூறப்படும் ஒருவர் அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். செவ்வாய்கிழமை சந்தேகநபர் பணிபுரிந்த இடத்தை சுற்றிவளைத்த பொலிஸார் இவரைக் கைதுசெய்துள்ளதோடு, 10 போலி கிரடிட் காட்களையும் கைப்பற்றியுள்ளனர். 35 வயதான யசோதரன் செல்லக்கண்ணு எனும் இவருக்கு எதிராக எலிசபெத் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செல்லக்கண்ணு குறைந்தது ஒருவரையாவது சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் அழைத்து வந்துள்ளதாக அவுஸ்திரேலிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சாட்சியாளர் ஒருவரும் தான் அவுஸ்திரேலியாவுக்குள் படகு மூலம் நுழைவதற்கு சந்தேகநபர் உதவியதாக நீதிமன்றதில் …
-
- 0 replies
- 460 views
-
-
16.10.2016 அதிகாலை 3.00 மணியளவில் பிரான்சில் உள்ள ஒபேவில்லியேவில் (Aubervilliers – Seine-Saint-Denis) எனும் இடத்தில் ஒரு படுகொலை நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு வீட்டில் நடந்து கொண்டிருந்த கொண்டாட்டம் ஒன்றில், அதிகாலை மூன்று மணியளவில் முப்பதுகளின் வயதுகளில் உள்ள சிறீலங்காத் தமிழ் இளைஞர், கத்தியால் குத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நான்கு சிறீலங்காச் சமூகத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். ‘என்ன நடந்தது என்று இன்னமும் முழுமையான விபரங்கள் தெரியவில்லை. ஆனால் ஒரு மோதலின் முடிவிலேயே, இந்தப் படுகொலை நடந்துள்ளது, மோதல்கள் நடந்ததற்கான அட…
-
- 0 replies
- 1k views
-
-
அரசியல் தஞ்சக் கோரிக்கை – கடந்த ஆண்டு 279 இலங்கையர்களை மட்டுமே அனுமதித்த பிரான்ஸ் 22 Views பிரான்சின் (France) அரசியல் தஞ்சக் கோரிக்கைக்கான தேசிய நீதிமன்றத்தில் (Cour National du Droit D’Asile) 2020 ஆண்டு, அரசியல் தஞ்ச வழக்குகளை பதிவு செய்த 1025 இலங்கையர்களில் 279 பேருக்கு மட்டுமே அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. இதில் 252 பேருக்கு முழுமையான அரசியல் தஞ்சமும் 27 பேருக்கு தற்காலிக பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. பிரான்சில் அரசியல் தஞ்சம் கோரிய இலங்கையர்களில் 225 பேர் பெண்கள் ,800 பேர் ஆண்கள். இதில் 60 பெண்களுக்கும் 192 ஆண்களுக்கும் முழுமையான அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது.20 பெண்களுக்கும் 7 ஆண்களுக்கும் தற்காலிக பாதுகாப்பு வழங்கப்பட…
-
- 0 replies
- 634 views
-
-
ஐக்கிய நாடுகள் பட்டயத்தின் 99ம் விதியின் கீழ் ஐ.நா செயலாளர் நாயகம் தனது உட்கிடையான அதிகாரங்களை பயன்படுத்தி முள்ளிவாய்கால் இனப்படுகொலை தொடர்பான அனைத்துலக விசாரணை ஒன்றை கொண்டுவர அமெரிக்க அரசு தனது தார்மீக, இராஜதந்திர வளங்களை பயன்படுத்த வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்கள், ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தபவரிடம் அவர்களின் கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளார். ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தபவரிடம் அவர்களுக்கு இவ்விவகாரம் தொடர்பில் எழுத்தியுள்ள கடித்திலேயே இக்கோரிக்கையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன்அவர்கள் முன்வைத்துள்ளார். 21ம் நூற்றாண்டில் நடைபெற்ற மிகக்கொடுமைய…
-
- 0 replies
- 470 views
-
-
