மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
கடவுள் எங்கே இருக்கிறார்? நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளின் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிப் பேசிய அவர், ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார். "நீ கடவுளை நம்புவதாகச் சொல்கிறாய். இல்லையா?" "நிச்சயமாக ஐயா.." "கடவுள் நல்லவரா?" "ஆம் ஐயா." "கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?" "ஆம்." "என்னுடைய சகோதரர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். தன்னைக் காப்பாற்ற கடவுளிடம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நாம் எல்லோருமே நோய்வாய்ப்பட்டோர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம். ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. பின் எப…
-
- 8 replies
- 11.8k views
-
-
கடவுளுக்கும் உலகத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை அநேக ஆயிரம் நூற்றாண்டுகளாக நமது உலகமே பிரபஞ்சமென்றும், வானத்தில் பிரகாசிக்கும் நட்சத்திரங்களும், சூரிய சந்திரர்களும் நமது உலக நன்மைக்கே உண்டாக்கப்பட்டவைகள் என்றும் நமது முன்னோர்கள் எண்ணி வந்தார்கள். நமக்குப் பகலில் வெளிச்சத்தைக் கொடுக்கச் சூரியனையும், இரவில் வெளிச்சத்தை கொடுக்கச் சந்திரனையும் நட்சத்திரத்தையும் கடவுள் படைத்தாரெனவும் கிறித்தவ நூல்களில் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன் இவ்வுலகில் வாழ்ந்துவந்த பூர்வதான மனிதரும், நமது உலகை நடுவிலும், அதனைச் சுற்றி மற்ற ஆகாயப் பொருள்களாகிய சூரிய சந்திரர்களும், நட்சத்திரங்களும், ஓடிக் கொண்டிருப்பதாகக் கருதுகிறார்கள். பாலமி என்று ஓர் பூர்கால வான சாஸ்திரி, நமது உலகம் நடுவிலிருந்து …
-
- 1 reply
- 1.2k views
-
-
உ சிவமயம் திருச்சிற்றம்பலம் சோமாஸ்கந்தர் சிவாலயங்களில் ஐந்து எழுந்தருளும் திருவுருவங்கள் இன்றியமையாதன. கணேசர், முருகர், சோமாஸ்கந்தர், அம்பிகை, சண்டேசர் என்பன அவை. இவற்றுள் தத்துவச் சிறப்புமிகுந்த தனித்தன்மை வாய்ந்த வடிவம் சோமாஸ்கந்தர் ஆகும். சிவபெருமான் தேவியுடனும் கந்தனுடன் காட்சி தரும் அருட்கோலம் இறைவனை இல்லறத்தானாக - இனிய கணவாக - பாசம் மிக்க தந்தையாகத் தநயனுடன் காட்டும் இவ்வடிவம் களித்து மகிழ வேண்டிய கவின்மிகு கருணை உருவம் ஆகும். "ஏவலார் குழல் இறைவிக்கும் எம்பிரான் தனக்கும் பாலன் ஆகிய குமரவேள் நடுவுறும் பான்மை ஞால மேலுறும் இரவோடு பகலுக்கும் நடுவே மாலை யானதொன்று அழிவின்றி வைகுமாறதொக்கும்" …
-
- 8 replies
- 6.3k views
-
-
