நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
809 topics in this forum
-
தமிழர்களின் பிரச்சனைகளை சிங்கள மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். தமிழர்களின் பிரச்சனைகளை, சிங்கள மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதனாலையே “இப்படி ஒரு காலம்” எனும் நூலினை “மதக வன்னிய” என சிங்களத்தில் மொழிபெயர்ப்பு செய்து அதனை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க விரும்பினேன் என நூலின் மொழி பெயர்ப்பாளர் அனுஷா சிவலிங்கம் தெரிவித்து உள்ளார். கவிஞரும் எழுத்தாளருமான சிவராசா கருணாகரனின் “இப்படி ஒரு காலம் ” எனும் நூல் சிங்கள மொழியில் “மதக வன்னிய ” எனும் பெயரில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது. எழுத்தாளரான சிவராசா கருணாகரனின் “இப்படி ஒரு காலம்” எனும் நூல் கிள…
-
- 0 replies
- 458 views
-
-
‘குவர்னிகா’வும் ஷோபாசக்தியுடனான கலந்துரையாடலும் தயாஜி முதன் முறையாக மலேசியப் படைப்பாளர்களில் எழுத்துகளும் 41-வது இலக்கியச் சந்திப்பு தொகுப்பு நூலான ‘குவர்னிகாவில்’ சேர்க்கப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. குவர்னிகா தொகுப்பில் இடம்பெற்ற மலேசிய படைப்புகள் குறித்து பேசவும் இங்கே குவர்னிகா குறித்த அறிமுகத்தை செய்யவும் ஏற்பாடு செய்திருந்தோம். ‘புத்தகச்சிறகுகள்’ ஏற்பாட்டில் ‘வல்லினம்’ இணைய இதழ் ஆதரவில் ஷோபாசக்தியுடன் கலந்துரையாடல் ஏற்பாடாகியிருந்தது. சில நாட்களுக்கு முன்னரே மலேசியா வந்துவிட்டார் ஷோபாசக்தி. ஏற்கனவே சில முறை மலேசியா வந்திருந்தாலும் இலக்கிய நிகழ்வுக்காக ஷோபா வருவது இது இரண்டாவது முறை. இதுதான் மலேசியா என ஊடகங்களாலும் அரசியல்வாதிகளாலும் க…
-
- 0 replies
- 944 views
-
-
உரை அறிமுகவுரை -சுப. சோமசுந்தரம் எனது நண்பரும் ஆசானுமான ஆங்கிலப் பேராசிரியர் ச.தில்லைநாயகம் அவர்கள் திருக்குறளுக்குத் தமிழிலும் ஆங்கிலத்திலும் இயற்றிய உரையை என்.சி.பி.எச் நிறுவனம் வெளியிட்டிருந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) அந்நூலுக்கான அறிமுக விழாவைத் தனது நெல்லை வி.மு.சத்திரம் கிளையில் நிகழ்த்தியது. அறிமுக உரையாற்ற எனக்கு அவர்கள் அளித்த வாய்ப்பு நான் ஈட்டியது என்றே சொல்ல வேண்டும். அவ்வுரையை எழுதும்போது பேரா.தில்லைநாயகம் அவர்கள் பத்துப் பத்து அதிகாரங்களாக எனக்கு அனுப்பி எனது கருத்தினை அளிக்க உரிமையோடு பணித்திருந்தார். நான் அளித்த கருத்துகளை சி…
-
- 0 replies
- 739 views
- 1 follower
-
-
