Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சுவீடனில் விமானம் ஆற்றுக்குள் விழுந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு! சுவீடனில் விமானம் ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். விமானம் ஒன்றை பரசூட்டின் உதவியுடன் தரையிறக்கும்போதே நிலை தடுமாறி ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. கிழக்கு சுவீடன் நாட்டின் உமெயா எனும் பிரதேசத்திற்கு வெளியில் உள்ள ஆற்றிலேயே இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. குறித்த விபத்தில் 9 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில் சேத விபரங்கள் குறித்து சரியான தகவல்கள் வெளியாகவில்லை. http://athavannews.com/சுவீடனில்-விமானம்-ஆற்றுக/

  2. யுவான் சுவாங்: அரசின் தடையை மீறி 4,500கி.மீ பயணித்து இந்தியாவுக்கு வந்த சீன பயணி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சீன நிர்வாகத்தின் எதிர்ப்பையும் மீறி இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார் யுவான் சுவாங் கட்டுரை தகவல் எழுதியவர்,ரெஹான் ஃபைசல் பதவி,பிபிசி ஹிந்தி 4 மணி நேரங்களுக்கு முன்னர் கி.பி. 629இன் குளிர்காலத்தில் சீன நகரம் சங்கானில் (Chang'an) இருந்து உயரமான, உறுதியான 29 வயது நபர், இந்தியாவை அடையும் நோக்கில் நடைபயணமாகப் புறப்பட்டார். அந்தப் பயணியின் பெயர் யுவான் சுவாங். அது சீனாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்ற சமயம். எனவே, பயணம் செய்வதற்குச் சரியான நேரமாகக் கருதப்படவில்லை. ஏனெனில்,…

  3. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒரு ஊழல் வழக்கு விசாரணையில் கனடா சட்டத்தை மீறி உள்ளார் என்று நெறிமுறைகள் கண்காணிப்பு அமைப்பு ஒன்று கண்டுபிடித்துள்ளது. எஸ்.என்.சி லவாலின் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவர் மீது செல்வாக்கு செலுத்த ஜஸ்டின் முயன்றதாக அந்த அமைப்பின் ஆணையர் கூறி உள்ளார். ஆணையரின் அறிக்கையை தாம் ஏற்றுக் கொள்வதாகவும், ஆனால் அதே சமயம் அவரது அறிக்கையின் இறுதி முடிவில் சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் ஜஸ்டின் தெரிவித்துள்ளார். கனடா நாட்டில் அக்டோபரில் நடக்க இருக்கும் பொதுத் தேர்தலில் இந்த விசாரணை முடிவானது ஒரு பிரச்சனையாக ஜஸ்டினுக்கு உருவெடுக்கலாம். அது என்ன எஸ்.என்.சி லவாலின் விவகாரம்? எஸ்.என்.சி லவாலின் என்பது கனடா நாட்டைச் சேர்ந்த உலகின் மி…

    • 0 replies
    • 384 views
  4. சென்னை கே.கே.நகர் ராஜமன்னார் காலனியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் சுப்பிரமணியன் (வயது 50). இவர் தலைமை செயலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி உஷா (வயது 39). இவர்களுக்கு சுமித்ரா (21) என்ற மகளும், ராமச்சந்திரன் (17) என்ற மகனும் உள்ளனர். சுமித்ராவுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணதாகி 22 ஆண்டுகளாகியும், சுப்பிரமணி மனைவி உஷாவை சந்தேக கண்ணுடனே பார்த்துள்ளார். இதனால் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. தாய்- தந்தைக்கிடையே ஏற்படும் இந்த தகராறை ராமச்சந்திரன் விலக்கி விட்டுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு குடித்து விட்டு வந்த சுப்பிரமணியன், மனைவியை அடித்து உதைத்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த ராமச்ச…

    • 0 replies
    • 885 views
  5. குவாத்தமாலாவில் 115 அடி பள்ளத்தில் வீழ்ந்து பஸ் விபத்து; 55 பேர் உயிரிழப்பு! குவாத்தமாலா (Guatemala) தலைநகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள பாலத்தில் இருந்து பயணிகள் பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. திங்கட்கிழமை (10) அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் குறைந்தது 55 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவ இடத்தில் 53 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த பயணிகளை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அங்கு இருவர் உயிரிழந்து விட்டதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் பஸ் சாலையில் இருந்து விலகி பாலத்தின் கீழே உள்ள செங்குத்தான 115 அடி (35 மீட்டர்) பள்ளத்…

