நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
809 topics in this forum
-
வல்லினம் இணைய இதழில் எனது கசகறணம் நாவல் சம்பந்தமாக ஷோபா சக்தியின் கேள்வி - பதில் வந்த நாளிலிருந்து இதுவரையிலும் முகபுத்தகத்தில் வந்துகொண்டிருக்கும் கருத்துக்களையும் கருத்து மோதல்களையும் அவதானித்துக் கொண்டிருந்த வேளையில் என்மீது பாய்ந்த மூன்று அஸ்திரங்க...ள் இவைகளென்றும், அவைகளுக்கு விளக்கம் தருகிறேன் என்று கூறிக்கொண்டு வந்திருக்கும் ஷோபா, மீண்டும் மீண்டும் என்னையும் என்நாவலையும் கேலிக்குள்ளாக்குகின்றார் என்பதனாலேயே நானும் மௌனம் கலைய வேண்டிய நிலைக்கு வந்துள்ளேன். சசீவன் சொன்னதுபோல தானே கேள்வி தானே பதில் என்றாகக்கூட இருக்கலாம். அதற்கான எதிர்வினைகளை எதிர்கொள்ள ஷோபா சொல்லுகின்ற நொண்டிச்சாட்டுகள்தான் நகைப்பூட்டுகின்றது. எத்தனை தழுவல்கள் - நழுவல்கள், எத்தனை எடுத்துக் க…
-
- 17 replies
- 2.4k views
-
-
கருணாகரனின் “இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் மற்றும் படுவான்கரைக்குறிப்புகள்“ – புதிய கவிதை நூல் வெளியீடு கருணாகரனின் புதிய கவிதை நூல் – “இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் மற்றும் படுவான்கரைக்குறிப்புகள்“ – வெளியீடும் விமர்சனமும் எதிர்வரும் 10.01.2016 ஞாயிற்றுக்கிழமை பி.ப.300 மணிக்கு நடைபெறவுள்ளது. சு. ஸ்ரீகுமரன் (இயல்வாணன்) தலைமையில், யாழ்ப்பாணம் புதிய உயர்கல்வி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் கவிஞர் ந. சத்தியபாலன், தாயகம் இதழின் ஆசிரியர் க. தணிகாசலம், விமர்சகர் சி. ரமேஸ், சத்தியன், ஞானசக்தி ஸ்ரீதரன், வேல் நந்தகுமார் மற்றும் கருணாகரன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இலங்கையில் 2009 இல் ஏற்பட்ட போரழிவுக்குப் பின்னான மீந்து போன மனிதர்களின் வாழ்…
-
- 0 replies
- 352 views
-
-
ஹரோ இலக்கிய சந்தியும் Post Code War உம். எஸ். வாசன் தாம் வாழும் சமூகத்திலிருந்து தம்மை வேறுபடுத்திக் காட்ட அல்லது மேம்படுத்திக் காட்ட, அச்சமூகத்திலிருந்து தம்மை சற்று வித்தியாசமாக அடையாளப்படுத்துவதும், பின் அந்த அடையாளம் சார்ந்த வேறு சிலரை தன்னோடு இணைத்து தம்மை ஒரு புதிய அடையாளத்துடன் வெளிப்படுத்துவதும் மனித இயல்புகளில் அல்லது பலவீனங்களில் ஒன்றாகும். இது மொழியால், கலாச்சாரத்தால், அல்லது பண்பாட்டால் ஒன்றிணைந்த மக்கட் கூட்டங்களை கூட வேறு பல காரணங்களால் பிளவு படும் சாத்தியப்பாட்டினை ஏற்படுத்திவிடுகிறது. இதில் பிரதேச வேறுபாடு முக்கிய கவனத்தினை பெறுகின்றது. தாம் வாழுகின்ற நாட்டில் வட்டாரமாக, வலயமாக, குறிச்சியாக பிரித்துப் பார்த்து தம்மைப் பெருமைப்படுத்திக் கொள்வதும…
-
- 0 replies
- 624 views
-
-
