உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26599 topics in this forum
-
குஜராத் சட்டசபைதேர்தலில் மோடி தலைமையிலான் பாரதிய ஜனதாதள கட்சி தொடர்ந்து 3 ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளது. மோடியை பெற்றி யார் என்ன பேசினாலும் குஜராத் மக்களின் கதாநாயகன்; அவர் தான் என்பதகை குஜராத் மக்கள் மீண்டும் ஒருமுறை அடித்து கூறிஇருக்கின்றார்கள்...
-
- 0 replies
- 793 views
-
-
சந்திராயன்-2 திட்டத்தின் கீழ் சந்திரனில் தரையிறங்கும் விண்கலனும், ரோபாட்டும் அனுப்பப்படும் இஸ்ரோ விஞ்ஞானி தகவல் பெங்களூர், டிச.16- சந்திராயன்-2 திட்டத்தின் கீழ், சந்திரனில் தரையிறங்கும் விண்கலனும், ரோபாட்டும் அனுப்பப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானி தெரிவித்தார். சந்திராயன் திட்டம் சந்திரனுக்கு ஆளில்லா விண்கலனை அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) திட்டம் தீட்டி உள்ளது. இது சந்திராயன்-1, சந்திராயன்-2 என்ற இரு கட்டங்களாக செயல்படுத்தப்படும். இவற்றில் சந்திராயன்-1 திட்டத்தை செயல்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. அடுத்த கட்டமாக சந்திராயன்-2 திட்டத்துக்கு தேவையான ஏற்பாடுகளையும் இஸ்ரோ தொடங்கி உள்ளது. சந்திராயன்-1 திட்டத்த…
-
- 48 replies
- 6.3k views
-
-
தலைவர்களின் தடுப்புக்காவலைக் கண்டித்து மலேசிய இந்தியர்கள் மொட்டையடித்துப் போராட்டம் [21 - December - 2007] [Font Size - A - A - A] மலேசியாவில் சம உரிமை கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்த்ராவ் அமைப்பின் 5 தலைவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளமைக்
-
- 0 replies
- 695 views
-
-
தன்னிடம் படிக்கும் மாணவிகள் 23 பேரை விபசாரத்தில் ஈடுபடுத்திய ஒரு ஆசிரியையைக்கும், அவர் கணவருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் சீனாவில் நடந்தது. கய்ஷு மாநிலத்தைச்சேர்ந்தவர் ஜாவோ குயிங்மேய். பள்ளிக்கூட ஆசிரியையாக இருக்கிறார். அவரும், அவர் கணவரும் சேர்ந்து மாணவிகளை விபசாரத்தில் தள்ளிவிட்டனர். குயிங்மேய், தன் வகுப்பைச்சேர்ந்த 23 மாணவிகளை கட்டாயப்படுத்தி, நிலக்கரி சுரங்க அதிபர்களுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள செய்தார். அவர்களில் 6 பேர் 14 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் அவர்கள் இருவருக்கும் கோர்ட்டு மரணதண்டனை விதித்தது. viparam.com
-
- 1 reply
- 1.5k views
-
-
மலேசியர்கள் குறித்து இந்தியா கவலைப்படத் தேவையில்லை - மலேசிய அமைச்சர் கோலாலம்பூர்: இந்தியர்களைப் பற்றி மட்டுமே இந்தியா கவலைப்பட வேண்டும். மலேசியர்கள் குறித்து அது கவலைப்படக் கூடாது, அது தேவையற்றது என்று மலேசிய வெளியுறவு அமைச்சர் சையத் ஹமீத் அல்பார் கூறியுள்ளார். மலேசியத் தமிழர்கள் நிலை குறித்து முதல்வர் கருணாநிதி சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதியிருந்தார். இதைக் கண்டித்து மலேசிய அமைச்சர் ஒருவர் முதல்வர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இந்த நிலையில், மலேசிய தமிழர் விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் கவலை தெரிவித்திருந்தார். இதுகுறித்து மலேசிய அரசுடன் பேசப்படும் என வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருந்தார். …
-
- 35 replies
- 6.1k views
-
-
தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி விடுதலைப் புலிகளுக்கு நேரடியாக உதவி புரிந்து வருவதாக, அ.தி.மு.க தலைவி ஜெயலலிதா கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான முதலமைச்சர்களுக்கான மாநாட்டில் கலந்துகொள்ள டெல்லி செல்ல இருக்கும் நிலையில், ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார். விடுதலைப் புலிகளுக்கு படகுகள் கொள்வனவு செயததாக கைது செய்யப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு கைது செய்யப்பட்டு உடனடியாக பிணையில் விடுதலை செய்யப்பட்டதன் பின்னணியில் முதல்வர் கருணாநிதி இருப்பதாக ஜெயலலிதா இந்தக் கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.
