உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26599 topics in this forum
-
எகிப்தில் நடைபெறவுள்ள காசா அமைதி மாநாட்டில் ஹமாஸ் பங்குபற்றப்போவதில்லை! எகிப்து தலைநகர் ஷர்ம் எல்-ஷேக்கில் நாளையதினம் நடைபெறவுள்ள காசா அமைதி மாநாட்டில் ஹமாஸ் அமைப்பினர் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ள நிலையில் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வருகை தொடர்பாகவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எகிப்திய ஜனாதிபதி ஆகியோர் தலைமையில் நாளை ஷர்ம் எல்-ஷேக்கில் காசா அமைதிக்கான மாநாடு நடைபெறவுள்ளதாக எகிப்திய ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த மாநாட்டில் “இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. காசா பகுதியில் போரை முடிவுக்குக் கொண்டுவருதல், மத்திய கிழக்கில் அமைதி மற்றும் …
-
- 0 replies
- 175 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்.. *பெரும் சாத்தான் என்று வர்ணித்த அமெரிக்காவுடன் மிக நெருக்கமாக இருந்திருக்கிறார் இரானின் முன்னாள் அதியுயர் ஆன்மீகத்தலைவர்; பிபிசிக்கு கிடைத்த பிரத்யேக ஆதாரங்கள்! *பயங்கரவாத எதிர்ப்பு மறுசீரமைப்புக்களை முன்வைக்கிறது ஜெர்மனி; ஜெர்மனியிலுள்ள அகதிகளை கடும்போக்கு இஸ்லாமியவாதிகள் இலக்கு வைப்பதாக அந்தநாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் கவலை *பிரிட்டிஷ் தெருக்களில் அதிகரிக்கும் குரூரமான நாய்ச்சண்டை; இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகும் கொடூரத்தை நிறுத்தக் கோரும் விலங்கு பாதுகாப்பாளர்கள்.
-
- 0 replies
- 403 views
-
-
ஜோத்பூர்: ராஜஸ்தானில் ஜோத்பூர் அருகே மெஹ்ரான்கர்க் என்ற இடத்தில் கோவிலில் இன்று அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 130 பேர் பலியாயினர். மேலும் 450 பேர் படுகாயமடைந்துள்ளனர். நவராத்திரியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் மெஹ்ரான்கர்க் மலைப் பகுதியில் அமைந்துள்ள சாமுண்டா கோவிலில் இன்று அதிகாலை தரிசனத்துக்காக குவிந்தனர். மலையடிவாரத்திலிருந்து கோவிலுக்குச் செல்லும் சுமார் 2 கி.மீ. நீளமுள்ள பாதை மிக மிகக் குறுகலானதாகும். அதன் வழியே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறிக் கொண்டிருந்தனர். மலையேறியவர்கள் கோவிலின் வெளியே கதவு திறப்பதற்காக காத்திருந்தனர். காலை 5.30 மணியளவில் மின்சாரம் தடைபட்டது. அப்போது சிலர் திடீரென கோவிலுக்குள் முண்டியடித்துக் கொண்டு நுழைய முயன்றனர்.…
-
- 0 replies
- 683 views
-
-
[size=4]இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து மேலும் மூன்று மத்திய அமைச்சர்கள் பதவிகளை ராஜினாமாச் செய்துள்ளனர். மத்திய தகவல் ஒளிபரப்புது;துறை அமைச்சர் அம்பிகா சோனி உட்பட மூன்று அமைச்சர்கள் இன்று தமது பதவிகளிலிருந்து விலகியிருக்கின்றனர். திரிணாமுல் கொங்கிரஸ் கட்சி மத்திய அரசிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, அமைச்சரவையை மாற்ற, கொங்கிரஸ் தலைமையிலான அரசு முடிவு செய்தது. ஏற்கனவு 2ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்களான ஆ.ராசா மற்றும் தயாநிதிமாறன் ஆகியோர் பதவி விலகினார்கள். இந்த நிலையில் இன்று, அம்பிகா சோனி, சமூக நீதித்துறை அமைச்சர் முகுல்வாஸ்னிக், சுற்றுலாத்துறை அமைச்சர் சுபோத்காந்த் சஹாய் ஆகிய…
-
- 0 replies
- 517 views
-
-
