உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26599 topics in this forum
-
கறுப்பின ஆண் துணைக்கு குரல் கொடுக்கும் வெள்ளை இனப்பெண் ( காணொளி இணைப்பு ) இங்கிலாந்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தனது கறுப்பின ஆண் துணைக்காக குரல் கொடுக்கும் வெள்ளை இனப் பெண் தொடர்பான காணொளி ஒன்று சமூகத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 18 வயது மதிக்கத்தக்க கறுப்பினத்தவரை இங்கிலாந்து பொலிஸார் மடக்கிப் பிடித்து தரையில் வீழ்த்தி விலங்கிட்டு அவரது தலையை ஒரு முகமூடியால் மூடுவது குறித்த காணொளியில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/9590
-
- 0 replies
- 361 views
-
-
பெங்களூரு ஏன் எரிகிறது? காவிரி வெறும் நீர்ப் பிரச்சினை மட்டும் இல்லை; ஒரு சமூகவியல் பிரச்சினையும்கூட அவர்கள் படையாய்க் கிளம்பினார்கள். உடல் மண்ணுக்கு, உயிர் காவிரிக்கு என்ற கோஷம் இல்லை அது. எமக்கு மிஞ்சித்தான் தான தர்மம் என்கிற கோஷமாக கன்னட அமைப்புகள், விவசாயிகள் எழுப்பிய கோபக் குரலாகத்தான் ஆரம்பித்தது அது. எங்களுக்கே குடிக்க நீர் இல்லை, விவசாயத்துக்கு இல்லை எனும்போது தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் காவிரி நீரை 15 நாட்களுக்கு (செப். 5-லிருந்து செப்.20 வரை) விநாடிக்கு 15,000 கன அடி நீர் விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் எப்படிச் சொன்னது என்கிற அதிர்ச்சியும் கோபமும் கலந்த எதிர்ப்பாகத்தான் முதலில் இருந்தது. காவிரி நதி நீர்ப்…
-
- 0 replies
- 408 views
-
-
மறுபரிசீலனை முடிவுகள் ஜோர்ஜியாவிலும் பைடனின் வெற்றியை உறுதிப்படுத்தியது அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சுமார் 5 மில்லியன் வாக்குகள் ஜோர்ஜியாவில் பதிவாகிய பின்னர் மாநில தேர்தல் அதிகாரிகள், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் ஜோர்ஜியாவில் ஜனாதிபதி ட்ரம்பை விட அதிக வாக்குகளை பெற்றதாக உறுதிப்படுத்தினர். தணிக்கை செய்யப்பட்ட முடிவுகளின்படி, பைடன் 12,284 வாக்குகள் முன்னிலை வகித்த ஜோர்ஜியா மாநிலத்தில் தேர்தல் வாக்களிப்பின் முடிவில் பொதுமக்களின் நம்பிக்கையை உறுதி செய்வதற்காக, தணிக்கைச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக பதிவான வக்குகளை மறுபரிசீலனை செய்ய மாநிலச் செயலாளர் உத்தரவிட்டார். இதன் விளைவாக முன்னர் வெளியான ஜோர்ஜியா தேர்தல் முடிவுகளில் 0.0099 சதவீதம் மாத்திரம் …
-
- 0 replies
- 592 views
-
-
சாலமன் தீவில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை ஆஸ்திரேலியா அருகில் உள்ள சாலமன் தீவுப் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 8-ஆக பதிவாகியுள்ள நிலையில், அங்கு சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. சாலமான்: ஆஸ்திரேலியாவுக்கு மேலே பாப்புவா தீவுக்கு அருகில் உள்ளது சாலமன் தீவு. சாலமன் தீவுப் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 8-ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க வானியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி சுமார் 11 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 8-ஆ…
-
- 0 replies
- 512 views
-
-
இலங்கை விவகாரம் :: சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறையை உருவாக்குமாறு பிரிட்டன் பிரதமருக்கு அழைப்பு.! இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்ந்த கடுமையான சர்வதேச குற்றங்களை விசாரித்து வழக்குத் தொடர ஏதுவாக ஒரு சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையை (IIM) உருவாக்குமாறு பிரிட்டன் பிரதமரிடம் அந்நாட்டு லிபரல் டெமோக்ரடிக் கட்சியின் தலைவா் எட் டேவி கோரிக்கை விடுத்துள்ளார். 11 ஆண்டுகளுக்கு முன்னர் நிறைவடைந்த ஆயுதப் போராட்டத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கான சர்வதேச பொறிமுறைகளை ஏற்க இலங்கை தொடர்ச்சியாக மறுப்புத் தெரிவித்து வருகிறது. அத்துடன், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் ஏற்க மறுத்து அதிலிருந்து இலங்க…