உலகம் யாருடைமை உலகில் ஆத்திகசமயங்கள் பல. அவற்றுள் எதுவும் இவ்வுலகை இன்ப நிலயமெனச் செல்லாது. இது துன்ப நிலயம் என்பதுதான் அவற்றின் ஒருமித்த கருத்து. பெளத்தமும் சமணமும் நாத்திகங்கள். அவையும் உலகைவெறுத்தே பேசும். ஆனால் உலகாயதம் என்றொரு சமயம் உளது. அது பச்சை நாத்திகம். உலகு இன்ப நிலயம் எனக் கொள்வது அதுதான். அந்த வாடை இப்போது எங்கும் வீசுவதாயிற்று. ஆத்திக சமயத்தவருள்ளும் அவ் வாடையில் அகப்படாத வரைத் தேடித்தான் காண வேண்டும். உலகில் அரசுகள் பல உள. அவற்றுள் தன் மக்களுக்கு உலகு துன்பநிலயம் என்பதை உறுத்தி வருவது எது? எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. தனிப்பட்டவர், சமூகத்தினர், அரசினர் தம்முள் மோதிக் கொள்கின்றனர். அம்மோதல்கள் எப்போதோ நடந்…
-
- 9 replies
- 1.9k views
-
-
மூடநம்பிக்கை கம்ப்யூட்டர் ஜாதகம் கணிப்பது எப்படி? வி.சி.வில்வம் இங்கு ஜோதிடம் பார்க்கப் படும், என்ற பலகையைக் கண்டால் போதும், உடனே கையை நீட்டிவிடுவார்கள் தமிழர்கள்! எதிர்காலத்தைத் தெரிந்து கொள்வதில் அவ்வளவு ஆர்வம் அவர்களுக்கு! வாழ்க் கையில் ஏற்படும் ஆசையும், அச்சமுமே ஜோதிடத்திற்குக் காரணம். ஜோதிடம் அறிவியல் பூர்வ மானது என இந்து மதத்தினர் கூறுவார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் ஜோதிடம் அறிவியல் போலவே இருக்கும். ஆனால் அது அறிவியல் இல்லை. வள்ளுவர் சொன்னார், கயவர் களைக் கண்டுபிடிக்க முடிய வில்லை, ஏனெனில் அவர்களும் மனிதர்களைப் போலவே இருக் கிறார்கள் என்றும் அதைப் போலத்தான் இந்த ஜோதிடமும். ஜோதிடத்தைப் பலரும் நம்புகிறார்கள் என்றால் என்ன பொருள்? எங்களை நாங்க…
-
- 0 replies
- 3.7k views
-
-
உலகப் பகுத்தறிவாளர்கள் (சார்லஸ் பிராட்லா) -சு.அறிவுக்கரசு உலக பகுத்தறிவாளர்கள் எனும் வரிசையில் இடம்பெறத் தக்கவர்களில் சார்லஸ் பிராட்லா அவர்களைப்பற்றி எழுதத் தொடங்குவதற்குக் காரணமே அவர் பலவகைகளிலும் தந்தை பெரியார் அவர்களைப் போலவே அமைந்திருந்தார் என்பதே தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் மாதத்தில்தான் பிராட்லாவும் பிறந்தார். ஆனால், 36 ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்தார். 1833 செப்டம்பர் 26இல் சார்லஸ் பிராட்லா லண்டனுக்குப் பக்கத்தில் ஹாக்ஸ்டன் எனுமிடத்தில் பிறந்தார். அவரின் தந்தை ஓர் ஏழை வக்கீல் குமாஸ்தா. ஏழ்மையின் காரணமாக அதிகம் படிக்க வாய்ப்பில்லாததால் அவருடைய பள்ளிப் படிப்பு 11ஆம் வயதுடன் முடிந்து விட்டது. தன் தந்தை பணிபுரிந்த இடத்திலேயே இவரும் எடுபிடி வேல…
-
- 5 replies
- 3.8k views
-
-
கடவுள் சக்தி விதண்டாவாதம் Periyar Articles பகுத்தறிவு 1.9.1935 நமது கடவுள்கள் சக்தி மிகவும் அதிசயமானதாகும். அதாவது, நமது கடவுள்கள் உலகில் மக்களை அக்கிரமங்கள் செய்யவொட்டாமல் தடுக்க முடியாதாம். ஆனால், மக்கள் சந்து பொந்துகளிலும், மூலை முடுக்குகளிலும் யாருக்கும் தெரியாமல் செய்த குற்றங்களையும், மனதினால் நினைத்த அக்கிரமங்களையும் பார்த்தும் ஒன்றுகூட விடாமல் பதிய வைத்தும், அதற்குத் தகுந்தபடி தீர்ப்புக்கூறி, தண்டனை கண்டனை கொடுக்கவும், அதற்காக நரகத்தில் ஆழ்த்தி வைக்கவும், மற்றும் பல ஜன்மங்கள் கொடுத்து, அவற்றில் கஷ்டப்படுத்தி வைக்கவும் முடியுமாம். நமது கடவுள்கள் சக்தி எவ்வளவு அதிசயமானது! அதிலும் மகமதியர்களுடைய கடவுளும், கிறிஸ்தவர்களுடைய கடவுளும் மனிதன் செத்த பிறகு, எ…
