உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26603 topics in this forum
-
சன்னை: பெரியார் சிலைகளையும், ஆன்மீக தலைவர்கள், கடவுள் சிலைகளையும் சேதப்படுத்துவோரை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று முதல்வர் கருணாநிதி மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் வள்ளுவர் விருது க.ப.அறவாணனுக்கும், பாரதியார் விருது தமிழருவி மணியனுக்கும், பாரதிதாசன் விருது கா.செல்லப்பனுக்கும், திரு.வி.க. விருது க.திருநாவுக்கரசுக்கும், அம்பேத்கர் விருது தொல். திருமாவளவனுக்கும், பெரியார் விருது நடிகர் சத்யராஜுக்கும், காமராஜர் விருது ஏ.எஸ். பொன்னம்மாளுக்கும், அண்ணா விருது ஆர்.எம்.வீரப்பனுக்கும் வழங்கப்பட்டது. விருதுகளை வழங்கி முதல்வர் கருணாநிதி பேசுகையில், வசை பாடியவர்களுக்கு விருது…
-
- 0 replies
- 779 views
-
-
சென்னை: சென்னையிலிருந்து துபாய் செல்லும் விமானத்தில் பயணம் செய்த பெண்ணிடமும் அவரது மகளிடமும் மிகவும் கடுமையாகவும், அநாகரீகமாகவும் நடந்து கொண்ட குடியுரிமை (இமிகிரேஷன்) அதிகாரிகளுக்கு எதிராக விமான பயணிகள் ஒன்று திரண்டதால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. துபாயில் உள்ள பிரிட்டிஷ் ஆயில் நிறுவனத்தில் அதிகாரிகளாக இருப்பவர்கள் கிளிண்டன், பெத்தேல் தம்பதியினர். அவர்கள் தங்களது மகள் கெல்லி யுடன் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாட சென்னை வந்தனர். பரங்கிமலையில் உள்ள உறவினர் வீட்டில் கிறிஸ்துமஸைக் கொண்டாடி விட்டு பெத்தேலும், கெல்லியும் துபாய் திரும்ப இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் டிக்கெட் எடுத்திருந்தனர். சனிக்கிழமையன்று டிக்கெட் உறுதி செய்யப்படாததால், ஞாயிற்றுக்கிழமை…
-
- 0 replies
- 922 views
-
-
கிரடிட்கார்ட் மோசடி மூன்று இலங்கையர் தாய்லாந்தில் கைது! சர்வதேச ரீதியில் கிரடிட்கார்ட் மோசடியில் ஈடுபட்டு வந்த இலங்கையர்கள் மூவரை தாய்லாந்து புக்கெட் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் குறித்து பொலிஸாருக்கு கிடை த்த தகவலையடுத்து புக்கெட் நகரில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 5,000இற்கும் அதிகமான கிரடிட் கார்ட்கள் மூலம் பல மில்லியன் டொலர் மோசடி செய்துள்ளனர் என விசாரணைகளில் தெரியந்துள்ளது. கைது செய்யப்பட்டவரின் வாடகைக் காரிலிருந்து 1750 கிரெடிட் கார்ட்களை கைப்பற்றியதாக புக்கெட் பொலிஸ் லெப்டினன்ட் கேர்ணல் பூன்லெட் ஒன்ங்கெலன்ட் தெரிவித்தார். அதோடு, இவர்கள் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிரடிட் கார்ட்கள் …
-
- 3 replies
- 1.5k views
-
-
துபாயில் ஒரு ‘சீட்டிங்’ தமிழன் ‘திரைகடலோடி திரவியம் தேடு’ என்பதை ‘திருடு’ என்று கில்லாடித்தனமாக மாற்றிப் போட்டு தமிழர்கள், மலையாளிகள், சீக்கியர்கள், தெலுங்கர்கள், பாகிஸ்தானிகள், துபாய்காரர்கள் என பல இனத்துக்காரர்களின் நெற்றியில் பட்டைநாமம் போட்டு ஏமாற்றியிருக்கிறார், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர். இவரிடம் சீட்டுப் போட்டும், இவர் நடத்திய நிதி நிறுவனங்களில் பணம் கட்டியும் ஏமாந்தவர்கள் இப்போது துபாயில் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இன, மொழி பேதமின்றி பலரையும் சீட்டிங் செய்திருக்கும் அந்த பலே கில்லாடி யின் பெயர் குணசேகரன். சீட்டிங் கேஸில் தற்போது சர்வதேச போலீஸ் அவரைத் தேடிக் கொண்டிருக்கிறது. பட்டுக்கோட்டையை பூர்வீகமாகக் கொண்ட குணசேகரன், கடந்த இருபத்தைந்து வர…