குற்றப்பரம்பரை - வேல. ராமமூர்த்தி வலைத்தள நண்பர்களுக்கு வணக்கம். இந்த ஆண்டு ஈரோடு புத்தகக் கண்காட்சியில் பத்துப் புத்தங்கள் வாங்கியதாக ஞாபகம், அதில் முதலில் வாசிக்க வேண்டும் என்றெண்ணியது "குற்றப்பரம்பரை" நாவல். நாவலின் முன்னுரையில் 'பெருநாளாய் தீ வளர்த்தேன்', பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவன்' என்று ஆசிரியர் குறிப்பிட்டதை வாசித்த போது நாவலின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்காக உயர்ந்தது. இந்நாவலின் ஆசிரியர் எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி அவர்கள். இவரை சமீப கால தமிழ்த் திரைப்படங்களில் அதிகம் பார்க்க முடியும். எழுத்துலகில் மட்டுமின்றி நடிப்பிலும் தன்னுடைய திறமையை நன்கு வெளிபடுத்தி வருகிறார். முன்னுரையிலிருந்த…
-
- 0 replies
- 8.8k views
-
-
குமரப்பா மற்றும் புலேந்திரன் உள்ளிட்ட விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பிர்கள் சயனைட் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக மேஜர் ஷெனன் சிங்குக்கு இலங்கை இராணுவத்தினரால் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவமே இந்திய இராணுவத்தினரின் மீது விடுதலைப் புலிகள் காழ்ப்புணர்ச்சியாக மாற்றமடைய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய முன்னாள் இராணுவ வீரரும், இந்திய அமைதிகாக்கும் படை அதிகாரியாக இலங்கையில் பணியாற்றியவரும் ஊடகவியலாளருமான சுஷாந்த் சிங் எழுதி வெளியிட்டுள்ள நூலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. Mission overseas - daring operations by the indian military என்ற தலைப்பில் இந்த நூல் எழுதி வெளியிட்டப்டுள்ளது. இந்தியாவுக்கு வெளியே இந்திய இராணுவத்தினர்…
-
- 0 replies
- 342 views
-
-
அப்போது ஜேவிபி கிளர்ச்சிக்காலம். 1971ம் ஆண்டு. சரத்ஹாமு தென்னிலங்கையிலே ஹக்மண என்ற ஊரில் வாழ்கின்ற தனவந்தர். ஊர் மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயர். கௌரவமாக வாழும் குடும்பம். சரத்ஹாமுவின் மனைவி உள்ளூர் பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக இருக்கிறார். ஒருநாள் அந்தப்பாடசாலையில் இன்னொரு ஆசிரியையும் இணைகிறார். அந்த ஆசிரியை அண்மையில் அந்த ஊருக்கு மாற்றலாகி வந்திருக்கும் இன்ஸ்பெக்டர் சமரநாயக்காவின் மனைவி. நாளடைவில் இரண்டு ஆசிரியைகளும் நண்பிகளாகிவிடுகிறார்கள். தினமும் பாடசாலை முடிந்தபின் மனைவியை ஜீப்பில் அழைத்துப்போகவரும் இன்ஸ்பெக்டர், அந்த தனவந்தரின் மனைவிக்கும் லிப்ட் கொடுக்க ஆரம்பிக்கிறார். ஒருநாள் அப்படி இறக்கிவிடும்போது உள்ளேபோய் ஒரு டீயும் குடிக்கிறார். இன்ஸ்பெக்டர் குடும்பமும் த…
-
- 0 replies
- 743 views
-
-
