உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26856 topics in this forum
-
நிலக்கரி சுரங்க ஊழலை மூடி முறைக்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து, நாடு முழுவதும் இரண்டு நாள் போராட்டம் நடத்தப்படும் என பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையில் 142 நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டின் போது நடந்த முறைகேட்டில் அரசுக்கு ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி தெரிவித்திருந்தார். அதன்பேரில், சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விவகாரம் தொடர்பாக மாநில தலைநகரங்களில் மே 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இந்தப் போராட்டம் நடத்தப்படும் என பாரதிய ஜனதா கட்சி செய்தித் தொடர்பாளரான பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக மாநில ஆளுநர்களிடம் மனு அளிக்க…
-
- 0 replies
- 337 views
-
-
தனி தெலுங்கானா கோரி சட்டசபையை நோக்கி பேரணி நடத்தப்போவதாக தெலுங்கானா போராட்ட குழு அறிவித்து இருந்தது. இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டார்கள் . பேரணியில் மாவேஸ்டு தீவிரவாதிகள் ஊடுருவி வன்முறையில் ஈடுபட வாய்ப்பு இருப்பதால் அனுமதி மறுக்கப்படுவதாக ஐதராபாத் நகர போலீஸ் கமிஷனர் அனுராக் சர்மா திட்டவட்டமாக கூறி விட்டார். தடையை மீறி போராட்டங்கள் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்து உள்ளார். ஆனாலும், தடையை மீறி நாளை போராட்டம் நடத்தப்படும் என்று தெலுங்கானா போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதையடுத்து ஐதராபாத் நகரில் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மத்திய பாதுகாப்பு படை உள்ளிட்ட ஆயிரக்கணக…
-
- 0 replies
- 375 views
-
-
தமது சொந்த இருப்பிடங்களை விட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமைப்பு கூறியுள்ளது. ருவண்டா மற்றும் முன்னாள் யூகோஸ்லாவிய நெருக்கடி காலகட்டத்துக்குப் பிறகு இதுதான் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துக் காணப்படும் காலமாகும். கடந்த ஆண்டில் 80 லட்சம் பேர் இடம்பெயர்ந்திருக்கிறார்கள் என ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கின்றது. இடம் பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் போர் காரணமாகவே இடம் பெயர்ந்துள்ளனர். இது மிகவும் மோசமான நிலைமை என்றும், சிரியாவின் மோதல் காரணமாகவே மிகவும் அதிகமானோர் இடம்பெயர்ந்ததாகவும் ஐநாவின் அறிக்கை ஒன்று கூறுகின்றது. 4.5 கோடி அகதிகளில் அரைவாசிப் பேர், ஆப்கானிஸ்தான், சோமாலியா,…
-
- 0 replies
- 384 views
-
-
அமெரிக்கக் காட்டுத் தீயில் தீயணைப்பு வீரர்கள் 19 பேர் பலி தொடர்ந்தும் 200 தீயணைப்புப் படைவீரர்கள் தீயை அணைக்க போராடிவருகின்றனர் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புப் படைவீரர்கள் 19 பேர் உடல்கருகி பலியாகியுள்ளனர். அரிசோனா மாநிலத் தலைநகர் பீனிக்ஷிலிருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் பரவிய இந்தத் தீ, அருகே யார்னெல் நகரை அண்டாமல் தீயணைப்புப் படைவீரர்கள் போராடினார்கள். கடந்த வெள்ளியன்று மின்னல் தாக்குதலினால் ஏற்பட்ட இந்தக் காட்டுத் தீ, கடுமையான காற்று, காற்றில் குறைந்தளவு ஈரலிப்பு மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக வேகமாக பரவத் தொடங்கியது.செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர், ஒரே சம்பவத்தில் அதிகளவில் தீயணைப்பு…
-
- 0 replies
- 495 views
-
-