எட்டுத் திக்கும் | 'கள்ளநோட்டு' கவர்மென்ட்! சேதி கேட்டோ பலமுனைப் போரில் பரிதவித்துக்கொண்டிருக்கும் சிரியாவில் செய்தி சேகரிக்க ஆளில்லை. இதுவரை 110 செய்தியாளர்கள் கொல்லப்பட்டிருப்பதால், செய்தியாளர்களை அனுப்ப பெரிய ஊடகங்கள் மறுக்கின்றன. உள்ளூர் செய்தியாளர்கள்தான் உயிரைப் பணயம் வைத்து செய்திகளைச் சேகரிக்கின்றனர். முறையான சம்பளமும் இல்லை; கடத்தப்பட்டால் அவர்களுக்காகப் பேச யாரும் இல்லை. உலகத்தின் பார்வையிலிருந்து மெல்ல மறைந்துகொண்டிருக்கிறது சிரியா! * கடந்தகாலக் கலை பாகிஸ்தானின் ஸ்வாத் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள பாரிகோட்டில் இந்தோ-கிரேக்க நகரத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் அகழ்வாராய்ச்சியாளர்கள்…
-
- 0 replies
- 433 views
-
-
டொனால்ட் ட்ரம்ப் - ஜோக்கர் ஹீரோ ஆன கதை! ஒரு தயாரிப்பு சந்தைக்கு வருகிறது. அதைப் பற்றிய பல்வேறு விமர்சனங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் அந்த நிறுவனமோ அந்தத் தயாரிப்பைத் தொடர்ந்து விளம்பரப்படுத்தி வருகிறது. ஒரு கட்டத்தில் எந்தப் பகுதியில் சந்தைப்படுத்த திட்டமிட்டார்களோ அந்தப் பகுதியில் நல்ல வரவேற்பை பெறுகிறது. அதன்முன்பு வைக்கப்பட்ட பொது விமர்சனங்கள் தோற்றுப் போயின. இது ஒரு தயாரிப்புக்கு மட்டுமல்ல. அமெரிக்காவின் குடியரசுக் கட்சி அதிர்பர் தேர்தலில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவித்திருக்கும் டொனால்ட் ட்ரம்ப்புக்கும் பொருந்தும். அமெரிக்காவில் ஆரம்பத்தில் ட்ரம்ப்பை கலாய்த்து மீம்ஸ்கள் வந்தன. அவர் மீது ஆக்ரோஷமான விவாதங்கள் முன் வைக்கப்பட்டன. அவரது…
-
- 0 replies
- 634 views
-
-
மகாத்மா காந்தி படுகொலை தொடர்பாக ராஜ்யசபாவில் விவாதம் நடத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.,சுப்ரமணியன் சுவாமி விடுத்த கோரிக்கைகயால் சர்ச்சை எழுந்துள்ளது.ராஜ்ய சபாவில் இன்று 'பூஜ்ய நேரத்தின்' பொழுது சுவாமி இது தொடர்பான பிரச்சினையை எழுப்பினார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பிக்களின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவர் பேசியதாவது:சமீபத்தில் அரசு மகாத்மா காந்தி படுகொலை தொடர்பான ஆவணங்களை தேசிய ஆவண காப்பகத்தில் இணைத்துள்ளது. அவற்றை எல்லாம் நான் பார்வையிட சந்தர்ப்பம் வாய்த்தது. பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர் காந்தி படுகொலை குறித்து நிறைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவர்களை எல்லாம் உச்ச நீதிமன்றம் கட்டுப்படுத்துவதுட…
-
- 0 replies
- 243 views
-
-
ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என்பதால் லடாக் மோதலில் ராணுவத்தில் தற்காப்பு கலை படைப்பிரிவை சேர்த்த சீனா எல்லையில் ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என்பதால் கல்வான் மோதலுக்கு முன் தற்காப்பு கலை படைப்பிரிவை ராணுவத்தில் சீனா சேர்த்து உள்ளது. பதிவு: ஜூன் 29, 2020 10:22 AM புதுடெல்லி கடந்த 15-ம் தேதி கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய - சீன ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் 2 பேர் மட்டுமே உயிரிழந்திருப்பதாக சீன அரசு கூறி வருகிறது. இந்தியா-சீனா கல்வான் மோதலுக்கு பின் இரண்டு நாட்ட…
-
- 0 replies
- 482 views
-
-
"தனியார் பள்ளிகளில், மாணவிகளுக்கு, குட்டைப் பாவாடையை, சீருடையாக வைத்துள்ளனர். பாலியல் துன்புறுத்தல்களுக்கு, வழி வகுக்கும் இதுபோன்ற உடைகளுக்கு, தடை விதிக்க வேண்டும்' என, ராஜஸ்தான் பா.ஜ., - எம்.எல்.ஏ., பன்வாரி லால் சிங் வலியுறுத்தியுள்ளார். ராஜஸ்தான், அல்வார் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ., வான, பா.ஜ.,வைச் சேர்ந்த, பன்வாரி லால் சிங், அம்மாநில தலைமைச் செயலருக்கு எழுதியுள்ள கடிதம்: பெரும்பாலான, தனியார் பள்ளிகளில், மாணவியருக்கான சீருடைகள், சற்றும் பொருத்தமற்றதாக உள்ளன. "மாணவியர், குட்டைப் பாவாடை அணிந்து வர வேண்டும்' என, வற்புறுத்துகின்றனர். அத்துடன், குட்டைப் பாவாடையை சீருடையாகவும், பல்வேறு பள்ளிகளும், அங்கீகரித்துள்ளன. இதற்கு தடை விதிக்க வேண்டும்.மாணவியர், குட்டைப் பாவாடை அணிந்து…