-
- 2 replies
- 1.2k views
-
-
(தினத்தந்தி) மத்திய அரசின் கூட்டத்துக்கு தமிழக முதல்-அமைச்சர் அழைக்கப்பட்டதை விமர்சிக்கும் ஜெயலலிதா, விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் வைகோவை விமர்சிக்காதது ஏன் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- மத்திய அரசு கூட்டியுள்ள ஒரு கூட்டத்துக்கு, தமிழக அரசின் முதல்-அமைச்சர் என்ற முறையில் கருணாநிதியை அழைத்திடக்கூடாது என்ற வகையில் ஜெயலலிதா கருத்தினை தெரிவித்திருக்கிறார். தனது தோழமை கட்சிகளை இவர் மதிப்பதை போலத்தான் மற்ற கட்சிகளும் மதிப்பார்கள் என்று கருதிக்கொண்டு முதல்-அமைச்சர் சொல்லித்தான், விடுதலை சிறுத்தைகள் இயக்க தலைவர், கூறியிருப…
-
- 0 replies
- 770 views
-
-
ஈராக்கில் அமெரிக்கா தலைமையிலான அதன் நட்பு நாடுகளின் ராணுவம் அடுத்த ஆண்டு (2008) இறுதிவரை தங்கி இருக்க ஐ.நா. பாதுகாப்பு சபை ஒப்புதல் அளித்து உள்ளது. 15 உறுப்பு நாடுகள் கொண்ட இந்த கவுன்சிலின் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ஈராக்கில் அரசாங்கம் அடுத்த ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி வரை அமெரிக்க ராணுவம் தங்கி இருக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பாதுகாப்பு கவுன்சில், ஒரு தீர்மானம் இயற்றி இதற்கு ஒப்புதல் அளித்தது. அந்த தீர்மானத்தில், ஈராக் அரசு விரும்பினால், அதற்கு முன்னதாக கூட அமெரிக்க ராணுவம் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் ஒரு வாசகம் சேர்க்கப்பட்டு உள்ளது. 2008-ம் ஆண்டுக்கு பிறகும் கூட அமெரிக்க ராணுவம் ஈரா…
-
- 0 replies
- 655 views
-
-
தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் மக்களுக்கும் அவர்களின் போராடும் சக்திகளான விடுதலைப்புலிகளுக்கும் தமிழக மக்கள் ஆதரவு வழங்குவதை தீவிரமாக எதிர்த்து வரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ் இளங்கோவன், ஈ வெ ராமசாமி நாயக்கரின் நெருங்கிய உறவினர் ஆவார். இந்தியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை 1991 இல் இருந்து அமுலில் உள்ள போதும் இரண்டு ஆண்டுகளுக்கு ஓர் தடவை மீள மீள புதிப்பிக்கப்படும். ஆனால் இவ்வாண்டில் புதுப்பிக்கப்பட வேண்டிய தடை இன்னும் புதிப்பிக்கப்படாத நிலையிலேயே இந்திய மத்திய உளவுப்படையும் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுப் பிரமுகர்களும் அதிமுக போன்ற கட்சியினரும் நேரடியாகவும் திமுக போன்ற கட்சியினர் மறைமுகமாகவும் தங்கள் அரசியல் நலனுக்காக அங்க புலி வருகுது இங்க புலி படகு …
-
- 51 replies
- 9.9k views
-
-
அமெரிக்கத் தளங்கள் மீது அணுகுண்டு வீசுவோம்: ரஷியா எச்சரிக்கை லண்டன், டிச. 18: ஐரோப்பிய கண்டத்தில் ஏவுகணைத் தளங்களை அமைத்தால் அதை ஏவுகணை மூலம் அணுகுண்டுகளை வீசித் தாக்கி அழிப்போம் என அமெரிக்காவுக்கு ரஷியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ரஷியாவின் ஏவுகணைப் பிரிவு பொறுப்பு அதிகாரி நிகோலை சோலோத்சோவ் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: ஐரோப்பிய கண்டத்தில் இரு இடங்களில் ஏவுகணைத் தளங்களை அமைக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அமெரிக்கா தனது இந்தத் திட்டத்தைக் கைவிடாவிட்டால், போலந்து, செக் குடியரசு ஆகிய இரு இடங்களில் நாங்களும் ஏவுகணைத் தளங்களை அமைக்க வேண்டிய அவசியம் ஏற்படும். இந்தத் திட்டம் ஏற்கெனவே தீவிரப் பர…