தொலைத் தொடர்பு துறை, பாதுகாப்பு துறை, இன்சூரன்ஸ் துறை ஆகியவற்றில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் இந்தியாவையே விற்றுவிட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு துடிப்பதாக மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். நாடியா மாவட்டத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தல் பிரசார கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது:- காங்கிரஸ் கட்சியில் இருப்பதற்காக அவமானப்பட்டுதான் நாங்கள் திரிணாமுல் காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினோம். காங்கிரஸ் காரர்களை பார்ப்பது கூட எனக்கு அவமானமாக உள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த பல காங்கிரஸ் காரர்கள் எங்கள் கட்சி தயவால் தான் மத்திய மந்திரிகளாக இருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது. சில்லரை வர்த்தகத்தில்…
-
- 0 replies
- 529 views
-
-
கிம் ஜோங்-உன்-ஐக் கொல்ல சி.ஐ.ஏ சதி -வடகொரியா குற்றச்சாட்டு அமெரிக்காவின் சி.ஐ.ஏ மற்றும் தென் கொரியாவின் உளவாளிகள் வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னைக் கொல்ல சதி செய்ததாக வட கொரியா குற்றம் சாட்டியிருக்கிறது. படத்தின் காப்புரிமைREUTERS அமெரிக்கா மற்றும் தென் கொரிய ஏஜெண்டுகள் வட கொரியத் தலைவரான கிம் ஜோங்-உன்னை கொல்லத் திட்டமிட்டுள்ளதாக வட கொரிய தேசிய ஊடகங்கள் கூறியுள்ளன. வடகொரிய தேசியப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில், சி.ஐ.ஏ மற்றும் தென் கொரிய புலனாய்வு முகமையின் ஆதரவு பெற்ற "பயங்கரவாதக் குழு", உயிரியல் இரசாயனப் பொருள் கொண்டு தாக்குதல் நடத்துவதற்காக வட கொரியாவுக்குள் நுழைந்திருப்பதாகத் தெ…
-
- 0 replies
- 345 views
-
-
* அடுத்த வாரம் நடைபெறவுள்ள பிரிட்டிஷ் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, பிரதமர் தெரீஸா மேயும் தொழில்கட்சித்தலைவர் ஜெரிமி கோர்பினும் முதல் முறையாக ஒரே மேடையில் பொதுமக்கள் கேள்விகளுக்கு பதிலளித்தனர். * ஆயிரம் மடங்கு வீரியமிக்க புதிய நோய் எதிர்ப்பு மருந்து கண்டுபிடிப்பு, செயலிழந்த மருந்தை மாற்றியமைத்து அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை. * வியட்நாமின் கலாச்சார உணவான பன்றி ரத்த உணவு பெரும் நோயை தோற்றுவிப்பதாக கூறப்படுவது குறித்த பிபிசியின் செய்தித் தொகுப்பு. ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 263 views
-
-
ஜி-20 மாநாட்டை எதிர்த்து நடத்த போராட்டத்தில் ஹீரோவான பீட்சா டெலிவரி நபர் ஜி-20 போராட்டத்தின் இடையே பிட்சா டெலிவரிகாக செல்லும் நபரை புகைப்படம் எடுக்க சூழ்ந்துள்ள புகைப்படக்காரர்கள் ஜெர்மனியில் ஹம்பர்க் நகரில் ஜி- 20 மாநாட்டில் உலகத் தலைவர்களின் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கலைத்துக் கொண்டிருந்தனர். இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை நடந்து முடிந்து விட்டது. ஆனால் இந்தப் போராட்ட நிகழ்வில் பதிவான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவின் விவரம்: …
-
- 0 replies
- 275 views
-
-
அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் ஜோ பைடன் - ஜி ஜின்பிங் இடையில் சந்திப்பு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் நேற்றைய தினம் தங்களது முதல் இருதரப்பு சந்திப்பை நடத்தினர். தாய்வான், ஹொங்கொங் மற்றும் பீஜிங்கில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் சீனாவின் மேற்குப் பகுதியான சின்ஜியாங்கில் முஸ்லிம்களை நடத்துவது உள்ளிட்ட விவகாரங்களில் இரு நாடுகளின் உறவு மோசமடைந்து வரும் நிலையில் இருவரும் காணொளி மூலமாக பேச்சுவார்த்தையை திங்களன்று நடத்தியுள்ளனர். சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள் வெளிப்படையான மோதலுக்கு மாறாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு தலைவர்களாக நம் இருவருக்கும் பொறுப்பு உள்ளது என்று ஜோ பைடன் இந்த சந்திப்பில் சுட்ட…