-
- 0 replies
- 1.1k views
-
-
நாட்டின் பிரபல அணு விஞ்ஞானிக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய இரான் அமெரிக்காவுக்கு முக்கிய தகவல்களை கொடுத்ததாக குற்றஞ்சட்டப்பட்ட அணு விஞ்ஞானிக்கு தான் மரண தண்டனையை நிறைவேற்றி இருப்பதாக இரான் உறுதிப்படுத்தி உள்ளது. ஏழு ஆண்டுகளுக்குமுன், மெக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஷாஹ்ராம் அமிரி திடிரென காணாமல் போனார். மீண்டும் அமெரிக்காவில் அவர் தலைகாட்டிய போது, சி.ஐ.ஏ அதிகாரிகளால் தான் கடத்தப்பட்டதாக கூறினார். ஆனால், அங்கிருந்து தப்பி வந்ததாக அவர் கூறினார். பின், இரானுக்கு திரும்பிய போது, நாயகனைப் போன்ற வரவேற்பை பெற்றிருந்தார். பின்னாளில், விசாரணைகளுக்கு அமிரி உட்படுத்தப்பட்டார். தன் சொந்த விருப்பத்தின் பேரிலே அமிரி அமெரிக்க சென்றதாகவும…
-
- 0 replies
- 453 views
-
-
கனடாவின் முக்கிய பகுதியான ரொறொன்ரோவின் மிக முக்கிய நீர் மின் உற்பத்தி நிலைய இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரொறொன்ரோவின் நகரப் பகுதிகளில் சில நாட்களுக்கோ , வாரங்களுக்கோ மின்தடை ஏற்படக் கூடும் என ரொறொன்ரோ ஹைட்ரோ அறிவித்துள்ளது. இந்த மின் உற்பத்தி நிலையம் மிகப் பழமையானது என்பதால் இயந்திரங்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருவதாகவும், நாளுக்கு நாள் ரொறொன்ரோவில் மக்கள் பெருக்கம் அதிகமாகி வருவதால் இக்கட்டான இது போன்ற நிலையை சமாளிக்கும் பொருட்டு புதிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ரொறொன்ரோ ஹைட்ரோ அதிகாரிகள் விவாதித்தனர். இதற்காகவே $195 மில்லியன் செலவில் ரோஜர்ஸ் சென்ரர் அருகே New Bremner Transformer station அமைப்ப…
-
- 0 replies
- 481 views
-
-
உலகளவில் கொரோனா பாதிப்பு 1.36 கோடியாக அதிகரிப்பு;அமெரிக்காவில் ஒரே நாளில் 70,914 பேர்பாதிப்பு உலகளவில் கொரோனா தொற்றால்பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.36 கோடியாக அதிகரித்து உள்ளது.அமெரிக்காவில் ஒரே நாளில் 70,914 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பதிவு: ஜூலை 16, 2020 07:34 AM வாஷிங்டன் உலகம் முழுவதும் கொரோனாவால் 1,36,89,917 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 8,03,6499 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 59,616 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,86,774 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். அமெரிக்காவில் ஒரே நாளில் 70,914 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண…
-
- 0 replies
- 592 views
-
-
காசா பகுதியில் நடைபெற்றுவரும் மோதல்களை நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை விடுத்த கோரிக்கையைப் பொருட்படுத்தாது, இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்களை மேற்கொண்டுவருகிறது. 14 நாட்களாகவும் காசா பகுதியில் பலத்த மோதல்கள் இடம்பெற்றுவருகிறன. இதனை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் அங்கம்வகிக்கும் 14 நாடுகள் ஒன்றுகூடி ஆராய்ந்ததுடன், காசா பகுதி மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு இஸ்ரேலிடம் கோரிக்கை விடுத்திருந்தது. காஸாவிலிருந்து இஸ்ரேல் அதன் படைகளை மீளப் பெற்றுக்கொள்ளுமாறும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை கோரிக்கை விடுத்தது. காசா மீதான தாக்குதல் குறித்து ஆராய்ந்த பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில், அமெரிக்கா கலந்துகொள்வில்லை. இது த…
