Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சுவிஸில் இலங்கை தமிழ் இளைஞன் மர்மமான முறையில் உயிரிழப்பு: இருவர் கைது சுவிஸில் வசித்து வந்த இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளாட் ப்ரூக்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 34 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 18ஆம் திகதி குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர் திருகோணமலையை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர சேவை மையத்திற்கு கிடைத்த அழைப்பின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், சம்பவ இடத்திலேயே இருவரையும் கைது செய்துள்ளனர். 40 மற்றும் 54 வயதான இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். …

  2. 12 SEP, 2024 | 01:37 PM யுத்த குற்றங்களில் ஈடுபட்ட இலங்கையர்களிற்கு எதிராக தடைகள் விதிக்கப்படுமா என்பது குறித்து பிரிட்டன் தெளிவான பதிலை வழங்க தவறியுள்ளது. எதிர்கால தடைகள் குறித்த ஊகங்களை வெளியிடுவது பொருத்தமற்ற விடயம் ஏனென்றால் தடைகளினால் ஏற்படக்கூடிய தாக்கத்தினை அது குறைக்கலாம் என பிரிட்டனின் வெளிவிவகார, பொதுநலவாய, அபிவிருத்தி அலுவலக இராஜாங்க அமைச்சர் கதெரின் வெஸ்ட் தெரிவித்துள்ளார். இலங்கையில் யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிரான மக்னிட்ஸ்கி பாணியிலான தடைகளின் தாக்கம் குறித்த எழுத்துமூல கேள்விக்கே அவர் இதனை தெரிவித்துள்ளார். மனித உரிமை விவகாரத்தில் இலங்கை பிரிட்டனிற்கு தொடர்ந்தும் முன்னுரிமைக்குரிய நாடா…

  3. சுவிட்சர்லாந்து (Switzerland) தமிழ் அமைப்புகளிடையே நடு வீதியில் ஏற்பட்ட சண்டை காரணமாக அப்பகுதியில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றையதினம் (09.09.2024) இடம்பெற்றுள்ளது. தமிழ் அமைப்புகளிடையே நடக்கவிருந்த கூட்டம் தொடர்பாக ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாகவே இந்த சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம், அப்பகுதியில் வசிக்கும் தமிழர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. https://www.facebook.com/LankasriTv/videos/1196935188021042/?ref=embed_video&t=1 https://ibctamil.com/article/tamil-organizations-fight-on-road-in-switzerland-1725930743#google_vignette

  4. 11 SEP, 2024 | 03:04 PM இங்கிலாந்தின் ஓவல் மைதானத்திற்கு வெளியே தமிழ் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறித்து இலங்கை அரசாங்கம் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து இலங்கை அணிகளிற்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் ஓவல்மைதானத்தில் இடம்பெற்றவேளை 9 ம் திகதி புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈ:டுபட்டனர். அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களிற்காக இலங்கையின் கிரிக்கெட் அணியை சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தடை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். அவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் கொடி போன்றவற்றுடன் காணப்பட்டனர்…

  5. மக்களை எப்படி ஏமாற்றலாம், அதன் மூலம் தம் சொந்த நிதி நிலையை உயர்த்தலாம் என அலையும் பிரிவின் அறிக்கை இது. பங்கு பிரிப்புச் சண்டை இன்னும் தீவிரமாக தொடர்கிறது.

  6. 07 SEP, 2024 | 04:12 PM (நமது நிருபர்) கனேடிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் முடிசூட்டு பதக்கத்தை இம்முறை கணேசன் சுகுமார் மற்றும் குலா செல்லத்துரை ஆகிய இரு புலம்பெயர் தமிழர்கள் பெற்றுள்ளனர். கனேடிய அரசினால் மொத்தமாக 18 கனேடியர்களுக்கு இந்த உயர் அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன், அவர்களில் மேற்குறிப்பிட்ட இரண்டு புலம்பெயர் தமிழர்களும் உள்ளடங்குகின்றனர். இந்த முடிசூட்டு பதக்கமானது மன்னர் மூன்றாம் சார்ல்ஸின் முடிசூட்டு விழாவைக் குறிக்கும் விதமாக கனேடிய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட உயர் பெருமைக்குரிய பதக்கமாகும். கனடாவின் ஆளுநர் நாயகம் மேரி சிமொனினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அங்கீகாரம்,…