-
- 0 replies
- 293 views
-
-
19 ஜனவரி 2022, 08:55 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, வடகொரியா ஏவுகணை சோதனை குறித்து தென்கொரிய சேனலில் ஒளிபரப்பாகும் செய்தி வடகொரியா, இரண்டு குறைந்த தொலைவில் பறந்து சென்று தாக்கும் பெலாஸ்டிக் ஏவுகணைகளை ஜப்பான் கடற்கரைக்கு அருகில் நீரில் ஏவி பரிசோதித்தது. ஏவுகணைகள் பியாங்யாங் நகரத்துக்கு அருகில் உள்ள விமான நிலையம் ஒன்றிலிருந்து திங்கட்கிழமை ஏவப்பட்டதாக தென் கொரியாவின் ராணுவம் கூறியது. ஜப்பானும் வடகொரியாவின் இந்த ஏவுகணைப் பரிசோதனையை உறுதிப்படுத்தியது. கடந்த இரு வார காலத்தில் வடகொரியாவின் நான்காவது ஏவுகணை பரிசோதனை இது என்பது குறிப…
-
- 0 replies
- 257 views
- 1 follower
-
-
ரஷ்யா, உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக ஜோ பைடன் எச்சரிக்கை! அடுத்த மாதம் ரஷ்யா, உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தொலைபேசியின் ஊடாக உக்ரைன் ஜனாதிபதியுடன் உரையாடிய போதே இந்த தகவலை வெளியிட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. மேலும் ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டால் உடனடியாக அமெரிக்காவும் நட்பு நாடுகளும் முழு ஆதரவினை உக்ரைனுக்கு வழங்கும் என அமெரிக்க ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். நேட்டோ அமைப்பில் உக்ரேனைஇணைத்துக்கொள்ள கூடாது என்ற ரஷ்யாவிம் முக்கிய கோரிக்கை அமெரிக்காவினால் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், உக்ரைன் பிரச்சனைக்கு தீர்வொன்றை எட்டும் முயற்சி …
-
- 0 replies
- 180 views
-
-
எண்ணெய் ஏற்றிச் சென்ற புகையிரதம் தடம்புரண்டு தீ அனர்த்தம் அமெரிக்க வட டகோதா மாநிலத்தில் எண்ணெய் ஏற்றிச் சென்ற புகையிரதமொன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட புகைமூட்டம் பல மைல் தொலைவிற்கு அவதானிக்கப்பட்டு ள்ளதோடு கஸெட்டன் நகருக்கு அண்மையில் இடம்பெற்ற இந்த தீ விபத்தில் சுமார் 2,300 பேர் அப் பிராந்தியத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த அனர்த்தத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அனர்த்தத்தின் போது ஒரு மைல் நீளமான புகையிரதத்தின் சுமார் 50 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதுடன் தீயை அணைக்கும் நடவடிக்கையில் பெருமளவு…
-
- 0 replies
- 487 views
-
-
இந்த ஆண்டு இறுதிக்குள்... உக்ரைன்- ரஷ்ய போர் முடிவடையும்: உக்ரைன் இராணுவ மேஜர் ஜெனரல்! இந்த ஆண்டு இறுதிக்குள் உக்ரைன் மற்றும் ரஷ்ய போர் முடிவடையும் என உக்ரைன் இராணுவ மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் தெரிவித்துள்ளார். ஸ்கை செய்தி நிறுவனத்திற்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினை வீழ்த்த சதி நடக்கின்றது. இந்த ஆண்டு இறுதிக்குள் போர் முடிவடையும். இந்த போரில் ரஷ்யா தோல்வி அடைந்தால், ஜனாதிபதி பதவியில் இருந்து புடின் அகற்றப்படுவார். இதன் மூலம் ரஷ்யா வீழ்ச்சி அடையும். புடின் மிகவும் மோசமான உளவியல் மற்றும் உடல் நிலை பாதிப்பில் இருக்கின்றார்” என கூறினார். இதனிடையே, ரஷ்யாவி…
-
- 0 replies
- 213 views
-
-
-
- 0 replies
- 504 views
-
-