-
- 0 replies
- 490 views
-
-
உயர் தொற்று வலயமாகியது பாரிஸ் நகரம்; இறுக்கமான சுகாதார விதிகளுடன் உணவகங்கள் Bharati October 5, 2020 உயர் தொற்று வலயமாகியது பாரிஸ் நகரம்; இறுக்கமான சுகாதார விதிகளுடன் உணவகங்கள்2020-10-05T23:30:40+05:30Breaking news, கட்டுரை பாரிஸிலிருந்து கார்த்திகேசு குமாரதாஸன் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி பாரிஸ் நகரம் இன்று திங்கட்கிழமை முதல் உயர் தொற்று வலயமாகின்றது (maximum alert zone). இதன்படி நடைமுறைக்கு வரவிருக்கும் சுகாதாரக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக உணவகங்கள் மூடப்படமாட்டாது என்ற அறிவிப்பை அரசு வெளியிட்டிருக்கிறது ஆயினும் அருந்தகங்கள் (Bars) அனைத்தும் நாளை செவ்வாய்க்கிழமை முதல் மூடப்படுகின்றன. …
-
- 0 replies
- 405 views
-
-
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 1900 டாலர்கள் என்ற அளவுக்குச் சென்றது. தற்போது அது 1600 டாலர்களுக்கும் கீழேயுள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து மேல் நோக்கிச் சென்று கொண்டிருந்த தங்கத்தின் விலை, இந்த ஆண்டு குறைய ஆரம்பித்துள்ளது. ஆண்டின் துவக்கத்திலிருந்து இதுவரை தங்கத்தின் விலை சுமார் 6 சதம் சர்வதேசச் சந்தையில் குறைந்து விட்டது. உலகின் முன்னணி தங்க நுகர்வு நாடாக இருக்கும் இந்தியாவில், உள்ளூர் வரிகள் அதிகரிக்கப்பட்டதன் காரணமாகவும், ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ந்து வருவதன் காரணமாகவும், தங்கத்தின் விலை வீழ்ச்சியால் ஏற்பட்ட முழு பயன்கள் மக்களுக்கு கிடைக்கவில்…
-
- 0 replies
- 527 views
-
-
இங்கிலாந்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான டேவிட் மிலிபான்ட் லேபர் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகல்! [Thursday, 2013-03-28 07:56:08] இங்கிலாந்தின் லேபர் கட்சியியைச் சேர்ந்த முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மிலிபேன்ட் (47), தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அவர், நியூயார்க் செல்ல உள்ளார். பின்னர், அங்கு உள்ள சர்வதேச மீட்புக் குழு (ஐஆர்சி) என்ற தொண்டு நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளார். சர்வதேச மீட்புக் குழுவில் இணைந்து பணியாற்றுவதை, உலகம் முழுவதும் ஆதரவற்ற மக்களுக்கு பணியாற்ற கிடைத்த வாய்ப்பாகக் கருதுகிறேன் என்று டேவிட் மிலிபேன்ட் தெரிவித்தார். சர்வதேச மீட்புக் குழு, அறிவியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனால் 1…
-
- 0 replies
- 661 views
-
-
“ஹிந்து” என்றால் திருடன் :கருணாநிதிக்கு வந்த சிக்கல் Written by tharsan // April 19, 2013 // Comments Off ”ஹிந்து” என்றால் திருடன் என்று பொருள் இருக்கிறது எனப் பேசிய திமுக தலைவர் கருணாநிதி 4 நாட்களுக்குள் விளக்கம் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர் வேத அறிவியல் மையத்தின் சார்பில் பி.ஆர்.கௌதமன் என்பவர் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், கடந்த 24.10.2002 அன்று சென்னையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஹிந்து என்றால் திருடன் என்று கருணாநிதி பேசியிருந்தார். இது ஹிந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் படி இருக்கிறது.இதற்கு தகுந்த நடவடிக்கை கோரி மறுநாள் 25.10.2002 அன்று மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அதன் மீது முதல் தகவல் அறிக்கை …