ஒரு வித்தியாசமான புலம் பெயர்ந்த ஈழத் தமிழ்க்குரல் வெங்கட் சாமிநாதன் ஈழத் தமிழ்க்குரல் என்றுமே ஒரு வேதனையும் போராட்டமும் கொந்தளிக்கும் குரல்தான். என்றுமே. அதுவும் உரத்த குரலாகத்தான் இருந்து வந்துள்ளது. அப்படித்தான் இருப்பதும் சாத்தியம். அது வாழ்க்கையின் அனுபவத்திலிருந்து வெளிக்கிளர்வது. வேறு எப்படியாகவும் அது இருக்க முடியாது. இலங்கை சுதந்திரம் பெற்று, சேனனாயக தமிழருக்கு குடியுரிமை மறுக்கத் தொடங்கி, பின் வந்த பண்டாரநாயக சிங்களத்திற்கு முதலிடம் கொடுக்கத் தொடங்கி, பின் அடுத்தடுத்து வந்த தமிழ் இனத்தையே குறி வைத்த அடக்கு முறை இன்றும் தொடர்கிறது. யாழ்ப்பாண நூலக எரிப்பும், வன்முறைகளும், 1983-லிருந்து ஈழத்தமிழர் புலம் பெயரத்தொடங்கிய வரலாறும், பின் வந்த போரின் பயங்கரங்…
-
- 0 replies
- 863 views
-
-
ஊடகவியலாளர் நடேசனின்... நினைவேந்தலும் , நூல் வெளியீடும்! யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நாட்டுப்பற்றாளர் ஜயாத்துரை நடேசன் 18வது நினைவேந்தலும் நூல் வெளியீடும் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. நாவலர் கலாச்சார மண்டபம்,பிப3.30 மணிக்கு யாழ்.ஊடக அமையத்தின் தலைவர் ஆ.சபேஸ்வரன்,தலைமையில் நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. அந்நிகழ்வில் நடேசன் தொடர்பில் அவருடன் ஊடகப்பணியாற்றிய சக ஊடகவியலாளர்கள்,செயற்பாட்டாளர்களென பலரது நினைவுகூரலுடன் வெளிவந்துள்ள நூல் அறிமுகமும் வெளியீடும் நடைபெறவுள்ளது. அதேவேளை “நடேசனின் ஊடகத்துறை பயணம்” தொடர்பிலான நினைவுரைகளுடன் ஞாபகார்த்த நினைவுப்பேரூரையினை யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கோசலை மதன்…
-
- 0 replies
- 428 views
-
-
எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளைப் புரிந்து கொள்ளவும் அவர்களைக் கையாளவும் பெற்றோர்களுக்குப் பயன் படக்கூடிய ஒரு நடைமுறைக் கையேடாக வந்துள்ளது இந்த நூல். எளிமையும் ஆழமும் குழந்தை வளர்ப்பில் எழக்கூடிய பிரச்சினைகள், அவற்றுக்கான தீர்வுகள், நோய்கள், அவற்றுக்கான தடுப்பு முறைகள், முதலுதவிகள், அந்த வயதுக்குரிய குழந்தைகளின் கல்வி, உளவியல், கற்றல் முறைகள் எனப் பல்வேறுபட்ட விஷயங்கள் எளிமையான முறையில் விளக்கப்பட்டுள்ளன. குழந்தைகளின் உடல்,மனம், சமூகப் பண்பு, கற்றல் திறன்கள், ஆளுமை என அனைத்திலும் பெற்றோர்கள் கவனம் செலுத்த உதவும் வகையில் இந்தக் கையேடு உருவாக்கப்பட்டுள்ளது. முரண்டுபிடித்தல், தாக்கும் குணம் உள்ளிட்ட நடத்தைகளுக்கான காரணங்களையும் விவாதித்துள்ளார். கு…
-
- 0 replies
- 1.7k views
-
-