முடிவில்லா மர்மமாக தொடரும் மலேசிய விமான மாயம்.. [sunday, 2014-04-20 16:28:55] மலேசியாவில் இருந்து சீனா நோக்கி சென்று நடுவானில் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.370 விமானத்தின் பாகங்களை தேடும் பணி இன்றுடன் 44வது தினத்தை அடைந்துள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் சோனார் கருவிகள் கொண்டு நடத்தப்படும் தேடுதல் பணி ஒரு வாரத்தில் முடிவு பெறும் என்று ஆஸ்திரேலிய தேடுதல் பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மலேசியாவில் இருந்து சீனா நோக்கி சென்ற எம்.எச்.370 என்ற மலேசிய விமானம் கடந்த மார்ச் 8ந்தேதி நடுவானில் மாயமானது. அந்த விமானத்தில் பயணம் செய்தவர்கள் குறித்த தகவல் வெளிவரவில்லை. விமானம் இந்திய பெருங்கடல் பகுதியில் விழுந்திருக்க கூடும் என்று கிடைத்த…
-
- 0 replies
- 266 views
-
-
குடியுரிமை மறுத்த தென்கொரியா: எங்கே செல்வது என தவிக்கும் வடகொரிய நபர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionகிம் சக்- சுல் வடகொரியாவின் சரிவொன் நகரத்தில் பிறந்து, அங்கு 30 ஆண்டுகள் வாழ்ந்ததாகக் கூறுகிறார் கிம் சக்- சுல். தென் கொரியாவில் மூன்று ஆண்டுகள் இருந்ததாகவும், ஆனால் தம்மிடம் சரியான ஆவணங்கள் இல்லாததால் குடியுரிமை மறுக்கப்பட்டதாக அவர் கூறுகிறார். …
-
- 0 replies
- 378 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். நூற்றாண்டு அடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மத்திய கிழக்கில் அமைதியை கொண்டு வர எடுக்கும் முயற்சிகள் அனைத்தும், `இந்த நூற்றாண்டு மீதான அடி` என்று பாலஸ்தீனிய அதிபர் மக்மூத் அப்பாஸ் விவரித்துள்ளார். பாலஸ்தீனிய தலைவர்கள் சந்திப்பில் பேசிய அவர், ஜெருசேலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்காவின் எந்த அமைதி திட்டத்தையும் தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றார். ஓஸ்லோ அமைதி ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட இஸ்ரேலையும் அப்பாஸ் குற்றஞ்சாட்டினார். ஓடு தளத்திலிருந்து விலகிய விமானம் து…
-
- 0 replies
- 246 views
-
-
அமெரிக்காவுடன் மோத தயாராகிறதா துருக்கி?,வறுமையை ஒழிக்க வரியை உயர்த்திய ஃபிலிப்பைன்ஸ் அதிபர், மம்மிகள் குறித்த ஆராய்ச்சியில் புதிய தொழில்நுட்பம் உள்ளிட்ட பல உலகச் செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 198 views
-
-
கிறிஸ்தவ பாதிரியார்களினால் பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாகி பாதிப்படைந்த சிறுவர்களிடம் போப் ஆண்டவர் பிரான்சிஸ் மன்னிப்பு கேட்டுள்ளார். சமீபகாலமாக சில கிறிஸ்தவ பாதிரியார்கள் மற்றும் பிஷப்களால் உலகளவில் சிறுவர் - சிறுமிகள் பலர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு ஆளாகி பாதிக்கப்பட்டுவருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வாடிகன் சிட்டியில் நேற்று நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் பாதிரியார்களின் பாலியல் துஸ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் நீண்ட உரையாற்றினார் போப் ஆண்டவர். கெஞ்சிக் கேட்கிறேன்... பாதிரியார்களின் பாலியல் துஸ்பிரயோகத்தை மறந்துவிடும்படி உங்களை கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் உங்களுக்கு செய்த கொடுமைகளை ஒருபோதும் ஏற்…
-
- 0 replies
- 349 views
-
-
தாலிபனில் வலுப்பெறுகிறதா ஐ.எஸ். குழு? ஆப்கன் சிறையில் உள்ள முன்னாள் உறுப்பினர் பிபிசிக்கு பேட்டி, சிரியாவின் இட்லிப் நகரில் ரசாயன வெடிகுண்டு வீசப்பட்டதா?, குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் கனடா குழந்தை உள்ளிட்ட பல்வேறு உலகச் செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 154 views
