உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26643 topics in this forum
-
ஜெர்மனியில் ஒருபால் திருமணம் சட்டபூர்வமானது ஒரு பாலின திருமணத்தை சட்டமாக்கும் வகையில் ஜெர்மனிய நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது. இந்த சட்டமூலத்தின் மூலம் ஆண் மற்றும் பெண் ஒருபாலுறவுக்காரர்களுக்கு குழந்தைகளை தத்து எடுப்பது உட்பட முழுமையான திருமண உரிமை வழங்கப்படுகின்றது. இந்தச் சட்டத்தை அங்கீகரிப்பதற்கான வாக்களிப்பு மேலும் சமூக அமைதிக்கு வழி செய்யும் என எதிர்பார்ப்பதாக ஜேர்மன் அதிபர் ஏங்கிலா மேர்க்கல் கூறியுள்ளார். http://globaltamilnews.net/archives/31422
-
- 0 replies
- 409 views
-
-
ஏவுகணைச் சோதனையில் தப்பிய பிரான்ஸ் பயணிகள் விமானம் உலக நாடுகளின் எதிர்ப்பை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து ஏவுகணை சோதனையில் கவனம் செலுத்தி வருகிறது வடகொரியா. இந்நிலையில், வட கொரியா ஏவுகணைசோதனை நடத்தியபோது அந்த வழியாக பயணித்த ஏர் பிரான்ஸ் பயணிகள் விமானம் ஒன்று விபத்தில் இருந்து தப்பியுள்ளது. 330 பயணிகளுடன் ஏர் பிரான்ஸ் விமானம்டோக்கியோவில் இருந்து பாரிஸ்க்கு வட கொரியாவின் ICBM பாதை வழியாக பயணித்துள்ளது. அப்போது, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஹுவாசாங் 14 என்ற ஏவுகணையை வட கொரியாசோதித்துள்ளது. கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் இடைவெளியில் விமானமும், ஏவுகனையும் மோதுவதிலிருந்து தப்பித்துள்ளன. ஏவுகனை விழுந்த கடல் பகுதியை ஏர் பிரான்ஸ் வி…
-
- 0 replies
- 507 views
-
-
லண்டன் : உலகப் புகழ் பெற்ற ஹாரி பாட்டர் கதாபாத்திரம், திரைப்படங்கள், யூ டியூப் ஆகிய அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி 10 ஆண்டின் உலகின் மிகச் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஜெ.கே. ரவுலிங். இவர் ஹாரி பாட்டர் என்ற கேரக்டரை மையமாக வைத்து எழுதிய நாவல்தான் ஹாரி பாட்டர். முதல் பாகம் 1997ல் வெளியானது. 7 பாகங்களாக வெளிவந்துள்ள இது உலக அளவில் புகழ் பெற்றது. இதுவரை 40 கோடி பிரதிகள் விற்றுத் தீர்ந்துள்ளன. 67 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள இது, வர்த்தக அளவில் மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது. கடைசியாக வெளியான 4 பாகங்கள் உலகிலேயே வேகமாக விற்பனையான புத்தகம் என்ற சிறப்பைப் பெற்றன. பின்னர் இந்த கேரக்டரை மையமாக வைத்து ஹாலிவுட் த…
-
- 0 replies
- 925 views
-
-
துபாயில் 160 தளங்களை கொண்ட உலகின் மிக உயரமான கட்டடம் இன்று திறக்கப்படுகிறது. நட்சத்திர ஓட்டல்கள், குடியிருப்புகள், வர்த்தக வளாகங்கள், பொழுது போக்கு மையங்கள் என பலதரப்பட்ட அம்சங்களை கொண்ட 160 அடுக்கு கொண்ட உலகின் மிக உயரமான கட்டடத்துக்கு பர்ஜ் துபாய் என்று பெயரிடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த இந்த கட்டடத்தின் கட்டுமான பணிகள் முடிந்து இன்று திறப்பு விழா காண்கிறது. 2,684 அடி ( 818 மீட்டர்) உயரமுள்ள இந்த கட்டடத்தில் 57 லிப்டுகளும், எட்டு தானியங்கி படிகட்டுகளும் உள்ளன. அமெரிக்காவின் 101 அடுக்குகள் கொண்ட எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் உயரம் 381 மீட்டர் தைவான் நாட்டில் உள்ள கட்டடத்தின் உயரம் 448 மீட்டர். தற்போது துபாயில் திறக்கப்பட உள்ள கட்டடத்தின் உயரம் 818 மீட…
-
- 6 replies
- 954 views
-
-