  7. 25 வயது பெண்ணை பார்த்து மயங்கிய 52 வயது, சுவிஸ் நபர் – 47 இலட்சம் பறிபோனது- 3 பெண்கள் கைது. இளம் பெண்ணின் டிக்டொக் வீடியோக்களைப் பார்த்து ஏமாந்த 52 வயதுடைய ஒருவர் 45 லட்சம் ரூபாவைப் பறிகொடுத்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த மோசடிச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தற்போது சுவிஸ் நாட்டில் வசிக்கும் 52 வயதான நபரே இச்சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார். இந்தநிலையில் 25 வயதுடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் பெயரில் அவருடைய வட்ஸ் அப் கணக்குக்கு டிக்டொக் வீடியோக்கள் அனுப்பட்டுள்ளன. அதையடுத்து அவர்கள் இருவரும் தொடர்பாடல்களை ஆரம்பித்துள்ள…

  8. Published By: RAJEEBAN 06 SEP, 2024 | 02:13 PM கனடாவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரச்சட்டத்திற்கு எதிராக இலங்கையை சேர்ந்த குழுக்கள் தாக்கல் செய்த மனுவை நிராகரித்துள்ளதுடன் இனப்படுகொலை கல்வி வாரச்சட்டம் கனடாவின் அரசமைப்பிற்குட்பட்டது என தெரிவித்துள்ளது. கனடா நீதிமன்றம் இனப்படுகொலை கல்விவாரச்சட்டம் கனடாவின் அரசமைப்பிற்கு உட்பட்ட விடயம் என தெரிவித்ததை தொடர்ந்து இலங்கை கனடா செயற்பாட்டு கூட்டமைப்பு என்ற அமைப்பு இதற்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்த நிலையிலேயே மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. கனடா அரசாங்கம் தனது அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட விதத்தில் செயற்படுகின்றது,கருத்துசுதந்…

  9. பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் உமாகுமரனுடன் சிறீதரன் எம்.பி சந்திப்பு! செப்டம்பர் 04, 2024 பிரித்தானியாவின் முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரும், ஈழத்தமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவருமான உமா குமரனுக்கும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பு, பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த செவ்வாய் நடைபெற்றுள்ளது. தமிழ்மக்களின் மீது இலங்கை அரசால் கட்டமைக்கப்பட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலை, அதற்கான நீதிப் பொறிமுறை, ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் சமகால இன ஒடுக்குமுறைகள், மக்களின் அடுத்தகட்ட எதிர்பார்ப்புகள் நோக்கிய அரசியல் முன்னகர்வுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன. குறித…

  10. பாரா ஒலிம்பிக் போட்டியில்... ஈழத்தை பூர்வீகமாக கொண்ட இத்தாலிய தமிழர், தங்கம் வென்று மூன்று முறை உலக சாதனை படைத்துள்ளார். பாரா ஒலிம்பிக் தடகள வீரர் ரிகிவன் கணேசமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை மாலை பாரிஸில் தங்கம் வென்றார், மறக்க முடியாத இரவில் அவர் வெற்றிக்கான பாதையில் மூன்று முறை F52 வட்டு எறிதலுக்கான உலக சாதனையை முறியடித்தார். ஸ்டேட் டி பிரான்ஸில் போட்டியிட்ட அவர், தனது இரண்டாவது முயற்சியில் 25.48 மீட்டர் தூரம் எறிந்து உலக சாதனையை முறியடித்தார். சிறிது நேரத்தில், அவர் 25.80 மீட்டர் எறிந்து தனது சொந்த சாதனையை முறியடித்தார். கூட்டம் பரவசமடைந்தது, ஆனால் கணேசமூர்த்தி இன்னும் முடியவில்லை. அவர் 27.06 மீட்டர் தூரம் எறிந்து, இந்த நிகழ்வில் தனது மூன்றாவது உலக சாதனையை அடைந்து இத…

