உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26626 topics in this forum
-
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆக்கிரமிப்பில் உள்ள குண்டூஸ் நகரில் உள்ள ஓர் பொதுமக்கள் மருத்துவமனை மீது அமெரிக்க ஆளில்லா விமானங்கள் நேற்று சனிக்கிழமை நடத்திய குண்டுத் தாக்குதலில் அம்மருத்துவ ஊழியர்கள், நோயாளிகள் உள்ளிட்ட 19 பேர் கொல்லப்பட்டனர். உலகெங்கும் இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, தனது ஆழ்ந்த அனுதாபத்தை வெளியிட்டுள்ளதுடன் விரைவில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். எனினும் இது ஒரு கொலைக் குற்றம் என ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=141638&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 192 views
-
-
05 Aug, 2025 | 10:31 AM காலத்தை வென்ற சிங்கப்பூர் தமிழ் மக்களின் வரலாற்று ஆவணமான ‘சிங்கப்பூர் தமிழர்’ கலைக்களஞ்சியத்தை சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம் மின்தளத்தில் வெளியிட்டுள்ளார். சிங்கப்பூரில் தேசிய நூலக சபை கட்டிடத்தில் உள்ள டிராமா சென்டரில் சனிக்கிழமை (02) நடைபெற்ற விழாவில், 'சிங்கப்பூர் தமிழர் கலைக்களஞ்சியத்தை அந்நாட்டு ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம் மின்தளத்தில் வெளியிட்டுள்ளார். 200 ஆண்டு கால வரலாற்று ஆவணமான ‘சிங்கப்பூர் தமிழர்’, சமூகம், கலை, பண்பாடு, கல்வி, அரசியல் என சிங்கப்பூர் தமிழ் மக்களின் வாழ்வியல் களம் குறித்த பதிவுகளைக் கொண்டுள்ளது. சிங்கப்பூர் தமிழர்க் கலைக் களஞ்சியம் எடுத்துரைக்கும் பல தகவல்களில் தமிழ்ச் சமூகம் கண்டுவந்த சமூகச் சீர்திருத்தங்கள…
-
- 0 replies
- 192 views
- 1 follower
-
-
இன்றைய (24/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * அதிகபட்ச ஆபத்தை பிரிட்டன் எதிர்கொள்வதாக அறிவிப்பு; மேன்செஸ்டர் குண்டுதாரி குறித்து கூடுதல் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிப்பு. * பெண்களுக்கு எதிரான வன்முறையை குறைக்கப்போராடும் ஆண்கள்; பெண்களை பாதுகாக்க ஆப்ரிக்காவில் வித்தியாசமான முன்னெடுப்பு. * அமெரிக்க அதிபரின் கொள்கைகள் மெக்ஸிகோ கார் உற்பத்தியை பாதிக்குமா? உலகின் நான்காவது பெரிய கார் உற்பத்தி நாட்டிலிருந்து நேரடி தகவல்கள்.
