வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5795 topics in this forum
-
பனிக்கட்டிகளிடையே சிக்கிய ரஷ்யக் கப்பல் அண்டார்க்ட்டிக்கா கடற்கரைக்கருகே கடலில் சூழ்ந்த பனிக்கட்டிகளால், பயணிக்க முடியாமில் சிக்கியிருக்கும், ரஷ்ய ஆய்வுக் கப்பலை மீட்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. இதைச் சூழ்ந்திருக்கும் ஐஸ் கட்டிகள் மிகவும் தடிமனாக இருப்பதால், அவைகளை உடைத்து , கப்பல் பயணிக்கப் பாதை அமைப்பதில் சிரமம் ஏற்பட்டிருப்பதாக, இந்தக் கப்பலுக்கு உதவச் சென்ற பிரெஞ்சு மற்றும் சீனக் கப்பல்கள் கண்டறிந்துள்ளன. இந்தக் கப்பல்களைவிட மிக அதிகத் திறன் கொண்ட ஆஸ்திரேலிய ஐஸ் உடைக்கும் கப்பல் ஒன்று இப்போது இன்னும் இரண்டு நாட்களுக்குள் இந்த இடத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிலமை மிகவும் மோசமானால், கப்பலில் இருக்கும் 74 பயணிகள் மற்றும் கப்பல் ஊழியர்கள், வான…
-
- 0 replies
- 640 views
-
-
புலம்பெயர்ந்து வாழும் எம்மவரின் திறமைகளை வெளியுலகத்திற்கு கொண்டு வரவேண்டுமென்ற எண்ணத்திற்கமைய யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பால் 2012ம் ஆண்டு "ஈழத்து திறமைகள்" – ''Tamil Eelam’s Got Talent'' என்ற நிகழ்வு முதல் முறை இடம்பெற்றது. எம்மவரின் மத்தியில் ஒழிந்திருக்கும் திறமைகளை தொடர்ந்தும் வளரத்தெடுப்பதற்காக யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பால் "ஈழத்து திறமைகள்" என்ற நிகழ்வு இரண்டாம் முறையாக 21.12.2013 அன்று பிராங்போர்ட் (Frankfurt) நகரத்தில் பிரமாண்டமான மண்டபத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. இப்போட்டிநிகழ்வில் தனி நடனம், குழு நடனம், பாடல் என்று பல நிகழ்வுகள் இடம்பெற்றன. "ஈழத்து திறமைகள்'' என்ற போட்டி நிகழ்வில் பங்கேற்ற போட்டியாளர்களில் பலர் தாயகம் நோக்கிய க…
-
- 1 reply
- 619 views
-
-
Greater Toronto Area வை சுற்றி மின் துண்டிப்பால் தவிக்கும் மக்களுக்கு ஆதரவளித்து உதவ, தமிழ் கனடியன் சமூகத்தில் இருந்து உலர்ந்த மற்றும் கெடாத உணவுப் பொருட்களை சேகரிக்கும் பணியை தொடங்கியுள்ளது கனடியத் தமிழர் தேசிய அவை. தேவைப்படும் உணவுப் பொருட்களைத் திரட்டும் வரை ” தானம் ” திட்டம் அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும். கனடியத் தமிழர் தேசிய அவையின் உறுப்பினர்களும் , பிற தமிழ் மக்களும் உலர் உணவுகள் தானம் செய்து ஆதரவு அளிக்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் . விருப்பமுடையோர் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் NCCT தலைமை அலுவலகம் : 305 மில்னர் அவென்யூ, தொலைபேசி: 416.830.7703: Spicy Land: மார்க்கம் ரோடு மற்றும் ஸ்டீல்ஸ் அவென்யூ, ஸ்காபுறோ Eraa Supermarket நீல்…
-
- 0 replies
- 680 views
-
-
அண்டார்க்டிக்காவில் பனியில் சிக்கியிருக்கும் ரஷ்ய ஆய்வுக் கப்பல் செவ்வாய்க்கிழமையிலிருந்து அண்டார்க்டிக்காவில் உறைபனியில் சிக்கி பயணிக்க முடியாமல் இருக்கும் ரஷ்ய அறிவியல் ஆராய்ச்சிக் கப்பல் ஒன்றை மீட்க சீனாவின் ஐஸ் உடைக்கும் கப்பல் ஒன்று நெருங்கி வந்துகொண்டிருக்கிறது. கப்பலில் சிக்கியிருக்கும் குழுவினர் இப்போது கண்ணுக்கெட்டும் தொலைவில் சீனக் கப்பலைப் பார்க்க முடிவதாகத் தெரிகிறது. 'ஸ்னோ ட்ரேகன்' என்ற இந்த சீனக்கப்பல் கடலில் உறைந்திருக்கும் பனிக்கட்டிகளை வெட்டி ரஷ்யக் கப்பல் பயணிக்க உதவ ஒரு பாதையை உருவாக்க முயலுகிறது. இந்த ரஷ்யக் கப்பல் ஒரு ஆஸ்திரேலேஷியா அண்டார்க் குழுவினரால் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதில் 74 பேர் சிக்கியிருக்கிறார்கள். ஆஸ்திரேலியாத் தீவான டாஸ்மே…