  11. விராஜ் மென்டிஸ் அவர்களிற்கு “மானிட உரிமைக்குரல்” மதிப்பளிப்பு. Posted on August 31, 2024 by சமர்வீரன் 159 0 30.8.2024 விராஜ் மென்டிஸ் அவர்களிற்கு “மானிட உரிமைக்குரல்” மதிப்பளிப்பு தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தின் நியாயக் கோட்பாடுகளையும் தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களது போரியற் சித்தாந்தங்களையும் ஏற்று, தமிழின அழிப்பிற்கான நீதித்தேடலில் உறுதியோடு பணியாற்றிவந்த விராஜ் மென்டிஸ் அவர்கள், கடந்த 16.08.2024 அன்று உடல்நலக்குறைவால் சாவடைந்தார் என்ற செய்தியானது எமக்கு ஆழ்ந்த துயரினை ஏற்படுத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப்போராட்டம் சார்ந்த தெளிவான நிலைப்பாட்டினை ஆழமாக உள்வாங்கி, தமிழ்மக்கள் …

    • 0 replies
    • 528 views
  12. கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு! கனேடியத் தமிழர் பேரவை வருடந்தோறும் தமிழர் தெருவிழா எனும் நிகழ்வினை நடத்திவருகின்ற நிலையில், இதன் பத்தாவது வருடமாக இந்த மாதம் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் குறித்த விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இம்முறை இடம்பெற்ற கனேடிய தமிழர் பேரவையின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் மக்கள் விழாவைப் புறக்கணிக்க வேண்டும் என கனடாவில் உள்ள சில தமிழ் அமைப்புகளும் சில செயற்பாட்டாளர்களும் கனடா வாழ் தமிழ் மக்களைக் கோரியிருந்தனர். தமிழர் தெருவிழா 2024 நிகழ்ச்சி தமிழர் தெருவிழா 2024 நிகழ்ச்சி வழமை போல அல்லாது இந்த வருடம் முதன்முதலாக மாபெரும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. …

  13. 28 AUG, 2024 | 02:10 PM இலங்கையை சேர்ந்த தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புகலிடக்கொள்கையே அவரின் மரணத்திற்கு காரணம் என தமிழ் அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ் அகதிகள் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது, தன்னைத் தானே தீக்கிரையாக்கிக் கொண்டு இளைஞன் மரணம். 23 வயதேயான இந்த இளைஞனை ஆஸ்திரேலியா அரசாங்கமும், அரசாங்கத்தின் அகதிகள் மீதான மோசமான கொள்கைகளுமே படுகொலை செய்துள்ளது. அவனது மரணப்படுக்கையின் கடைசி நொடிகளில் அவரோடு கூட இருந்த ரதி கூறியது இதுதான். "பல எதிர்கால கனவுகளோடும், வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற லட்சியத்தோடும் வாழ்ந்த 23 வயதான இ…

  14. விடுதலைப் புலிகளை, பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் நீடித்தது கனடா: கனடாவின் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் வரவேற்றது! adminAugust 15, 2024 தமிழ் போராளிகளின் அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் நீடிப்பதற்கான கனடாவின் தீர்மானத்தை இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கைய மூலம் வரவேற்றுள்ளது. உலகத் தமிழர் இயக்கத்துடன் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்புகளாக நீடிக்கும் கனடா அரசின் முடிவை இலங்கை அரசாங்கம் வரவேற்கிறது. அண்மைய மதிப்பாய்வின் படி, விடுதலைப் புலிகளின் எச்சங்கள் சர்வதேச நிதி சேகரிப்பு மற்றும் கொள்முதல் வலையமைப்பைக் கொண்டிருப்பதாக கனடா கூறுகிறது. புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளில் அவர்கள் சார்பாக நிதி திரட்டுவதன் …

