சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
நம்பிக்கைகளும் கிராமிய வாழ்க்கையும்: ஒரு பார்வை ஆய்வுக் குறிப்பின் நோக்கம்: இந்த ஆவணம், வழங்கப்பட்ட தமிழ் மூலத்தில் கூறப்பட்டுள்ள முக்கிய கருப்பொருள்கள், யோசனைகள் மற்றும் உண்மைகளை விரிவாக ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது கிராமிய வாழ்க்கையில் நம்பிக்கைகள் மற்றும் மூடநம்பிக்கைகளின் தாக்கத்தை மையமாகக் கொண்டுள்ளது. முக்கிய கருப்பொருள்கள்: பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் மூடநம்பிக்கைகள்: கிராமப்புற சமூகங்களின் வாழ்க்கையை நம்பிக்கைகள் மற்றும் மூடநம்பிக்கைகள் எந்த அளவிற்கு பாதிக்கின்றன என்பது முக்கிய கருப்பொருளாகும். லியோன் யுரிஸின் 'றினிற்றி' நாவலில் அயர்லாந்து கிராமப்புற மக்களின் நம்பிக்கைகள், மூலத்தில் கூறப்பட்டுள்ள தமிழ் கிராமப்புற மக்களின் நம்பிக்கைகளுடன் ஒப்பிடப்படுகின்…
-
- 0 replies
- 576 views
-
-
பூ இருக்கிறது அதனுள் அபரிதமான சக்தியை கொண்ட தேன் இருக்கிறது அந்த தேனை எடுப்பதற்கு இரண்டு வழிமுறைகள் உண்டு ஒன்று அதனை கசக்கி பிழிந்து எடுப்பது ஒரு வழிமுறை அதே நேரம் பூவிற்கு வலிக்காமல் அதே நேரம் அதன் வளர்ச்சிக்கும் வழிவகுத்தபடி மென்மையாக அமர்ந்து தேனை எடுக்கும் வண்ணத்துபூச்சியின் முறை இரண்டாவது வழிமுறையாகும். இங்கே நான் பூ என்று சொல்வது உங்களது குழந்தைகளைத்தான் நமக்கு இறைவன் தந்த அதி அற்புதமான கொடையான குழந்தைகளை மதிப்பெண் பெறவைப்பது உள்ளீட்ட அவர்களின் பல்வேறு சக்தியினை வெளிக்கொண்டு வர நாம் கையாளும் முறை வண்ணத்து பூச்சியின் குணத்தை கொண்ட மென்னையான,அதே நேரம் உண்மையான , அன்பை ஆதாரமாகக்கொண்ட தோழமையுடன் கூடிய அணுகுமுறையே சிறந்ததாகும். அஸ்திவாரம் போட வேண்டிய தருணம்: அதற…
-
- 0 replies
- 1.6k views
-
-
முட்டாள்கள் தினம் வந்தாலே, யாரையாவது முட்டாளாக்க வேண்டும் என்று மனம் துடிக்கும். அதேவேளை யாரும் என்னை முட்டாளாக்கக் கூடாது என்று மகா மகா விழிப்புடன் இருப்போம். தாய்மார்கள் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், மகளிர் தினம், உழைப்பாளிகள் தினம் என்று இந்த உலகின் மனிதர்களுக்குப் பலவிதமான தினங்கள் இருப்பது போலவே முட்டாள்களுக்கென்று ஒரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பிரச்சினை என்னவென்றால் மற்றைய விசேட தினங்களில் தமக்குப் பங்கிருப்பதாகக் காட்டிக் கொள்கின்ற மனிதர்களில் எத்தனை பேர் இந்த முட்டாள்கள் தினத்தில் தமக்கும் பங்கிருப்பதாக சொல்லிக் கொள்ள முன்வருவார்கள் என்பதுதான்! அதனால்தானோ என்னவோ தம்மை அடையாளப்படுத்திக் காட்டாமல் பிறரை மட்டும் முட்டாளாக அடையாளப்படுத்திக்…
-
- 0 replies
- 1.3k views
-
-