ஈழப்போராட்டம் தொடர்பான மூன்று முக்கிய நூல்களின் அறிமுக நிகழ்வு! தொகுப்பாசிரியர்- தோழர் ரகுமான் ஜான் காலம்- 17 ஆகஸ்ட் 19 . சனி -மாலை 3 மணி இடம்- Trinity Centre Eastham -London ரகுமான் ஜான் தமிழீழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவர், ஈழப்போராட்டம் அதன் குறுகிய எல்லைகளைக் கடந்து ஒடுக்கப்பட்ட மக்களின் தரப்பில் அரசியல் தலையீடு செய்ய வேண்டும் என்பதில் தெளிவுடன் செயற்பட்டவர். விடுதலைப் புலிகள், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தீப்பொறி, தமிழீழ மக்கள் கட்சி போன்ற பல அமைப்புகளினூடாகத் தொடர்ந்த இவரது அரசியல் பயணத்தில் கோட்பாட்டு செயற்பாட்டிற்கு அழுத்தம் கொடுத்தவர். உயிர்ப்பு, வியூகம் ஆகிய கோட்பாட்டு இதழ்களின் ஆசிரியர் குழுவில் இருந்தவர். தொடர்ச்சியாக அர்சியல் உ…
-
- 0 replies
- 822 views
-
-
மழை vs வெயில், லிச்சி vs காபி, ஜன்னல் மலர் vs இறைவி... சென்னை புத்தகக் கண்காட்சி live! பொறுத்துப்பொறுத்துப்பார்த்து இந்த வருடம் புத்தகங்களை வாங்க புத்தக கண்காட்சிக்கு மழையும் படையெடுத்துவந்துவிட்டது. “ப்பா.. என்னா வெயில்” என்று வாசகர்கள் குரலில் துவங்கிய சென்னை 39வது புத்தகக் கண்காட்சி, துவங்கிய நான்கைந்து நாட்களில்‘ஐயையோ மழை.. மழை’ என்று பதிப்பாளர்கள் அலறியடித்து புத்தகங்களை மழையிலிருந்து காப்பாற்றப் போராடுவது என்று மாறிவிட்டதில் அப்செட்டில் இருக்கிறார்கள் பல பதிப்பாளர்கள். கடும் மழையினால் ஸ்டாலுக்குள் ஷவர் போலப் பொழிந்த மழை, உடைந்து விழுந்த மரப்பாலம் என்று பல தடைகளுக்கிடையே தட்டுத்தடுமாறி நடைபெற்றுக்கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில் இன்னும் …
-
- 0 replies
- 511 views
-
-
கவிதை தன் மொழியையும் வடிவத்தையும் எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளட்டும். ஆனால், கவிஞனையும் இயற்கையையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. இயற்கையின் பிரம்மாண்ட அழகும், களங்கமற்ற அதன் அமைதியும் காலங்காலமாகப் பாடுபொருளாகி வந்தாலும் இயற்கையைப் பாடுவதில் ஜென் கவிதைகள் புதிய வாசலைத் திறந்துவிட்டவை. பழநிபாரதியின் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான கவிதைகள் ஜென் கவிதைகளுக்குரிய கூறுகளைக் கொண்டிருப்பவை. பழநிபாரதியின் இலவம்பஞ்சு மொழி தமிழ் வாசகர்களை அழகான அனுபவத்துக்கு அழைத்துச்செல்கின்றன. தமிழ் வாசிப்புச் சூழலில் அரிதாகிவரும் கவிதை வாசகர்களுக்கு பரிச்சயமான நிலப்பரப்பிலிருந்து விரியும் காட்சிகள் வழியே ‘மெய்தேடல்’ உணர்வை முதல் வாசிப்பிலேயே சிலிர்ப்புடன் இந்தக் …
-
- 0 replies
- 684 views
-
-
