Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கொவிட் வைரஸ் குறித்து... அமெரிக்காவை, வெளிப்படையான வகையில் விசாரிக்க வேண்டும்: சீனா வலியுறுத்தல்! கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று குறித்து அமெரிக்காவை வெளிப்படையான வகையில் விசாரிக்க வேண்டும் என சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கருத்து தெரிவிக்கையிலேயே பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ட்சௌ லிஜியாங் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனா வைரஸ் எங்கிருந்து முதலில் தோன்றியது என்ற விவகாரத்தில் சீனாவை குற்றம்சாட்டும் முன்பு முதலில் தமது நாட்டில் அது தொடர்பாக அமெரிக்கா விசாரணை நடத்த வேண்டும் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 முதல் 16ஆம் திகதிக்கு இடைப்பட்ட நாட்களில் அமெரிக்காவி…

  2. பங்களாதேஷில் இன்னொரு மூத்த எதிர்க்கட்சித் தலைவர், சலாலுதீன் காதர் சௌத்ரி, 1971ல் நாடு பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற நடத்திய போரின் போது, போர்க்குற்றங்கள் இழைத்த குற்றம் புரிந்ததாக சிறப்பு நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்திருக்கிறது. சலாலுதீன் காதர் சௌத்ரி-- மரண தண்டனையை எதிர்நோக்கும் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் இனப்படுகொலை, கொலை, கடத்தல் ஆகிய குற்றங்களை அவர் செய்ததாகக் கண்டறியப்பட்டு, அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது இந்த சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்படும் முதல் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் மூத்த பிரமுகரும் இவர்தான். தனது கணவர் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார் என்று சௌத்ரியின் மனைவி கூறினா…

  3. சீன ஜனாதிபதியும், புடினும்... அடுத்த வாரம் சந்திக்கவுள்ளதாக தகவல்! சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினும் அடுத்த வாரம் உஸ்பெகிஸ்தானில் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவும் ரஷ்யாவும் மேற்கத்திய நாடுகளின் தணிக்கை மற்றும் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டு பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த தயாராகிவரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. செப்டம்பர் 15ஆம் மற்றும் 16ஆம் திகதிகளில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சிமாநாட்டில் இரு தலைவர்களும் சந்திக்க உள்ளனர் என்று சீனாவுக்கான ரஷ்ய தூதர் ஆண்ட்ரே டெனிசோவ் தெரிவித்துள்ளார். உள்நாட்டில் பெருகிவரும் பொருளாதார சவால்கள் மற்றும் வெ…

  4. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, ஜூன் 25-ம் தேதி வரை 4 ஆயிரத்து 825 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில், அதிகபட்சமாக டெல்லியில் மட்டும் ஆயிரத்து 507 பேர் பாதிக்கப்பட்டனர். அதிகமான மக்கள் நெருக்கம் கொண்ட டெல்லி நகரில் நோய்த்தொற்று எளிதில் பரவும் வாய்ப்பு உள்ளதால் இந்நோயின் தாக்கம் அதிகம் என்று கூறப்படுகிறது. அதிகமான நபர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டாலும் டெல்லியில் பன்றிக் காய்ச்சலுக்கு 16 பேர் மட்டுமே பலியாகியுள்ளனர். குஜராத்தில் ஆயிரத்து 29 பேருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டதில் 195 பேர் பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் கடந்த 6 மாதங்களில் பன்றிக் காய்ச்சலுக்கு 600 பேர் பலியாகியுள்ளனர். மேற்கண்டவாறு மத்திய சுகாதார அம…

    • 0 replies
    • 205 views
  5. ஈரானில் தடுத்துவைக்கப்பட்டு விடுதலையான நசானின் ஜாகரி- ராட்க்ளிஃப், அனூஷே அஷூரி ஆகியோர் பிரித்தானியாவை சென்றடைந்தனர் ஈரானில் தடுத்துவைக்கப்பட்டு விடுதலையான நசானின் ஜாகரி- ராட்க்ளிஃப் மற்றும் அனூஷே அஷூரி ஆகியோர் பிரித்தானியாவை சென்றடைந்தனர். பிரிட்டிஷ் - ஈரானிய கைதியான நசானின் ஜாகரி-ராட்க்ளிஃப் மற்றும் அனூஷே அஷூரி ஆகியோர் பல வருட சிறைவாசத்திற்கு பிறகு தங்களது குடும்பங்களுடன் மீண்டும் இணைந்துள்ளனர். ஜகாரி-ராட்க்ளிஃப் ஈரானிய அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்த குற்றச்சாட்டின் பேரில் 2016 இல் கைது செய்யப்பட்டதிலிருந்து 5 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். கடந்த ஆண்டு ஏப்ரலில் அவருக்கு மேலும் ஒரு ஆண்டு சிறைத்தண்டனையும், அரசாங்கத்திற்கு எதிராக பிரச்சாரம் …