-
- 0 replies
- 825 views
-
-
மிருகமும், பட்சியும், மலமும் கடவுளா? நமது கேவல நிலைமையும், முட்டாள்தனத்தையும், நம்மை பார்ப்பனர்கள் எப்படி ஏமாற்றினார்கள் என்பதையும் விளக்கும் போது, நமக்கு உண்மையான சுயமரியாதை உணர்ச்சி இருந்தால் சிரிப்பு வருமா? ஆத்திரமும், வெட்கமும் அல்லவா வரும்? நமது இழிவானது நேற்று, இன்று என்று இல்லாமல், ஆயிரக்கணக்கான வருஷங்களாக இருந்து வருவதால், நமது ரத்தம் வெட்கப்படுவதற்கில்லாமல் இழிவிலேயே உறைந்து போய்விட்டது. மனிதனுக்கு வெட்கமும் ரோஷமும் ஏற்படுவதற்கு ஆகவே சுயமரியாதை இயக்கம் ஏற்படுத்தப்பட்டது. சுயமரியாதை இயக்கம் மனித சமூகத்தையே மாற்றி அமைக்க ஏற்பட்டதாகும். இந்தக் காரியம் ஒரு பெரும் சமூகப் புரட்சியால் ஏற்பட வேண்டியதே ஒழிய, சிரிப்பு விளையாட்டில் ஏற்படக்கூடியதல்ல. இதற்காக அநே…
-
- 0 replies
- 909 views
-
-
கடவுள்களின் நாச வேலைகள் பெரும் மழையினால் பயிர்களுக்குக் கேடு, நாசம் என்பது ஒரு புறமிருந்தாலும், மற்றும் ஜீவப்பிராணிகள், கால்நடைகளுக்கும், வீடுகளுக்கும் பெருஞ் சேதங்கள் ஏற்படுகின்றன. இதுபோலவே பூகம்பங்களாலும் மக்கள் உட்பட ஜீவப் பிராணிகளும் மாள்வதோடு ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்தும், மறைந்தும் நாசமாகிப் போகின்றன. அதுபோலவே இடி-பேரிடி விழுவதாலும் மக்களுக்கும், ஜீவன்களுக்கும் வீடுகளுக்கும் பெரும் சேதங்கள் உண்டாகி விடுகின்றன. போதாத குறைக்கு பெரும் புயல் காற்றுகள் ஏற்பட்டு இவை போன்ற பெருங்கேடுகளும், சேதங்களும், நாசங்களும் ஏற்பட்டு விடுகின்றன. இதில் சிந்திக்கும்படியான விஷயம் என்னவென்றால் மேற்கண்ட கேடுகளில், தேசங்களில், நாசங்களில், ஜீவ அழிவுகளில் எந்த ஒரு சிறு அளவ…
-
- 3 replies
- 1.4k views
-
-
"எவனால் நடக்கும் உலகம்?" (சயிலாதி) (இத்தலைப்பு ஸ்ரீமத் சிவஞான சுவாமிகளின் திருவாக்கு ) சந்திர மண்டலத்தில் இறங்குவதர்கன முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கும் இவ்வுலகம் இலெளகிக முன்னேற்றமே தனது இலட்சியமாகக் கொண்டு இயங்குகிறது. எவனால் நடக்கும் உலகம்? அவனுக்கும், உயிர்களுக்கும் உள்ள உறவு யாது? அவனை அறிந்தால் விளையும் நலன் யாது? என்ற வினாக்கள் எல்லாம் இன்றைய "நாகரிக" மாந்தரின் கவனத்துக்கு எட்டாதனவாகும். அவர்கள் தொழுது வணங்கும் ஆலயங்கள், தொழிற்சாலைகளும், ஆய்வுக் கூடங்களுமே. அவர்கள் பின்பற்றும் மதமோ இலெளகிக முன்னேற்றத்தைக்குறிக்கோளாக ் உடைய நாஸ்திகமே. ரஷ்யா சென்று திரும்பிய இந்திய கல்வி அமைச்சர் திரு. சக்ளா. "What struck me most was that everywhere the …