சென்னையில் தீபச்செல்வனின் நடுகல் நாவல் வெளியீடு! December 31, 2018 ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய நடுகல் நாவலின் வெளியீட்டு விழா இன்று சென்னையில் இடம்பெறுகின்றது. சென்னை, கே.கே. நகரில் உள்ள டிஸ்கவரி புக் பலஸில் இந்த வெளியீட்டு நிகழ்வு இடம்பெறுகின்றது. தமிழகத்தில் இன்று இரவு இடம்பெறும் புத்தக விழாவில் வெளியிடப்படும் இந்த நாவல் 2019 – சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகியுள்ளது. இயக்குனர் கவிதா பாரதி தலைமையில் நடைபெறும் சிறப்பு வருகையாளராக தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவரும் நடிகருமான நாசர் கலந்து கொள்கிறார். இதேவேளை இந்த நிகழ்வில், இயக்குனர் மீரா கதிரவன், தமிழக கவிஞர் மண்குதிரை, ஊடவியலாளர் செல்வ புவியரசன், எழு…
-
- 0 replies
- 555 views
-
-
வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று 'ச்சூ' கொட்டுகிறோம். அந்த குடும்பம் எப்படி, ஏன் வாழ்ந்தது? எங்கே சறுக்கி கெட்டது? என்று யாராவது யோசித்திருக்கிறோமா? யோசித்துப் பார்த்தால் தான் உண்மை புரியும். கிடைத்த வாய்ப்பை எண்ணி சிலாகித்து அந்த குடும்பத்தின் அப்போதைய உறுப்பினர்கள் திருப்திபட்டு இருப்பார்கள். அடுத்த வாய்ப்புக்கான தேடல் குறித்து சிந்தனை ஏதும் அவர்களுக்கு இருந்திருக்காது. புதிய மாற்றங்களுக்கான இடைவிடா தேடுதல் தான் அடுத்தக்கட்ட நகர்வுக்கு வழிவகுக்கும். மாற்றம், தேடுதல் குறித்து நகைச்சுவையாக, எளியமொழியில் அலசுகிறது ‘எங்கே போனது என் அல்வா துண்டு' என்ற புத்தகம். ஒரு இனிப்புக்கடையில் நான்கு ஜீவராசிகள் வாழுகிறது, வாசு - அரி என்ற இரண்டு எலிகளும், அச்சுபிச்சு - விவேக் என்ற இரண…
-
- 0 replies
- 1.6k views
-
-
ஜெயமோகனின் முடிவின்மையின் விளிம்பில் சுயாந்தன் June 27, 2018 அண்மையில் அரச பணிக்கான பயிற்சியின் போது எங்களைப் பற்றிய சுய அறிமுகம் ஒன்று செய்யவேண்டி ஏற்பட்டது. அதில் ஒவ்வொருவரும் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். எனது கட்டம் வந்ததும் எனது வாழ்வில் பெற்றோருக்குப் பிறகு இரண்டு பேர் முக்கியமானவர்கள், ஒருவர் எனது பழைய காதலி. மற்றவர் ஜெயமோகன் என்று கூறினேன். பழைய காதலி மூலம் பெண்களைப் புரிந்து கொள்ளவும் ஜெயமோகன் மூலம் இலக்கியத்தையும், வாழ்க்கையையும், வெறுமையையும் அனுபவங்களுடன் இணைத்துப் பார்ப்பது எப்படி என்று அறிந்து கொண்டுள்ளேன் என்றும் கூறினேன். பலருக்கு ஜெயமோகன் என்பவர் யார் என்று விளக்கம் கூறவேண்டிய துரதிஷ்டம் அப்போது உருவானது. அவரை ஒரு படைப்பாளி…
-
- 0 replies
- 454 views
-
-
[size=5]பாலைகள் மீது பறக்கும் துயரப்பறவைகள்[/size] [size=4] -இரவியின் 'பாலைகள்நூறு' கதைகள்மீதானவாசிப்பு-[/size] டிசே. தமிழன் 1. வரலாற்றின் துயரங்களில் நாங்கள் சாட்சிகளாக நின்றிருக்கின்றோம். சிலவேளைகளில் அவ்வாறு நிற்க வற்புறுத்தவும் செய்யப்பட்டிருக்கின்றோம். திணிக்கப்பட்ட யுத்தத்தை எவ்விதத் தேர்வுகளுமில்லாது ஏற்றுக்கொள்ள எங்கள் தலைமுறை நிர்ப்பந்திக்கவும்பட்டிருக்கிறது. ஆனால் இரவி போன்றவர்கள் எமக்கு முன்னைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அவர்களின் வாழ்வில் அழகிய இளவேனில் காலங்கள் மலர்ந்திருக்கின்றன. கோயில்களில் திருவிழாக்கள் இரவிரவாய் நடந்ததைக் கண்டு களித்திருக்கின்றார்கள். கீரிமலைக் கேணியிலும், கசூனாக் கடற்கரையிலும் பயமின்றிக் குளித்த அனுபவம் அவர்களின் த…