-
- 0 replies
- 192 views
-
-
ரஷ்யாவுக்கு... ஆதரவுக் கரத்தை நீட்டுமா சீனா? அச்சத்திற்கு மத்தியில் பைடன் அவசர பேச்சுவார்த்தை! ரஷ்யாவுடனான சீனாவின் உறவு மற்றும் உக்ரைனில் நிலவிவரும் போரில் சீனாவின் நிலைப்பாடு குறித்து வளர்ந்து வரும் அமெரிக்க கவலைகளுக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கிற்கிடையில் பேச்சுவார்த்தையொன்று நடைபெறவுள்ளது. இருநாட்டு தலைவர்களும் நாளை (வெள்ளிக்கிழமை) 13:00 மணிக்கு தொலைபேசியில் உரையாடவுள்ளனர். கடந்த நவம்பர் மாதத்திற்கு பிறகு இவரும் பேசவுள்ளனர். ரஷ்யாவிற்கு இராணுவ ஆதரவை வழங்குவது குறித்து சீனா பரிசீலித்து வருவதாக கூறும் அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு மத்தியில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. முன்னதாக அமெரிக்க …
-
- 0 replies
- 192 views
-
-
உக்ரேனில் வைத்தியசாலைகள் மீதான தாக்குதல் அதிகரிப்பு - உலக சுகாதார ஸ்தாபனம் உக்ரேனில் வைத்தியசாலைகள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உக்ரேனில் வைத்தியசாலைகள், நோயாளர் காவு வண்டி மற்றும் வைத்தியர்கள் மீது 70 க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதோடு, குறித்த தாக்குதல் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகிறது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. சுகாதார சேவைகள் மீது தாக்குதல் நடத்துவதென்பது நவீன யுத்தத்தில் மூலோபாயம் மற்றும் தந்திரங்களின் ஒரு பகுதியாக மாறிவிட்டது எனவும் தெரிவித்துள்ளது. உக்ரேனில் மார்ச் 8 ஆம் திகதி கார்கிவ் நகரின் தெற்கே உள்ள இசியம் என்ற இடத்தில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட மத்த…
-
- 0 replies
- 192 views
-
-
அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில், ஜனநாயக கட்சியின் சார்பாக நிறுத்தப்படும் வேட்பாளர் நியமனத்தை வென்றுள்ள ஹிலாரி கிளிண்டன் தனது வெற்றிக்கு உதவிய ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.புரூக்ளினில் நடைபெற்ற ஒரு பேரணியில் உரையாற்றிய ஹிலாரி, அதிபர் தேர்தலில் இது வரை எந்த பெரிய அரசியல் கட்சியின் சார்பாகவும் பெண்கள் வேட்பாளராகப் போட்டியிட்டதில்லை என்றும், பெண்களுக்கு இது ஒரு மைல் கல்லாக அமையும் என்று குறிப்பிட்டார். நியூ ஜெர்சி மற்றும் நியூ மெக்சிகோ ஆகிய மாநிலங்களில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான முதன்மைத் தேர்தல்களில் வென்ற பிறகு அங்கு ஹிலாரி உரையாற்றினார்.தனது போட்டியாளர் பெர்னி சாண்…
-
- 0 replies
- 192 views
-
-
'சிங்கத்தை தழுவ கனவு' - தடுப்புகளை தாண்டி குதித்த இளைஞருக்கு என்ன நேர்ந்தது? பட மூலாதாரம்,Cortesía/Parque Zoobotânico Arruda Câmara/AFP கட்டுரை தகவல் ஜாஷுவா செய்சஸ் பிபிசி நியூஸ் பிரேசில் 6 மணி நேரங்களுக்கு முன்னர் எச்சரிக்கை: உள்ளடக்கம் சங்கடத்தை ஏற்படுத்தலாம் பிரேசிலில் சிங்கங்கள் அடைத்து வைக்கப்படும் இடத்திற்குள் நுழைந்த 19 வயதான கெர்சன் டி மெலோ மச்சாடோ என்கிற இளைஞர் பெண் சிங்கம் ஒன்று தாக்கியதில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பிரேசிலின் ஜொவா பெசோவா நகரில் உள்ள அரூடா கமாரா தேசிய பூங்காவில் நடைபெற்றுள்ளது. பார்வையாளர்கள் பதிவு செய்த காணொளிகளில் அந்த இளைஞர் மரத்தின் உதவியுடன் ஏறி வேலிகளை மற்றும் தடுப்புகளைக் கடந்து குதித்து சிங்கம் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குள…
-
- 0 replies
- 192 views
- 1 follower
-
-