-
- 0 replies
- 553 views
-
-
நாட்டில் உள்ள சகலரும் உறுப்பு தானம் செய்யக்கூடிய வகையில் பிரான்சில் புதிய சட்டம் நாட்டில் உள்ள சகலரும் உறுப்பு தானம் செய்யக்கூடிய வகையில் பிரான்சில் புதிய சட்டம் ஒன்று அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய சட்டம் ஜனவரி முதலாம் முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதன்படி, ஒருவர் தன் உடல் உறுப்புக்களை தானம் செய்ய முடிவெடுத்திருந்தால், அவர் இறந்த பின்னர் அதனை எளிதாக செயல்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுப்புக்களை தானம் செய்ய விருப்பம் இல்லை என்றால், அவர்கள் அதற்குரிய படிவத்தில் தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யாத அனைவருமே உறுப்பு தானம் செய்பவராகவே கருதப்பட்டு இறந்தபின்னர் அவர்களின் உடல் உறுப்புகள் எடுக்கப்படும் என த…
-
- 0 replies
- 341 views
-
-
உயிருக்கு ஆபத்து இருந்தாலும் பாதுகாப்பை பலப்படுத்த மாட்டேன் : போப் ஆண்டவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் (வயது 80), பயணங்களின்போது தன் உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் பாதுகாப்பை பலப்படுத்த மாட்டேன் என சூசகமாக உணர்த்தி உள்ளார். இத்தாலியை சேர்ந்த எழுத்தாளர் ஆன்ட்ரியா டோர்னியெல்லி எழுதிய ‘பயணம்’ என்ற புத்தகத்துக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ், அணிந்துரை எழுதி உள்ளார். அதில் அவர், “எனக்கு பயணங்களின்போது ஆபத்துகள் இருப்பதை நான் அறிந்திருக்கிறேன். ஒரு வேளை நான் அதில் பொறுப்பற்று இருக்கலாம். எனக்கு எந்த பயமும் இல்லை. ஆனால் என்னுடன் பயணம் செய்கிறவர்களுக்காக, பல்வேறு நாடுகளில் என்னை சந்திக்க வருகிற மக்களுக்க…
-
- 0 replies
- 414 views
-
-
முடிவுக்கு வருகிறது கியூபர்களுக்கான அமெரிக்க விசாயின்றி தங்கும் சலுகை கியூபா மக்கள் விசா இல்லாமல் குடியேறிகளாக அமெரிக்காவுக்கு வந்து தங்க அனுமதிக்கும் நீண்டகால கொள்கையை அதிபர் பராக் ஒபாமா முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார். இதுவரை அமெரிக்கா வந்த கியூபா குடியேறிகள் அங்கு தங்கும் அனுமதி பெறுகின்றனர் 20 ஆண்டுகளாக இருந்து வருகின்ற இந்த கொள்கைப்படி,, அமெரிக்காவுக்கு குடியேறிகளாக வந்தடையும் கியூபா மக்கள், அங்கு ஓராண்டு தங்கியிருந்த பின்னர், சட்டப்படி நிரந்தரமாக தங்குகின்ற உரிமையை பெறுபவர்களாக இருந்து வந்தனர். இதற்கு பதில் நடவடிக்கையாக, அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்படும் அல்லது நாடு கடத்தப்படும் தங்களது மக்…
-
- 0 replies
- 342 views
-
-
புதுடெல்லி: சூதாட்டத்தில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரர்கள், தங்களது கைக்கடிகாரத்தை சுற்றியும், டவலை பாக்கெட்டில் திணித்தும் புக்கிகளுக்கு சிக்னல் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கித்சவான், அஜித் சந்திலா மற்றும் இடைத்தரகர்கள் 7 பேர், டெல்லி காவல்துறையினரால் மும்பையில் வைத்து இன்று கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரர்களுக்கும், புக்கிகளுக்கும் இடையே எவ்வாறு தகவல் சமிக்ஞைகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன என்பது குறித்த தகவலை டெல்லி காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். முதல் சூதாட்டம் கடந்த 5 ஆம் தேதியன்று புனே வாரியர்ஸ் அணிக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு…