-
- 29 replies
- 4.5k views
-
-
கருணாநிதியை விமர்சிப்பதா? ஜெயலலிதாவுக்கு துரைமுருகன் கண்டனம் அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- நாள் தவறினாலும் அறிக்கை மூலமாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஜெயலலிதா இன்றைய தினம் விடுத்துள்ள அறிக்கையில் மத்திய அரசிலே உள்ளவர்கள் இன்னமும் தன்னுடைய ஆலோசனையைக்கேட்டுக் கொண்டு தான் நடக்கிறார்கள் என நினைத்துக் கொண்டு, மத்திய அரசு கூட்டியுள்ள ஒரு கூட்டத்திற்கு தமிழக அரசின் முதல்-அமைச்சர் என்ற முறையில் கலைஞரை அழைத்திடக் கூடாது என்ற வகையில் கருத்தினைத் தெரி வித்திருக்கிறார். மத்திய அரசோ, அதிலே உள்ள அமைச்சர்களோ யாரும் இந்த அம்மையாரைத் திரும்பிப் பார்க்கத் தயாராக இல்லை. ஆனால் இன்னமும் பழைய நினைப்புடா பேராண்டி என்பதைப் போல தாண்டிக் குதித்து முதல்-…
-
- 0 replies
- 867 views
-
-
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயது பெண் சாந்தினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவரது அக்காள் டெல்லியில் கணவருடன் வசித்து வந்தார். அவர் கர்ப்பமாக இருந் தார். எனவே அவருக்கு உதவு வதற்காக சாந்தினி டெல்லி வந்து தங்கினார். அப்போது ஆதர்ஷ் நகர் பகுதியைச் சேர்ந்த ஜெய் சங்கர் என்ற வாலிபர் சாந்தினியை சந்தித்தார். அவரை காதலிப்பதாக கூறி னார். இதை உண்மை என நம்பிய சாந்தினி ஜெய்சங்கரை காதலித்தார். இருவரும் அடிக் கடி தனியாக சந்தித்து பேசிக் கொண்டனர். கடந்த 12-ந்தேதி ஜெய்சங்கர் சாந்தினியை தனது வீட்டுக்கு வரும்படி அழைத்து சென்றார். ஆனால் தனது வீட்டுக்கு அழைத்து செல்லாமல் அவரு டைய நண்பர் பர்வீஷ் என்ப வர் வீட்டுக்கு அழைத்து சென்றார். பின்னர் இருவரும் சேர்ந்து சாந்தினியை ஒரு விபச…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கைக்கு எக்காரணம் கொண்டும் ராணுவ ரீதியிலான உதவிகளை இந்திய அரசு அளிக்கக் கூடாது. தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை ராணுவத்தின் போருக்கு இந்தியா எந்தவிதமான ஆலோசனைகளையும் கூறக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கு வைகோ எழுதியுள்ள கடிதத்தில், இந்திய அரசின் உயர் அதிகாரிகள் சிலர் இலங்கை அரசுடன் கை கோர்த்துக் கொண்டு, மத்திய அரசுக்குத் தவறான அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் கூறி வருகின்றனர். இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆயுத உதவிகளையும், பிற போர் உத்தி உபாயங்களையும், ராணுவ உதவிகளையும் அளித்து வருமானால், அது தமிழ் மக்கள் மனதில் நீங்காத கோபத்தையும், விரக்தியையும், துவேஷத்தையும் ஏற்படுத்தவே வழி வ…
-
- 0 replies
- 675 views
-
-