  15. Britain Tamil MP: இனி Srilanka Govt மீது புதிய அணுகுமுறை இருக்குமா? Uma Kumaran Interview Uma Kumaran Interview: இலங்கை தமிழ் பூர்வீகத்தை கொண்ட உமா குமரன் சமீபத்தில் பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார். அவர் வைத்திருக்கும் திட்டங்கள் என்ன? பிபிசியின் ஜெயபிரகாஷ் நல்லுசாமி உமா குமாரனுடன் உரையாடியள்ளார்.

  16. சுவிட்சர்லாந்தில் (Switzerland) இன்று (10) ஆரம்பமாகி இடம்பெற்ற 25ஆவது தமிழர் விளையாட்டு விழாவில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் பொறுப்பாளர் ரகுபதியை மைதானத்தை விட்டு பொலிஸார் வெளியேற்றியுள்ளனர். விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் அவரது மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இருப்பதாக பல சர்ச்சைகள் எழுந்தன. இவற்றை அடிப்படையாக கொண்டு உலகம் முழுவதும் வாதப் பிரதிவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றிற்கிடையில், இன்று சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழாவிலும் குறித்த சர்ச்சையின் அடிப்படையிலேயே வைத்து கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்த விழாவின் போது விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் பொறுப்பை மீண்டும் ஏற்றுக் கொள்ளும் படி அதன் தலைவர் த…

  17. பாடகி தீயின் புதிய பாடல், பாடல் முழுவது யாழ்ப்பாணத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  18. யேர்மன் தலைநகரத்தில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு Posted on August 15, 2024 by சமர்வீரன் 68 0 முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி சிங்கள பேரினவாத அரசின் விமானப்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில், 53 அப்பாவி சிறுமிகள் கொல்லப்பட்டதோடு, 129 பேர் படுகாயமடைந்தனர்.குறித்த தாக்குதலில் காயமடைந்த பலர் தமது அவயவங்களை இழந்த நிலையில் வாழ்க்கையில் இன்றும் போராடிக்கொண்டிருக்கின்றனர். செஞ்சோலை படுகொலையின் 18 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்றைய தினம் யேர்மனி தலைநகரம் பேர்லினில் கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது…

    • 0 replies
    • 572 views
  19. (நா.தனுஜா) புலம்பெயர் தமிழர்களால் கனடாவின் பிரம்டன் நகரில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை நிர்மாணிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் முயற்சி இலங்கையிலும், கனேடியவாழ் இலங்கையர்கள் மத்தியிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் எனவும், ஆகவே இம்முயற்சிக்கு உதவவேண்டாம் எனவும் பிரம்டன் நகர கவுன்சில் மேயர் பற்ரிக் பிரவுனிடம் இலங்கை கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பிரம்டன் நகர கவுன்சில் மேயர் பற்ரிக் பிரவுனுக்கு கனடாவின் டொரன்டோ நகரிலுள்ள இலங்கை கொன்சியூலர் அலுவலகத்தின் கொன்சியூலர் நாயகம் துஷார ரொட்ரிகோ கடந்த மேமாதம் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: உங்களது ப…

  20. பிரித்தானியக் கலவரத்துக்கும் காலனித்துவத்துக்கும் என்ன தொடர்பு?…. நியூசிலாந்து சிற்சபேசன் அண்மையிலே பிரித்தானியாவில் நடைபெற்ற கலவரங்கள் முற்றிலும் எதிர்பார்க்கப்படாத ஒன்றல்ல. அங்கு குடியேறிகள் தொடர்பான ஒவ்வாமை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. காலாதிகாலமாகத் தொடர்கின்றது. மருத்துவம், கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றிலேயே அரசு தொடர்பில் பாமரனின் அபிப்பிராயம் உருவாகின்றது. அவற்றிலே குறைகள் ஏற்படுவது இயல்பானது. அவ்வாறு ஏற்படுகின்றபோது, செல்லும் செல்லாததுக்குச் செட்டியார் என்பதுபோல, குடியேறிகள் மீதான காழ்ப்புணர்வு பொங்கிப்பிரவாகிக்கின்றது. அதுவே, காலவோட்டத்தில் இயல்பாகவும் ஆகிவிடுகின்றது. அதனால், குடியேறிகள் தொடர்பான நல்லெண்ணமின்மை, நாளொருமேனியும் பொழுதொ…