-
- 0 replies
- 558 views
-
-
Please watch Al Jazeera for a documentary on Sri Lanka, will be broadcasting To night 10.30 pm (uk time) Al Jazeera English: Live Stream http://www.aljazeera.com/watch_now/ Friday 27/12/13: 0930; Saturday 28/12/13: 0330; Sunday 29/12/13: 1630. This documentary is on current issues and Human Rights in Sri Lanka (facebook)
-
- 0 replies
- 964 views
-
-
ஈழத்தின் பிரபல நாடகக் கலைஞரும் ஊடகவியலாளருமான டேவிட் ராஜேந்திரன் கடந்த 19-ம் திகதி வியாழக்கிழமை லண்டனில் காலமானார். ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக பிரான்சில் வசித்து வந்த டேவிட் ராஜேந்திரன், ஓரிரு மாதங்களுக்கு முன்னரே லண்டனில் குடியேறி சிறிது காலம் நோய்வாய்ப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்தார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இலங்கை வானொலி என்ற பெயரில் இயங்கி வந்த 1960-களின் பிற்பகுதியில் அந்த நிறுவனத்தில் தொழில் நுட்ப பொறுப்பாளராகப் பணியாற்றத் தொடங்கிய டேவிட் ராஜேந்திரன், அன்றைய நாட்களில் நேயர்கள் மத்தியில் பிரபல்யம் பெற்ற கிராமியப் பாடல்கள் நிகழ்ச்சியின் தொழில்நுட்பப் பொறுப்பாளராகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் ந…
-
- 0 replies
- 776 views
-
-
தென்னாபிரிக்க அணியின் சகலதுறை வீரரான ஜக்ஸ் கலிஸ் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார். நாளை ஆரம்பமாகவுள்ள இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியே தனது இறுதி டெஸ்ற் போட்டியாக அமையும் என அவர் அறிவித்துள்ளார். கிறிஸ்மஸ் தினமான இன்றைய தினம் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் இந்த முடிவு இலகுவானதாக அமைந்திருக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், குறிப்பாக தென்னாபிரிக்க அணி சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தி வரும் நிலையிலும், அவுஸ்ரேலியாவிற்கெதிரான தொடர் மிக விரைவில் இடம்பெறவுள்ள நிலையிலும் இந்த முடிவு கடினமானதாக அமைந்ததாகத் தெரிவித்தார். ஆனால் ஓய்வு பெறுவதற்கான சரியான நேரம் இதுவெனத் தான் கருது…
-
- 1 reply
- 562 views
-
-
தினமலர் விமர்சனம் பெரும் ஒளிப்பதிவாளர், எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் இயக்குநர்... என பண்முகங்கொண்ட பாலுமகேந்திரா, முதன்முதலாக நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் "தலைமுறைகள்! அவரே, இயக்குநர் எம்.சசிகுமாருடன் இணைந்து தயாரித்திருப்பதுடன் வழக்கம்போல ஒளிப்பதிவும் செய்து இயக்கியும் இருக்கும் இப்படத்தில் விசேஷம்... விழா வேத்திகளில் மட்டுமின்றி வீட்டிற்குள்ளேயும் கூட இதுநாள் வரை தொப்பியுடன் வாழ்ந்து, திரிந்த பாலுமகேந்திரா, தன் தொப்பியை தரமான தமிழ் சினிமாக்களின் தலைக்கு மணிமகுடமாக சூடிவிடும் முகமாக வெறும் தலையுடன் நடித்து "தலைமுறைகள் படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவுக்கு ராஜமரியாதை சேர்த்திருக்கிறார் என்றால் மிகையல்ல! கதைப்படி காவேரிக்கரை கிராமத்தை சேர்ந்த வயதான ஓய்வுபெ…