சாதியற்ற தேசமாக மாற இந்தியாவில் சமூக, கலாச்சார மாற்றம் ஏற்பட வேண்டும் ஐக்கிய நாடுகள் சபை முதன்முறையாக பாபா சாஹேப் அம்பேத்கரின் பிறந்த நாளைக் கொண்டாடியிருக்கிறது. கோடிக்கணக்கான இந்தியர்களுக்கும், உலகெங்கும் சமத்துவத்துக்காகவும் சமூக நீதிக்காகவும் போராடுபவர்களுக்கும் உத்வேகமாகத் திகழ்பவர், இந்தியாவின் நாயகரான அம்பேத்கர் என்று அது தெரிவிக்கிறது. சமீபத்தில் ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையம் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், சாதியப் பாகுபாடுகள் பற்றிய விமர்சனமும் உள்ளது. அதற்கு இந்திய அரசு ஆட்சேபம் தெரிவித்துள்ளது. அந்த ஆட்சேபம், இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பியான அம்பேத்கருக்கு நிச்சயமாகத் திருப்தியானதாக இருக்காது. ஏட்டளவிலும் நடைமுறையிலும் ஐ.நா…
-
- 0 replies
- 1.3k views
-
-
இறைவிக்குப் பதிலாக மனிதி என்றே பெயர் வைத்திருக்கலாம். ஏனெனில் எம் சமூகத்தில் பெண்ணைத் தம்மைப் போல் விருப்பு, வெறுப்பு, ஆசைகள், உணர்ச்சிகள், இலட்சியங்கள் உடைய சகமனிசியாக அங்கீகரிக்கப் பின்வாங்குபவர்கள் பலர் அவள் தன் சுயமிழந்து முற்றிலும் கணவனைச் சார்ந்து குடும்பத்துக்காகத் தம்மை இழக்கும் பெண்களை இறைவிகளாக்க ஓடிவருவார்கள். அவர்களின் சிந்தனையைத் தூண்ட இப்படத்தில் வரும் பெண்கள் சக மனித உயிர்கள் என அடித்துச் சொல்லப்பட்டிருக்க வேண்டும். உலகம் உனதாய் வரைவாய் மனிதி! மனிதி வெளியே வா! மனிதன் என்ற சொல்லுக்குள்ளே அடங்காதே பெண்ணே! உயரம் உனதே தான்! அமர்ந்தால் உயரம் தெரியாது - நீ நிமிர்ந்தே வா பெண்ணே! மனிதி வெளியே வா! பாட்டு நன்றாக எழுதப்பட்டுள்ளது. அதைக் கடைசியில…
-
- 0 replies
- 884 views
-
-
“உயர்ந்த” இனங்கள் “செயலூக்கம் மிகுந்தவை” என்றும், வரலாற்றில் தலைமைப் பாத்திரம் வகிப்பதாகவும், அடிப்பட்டு இருப்பதையே விதியாகக் கொண்ட “தாழ்ந்த” “செயலூக்கம் அற்ற” இனங்களின் அடிமை உழைப்பைப் பயன்படுத்தி, பண்பாடு, நாகரிகம் அனைத்தையும் அவையே நிறுவியதாகவும் இனக் கொள்கையினர் வலிந்து உரைக்கிறார்கள். பெரும்பாலான இனக் கொள்கையினரின் கருத்துப்படி, சமூகத்தின் வளர்ச்சி இனச் சிறப்புத் தன்மைகள் மீது பாதிப்பு நிகழ்த்துவது இல்லை. மாறாக, இனச் சிறப்புத் தன்மைகளே மனித குலத்தின் சமுதாயக் குழுக்களது முன்னேற்றத்திற்கோ பிற்போக்கிற்கோ காரணம் ஆகின்றன. இவ்வாறு, மனித இனங்களின் உடலியல், உளவியல் சமத்துவமின்மை பற்றிய ஆதாரமற்ற போதனை, வரலாற்று வளர்ச்சி குறித்த, விஞ்ஞானத்துக்கு முரணான…
-
- 0 replies
- 1.1k views
-
-