  6. 17 APR, 2025 | 10:38 AM அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தக போரின் தாக்கம் உலகின் அனைத்து பகுதிகளிலும் உணரப்படும் என சிங்கப்பூர் பிரதமர் லோரன்ஸ் வொங் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தனது புதியவரிகளை இடைநிறுத்திவைத்துள்ளமை குறித்து சிறிதும் நிம்மதிபெருமூச்சு விடமுடியாது என குறிப்பிட்டுள்ள அவர் அமெரிக்காவின் அறிவிப்புகள் ஏற்கனவே உலகின் பல பகுதிகளில் நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளன என குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக போரினால் இரண்டு நாடுகளிற்கும் இடையிலான வர்த்தகம் முற்றாக நின்றுபோகும் ஆபத்து ஏற்படும் என எச்சரித்துள்ள சிங்கப்பூர் பிரதமர் இதனால் ஏற்படும் மிக மோசமான பாதிப்பினை அந்த இரு நாடுகளும் மாத்திரம் அனுபவிக்கப்போவதில்லை முழு உலகமும்…

  7. 23 FEB, 2025 | 09:39 AM பிரான்சின் முல்ஹவுஸ் நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர். மூன்று பொலிஸார் காயமடைந்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற இடத்தில் அல்ஜீரியாவை சேர்ந்த 37 வயது நபர் ஒருவர் காணப்பட்டார் என தெரிவித்துள்ள அதிகாரிகள் அவர் அல்லாகு அக்பர் என சத்தமிட்டார் என்பதை அடிப்படையாக வைத்து பயங்கரவாத குற்றம் என்ற அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அந்த நபர் இரண்டு பொலிஸாருக்கு கடும் காயங்களை ஏற்படுத்தினார், தடுக்க முயன்ற 69 வயது போர்த்துக்கல் பிரஜையை குத்திக்கொன்றார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் பயங்கரவாத கண்காணிப்பிலிருந்தவர் இதன் காரணமாக அவரை நாடு கடத்துவதற்கான உத்தரவு பிறப்பிக்…

  8. படக்குறிப்பு,நடுக்கடலில் பற்றி எரியும் கப்பல்கள் 10 மார்ச் 2025 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வட கடல் பகுதியில் திங்கட் கிழமை காலையில் இரண்டு கப்பல்கள் நடுக்கடலில் மோதிக் கொண்டன. இரண்டு கப்பல்களும் கிழக்கு யார்க்ஷர் கடற்கரையில், பிரிட்டனில் உள்ள கிரிம்ஸ்பீ பகுதிக்கு அருகே மோதிக் கொண்டன. ஸ்டெனா இம்மாகுலேட் கப்பல் ஜெட் எரிபொருளை எடுத்துச் சென்ற போது, வட கடலில் சோலாங் சரக்கு கப்பலால் மோதி விபத்துக்கு விபத்துக்குள்ளானது. எண்ணெய் எடுத்துச்சென்ற கப்பல் மற்றும், வேதிப்பொருட்களுடன் சென்ற சோலாங் என இரண்டிலும் ஏற்பட்ட தீ இரண்டாவது நாளாக எரிந்து கொண்டிருக்கிறது. பிபிசி வெரிஃபை ஆய்வு செய்த தரவுகளின்படி, அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட ஸ்டெனா இம்மாகுலேட் என்ற டேங்கர் …

  9. எங்களது ஆயுதமே விடுதலைப்புலிகளை இலங்கை தோற்கடிக்க உதவியது - பாக்கிஸ்தானின் ஆயுத உற்பத்தியாளர் By RAJEEBAN 17 NOV, 2022 | 05:25 PM பாக்கிஸ்தானின் ஆயுதஉற்பத்தியாளர் ஒருவர் தனது நிறுவனத்தின் ஆயுதம் விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தில் இலங்கை இராணுவம் வெற்றி பெறுவதற்கான முக்கிய பங்களிப்பை வழங்கியது என தெரிவித்துள்ளார் டோவ்ன் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது டோவ்ன் மேலும் தெரிவித்துள்ளதாவது பாக்கிஸ்தானில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மிகவும் சிறப்பானவை பயனுள்ளவை அவை யுத்தத்தின்போக்கை தீர்மானிக்கின்றன. பாக்கிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கலந்துகொண்ட தனியார் ஆ…

