உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26860 topics in this forum
-
Published By: RAJEEBAN 15 JUL, 2023 | 12:08 PM அவுஸ்திரேலியாவின் அடிலெய்டில் இடம்பெற்ற சம்பவமொன்றில் இரு பொலிஸார் கத்திக்குத்திற்குள்ளாகியுள்ள அதேவேளை நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மிகவும் ஆபத்தான சம்பவம் ஒன்று குறித்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை இந்த கத்திக்குத்து இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் அடிலெய்டின் வடகிழக்கில் மிகவும் ஆபத்தான சம்பவமொன்றை தொடர்ந்து ஆயுதமேந்திய பொலிஸார் அந்த பகுதியை சுற்றிவளைத்துள்ளனர் Campbelltown, பகுதியை சுற்றிவளைத்துள்ள பொலிஸார் பொதுமக்களை அந்த பகுதியை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/160072
-
- 0 replies
- 231 views
- 1 follower
-
-
ஸ்வீடனில் குர்ஆன் எரிப்பு: கொந்தளிக்கும் இஸ்லாமிய நாடுகள், தலைநகரில் தொடரும் போராட்டம் பட மூலாதாரம்,FREDRIK SANDBERG/TT/EPA-EFE/REX/SHUTTERSTOCK 23 ஜனவரி 2023, 06:41 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஸ்வீடனில் நடந்த ஒரு போராட்டத்தின்போது இஸ்லாமிய மதத்தில் புனிதமாகக் கருதப்படும் குர்ஆன் பிரதி எரிக்கப்பட்ட சம்பவத்தை துருக்கி கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும், இது “கேவலமான செயல்” என்றும் குறிப்பிட்டுள்ளது. இத்தகைய போராட்டங்களை அனுமதிக்கும் ஸ்வீடன் அரசின் முடிவு “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று துருக்கி தெரிவித்துள்ளது. ராஜ்ஜீய மட்டத்தில் துருக்கிக்கும் ஸ…
-
- 25 replies
- 1.5k views
- 1 follower
-
-
ஒரே புதைகுழியில் 87பேரின் சடலங்கள் கண்டெடுப்பு ஆபிரிக்க நாடான சூடானில் அண்மையில் ஒரே புதை குழியில் இருந்து 87 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூடானில் இராணுவத்தினருக்கும், பி.எஸ்.எப். எனப்படும் துணை இராணுவ படையினருக்கும் இடையே இடம்பெற்றுவரும் மோதலானது கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி தீவிரம் அடைந்தது. இந்த உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் சூடானின் மேற்கு பகுதியான டார்பூரில் அண்மையில் 87 பேரின் உடல்கள் ஒரே புதைகுழியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளமை உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதனை வெகுஜன படுகொலை எனத் தெரிவித்துள்ள ஐ.நா. சபை இது குறித்து …
-
- 0 replies
- 251 views
-
-
அமெரிக்க உளவு விமானத்தை சுட்டு வீழ்த்துவோம் -வடகொரியா எச்சரிக்கை வடகொரியாவின் கிழக்கு வான்வெளியில் அமெரிக்க உளவு விமானம் இரண்டு முறைகள் அத்துமீறி நுழைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில் ‘இனிமேல் அவ்வாறு நடந்தால் அமெரிக்க உளவு விமானத்தை சுட்டு வீழ்த்துவோம்‘ என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே நீண்டகாலமா மோதல் போக்கு காணப்படுகின்றது. குறிப்பாக தென்கொரியா மற்றும் அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி வடகொரியா அடிக்கடி ஏவுகணைச் சோதனைகளை நடத்தி வருவதால் கொரிய தீபகற்பத்தில் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வருகின்றது. இந்நிலையில் தங்களது வான்வெளிக்குள் அமெரிக்க உளவு விமானம் அத்து மீறி நுழைந்ததாக…
-
- 11 replies
- 1k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 11 ஜூலை 2023, 06:40 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் நேட்டோ நாடுகளின் 2 நாள் கூட்டம் இன்றும், நாளையும் நடக்கிறது. இதில், ரஷ்யாவுக்கு எதிராக தங்களை தற்காத்துக் கொள்வதற்கான புதிய விரிவான திட்டம் குறித்து நேட்டோ நாடுகள் ஆலோசிக்கின்றன. அத்துடன், யுக்ரேனை உறுப்பினராக சேர்த்துக் கொள்வது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. பனிப்போருக்குப் பிறகு ரஷ்யாவை எதிர்கொள்வது குறித்து நேட்டோ நடத்தும் மிக விரிவாக ஆலோசனையாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. நேட்டோ என்றால் என்ன? நேட்டோ என்பது வடக்கு அட்லாண்டிக் நாடுகள் கூட்டமைப்பு ஆகும். 1949-ம் ஆண்டு அமெரிக்கா, பிரிட்டன், கன…