  6. ஒபாமா சிந்தியது வெங்காய கண்ணீர்: பிரபல சேனல் விமர்சனம் நியூடவுன் ஹால் உரையில் கண்ணீர் சிந்தி அழுத ஒபாமா. | படம்: ஏபி. துப்பாக்கி கட்டுப்பாடு குறித்து கடந்த வாரம் உரை நிகழ்த்திய ஒபாமா, யதார்த்தமாக அழவில்லை. கண்களில் வெங்காயத்தை தேய்த்து கொண்டு தான் அழுதார் என்று ஃபாக்ஸ் நியூஸ் சேனல் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் பெரும் பிரச்சினையாக அச்சுறுத்திவரும் துப்பாக்கி கலாச்சாரம் தொடர்பாக சமீபத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்புரையாற்றினார் அந்நாட்டு அதிபர் ஒபாமா. அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் துப்பாக்கிச்சூட்டினால் ஒரு லட்சம் பேர் இறந்துள்ளதையும் 2012-ல் சாண்டி ஹூக் பள்ளியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்…

  7. "சிரியாவில் ஐ எஸ் அமைப்பால் ஏராளமானோர் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர்" சிரியாவிலுள்ள டியர் அல்-சௌர் நகரின் புறநகர் பகுதியிலிருந்து, இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் தீவிரவாதிகள் 400க்கும் அதிகமானவர்களை கடத்தியுள்ளனர் என சிரிய செயல்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். சிரியாவின் பல பகுதிகள் ஐ எஸ் தீவிரவாத அமைப்பின் பிடியில் உள்ளது ஒரு தாக்குதலின் பின்னர் இவர்கள் கடத்தப்பட்டுள்ளதாக அந்த செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர். அரச கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது ஐ எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 130 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட அல்லது கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அரச ஆதரவு படையினரின் உறவினர்கள்…

  8. கொங்கோவில் விமான விபத்து – 18 பேர் உயிரிழப்பு! கொங்கோவில் இடம்பெற்ற விமான வித்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். கொங்கோவின் கிழக்குப் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 19 பேருடன் சென்ற சிறியரக விமானம் நிலைதடுமாறி கீழே விழுந்து நொறுங்கியது. கிழக்கு பகுதியில் உள்ள வடக்கு கிவு மாகாணத்துக்குட்பட்ட கோமா நகரில் இருந்து சென்ற குறித்த விமானம் பேனி நகரை நோக்கி செல்ல ஆம்பித்த சில நிமிடங்களில் கோமா நகரின் அருகாமையில் மேப்பன்டோ என்ற இடத்தில் வீழ்ந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 18 பேரின் உடல்களை மீட்புப் படையினர் கண்டெடுத்துள்ள நிலையில் அதில் சென்றவர்களில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், விமானம் கீழே விழுந…

  9. ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்! ஈரானின் அணுசக்தி திட்டத்தைப் பொறுத்தவரை, புத்திசாலித்தனமான தீர்வு வேண்டுமா? அல்லது கொடூரத் தாக்குதல் வேண்டுமா? என்பதை அந்நாடே முடிவு செய்ய வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகின்றது. அத்துடன் அணு ஆயுத உற்பத்தியை நிறுத்தவில்லை என்றால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் தொடர்ந்தும் ஈரானை எச்சரித்து வருகின்றது. இந்நிலையில் கட்டாரின் தலைநகரான தோஹாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மன்னர் (அமிர்) தமீம் பின் ஹமாத் அல் தானியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து வணிகத் தலைவ…

  10. கசாப்புக்கு தூக்கு: உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! Last updated : 12:09 (29/08/2012) புதுடெல்லி: மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உறுதி செய்துள்ள உச்ச நீதிமன்றம், தூக்குத் தண்டனையை எதிர்த்து கசாப் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கடந்த 2008 நவம்பர் 26ம் தேதி மும்பையில் தாஜ் ஓட்டல்,சத்ரபதி ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் பலியானார்கள்.இத்தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் அனைவரும் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர்.இதில் உயிருடன் பிடிபட்ட ஒரே குற்றவாளி அஜ்மல் கசாப். மும்பை ஆர்தர் ரோடு சிறையில் உள்ள தனி செல்ல…