ஆந்திராவை பிரிந்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்கும் ‘‘ஆந்திர மறு சீரமைப்பு மசோதா’’ மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதன் மீதான விவாதம் நடத்த முடியாதபடி உறுப்பினர்கள் அமளியில் ஈடு பட்டு வருவதால் சட்டசபை நடவடிக்கை முடங்கி உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஆந்திர மாநில பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் நேற்று ஐதராபாத் வந்தார். முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:– ஆந்திராவை பிரிக்கும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. 2014–ம் ஆண்டு நடக்கும் பாராளு மன்ற தேர்தலுக்கு முன் ஆந்திராவில் 2 மாநிலம் ஏற்பட்டு விடும் என்று நம்புகிறேன். 2 மாநிலத்துக்கும் தனித்தனியாக தேர்தல் நடக்கும். தெலுங்கானா மசோதா …
-
- 0 replies
- 320 views
-
-
ஏப் 19, 2010 மணி தமிழீழம் ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு. தூசுகளால் பாதிப்பு இல்லை. ஐரோப்பிய வான்வெளியில் எரிமலை சாம்பல் படிந்துள்ளது தொடர்பாக, ஆய்வுகள் நடந்து வருகின்றன. இவ்வாறு படிந்துள்ள சாம்பலால், மனிதர்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் இதுவரை ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிமலை சாம்பல் தூசி மண்டலம் ஐரோப்பிய நாடுகள் மீது படிந்துள்ளதால் விமான சேவை கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளதுடன் பொருளாதார ரீதியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஐரோப்பிய யூனியனின் போக்குவரத்து ஆணையர் கல்லாஸ் தெரிவித்துள்ளார். ஐஸ்லாந்து நாட்டில் ஐஜாப்ஜலஜோக்குல் என்ற பனி சிகரத்தில் உள்ள எரிமலை, கடந்த மாதம் வெடித்துச் சிதறியது. இதிலிருந்து வெளியேறிய தீக்குழம்புகள், அப்பகுதி ம…
-
- 0 replies
- 528 views
-
-
உக்ரைனின்.... கிழக்கு லுஹான்ஸ்க் பகுதியில், எட்டு பேர் உயிரிழப்பு உக்ரைனின் கிழக்கு லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்யாவின் ஷெல் குண்டு தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதோடு இருவர் காயமடைந்துள்ளதாக பிராந்திய தலைவர் தெரிவித்தார். ஹிர்ஸ்கே மற்றும் ஸோலோட் நகரங்கள் குண்டுவீசித் தாக்கப்பட்டதில் ஆறு பேர் இறந்ததாக டெலிகிராம் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். லுஹான்ஸ்க் மற்றும் அண்டை டொனெட்ஸ்க் பகுதிகளைக் கைப்பற்றுவதில் தனது இராணுவ நடவடிக்கையில் கவனம் செலுத்துவதாக ரஷ்யா கூறியுள்ளது. இந்த வார தொடக்கத்தில், தலைநகர் கீவ் உட்பட வடக்கு உக்ரைனைக் கைப்பற்றத் தவறிய பின்னர், ரஷ்யா இதனை அறிவித்துள்ளது. https://athavannews.com/2022/1278231
-
- 0 replies
- 159 views
-
-
மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு வெற்றி பெற்றுள்ளது ஷின்சோ அபேயின் எல்.டி.பி ஆளும் கூட்டணி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் எல்.டி.பி ஆளும் கூட்டணி ஞாயிற்றுக்கிழமை நடந்த ஜப்பான் பொது தேர்தலில் 311 இடங்களை கைப்பற்றி அதன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு வெற்றி பெற்றுள்ளது. ஷின்சோ அபேயின் லட்சியமான ஜப்பான் போருக்கு பிந்தைய சமாதான அரசியலமைப்பைத் திருத்தியமைக்க மூன்றில் இரண்டு பெரும்பான்மை இடங்களை பெறுவது மிக முக்கியமானதாக இருந்தது. பொது தேர்தலில் அபே மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு வெற்றி பெற்றுள்ளமையானது மூன்றாவது முறையாக லிபரல் டெமாக்ரடிக் பார்ட்டியின் தலைவராவதற்கான வாய்ப்புக்களை அதிகரித்துள்ளது. 2012 முதல் பிரதமாக உள்ள …