இந்த வாரம் பல உயர்மட்ட விளக்கங்கள் மற்றும் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் அமெரிக்க படைபலத்தை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, வெனிசுலாவில் ஒரு நடவடிக்கை எடுப்பது குறித்து தனது முடிவை எடுத்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். வெனிசுலாவிற்குள் இராணுவ நடவடிக்கைகளுக்கான விருப்பங்கள் குறித்து இந்த வாரம் டிரம்பிற்கு அதிகாரிகள் விளக்கினர், ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை வெளியேற்றுவதற்கான ஒரு பரந்த பிரச்சாரத்தைத் தொடங்குவதன் அபாயங்கள் மற்றும் நன்மைகளை அவர் எடைபோடுகையில், நான்கு ஆதாரங்கள் CNN இடம் தெரிவித்தன. இதற்கிடையில், பென்டகன் "ஆபரேஷன் சதர்ன் ஸ்பியர்" என்று முத்திரை குத்தியதன் ஒரு பகுதியாக, அமெரிக்க இராணுவம் ஒரு டஜன் போர்க்கப்பல்களையு…
-
- 1 reply
- 192 views
- 1 follower
-
-
சிம்பாப்வேயில் கொவிட்-19 தொற்று தீவிரம்: சிறையிலுள்ள 3,000க்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை! சிம்பாப்வேயில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) இரண்டாவது தொற்றலை தீவிரமடைந்துள்ள நிலையில், சிறையிலுள்ள 3,000க்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை செய்ய அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 41ஆம் ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடிய சிம்பாப்வே 3,000க்கும் மேற்பட்ட கைதிகளை ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கத் தொடங்கியுள்ளது. இதன்படி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 320 கைதிகளை அந்நாட்டு அரசாங்கம் விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் சிறைச்சாலைகள் நிரம்பிவழிவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சிம்பாப்வேயில் கொரோனா வைரஸ் தொற்றினால், 37,751பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 1,…
-
- 0 replies
- 191 views
-
-
அர்ச்சனா சுக்லா மற்றும் நிகில் இனாம்தார் பதவி,பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா மீதான டொனால்ட் டிரம்பின் பதிலடி வரி விதிப்பு இன்னும் ஒரு மாதத்தில் அமலாகும் சாத்தியக்கூறு உள்ள நிலையில் லட்சக்கணக்கான அமெரிக்கர்களின் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கடந்த வாரம் திடீர் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டார். வர்த்தக ஒப்பந்தம் குறித்து அவர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா விதிக்கும் வரிகளுக்குப் பதிலடியாக ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் இந்தியா மீது வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் பின்னர் அறிவித்தார். இந்தியாவின் முக்கியமான ஏற்றுமதித் தொழில்களாக இருக்கும் மருந்து பொருட்கள் ஏற்றுமதி மீதான…
-
- 0 replies
- 191 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி 5 ஜூன் 2025 இந்தியத் தொழிலதிபர் கௌதம் அதானியின் நிறுவனங்கள், முந்த்ரா துறைமுகம் வழியாக இரானிய திரவ பெட்ரோலிய எரிவாயுவை (எல்பிஜி) இந்தியாவிற்கு இறக்குமதி செய்தாரா இல்லையா என்பது குறித்து அமெரிக்க அதிகாரிகள் விசாரித்து வருவதாக, 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' என்ற அமெரிக்க செய்தித்தாள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால் அதானி எண்டர்பிரைசஸ், இந்த அறிக்கையை "ஆதாரமற்றது" என்று கூறி மறுத்துள்ளது. "இந்த விஷயத்தில் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறித்து எங்களுக்குத் தெரியாது" என அதானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்துக்கும், பாரசீக வளைகுடாவுக்கும் இடையில் பயணி…