  21. நிகழ்வுகள் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 16.09.2024 Posted on July 15, 2024 by சமர்வீரன் 206 0 தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 16.09.2024 – குறியீடு (kuriyeedu.com) 206 0

    • 0 replies
    • 1.5k views
  22. செஞ்சோலை மலர்களின் படுகொலை, 18 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு-யேர்மனி. Posted on August 7, 2024 by சமர்வீரன் 86 0 செஞ்சோலை மலர்களின் படுகொலை, 18 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு-யேர்மனி. – குறியீடு (kuriyeedu.com)

    • 0 replies
    • 359 views
  23. கனடா ஒன்ராரியோவில் உள்ள பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கழிப்புறும் கடற்கரையான வசாகா கடற்கரையிற்கு சுற்றுலா வரும் இந்தியர்கள், கடற்கரையில் குழி தோண்டி மலம் கழித்து அசுத்தம் செய்வதாக அக் கடற்கரை அமைந்துள்ள ஊரில் உள்ளவர்கள் விசனப்படுகின்றனர். இது தொடர்பாக அவ் ஊரில் உள்ள ஒரு பெண் ரிக்ரொக் கில் சில காணொளிகளை பகிர்ந்து விமர்சித்துள்ளதுடன் தன் குழந்தைகளை கூட அக் கடற்கரை க்கு அனுப்ப முடியாமல் உள்ளதாக கூறியுள்ளார். மேலும் அறிய: Videos from a Wasaga Beach resident in Ontario are being shared widely on social media after she accused immigrants, mainly from India, of defecating in holes on the beach and burying it. Tiktoker “ItsNattylxnn2.0,” is a local in the Onta…

  24. ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய தர்ஷன் செல்வராஜா! ஒலிம்பிக் (Olympic) தீபத்தை ஏந்திய முதல் இழங்கைத் தமிழர் என்ற பெருமையை பிரான்ஸில் வசித்துவரும் வெதுப்பக உரிமையாளர் தர்ஷன் செல்வராஜா (Tharshan Selvarajah) பெற்றுள்ளார். நேற்று மாலை 6.00 மணியளவில் தர்ஷன் செல்வராஜாவிடம் ஒலிம்பிக் தீபம் வழங்கப்பட்டிருந்த நிலையில் அவர் அதனை ஏந்தி சுமார் 2.5 கிலோமீற்றர் வலம் வந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்ஷன் பரிஸ் நகரில் கடந்த வருடம் இடம்பெற்ற பாண் தயாரிப்புப் போட்டியில் முதலிடம் பெற்றிருந்தார். இதனையடுத்து பிரான்ஸ் ஜனாதிபதியின் வசிப்பிடமாகிய எலிஸே மாளிகைக்கு பாண் விநியோகம் செய்யும் உரிமையையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. htt…

  25. டொராண்டோ நகரசபையில் உறுப்பினர் போட்டியிடும் தமிழர்: வேட்பு மனு தாக்கல் வெற்றிடமாக உள்ள டொராண்டோ நகரசபை உறுப்பினர் பதவிக்கு தமிழர் ஒருவரும் போட்டியிடுகிறார். இதன்படி, Don Valley மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நியமனங்கள் கடந்த திங்கட்கிழமை (22) ஆரம்பித்தது. இதன்படி, Evan சாம்பசிவம் என்ற தமிழரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இவர் முன்னதாக நகரசபை வேட்பாளராகவும் போட்டியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், குறித்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் செப்டம்பர் 19ஆம் திகதி வரை தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.