இங்கே வாசிக்க இருக்கும் இந்தக் கட்டுரையின் தலைப்புக்கேற்ப தமிழ் புதினங்கள் அதாவது நாவல்கள் கனடாவில் வெளியீடு செய்யப்பட்டதாகவும், கனடிய எழுத்தாளர்களுடையதாகவும் இருக்கவேண்டும் என்ற ஒரு வரையறைக்குள்தான் இக்கட்டுரை வரையப்பட்டுள்ளது. வேறு பல புதினங்கள் இங்கே பலராலும் வெளியிடப் பட்டாலும் அவை இந்த வரையறைக்குள் உட்படாததால் அவற்றை இங்கே குறிப்பிடவில்லை. எனது தேடதல் மூலம் கிடைத்த தகவல்களை மட்டுமே இங்கே தருகின்றேன். எதையாவது தவறவிட்டிருந்தால், அவற்றை எனக்குத் தெரியப்படுத்தினால் அவற்றை எனது முழுமையான கட்டுரையில் இணைத்து கொள்ள முடியும் என்பதையும் அதன் மூலம் கட்டுரை முழுமை பெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். 1983 ஆம் ஆண்டிற்குப் பின்னர்தான் அநேகமான ஈழத்து தமிழ் எழுத்தாளர்கள…
-
- 0 replies
- 1.1k views
-
-
'போர்ச்சூழலில் இடம்பெற்ற முக்கிய விடயங்கள் போர் இலக்கியங்கள் மூலமே வெளிக்கொணரப்படுகின்றன. போர் இலக்கியத்தின் முக்கிய பரிமாணம் அவை போரின் சாட்சியங்களாக அமைவதுடன் போரின் நிலைமைகளை, கள நிலவரங்களை வெளி உலகிற்குத் தெரியப்படுத்தி உலகின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்புவதுதான். 'ஞானம்" சஞ்சிகையின் 150 -வது இதழை, போர் இலக்கியச் சிறப்பிதழாக 600 பக்கங்களில் வெளிக்கொணர்ந்தோம். ஒவ்வொரு காலகட்டத்திலும் எழுதப்படும் இலக்கியங்கள் தொகுக்கப்படல் வேண்டும். சங்க கால புறநானூறுப் பாடல்கள் தொகுக்கப்பட்டதால்தான் நாம் அன்றைய தமிழரின் போர்பற்றி அறிய முடிகிறது. இத்தகைய பாரம்பரியத்தில் தொகுக்கப்பட்டதுதான் 'ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்" என்ற தொகுப்பாகும்." இவ்வாறு 'ஞானம்" சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் தி. …
-
- 1 reply
- 540 views
-
-
லண்டன்காரரும் BMM புரட்சியும். சேனன் எழுதிய ‘லண்டன்காரர்’ நாவல் குறித்த ஒரு பார்வை. எஸ்.வாசன் - நூல் அறிமுகம் நவீன தமிழ் இலக்கிய மரபானது புலம்பெயர் இலக்கியப் படைப்புக்களினால் இன்னொரு பரிமாணத்திற்கு நகர்த்திச் செல்லப் பட்ட போதிலும் இதுவரை வெளிவந்த அநேகமான புலம்பெயர் இலக்கியப் படைப்புக்கள் யாவும் தாயகம் நோக்கிய எண்ணங்களையும் ஏக்கங்களையும் பிரதிபலிப்பவையாக அல்லது புலப்பெயர்ந்த ஒரு நிலத்தில் அவர்கள் எதிர்நோக்கிய புதிய நெருக்கடிகளின் வெளிபாடுகளாகவும் மட்டுமே அமைந்திருந்தன. இவற்றிட்கு மாறாக இப்புலம்பெயர் மண்ணில் தாம் எதிர் நோக்குகின்ற நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் எதிர் கொள்கின்ற மற்றைய சமூகங்களையும் கதை மாந்தர்களாக கொண்டு அம்மண்ணின் மைய அரசியல…
-
- 0 replies
- 767 views
-
-
விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையிலான போரில் கட்டாயமாக உட்படுத்தப்பட்டு, பிறகு மீட்கப்பட்டு மறுவாழ்வு முகாம்களில் உள்ள சிறார்கள் பலரின் கவிதைகள், ஓவியங்களைத் தொகுத்து ஒரு புத்தகமாகச் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டார் இலங்கையைச் சேர்ந்த மனநல மருத்துவர் எஸ். சிவதாஸ். சிறார்களின் எதிர்கால நம்பிக்கை இந்தக் கவிதைகளையும் ஓவியங்களையும் பார்க்கும் போது எல்லா சோகங்களையும் இழப்புகளையும் மீறி அந்தச் சிறார்களின் நம்பிக்கை துலக்கமாகத் தெரிகிறது. அந்த முகாம்களில் வாழும் சிறார்களில் அனைவரும் தங்கள் குடும்பத்தினரில் ஒருவரையாவது இழந்தவர்கள்; வீடிழந்து, உறவிழந்து, வாழ்விழந்து தங்களுக்கு எந்தவிதத்திலும் பொறுப்பில்லாத பெரும் தவறுக்கு பலியாகி இன்று நிற…
-
- 0 replies
- 475 views
-
-
வன்னி நாவல் பற்றிய என்பார்வை - எம். ஜெயராமசர்மா … அவுஸ்த்திரேலியா வன்னி நாவல் ஒரு வரலாற்றுப் பதிவு என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. பொதுவாகக் கதைகள் எழுதப்படும்பொழுது அது சுவைக்காக மட்டுமே எழுதப் படுவதையே காண்கின்றோம்.அந்தச்சுவையானது ஒரு குறிப்பிட்ட நிலையுடன் நின்றுவிடும்.பின்னர் அது பற்றி யாருமே பேசமாட்டார்கள். ஆனால்” வன்னி ‘ நாவல் அப்படியானதன்று.தமிழன் உள்ளகாலம் வரை பேசப்படும் நாவலாக இருக்கும் என்பது எனது எண்ணமாகும். மஹாவம்சத்தை தூக்கிப் பிடிக்கிறார்கள். அது வரலாறு அல்ல. அது ஒரு இனத்தின் சுயபுராணக் கதையாகும். அதில் பல புனைவுகள் புகுத்தப் பட்டிருக் கின்றன. அதில் சொல்லப்படும் சம்பவங்கள் ஒருபக்கச் சார்பானதாகும். வன்னி நாவலையும் தமிழரின் …
-
- 0 replies
- 550 views
-
-
தமிழ்பேசும் மக்களின் விடுதலைக்காகவும், சுதந்திரத்திற்காகவும், அரசியல்- சமூகப் பொருளாதார- சமத்துவ மேம்பாட்டிற்காகவும் ,ஒரு தேசம் ஒன்றை நிர்மாணம் செய்வதற்கான கட்டுமானங்களை நடைமுறைப்படுத்தி தன்வாழ்வை எமக்காக அர்பணித்து வாழ்ந்த டேவிட் ஐயா அவர்கள் பற்றிய நினைவுப் பகிர்வும் கலந்துரையாடலும் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 6ம் திகதி ஞாயிறு அன்று பிற்பகல் 3 மணியிலிருந்து பிற்பகல் 8 மணிவரை பாரீசில் பின்வரும் முகவரியில் ந டைபெற் இருக்கிறது. இடம்: SALLE SANT BRUNO 9 , RUE SANT BRUNO 75018 PARIS Métro : LA CHAPELLE இந் நிகழ்வில் பி.ஏ காதர் அவர்களின் ‘இலங்கை தேசிய இனப் பிரச்சனையும் டேவிட் ஐயாவும்’ என்ற தலைப்பிலான உரையும், ‘அர்ப்பண வாழ்வில் வலிசுமந…
-
- 0 replies
- 422 views
-
-