-
- 0 replies
- 509 views
-
-
தமிழக முதலமைச்சர் கருணாநிதி ஒரு தமிழ் இனத்துரோகி என மலேஷிய பினாங் மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் பழனியப்பன் ராமசாமி தெரிவித்துள்ளார். தமிழ் மிரர் இணையதளத்துக்கு பினாங் மாநிலத்திலுள்ள தமது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து வழங்கிய பிரத்தியேக பேட்டியிலேயே பேராசிரியர் ராமசாமி இவ்வாறு குறிப்பிட்டார். முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கூட ஒரு துரோகிதான் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். தமிழகத்தில் நடிகரும்,இயக்குநருமான சீமானின் கட்சி மாநாட்டில் கலந்துகொண்ட பின்னர்,நாடு திரும்பியிருந்த நிலையிலேயே துணை முதலமைச்சர் பேராசிரியர் ராமசாமி தமிழ் மிரர் இணையதளத்துக்கு பேட்டியளித்தார். தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்படாதவரை,இலங்கைத்தமிழர்களுக்கு…
-
- 3 replies
- 1.2k views
-
-
குவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி அயர்லாந்து நாட்டில் சுழன்றடித்த ஒபிலியா புயல் மிக மோசமான சேதத்தை உருவாக்கியிருக்கிறது. ஆனால் அப்பிள் தோட்ட விவசாயிகளுக்கு மட்டும் உதவி செய்திருக்கிறது. இந்த சீசனுக்கு விளைந்திருந்த அப்பிள்களைப் பறிப்பது என்பது பல வாரங்களுக்கு செய்ய வேண்டிய கடினமான பணி. கூலியாக பெருமளவு பணமும் செலவாகும் விடயமும் கூட. ஆனால் ஒபிலியா புயல் ஒரே இரவில் அனைத்து அப்பிள்களையும் நிலத்தில் விழுத்தி விட்டது. அப்பிள்கள் என்ன ஆகுமோ என்று பயந்திருந்த விவசாயிகள், மறுநாள் தோட்டங்களுக்குச் சென்று பார்த்தபோது மகிழ்ச்சியடைந்தார்கள். மழையில் ஆப்பிள்கள் அடித்துச் செல்லப்படவில்லை.…
-
- 0 replies
- 1.7k views
-
-
இத்தாலிய பெண்மணியிடம் கப்பம் கோரிய சிங்களப் பெண் கைதானார் இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் 500 இயூரோ கப்பம் கோரிய திக்வல்ல நில்வல்லவைச் சேர்ந்த சிஙகளப் பெண்மணி ஒருவரை காவற்துறையினர் கைதுசெய்துள்ளனர். இவர் தொலைபேசி மூலம் மிரட்டி கப்பம் கோரியுள்ளார். இந்த சம்பவம் குறித்து இத்தாலிய பெண், காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளார். வெளிநாட்டு பெண்ணை மிரட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசியும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. திகதி: 19.06.2010 // தமிழீழம் http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=9746&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51
-
- 5 replies
- 935 views
-
-
20 நாடுகளில்... 200 பேருக்கு, குரங்கு காய்ச்சல் பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு தகவல்! 20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பிரித்தானியா, ஸ்பெயின், போர்துக்கல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்த குரங்கு காய்ச்சலால் ஓரினச்சேர்க்கையாளர்கள், இரு பாலின சேர்க்கையாளர்கள்தான் அதிகளவில் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் பெருந்தொற்று, தொற்று நோய்கள் பிரிவின் இயக்குனர் சில்வி பிரையண்ட் இதுகுறித்து கூறுகையில், ‘எதிர்காலத்தில் இந்த குரங்கு காய்ச்சல் இன்னும் அதி…