கோலாலம்பூர்: 31 தமிழர்கள் மீதான கொலை முயற்சி வழக்கை கைவிட்டதற்காக மலேசிய பிரதமர் அப்துல்லா அகமது படாவிக்கு பல்வேறு தமிழர் அமைப்புகள் பாராட்டும், நன்றியும், வரவேற்பும் தெரிவித்துள்ளன. கோலாலம்பூர் போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 31 தமிழர்கள் மீது கொலை முயற்சி வழக்கும், சட்டவிரோதமாக கூடியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இவர்களில் 5 பேர் மாணவர்கள் ஆவர். இந்த வழக்குகளை கைவிட வேண்டும் என்று மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான டத்தோ சாமிவேலு, பல்வேறு தமிழர் அமைப்புகள் பிரதமர் படாவியை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். அதேசமயம், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து மலேசியாவுக்கு நெருக்கடிகளும் அதிகரித்து வந்தன. இந்த நிலையில், 31 தமிழர்கள் மீத…
-
- 0 replies
- 567 views
-
-
திரைமறைவில் இருந்து கொண்டு ரிமோட் கண்ட்ரோல் அரசியலை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நடத்தி வருகிறார் என்று ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவின் கணவர் நடராஜன் கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பொதுமக்களை நேரடியாக சந்தித்து அரசியல் நடத்த வேண்டும். ஆனால், திரைமறைவில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் அரசியல் நடத்தி வருகிறார் ஜெயலலிதா. எம்.எல்.ஏக்களை ஏவி விட்டு போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்துகிறார். மக்களை நேரடியாக சந்திப்பதில்லை. இந்தத் திரைமறைவு அரசியல் நீடிக்காது. மக்கள் பணிக்கும், சமூக பணிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கட்சிகளையே மக்கள் நம்புவார்கள். கொடி இல்லாமல், முத்திரை இல்லாமல் மக்களுக்காக இயங்கும் கட்சியாக …
-
- 0 replies
- 625 views
-
-
ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் .. சத்தியநாராயணா அறிவிப்பு December 15th, 2007 சூப்பர்ஸ்டார் ரஜினியின் 57ஆவது பிறந்தநாள் கொண்டாட்டங்களின்போது ரஜினி ரசிகர்கள் வைத்திருந்த பேனர்களில் அவர் எதிர்கால முதல்வராக வரவேண்டும் என்ற ஆவல் பிரதிபலித்திருந்தது. ஆனால் ரஜினிகாந்த் ரசிகர்மன்றத் தலைவர் சத்யநாராயணா அவருக்கு அரசியலுக்கு வரும் எண்ணமோ விருப்பமோ இல்லை, அரசியலுக்கு வரமாட்டார், எனவே இரசிகர்கள் எதிர்பார்த்து ஏமாற்றமடைய வேண்டாம் எனக் கூறினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திடம் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. ரசிகர் மன்றத்தின் வளர்ச்சியிலும், ரஜினியின் வளர்ச்சியிலும் அக்கறை கொண்டு தீவிரமாக செயல்பட்டு வரும் ரசிகர்களின் உணர்வுகளை ரஜின…
-
- 6 replies
- 1.8k views
-
-
சிரிப்புப்பகுதியில் இணைக்க வேண்டிய செய்தி. பேனா முனையில் ஈழப் பிரச்சினைக்கு தீர்வு காண்போம் - இளங்கோவன் சென்னை: பேனா முனையை விட எதுவும் வலிமையானதல்ல. எனவே பேனா முனையில் ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காண இலங்கைப் பத்திரிக்கையாளர்கள் உதவ வேண்டும் என்று மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். சென்னை, காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்லூரியில் இலங்கையைச் சேர்ந்த 20 பத்திரிக்கையாளர்கள், இதழியல் படிப்பில் 6 மாத டிப்ளமோவை முடித்துள்ளனர். அவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் இளங்கோவன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ஈழப் பிரச்சினையை சுமூகமாகத் தீர்க்க முடியும். தமிழகத்தில் சிலர் இதை …