-
- 0 replies
- 564 views
-
-
Book Description Publication Date: February 22, 2013 The tropical island of Sri Lanka is a paradise for tourists, but in 2009 it became a hell for its Tamil minority, as decades of civil war between the Tamil Tiger guerrillas and the government reached its bloody climax. Caught in the crossfire were hundreds of thousands of schoolchildren, doctors, farmers, fishermen, nuns and other civilians. And the government ensured through a strict media blackout that the world was unaware of their suffering. Now, a UN enquiry has called for war-crimes investigations. Those crimes are recounted here to the wider world for the first time in sobering, shattering detail. http://www…
-
- 0 replies
- 699 views
-
-
எமது சூழலியல் எனும் பெரும் பரப்பை காரணகாரியங்கள் ஊடாக உற்று நோக்கும் போது காலநிலைமாற்றம்,விவசாயப்பயிர்செய்கை,சுற்றுலாத்துறை,நீர்,வளி மாசாக்கம்,மண்ணியல் என்பன பாரிய அளவில் கோடிடப்பட்டு பார்க்கப்பட வேண்டியவை. அந்தவகையில் உலகப்போக்கோடு ஒத்து மாறுதல் அடைகின்ற காலநிலைமாற்றம் எம்சூழலிலும் செல்வாக்கு செலுத்துகின்றமை தவிர்க்க முடியாத ஒன்றாகின்றது.அதனை நடைமுறையிலும் எம் சமூகம் கண்ணூடு கண்டுகொண்டிருக்கின்றது.இத்தகைய காலநிலை மாற்றத்திற்கு நாமும் பங்குதாரர்கள் என்பதில் மாற்றம் இல்லை.துமி எனும் பெரும் தேடல் செய்திப்பரப்பில் ஆராய்ந்திருக்கிறோம் வாசித்து பாருங்கள். வெளிவந்திருக்கிறது துமி மின்னிதழ் 15.0 இணையதளத்தில் சென்று பார்வையிட https://www.thumi.org …
-
- 0 replies
- 520 views
- 1 follower
-
-
தமிழ்பேசும் மக்களின் விடுதலைக்காகவும், சுதந்திரத்திற்காகவும், அரசியல்- சமூகப் பொருளாதார- சமத்துவ மேம்பாட்டிற்காகவும் ,ஒரு தேசம் ஒன்றை நிர்மாணம் செய்வதற்கான கட்டுமானங்களை நடைமுறைப்படுத்தி தன்வாழ்வை எமக்காக அர்பணித்து வாழ்ந்த டேவிட் ஐயா அவர்கள் பற்றிய நினைவுப் பகிர்வும் கலந்துரையாடலும் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 6ம் திகதி ஞாயிறு அன்று பிற்பகல் 3 மணியிலிருந்து பிற்பகல் 8 மணிவரை பாரீசில் பின்வரும் முகவரியில் ந டைபெற் இருக்கிறது. இடம்: SALLE SANT BRUNO 9 , RUE SANT BRUNO 75018 PARIS Métro : LA CHAPELLE இந் நிகழ்வில் பி.ஏ காதர் அவர்களின் ‘இலங்கை தேசிய இனப் பிரச்சனையும் டேவிட் ஐயாவும்’ என்ற தலைப்பிலான உரையும், ‘அர்ப்பண வாழ்வில் வலிசுமந…