-
- 0 replies
- 500 views
-
-
உயிரிழந்து விட்டதாக கூறப்பட்ட அல்-கொய்தாத் தலைவர் உயிருடன்? உயிரிழந்து விட்டதாக கூறப்பட்ட அல்-கொய்தாத் தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி, 9/11 தாக்குதலின் 20 ஆவது ஆண்டு நிறைவு தொடர்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு புதிய காணொளிப் பதிவில் தோன்றியுள்ளார். அல்கொய்தாவின் பிரபல தலைவர் ஒசாமா பின்லேடனின் வாரிசான அய்மான் அல்-ஜவாஹிரி 2020 இல் இராணுத்தினர் நடத்திய ஒரு தாக்குதலில் உயிரிழந்தார் என ஊகங்கள் பரவின. இந் நிலையில் அல்கொய்தா பயங்கரவாதக் குழுவின் தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி, 9/11 தாக்குதலின் 20 ஆவது ஆண்டுவிழாவினை முன்னிட்டு சனிக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு காணொளியில் தோன்றியுள்ளார் என இஸ்லாமிய தீவிரவாத குழுக்களின் இணையத்தள செயல்பாட்டைக் கண்காணிக்கும் SITE புலனாய…
-
- 0 replies
- 499 views
-
-
அவுகஸ் ஒப்பந்தம் அணு ஆயுதப் போட்டியை அதிகரிக்கலாம் – வடகொரியா அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா இடையேயான புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை வடகொரியா கண்டித்துள்ளது. மேலும் குறித்த ஒப்பந்தமானது அணு ஆயுதப் போட்டியை அதிகரிக்கலாம் என்றும் எதிர்வு கூறியுள்ளது. அவுகஸ் ஒப்பந்தம் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மூலோபாய சமநிலையை சீர்குலைக்கும் என்றும் வடகொரிய வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறினார். அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் அவுஸ்ரேலியாவுக்கு வழங்கும் வகையில் இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது. சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ளும் முயற்ச…
-
- 0 replies
- 178 views
-
-
லண்டன் கம்டன் லொக் சந்தை((Camden Lock Market )) யில் தீ விபத்து : பிரித்தானியாவின் லண்டனில் தீ விபத்துச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. வடக்கு லண்டனின் கம்டன் லொக் சந்தை (Camden Lock Market ) யில் இவ்வாறு தீ விபத்து இடம்பெற்றுள்ளது. தீயை கட்டுப்படுத்தும் நோக்கில் 70 தீயனைப்புப் படைவீரர்களும் பத்து தீயனைப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தீ மிகவும் வேகமாக பரவியதாக நேரில் கண்ட சாட்சியொருவர் தெரிவித்துள்ளார். தீ விபத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரையில் பதிவாகவில்லை, எனினும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது http://globaltamilnew…
-
- 0 replies
- 404 views
-
-
இந்தப் பூவுலகில் ‘சொர்க்கம்’ ஒன்று இருக்கிறது. உலகுக்கே ‘வழி’ காட்டும் பொருளாதார அமைப்பு இருக்கிறது. அந்த சொர்க்கத்தில் மேலும் சிகிச்சைக்கு பணம் கொடுக்க முடியாத நோயாளிகளும், வயதானவர்களும் கையில் சலைன் பாட்டிலோடு நடுத்தெருவில் இறக்கி விடப்படுகிறார்கள். வெட்டுப்பட்ட விரல்களுக்கு சிகிச்சை அளிக்க பேரம். வேலை இல்லாத, மருத்துவக் காப்பீடு எடுக்க முடியாத தொழிலாளி, விபத்தில் மூட்டில் ஏற்பட்ட காயத்துக்கு தன் கையாலேயே தையல் போட்டுக் கொள்கிறார். வெட்டும் எந்திரத்தில் இரண்டு விரல்கள் சேதமடைந்த தொழிலாளியிடம் “துண்டிக்கப்பட்ட நடு விரலை இணைப்பதற்கு $60,000 ஆகும், வெட்டுப்பட்ட மோதிர விரலை சரி செய்ய $12,000 ஆகும்” என்று மருத்துவமனை பேரம் பேசியதைத் தொடர்ந்து, அவர் மோதிர விரலை சரி…
-
- 0 replies
- 477 views
-