-
- 5 replies
- 1.8k views
-
-
ஈழத் தமிழர்களுக்கு எதிராக இந்தியா, சிங்கள அரசுக்கு முட்டுக் கொடுப்பது மிகப்பெரும் கேலிக் கூத்து என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, அரசியல் நேர்மையில்லாத, பேச்சுவார்த்தையில் நம்பிக்கையில்லாத இனவெறி பிடித்த சிங்கள அரசின் வான் படையை மேம்படுத்துவதற்கு இந்திய அரசு வலிய வலிய வரிந்து கட்டிக் கொண்டு உதவி செய்வது வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது. பாகிஸ்தான் சிங்கள இனவெறிக் கும்பலுக்கு பல வகையிலும் உதவிகள் செய்வது போன்று, இந்திய அரசும் போட்டி போட்டிக் கொண்டு ஈழத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஓரே அணியில் நின்று கொண்டு சிங்கள அரசுக்கு…
-
- 0 replies
- 686 views
-
-
விடுதலைப் புலிகளின் மீதான தடை புதுப்பிக்கப்படவில்லை - திருமாவளவன் சென்னை, டிச. 17 : - தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் மீதான தடையை அரசாங்கம் நீட்டிக்கவில்லை என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர், தொல். திருமாவளவன் டிசம்பர் 16 அன்று தெரிவித்தார். 1991-ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின்பு, விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப் பட்டது. அந்தத் தடை, இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு அவ்வாறு செய்யப்படவில்லை. இருப்பினும் உள்துறை அமைச்சகப் பட்டியலில் அந்த அமைப்பு தடை செய்யப்பட்ட ஒன்றாகக் காட்டப்படுகிறது. புலிகளின் மீதான தடையை நீட்டிக்கவேண்டும் எனும் நோக்கில், அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தமிழ் நாட்டில் நட…
-
- 1 reply
- 1.1k views
-
-
கோலாலம்பூரில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திக் கைதாகி, கொலை முயற்சி வழக்கை சந்தித்த 31 தமிழர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை மலேசிய அரசு தலைமை வக்கீல் இன்று திரும்பப் பெற்றார். இதையடுத்து 31 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மலாய் இனத்தவர்களுக்கு சமமாக கல்வி, வேலை வாய்ப்பில் சம உரிமை வழங்க வேண்டும் என்று இந்து உரிமைகளுக்கான நடவடிக்ைகக் குழு (ஹிண்ட்ராப்) என்ற தமிழர் அமைப்பு கோரிக்கை விடுத்து வருகிறது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியும், தங்களது இன்றைய நிலைக்கு இங்கிலாந்துதான் காரணம் என்று கூறி கடந்த மாதம் 25ம் தேதி இங்கிலாந்து தூதரகம் நோக்கி ஹிண்ட்ராப் அமைப்பின் சார்பில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்ற பிரமாண்ட பேரணி நடந்தது. இதையடுத்து 200க…
-
- 0 replies
- 723 views
-
-