-
- 0 replies
- 966 views
-
-
கூகிள் தேடுதளத்தில், ஆபாச இணையத்தளங்களை தேடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளதாக கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2013 ஆம் ஆண்டுக்கான கூகிள் நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின் படி இந்த தகவல் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு இரண்டாம் இடத்தில் இருந்த இந்தியா, திமோர், எத்தியோப்பியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இம்முறை 5 ஆம் இடத்தில் உள்ளன. இதேவேளை, 2012 ஆம் ஆண்டில் இலங்கை ஆபாச இணையத்தள தேடலில் முதலிடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
-
- 6 replies
- 1.1k views
-
-
கடத்தலில் ஈடுபடுபவர்களால் சீன எல்லையிலிருந்து ஹொங்கொங்கிற்கு நேர்த்தியான முறையில் அமைக்கப்பட்ட இரகசிய சுரங்கப்பாதையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஷென்ஸென் நகரில் வாடகைக்கு பெறப்பட்ட கார் தரிப்பிடமொன்றிலிருந்து ஹொங்கொங்கிலுள்ள அடர்ந்த புதர் பகுதி வரை அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதையானது மின் விளக்குகள் காற்றோட்ட வசதி பொருட்களைக்கொண்டு செல்வதற்கான வசதி என்பவற்றை உள்ளடக்கியுள்ளது. 40 மீற்றர் நீளமும் 2.8 மீற்றர் அகலமும் ஒரு மீற்றர் உயரமும் கொண்ட மேற்படி சுரங்கப்பாதை புகையிரத பாதையில் கையடக்கத் தொலைபேசிகள் டப்லெட் கணினிகள் என்பவற்றை எடுத்துச் செல்வதற்கான வசதியைக் கொண்ட வாகனமும் காணப்பட்டுள்ளது. இந்த இரகசிய பாதையானது சுமார் 3 மில்லியன் செலவில் 4 மாதங்களை செல…
-
- 0 replies
- 628 views
-
-
எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரான்சில் நடைபெற இருக்கின்ற மாநகர சபைத் தேர்தல், மற்றும் மே மாதம் நடைபெறவிருக்கின்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் பிரான்சுக் குடியுரிமை பெற்ற அனைத்துத் தமிழ் மக்ககளையும் பங்கேற்று தமது வாக்குரிமையினைப் பயன்படுத்தி, உள்நாட்டு அரசியலிலும் சர்வதேச அரசியலிலும் வலுவான பாத்திரத்தை தமிழர்கள் வகிக்க வேண்டும் என பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை வேண்டுகோள் விடுக்கின்றது. அத்தேர்தல்களில் தமிழர்களை பங்கேற்கச்செய்வதற்கான தயார்படுத்தல்களில் மக்கள் பேரவை மும்முரமாகச் செயற்பட்டு வருகின்றது. நாம் வாழும் நாடுகளில் குடியுரிமையைப் பெற்று அந்நாடுகளின் பிரசைகளாக இருக்கும் நாம், எமது அரசியல் உரிமையினைப் பாதுகாத்துக் கொள்ள எமது வாக்குரிமையினைப் ப…
-
- 1 reply
- 559 views
-
-
இப்படித்தானுங்கோ சின்னனில எனக்கு உந்த வெள்ளயளை அறிமுகப்படுத்தினவை. அப்பேக்க எனக்கு ஒரு ஆறோ ஏழு வயசெண்டுதான் நினைக்கிறேன். ஆங்கில புத்தகத்தை எடுத்தா முதல் பக்கத்திலேயே போட்டு இருந்தாங்கள். எதோ என்னவோ என்று பிரமிச்சுபோய் பார்த்தேன். நம்மள மாதிரித்தான் இருந்தாங்களா அப்படியே விட்டுட்டன். பிறகு கொஞ்ச காலத்தில காந்தி உந்த வெள்ளையனே வெளியேறு என்று சொன்னார் எண்டும் படிப்பிச்சாங்கள். என்னடா இவங்கள் நல்லவங்கள் தானே உந்த மனுஷன் எதுக்கு இப்படி செய்கிறார் என்றும் யோசித்தேன். அந்தள் கொண்டு திரிஞ்ச கம்பை பார்த்த பயத்தில ஒன்றும் கேட்கவும் இல்லை யாரிடமும் சொல்லவும் இல்லை. அப்படியே கொஞ்சகாலம் போச்சா... எங்காவது நேரம் தவறி போனால் காணும் வெள்ளைக்காரன் மாதிரி நேரத்தை மதிக்கணும் என…