-
- 3 replies
- 1.6k views
-
-
சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்குள் பிரவேசித்த இலங்கையர் உட்பட 57பேர் கைது. எழுதியவர் துரை Sunday, 07 January 2007 சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்குள் பிரவேசித்த சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் 57பேர் வடக்கு கிறிஸ் நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கிறிஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பர்மா, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் இவர்கள் சட்டவிரோதமாகப் பயணம் செய்வதற்கு உதவி புரிந்ததாக உள்ளுர் வாசிகள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். துருக்கி வழியாகவே வடக்கு கிறிஸ்நாட்டிற்குள் பிரவேசித்ததாகவும் லண்டன், சுவிஸ்லாந்து, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளுக்கு செல்வதற்காக இந்த பயணத்தை மேற்கொண்டிருப்பதாகவும் கைது செய்யப…
-
- 0 replies
- 766 views
-
-
இளவரசர் வில்லியத்துக்கு திருமணம் மெட்ரோ நாளேடு இங்கிலாந்து இளவரசர் சார்ள்சின் மூத்த மகன் வில்லியம். இவரது காதலி கேத்மிடில்டன். ஸ்கொட்லாந்தில் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது ஒரே வீட்டில் இவர்கள் தங்கியிருந்தபோது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. விரைவில் அவர்கள் திருமணம் நடக்க இருக்கிறது. லண்டன் அரண்மனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொள்ளுமாறு காதலி கேத் மிடில்டனுக்கு அரச குடும்பத்தின் சார்பில் அழைப்பு வந்தது. ஆனால் இதை கேத் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் வில்லியம் கேத் திருமணம் ஜூலை 19 ஆம் திகதி நடக்கும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த திருமண திகதி தொடர்பாக கோடிக்கணக்கில் பணம் கட்டி சூதாட்டமும் தொடங்கி விட்டது. திருமண திகதி பற்றி அரண்மனை …
-
- 0 replies
- 814 views
-
-
சென்னை: சென்னை காவல்துறையினர் சிறப்பாக செயல்பட 9 உறுதிமொழிகளை ஏற்க வேண்டும் என கூறியுள்ளார் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். சென்னை மாநகர காவல்துறையின் 150வது ஆண்டு விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலாம், ஆளுநர் பர்னாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கலாம் பேசுகையில், தேசிய வளர்ச்சியில் காவல்துறையின் பங்கு மிகவும் முக்கியமானது. சிறந்த நிர்வாகம், சிறந்த தொழில் திறன், நவீனமயமாக்கல் ஆகியவற்றின் மூலம் காவல்துறை மேம்பட்டு விளங்க முடியும். ஒவ்வொரு காவல் நிலையத்தில் ஒரு கம்ப்யூட்டர் கண்டிப்பாக இருக்க வேண்டும். புகார்களை அதில் தவறாமல் பதிவு செய்ய வேண்டும். காவல் நிலைய தலைமை அதிகாரியின் இமெயில் முகவரியை மக்களுக்கு தெரியும் வகையில் முறையாக விளம்பரப்படுத்த வேண்டும்.…
-
- 3 replies
- 1.1k views
-
-
தமிழக நிலங்களை 'சுருட்டும்' மலையாளிகள்! ஜனவரி 05, 2007 கன்னியாகுமரி: அரேபியாவில் ஈட்டும் பணத்தை வைத்துக் கொண்டு தமிழகத்தில் நிலங்களை மலையாளிகள் சுரண்டி வருவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். கன்னியாகுமரியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: முப்போகும் விளையும் நஞ்சை, புஞ்சை நிலத்தையும் அபகரித்து ரியல் எஸ்டேட்டாக மாற்றும் ஒரு பெரிய வியாதி தமிழகத்தில் பரவி வருகிறது. சென்னையை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்களில் இந்த வியாதி முற்றிவிட்டது. அதே வியாதி குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளிலும் வேகமாக பரவி வருவதாக கேள்விப்பட்டேன். முப்போகம் விளையும் நஞ்சை நிலங்கள் எப்போதும் பச்சை பசேலென்று காட்சி அளிக்கும் இந்த மாவட்டத்…