கொலை, பாலியல் வன்முறைகளில் சிறுவர்கள் - சமூக வலைதளங்கள் காரணமா? டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரத்தால் பலியான சம்பவத்தில் 18 வயதுக்குட்பட்ட சிறுவன் ஒருவனும் இடம் பெற்றிருப்பதால், வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம், மைனர் என்பதற்காக வயதை குறைக்கலாமா என்ற பரிசீலனையில் உள்ளது. இந்தநிலையில் கடந்த 2011ம் ஆண்டு வரை 33 ஆயிரம் சிறுவர்கள் (18 வயதுக்குட்பட்டவர்கள்) மீது குற்றவழக்குகள் அந்தந்த மாநில காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை சம்பவங்களில் இப்போது பதினாறு வயது முதல் 18 வயதிற்குட்பட்டோர் அதிகம் ஈடுபடுகின்றனர். ஆடம்பர செலவுகளுக்காகவும், போதைக்காகவும் பணத்தை கொள்ளையடிக்கின்றனர். அதேபோல் பள்ளிப் பருவத்தில் இருந்தே பாலியல் …
-
- 0 replies
- 686 views
-
-
கொரோனா வைரஸ்: வீட்டில் இருந்து பணியாற்றுவதை பலர் விரும்ப என்ன காரணம் ? சாம் பிரோஃபிட் பிபிசி செய்தியாளர் Getty Images உலகின் பல நாடுகளில் மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு தொடங்கியபோது, பலர் தங்களுக்கு தேவையான தொழில்நுட்ப உபகரணங்களை அலுவலகத்தில் இருந்து எடுத்துக்கொண்டு தங்கள் வீட்டில் இருந்தே அலுவலக பணியை மேற்கொள்ள தொடங்கினர். படுக்கை அறை, சமையல் அறை சாப்பாடு மேஜை போன்றவற்றிற்கு நடுவில் அமர்ந்தபடி மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் அலுவலக பணியை புதிய வழியில் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தற்போது உலகின் பல பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, ஊழியர்கள் தங்கள் அலுவலகங்களுக்கு த…
-
- 0 replies
- 536 views
-
-
அந்த ஒரு 'சொல்' பெண்ணை என்னவெல்லாம் செய்யும்? சமீபத்தில் வாசித்த ஒரு கவிதை. மனுஷ்யபுத்திரனுடையது. 'வேசிகளிடமும் செல்லாத ஐநூறு ரூபாய் நோட்டுகள்...' என்ற வரிகள். அதைப்பற்றி இணையம் முழுக்க கேலிகளும் கிண்டல்களும். சிலது சிரிக்கும்படி, சிலது வரம்பு மீறி. அது மனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல் என்பதைவிட உச்சபட்சமாக 'வேசி' என்ற பெண்ணினம் மீது கிண்டல், கேலி, அருவருப்பு என தங்கள் மனக்குப்பைகளைக் கொட்டி இருந்தனர். வேசி, தே.., அம்மா, ஆத்தா என்ற வார்த்தைகள் தமிழில் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும், ஏன் உலகம் முழுமைக்கும் சொந்தமாக இருக்கின்றன. என் நெருங்கிய தோழி அவள். அழகான குடும்பம், ஒரே ஒரு குழந்தை என எந்தப் பிரச்னையும் இல்லை. நாற்பதுகளில் தன்னை மேம்படுத்திக்…
-
- 0 replies
- 1.7k views
-
-
தெற்காசிய பின்னணியுடைய பிரிட்டன் பெண்கள் புற்றுநோயை மறைத்து வாழ்வது ஏன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் புற்றுநோயை பற்றி சமூகத்தில் நிலவும் களங்கமான முத்திரையால், தெற்காசிய பின்னணியுடைய பல பிரிட்டன் மற்றும் ஐக்கிய ராஜ்ஜிய பெண்கள் தங்களுக்கு இருக்கும் புற்றுநோயை யாருக்கும் தெரியாமல் மறைத்து வாழ்வது பிபிசிக்கு தெரிய வந்துள்ளது. குடும்பத்தினரின் மறுமொழி எவ்வாறு இருக்…
-
- 0 replies
- 452 views
-
-