-
- 16 replies
- 1.5k views
-
-
-
- 21 replies
- 3.4k views
-
-
பிரான்சின் புறநகர் பகுதிகளில் ஒன்றான சென்டெனி பிரதேசத்தில் உள்ள BOURSE Du Travail மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை பிபகல் 3.00 மணிக்கு 2ம் லெப்டினன் கயல்விழியின் தந்தை ஈகைச்சுடர் ஏற்றி வைக்க அகவணக்கம் செலுத்தப்பட்டு மக்கள் தேசத்தின் புயல் பாலா அண்ணருக்கு குழந்தைகள் பெரியவர்கள் வரை சுடர் வணக்கமும், மலர்வணக்கமும் செய்திருந்தனர். வாழ்நாளெல்லாம் ஈழ மண் வாழ உழைத்தாய் என்கிற தேசத்தின் குரல் பாடலுக்கு செவரோன் தமிழ்ச்சோலை மாணவியும், மானம் ஒன்றே வாழ்வு பாடலுக்கு நந்தியார் தமிழ்ச்சோலை மாணவிகளும், பாலா அண்ணன் பக்கம் இருக்கின்றேன் பாடலுக்கும், அலைகடல் ஓரம் நிலாவரும் நேரம் பாடலுக்கு ஆதிபராசக்தி மாணவிகளும், வாடா வாடா புலியே வாடா பாடலுக்கு கிரித்தே மாணவிகளும், எமது நிலம் எமக்கு வேண்டும் எ…
-
- 0 replies
- 714 views
-
-
பிரான்சில் பாரிஸில்... காலம்: 04.01.2014 நேரம்: 16h00 , 18h00 இடம்: 22 Rue Quentin-Bauchart, 75008 paris தொடர்புக்கு: 06.68.81.13.39 / 06.61.59.86.52 / 06.51.46.98.92 event page: https://www.facebook.com/events/433827540050953/?ref=22
-
- 2 replies
- 697 views
-
-
உறவுகளே நீங்கள் எனக்கு உங்கள் உண்மையான கருத்தைச் சொல்ல வேண்டும். நான் யாழுக்கு வந்ததன் பின்னால்த்தான் கதைகளை எழுதத் தொடங்கினேன். உங்கள் ஆதரவும் உற்சாகமான கருத்துக்களுமே என்னை மேலும் மேலும் எழுதத் தூண்டியது. நீங்கள் நன்றாக இருக்கிறது என்று கருத்து எழுதும் போதெல்லாம் எதோ சாதித்துவிட்டதுபோல் மனதில் தோன்றும். எனக்குள் நானே நானும் ஒரு எழுத்தாளர் என்னும் கர்வம் கொண்டேன். சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு என்னை உச்சாணிக் கொப்பிலிருந்து கீழே வீழ்ந்துவிட்ட விட்ட மனநிலைக்குக் கொண்டுவந்தது மட்டுமல்லாது மேற்கொண்டு என்னால் ஒரு கதையைக் கூட எழுதுவதற்கு முடியாத மன நிலையையும் கொண்டுவந்துவிட்டது. அவரும் ஒரு எழுத்தாளர். பத்திரிகையிலும் எழுதுபவர். எனது இரு கதைகளை ஒரு பேப்பரில் பார்த…
-
- 87 replies
- 6k views
-
-
அகதி தஞ்சம் கோரி நெதர்லாந்து நாட்டுக்கு வந்த குடும்பம் ஒன்றை அகதி தஞ்ச கோரிக்கை விசாரணையின் போது மிரட்டிய சிறிலங்காவைச் சேர்ந்த தமிழ் மொழி பெயர்ப்பாளர் நெதர்லாந்து நாட்டின் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகத் சங்கதி24ன் நெதர்லாந்துச் செய்தியாளர் தொிவிக்கின்றார். நெதர்லாந்து நாட்டின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அகதி தஞ்ச கோரிக்கையளர்கள் பிரிவில் தமிழ் மொழி பெயர்ப்பாளராக பணியாற்றிய முத்துக்குமார் என்பவரே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மாதம் இலங்கையில் இருந்து அகதி தஞ்சம் கோரி வந்த குடும்பம் ஒன்றை விசாரணையின்போது குறித்த மொழி பெயர்ப்பாளர், குடிவரவு குடியகல்வு அதிகாரிகளின் அனுமதியின்றி அவர்க…
-
- 1 reply
- 1.4k views
-
-