-
- 0 replies
- 363 views
-
-
ஆப்கானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற வேண்டிய நேரம் வந்து விட்டது: ட்ரம்புக்கு தலிபான்கள் எச்சரிக்கை கடிதம் 2017-01-27 10:55:07 ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டியதற்கான நேரம் வந்துவிட்டது என ட்ரம்ப்புக்கு தலி பான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தலிபான் அமைப்பு, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு எழுதிய கடிதத்தை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அந்தக் கடிதத்தில் தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் சைபிஹுல்லா முஜாஹித், "அமெரிக்கப் படைகள் ஆப்கானில் உள்ளவரை அங்கு அமைதி ஏற்படாது. அயல்நாட்டு ஆதிக்கத்திலிருந்து விடுதலையடைவ…
-
- 0 replies
- 250 views
-
-
பறக்கும் விமானத்திலிருந்து தூக்கியெறியப்பட்ட 3 சடலங்கள்: பதற வைக்கும் சம்பவம் மெக்சிகோவில் பறக்கும் விமானத்திலிருந்து மூன்று நபர்களின் சடலங்கள் தூக்கி வீசப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவின் Sinaloa மாகாணத்தில் நேற்று காலையில் ஒரு விமானம் வானத்தில் பறந்து கொண்டிருந்தது. அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த விமானத்தில் இருந்து மூன்று நபர்கள் கீழே தள்ளப்பட்டனர். மூன்று பேருமே கொலை செய்யப்பட்டு கீழே தள்ளபட்டனர். அதில் ஒருவரின் சடலம் ஒரு மருத்துவமனை கட்டிடத்தின் மேலே விழுந்தது. மீதி இருவரின் சடலங்கள் அங்கிருந்த ஒரு வீட்டின் வாசலில் விழுந்துள்ளது. இது குறித்து கூறிய பொலிசார், இந்த மூவரும் ம…
-
- 0 replies
- 493 views
-
-
டமாஸ்கஸ் புறநகர் பகுதிகளை நோக்கி இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் – சிரியா தலைநகர் டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதிகளை நோக்கி இஸ்ரேலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் சிரியாவின் வான் பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டமாஸ்கஸைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் உள்ள தளங்களை குறிவைத்து தாக்கப்பட்ட ஏவுகணைகள் சிலவற்றை அழித்ததாக சிரிய வான் பாதுகாப்பு இராணுவ அறிக்கை தெரிவிக்கின்றது. இரண்டு வீரர்கள் காயமடைந்தனர் மற்றும் சில பொருள் இழப்புகள் ஏற்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் லெபனானுக்குச் செல்லும் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளின் கப்பலை இலக்காகக் கொண்டு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக மனித உ…
-
- 0 replies
- 158 views
-
-
புர்கினா ஃபாசோ உணவு விடுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருபது பேர் கொல்லப்பட்டுள்ளனர்; கடந்த சனிக்கிழமை அமெரிக்காவின் ஷார்லட்ஸ்வில் நகரில் வன்முறையுடன் நடைபெற்ற பேரணியை அடுத்து வெள்ளையின மேலாதிக்க எண்ணம் கொண்டவர்களை வெள்ளை மாளிகை கண்டித்துள்ளது! மற்றும் உலகளவில் ஊதியத்துடனான மகப்பேறு விடுப்பில்லாத மூன்று நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று! அந்த நிலை மாறுமா? என்பதை ஆராயும் செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 221 views
-
-
பாராளுமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயார் ஆகிவருகின்றன. பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 4 வட மாநில தேர்தலில் அந்த கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனால் அரசியல் கட்சிகளின் பார்வை பா.ஜனதா மீது திரும்பியுள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்த கட்சிகள் இந்த முறை கூட்டணி அமைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ் நாட்டிலும் பா.ஜனதா முக்கிய அரசியல் கட்சிகளை தனது கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பா.ஜனதாவுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார். மோடி, பிரதமர் ஆவதற்குரிய ஒளிமயமான எதிர்காலம் தெரிகிறது என்றும் சமீபத்தில் கூறி இருந்தார். இந்த நிலையில் தமிழ்நாட்டி…