ஒவ்வொரு வெற்றிப் பெற்ற மனிதனுக்கும் ஒரு வலியுள்ள கதையிருக்கிறது. ஒவ்வொரு வலி மிகுந்த கதைக்கும் ஒரு வெற்றிகரமான முடிவிருக்கிறது உறக்கம் தொலைத்த "விழிகளில்" கனவுகளின் மிச்சம்... உள்ளத்திலோ தொலைத்த "நேசம்களின்" எச்சம்..... . முட்டாள்கள் விமரிசனங்களுக்கு பதில் சொல்கிறார்கள், புத்திசாலிகள் வென்று காட்டுகிறார்கள் .நல்ல பொண்ணுங்களுக்கும் டைனோசர்களுக்கும் ஒரே ஒரு ஒற்றுமை. ரெண்டுமே இப்ப உலகத்தில இல்லை. காதலித்து பார் உன் கையெழுத்து அழகாகும் "..! -வைரமுத்து . "காதலிப்பதை விட்டு பார் உன் தலைஎழுத்து அழகாகும் "..! -வயிறு எரிஞ்ச முத்து உன்னை நேசிக்கும் பெண்ணை சாகும் வரை மறவாதே... உன்னை மறந்த பெண்ணை வாழும் வரை நினைக்காதே.. காதல் எங்கே பிறந்தது என்று தெர…
-
- 0 replies
- 1k views
-
-
காபி, உடற்பயிற்சி போன்றவை அதிகமானால் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது என நெதர்லாந்தை சேர்ந்த நியூராலஜி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மூளைக்கு செல்லும் ரத்த குழாய்களின் சுவர்கள் வலுவிழக்கும் போது ரத்தம் கசிந்து பக்கவாதம் ஏற்படுகிறது. இதற்கான காரணம் குறித்து நெதர்லாந்தின் மருத்துவ பல்கலைக்கழகத்தின் நரம்பியல் நிபுணர் மானிக் எச்.எம்.விலாக் என்பவர் தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். மூளையில் ரத்த அழுத்தம் அதிகமாவதற்கு 8 முக்கிய காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் முதல் இடத்தில் இருப்பது நாம் குடிக்கும் காபி தான். இது ஸ்ட்ரோக் ஏற்பட 10.6 சதவீதம் காரணமாக இருக்கிறது. தீவிர உடற்பயிற்சி 7.9 சதவீதமும், செக்ஸ் 4.3 …
-
- 0 replies
- 782 views
-
-
நண்பனுக்காக ஒரு மதிய வேளையில் செல்போன் Recharge கடையில் நின்றிருந்தேன் .. கடைக்காரர் சாப்பிட்டுக்கொண்டிருந்ததால் சிறிது நேரம் கடை வெளியே காத்திருக்க வேண்டியதாகி விட்டது . 1-2 மணியென்பதால் , பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. [size=4]வெயில் வேறு கொளுத்தியது..[/size] [size=4]அப்போது .......[/size] [size=4]45 - 50 வயதிருக்கும் ஒரு பெண்மணி அந்த கடையின் வாயிலைப் பார்த்தவாறே கடையின் நிழலில் நின்றார் . [/size] [size=4]சரி கடைக்கு வந்திருக்கிறார் என்று [/size]நானும் நண்பனும் தள்ளி வேறு பக்கம் போய் நின்றோம் . அவரோ முகத்தில் எவ்வித சலனமுமின்றி எங்களைப் பார்த்தவாறே நின்றிருந்தார் . சரி ஏதோ கேட்க வருகிறார் என்றால் அதுவும் இல்…
-
- 0 replies
- 783 views
-
-
கொரோனா வைரஸ்: "பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குபவருடன் முடக்கநிலை காலத்தில் நான் சிக்கிக் கொண்டேன்" மேகா மோகன் பிபிசி உலகின் பெரும்பாலான பகுதிகள் கொரோனாவால் முடக்கநிலைக்கு வந்துவிட்ட நிலையில், வீடுகளில் பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளாகும் நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் துன்பங்கள் இந்த நோய்த் தொற்று காலத்தில் மறைக்கப்படும் விஷயமாகவே இருந்துவிடக் கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் தேசிய பாலியல் அத்துமீறல் ஹாட்லைன் தொலைபேசிக்கு இந்த வாரம் வந்த அழைப்புகளின் எண்ணிக்கை 65 சதவீதம் அதிகரித்துள்ளது என்று வீடுகளில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதி ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ஏழை நாடுகள் மற்றும் …