-
- 0 replies
- 196 views
-
-
நகரி: திருப்பதி கோவில் சொத்துக்கள் சீமாந்திராவுக்கே சொந்தம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டு தெலுங்கானா, சீமாந்திரா என இரு மாநிலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஜூன் 2 ஆம் திகதி இரு மாநிலங்களும் அதிகாரபூர்வமாக பிரிகின்றன. இதையொட்டி அரசு ஊழியர்கள், அரசின் சொத்துக்கள், கார்கள் மற்றும் அரசு கோப்புகள் ஆகியவை இரு மாநிலத்துக்கும் பிரிக்கப்பட்டு வருகின்றன. பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் சீமாந்திராவில் உள்ளது. நாட்டிலேயே அதிக வருமானம் ஈட்டும் கோவிலாக திருப்பதி உள்ளது. இந்தக் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் உள்ளன. தெலுங்கானாவில் திருப்பதி கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் உள்ளன. மாநிலம் பிரிக்கப்பட்டாலும் தெலுங்…
-
- 0 replies
- 559 views
-
-
ரேடார் கருவிகளால் கண்டுபிடிக்க முடியாத ஈரானின் அதிநவீன ஏவுகணை: அமெரிக்கா நடுக்கம் ஒரே நேரத்தில் பல இடங்களை குறி வைத்து தாக்கும் நவீன ஏவுகணையை செலுத்தி ஈரான் சோதனை நடத்தி இருக்கிறது. ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இதனால் ஈரான் மீது தாக்குதல் நடத்தவும் அதன் மீது பொருளாதார தடை விதிக்கவும் அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் ஈரான் அதிநவீன அணு ஆயுத ஏவு கணையை செலுத்தி சோதனை நடத்தி இருக்கிறது. பாஜர்-3 என்ற இந்த ஏவுகணை ஒரே நேரத்தில் பல இலக்குகளை குறி வைத்து தாக்கும் ஆற்றல் உள்ளது. ரேடார் கருவிகளாலும் இதை கண்டுபிடிக்க முடியாது. 2000 கிலோ மீட்டர் தூரம் வரை அணு ஆயுதங்களை கடந்து சென்று எதிரிகள் இலக்கை தகர்க்கும் ஆற்றல் உள்ளத…
-
- 1 reply
- 1k views
-
-
கண்ணகி சிலை மீண்டும் மெரினாவில் இந்திய சென்னை மெரினா கடற்கரையில் காட்சி தந்த கற்புக்கரசி கண்ணகியின் சிலை முன்னாள் தமிழக முதல்வர் நடிகை ஜெயலலிதாவினால் அகற்றப்பட்டது தெரிந்ததே! இப்போது இச் சிலை தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் கடந்த 3ம் திகதி மீண்டும் மெரினாக் கடற்கரையில் நிறுவப்பட்டுள்ளது. இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை மகிமைப்படுத்தும் நோக்கோடு 02.01.1968 ம் தேதியன்று பத்துத் தமிழறிஞர்களுக்குச் சிலை வைக்கப்பட்டது. சிலையுருவில் நிற்கும் சான்றோர்கள் பின்வருவோர். 1. திருவள்ளுவர் 2. ஔவையார் 3. கம்பர் 4. ஜி.யூ.போப் 5. கால்டுவெல் 6. பாரதியார் 7. பாரதிதாஸன் 8. வ.உ.சிதம்பரனார் 9. வீரமாமுனிவர் 10. கண்ணகி இவர்களுள் வீரமாமுனிவர், கால்டுவெல், …
-
- 12 replies
- 2.5k views
-
-
சீன Vs தைவான்: தீவுக்குள் பறந்த ட்ரோன்களை சுட்டு விரட்டிய படையினர் பிரான்சஸ் மாவோ பிபிசி நியூஸ் 31 ஆகஸ்ட் 2022, 11:40 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கின்மென் என்பது சீனாவின் பிரதான நிலப்பரப்பில் இருந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தீவுக்கூட்டங்களில் ஒரு பகுதி. சீனாவுக்கு அருகில் உள்ள தமது தீவுகளுக்கு மேலே பறந்து சென்ற சீன ட்ரோன்களை எச்சரிக்கும் விதமாக தைவான் முதல் முறையாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இந்த நடவடிக்கைக்குப் பிறகு மூன்று ட்ரோன்களும் மீண்டும் சீன நிலப்பகுதியை நோக்கி திரு…
-
- 3 replies
- 711 views
- 1 follower
-
-