-
- 0 replies
- 483 views
-
-
சிரியாவில் இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் பக்கத்தில் நான்காயிரம் ரஷ்ய பிரஜைகள் சண்டையிடுவதாக விலாடிமீர் பூட்டீன் தெரிவித்துள்ளார். வடக்கு காக்கஸ்ஸில் உள்ள ரஷ்யாவின் டகெஸ்டன் குடியரசை சேர்ந்தவர்களே இதில் அதிகம். ஐ எஸ்ஸுக்கான ஆட்சேர்ப்பு களமாக அது மாறியுள்ளது. ஆயிரத்து இருநூறு 'degastanகாரர்கள்' சிரியாவுக்கு சென்றுள்ளதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். இஸ்லாமிய தேசத்துக்காக போராடச் சென்ற ஆட்களை மிக அதிகமாகக் கொண்ட பெல்ஜியத்தை விட பத்து மடங்கு அதிகமானோரை டகெஸ்டன் தந்துள்ளது. bbc.com
-
- 0 replies
- 303 views
-
-
வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான குழுவை கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியா காந்தி வியாழக்கிழமை நியமித்துள்ளார். தமிழகத்தில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் குழுவின் தலைவராக மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், உறுப்பினராக சுபாங்கர் சர்கார், மாநிலப் பொறுப்பாளரும், பொதுச் செயலருமான முகுல் வாஸ்னிக், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ். ஞானதேசிகன், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே. கோபிநாத் ஆகியோர் அதில் இடம்பெற்றுள்ளனர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் குலாம் நபி ஆசாத் தலைவராகவும், சுபாங்கர் சர்கார், முகுல் வாஸ்னிக் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இக் குழுவில் பிரதேச கமிட்டி தலைவர் ஏ.வி. சுப்ப…
-
- 0 replies
- 387 views
-
-
தாவூத் இப்ராஹிம் சகோதரர் இக்பால் கஸ்கர், மும்பையில் கைது இந்தியாவால் தேடப்பட்டுவரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம்மின் இளைய சகோதரர், நேற்றிரவு அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டார். 1993-ம் ஆண்டு, இந்தியா மட்டுமல்லாது உலகத்தையே திரும்பிப் பார்க்கவைத்த மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 260 பொதுமக்கள் பலியாயினர். இந்தக் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு மிக முக்கிய காரணம், தாவூத் இப்ராஹிம். அன்று முதல் தாவூத்தை கைதுசெய்திட இந்தியா முயன்றுவருகிறது. எனினும், பாகிஸ்தானின் பாதுகாப்பில் அவர் அங்கு வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. அவர் வேறு வேறு பெயர்களில் வெவ்வேறு வீடுகளில் வசித்துவருவதாக, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் நம்புகின்றன. ஆனால், ப…
-
- 0 replies
- 351 views
-
-
ரஷ்யாவிடம் சரணடைய மாட்டோம்: உக்ரைன் துருப்புக்கள் தொடர்ந்து போராட தீர்மானம்! மேரியோபோல் நகரில் உள்ள படைகள் சரணடைய ரஷ்யா விதித்த காலக்கெடுவை உக்ரைன் நிராகரித்துள்ளது. மாஸ்கோ உள்ளூர் நேரப்படி அதிகாலை 5 மணி முதல் மாலை 4 மணிக்குள் மேரியோபோல் நகரில் உள்ள படைகள் சரணடைய ரஷ்யா காலக்கெடு விதித்தது. உக்ரைனிய அதிகாரிகள் ஆயுதங்களைக் கீழே போட ஒப்புக்கொண்டால், மனிதாபிமான வெளியேற்ற பாதைகள் திறக்கப்படும் என்று ரஷ்யா முன்பு கூறியிருந்தது. இருப்பினும், உக்ரைனியர்கள் ரஷ்யாவின் எச்சரிக்கையை புறக்கணித்து விட்டு, களத்தில் தொடர்ந்து போராடுவதாக உறுதியளித்துள்ளனர். இதுகுறிறத்து உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரேஷ்சக் கூறுகையில், ‘தொடர் சண்டையால் பொதுமக்க…
-
- 0 replies
- 222 views
-
-