-
- 18 replies
- 3.2k views
-
-
உ சிவமயம் திருச்சிற்றம்பலம் காலாந்தகர் "தோடுலா மலர்கள் தூவித் தொழுதெழு மார்க்கண்டேயன் வீடுநாள் அணுகிற்றென்று மெய்கொள்வான் வந்தகாலன் பாடுதான் சொல்ல அஞ்சிப் பாதமே சரணம் என்னச் சாடினார் காலன் மாளச் சாய்க்காடு மேவினாரே" - திருநாவுக்கரசர் கவுசிக முனிவரின் புதல்வராக விளங்கிய மிருகண்டு முனிவர் தம்மனைவி மருத்துவதியோடு இல்லறம் இயற்றிவரும் நாளில், ஆண்மகவு வேண்டி அருந்தவம் இயற்றிட அவதரித்த மைந்தன் மார்க்கண்டேயனுக்கு வயது பதினாறு என்பது பிரமன் வகுத்த கணக்கு! மார்க்கண்டேயன் மனம் சிவபெருமானைப் பற்றியிருந்தது. நாளும் சிவபெருமானை வழிபட்டு வந்தார். வயது பதினாறு அடைந்தார். மார்க்கண்டேயனை…
-
- 5 replies
- 2.7k views
-
-
உ சிவமயம் திருச்சிற்றம்பலம் தட்சிணாமூர்த்தி "கல்லாலின் புடையமர்ந்து நான்மறைஆறங்க முதற்கற்ற கேள்வி வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்துகாட்டிச் சொல்லாமற் சொன்னவரை நினையாமல் நினைத்து பவத்தொடக்கை வெல்லாம்" - பரஞ்சோதி முனிவர்: திருவிளையாடற் புராணம். சிவபெருமான், யோகம் இசை மற்றும் ஏனைய அறிவியற் கலைகளைக் கற்பிக்கும் திருக்கோலத்தில் ஞானாசிரியனாக - தட்சிணாமூர்த்தி என வழிபடப் பெறுகிறார். தட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு, ஞானம், சாமர்த்தியம் என்ற பொருள் உண்டு. தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். இறைவன் தெற்கு நோக்கி அமர்ந்து…
-
- 3 replies
- 4.3k views
-
-
உ சிவமயம் திருச்சிற்றம்பலம் காமதகனர் "பூதப் படையுடைப் புண்ணியரே! புறஞ்சொற்கள் நும்மேல் ஏதப்பட எழுகின்றனவால்! இளையாளொடு உம்மைக் காதற் படுப்பான் கணைதொட்ட காமனைக் கண்மலராற் சேதப் படுத்திட்ட காரணம் நீர்இறை செப்புமினே" - சேரமான்் பெருமாள் நாயனார் உலகில் வரும் கேடுகளை ஊன்றிக் கவனித்தால் அவற்றிற்கு அடிப்படைக் காரணம் காமமே என்பது புலப்படும். காமமே கொலைகட்கெல்லாம் காரணம், கண்ணோடாத காமமே களவுக்கெல்லாம் காரணம், கூற்றும் அஞ்சும் காமமே கள்ளுண்டற்கும் காரணம், ஆதலாலே காமமே நரகபூமி காணியாக் கொடுப்பதாகும். என்று காமத்தின் தன்மையைத் திருவிளையாடற்புராணம் தொகுத்துரைக்கின்றது.
-
- 25 replies
- 11.2k views
-
-
உ சிவமயம் திருச்சிற்றம்பலம் நடராஜர் நடராஜ தத்துவம் திருமுகம்: எல்லையற்ற அழகும் இனிய தண்ணளித்திறனும் கொண்டு தலைமைப்பாட்டினைக் குறிக்கும். பனித்தசடை: சடை சிவநெறிக்குரிய தவ ஒழுக்கச் சிறப்பையும் காட்டுகின்றது. கங்கை: இறைவன் பேராற்றலையும் வேகங்கெடுத்தாளும் வித்தகத்தையும் விளக்குவது. பிறைசூடுதல்: சரண் என அடைந்தவரைத் தாங்கித் தாழ்வு நீக்கிப் பாதுகாக்கும் வள்ளல்தன்மை.