#அவுஸ்திரேலியாவில் ஆயுத எழுத்து # அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ஆலோசனைக்கூட்டம் - வாசிப்பு அனுபவப்பகிர்வு . அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டுக்கான (2015 - 2016) முதலாவது ஆலோசனைக்கூட்டமும் வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 05-12-2015 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.00 மணியிலிருந்து இரவு 7.00 மணிவரையில் மெல்பனில் Mulgrave Neighborhood House ( 36 - 42 Mackie Road, Mulgrave - Vic - 3170) மண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், புதிய ஆண்டில் சங்கம் மேற்கொள்ளவுள்ள கலை - இலக்கிய நிகழ்வுகள் - மற்றும் இதர மாநில நகரங்களில் நடத்துவதற்கு உத்தேசித்துள்ள நிகழ்வுகள் பற்றிய ஆலோசனைக்கலந்துரையாடல் நடைபெ…
-
- 6 replies
- 1.2k views
-
-
நேற்று பாலன் தோழரின் 'சிறப்பு முகாம் சித்திரவதை முகாம்' நூல் வெளியீட்டுக்குச் சென்றிருந்தேன். வழக்கமாக இது போன்ற நிகழ்வுகளுக்கு வரும் எண்ணிக்கையிலானவர்களே வந்திருப்பார்கள் என்றெண்ணிச் சென்ற எனக்கு , நிகழ்வு நடந்த கூடம் நிரம்பி வழிந்ததைக்கண்டபோது ஆச்சரியமும், கூடவே மகிழ்ச்சியும் தோன்றின. எழுத்தாளர் பா.அ.ஜயகரனின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வு அமைப்புகள் பலவற்றின் கூட்டு முயற்சியாக நடைபெற்றதாக அறிந்தேன். நிகழ்வில் பல்வேறு அரசியல் கருத்துள்ளவர்களையும் காண முடிந்தது. குறிப்பாக மயில், ராதா , சேனா போன்ற தேடகம் நண்பர்கள் பலரையும், ஜான் மாஸ்ட்டர், சேரன், கற்சுறா, அலெக்ஸ் வர்மா, பரதன் நவரத்தினம், நிருபா நாகலிங்கம், ரதன், எஸ்.கே.விக்கினேஸ்வரன், மீராபாரதி, சிவவதனி பிரபாகரன் என்ற…
-
- 1 reply
- 629 views
-
-
வணக்கம் ,நண்பர்களே ,நான் இதுநாள் வரைக்கும் தரவிறக்கம் செய்து படித்து மகிழ்ந்த அணைத்து மின் நூல்களையும் ,உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .தங்களுக்கு எதுவும் நூல் தேவைபட்டால் ,கூறவும் ,நான் அதற்கு முயற்சி செய்து இங்கே பதிவிடுவேன் .அனைத்து நூல்களையும் ஒரே தொகுப்பாக்குவதில் சிறு ஆர்வம் . 1)Tamil ebooks Part—I தமிழின் மிகச்சிறந்த நூறு கதைகள் பாகம் ஒன்று ,பாகம் இரண்டு link--- http://downloads.ziddu.com/download/25085005/100_sirantha_kathaikal_Ra_Ki_Part1.rar.html Tamil ebo…
-
- 0 replies
- 3.4k views
-
-
பாரிஸுக்கு ஐ.எஸ். பொறுப்பு... ஐ.எஸ்.ஸுக்கு..? ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது பாரிஸ் நகரம். முதல் முறை சார்லி ஹெப்தோ கேலிச் சித்திரம் தொடர்பாக. சமீபத்தில் சாந்த் தெனி பகுதியில் நடந்திருக்கும் தாக்குதல் இரண்டாவது முறை. முந்தைய தாக்குதலுக்கு ஐ.எஸ்.தான் காரணம் என்று அரசல் புரசலாகப் பேசப்பட, இந்த முறை நடந்த தாக்குதலுக்கு 'நாங்கள்தான் செய்தோம்' என்று வெளிப்படையாகப் பொறுப்பேற்றுள்ளது ஐ.எஸ்.! இன்றைய உலகின் மிக முக்கியப் பிரச்சினைகளுள் ஒன்றாக ஐ.எஸ். அமைப்பின் செயல்பாடுகள் இருந்து வருகின்றன. ஒரு பக்கம் சிரியா மற்றும் இராக்கில் உள்நாட்டிலேயே பல்வேறு இன, மதக் குழுக்களிடையே …
-
- 0 replies
- 632 views
-
-