பல வங்கிகளில் 3,695 கோடி கடன் வாங்கி கட்டாத பேனா கம்பெனி மீது வழக்கு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் முக்கிய இந்திய நாளேடுகளில் இன்று வெளியான முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்து வழங்குகிறோம். தி இந்து (ஆங்கிலம்) - பல வங்கிகளில் 3,695 கோடி கடன் வாங்கி கட்டாத பேனா கம்பெனி மீது வழக்கு படத்தின் காப்புரிமைGETTY IMAGES கான்பூரில் இருந்து இயங்கும் ரோட்டாமேக் பே…
-
- 0 replies
- 469 views
-
-
சீனாவுக்கு ஈடுகொடுக்குமா இந்தியா? சீனாவுக்கு ஈடுகொடுக்குமா இந்தியா? பெரும் வல்லரசாக உருவெடுத்துள்ள சீனாவின் வளர்ச்சி கண்டு இந்தியாவின் கவலைகள் அதிகரித்துள்ளன. இந்தியா தெற்காசியாவில் தன்னையொரு வல்லரசாக பாவனை செய்கின்றபோதிலும் சீனாவுக்கு இணையாக அந்த நாட்டைக் கூறமுடியவில்லை. இன்றைய உலக அரங்கில், முக்கிய துறைகளில் உலகின் முதலாவது இடத்தை அமெரி…
-
- 2 replies
- 999 views
-
-
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள், அதிக விலைக்கு அதை வெளிநாட்டு கம்பெனிக்கு விற்றதால் நம்முடைய மத்திய அரசாங்கத்துக்கு இழப்பு ஏற்பட்டது. அரசாங்க கஜானாவுக்கு வந்திருக்க வேண்டிய 1.76 லட்சம் கோடி இழப்பாகி விட்டது. இம்மாதிரியான இழப்புகளைக்கூட நாம் வேறு தொழில் முதலீடுகள் மூலமாக ஈட்டிக் கொள்ள முடியும். ஆனால், இப்படிக் கைமாற்றி விடப்பட்ட நிறுவனங்களின் ஜாதகங்களைப் பற்றி நம்முடைய மத்தியத் தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள் ஒழுங்காக விசாரணை நடத்தினார்களா? வெளிநாட்டு மூலதனக்குவிப்பு வாரியமாவது ஆய்வு நடத்தியதா? இவை மிக முக்கியமான விஷயங்கள்...'' என்று சொல்லும் டெல்லி அதிகாரி ஒருவர், ''2ஜி அலைக்கற்றை லைசென்ஸ் பெற்ற ஒரு நிறுவனம், தன்னுடைய கணிசமான அளவு பங்குகளை சீனா…
-
- 0 replies
- 422 views
-
-
இலங்கை கடற்படைக்கு கண்டனம் லட்சக்கணக்கான ரசிகர்களுடன் விஜய் ஆர்ப்பாட்டம்! இலங்கை கடற்படையால் நாகையச்சேர்ந்த தமிழக மீனவர் ஜெயக்குமார் கொல்லப்பட்டார். இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நாகப்பட்டினம் சென்று கொல்லப்பட்ட ஜெயக்குமார் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, உதவி தொகைகளும் வழங்கிவருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய்யும் வரும் 22ம் தேதி ஜெயக்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். விஜய்யை வரவேற்பதற்காக ஏற்பாடுகளை அங்குள்ள ரசிகர் மன்றத்தினர் செய்து வருகின்றனர். விஜய்யுடன் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரனும் நாகப்பட்டினம் செல்கிறார். அன்றைய தினம் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொட…
-
- 0 replies
- 573 views
-
-
ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிய சாதிக் பாட்ஷா தற்கொலை செய்த சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாதிக் பாட்ஷா இறந்த வழக்கை தமிழக அரசு சி.பி.ஐ. வசம் ஒப்படைத்துள்ளது. இதைத்தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று மாலையே சென்னையில் சாதிக் பாட்ஷா மரணம் குறித்து உள்ளூர் போலீசாருடன் இணைந்து ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தினார்கள். தேனாம்பேட்டை போலீசார் சாதிக் பாட்ஷா வின் மனைவி மற்றும் உறவி னர்கள், நண்பர்களிடம் நடத்திய விசாரணை, பிரேத பரிசோதனை அறிக்கை விவரம் ஆகியவற்றை முழு விவரங்களுடன் 2 நாளில் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர். தற்போது சாதிக் பாட்ஷா தற்கொலை செய்து கொண்டதாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அடுத்த கட்டமாக அவரை தற்கொலைக்க…