கோட்பாடுகளின் தோல்வி‐ நாடு கடந்த அரசு?குளோபல் தமிழ்ச்செய்திகளிற்காக தேவஅபிரா குளோபல் தமிழ்ச் செய்தி நிறுவனத்தில் வெளிவந்த திரு உருத்திரகுமாரனுடனான நேர்காணலைக் கேட்டும் வாசித்ததன் பின்பும் தோன்றிய எண்ணங்களை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முதலில் அந்தப்பேட்டியில் மேலெழுந்து வருகிற முன்வைக்கப்படுகிற சில முக்கியமான விடையங்களைத் தொகுக்க முனைந்துள்ளேன். • தமிழ் மக்களுக்கான அரசியல் வெளியும் போராட்ட வலு மையமும் • பன்மைத்துவம் • நாங்களே ஒழுங்கமைத்துக்கொள்ளும் சனநாயகமும் அதன் விழுமியங்களும் • பொதுத் தேசிய அடையாளமும் புலம் பெயர்ந்த தமிழர்களின் அரசியல் தோழமையும் • கோட்பாடுகளின் தோல்வி • பிராந்திய அரசியல் ம…
-
- 0 replies
- 511 views
-
-
கிரீஸ் நாட்டில், துர்க்கை அம்மனின் கைகளில் மதுபானப் போத்தல்களுடன் காட்சியளிப்பது போன்று செய்யப்பட்டுள்ள விளம்பரத்திற்கு ஜரோப்பாவில் வசிக்கும் இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கிரீஸ் நாட்டில் ஏதென்ஸ் நகரில் உள்ள ஒரு அமெரிக்க மதுபான உற்பத்தி விற்பனை விடுதியில், துர்க்கை அம்மன் கைகளில் 'சதர்ன்கம்போர்ட் பிராண்ட் விஸ்கி' போத்தல்கள் வைத்திருப்பது போன்ற விளம்பரம் இடம் பெற்றுள்ளது. அந்த விடுதியின் உள்பகுதியிலும், வெளிப்புறச் சுவர்களிலும், அந்த விளம்பரம் ஒட்டப்பட்டுள்ளது. அந்த விளம்பரங்களை அகற்றுவதற்கு எதேன்சிலுள்ள இந்துக்கள் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. அந்த மதுபானத்தை உற்பத்தி செய்யும் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட கண்டனக் கடிதங்களுக்கும் பதிலளிக்கப்படவில…
-
- 0 replies
- 1k views
-
-
இந்த அமைப்பானது சில பலம்மிக்க நபர்களால் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கு முடிந்தால் உங்கள் ஆதரவை வழங்குங்கள் http://www.srilankacampaignorg/welcome.htm இன்றைய நிலவரம் என்ன? http://www.srilankacampaign.org/currentsituation.htm இந்த அமைப்பு முன்னெடுக்கும் சில நிகழ்வுகள் ( விரும்பினால் கையெழுத்து போடலாம் ) http://www.srilankacampaign.org/takeaction.htm http://campaigns.ahrchk.net/custodialdeath/ இன்று பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் எமது செய்திகளை முன்னெடுக்க உதவுகின்றன. http://www.facebook.com/pages/Sri-Lanka-Campaign-for-Peace-and-Justice/133183474056 ஆசிய மனித உரிமை அமைப்பு 'கைது செய்து தடுத்து வைப்பதற்கு எதிராக"... http://campaigns.ahrchk.net/…
-
- 0 replies
- 668 views
-
-
கனடாவில் காணாமல் போன யாழ். இளைஞன் சடலமாக மீட்பு கனடாவில் கடலில் காணாமல் போன யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் சடலமாக பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார். கனடா, ஒன்டாரியோ ஏரிக்குள் விழுந்து காணாமல் போன 27 வயதான பார்த்தீபன் சுப்ரமணியம் என்ற இளைஞனின் சடலமே நேற்று மீட்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் ஒன்டாரியோ மாகாணத்தில் Bluffers Park அருகே கப்பலில் இருந்து கடலில் விழுந்த தமிழ் இளைஞன் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. பார்த்தீபன் தனது நண்பர்களுடன் கடலுக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் கடலில் தவறி விழுந்ததாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சுமார் ஒருமாத கால தீவிர தேடுத…
-
- 0 replies
- 898 views
-
-