வைரமுத்து சிறுகதைகள் அன்புள்ள ஜெயமோகன், வைரமுத்து சிறுகதைகளில் விஞ்சி நிற்பது கதை வளமா, மொழி வளமா என்றொரு பட்டிமன்றம் விஜய்டிவியில் ஒளிபரப்பாகியுள்ளது. அவ்வை நடராஜன் நடுவர். மரபின் மைந்தன் முத்தையா, பர்வீன் சுல்தானா போன்ற வைரமுத்துவின் ரசிக பேரவையின் ஆஸ்தான தொண்டர்களின் புகழ்பேச்சுக்கள். பார்வையாளர்களின் பிரதானமான இடத்தில் அமர்ந்திருந்தவர் வைரமுத்து. தன் படைப்புகளின் மீதான சிலாகிப்புகளை கேட்டு புல்லரித்தது மகிழ்ந்து ரசித்து சிரித்துக் கொண்டிருந்தார் வைரமுத்து. தன்னுடைய சிறுகதைத் தொகுதியின் முன்னுரையில் கு.அழகிரிசாமி, ஜெயகாந்தன் போன்றவர்களின் தொடர்ச்சியாக தம்மை நிலைநிறுத்திக் கொள்ள முயல்கின்றார். இதனை எப்படிப் பார்க்கின்…
-
- 0 replies
- 572 views
-
-
ருக்மணி என்கிற பெண்ணைப் பற்றி ஓர் அரச மரம் பேசியதாக புனையப்பட்ட வ.வே.சு. ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ என்கிற தமிழின் முதல் சிறுகதை தொடங்கி இன்று வரை பல படைப்பாளிகள் தமிழ்ச் சிறுகதைக்கு மெருகேற்றியிருக்கிறார்கள். அந்த வரிசையில் தனக்கே உரிய மொழி அலங்காரத்துடன் சிறுகதைகளைப் படைத்திருக்கிறார் வைரமுத்து. ஒவ்வொன்றும் வெவ்வேறான கதைக் களன்களைக் கொண்டவை. ‘மனிதர்கள் மீண்டும் குரங்குகள் ஆகிறார்கள்’ என்று ஒரு கதை. “டெல்லி நகரம் முழுதும் இருக்கிற குரங்குகளை எல்லாம் டெல்லி எல்லையை விட்டு வெளியேற்றிவிடுங்கள்’’ என்று டெல்லி உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பிக்கிறது. குரங்குகளை ஏன் அப்புறப்படுத்தச் சொன்னார் நீதிபதி என்பதற்குப் பின்னால் ஒரு சுயநலப் படுதா விரிகிறது. குரங்கு…
-
- 0 replies
- 1.4k views
-
-
ம து போதையில் மாரடைத்துப் போன பரமேஸ்வரன் நாயருக்கு, சவரம் செய்து மூக்குச்சளி குண்டிப்பீ துடைத்து குளிப்பாட்டி பவுடர் போட்டு கை கால் பெருவிரல்கள் சேர்த்துக் கட்டி உடை மாற்றி சென்ட் அடித்து பிரேதத்தை கருநீள பெஞ்சில் நீளமாக படுக்கவைத்துவிட்டு கொஞ்சம் அருசியுடன் வந்தார் அப்பா. அன்னைக்கு ராத்திரி வீட்டில சோறு. பூரா பொண நாத்தம். ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள். பெரும் மனச்சிதைவை உருவாக்கிய ஒரு கவிதைத்தொகுதி. முதல் இரண்டு கவிதைகளுடன் வாசிப்பதை நிறுத்திவிட்டு பாரிஸின் புறநகர் நோக்கி சென்றுகொண்டிருந்த நீண்ட தொடரூந்தின் யன்னல் ஊடாக பார்வை வெளியே விழுத்தி என்னை ஆற்றுப்படுத்தினேன். அன்றொருநாள் பெரியம்மாவின் இறுதிக் க…
-
- 4 replies
- 1.1k views
-
-
பாரிஸில் ஆயுத எழுத்து ..கோமகனின் தனிக்கதை மற்றும் நிலவு குளிர்சியாக இல்லை .ஆகிய புத்தகங்களின் அறிமுகமும் திறனாய்வும் . ஆதரவு கொடுப்பவர்கள் .எதிர்ப்பவர்கள் .புறக்கணிப்பவர்கள் .அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன் .