-
-
நியாண்டர்தால்களின் எலும்பு புல்லாங்குழல்: மனிதர்களின் மூதாதையர்களுக்கு இசையறிவு இருந்ததா? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY 1995-ஆம் ஆண்டு ஒரு வித்தியாசமான எலும்பை தொல்லியலாளர் இவான் டர்க் கண்டுபிடித்தார். கிடைத்த இடம் ஐரோப்பிய நாடானா ஸ்லோவேனியாவில் உள்ள திவ்ய பாப் குகை. பூமியின் பழைய கற்கால அடுக்கைத் தோண்டும்போது நியாண்டர்தால்களின் தீமூட்டும் இடம், கல் மற்றும் எலும்புக் கருவிகளுக்கு அருகே இந்த எலும்பால் ஆன பொருள் கிடைத்தது. "திவ்ய பாப் குகையில் கிடைத்த எலும்பு மனித வரலாற்றில் மிகவும் முக்கியமானது. மனிதன் எப்படி மனிதனாக உருவெடுத்தான் என்று தெரிந்து கொள்வதில் இது முக்கியமானத…
-
- 0 replies
- 376 views
- 1 follower
-
-
மனிதாபிமான விளையாட்டு வீரர்கள் முகமது அலி, ஆண்டி பிளவர் மற்றும் ஹென்றி ஓலங்கா என்னை நீக்ரோ என்றழைக்காத வியட்காங்கையர்களை (வியட்நாமிய கம்யூனிஸ்டுகள்) நான் ஏன் கொல்லப்போகவேண்டும்” தான் சார்ந்திருந்த தேசத்தை எதிர்த்து குரல் எழுப்பியது ஒரு அரசியல்வாதியோ ,போராளியோ அல்ல !! புகழின் உச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த குத்துச்சண்டை விளையாட்டு வீரர் கிளேஸியஸ் எக்ஸ் (அமெரிக்க இஸ்லாமிய தேசியத்தில் பரம்பரைப் பெயர்கள் நீக்கப்பட்டு எக்ஸ் என வைத்துக்கொள்ளப்படும் )என்றழைக்கப்பட்ட முகமது அலி, விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்படும்பொழுது விளையாட்டுவீரர்களும் குரல் கொடுக்கவேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். என…
-
- 0 replies
- 1.2k views
-
-
நாளிதழ்களில் இன்று: 2000 மெகாவாட் பற்றாற்குறை: பராமரிப்பு என்ற பெயரில் அறிவிக்கப்படாத மின்வெட்டு? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான முக்கிய செய்திகள், கட்டுரைகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி இந்து (தமிழ்) படத்தின் காப்புரிமைGETTY IMAGES தமிழகத்தில் கோடை வெயில் தீவிரமடையத் தொடங்கி இருப்பதால் மின் தேவை …
-
- 0 replies
- 659 views
-
-
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் தொடர் குண்டுவெடிப்பு: 8 பேர் சாவு ஆஃப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜலாலாபாத் நகரில் அமைந்திருக்கும் கால்பந்து மைதானத்தில், உள்ளூர் கிரிக்கெட் போட்டி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்நிலையல், அந்த மைதானத்தில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பார்வையாளர்களில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 45-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேர்க்கவில்லை. இந்த பயங்கரவாத தாக்குதல் ச…
-
- 0 replies
- 348 views
-
-
லண்டன், பிப்.24: பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை ஸ்வீடனுக்கு நாடுகடத்தலாம் என பிரிட்டிஷ் நீதிபதி தெரிவித்தார். 2 பெண்கள் கூறிய பாலியல் கூற்றச்சாட்டுகள் நாடுகடத்தக்கூடிய அளவிலான குற்றச்சாட்டுகள்தான் என்றும், ஸ்வீடன் கைது வாரண்ட் முறையாக பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதி ஹெளவார்ட் ரிடில் கூறினார். எனினும் இந்த தீர்ப்பு குறித்து அப்பீல் செய்ய அசாஞ்சே வழக்கறிஞர்களுக்கு ஒருவாரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கு நடைபெறுவதையொட்டி நீதிமன்றத்துக்கு அசாஞ்சே வந்திருந்தார். http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BE%…
-
- 0 replies
- 418 views
-