1,26,000 பவுண்டு ஏலம் போன ஒரு டைட்டானிக் பயணியின் கடிதம் பகிர்க படத்தின் காப்புரிமைHENRY ALDRIDGE & SON Image captionகடல்நீரின் கரையுடன் உள்ள ஹோல்வர்சனின் கடிதம் டைட்டானிக் கப்பலில் எழுதப்பட்ட கடிதங்களில் ஒன்று, ஏலத்தில் உலகசாதனை படைத்து. விளம்பரம் ஆஸ்கர் ஹோல்வர்சன் என்ற அந்த அமெரிக்க பயணி இருந்து எழுதிய இந்த கடிதம் 1,26,000 பவுண்டுகள் ஏலம் போனது. இந்த கடிதம் 1912 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி எழுதப்பட்டது. அதற்கு அடுத்த நாள், டைட்டானிக் பெரிய பனிப்பாறையில் மோதியது. இந்த கடிதம், டைட்டானிக் கப்பலின் பெயர் பொறித்த குறிப்புத் தாளில் எழுதப்பட்டு, கடலில் மூழ்கி பின்பு கண்டெ…
-
- 0 replies
- 567 views
-
-
மோசமான வானிலையால் மாயமான விமானத்தை தேடும் முயற்சி மீண்டும் கைவிடப்பட்டது! [Thursday, 2014-03-27 19:26:40] விபத்துக்குள்ளானதாகக் கருதப்படும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பாகங்களைத் தேடும் முயற்சி, இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக இன்று மீண்டும் நிறுத்தப்பட்டதாக ஆஸ்திரேலியா அறிவித்திருக்கிறது.வியாழனன்று இந்த விமானத்தைத் தேடும் முயற்சிக்குச் சென்ற ஆறு விமானங்களும் தங்கள் தளத்துக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றன, கப்பல்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றன என்று ஆஸ்திரேலிய அதிகாரிகள் கூறினர். புதன்கிழமையன்று, பிரெஞ்சு செய்கோள் படங்கள் இந்தப் பகுதியில் விமானத்தின் பாகங்களாக இருக்ககூடிய 122 பொருட்கள் மிதப்பதைக் காட்டு…
-
- 0 replies
- 392 views
-
-
அமெரிக்காவுக்குள் வரும் அந்நியர் மீதான எல்லை சோதனைகளை கடுமையாக்கினார் அதிபர் ட்ரம்ப்! நியூயார்க் நகர பயங்கரவாத தாக்குதலில் எட்டுபேர் கொல்லப்பட்டதை அடுத்து நடவடிக்கை!! தாக்குதலாளியை சுட்டுப்பிடித்தது அமெரிக்க காவல்துறை! வன்முறைகளுக்கு நடுவே ஒரு வர்ணஜாலம்! தொடர் குண்டுவெடிப்புகளால் நிலைகுலைந்த ஆப்கனில் வண்ணங்கள் மூலம் நம்பிக்கை விதைக்கும் முயற்சி ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 430 views
-
-
பனாமா பேப்பர்ஸ் முதல் ஆஃப்ஷோர் லீக்ஸ் வரை : அறிய வேண்டிய ரகசிய தகவல்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஜெர்மன் செய்திதாளான சூட்டைச்சே சைடூங் `பாரடைஸ் பேப்பர்ஸ்` - இது அண்மையில் கசிந்த ரகசிக கோப்புகளின் மற்றொரு தொகுப்பு. இந்த தொகுப்பில் முக்கியமான கோப்புகள் அனைத்தும் வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட ஒற்றை சட்ட நிறுவனத்துக்கு உர…
-
- 0 replies
- 394 views
-
-
வட கொரியா மீது... கொண்டுவரப்பட்ட கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு, ரஷ்யா- சீனா எதிர்ப்பு! வட கொரியாவின் சமீபத்திய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளுக்குப் பதிலளிக்கும் வகையில், வட கொரியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை முன்மொழிந்த ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்தன. கடந்த 2006ஆம் ஆண்டு முதல் கொண்டுவரப்பட்ட ஒன்பது முந்தைய தடைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய ரஷ்யாவும் சீனாவும், தற்போது பொருளாதாhரத் தடை தீர்மானத்தை எதிர்த்து முதல்முறையாக வாக்களித்துள்ளன. 15 உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு தீர்மானத்திற்கு ஆதரவாக 13-2 ஆக இருந்தது. ஆனால், ரஷ்யாவும் சீனாவும், தனது வீட்டோ அதிகாரத்…
-
- 0 replies
- 165 views
-
-
உக்ரேன் மோதல் : கொத்துக் குண்டுகள் பயன்படுத்தியது ரஷ்யா - சர்வதேச மன்னிப்புச் சபை உக்ரேன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையிலான மோதல் 110 ஆவது நாளாகவும் தொடர்கிறது. இந்த மோதலில் இரு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். இந்நிலையில், குறித்த மோதலில் வட கிழக்கு உக்ரேனிய நகரமான கார்கிவில் கண்மூடித்தனமான ஷெல் மற்றும் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்தி ரஷ்யா நூற்றுக்கணக்கான பொதுமக்களைக் கொன்றதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. ரஷ்யப் படைகள் 9N210/9N235 கிளஸ்டர் குண்டுகள் மற்றும் சிதறக்கூடிய வெடிமருந்துகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள…