-
- 10 replies
- 1k views
-
-
ஆங்கிலத்துடனான ஆரம்ப அறிமுகம் உள்ளவர்களிலிருந்து, ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் ஆங்கிலத்தை அறிமுகப்படுத்தும் நூல் இது. பல்வேறு இதழ்களில் பல்வேறு துறைகள் குறித்த கட்டுரைகளை எழுதிவரும் ஜி.எஸ். சுப்பிரமணியனின் நகைச்சுவை ததும்பும் நடை ஆங்கிலம் படிப்பதை இனிமையான அனுபவமாக்குகிறது. சுவாரஸ்யமான உதாரணங்கள், எளிய உதாரணங்கள், அழகான சித்திரங்கள் ஆகியவற்றின் மூலம் ஆங்கிலத்தை இலகுவாகப் புரியவைக்கும் நூல் இது. Price: Rs.190.00 Price: Rs.320.00 http://tamil.thehindu.com/publications/befriending-the-english-language/article7698664.ece
-
- 15 replies
- 4.2k views
-
-
பல வருடங்கள் முன்பே எண்ணற்றவர்கள் படித்து இருக்கும் அற்புத நாவலான “பொன்னியின் செல்வனை” தற்போது படிக்கிறேன் என்று ஃபேஸ்புக்கில் கூறினேன். “என்னது இப்பத்தான் படிக்கறியா?! நிஜமாவா?!” என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள். இது போல ஒரு நாவலை இவ்வளவு தாமதமாகப் படித்ததற்குக் கொஞ்சம் கூச்சமாகவும் இருந்தது. அதனால் என்ன?! எப்போது படித்தாலும் அதன் சிறப்புக் குறைந்து விடப்போகிறதா என்ன! புத்தகம் எடுத்தால் வைக்கவே முடியாது என்று நண்பர்கள் கூறிய போது நம்பச் சிரமமாக இருந்தது, மிகைப்படுத்திப் பேசுகிறார்களோ! என்று நினைத்தேன். ஆனால், அது 100% உண்மை என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. Image Credit– ponniyin-selvan-translation.blogspot.com படிக்கத் தோன்றவில்லை தம்பி ராஜ்குமார் சிங்கப்பூர் வ…
-
- 0 replies
- 1.7k views
-
-
உடலில் விழும் அடியைவிட மனதில் விழும் அடி வலி மிகுந்தது. அதுவும் சின்னஞ்சிறு வயதில் யாராவது மிக மோசமாக திட்டிவிட்டால், அது மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். எத்தனை வயதானாலும் அந்த வலி மறப்பதே இல்லை. அப்படிதான் மேரி மெக்லியோட் பெத்யூனுக்கும் நடந்தது. அமெரிக்காவில் 125 ஆண்டுகளுக்கு முன்பாக கருப்பின மக்கள் அடிமைகளாக நடத்தப்பட்டார்கள். அவர்களுக்கு வாக்கு உரிமை, சொத்து உரிமை, கல்வி உரிமை எதுவும் கிடையாது. திருமணம் செய்துகொள்வது கூட எஜமானர் அனு மதித்தால் மட்டுமே நடக்கும். குடும்பமே பண்ணை முதலாளிக்கு அடிமைப் பணி செய்ய வேண்டிய கட்டாயம். எதிர்த்துப் பேசினால் பட்டினி போட்டு அடித்து வதைப்பார்கள். தப்பி ஓடினால் பிடித்து வந்து சிறையில் அடைத்து கொடுமைப் படுத்துவார்கள். அதன் பிறகு வாழ்நாள் …
-
- 0 replies
- 871 views
-
-
வணக்கம் உறவுகளே . 'முகடு' தனது முதலாவது ஓலையை எடுத்து வைக்கிறது இலக்கிய வீட்டுக்கு அது 'முகடு' வரை நிறைந்து நிக்க உங்கள் ஆதரவு வேண்டி நிக்கிறோம் .. பாரீஸில் இருக்கும் உறவுகள் அனைவரையும் வருக வருக என வரவேற்ப்பதில் தமிழ் இலக்கிய இளைஞர் பேரவை மகிழ்ச்சி அடைகிறது ... அனைவரும் வருகை தந்து சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் . நன்றி 'முகடு' சஞ்சிகை குடும்பம் .