-
- 0 replies
- 533 views
-
-
"தண்ணியில மிதக்கிற கப்பலில் இருப்பவர்தான் கேப்டன். தண்ணியில மிதக்கிற இந்தாளை எப்படி கேப்டன்னு சொல்றாங்க " " 2 ரூபாய்க்கு ஒரு தொப்பியை வாங்கி தலையில் மாட்டிக்கொண்டு, அதேபோல் கண்ணாடி, கர்சிப் வாங்கி மாட்டிக்கிட்டு போஸ் கொடுக்கிறார். கருப்பு எம்ஜிஆர் என்று சொல்லிக்கொள்கிறார். நீங்கள் கருப்பு எம்ஜிஆர் என்றால் நான் கருப்பு நேரு-S " வடிவேல் எஸ்.எஸ்.சந்திரனனின் இடத்தை பிடிக்க போகின்றார்; அநாகரீகமாக பேசுவதில்
-
- 22 replies
- 3k views
-
-
மொஸ்கோ: ஈரானுக்கு அதி நவீன விமான எதிர்ப்பு ஏவுகணைகளை ரஷ்யா வழங்கியுள்ளது. மேலும் ஈரானின் தற்காப்புக்காக கூடுதலாக ஆயுதங்கள் வழங்கவும் தயாராக இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் இவானோவ் தெரிவித்துள்ளார். இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அந் நாட்டின் மீது ராணுவ தொழில்நுட்பத் தடைகளை ஐ.நா. மூலம் பிறப்பித்தது அமெரிக்கா. இருப்பினும் அணு ஆயுதத் தயாரிப்பு தொடர்பான உதவிகளைப் பெற மட்டுமே ஈரானுக்கு இந்தத் தடை இடைஞ்சலாக உள்ளது. இஸ்ரேலுடன் இணைந்து ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்களைத் தாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் ஈரானுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்கியுள்ளது ரஷ்ய…
-
- 0 replies
- 947 views
-
-
பாரிய பனிப்பாறை அண்டார்டிகாவின் பிரண்ட் பனிக்கட்டியை உடைத்துவிட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகின் பாரிய பனிப்பாறைகள் பிரித்தானிய விஞ்ஞானிகள் உலகின் பாரிய இரண்டு பனிப்பாறைகளை கண்காணித்து வருகின்றனர். அவற்றில் ஒன்று கிரேட்டர் லண்டன் அளவுடையது என்றும், மற்றொன்று கார்ன்வால் அளவுடையது என்றும் கூறப்படுகிறது. பிரித்தானிய அண்டார்டிக் சர்வேயின் ஹாலி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து திரும்பிய பனிப்பாறை நிபுணர் மருத்துவர் ஆலிவர் மார்ஷ், இது கன்றை ஈன்றுவது போன்ற இது எங்களுக்கு தெரிந்தது என குறிப்பிட்டார். ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில், A81 என்ற பாரிய பனிக்கட்டி அண்டார்டிகாவின் பிரண்ட் ஐஸ் ஷெல்ஃப்பில் இருந்து விட…
-
- 1 reply
- 463 views
-
-
உலகையே அதிர வைக்கும் இராணுவப் பயிற்சி ; இது எதற்கான முன்னோட்டம் ? செ.லோகேஸ்வரன் ரஷ்யாவும், சீனாவும் இணைந்து நடத்தும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பயிற்சி நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது. உலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ரஷ்யா மிகப்பெரிய போர் பயிற்சியை மேற்கொள்கின்றது. குறித்த பயிற்சியில் மூன்று இலட்சம் இராணுவத்தினர், 36 ஆயிரம் இராணுவ வாகனங்கள், 1000 போர் விமானங்கள் மற்றும் 80 போர் கப்பல்கள் பங்கேற்கின்றன. ரஷ்யா ஒவ்வொரு வருடமும் போர் பயிற்சியை மேற்கொள்வது வழக்கம் அதன்படி இவ்வருடமும் மிகப்பிரமாண்டமான அளவில் உலக வராலாற்றில் இல்லாத அளவுக்கு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இந்த போர் பயிற்சி நேற்று ஆரம்பமாகிய…
-
- 0 replies
- 680 views
-