  10. அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே ஆயுதத்துடன் சென்ற ஒருவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே ஆயுதத்துடன் சென்ற ஒருவர் மீது மேற்கொள்ளபட்ட துப்பாக்கிப்பிரயோக சம்பவத்தினை தொடர்ந்து வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டது. உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 2 மணி அளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது காயம்; அடைந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைப்பெற்று வருவதாக வாஷிங்டன் போலீஸ் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/132366/language/ta-IN/article.aspx துப்பாக்கி …

  11. கிரேக்க தீவான... ஈவியாவில், காட்டுத்தீ: குடியிருப்புவாசிகள் கடல் வழியாக பாதுகாப்பாக வெளியேற்றம்! கிரேக்க தீவான ஈவியாவில் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருவதால், குடியிருப்புவாசிகள் கடல் வழியாக பாதுகாப்பாக வெளியேறி வருகின்றனர். 2,000க்கும் மேற்பட்ட மக்கள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது வயதானவர்கள் படகுகளில் வெளியேறியுள்ளனர். தீயை அணைக்க போதுமான உதவி அனுப்பப்படவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். தீவின் பல பகுதிகள் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டன. கிரேக்கத்தில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம் 45சி (113எஃப்) ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக நாட்டில் பல காட்டுத் தீ பதிவாகியுள்ளது. ஏதென்ஸின் வடக்கு புறநகர்ப் பகுதியில் ஏற்பட்ட தீ தற…

  12. "சிவெரோடோனெட்ஸ்க்" நகரின்... மையப் பகுதியை, நெருங்கிய ரஷ்ய படைகள் ! ரஷ்யப் படைகள் உக்ரைனின் சிவெரோடோனெட்ஸ்க் நகரின் மையப் பகுதியை நெருங்கி விட்டதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் இடம்பெற்ற தீவிர மோதலை அடுத்து அவர்கள் முன்னேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நகரத்தின் பாதிக்கு மேல் இப்போது செச்சென் போராளிகள் உட்பட ரஷ்யப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை உக்ரைனுக்கு பொருளாதார, மனிதாபிமான மற்றும் தற்காப்பு இராணுவ உதவிகளை பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்தும் வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. மேலும் ரஷ்யா மற்றும் பெலரஸ் மீது பிரி…

  13. தாய்வானில் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை தாய்வானின் தென்கிழக்கு கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது, இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இந்த நிலநடுக்கம் மதியம் 2:44 மணிக்கு (06:44 GMT) டைடுங் நகருக்கு வடக்கே 50 கிமீ (30 மைல்) தொலைவில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில் இரண்டு மாடி குடியிருப்பு கட்டிடம் மற்றும் ஒரு கடை இடிந்து விழுந்தது . மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக உள்ளூர் ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது. கிழக்கு தாய்வானில் உள்ள டோங்லி ரயில் நிலையத்தின் ஒரு பகுதி இடி…

  14. ஏமனில் ஹூத்தி இலக்குகளை தாக்கிய அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் - என்ன நடந்தது? பட மூலாதாரம்,DVIDS படக்குறிப்பு, ஏமனில் உள்ள இரான் ஆதரவு பெற்ற ஹூத்தி கிளர்ச்சி குழுவின் 15 இலக்குகளை தாக்கியதாக, அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், செபாஸ்டியன் அஷர் & மேக்ஸ் மட்ஸா பதவி, பிபிசி செய்திகள் 56 நிமிடங்களுக்கு முன்னர் ஏமனில் உள்ள இரான் ஆதரவு பெற்ற ஹூத்தி கிளர்ச்சிக் குழுவின் 15 இலக்குகளைத் தாக்கியதாக, அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. “கடல்வழிப் பயண சுதந்திரத்தைப் பாதுகாக்கும்” நோக்கில், விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக அமெரி…

  15. இத்தாலியில் ஜெட் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் உயிரிழப்பு! இத்தாலியின் மிலன் நகரில் தனியாருக்கு சொந்தமான சிறிய ஜெட் விமானமொன்று விபத்துக்குள்ளானதில், ஆறு பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் உட்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மிலன் புறநகரில் உள்ள ஒரு ஆளில்லாத இரண்டு மாடி அலுவலக கட்டடத்தின் பக்கத்தில் இந்த விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. மிலனின் உள்ள விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய அந்த விமானம் சர்தீனியா தீவை நோக்கி பயணித்தைத் தொடங்கியது. ஆனால் கிளம்பிய சற்று நேரத்திலேயே மிலன் நகரின் புறநகர் பகுதியில் கீழே விழுந்து நொறுங்கியது. எனினும், இந்த விமானம் விழுந்து நொறுங்கி பொழுது தரையில் இருந்த யாருக்கும் காயம்…