-
- 0 replies
- 422 views
-
-
மாற்று வரலாறு பேசுவோம் ஆதவன் தீட்சண்யா இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கும் வேளையில் தமிழ்நாட்டில் மற்றுமொரு எழுத்தாளரான புலியூர் முருகேசன் தாக்கப்பட்டிருக்கும் செய்தி வந்தடைந்திருக்கிறது. அவர் எழுதிய கதையில் கவுண்டர் சமூகம் பற்றி இடம் பெற்றிருக்கும் பகுதியின் மீது ஒம்பாமை கொண்ட ஒரு கும்பல் கரூரிலுள்ள அவரது வீட்டிற்குள் புகுந்து அவரைத் தூக்கி காருக்குள் போட்டுக்கொண்டு போய் எங்கோவொரு காட்டுப்பகுதிக்குள் வைத்து கடுமையாகத் தாக்கியிருக்கிறது. பிறகு அந்தக் கும்பலே அவரை கைது செய்யுமாறு காவல்நிலையத்திற்குள் வந்து அட்டகாசம் செய்திருக்கிறது. முருகேசன் இப்போது தீவிர சிகிச்சையில் இருக்கிறார். இதற்கு முன்னும் இதேபோல துரை குணா, மா.மு.கண்ணன் போன்றவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். பெருமாள்…
-
- 0 replies
- 635 views
-
-
வென்றது ஆரியம் துணைநின்றது திராவிடம்: சிறையிலிருந்து சீமான் எழுதும் புதிய நூல் திகதி: 09.08.2010, தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் எனது மீனவனை அடித்தால் நான் உனது சிங்கள மாணவனை அடிப்பேன் என இன உணர்வுடன் பேசிய நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமானை சென்ற மாதம் தமிழக காவல்துறை கைது செய்து அவரைத் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வேலூர் சிறைச்சாலையில் அடைத்தது.இது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் கருணாநிதி அரசு மீது கடும் கோபத்தை மீது ஏற்படுத்தியது. நாம் தமிழர் என்னும் அரசியல் கட்சி தொடங்கி கடந்த 2 ஆண்டுகளாக தமிழக மற்றும் ஈழப்பிரச்சனை தொடர்பாக மிகவும் பரபரப்புடன் இயங்கிய சீமான் சிறையில் கடந்த ஒரு மாத காலமாக …
-
- 0 replies
- 1.3k views
-
-
பள்ளிக்கூடம் பற்றி தீபச்செல்வன் எழுதப் போகும் புதிய நாவல். பள்ளிக்கூடத்தை மையப்படுத்தி புதிய நாவல் ஒன்றை எழுதப் போவதாக அறிவித்துள்ளார் கவிஞர் தீபச்செல்வன். நடுகல் நாவல் வாயிலாக தமிழர்களின் பரவலான கவனத்தை பெற்றவர் தீபச்செல்வன். மூவாயிரம் பிரதிகளை கடந்து மூன்றாவது பதிப்பை நடுகல் கடந்திருப்பதாக அண்மையில் கூறினார் தீபச்செல்வன். அத்துடன் பயங்கரவாதி என்ற புதிய நாவலை எழுதி வருவதாகவும் அறிவித்திருந்த நிலையில் தற்போது பள்ளிக்கூடத்தை மையப்படுத்தி புதிய நாவல் ஒன்றை எழுதப் போவதாக குறிப்பிட்டுள்ளார். ஒரு எழுத்தாளன் ஆசிரியராக பணியாற்றுவது சிறந்த வாய்ப்புத்தான். எதிர்காலத்தில் பள்ளிக்கூடத்தை மையப்படுத்தி, கிளிநொச்சி மண்ணின் கல்வியை மையப்படுத்தி ஒரு நாவலை எழுதப் …