  11. Published By: PRIYATHARSHAN 19 AUG, 2025 | 07:18 AM உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி மற்றும் ஏனைய ஐரோப்பிய தலைவர்களுடன் முன்னெடுக்கப்பட்ட சந்திப்பு "மிகவும் சிறந்ததாக" இருந்தது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில், உக்ரைன் பாதுகாப்பு நிலைமை, ஐரோப்பிய நட்டு நாடுகளுடன் இணைந்த ஒத்துழைப்பு, உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான தற்போதைய பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தாம் தொலைபேசியில் உரையாடியதாகவும், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நேரடி சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்ய ஆரம்ப கட்ட பேச்சுவார்த்த…

  12. டிரம்ப் வர்த்தக ஒப்பந்தத்திற்காக வான் டெர் லேயனை கடுமையாக விமர்சிக்க நாடாளுமன்றத் தலைவர்கள் தருணத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஐரோப்பிய ஆணையத் தலைவர் தனது டிரான்ஸ் அட்லாண்டிக் ஒப்பந்தத்தை ஆதரித்த பிறகு ஐரோப்பிய சட்டமியற்றுபவர்களிடமிருந்து கடுமையான சவாலைச் சந்திக்கிறார். பகிர் இலவச கட்டுரை பொதுவாக சந்தாதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 10, 2025 அன்று பிரான்சின் ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் 'ஸ்டேட் ஆஃப் தி யூனியன்' விவாதத்தில் உர்சுலா வான் டெர் லேயன் உரையாற்றுகிறார். | ரொனால்ட் விட்டெக்/EPA செப்டம்பர் 10, 2025 12:34 pm CET அன்டோனியா ஜிம்மர்மேன் மற்றும் கோயன் வெர்ஹெல்ஸ்ட் மூலம் புதன்கிழமை தனது வருடாந்திர யூனியன் உரையில் இந்த ஒப்பந்தத்தை ஆ…

    • 0 replies
    • 92 views
  13. அமெரிக்காவுக்குள் அத்துமீறி நுழைந்த 6 பேர் ; வாகன விபத்தில் காயம் அமெரிக்காவுக்குள் அத்துமீறி நுழைந்த 6 பேர், பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்கையில் ஏற்பட்ட வாகன விபத்தில் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: டெக்ஸாஸ் மாகாணம், கிங்ஸ்வில் நகரில் அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான விமான நிலையத்தின் நுழைவுத் தடுப்பை உடைத்துக்கொண்டு கடந்த சனிக்கிழமை நுழைந்த வாகனமொன்று, இறுதியாக இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், அந்த வாகனத்தில் பயணித்த 15 பேரில் 6 பேர் காயமடைந்தனர். அந்த 15 பேரும் அமெரிக்காவுக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், எல்லைக் காவல் பொலிஸார் அவர்களது வாகனத்தைப் பின்தொடர்ந்து வந்தபோது இந்த…

  14. அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டவர்கள் விசா நீட்டிப்புக்கு விண்ணப்பித்தால் அது பற்றி விரைந்து பரிசீலிக்கப்படும் என அந்நாட்டுக் குடியுரிமை மற்றும் குடியிறக்க சேவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் நாடுகளுக்கிடையே விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவுக்குக் கல்வி, வணிகம், வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்குச் சென்றுவிட்டுச் சொந்த நாடு திரும்ப முடியாமல் ஏராளமானோர் உள்ளனர். ஏராளமானோரின் விசாக் காலம் முடியும் தறுவாயில் உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலைத் தேசிய அவசர நிலையாகக் கருதி விசாக்காலம் முடிந்த பின்னரும் அவர்கள் தங்கியிருக்க அனுமதிக்கப்படும் என அமெரிக்க உள்துறை அறிவித்துள்ளது. இதனால் விசாக்காலத்தை நீட்டிக்கக் கோரி வரும் விண…

    • 0 replies
    • 213 views
  15. அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை பணியமர்த்துவதில் உள்ள தடையை அடுத்த மாதம் பென்டகன் நீக்க உள்ளதாக அமெரிக்காவில் உள்ள அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளார்கள். இந்த விதிமுறை காலாவதி ஆகிவிட்டதாகவும், ராணுவத்திற்கு தீங்கு இழைப்பதாகவும் பாதுகாப்பு செயலர் ஆஷ் கார்டர் தெரிவித்துள்ளார்.இந்த முடிவு, திருநங்கைகளுக்கான உரிமைகளுக்காக போராடும் பிரசாரகர்களால் வரவேற்கப்பட்டுள்ளது. அமெரிக்கா ராணுவத்தின் செயலராக எரிக் ஃபேனிங் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்ற பிறகு இந்த முடிவு வெளியாகியுள்ளது. அவரும் மூன்றாம் பாலினத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=160221&category=WorldNews&language=tamil