  16. உலகப் பார்வை: பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செளதி அரேபியாவில் வாழ்ந்த மனிதன் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம் செளதி அரேபியாவில் ஆதி மனிதன் படத்தின் காப்புரிமைKLINT JANULIS புதிய ஆய்வு ஒன்று செளதி அரேபியாவில் 85,000 ஆண்டுகளுக்கு முன்பு, மனிதன் வசித்தான் என்பதை வலியுறுத்துகிறது. ஆஃப்ரிக்காவுக்கு வெளியே 60,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை மனிதன் தொடர்ச்சியாக வசித்ததில்லை என்னும் முந்தைய வாதத்தை இந்த ஆய்வு பொய்யாக்குகிறது. அரேபியாவின் உட்பகுதிகளில் நடத்தப்பட்ட முந்தைய அகழாய்வுகளில் மனிதன் பயன்படுத்திய ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், எலும்புகூடுகள் எதுவு…

  17. வட கொரியாவில் கோவிட்: 10 லட்சம் பேருக்கு மேல் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அச்சம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, மருந்து தெளிக்கும் ஊழியர்கள். தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத வட கொரிய நாடு முழுவதும் கோவிட் 19 தொற்று அலை அலையாகப் பரவி வரும் நிலையில், இந்த நெருக்கடியைக் கையாளும் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது. சுகாதாரத் துறை அலுவலர்களை கடுமையாக விமர்சித்த வட கொரியத் தலைவர் கிம் ஜோங் - உன் மருந்துகளை விநியோகிக்கும் பணியை மேற்கொள்ளுமாறு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். நாட்டில் 10 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதை "காய்ச்சல்" எ…

  18. சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு 52.75 மில்லியன் டொலர்கள் இழப்பீடு வழங்க அவுஸ்திரேலியா இணக்கம் பப்புவா நியூ கினியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. மானுஸ் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 1900 அகதிகளின் உளநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டினை மறுத்துள்ள அவுஸ்திரேலிய அரசாங்கம் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கி பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர இணக்கம் தெரிவித்துள்ளது. இன்று விக்டோரியா உ…

  19. நேருவுடன் திபேத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா ( ஆவணப்படம்) சீனாவின் ஆளுகைக்குள் இருக்கும் திபெத்திய மாகாணத்தில் வசிக்கும் மக்களுக்கு மேலும் கூடுதல் சுயாட்சி அதிகாரங்களை வழங்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு உலக மக்களின் ஆதரவைத் திரட்ட புதிய பிரசார முயற்சி ஒன்றை நாடுகடந்த திபெத்திய அரசு தொடங்கியிருக்கிறது. திபெத்திய நாடுகடந்த அரசின் கொள்கையான, "மைய வழி" என்ற கொள்கையைப் பற்றி சீன அரசு நடத்தி வரும் பொய்ப்பிரசார முயற்சியை முறியடிப்பதற்காக இந்த நடவடிக்கையை தாங்கள் மேற்கொண்டிருப்பதாகத் திபெத்திய அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்களது இந்த "மைய வழிக்" கொள்கை, திபெத்துக்கு உண்மையான சுயாட்சியைக் கோருகிறது, சீனாவிடமிருந்து சுதந்திரத்தை அல்ல . சீனாவின் கட்டுப்பாட்டில் 1950களிலிருந்…

    • 0 replies
    • 205 views
  20. ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின்... வீட்டில், குண்டு தாக்குதல் ! காபூலில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டை தீவிரவாதிகள் தாக்கியதில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். பாதுகாப்பு அமைச்சர் பிஸ்மில்லா கான் மொஹமட் வீட்டில் இல்லாத நேரத்தில் கார் குண்டு தாக்குதல் இடம்பெற்றதுடன் துப்பாக்கி பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பாதுகாப்பு அமைச்சரின் குடும்பத்தினர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்றும் தீவிரவாதிகள் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நகரங்களில் மோதல் அதிகரித்து வரும் நிலையில் வன்முறையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. பாதுகாப்பு சபை அழைப்பு விடுத்துள்ளது. …