-
- 0 replies
- 219 views
-
-
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள், வரும் 12-ம் தேதி முதல் ஜூலை 13-ம் தேதி வரை தென் அமெரிக்க நாடான பிரேஸிலில் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளை காண வெளிநாடுகளைச் சேர்ந்த 30 லட்சத்து 70 ஆயிரம் ரசிகர்கள் பிரேஸிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கால்பந்து விளையாட்டின் மீது தங்களின் உயிரையே வைத்திருக்கும் பிரேஸில் ரசிகர்களுக்கு, உலகக் கோப்பை கால்பந்து போட்டியே தங்கள் நாட்டில் நடக்கிறதென்றால், கேட்கவா வேண்டும்? மகிழ்ச்சியில் திளைத்து வரும் அந்நாட்டு ரசிகர்கள், போட்டி தொடங்கும் நாளை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கின்றனர். அவர்கள் மட்டுமல்ல, அந்நாட்டில் உள்ள 10 லட்சம் பாலியல் தொழிலாளிகளும் போட்டியை வரவேற்க தயாராகி வருகின்றனர். பெலோ ஹாரிஸான்டே நகரைச் சேர்ந்த பெயர் வெளியிட விரு…
-
- 0 replies
- 434 views
-
-
நாளிதழ்களில் இன்று: இனி கடல் வழியாக ஹஜ் புனிய யாத்திரை செல்லலாம் முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (செவ்வாய்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமணி: இணையவழி குற்றங்களுக்கு தீர்வு காண்பதற்கு காவல் துறையினர் அதிமுக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மாநில போலீஸ் உயரதிகாரிகள் மாநாட்டில் பிரதமர் மோதி அறிவுறுத்தியுள்ளதாகத் தினமணி செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவிலிருந்து ஹஜ் புனிய யாத்திரை மேற்கொள்பவர்களில் ஒரு பகுதியினரை கடல் வழியாக மெக்காவுக்கு அனுப்பும் இந்திய அரசின் திட்டத்திற்கு செளதி அரேபியா ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதனால் யாத்திரை செல்லும் இஸ்லாமியர்களின் …
-
- 0 replies
- 255 views
-
-
ராஜீவ் கொலையில் விடுதலைப்புலி பத்மநாபனை விசாரிக்ககோரி வழக்கு: மத்திய அரசுக்கு நோட்டீஸ் சென்னை ஐகோர்ட்டில், மைலாப்பூரை சேர்ந்த ஜெபமணி மோகன்ராஜ் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘’முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை புலித் தலைவர் பிரபாகரன், அவரது நெருங்கிய நண்பரும், விடுதலை புலி இயக்கத்தை சேர்ந்தவருமான கே.பி. என்று அழைக்கப்படும் கே.பத்மநாபன் என்ற குமரன் பத்மநாபன், பொட்டுஅம்மான் உட்பட பலரை சி.பி.ஐ. பல்நோக்கு புலனாய்வு பிரிவு போலசார் தேடி வந்தனர். இந்த நிலையில், கே.பி. என்ற கே.பத்மநாபன் 2009-ம் ஆண்டு மலேசியாவில் வைத்து இலங்கை ராணுவம் கைது செய்தது. ராஜீவ்காந்தி கொலையில் பத்மநாபன்தான், நிதி உதவி வழங்கும் பொருளாளராக செயல்பட்டுள்ளார். இந்த கொலையில் நடந…
-
- 0 replies
- 482 views
-
-
வடகொரியாவுக்கு விதிக்கப்பட்ட தடையை மீறும் சரக்கு கப்பலை வழிமறித்து சோதனையிட அமெரிக்கா முடிவு அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான யுஎஸ்சிஜிசி மிட்கெட் கப்பல். - (கோப்பு படம்) வடகொரியாவுடன் வர்த்தகம் செய்ய விதிக்கப்பட்ட தடை மீறப்படுவதை கண்காணிக்க, சரக்கு கப்பல்களை இடைமறித்து சோதனையிட அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து, அந்த நாட்டுக்கு ஐநா பொருளாதார தடை விதித்துள்ளது. இதுதவிர அந்த நாட்டுடன் கச்சா எண்ணெய், நிலக்கரி உட்பட சில குறிப்பிட…
-
- 0 replies
- 300 views
-
-
நாளிதழ்களில் இன்று: ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து திரண்ட 50 ஆயிரம் மக்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி இந்து (தமிழ்) - `தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் கடையடைப்பு` படத்தின் காப்புரிமைTWITTER/TN YOUNGSTERS TEAM தூத்துக்குடி சிப்காட்டில் ஸ்டெர்லைட் தாமிர உர…
-
- 0 replies
- 269 views
-