-
- 22 replies
- 3.7k views
-
-
ஈழம் அமையணுமா..? B.R. மகாதேவன் கிழக்குப் பதிப்பகத்தில் சமீபத்தில் வெளிவந்துள்ள புத்தகத்திற்கான அறிமுக விமர்சனம் ••••• காசித்தேவர்-பட்டம்மாள் தம்பதியின் மகன் அய்யநாதன் எழுதிய நூல் ”ஈழம் அமையும்’. 2002-2008 காலகட்டத்தில் வெப் துனியா இணைய இதழின் ஆசிரியராக அவர் இருந்தபோது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கும் இந்த நூலில் ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார்: ஈழத் தமிழர்களின் வேதனைக்கும் விடுதலைப் புலிகளின் தோல்விக்கும் இந்திய வல்லாதிக்கமே காரணம். அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா, ஐரோப்பா, ஈரான் ஈராக், ஐ.நா சபை, மத்யஸ்தம் செய்ய வந்த நார்வே, மருத்துவ சேவை செய்யவந்த செஞ்சிலுவைச் சங்கம் என ஒட்டுமொத்த உலகமும் ஈழ விடுதலையை முடக்கி சிங்கள அரசுக்குத் துண…
-
- 6 replies
- 1.5k views
-
-
இவை ஏற்கனவே இங்கே பதியப்பட்டும் இருக்கலாம். கோஷன் அவர்கள் திண்ணையில் இட்டிருந்த அருமையான இணைப்பை இங்கே இணைகின்றேன். நன்றி கோஷன்
-
- 17 replies
- 1.9k views
-
-
‘கி.பி அரவிந்தன்: ஒருகனவின் மீதி’ – நோர்வேயில் நடந்த நூல் அறிமுகமும் சிலகுறிப்புகளும் – ரூபன் சிவராஜாSEP 20, 2015 ‘கி.பி அரவிந்தன்:ஒருகனவின் மீதி’ எனும் நூல் ஈழப்போராட்ட முன்னோடி, கவிஞர், ஊடகவியலாளர், சிந்தனையாளர் எனத் தமிழ்ச் சூழலில் பன்முகப் பரிமாணங்களையும் வகிபாகத்தினையும் கொண்டிருந்த கி.பி அரவிந்தன் அவர்களின் நினைவுகளைத் தாங்கி தமிழகத்தில் உருவாக்கம் பெற்றுள்ளது. இந்நூல் புலம்பெயர் நாடுகளில் முதன்முறையாக நோர்வேயில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. தமிழ்3 வானொலியின் ஏற்பாட்டில் 06-09-15 ஒஸ்லோவில் இதன் அறிமுகநிகழ்வு இடம்பெற்றது. ஆயுதப் போராட்டத்தை முன்மொழிந்து, அதில் துணிந்து இறங்கிய முன்னோடிகளில் ஒருவராக, தமிழீழ விடுதலைக்கான கருத்தியல் ரீதியான, சிந்தனை ரீதியான பங்களிப…
-
- 0 replies
- 540 views
-
-
வாசிப்புக்கான ஆலோசனைகள் ஆர். அபிலாஷ் அசோக் ராஜ் எனும் நண்பர் வாசிப்பு பற்றி ஒரு முக்கியமான கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கான என் பதிலை கீழே பார்க்கலாம். ”பாஸ் வணக்கம் .எனக்கு சில மாதங்களாக பெரிய குழப்பம் ஒன்று எற்பட்டுக் கொண்டே இருக்கிறது.அது புத்தக வாசிப்பு பற்றி. என்னுடைய குழப்பத்திற்கான காரணத்தைவெகுநாட்களாக தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் பிடிபடவில்லை. நான்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் படிக்கும் போதுதான் புத்தகம்வாசிக்கத் தொடங்கினேன். படித்த முதல் புத்தகம் பா.ராகவன் எழுதிய“ஹிட்லர்”. அது எனக்குள் ஏதோ மாயாஜாலம் செய்தது போல் இருந்தது.பா.ராகவனின் எழுத்து நடை மிகவும் சுவாரஸ்யமானதாக இருந்தது. அதுபுத்தகத்தினுடன் என்னை கட்டிவிட்டது போல் செய்தது. தொடர்ந்துபா.ராகவனி…
-
- 3 replies
- 1.5k views
-