  16. சென்னையில் இருந்து, மதுரை மற்றும் திருவனந்தபுரத்திற்கு, அதிவேக, "துரந்தோ' ரயில் சேவையை, முதல்வர் ஜெயலலிதா நேற்று துவக்கி வைத்தார். இந்த முறை, ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக, மத்திய அரசு விழாவில் முதல்வர் பங்கேற்றது, அரசியல் வட்டாரத்தில் திருப்பத்தை ஏற்படுத்துவதாகக் கருதப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து, கோவை, டில்லி - நிஜாமுதீன் உள்ளிட்ட பகுதிகளுக்கு, இடை நிற்காமல் செல்லும், துரந்தோ ரயில்கள், ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை சென்ட்ரலிலிருந்து, மதுரை மற்றும் திருவனந்தபுரம் இடையே, துரந்தோ ரயில் சேவை துவக்க, தெற்கு ரயில்வே முடிவெடுத்தது.இந்த ரயில் சேவையை, முதல்வர் ஜெயலலிதா, நேற்று மாலை, சென்னை சென்ட்ரலில் இருந்து துவக்கி வைத்தார். முதலி…

    • 0 replies
    • 563 views
  17. எதிர்ப்பு படைகளின் பிடியில் இருக்கும் அலெப்போ நகருக்கு உதவிகள் சிரியாவின் அலெப்போ நகரில், அரசுப் படைகளின் முற்றுகையை தகர்த்தபின், எதிர்ப்பு படைகளின் கட்டுப்பாட்டில் வந்திருக்கும் பகுதிக்கு, சில உதவிகள் கிடைத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. போராளிகளின் பிடியில் உள்ள அலெப்போவின் கிழக்குப்பகுதிக்கு, டிரக் ஒன்றில் காய்கறிகள் வந்தடைந்துள்ளதாக தெரிகிறது. ஆனால் அந்த பாதைகள் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத வகையில் ஆபத்து நிறைந்து உள்ளதாக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமையன்று நடந்த கடும் சண்டையில் போராளிகள் தங்கள் முற்றுகையை தகர்த்ததாக கூறுவதை அரசுப் படைகள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். கிழக்கு அலெப்போவில் தங்கள் முற்று…

  18. தாய்வானுக்கு அருகே நடைபெறும் இராணுவ பயிற்சிகள் ஒரு ‘தேவையான நடவடிக்கை’ – சீனா கடந்த வாரம் தாய்வானின் தென்மேற்கு கடற்கரையில் சீன இராணுவம் மேற்கொண்ட பயிற்சிகள் சீனாவின் இறையாண்மையைப் பாதுகாக்க ஒரு தேவையான நடவடிக்கை என பெய்ஜிங் நேற்று (புதன்கிழமை) கூறியுள்ளது. சீனாவின் பெரிய அளவிலான வான் மற்றும் கடற்படைப் பயிற்சிகள் கடுமையான ஆத்திரமூட்டல் நடவடிக்கை என தாய்வான் குற்றம் சாட்டியிருந்த நிலையில் சீனா இவ்வாறு பதிலளித்துள்ளது. ஜனநாயக தாய்வானை தனது சொந்தமாகக் கூறும் சீனா, தீவின் அருகே இராணுவ நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது, அத்தோடு சீன ஆட்சியை ஏற்பதை கட்டாயப்படுத்துவதற்கே இவ்வாறான மிரட்டல் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தாய்வான் கருதுகிறது. தாய்வானின் பிரதான நிலப்பரப்…

  19. பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள விக்டோரியோவில் மாணவர்கள் குழுவாக தங்கியிருந்த ஒரு வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒரு பெண் உள்பட இரண்டு பேர் பலியாகினர். ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விக்டோரியோ மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் மாணவ மாணவிகள் குழுவாக ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கி படித்து வந்தனர். அவர்கள் நேற்று வெள்ளிகிழமை இரவு நீண்ட நேரம் வரை விருந்தில் பங்குகொண்டிருந்தனர் என்றும், பின்னர் அதிகாலை 4.30 மணிக்கு திடீரென எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்ததால், தீயில் சிக்கி ஒரு மாணவியும், ஒரு மாணவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Fire C…