-
- 12 replies
- 8.5k views
-
-
ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: த்ருத்யோ அகநிஷடே பதி: துரீயஸ்தே மனுஷ்யஜா: பொருள் : ஸோமன் முதலில் இந்த மணப்பெண்ணை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாவது கணவன் அக்நி. உன்னுடைய நான்காவது கணவன் தான் இந்த மனித ஜாதியில் பிறந்தவன். விளக்கம்: திருமணமாகப் போகும் மணப்பெண் முதலாவதாக ஸோமன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். இரண்டாவதாகக் கந்தர்வன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். மூன்றாவதாக அக்நிக்கு மனைவியாக இருந்திருக்கிறாள். நான்காவதாகத் தான் இப்பொழுது கல்யாணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளைக்கு மனைவியாகிறாள். அதாவது இதற்கு முன் மூன்று கடவுள்கள் இந்தப் பெண்ணை அனுபவித்து விட்டு விட்ட பின்பு தான் இப்பொழுது நான்காவதாக இந்த மணமகன் இவளை மனைவியாக ஏற்றுக்…
-
- 9 replies
- 9.2k views
-
-
அருள் மொழிகள் அதிகாலையில் எழுந்திரு. படுக்கையிலிருந்து வலது பக்கமாக எழுந்திரு. கிழக்கு முகமாக உட்கார்ந்து கொள். கடவுளை வணங்கு. மந்திரத்தை நினை -ஜபம் செய். காலைக்கடன்களை முடித்துக்கொள். கை, கால், முகம், சுத்தம் செய்து கொள். உடனே குளித்து விடு. ஆலயத்திற்கு செல். தெய்வ வழிபாடு செய். பின்னர் உன் தொழிலைக் கவனி. தொழிலைச் செய்வதில் ஊக்கம் கொள். நியாய முறையில் பொருளைத்தேடு. அநியாயத்தை மனத்திலும் கருதாதே. உலகத்தோடு ஒத்து வாழ். உன்னைப் போல் மற்றவரையும் நினை. எவ்வுயிர் கட்கும் தீங்கு செய்யாதே. மற்றவரைக் கண்டு பொறாமைப்படாதே. புகழொடு வாழ். பகைவரிடத்திலும் இனிமையாகப் பேசு. எல்லோரிடத்திலும் அருவருப்பாகப் பேசாதே. எவரிடத…
-
- 0 replies
- 1.8k views
-
-
பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை ஒரு விளக்கம் அது பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை அல்ல. பிள்ளையார் பிடித்து குரங்கால் முடிந்த கதை. எந்த ஒரு ஆன்மிக நிகழ்ச்சியும் விநாயகரை வணங்கியே தொடங்கப்படுவது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதேபோல் ராமதூதனான அனுமனை வணங்கி அந்த நிகழ்ச்சியை நிறைவு பெறச் செய்ய வேண்டும் என்பது ஐதிகம். பெரும்பாலான உபன்யாசகர்களும், கதாகாலட்சேபம் செய்பவர்களும் ஆன்மிக உரை நிகழ்த்துபவர்களும் ஆரம்பத்தில் ஆனைமுகனை வணங்கிவிட்டு, கடைசியில் ஆஞ்சநேயனைத் துதித்து மங்களம் பாடி முடிப்பதை நீங்கள் பார்த்து, கேட்டு இருக்கலாம். அதைத்தான், அதாவது பக்தி சார்ந்த எந்தச் செயலும் நல்ல முறையில் நடந்து முடிந்ததைக் குறிப்பிடத்தான், 'பிள்ளையார் பிடித்…
-
- 1 reply
- 2.5k views
-
-