-
- 2 replies
- 1.2k views
-
-
பாக்தாத்: தூக்கில் போடப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன் சிறையிலிருந்து புறப்பட்ட இராக் முன்னாள் அதிபர் சாதம் உசேன், தனக்குப் பாதுகாப்பு அளித்த அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு ராணுவப் படையின் செய்தி தொடர்பாளர் ஜெனரல் வில்லியம் கால்ட்வெல் நிருபர்களிடம் கூறியதாவது, சதாம் உசேன் இராக்கிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட சில மணி நேரத்திலேயை அவர் தூக்கிலிடப்பட்டார். அதற்கு முன்னர் வரை அமெரிக்க ராணுவ வீரர்கள்தான் அவருக்கு பாதுகாப்பாக இருந்தனர். தூக்கில் இடப்படும் சில மணி நேரத்துக்கு முன் சிறையில் இருந்த அமெரிக்க ராணுவ வீரர்களுடன் அவர் சிறிது நேரம் உரையாடினார். அப்போது அவர் தனக்குப் பாதுகாப்பு …
-
- 1 reply
- 2.8k views
-
-
தர்மபுரி: குடி போதையில் இரவு பணி பார்த்த ரயில்வே கேட் கீப்பர் தூங்கியதால், நடுவழியில் சிக்னல் இல்லாமல் ரயில் நிறுத்தப்பட்டது. தர்மபுரி அருகேயுள்ள அதியமான் கோட்டையில் ரயில்வே கிராசிங் உள்ளது. இங்கு இரவு 11.30 மணிக்கு சேலத்தில் இருந்து பெங்களூர் நோக்கி ஒரு சரக்கு ரயில் வந்தது. அதியமான் கோட்டை ரயில்வே கேட் அருகே ரயில் வந்த போது சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் ரயில் நிறுத்தப்பட்டது. ரயிலிலிருந்து ஹார்ன் அடித்தும் எந்த தகவலும் இல்லை. கால் மணி நேரத்துக்கும் மேலாகியும் சிக்னல் விழாததால் அருகேயுள்ள சிவாடி ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார் சம்பந்தப்பட்ட ரயில்வே கேட்டுக்கு சென்று பார்த்தனர். அங்கு கேட் கீப…
-
- 0 replies
- 938 views
-
-
சென்னை: துக்ளக் ஆசிரியர் சோவின் மகனுக்கு சொந்தமான கட்டிடத்தில் விதிகளை மீறி கட்டப்பட்ட கடைகளை 6 மாதங்களுக்குள் இடித்துத் தள்ள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சிபி ராமசாமி சாலையில் இருந்த ஆழ்வார்பேட்டை நிதி நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தை சோவின் மகன் ஸ்ரீராம் வாங்கினார். அதில் வர்த்தக மையத்தைக் கட்டினார். ஆனால், விதிகளை மீறி அடித்தளத்திலும் கடைகள் கட்டி வாடகைக்கு விட்டிருந்தார். இதையடுத்து அந்த கடைகளை இடிக்க சிடிஎம்ஏ உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்ரீராம் உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். அதில், சென்னை சிபி ராமசாமி சாலையில் ஆழ்வார்பேட்டை நிதி நிறுவனத்துக்கு சொந்தமான நிலம் இருந்தது. இந்த நிறுவனம் மூடப்பட்டதால் அது விற்கப்பட்டது. அதை நான் ரூ. 10.75 கோடிக…
-
- 0 replies
- 1k views
-
-
சுவிசில இப்ப செத்தாலும் கொண்டாட்டம் பிறந்தாலும் கொண்டாட்டம். அழிஞ்சு கொண்டிருந்தாலும் கொண்டாட்டம் தான். ஒவ்வொரு வருசமும் புதுவருடமன்டு ஒரு கழியாட்ட நிகழ்வு நடக்கும். பெயர் தான் வருசத்துக்கு வருசம் மாறுதே தவிற நிகழ்ச்சியும் அதை ஏற்பாடு செய்யிறவையும் மாறேலை. போன திங்கட்கிழமையும் இப்படி ஒன்டு நடந்த. இப்ப இங்க இருக்கிற "புலித்தோல் போர்த்தியவையள்" நிகழ்ச்சி நடத்தினா தான் அடிதடி கத்திக்குத்து எல்லாம் நடக்கும் என்டு தெரிஞ்சு நான் போகேலை. அங்க வந்திருந்த ஒருத்தர் ஏற்கனவே இந்த புலித்தோல் காறரோட பிரச்சனையாம். வேற நிகழ்ச்சி ஒன்டிலையும் அவர் பிரச்சனையாம். அப்ப இவையள் தாங்கள் அதிகமா இருக்கிற ஒரு நிகழ்ச்சியா பாத்து போன திங்கட்கிழமை அவருக்கு செம அடியாம் சனத்துக்கு முன்னால வச…