என்கிறார் - ருத்ரகுமாரன்:- ஜனநயாக வழிகளில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டம் தொடரும் என நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் வீ.ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார். ஜனநாயக வழிமுறைகளில் தொடர்ச்சியாக போராடி தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்படும் எனவும் அதற்கு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சுயாட்சி அதிகாரங்களை வென்றெடுப்பதற்காக தமிழ் சமூகம் போராட வேண்டுமென தெரிவித்துள்ளார். இதற்காக சர்வதேச சமூகத்தின் ஆதரவினை நாடு கடந்த தமிழீழ இராச்சியம் பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்க்கட்சியினர் பலவீனமாக இருக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 355 views
-
-
எங்கள் மீது சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான் ஈழத்தமிழர்களின் சுதந்திரப் போராட்டம் ஆரம்பிக்க வேண்டிய தேவை உருவானது. காலம் காலமாக எமது இனம் வாழ்ந்த எம் தாய்நிலத்தை எதிரியவன் அபகரித்த கணத்தில் தான் எம்மை நாம் பாதுகாத்து எமக்கு ஒரு நாடு வேண்டும் -எமது மக்களுக்கு விடுதலை வேண்டும் -எமது இனம் சுதந்திரமாக வாழவேண்டும் என்ற ஒரே ஒரு இலட்சியத்திற்காக போராட வேண்டி நிர்ப்பந்திக்கப் பட்டோம். 30 வருட சாத்வீக போராட்டத்தை தொடர்ந்து 30 வருட ஆயுதப் போராட்டம் தமிழீழ மக்களின் கனவை நியமாக்கி தமிழீழ நிழலரசை நிறுவியது. சிங்கள இனவெறி அரசு தமிழர்களை அழிப்பதே நோக்கமாக கொண்டதனால் உலக வல்லரசுகளின் பிராந்திய மற்றும் பொருளாதார நலத்தை பாவ…
-
- 0 replies
- 487 views
-
-
என்னால் முடியவில்லை... ரத்த புற்றுநோயால் உயிருக்கு போராடும் வித்யாவின் நெகிழவைக்கும் நிமிடங்கள்! (வீடியோ) தனக்கான உறுப்பு தானம் செய்யும் நண்பர்கள் விரைவில் கிடைப்பார் என்ற நம்பிக்கையில் இருப்பதாக, ரத்த புற்று நோயால் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கும் இலங்கை பெண் வித்யா அல்போன்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கிழக்கு லண்டன், வோல்தம்ஸ்ரோ (Walthamstow) பகுதியைச் சேர்ந்த 24 வயதான வித்யா அல்போன்ஸ், லூக்கேமியா என்னும் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார். லண்டன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வித்யாவுக்கு உடனடியாக ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை செய்ய வேண்டும். இதுவரை வழங்கியவர்களின் ஸ்டெம் …
-
- 0 replies
- 739 views
-
-
ஆயிரக்கணக்கில் தமிழர்கள் பகிரங்கமாகப் படுகொலை செய்யப்பட்ட இனக்கலவரம் நடந்து 25 வருடங்கள் ஓடி விட்டதை நினைவு கூரும் முகமாக எதிர்வரும் 25.07.2008 வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் 26.07.2008 சனிக்கிழமை மாலை 5 மணி வரை உள்ள 25 மணித்தியாலங்கள் Trafalgar Square Northern Terrace இல் தொடர் உண்ணாவிரதம், கண்காட்சி மற்றும் தமிழர்களுக்கு கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட கொடுமைகளையும் உலக நாடுகளுக்கு அம்பலப்படுத்தும் வகையில் சில கலை நிகழ்ச்சிகளும் தமிழ் இளையோர் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இளையோர் அமைப்பிற்கு உறுதுணையாக மகளிர் அமைப்பினரும் தமது ஆதரவை வழங்கவுள்ளனர். தாயகத்தில் எம் தமிழ் உறவுகள் படும் இன்னல்களை ஒவ்வொரு நாளும் கடந்து வரும் கறுப்பு வரலாற்றை முடிவுக்கு கொண்டு வரும…