சிறிலங்காவில் பல மில்லியன் பெறுமதியான முதலீடுகளைச் செய்துவரும் நாடுகளில் ஒன்றாக தென்னாபிரிக்கா உள்ள நிலையில், தென்னாபிரிக்கா முறையிலான உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவினை சிறிலங்காவில் அமைப்பதற்கான தென்னாபிரிக்க அரசாங்கத்தின் பரிந்துரையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நிராகரித்துள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றில் இதனை நிராகரித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், நீதி வழங்களிலிருந்து சிறிலங்காவினைக் காப்பாற்ற அல்லது நீதியை தாமதப்படுத்த சிறிலங்கா அரசுக்கு உதவும் பொறிமுறையாகலாம் என அர்தீர்மானத்தில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் இனவழிப்பை முடிவுகட்டி நிலையான சமாதான அரசியல் …
-
- 1 reply
- 909 views
-
-
http://www.aanthaireporter.com/?p=5629 “விடுதலையின் பாதையில்” படபபிடிப்பின் நடந்த விறுவிறுப்புகள்! கடந்த ஆடி ஆவணி மாத காலகட்டத்தில் அமெரிக்க திரைப்பட கலைஞர் சுகிர் பொன்ச்சாமி தனது குழுவுடன் ஆந்திர மாநிலம் விசாகபட்டிணத்தின் தெற்கே உள்ள தேவிபுரம் எனும் ஒரு சிறிய கிராமத்துக்குச் சென்றார். அவர்கள் அங்கே உள்ள திரை தொழிலாளிகளுடன் சேர்ந்து விடுதலையின் பாதையில் எனும் படத்தை தயாரிக்க திட்டமிடடிருநதனர். இந்த விடுதலையின் பாதைக்கும் ஆந்திரா இரண்டாக பாடாய் படுவதற்கும் தொடர்பில்லை. விடுதலையின் பாதை குழுவுக்கு கிடைத்த முதல் வரவேற்ப்பும் அங்கு குழுமியிருந்த திரை தொழிலாளிகளும் கொடுத்த உற்சாகம் பெரிய தெம்பைக் கொடுத்தது.இதற்கிடையில் தேவிபுரம் எனப்படும் ஆன்மிக கிராமம் ப…
-
- 0 replies
- 735 views
-
-
இந்த மாதம் 12ஆம் திகதி மனிதஉரிமை நாட்கள் என்ற தலைப்பில் சுவிசில் Schaffhausen மாநிலத்தில் கொலைக்களங்கள் (No Firezone - Killing fields ) திரையிடப்பட்டது. ஏற்கனவே மூன்று முறை இதனை பார்த்துவிட்டேன். ஆனாலும் கலந்துகொள்வது என உறுதியாக இருந்தேன். காரணம், Mcrae Cullum அவர்களின் வருகை! இன்னொரு காரணம் அங்கே வரப்போகின்ற சிங்களவர்களின் பரப்புரை. தமிழர்கள் அதிகமாக வந்தாலும் எதிர்த்து கேள்வியோ குரல்களோ எழுப்புவதில்லை (மொழிப்பிரச்சனையாகவும் இருக்கலாம்). ஏற்கனவே இரண்டு முறை மாற்றுக்கருத்தாளர்கள் என்ற பெயரில் இவர்கள் பரப்பிய விஷத்தை ஓரிரு தமிழர்கள் கருத்துக்களால் முறியடித்திருந்தனர். இம்முறையும் இது நடைபெறும் என்று எதிர்பார்த்திருந்தேன். எதிரிகள் பேசிவிடக்கூடாது என்பது அல்ல என் …
-
- 1 reply
- 686 views
-
-
Neethan Shan named NDP’s provincial candidate in Scarborough-Rouge River Scarborough Mirror Ontario New Democrat Neethan Shan has been chosen to run for the party in Scarborough-Rouge River, setting up what could be a three-way election battle in the riding. Well known in the Tamil-Canadian community, Shan, who is also the ONDP’s president, was nominated Sunday at the Chinese Cultural Centre of Greater Toronto. The choice pits Shan for the second time against the riding’s veteran Liberal MPP Bas Balkissoon. An ONDP release on Monday, Dec. 16, noted Shan “came within only about six per cent of unseating the incumbent” in 2011. In that contest, Balkissoon captured 42…
-
- 0 replies
- 506 views
-
-