ஈவ் டீஸிங், ஊழல், கொலை, கொள்ளை இதெல்லாம் யார் செய்தாலும் குற்றம் தானே? இதுபோன்ற குற்றங்கள் மட்டுமல்லாது மோசடி, பலதாரமணம் என்று பல குற்றங்களையும் நிறைய செய்திருக்கிறார்கள் நம் இந்துமத கடவுளர்கள். குற்றங்களை செய்துவிட்டு அவையெல்லாம் நம்முடைய திருவிளையாடல் என்று பெருமை வேறு அடித்துக் கொண்டிருக்கிறார்கள். பலதாரமணம் என்பது குற்றமெனில் அறுபது ஆயிரம் மனைவிகளை மணந்த தசரதனையும், ஐந்து கணவர்களை மணந்த பாஞ்சாலியையும் குற்றவாளி என்றுதானே சொல்லவேண்டும்? சிவனுக்கு ரெண்டு, முருகனுக்கு ரெண்டு என்று ஆரம்பித்து எல்லா கடவுளருக்கு ஆளுக்கேற்ற மாதிரி மனைவிகளின் எண்ணிக்கை மாறுபட்டிருக்கிறது. வெண்ணை திருடிய குட்டி கிருஷ்ணனை சீர்த்திருத்தப் பள்ளியில் சேர்த்திருக்க வேண்டாமா?கோபியர்களின் ச…
-
- 7 replies
- 2.4k views
-
-
கடவுளுக்குச் சளி பிடிக்குமா? கடவுள்கள் எல்லாமே, கல்லாகவோ, உலோகமாகவோதான் (சிலை வடிவில்) காட்சி அளிக்கின்றன. இந்தச் சிலைகள் கல்யாணம் கட்டிக் கொள்கின்றன. பள்ளியறைக்குப் போய் மனைவியுடன் படுத்துக் கொள்கின்றன, வைப்பாட்டி வீட்டுக்கும் (சீரங்கம், சீறிமுஷ்ணம்) போய்த் தங்கியிருந்து மறுநாள் வருகின்றன. சிலைகளுக்கு `சைதன்ய’ உணர்ச்சி உண்டா என்ற பகுத்தறிவுக் கேள்விக்குப் பக்தர்களிடம் இருந்து பதிலே வரவில்லை. இப்பொழுது ஒரு கேள்வி. குற்றால நாதனுக்கும் அதன் சகதர்மிணி செண்பகக் குழல்வாய் மொழி அம்மைக்கும் தினமும் சுக்குக்காப்பி நைவேத்யம் செய்கிறார்கள், ஏன் தெரியுமா? இவர்கள் இருவரின் தலையிலும் எந்நேரமும் தண்ணீர் கொட்டிக் கொண்டேயிருப்பதால் சளி பிடித்துக் கொள்ளாமல் தடுக்கவே சுக்குக் …
-
- 0 replies
- 1.1k views
-
-
விரதப்புரட்டு: உமாமகேஸ்வர பூஜை விரதம் "நைமிசாரண்யவாசிகளுக்கு சூதபுராணிகர் சொன்னது" "ஆனந்த தேசத்தில் வேத விரதன் என்னும் பிராமணனுக்கு சாரதை என்று ஒரு பெண் இருந்தாள். அந்த ஊரில் மனைவியை இழந்த பத்மநாபன் என்னும் கிழப்பார்ப்பான் அந்தப் பெண்ணின் தகப்பனுக்கு நிறைய பணம் கொடுத்து, தனக்கு அந்தப் பெண்ணை இரண்டாவது பெண் ஜாதியாக விவாகம் செய்து கொண்டான். அந்தக் கிழப்பார்ப்பான் மணக்கோலம் முடியும் முன்பே விஷம் தீண்டி இறந்து போனான். பிறகு அந்தப் பெண் தகப்பன் வீட்டிலேயே இருந்தாள். சில நாள் பொறுத்து ஒரு முனிவர் சாரதையின் வீட்டிற்கு வந்தார். சாரதை அவருக்கு மரியாதை செய்தாள். உடனே அந்த முனிவர் சாரதையை "நீ புருஷனுடன் இன்பமாய் வாழ்ந்து நல்ல பிள்ளைகளைப் பெறக் கடவாய்" என்று ஆசீர்வாதம் செய்தார்…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழகமெங்கும் பெரியார் நூல்கள்! பெரியார் புத்தக நிலையத் திறப்பு விழாவில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை: http://www.periyar.org.in/v/content/view/283/1/lang,en/
-
- 0 replies
- 796 views
-
-
இலங்கை உபன்யாசம் அய்ரோப்பா, ஆப்பிரிக்கா, ரஷ்யா முதலிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு, இலங்கை வழியாக இந்தியாவுக்குத் திரும்புகையில், 1932ஆம் வருடம் அக்டோபர் 17ஆம் தேதி கொழும்பு வந்திறங்கிய தந்தை பெரியார் அவர்களுக்கு இலங்கையில் கொழும்பு, கண்டி, நாவல்பட்டி, ஹட்டன், யாழ்ப்பாணம், பருத்தித் துறை முதலிய இடங்களிலும், இந்தியாவில் தூத்துக்குடி, மதுரை முதலாகிய இடங்களிலும் பல நிறுவனங்களின் பேரால் அளித்த பல வரவேற்பு நிகழ்ச்சிகளிலும், பொதுக் கூட்டங்களிலும் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரைகளிலிருந்து கடவுள் பற்றி திரட்டியது, (குடிஅரசு, 20.11.1932). தோழர்களே! கடவுள், மதம், ஜாதியம், தேசியம், தேசாபிமானம் என்பவை எல்லாம் மக்களுக்கு இயற்கையாக தானாகவே ஏற்பட்ட உணர்ச்சிகள் அல்…