-
- 2 replies
- 1.1k views
-
-
காதலித்த 'குற்றம்' காது, மூக்கு 'கட்!' ஜனவரி 04, 2007(http://thatstamil.oneindia.in) முல்தான்: பாகிஸ்தானில், பழங்குடியினப் பெண்ணை காதலித்துத் திருமணம் செய்த நபரின் காது மற்றும் மூக்கு துண்டிக்கப்பட்டது. தாயாரின் கை வெட்டப்பட்டது. சகோதரருக்கும் காதுகள் துண்டிக்கப்பட்டன. பாகிஸ்தானின் பழங்குடியின கிராமங்களில் இதுபோன்ற தண்டனைகள் வழங்கப்படும் சம்பவங்கள் சகஜமானது. தினசரி ஒரு கொலை நடக்கும் கிராமங்கள் கூட உள்ளன. பெண் குடும்பத்தாரின் சம்மதம் இல்லாமல் யாராவது காதலித்துத் திருமணம் செய்தால் அவ்வளவுதான், மாப்பிள்ளை வீட்டாரின் கதி அதோ கதிதான். முல்தான் நகரைச் சேர்ந்த முகம்மது இக்பால் என்பவர் ஷானாஸ் என்ற பழங்குடியினப் பெண்ணைக் காதலித்தார். இருவரும் திருமணம்…
-
- 2 replies
- 1.3k views
-
-
அண்மையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஓர் ஆலயம் திறந்தனர். அந்தக் கோயிலின் பெயர், சதிமாதா மந்திர். எழுத்தறிவு எட்டாத ஒரு கிராமத்தில், நடுத்தர வயதுடைய ஓர் ஆடவர் இறந்தார். அவரது சடலம், மயானம் சென்றது. தீ மூட்டினர். அந்தத் தீயில், உயிரோடு அவருடைய மனைவியும் தீக்குளித்தாள். இல்லை. தள்ளப்பட்டாள். இதனை உடன்கட்டை ஏறுதல் என்றனர். ஆதிகாலம் தொட்டு வளர்ந்து வந்த இந்தக் கொடிய பழக்கத்திற்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ராஜாராம் மோகன்ராய் போன்ற சமூக ஆர்வலர்கள், அதற்காகப் போராடினர். எனவே, உடன் கட்டை ஏறும் ‘சதி’ பழக்கம், தடை செய்யப்பட்டது. கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏறுகிறாள். மனைவி இறந்தால் கணவன் தீக்குளிக்கிறானா? இல்லை. அவன் இன்னொரு திருமணம் கூடச் செய்து கொள்ளலாம். க…
-
- 0 replies
- 978 views
-
-
இலங்கை தமிழர்களை பாதிக்கும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டோம்: முதலமைச்சர் கருணாநிதிக்கு பிரதமர் உறுதி சென்னை, ஜன.3-: இலங்கை தமிழர்களை பாதிக்கும் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட மாட்டோம் என்று முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு பிரதமர் உறுதி அளித்து கடிதம் எழுதியுள்ளார். இலங்கை பிரச்சினை குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சில நாட்கள் முன்பு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதற்கு பிரதமர் மன்மோகன்சிங் பதில் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:- இலங்கை பிரச்சினை குறித்து உங்கள் கவலையை நான் புரிந்து கொண்டேன். இலங்கையில் பொது மக்கள் மீது குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறையினா…
-
- 1 reply
- 826 views
-
-
சிங்கூர் பகுதியில் டாடா கார் தொழிற்சாலை அமைக்க, மேற்கு வங்க அரசு விவசாய நிலங்களை, அவர்களின் விருப்பமில்லாமல் வற்புறத்தி பெற்றதாக கூறி, மம்தா உண்ணாவிரத பேராட்டத்தை ஆரம்பித்து இன்றோடு 26 நாளாக ஆகி விட்டது. அவரது உடல் நிலை மிகவும் மோசமாகி கொண்டு வருகிறது.இந்நிகழ்வில் குறிப்பிடதக்க அம்சம் என்னவென்றால், நிலமற்ற விவசாயிகளுக்காக போராடி அதானால் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சிகட்டிலில் அமர்ந்திருக்கும் பொதுவுடைமை கட்சியினர், தொழில்அதிபர்க்கு சாதகமான போக்கினை மேற்கொள்வதும், முதலாளித்துவ சக்திகளுக்கு ஆதரவான பாஜக, திரினாமுல் கட்சிகள், விவசாயிகளுக்காக போராட்டாம் நடத்துவதும் வினோதமாக உள்ளது. மம்தா அவர்களின் உண்ணாவிரத்தை, ஒரு பொருட்டாக கருதாது போல். பெ…