-
- 0 replies
- 718 views
-
-
அண்மையில் எனது உறவினர் ஒருவர் கனடாவிலிருந்து வந்திருந்தார்.அவர் இருபது வருடங்கலுக்கு முன்பு கனடாவில் குடியேறி இருந்தார்.அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்னார் தங்கள் குடும்பம் கனடாவில் எங்கள் ஆக்களுடன் அதாவது தமிழ் மக்களுடன் பழகுவதில்லையாம்.அவர்களுடன் பழகினால் தேவையில்லாமல் பிரச்சனை ஏற்படுமாம் அதனால் தங்களுடன் வேலை செய்யும் வேற்று நாடு மக்களுடன் மட்டும் தான் பழகுவார்கள்லாம்.இப்படி எத்தனையோ பேர்.வீட்டு விழாக்களுக்கு சென்றால் அவர்கள் ஆங்கிலத்தில் தான் உரையாற்றுவார்கள் தமிழில் கதைத்தால் வெட்கமாம் இத்தனைக்கும் அவர்கள் நடுத்தர அல்லது வயது போனவர்களாக இருப்பார்கள் இப்படிப் போனால் எங்கள் எதிர்கால சமுதயாயம் எப்படி இருக்கும்? மற்றைய நாட்டு மக்கள் புலம் பெயர் நாட்டில் தங்கள…
-
- 0 replies
- 637 views
-
-
ஆகஸ்ட் 17, 2020: கனடிய அரசாங்கத்தின் நிதியமைச்சர் பில் மோர்ணோ பதவி விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். அத்தோடு, ரொறோண்டோ மத்தி பாராளுமன்றத் தொகுதியின் உறுப்பினர் பதவியிலிருந்தும் தான் விலகப்போவதாக அவர் அறிவித்திருக்கிறார். கோவிட்-19 உத்தேசச் செலவுகள் மற்றும் சுற்றாடல் முன்னெடுப்புகள் தொடர்பாக, கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்றூடோவுக்கும் நிதியமைச்சர் பில் மோர்ணோவுக்குமிடையில் சமீபத்தில் கருத்து வேறுபாடுகள் நிலவியதாகவும், இதன் காரணமாக பிரதமர் ட்றூடோ அவரைப் பதவியிலிருந்து விலகும்படி கேட்டிருந்திருக்கலாம் எனவும் வதந்திகள் முன்னர் பரவியிருந்தன. “இன்று நான் பிரதமரைச் சந்தித்து, எனது பாராளுமன்றப் பதவியிலிருந்தும் விலகப்போவதாகத் தெரிவித்திருக்கிறேன். இரண்டு தவணைகளுக்குமேல் பாராளு…
-
- 0 replies
- 462 views
-
-
இலங்கையர்களை அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக கடத்த உதவியதாக கனேடியர் ஒருவமீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இலங்கையில் பிறந்த குறித்த நபர் தற்பொழுது கனடாவில் வாழ்ந்துவரும் அவர், சுய லாபத்துக்காக கரீபியன் பகுதி வழியாக ஆவணங்களற்ற புலம்பெயர்வோரை அமெரிக்காவுக்குள் கடத்த திட்டமிட்டதாக இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஒப்புக்கொண்டார். அத்துடன் இதற்கான அவர் அந்த இலங்கையர்களிடம் 28,000 முதல் 65,000 கனேடிய டொலர்கள் வரை கட்டணம் கோரியதாக FBI குற்றம் சுமத்தியுள்ளது. பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி, சந்தேகநபர் தன் குற்றங்களை ஒப்புக்கொண்டதாக அமெரிக்க நீதித்துறை அறிவித்தது. இலங்கையிலிருந்து, துபாய், துபாயிலிருந்து மாஸ்கோ, மாஸ்கோவிலிருந்து கியூபா, கியூபாவிலிருந்து ஹெய்தி, ஹெய்தியிலிருந்து…
-
- 0 replies
- 451 views
-
-
அதிபர் ஒல்லாந்த் தொடர்ந்தும் இரவுப் பொழுதை நடிகையுடன் கழிப்பதாக சஞ்சிகை கூறுகிறது பிரான்ஸ் அதிபர் பிரான்ஸுவா ஒல்லாந், நடிகை ஜூலி காயெயுடன் உறவு வைத்திருப்பதாக செய்தி வெளியிட்டுள்ள பாரிஸிலிருந்து வெளியாகும் சஞ்சிகை ஒன்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி ஆராய்வதாக அதிபர் தெரிவித்துள்ளார். தன்மீதான குற்றச்சாட்டை அதிபர் மறுக்கவில்லை. ஆனால் குறித்த சஞ்சிகை தனது தனிப்பட்ட வாழ்க்கைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளமை தொடர்பில் அவர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். எலீஸி பேளஸுக்கு அருகே உள்ள ஃபிளாட் வீடொன்றில் அதிபர் ஒல்லாந் நடிகை காயெயுடன் தொடர்ந்தும் இரவுப்பொழுதைக் கழித்துவருவதாக பரவிவந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக க்ளோஸர்- சஞ்சிகை பல படங்களை வெளியிட்டுள்ளது. சாரதி …