-
- 0 replies
- 957 views
-
-
இது காட்டுமிராண்டிகளின் கடவுள்கள் இராஜாஜியும், சங்கராச்சாரியாரும் மக்களிடையே பக்திப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். எப்போதையும்விட இப்போது அதிகமாகச் செய்து வருகிறார்கள். பேச்சு பேசும்போதும் ``மக்களுக்கு இப்போது வரவர கடவுள் பக்தி குறைந்து வருகிறது'' என்று பேசி வருகிறார்கள். அதன் கருத்து என்ன என்று சிந்திப்போமானால், மக்களிடம் வரவர காலப் போக்கில் மூட நம்பிக்கைகள் குறைந்து விலகி வருகிறது என்பதுதான் பொருளாகும். ஏன் என்றால் அந்தச் சொல்லை உண்டாக்கினவர்களே மக்களிடம் ஒரு முட்டாள்தனமான நம்பிக்கை ஏற்படவேண்டும் என்கின்ற கருத்தில்தான் உண்டாக்கினார்கள் என்று சொல்ல வேண்டும். ஏன் இப்படிச் சொல்லுகிறேன் என்றால் அந்தச் சொல், அதாவது பக்தி என்கிற சொல் ஓர் அர்த்தமற்ற பொருளற்ற சொல்லேயாக…
-
- 0 replies
- 765 views
-
-
இந்து மதத்திற்கு கடவுள் உண்டா? ``இந்து மதம் என்பது வேத மதமேயாகும்'' என்கிறார் சங்கராச்சாரியார். வேதத்தில் கடவுள் இல்லை என்கிறார் சங்கராச்சாரியார். நான் சொல்கிறேன், தமிழனுக்கு (திராவிடனுக்கு) கடவுள் இல்லை, இல்லவே இல்லை. எப்படி என்றால் நமக்கு தமிழ்ப் பெயர் கொண்ட கடவுள் ஒன்றுகூட கிடையாது. இருப்பவை எல்லாம் வடமொழியில் உள்ள கடவுள் பெயர்களை தமிழில் மொழி பெயர்த்துக் கொண்டிருக்கலாம் என்றாலும் அப்படிப்பட்ட பெயர்களை பார்ப்பனர் ஏற்றுக் கொள்வதில்லை. உதாரணம், கந்தனுக்கு முருகன் என்றும், ஆறுமுகன் என்றும் தமிழ்ப் பெயர்கள் உண்டு. இந்தத் தமிழ்ப் பெயர்களை எந்த பார்ப்பனரும் தங்களுக்குப் பெயர்களாக வைத்துக் கொள்ளுவதில்லை; வடநாட்டான்களும் வைத்துக் கொள்ளுவதில்லை. ஆகவே, தமிழர்கள…
-
- 0 replies
- 1.2k views
-
-
கடவுளை நம்ப முட்டாளே போதும் என்னைப்பற்றிச் சொல்ல வேண்டுமானால் கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்றோ, இல்லையென்றோ சொல்ல முன் வரவில்லை. அதுபோலவே நீங்கள் அனைவரும் என் பேச்சைக் கேட்டுத்தான் ஆக வேண்டுமென்று கூறவில்லை. இன்னொன்றும் சொல்கிறேன், கடவுள் இருக்கிறார் என்று சொல்லிக் கொள்ள அறிவாளி தேவையில்லை. சாதாரணமாக ஒரு முட்டாள்கூட சொல்லிவிடலாம். ஆனால், கடவுள் இல்லையென்று மறுத்துக்கூற ஒரு அறிவாளியால்தான் முடியும். மறுப்பதற்கான பல ஆதாரங்களைச் சொல்ல வேண்டும்; சிந்தித்து அதற்கான காரணங்களைக் கூற வேண்டும். உலகில் இன்று கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் சுமார் 100 கோடி மக்கள் இருப்பார்கள். கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் சற்றுக் கூடுதலாக இருப்பார்கள். நாம் எல்லோரும் கடவுள் நம்பிக்க…
-
- 177 replies
- 24.3k views
-