-
- 0 replies
- 191 views
- 1 follower
-
-
அமெரிக்க க்றீன் கார்ட் விசா லொட்டரி திட்டம் இடைநிறுத்தம் - ட்ரம்ப் அதிரடி உத்தரவு 19 Dec, 2025 | 05:38 PM அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டதையடுத்து, அமெரிக்க க்ரீன் கார்ட் விசா லொட்டரி திட்டத்தை நிறுத்துவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இத்துப்பாக்கிச் சூட்டின்போது போர்த்துக்கீசரான நெவ்ஸ் வாலண்டே என்ற நபர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். அந்த நபர் 2017ஆம் ஆண்டில் பன்முகத்தன்மை லொட்டரி விசா திட்டத்தின் (DV1) மூலம் அமெரிக்காவிற்குச் சென்று, அங்கு க்ரீன் கார்ட் பெற்றுக்கொண்ட ஒருவரென தெரிவிக்கப்படுகிறது. இதனைக் கருத்திற்கொண்டே ட்ரம்ப், இவ்விசா லொட்டரி திட்டத்தை நிறுத்த நடவடிக்கை …
-
- 1 reply
- 191 views
- 1 follower
-
-
பெண்கள், சிறுவர்கள் உட்பட 40 பேர் கழுத்தறுத்து படுகொலை ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் உள்ள உம் அல்–ஹவுஸ் நகரில் இருந்து தப்பிப்பதற்காக பெண்கள், சிறுவர்கள் உள்பட 40 பேர் சிரிய படையினர் வசம் உள்ள பகுதிகளை நோக்கி சென்றவேளை ஐ.எஸ். தீவிரவாதிகள் அனைவரையும் கொடூரமாக கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளனர். சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டுப்போர் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் முயற்சியால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து, அங்கு கடந்த பெப்ரவரி மாதம் முதல் யுத்த நிறுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். இயக்கத்தினர் மீது தாக்குதல்கள் தொடர்கின்றன. இந்த நிலையி…
-
- 0 replies
- 191 views
-
-
200 சீன மோசடி சந்தேக நபர்கள் மியன்மாரிலிருந்து நாடு திரும்பினர்! மியன்மாரில் இருந்து மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 200 சீன பிரஜைகளின் முதல் குழுவை திருப்பி அனுப்பும் பட்டய விமானம் தாய்லாந்து வழியாக கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள நான்ஜிங்கில் வியாழக்கிழமை பிற்பகல் தரையிறங்கியது. சீனாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சகத்தின்படி, தொலைத்தொடர்பு-இணைய மோசடிகளைத் தடுக்க சீனா, தாய்லாந்து மற்றும் மியன்மார் இடையேயான பன்னாட்டு சட்ட அமலாக்க முயற்சிகளில் இது ஒரு மைல்கல் மற்றும் குறிப்பிடத்தக்க சாதனையாகும். தாய்லாந்து-மியன்மார் எல்லைப் பகுதியில் மோசடி குற்றங்களில் ஈடுபட்ட 800-க்கும் மேற்பட்ட சீன சந்தேக நபர்கள் அடுத்த மூன்று நாட்களுக்குள் வாடகை விமானங்களில் ஜியா…
-
- 0 replies
- 191 views
-
-
குவைத்தில் கொடுமைக்குள்ளாகும் வெளிநாட்டு பணியாளர்கள், தண்ணீரால் போர் உருவாகும் சூழ்நிலை மற்றும் விண்வெளியில் பறக்கவுள்ள மாணவர்களின் தயாரிப்புகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 191 views
-
-
ரஷ்யா இராணுவத்தை சமாளிக்க... உக்ரைனுக்கு, ஆயுதங்கள் வழங்க ஜேர்மனி முடிவு ரஷ்யாவை எதிர்கொள்ள ரொக்கெட் லொஞ்சர் உள்ளிட்ட ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கவுள்ளதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ள பல்வேறு நாடுகள் உக்ரைனுக்கு பொருளுதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன. அந்தவகையில் ஜேர்மனி ரொக்கெட் லொஞ்சர், ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை அனுப்பி வைக்கவுள்ளது. https://athavannews.com/2022/1269425