2009 ஆண்டிற்கு பின்னர் தமிழர்களின் அபிலாசைகளை நிவர்த்தி செய்யக்கூடிய அரசியல் வேலைத்திட்டங்கள் தமிழ் மக்களின் கட்டமைப்புக்களால் சர்வதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்றன, அத்துடன் வடமாகான சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அவர்கள் தமிழ் மக்களின் அடிப்படைத்தேவைகள், அவர்களின் தொடர்ச்சியான துயரங்கள், மற்றும் அடிப்படை உரிமைகள் தாயகத்தில் மறுக்கப்பட்டு வருவது பற்றியும், நான்கரை ஆண்டுகளிற்கு பின்னரும் தமிழ் மக்கள் இராணுவத்தின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் எந்த விதமான முன்னேற்றங்களும் அற்ற நிலையில் வாழ்ந்து வருவதை எடுத்துக்கூறினார். இவர் தனது சந்திப்பின்போது, டெனிஸ் பாராளுமன்ற சபாநாயகர் மோவ்ன்ஸ் லுக்க்ரொவ்ற் சோசலிச ஐனநாயக கட்சியின் பாராளுமன்ற குழுவின் உபதலைவர் மோவ்ன்ஸ் ஐன்சின…
-
- 0 replies
- 2.1k views
-
-
சர்வதேச மனித உரிமைச்சங்கத்தின் அழைப்பை ஏற்று அனந்தி சசிதரன் அவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அங்கு ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகள் மற்றும் மனித உரிமை தொடர்பான குழுக்களைச் சந்தித்துக் கலந்துரையாடிக்கொண்டிருக்கின்றார். அந்தவகையில் வடமாகாண சபை உறுப்பினராகிய அனந்தி சசிதரன் அவர்கள் மேற்கொள்ளும் ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தில் முதல்கட்டமாக யேர்மன் நாட்டின் வெளிவிவகார அமைச்சில் உயர்மட்ட அரச அதிகாரிகளை சந்தித்து தாயகத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எடுத்துரைத்தார் . அத்தோடு தமிழ் மக்கள் சுதந்திரமாகவும் உரிமையோடும் தமது பூர்வீக மண்ணில் வாழ அனைத்துலக சமூகத்தின் ஆதரவின் அவசியம் ஏன் என குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அ…
-
- 2 replies
- 852 views
- 1 follower
-
-
இது டிசம்பர் மாதம். மேற்குலக நாடுகளில் கொட்டும் பனிமழை நடுவே கிரிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் சூடுபிடித்துள்ளன. கிரிஸ்துமஸ் தினம் அண்மித்து வர வர, தமது நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுக்கென இரகசியமாக கிரிஸ்துமஸ்து பரிசுக்களை வாங்கி அவர்களை ஆச்சரியப்படுத்தும் அதிரடியாக அவர்கள் எதிர்பார்க்காத ஒரு தருணம் கொடுப்பது இந்நாளில் வழக்கமாகும். ஆனால் பிரபல வெஸ்ட்ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனம் தனது பயணிகளுக்கு எப்படி அவர்கள் எதிர்பார்க்காத வகையில் ஆச்சரியப்பரிசு கொடுத்தது என பார்க்கப் போகிறீர்களா? இந்த வீடியோ உங்களுக்கானது http://www.4tamilmedia.com/lifestyle/youtube-corner/19384-westjet-christmas-miracle-real-time-giving நீதி எப்போதும் பெரிதாகவே கேழுங்கள்.
-
- 0 replies
- 846 views
-
-
SALUTE TO MADIBA - “POWER IS OURS” REDEDICATE OURSELVES TO THE LONG WALK TO FREEDOM: TGTE Transnational Government of Tamil Eelam (TGTE) Salutes Mandela NEW YORK, USA, December 15, 2013 /EINPresswire.com/ -- 1) Mandela was labeled as a “terrorist” and sentenced to prison for twenty-seven years 2) Even though Mandela was elected President of South Africa in 1994 and was awarded the Nobel Peace Prize, his name was not removed from the “Terrorist Watch List” by the US Government until 2008. 3) Mandela’s life demonstrated to the rest of us that through fierce commitment to the cause, sacrifice, and determination, eventually we too shall prevail. 4) Mandela has been a sy…
-
- 0 replies
- 1.4k views
-