-
- 0 replies
- 586 views
-
-
ஆகாயம் பதிப்பகத்தின் “மயானகாண்டம்- பிந்திய பதிப்பு” கிரிஷாந், பிரியாந்தி, கிருபா, லிங்கேஸ்- நான்கு கவிஞர்களின் கவிதைத் தொகுதியின் வெளியீட்டு விழா யாழ்ப்பாணத்தில் நடை பெற்றது. தலைமையுரையை கவிஞர் கருணாகரனும் வரவேற்புரையை கவிஞர் யாத்ரிகனும் நிகழ்த்தினர். எழுத்தாளர் சத்தியபாலன் வெளியீட்டு உரையை நிகழ்த்தினார். தொடர்ந்து நுால் வெளியீடு இடம் பெற்றது. நுாலினை எழுத்தாளர் சத்தியபாலன் வெளியிட புத்தகக் கூடத்தின் உரிமையாளர் தெ. ரவீந்திரன் பெற்றுக்கொண்டார். கவிஞர்களுக்கான கௌரவப் பிரதிகளையும் அவர் வழங்கிவைத்தார். நுால் பற்றிய ஆய்வினை யாழ் பல்கலைக் கழகத்தின் வருகைதரு விரிவுரையாளர் தி. செல்வமனோகரன் நிகழ்த்தினார். ஏற்புரையினை தொகுப்பாளர்களுள் ஒருவரான சித்தாந்தன் நிகழ்த்தினார். glo…
-
- 0 replies
- 522 views
-
-
கடந்த ஆண்டில் கவனம் பெற்ற சுற்றுச்சூழல், இயற்கை, காட்டுயிர் நூல்கள் பற்றி ஒரு பார்வை: மௌன வசந்தம் உலகின் முக்கிய 100 புத்தகங்களில் தவறாமல் இடம்பிடிக்கும் சுற்றுச்சூழல் புத்தகம் மௌன வசந்தம். வெளியாகி 50 ஆண்டுகள் ஆகியும் பிரபலம் குன்றாத நூல். கடந்த ஆண்டுதான் தமிழில் முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டது. ரசாயன விவசாயத்தின் பாதிப்புகளை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய இந்த நூலே, அந்த விவசாயம் மனித உடல்நலனுக்கும் பூமியின் ஆரோக்கியத்துக்கும் ஏற்படுத்தும் கேடுகளையும் ஆதாரப்பூர்வமாக முதன்முதலில் எடுத்துச் சொன்னது. உலகில் சுற்றுச்சூழல் அக்கறையைத் தீவிரமடையக் காரணமாக இருந்த இந்த நூல், வாசிப்பிலும் தனி அனுபவத்தைத் தரக்கூடியது. மௌன வசந்தம், ரேச்சல் கார்சன், தமிழில்: பேராசிர…
-
- 0 replies
- 2.2k views
-
-
முடிவிலாத வெளியில் இரை தேடும் பறவைகள் January 18, 2024 — கருணாகரன் — புலம்பெயர்தோர் வாழ்வைக் குறித்த வேறுபாட்டதொரு புரிதல் மந்தாகினி குமரேஷின் ‘இரை தேடும் பறவைகள்’ கவிதைகளைப் படிக்கும்போது தோன்றுகிறது. புலம்பெயர்தலின் வலியையும் புதிய (பனித்) திணையில் (நிலத்தில்) ஒட்டிக் கொள்ள முடியாத அந்தரிப்பையும் இந்தத் தொகுதியிலுள்ள முதற் கவிதை தொடக்கம் பலவும் சொல்கின்றன. புலம்பெயர் தமிழ்ப்பரப்பின் பெரும்பாலான உணர்வலை இதுதான். கூடவே தாய்நிலம் மீதான நினைவுகளாகவும். ஆனாலது வெறுமனே நினைந்துருகுதல் என்றில்லாமல் விடுதலை வேட்கையாக. இவ்வாறான புலம்பெயர்தல் அல்லது புதிய திணையில் வாழ நேர்தல் இன்று உலகளாவிய ரீதியில் ஏற்படும் ஒன்று. ஈழத்தமிழர்களுக்கு மட்டுமன்றி, பலஸ்…
-
- 0 replies
- 532 views
-