-
- 0 replies
- 507 views
-
-
'பத்தாம் வகுப்புகூட தாண்டாத, என் மாத வருமானம் லட்சத்துக்கும் மேல்!' - 'சுயதொழில்' ராஜேஸ்வரியின் கதை #SuccessWoman பல சராசரி பெண்கள்போல கணவன், குடும்பம் என இருந்தவர்தான் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றைச் சேர்ந்த ராஜேஸ்வரி ரவிக்குமார். பிற்காலத்தில் சத்தான, ஆரோக்கியமான, சுகாதாரத்தை முன்னிறுத்தும் 'சுகா டயட் நேச்சுரல் ஃபுட்ஸ்' கம்பெனியை ஆரம்பித்து, வெற்றிகரமான தொழிலதிபராக சிறகடித்துவருகிறார். அந்தப் பயணத்தை நினைவுகூர்கிறார். ''டாக்டருக்குப் படிக்கணுங்கிறதுதான் என் சின்ன வயசு ஆசை, கனவு. வீட்டுச் சூழல் காரணத்தால் பத்தாம் வகுப்போடு நிக்க வேண்டியதாப்போச்சு. குறிப்பிட்ட வயசு வந்ததும் க…
-
- 0 replies
- 1.3k views
-
-
கோபத்தை கட்டுப்படுத்த முடியுமா? Aug 19, 2023 06:41AM சத்குரு சிலர் தங்கள் கோபமே ஒரு உந்து சக்தியாக இருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், பெரும்பாலானோர் கோபத்தினால் பெரும் பாதிப்பையே அடைகிறார்கள். உண்மையில், கோபம் ஒரு உந்து சக்தியா? அல்லது பாதிப்பா? கோபத்தை ஏன் நாம் கைவிட வேண்டும்? தொடர்ந்து படித்தறியலாம் சத்குருவின் பார்வையை! கேள்வி சில சூழ்நிலைகளில், நாம் கோபத்தில் சமநிலை தவறிவிட்டு, அதன்பின்னர் நமது முட்டாள்தனத்தை நினைத்து வருந்துகிறோம். ஆனால் அதற்குள் காலம் கடந்துவிடுகிறது. நமது கோபத்தை நாம் எப்படி கட்டுப்படுத்த முடியும்? தற்போது நீங்கள் கோபமாக இருக்கிறீர்களா? இல்லை. உங்களிடம் இப்போது கோபம் இல்லை. இப்போது அது எங்கேயிருக்கிறது என்பது…
-
- 0 replies
- 595 views
-
-
புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் கருவிகளை எளிதில் வாங்கக்கூடியவர்கள், வாங்கியபிறகு அதன் முழுபயன்பாட்டை தெரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள், அவர்களுக்கு உதவுபவர்தான் தாஸ் என்கின்ற தணிகாசலம் ஸ்ரீதர் தாஸ்.சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவரான தாஸ் அங்குள்ள அசோக் லேலண்டு நிறுவனத்தின் வெள்ளிவிழா ஊழியர். அங்கு வேலை பார்த்த நேரம் போக மீதி நேரம் ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக கிட்டாரில் ஆரம்பித்து போட்டோகிராபி வரை பல விஷயங்களை கற்றுக்கொண்டார். அதிலும் ஆப்பிள் ஐமேக் நிறுவனத்தில் இரண்டு வருடம் பைனல் கட் புரோ (fcp)வீடியோ எடிட்டிங் படித்து உயர் சான்றிதழ் பெற்றவர். இவருக்கு உள்ள நல்ல பழக்கம் தான் கற்றதை தனக்குள் வைத்துக்கொள்ளாமல் கேட்பவர்களுக்கு எல்லாம் சொல்லித்தருவார்.…