-
- 7 replies
- 1.4k views
-
-
ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைன் தூக்கிலிடப்படும் வேளை அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் அதனை படம் பிடித்தமை மற்றும் அவரை நிந்தித்தமை குறித்து ஈராக்கிய அரசாங்கம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இவை தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டமை மத வன்முறையை மேலும் தூண்டும் அபாயம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்தே விசாரணைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சதாம் ஹுசைன் தூக்கிலிடப்பட்டதையும் அவர் அதிகாரிகளினால் நடத்தப்பட்டதையும் அறிந்த பின்னர் மொசுல் நகர சிறைச்சாலையொன்றில் சுன்னி முஸ்லிம்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். சில மெய்ப்பாதுகாவலர்கள் சதாமை நோக்கி கோஷமெழுப்பியுள்ளனர். இது பொருத்தமற்றது, இது குறித்த அரசாங்க விசாரணைகள் இடம்பெறுகின்றன என ஈராக்கிய பிரதமர் நூறி அல் - மலிக்கிய…
-
- 0 replies
- 878 views
-
-
இந்தோனேசிய விமானம் விழுந்து 90 பேர் பலி ஜனவரி 02, 2007 ஜகார்தா: இந்தோனேசியாவில் 102 பேருடன் சென்ற பயணிகள் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதில் 90 பேர் பலியாயினர். 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆடம் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த போயிங்747 விமானம் இந்தோனேசிய நேரப்படி நேற்று பிற்பகல் 1 மணிக்கு சுராபயா என்ற நகரிலிருந்து ஜாவாவில் உள்ள மனேடோ நகருக்குக் கிளம்பியது. 2 மணி நேரத்தில் அந்த விமானம் மனோடோவுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டியும் விமானம் வந்து சேரவில்லை. மேலும், விமான தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டது. இதனால் இரு நகரங்களிலும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த விமானத்தில் 96 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் இருந்…
-
- 0 replies
- 614 views
-
-
வாழ்வு முழுவதும் தன் பிள்ளைகளுக்கு வழி காட்ட வேண்டிய ஒரு தாய் மூன்று பிஞ்சுகளை தவிக்கவிட்டுத் திடீரென தன் உயிரை மாய்த்துகொள்ள, ஆதரவாய் இருந்த பாட்டியும் அடுத்த ஒரு மாதத்தில் மரணத்தைத் தழுவ, ‘இனி தகப்பனை விட்டால் இந்தப் பிள்ளைகளுக்கு வேறு வழியில்லை...’ என்ற நிலையில் அவனும் தூக்கில் தொங்கினால்..? &இப்படியரு மரண சாபத்துக்கு ஆளாகியிருக்கும் அந்தக் குடும்பத்தை நினைத்தால், நெஞ்சுக்குழிக்குள் ஒரு பிடி நெருப்பை அள்ளிக்கொட்டியது போலத்தான் இருக்கிறது! தூத்துக்குடி&தாளமுத்து நகர் அருகேயிருக்கும் எம்.ஜி.ஆர். நகரில் நுழைந்து, பெரியவர் ஜெபமாலை வீட்டுக்கு வழி கேட்டால்... வார்த்தைகளில் சோகம் நிரப்பிதான் வழிகாட்டுகின்றனர். நாம் போனபோது, பேரப்பிள்ளைகளுக்கு சோறு ப…
-
- 0 replies
- 871 views
-
-
தோஹாவில் அண்மையில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை ஒருவர், ஆணா, பெண்ணா என்று அறிவதற்கான பாலியல் சோதனையில் தோல்வியடைந்ததால், அவரது பதக்கம் மீளப்பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் பங்குபற்றிய சாந்தி சௌந்திரராஜன் எனப்படும் தமிழகத்தைச் சேர்ந்த இந்த வீராங்கனையின் திறன் குறித்து, ஏனைய போட்டியாளர்களும், விளையாட்டு அதிகாரிகளும் கேள்வியெழுப்பியதை அடுத்து, அவர் மருத்துவர்களால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். சாந்தி, ஒரு பெண்ணுக்கான பாலியல் நடத்தைகளைக் கொண்டிருக்கவில்லை என்று சோதனை முடிவுகள் கூறுகின்றன. சாந்தியிடம் செய்யப்பட்ட பாலின சோதனையில், பெண்களுக்கு இருக்க வேண்டிய ஹார்மோன் அளவு சாந்தியி…