-
- 0 replies
- 191 views
-
-
* அமெரிக்கா நிராகரிக்குமானால் காலநிலை ஒப்பந்தத்தை காப்பாற்ற புது வியூகம் வகுக்க சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் முயற்சி, * வங்கதேசத்தை தாக்கிய புயல்; இலங்கையில் பெய்த பெருமழை! பலர் பலி; பல்லாயிரக்கணக்கானோர் வீடிழந்து தவிப்பு மற்றும் * உலகின் தனித்துவமான புகைப்படங்கள்; உலகின் பிரபல புகைப்பட இல்லத்திலிருந்து வரும் செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 191 views
-
-
25 NOV, 2024 | 11:07 AM லெபனானிலிருந்து ஹெஸ்புல்லா அமைப்பினர் 250க்கும் மேற்பட்ட ரொக்கட்களை இஸ்ரேலை நோக்கி ஏவியுள்ளனர் என இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். செப்டம்பரில் இஸ்ரேல் ஹெல்புல்லா அமைப்பினருக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்த பின்னர் ஹெஸ்புல்லா அமைப்பினர் மேற்கொண்ட கடும் ரொக்கட் தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. ஹெஸ்புல்லா அமைப்பின் ரொக்கட்கள் இஸ்ரேலிய தலைநகரையும்,வடக்கு மத்திய இஸ்ரேலையும் தாக்கியுள்ளன இதன் காரணமாக பலர் காயமடைந்துள்ளனர். மத்திய பெய்ரூட்டில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 30 பேர் உயிரிழந்த நிலையிலேயே ஹெஸ்புல்லா அமைப்பு இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இஸ்ரேலிற்கும் ஹெஸ்புல்…
-
- 0 replies
- 191 views
- 1 follower
-
-
சவுதி அரேபியாவின்... ஜசான் விமான நிலையம் மீது ஆளில்லா விமானத் தாக்குதல்: குறைந்தது 10பேர் காயம்! ஏமன் எல்லைக்கு அருகில் உள்ள சவுதி அரேபியாவின் ஜசான் நகரில் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நடந்த தாக்குதல்கள் கிங் அப்துல்லா விமான நிலையத்தை குறிவைத்ததாக சவுதி ஊகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் குறைந்தது ஐந்து பேருக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டன, மற்ற ஐந்து பேரின் நிலை உடனடியாக தெரியவில்லை. முதல் ஏவுகணை ஆளில்லா விமானத்திலிருந்து வீசப்பட்டது. இது விமான நிலையத்தின் முகப்பு ஜன்னல்களை உடைத்தது. இதில் காயமடைந்தவர்களில் ஆறு சவுதிகள், மூன்று பங்களாதேஷ் பிரஜைகள்…
-
- 0 replies
- 191 views
-
-
பயணிகள் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பிற்காக பறந்த போர் விமானங்கள்...நடுவானில் அதிரடி சம்பவம் (வீடியோ இணைப்பு) [ செவ்வாய்க்கிழமை, 26 மே 2015, 07:29.57 மு.ப GMT ] பிரான்ஸ் நாட்டு பயணிகள் விமானத்திற்கு விடுத்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, நடுவானில் பறந்துக்கொண்டிருந்த பயணிகள் விமானம் போர் விமானங்களின் பாதுகாப்புடன் தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டிற்கு சொந்தமான Flight AF022 என்ற பயணிகள் விமானம் தலைநகர் பாரீசிலிருந்து அமெரிக்காவில் உள்ள நியூயோர்க் நகருக்கு நேற்று புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்துக்கொண்டு இருந்தபோது, அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் கூட்டு கண்காணிப்பு நிறுவனமான NORAD அலுவலகத்திற்கு ஒரு அ…
-
- 0 replies
- 191 views
-
-