-
- 0 replies
- 1.7k views
-
-
உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே. நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதையும் பெரிது பண்ணாதே. உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ. ஒன்றை மட்டும் தெரிந்து கொள்.... *ஒவ்வொரு மனிதனும்* *தனித்தனி ஜென்மங்கள்.* தனித்தனி பிறவிகள் தனித்தனி ஆன்மாக்கள் அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும்.அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும். அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே. அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள் . அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டு…
-
- 0 replies
- 720 views
-
-
" "இதெல்லாம் நடக்குமெண்டு நினைக்கிறீரோ தம்பி?" அவ்வப்போது சிரித்துக்கொண்டே கேட்பார் மனேஜர். ஏன் நடக்காதா எல்லாம் சரியாத்தானே இருக்கு?" "இட்ஸ் ஒக்கே நான் சும்மா கேட்டன் நீர் என்ன நினைக்கிறீர் பாப்பம் எண்டு..." "என்னவாம் தம்பி.. தண்ணி கொண்டு வரப் போறாராமோ? சிறி இடையில் வந்து "இப்பிடித்தான் முந்தியும்..." கதைசொல்ல ஆரம்பிப்பார். 'அடப்பாவீங்களா நடக்காதுன்னு நினைச்சுக்கொண்டா வேலை செய்யுறீங்க?' எனத் தோன்றும். "என்ன இப்பிடி கதைக்கிறீங்க? இயக்கமே ஓக்கே சொல்லிட்டாங்களே?" "என்னமோ பாப்பம்... எங்களுக்கு நல்லா பே பண்ணீனம் சந்தோஷமா வேலை செய்துட்டு போக வேண்டியதுதான் இட்ஸ் ஒக்கே" - மனேஜர் 'இட்ஸ் ஒக்கே' என்பதே மனேஜரின் தாரக மந்திரம். 'ஒரு பொல்லாப்புமில்லை' என்கிற 'விச…
-
- 0 replies
- 679 views
-
-
மாவீரர் தின நிகழ்வுகளில் ஆலயங்களின் பங்கு முக்கியமானவை. மாவீரர்களுக்கு அகவணக்கம் செய்யும் நிகழ்வுகளில் ஆலய மணிகளை ஒலிக்க விடுதல் என்பது தாயகத்திலும் பிரதான அம்சங்களாக இருந்தன இருக்கின்றன. இந்து மற்றும் கிறிஸ்த தேவாலயங்கள் என்று மக்கள் தங்கள் நம்பிக்கைகளுக்குரிய இடங்களில் இருந்தெல்லாம் மாவீரர்களுக்கு அக வணக்கம் செய்யும் முகமாக ஆலய மணிகளை ஒலிக்க விட்டனர். தற்போது புலம்பெயர்ந்த நாடுகளிலும் தாயகத்திலும் இந்து ஆலயங்களில் மாவீரர் தின பூசைகள் என்று மாவீரர்களுக்கு மக்கள் அகவணக்கம் செய்யும் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளமையானது மாவீர வழிபாடு என்பது தமிழர்களின் வாழ்வியலோடு கலந்து விட்ட ஒரு அம்சமாக பரினமிக்கக் கூடிய தன்மையை ஏற்படுத்தியுள்ளது. இது மாவீரர்கள் மரணத்தாலும் தமது கொள…
-
- 0 replies
- 1.1k views
-
-