-
- 0 replies
- 565 views
-
-
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் அகவை 60 தாயகத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர் தேசமெங்கிலும் எழுச்சியாக கொண்டாடப்படுகின்றது. அந்தவகையில் சுவிசின் பல பாகங்களில் தமிழின உணர்வாளர்கள் கேக் வெட்டியும், மற்றவர்களுடன் வாழ்த்துக்களையும், இனிப்புக்களையும் பகிர்ந்து தமது மகிழ்ச்சியை ஆரவாரமாகக் கொண்டாடினர். அதன் ஒரு பகுதியாக தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளையினரின் ஒருங்கிணைப்பில் மாவீரர் நாள் நடைபெறும் பிறிபேர்க் போறும் மண்டபத்தில் மாவீரர் நாள் ஏற்பாடுகளுக்கு மத்தியில் தமிழீழத் தேசியத் தலைவரின் அகவை 60 எழுச்சியாகவும், எளிமையாகவும் கொண்டாடப்பட்டதுடன் வாழ்த்துப்பாவுடன், வாழ்த்துக்களாக இளையோர்களின் இன உணர்வு மிக்க எழுச்சி நடனம், சிறுவர்களின் பேச்சுக்கள் இ…
-
- 0 replies
- 541 views
-
-
பிரித்தானியாவிலிருக்க கூடிய வரலாற்று மையத்தில் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. பிரித்தானியாவிலிருக்க கூடிய வரலாற்று மையத்தில் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில், மாவீரர் தினத்தை பேரெழுச்சியுடன் அனுஷ்டிப்பதற…
-
- 0 replies
- 578 views
-
-
Politics மார்க் கார்ணி கனடாவின் 24 ஆவது பிரதமராகிறார்!March 15, 2025 Post Views: 68 தமிழர் கெரி ஆனந்தசங்கரிக்கு நீதியமைச்சர் பதவி!சிவதாசன்எதிர்பார்க்கப்பட்டதைப் போல கனடிய மத்திய லிபரல் கட்சியின் தலைவராக, சுமார் 85% வாக்குகளால், தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் மார்க் கார்ணி நேற்று (வெள்ளி) கனடாவின் 24 ன்காவது பிரதமராக நியமனம் பெற்றுள்ளார். தெற்கே ஜனாதிபதி டொனால்ட் ட்றம்பின் சீரற்ற ஆட்சியில் கனடா எதிர்பார்க்கும் சவால்களைச் சமாளிக்கும் வல்லமையுள்ள ஒருவராக மார்க் கார்ணி பார்க்கப்பட்டதும் அவரது தெரிகுக்கு ஒரு முக்கிய காரணம். நாடு தழுவிய கருத்துக்கணிப்பில் எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் லிபரல் கட்சிக்குமிடையேயிருந்த பாரிய வித்தியாசம் இப்போது தகர்ந்த…
-
- 0 replies
- 337 views
-
-
[size=4]திரு. சிவந்தன் கோபி அவர்களது உண்ணாநிலைப் போராட்டம் நேற்றுடன் இருபத்தியொரு நாட்களை கடந்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவிக்க பிரான்சிலிருந்து வந்த பன்னிரண்டு தமிழர்கள் அவருடன் நேற்றைய நாளைக் கழித்தனர்.[/size] [size=4]தமிழ்த் தோழமை இயக்கத் தொண்டர்கள் பலரும் திரு. சிவந்தனது உண்ணாநிலைப் போராட்டம் நடைபெறும் இடத்தின் சுற்று வட்டாரத்தில் துண்டுப்பிரசுரங்களை விநியோகிகத்தனர், பெருமளவிலான பன்னாட்டு மக்கள் அவற்றை பெற்றுச் சென்றதுடன், உண்ணாநிலைப் போரட்டத்திற்கான காரணங்களைக் கேட்டறிந்து கொண்டனர்.[/size] [size=4]ஒலிம்பிக் போட்டிகளின் இறுதிநாளான இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை திரு. சிவந்தன் தனது உண்ணாநிலைப் போராட்டத்தை நிறைவு செய்யவிருக்கிறார். நாளை காலையிலிர…
-
- 0 replies
- 408 views
-