  20. பாடலாசிரியர் பாப் டிலன் நோபல் பரிசை முறையாக ஏற்கவில்லை என குற்றச்சாட்டு இந்த ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசை ஏற்பதாக முறையாக அறிவிக்காமல் இருப்பதால், அமெரிக்க பாடகர் பாப் டிலன், மரியாதையற்றவர், திமிர்பிடித்தவர் என்று ஸ்வீடன் அகாடமியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். நோபல் பரிசு பெறும் முதல் பாடலாசிரியராக பலரும் ஆச்சரியமடையும் வகையில் கடந்த வாரம் டிலன் அறிவிக்கப்பட்டார். ஆனால், அவரை தொடர்பு கொள்ள எடுத்த தொடர் முயற்சிகளுக்கு பின்னரும், அவரிடம் இருந்து எந்தவொரு மறுமொழியும் அகாடமிக்கு இன்னும் கிடைக்கவில்லை. இத்தகைய நிலைமை இதற்கு முன் ஏற்பட்டதில்லை என்று ஸ்வீடன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பெர் வாஸ்ட்பெர்க் தெரிவித்துள்ளார். …

  21. முகக் கவசத்துடன் தனது வாக்கினை பதிவு செய்தார் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலையொட்டி டெனால்ட் ட்ரம்ப் நேற்று சனிக்கிழமை புளோரிடாவில் தனது வாக்கினை பதிவுசெய்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாகவும் களமிறங்கியுள்ளார். ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பிடன் போட்டியிடுகிறார். தேர்தல் 3 ஆம் திகதி என்றபோதிலும், முன் கூட்டியே வாக்களிக்கும் முறை அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரசாரத்துக்காக புளோரிடா மாகாணத்துக்கு நேற்று சென்ற ட்ரம்ப், அங்குள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கைப் பதிவு செய்தார். இதன்போது வ…

  22. சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை தொடர்பில் சஜ்ஜன் குமார் என்பவர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வீட்டுக்கு முன் சீக்கியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். கடந்த 1984ம் ஆண்டு இந்திய பிரதமர் இந்திரா காந்தி, அவரது பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து டெல்லியில் சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலில் 3000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலை ஏவிவிட்ட குற்றச்சாட்டில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன்சிங் கைது செய்யப்பட்டார். கடந்த 30 வருடங்களாக நிலுவையில் இருந்த இவ்வழக்கில் சஜ்ஜன் குமாரை விடுவித்தும் மற்றையவர்களை குற்றவாளிகள் என உறுதி செய்தும் மாவட்ட நீதிபதி ஆர்யன் அறிவிப்பு விடுத்தார். இதையடுத்து சஜ்…

    • 0 replies
    • 312 views
  23. கெவின் ரொட் விரைவில் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது மேலதிக விபரங்களுக்கு.. http://tamilworldtoday.com/?p=19161

    • 0 replies
    • 297 views
  24. அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி பெற்ற ஏழு பேர் அசாதாரண இரத்த உறைவினால் உயிரிழப்பு! பிரித்தானியாவில் ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி பெற்ற பின்னர் ஏழு பேர் அசாதாரண இரத்த உறைவுகளால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மொத்தத்தில், மார்ச் 24ஆம் திகதிக்குள் தடுப்பூசி போடப்பட்ட 18 மில்லியனில் 30 பேருக்கு இந்த ரத்த உறைவு இருந்தன. அவை வெறும் தற்செயல் அல்லது தடுப்பூசியின் உண்மையான பக்க விளைவுதானா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. நன்மைகள் எந்தவொரு ஆபத்தையும் விட அதிகமாக இருப்பதாக மருந்துகள் மற்றும் சுகாதார தயாரிப்புகள் ஒழுங்குமுறை நிறுவனம் கூறுகிறது இருப்பினும், ஜேர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் கனடா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு தடுப்பூசி பயன்பாட்டை வயதானவர…

  25. அரவிந்தர் ஆசிரமத்தில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அதை கையகப்படுத்தி நிர்வகிக்க புதுவை அரசு ஆலோசித்து வருகிறது. புதுச்சேரி சட்டசபையில் அரவிந்தர் ஆசிரமத்தில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புகார் கூறினர். மேலும் அரசே அரவிந்தர் ஆசிரமத்தை நிர்வகிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ரங்கசாமி, அரவிந்தர் ஆசிரமத்தை நிர்வாகிக்க அரசு அதிகாரிகளை நியமிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி சட்டத் துறையிடம் ஆலோசனை கேட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார். http://tamil.oneindia.in/news/2013/07/26/tamilnadu-puducherry-govt-will-take-over-aurobindo-ashram-179920.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.