-
- 7 replies
- 2.7k views
-
-
அமெரிக்காவின் நோர்மன் விருது பெற்றுள்ள முதல் இலங்கையர் - இராமச்சந்திரன் குலசிங்கம் Monday, 01 January 2007 அமெரிக்கன் சொசைட்டி ஒவ் சிவில் எஞ்ஜினியர்ஸினால் (ASCE) வழங்கப்படுகின்ற மிகவும் கௌரவத்திற்குரிய நோர்மன் விருதினை (Norman Medal) இவ்வாண்டு யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கலாநிதி இராமச்சந்திரன் குலசிங்கம் பெற்றிருக்கிறார். பூகம்பங்கள் ஏற்படும்போது மண்படைகளின் செயற்பாடு எவ்வாறு இருக்கிறது என்பது தொடர்பில் `ஜியோடெக்னிக்கல் அன்ட் ஜியோ என்வயர்மன்ரல் என்ஜினியரிங்' என்ற சஞ்சிகையில் இவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைக்காகவே இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. கலிபோர்னியாவின் நீர்வளங்கள் திணைக்களத்தைச் சேர்ந்த எரிக் ஜே.மல்விக் மற்றும் கலிபோர்னிய பல்கலைக்கழ…
-
- 1 reply
- 1.1k views
-
-
அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள் பாங்கொக் நகரில் புத்தாண்டுதின விழாக்களின் போது நடந்த தொடர் குண்டுவெடிப்புச்சம்பவங்களி
-
- 0 replies
- 1.1k views
-
-
http://sinnakuddy1.blogspot.com/2007/01/blog-post.html
-
- 0 replies
- 871 views
-
-
பலூனில் பறந்து கொண்டே ராஜஸ்தான் ஜோடி திருமணம் ஜெய்ப்பூர் : ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு ஜோடி பலுõனில் அந்தரத்தில் பறந்து கொண்டே திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியது.இப்போதெல்லாம் எதையும் வித்தியாசமாக சிந்திக்கும் எண்ணம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. தரையில் கல்லயாணம் கேள்விப்பட்டு இருக்கிறோம். தண்ணீருக்குள்ளும் திருமணம் பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில் இப்போது புதிதாக பலுõனில் திருமணம். லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக நடத்தப்பட்ட இந்த திருமணம் குறித்த சுவையான தகவல்கள் வருமாறு: ராஜஸ்தான் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர்கள் சுனில்(22) மற்றும் வந்தனா(22). சுனில் வங்கியில் பணியாற்றுபவர். வந்தனா தனியார் கல்வி நிறுவனத்தில் பயிற்சியாளராக பணிபுரிகிறார். இவ…
-
- 1 reply
- 967 views
-
-
சேலம்: மதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் வைகோவை நீக்கி சேலத்தில் நடந்து வரும் போட்டி மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய பொதுச் செயலாளராக செஞ்சி ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். சேலத்தில் எல்.கணேசன்செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் கூட்டிய மதிமுக போட்டி பொதுக்குழு இன்று காலை கூடியது. சுமங்கலி கல்யாண மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்குவதாக இருந்தது. ஆனால், ஆட்கள் வர தாமதமானதால் 12.30 மணிக்குத் தான் தொடங்கியது. இதுவரை எல்.ஜியும் செஞ்சியும் காத்திருந்தனர். இக் கூட்டத்திற்கு விழுப்புரம், சென்னை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே அதிகம் வந்திருந்தனர…
-
- 1 reply
- 2.1k views
-