“ஒசாமாவுடன் பணியாற்றியபோது, கட்டுக்கடங்காத சந்தோஷத்தில் இருந்தேன்’ என்று, அவனுடைய முன்னாள் கார் டிரைவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளான். அமெரிக்காவில் 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, உலக வர்த்தக மையம் விமானம் கொண்டு தகர்க்கப்பட்ட பின், அதற்கு காரணமான ஒசாமா பின்லாடனை அமெரிக்கா தீவிரமாக தேட தொடங்கியது. ஆனால், இதுவரை அவன் சிக்கவேயில்லை. அதே ஆண்டில் நவம்பர் 24ம் தேதி, ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தகார் நகரில் அமெரிக்க வீரர்கள் பல சோதனை சாவடிகளை அமைத்து வாகனங்களை சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது பிடிபட்டவன் தான் சலீம் அகமது ஹாம்தான். கியூபாவில் குவான்டனாமோ என்ற இடத்தில் அமெரிக்க கடற்படை தளம் உள்ளது. இங்குள்ள தனிமை சிறையில் ஹாம்தான் அடைக்கப்பட்டுள்ளான். அவன் மீது ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
http://thenseide.com/cgi-bin/NewsPaper.asp
-
- 2 replies
- 1.4k views
-
-
தமிழிசையை வளர்க்க திராவிட ஆட்சிகள் உதவவில்லை - ராமதாஸ் சென்னை: தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக நடந்து வரும் திராவிட ஆட்சிகளில் தமிழிசை வளர்ச்சிக்கும், தமிழிசைக் கலைஞர்கள் முன்னேற்றத்திற்கும் எதுவும் செய்யப்படவில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். பொங்கு தமிழ் பண்ணிசை மணிமன்றம் 5வது ஆண்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விழாவைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், தமிழகத்தில் மற்ற இசைக்கு நிகராக தமிழ் இசை வளர்ச்சி அடையவில்லை. கடந்த 40 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் தமிழிசை கலைஞர்களுக்கும், தமிழ் இசைக்கும் எந்த பயன்பாடோ, முன்னேற்றமோ ஏற்படவில்லை. எனது கருத்தில்…
-
- 0 replies
- 678 views
-
-
அமெரிக்காவில் ஆந்திர மாணவர்கள் சுட்டுக்கொலை வீரகேசரி இணையம் அமெரிக்காவில் உள்ள லூசியானா பல்கலைகழகத்தில் விடுதியில் தங்கி படித்து வந்த ஆந்திர மாநில மாணவர்களை அடையாளம் தெரியாதவர்கள் சுட்டுக்கொன்றனர். இறந்தவர்களில் ஒருவர் ஐதராபாத்தை சேர்ந்த கிரண் குமார் ஆலம்(33) மற்றும் கர்னூல் மாவட்டத்தை சேரந்த சந்திரசேகர் ரெட்டி கோமா (31) என பல்கலைகழக ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.இறந்த மாணவர்கள் வேதியயல் பிரிவில் ஆராய்ச்சி மாணவர்கள் என போலீசார் தெரிவித்தனர். மேலும் போலீசார் கூறுகையில் இச்சம்பவம் தொடர்பாக 3 பேரை தேடிவருவதாக தெரிவித்தனர்
-
- 0 replies
- 943 views
-
-
சென்னையில் மீண்டும் சங்கமம் - ஒரு வாரம் நடக்கிறது தமிழ் மையம் அமைப்பின் சார்பில் அடுத்த ஆண்டு நடத்தப்படும் சென்னை சங்கமம் திருவிழாவில் தமிழகம் முழுவதுமிருந்து 2,000 நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்கேற்பார்கள் என்று மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அடுத்த ஆண்டு சென்னை சங்கமம்-2008 திருவிழா ஜனவரி 10ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடத்தப்படும். முதல் விழாவை அடையாறு ஐ.ஐ.டி. திறந்த வெளி அரங்கத்தில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். இதில் 650 கலைஞர்கள் பங்கேற்பார்கள்" என்றார். மேலும் அவர் கூறியதாவது, கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் சென்னையில் உள்ள பூங்காக்களிலும், வெளி அரங்குகளிலும் கலை நி…
-
- 1 reply
- 1.4k views
-