2019-11-25@ 20:27:52 ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே ஆண் வாரிசு இல்லாததால் தாய்க்கு மூத்த மகள் ஈமச்சடங்கு செய்த சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி தாமரைகுளம் அரியான் வட்டத்தைச் சேர்ந்தவர் நாகன். இவரது மனைவி அஞ்சனாதேவி(90). இவர்களுக்கு மைக்கண்ணி(65), பாப்பாத்தி(63), காந்தா(58) என 3 மகள்கள் உள்ளனர். ஆண் வாரிசு இல்லை. இந்நிலையில் அஞ்சனாதேவியின் கணவர் நாகன் கடந்த 40ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதனால் அஞ்சனாதேவி தனது 3 மகள்களையும் தன்னந்தனியாக வளர்த்து வந்தார். மேலும் தனக்கு ஆண் வாரிசு இல்லை என்பதால் மூத்த மகள் மைக்கண்ணியை ஆண் வாரிசு போல் வள…
-
- 0 replies
- 579 views
-
-
-
- 0 replies
- 466 views
-
-
எழுதியவர் பி.கே. பாலச்சந்திரன் இன்று இலங்கைத் தீவில் அசல் “சிறிலங்கன்” பிராமணர் இல்லை எனப் பொதுவாகப் பேசப்படுகிறது. இந்துக் கோயில்களில் பூசகர்களாக பணியாற்றுபவர்கள் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டோடு நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள். கலாநிதி ஞானத் ஒபயசோரா, பிரின்ஸ்ரன் பல்கலைக் கழகத்தில் (Princeton University ) ஒரு சமூக மானிடவியலாளராகப் பணிபுரிபவர். அவர் 2015 ஆம் ஆண்டு ” பிராமணர்களின் குடிவருகையும் சிறிலங்காவில இந்திய உயர்த்தட்டினர் எப்படி விதிவசத்தால் சூத்திரர்கள் ஆக்கப்பட்டார்கள்” என்ற கட்டுரையை எழுதியிருந்தார். சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் தென்னிலங்கையில் 19 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு பிராமணர்கள் இருந்ததற்கான எந்தப் பதிவும் இல்லை. “ஆனால்…
-
- 0 replies
- 2.5k views
-
-
ஆழ்மனதின் கேள்விகளுக்கு விடையளித்த `தி ஆல்கெமிஸ்ட்' ஒரு ஜிப்ஸியாக வாழ்வதை ஒவ்வொரு மனிதனும் விரும்பலாம். ஆனால் ஜிப்ஸியாக இருப்பது அவ்வளவு சுலபமல்ல. பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்! வாழ்க்கை குறித்து சற்று ஆழமாகச் சிந்திக்கும் போதெல்லாம் பல பதிலற்ற கேள்விகள் காற்று போன்று விடாமல் மனிதர்களைத் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. நமக்குக் கிடைத்துள்ள வாழ்வை நன்றாக அனுபவித்து ஒவ்வொரு நொடியும் மக…
-
- 0 replies
- 446 views
-
-
“சுதந்திரம் என்றுமே அதிகார வர்க்கத்தினரால் தானாக வழங்கப்படுவதில்லை, அது ஒடுக்கப்பட்டவர்களின் தேவைகள் ஒலிக்கப்படும்போது மட்டுமே பெறப்படுகிறது” —மார்டின் லூதர்கிங் பிறப்பை அறுதியிட்டு நிர்ணயிக்க இயலாத உயிரினங்கள் அனைத்தும் உணவு, நீர், வாழிடங்கள் போன்ற தன் தேவைகளுக்கும், வசதிகளுக்கும் ஏற்றவாறு தனக்கான புகலிடத்தை நிலை நிறுத்திக்கொள்ள விரும்புகிறது. அதனால்தான் ஆயிரக்கணக்கான மைல்கள் வலசைபோகும் தேசாந்திரித் தட்டான்கள் முதல் பறவைகளும், விலங்குகளும், மனிதர்களும் இன்று விரிந்து பரவி வாழ்கிறது. இவ்வாறு புலம்பெயர்தலில் உள்ள தேடல் மனநிறைவையும், புதிய வாழ்வையும் தரும். ஆன…
-
- 0 replies
- 755 views
-