பிரான்ஸின் தெற்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மத்திய தரைக்கடலை ஒட்டிய பிரான்ஸின் தென்கிழக்கு கரையோரப் பகுதியில் கடும் இடியுடன் பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட இந்த வெள்ளப் பெருக்கில் மேலும் 6 பேர் காணாமல் போயுள்ளனர். முதியோர் இல்லம் ஒன்று வெள்ளத்தால் சூழப்பட்டதில் வயோதிகர்கள் மூவர் உயிரிழந்தனர். இன்னொரு பெண் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கி உயிரிழந்துள்ளார். அங்கு போக்குவரத்து வசதிகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மின்சார துண்டிப்பினாலும் ஆயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=141623&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 191 views
-
-
பாலஸ்தீனியர்களிற்கு எதிரான வன்முறைகளை தூண்டும் விதத்தில் கருத்துக்கள் - இரண்டு இஸ்ரேலிய அமைச்சர்களிற்கு எதிராக பிரிட்டன் உட்பட ஐந்து நாடுகள் தடை 11 JUN, 2025 | 12:31 PM ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் உள்ள பாலஸ்தீனியர்களிற்கு எதிரான வன்முறைகளை தூண்டும் விதத்தில் தொடர்ச்சியாக கருத்துக்களை வெளியிட்ட இஸ்ரேலின் இரண்டு வலதுசாரி அமைச்சர்களிற்கு எதிராக பிரிட்டன் உட்பட நான்கு நாடுகள் தடைகளை விதித்துள்ளன. பிரிட்டன் நோர்வே கனடா அவுஸ்திரேலிய நியுசிலாந்து ஆகிய நாடுகளும் பிரிட்டனுடன் இணைந்து தடைகi விதித்துள்ளன. ஆகிய இரண்டு இஸ்ரேலிய அமைச்சர்களும் பிரிட்டனிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்படும் மேலும் பிரிட்டனில் உள்ள இருவரினதும் சொத்துக்களும் முடக்கப்படும். இருவரும் கடும் வன்முறைகளை த…
-
- 0 replies
- 191 views
- 1 follower
-
-
எல்லைப் பகுதியில் கூடுதல் படையினரை பிரான்ஸ் நிறுத்துகிறது கடந்த வெள்ளிக்கிழமை பிரசல்ஸ் நகரில் ஜிகாதி தீவிரவாதி எனும் சந்தேகத்தின் பேரில் சாலாஹ் அப்தஸ்லாம் கைது செய்யப்பட்ட நிலையில், அந்நாட்டுடனான எல்லைப் பகுதிக்கு பிரான்ஸ் கூடுதல் துருப்புக்களை அனுப்புகிறது. பிரான்ஸில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதம் பாரிஸில் 130 பேர் உயிரிழக்க காரணமானத் தீவிரவாதத் தாக்குதலில் அப்தஸ்லாம் தொடர்புபட்டிருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுகிறது. பிரான்ஸில் தீவிரவாதத் தாக்குதல் நடைபெறும் எனும் அச்சுறுத்தல் மிகப் பெரிய அளவில் உள்ளது என உள்துறை அமைச்சர் பெர்ணாட் காசந்யூவே தெரிவித்துள்ளார். இதனிடையே அப்தஸ்லாமின் கூட்டாளிகள் ஐரோப்பாவ…
-
- 0 replies
- 191 views
-
-
சிரியாவின் கிழக்கு கூட்டாவில் கிளர்ச்சியாளர்கள் - அரசுப் படைகள் கடும் மோதல்,தென்கொரியாவில் களைகட்டியது குளிர்கால ஒலிம்பிக் தொடக்க விழா உள்ளிட்ட பல்வேறு உலகச் செய்திகளை இங்கே பார்க்கலாம்.
-
- 0 replies
- 191 views
-
-
ஆயுதங்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும்.... 6 ரயில் நிலையங்களை, தாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள ஆறு ரயில் நிலையங்களை தாக்கியுள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மேற்கத்திய நாடுகள் உக்ரேனியப் படைகளுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கு குறித்த ரயில் நிலையங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் ரஷ்யா கூறியுள்ளது. மேலும் குறித்த ரயில் நிலையங்களின் மின்சார விநியோகங்களை குண்டுவீசித் தாக்கியதாக அமைச்சு கூறியுள்ளது. இருப்பினும் குறித்த ஆறு ரயில் நிலையங்கள் ஊடாக உக்ரேனியப் படைகளுக்கு எந்த ஆயுதங்கள் வழங்கப்பட்டன என்பதை பாதுகாப்பு அமைச்சு வெளிப்படுத்த தவறிவிட்டது. இதேவேளை வெடி பொருட்கள், பீரங்கிகளை சேமித்து வைத்தி…
-
- 0 replies
- 191 views
-