  21. லண்டனில் போதைப்பொருட்களை வழங்கி யுவதிகளை பாலியல் வன்முறைகளுக்குட்படுத்திய 18 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் லண்டன் நியுகாஸ்டில் பகுதியில் போதைப்பொருட்கள் மதுபானம் போன்றவற்றை வழங்கி யுவதிகளை பாலியல் வன்முறைகளிற்கு உட்படுத்தியதாக 18 பேர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளின் இறுதியில் அவர்கள் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது 2011 முதல் இடம்பெற்ற விசாரணைகளின் அடிப்படையில் 18 பேரும் குற்றவாளிகளாக காணப்பட்டுள்ளனர். 17 ஆண்கள் ஓரு பெண் அடங்கிய இந்த குழுவினர் பாலியல் வல்லுறவு, கடத்தல் , விபச்சாரத்தி;ல் ஈடுபடுத்துவதற்கு திட்டமிட்டது, போதைப்பொருளை ஊக்குவித்தது உட்ப…

  22. லா பால்மாவில் எரிமலை வெடிப்பு: 5,500 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்! ஸ்பானிய கேனரி தீவுகளில் உள்ள லா பால்மாவில் எரிமலை வெடித்ததில் வீடுகள் அழிக்கப்பட்டு, சுமார் 5,500 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கும்ப்ரே வீஜா எரிமலையில் இருந்து வரும் லாவா நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) வெடித்ததில் இருந்து இதுவரை சுமார் 100 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், மீட்புப் பணிகளைக் கண்காணிக்க ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் லா பால்மாவுக்குச் சென்றார். எரிமலை எரிமலையில் இருந்து ஏற்படக்கூடிய தீயை அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அவர் கூறினார். இராணுவம் மற்றும் சிவில் காவலர்கள் உதவிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். …

  23. விடுவிக்கப்படவிருந்த இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 8 பேர் உயிரிழப்பு! காசா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கமைய முதல் கட்டமாக விடுவிக்கப்படவிருந்த 33 இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பணயக் கைதிகள் தொடர்பான ஹமாஸின் பட்டியலை மேற்கோள் காட்டி இஸ்ரேல் அரசாங்க ஊடக பேச்சாளர் டேவிட் மென்சர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். இதன்படி, ஏனைய 25 பேர் உயிருடன் இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஹமாஸிடமிருந்து பணயக் கைதிகளின் தகவல்களைப் பெற்ற இஸ்ரேல், அவர்களின் நிலைமை குறித்து குடும்பங்களுக்கு அறிவித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், முதல் கட்டமாக விடுவிக்கப்படவிருந்த பணயக் கைதிகளில…

  24. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். தவறாக அர்த்தப்படுத்தப்படுகிறேன் தாம் தவறாக அர்த்தப்படுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். அவர் ஆஃப்ரிக்க நாடுகள் குறித்து விவரிக்கும் போது `மலவாய்` என்ற பதத்தை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை சுட்டிக்காட்டி பேசிய அவர் நான் முழுவதுமாக தவறாக அர்த்தப்படுத்தப்படுகிறேன் என்று கூறியுள்ளார். தாக்குதல் வெனிசுலாவில் கடந்த ஆண்டு ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களுக்கு தலைமை தாங்கினார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு விமான ஓட்டியை கைது செய்ய மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கைய…

  25. 19 MAY, 2023 | 11:05 AM ஏழு வருடங்களாக பிடித்துவைத்திருந்த அவுஸ்திரேலியர் ஒருவர் அல்ஹைதா விடுதலை செய்துள்ளது. மேற்கு ஆபிரிக்காவிற்கான அல்ஹைதா தான் ஏழு வருடங்களாக பிடித்துவைத்திருந்த மருத்துவர் கெனெத்எலியட்டை விடுதலை செய்துள்ளது என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. 2016 இல் மாலிக்கும் புர்கினா பாசோவிற்கும் இடையில் கெனெத் எலியடடும் அவரது மனைவியும் அல்ஹைதாவிடம் பிடிபட்டனர்பிடிபட்டனர். அல்ஹைதா அவர்கள் பணயக்கைதிகளாக உள்ளதை உறுதி செய்திருந்தது. எனினும் அழுத்தங்கள் காரணமாக மூன்று வாரங்களின் பின்னர் எலியட்டின் மனைவியை அல்ஹைதா விடுதலை செய்தது. இதேவேளை எலியட் விடுதலை குறித்து கருத்து வெளியிட்டுள்ள …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.