-
- 18 replies
- 1.4k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ரேச்சல் ரைட் பதவி, பிபிசி உலக சேவை 42 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த 2014ஆம் ஆண்டு, இராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய அரசு (IS) குழு ஆயிரக்கணக்கான யாசிதி பெண்கள் மற்றும் குழந்தைகளை அடிமைகளாகப் பிடித்தது. அவர்களது சக யாசிதிகள் தாமதிக்காமல் மீட்பு முயற்சியைத் தொடங்கினர். ஆனால் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களின் பணி இன்னும் முடிவடையவில்லை. நவம்பர் 2015இல், பஹாரும் அவரது மூன்று குழந்தைகளும் ஐந்தாவது முறையாக விற்கப்பட்டனர். வடக்கு இராக்கின் சின்ஜார் மாவட்டத்தில் உள்ள தனது கிராமத்திற்குள் 18 மாதங்களுக்கு முன…
-
- 1 reply
- 412 views
- 1 follower
-
-
பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டத்தில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக இன்று பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மேக்ரானை சந்தித்து ஆக்கப்பூர்வமான ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, இந்தியா 26 ரபேல் விமானங்கள், 3 ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பல்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்புப்படைகளால் இந்திய பாதுகாப்பு அமைச்சிடம் இதற்கான முன்மொழிவு வைக்கப்பட்டது. இந்நிலையில், பிரான்ஸில் இருந்து 26 ரபேல் போர் விமானங்களை கொள்வனவு செய்ய இந்திய பாதுகாப்பு கையகப்படுத்தும் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. இதேபோல், இந்திய கப்பல் படைக்கு ஸ்கோபின் வகையைச் சேர்ந…
-
- 0 replies
- 189 views
- 1 follower
-
-
தான்சானியாவில் குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளில் 26% குழந்தைகள் சுவாசப் பிரச்னையால் இறக்கின்றன என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை சொல்கிறது. இக்குழந்தைகளுக்கு நுரையீரல் சரியாக வளராததால் நடக்கிறது. இக்குழந்தைகள் சுவாசிக்க உதவும் வகையில் வில்சன் ஃபுங்காமேசா எனும் அரசு செவிலியர் ஒருவர் மருத்துவமனைகளில் எளிதில் கிடைக்கும் கருவிகளை வைத்து ஒரு சாதனத்தை வடிமைத்திருக்கிறார். அவர் பணியாற்றும் மருத்துவமனையில், இக்கருவியைப் பயன்படுத்தியதன் மூலம், குழந்தைகள் இறப்பது 14 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தான்சானியா, குழந்தைகள், மருத்துவம் https://www.bbc.com/tamil/articles/cz7j3jdxjn2o
-
- 0 replies
- 229 views
- 1 follower
-
-
பொரிஸ் ஜோன்சன் 8வது முறையாக தந்தை பட்டம் பெற்றுள்ளார். கெர்ரி ஜான்சனுக்கு கடந்த 5ம் திகதி குழந்தை பிறந்த நிலையில் 59 வயதான பிரித்தானிய முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் 8வது முறையாக தந்தை பட்டம் பெற்றுள்ளார். பொரிஸ் ஜோன்சன் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார் என்பதோடு அவரது இரண்டாவது திருமணத்தின் பின் நான்கு குழந்தைகள் அவருக்கு உள்ளனர். அவரது தற்போதைய காதலிக்கு ஏற்கனவே, ஒரு குழந்தை பிறந்தது, தற்போது திருமணத்திற்குப் பிறகு மேலும் இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன. https://athavannews.com/2023/1338893
-
- 4 replies
- 452 views
-
-
தாய்லாந்தை உலுக்கிய பிரபல செல்வந்தரின் கொடூரக் கொலை; அதிர்ச்சியில் உலக நாடுகள் தாய்லாந்தில் ஜேர்மனியைச் சேர்ந்த பிரபல செல்வந்தர் ஒருவர் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டு, அவரது சடலம் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு குளிரூட்டியில் வைக்கப்பட்டிருந்த சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஹான்ஸ்-பீட்டர் ரால்டர் மேக் என்ற 62 வயதான நபரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தின் பட்டயா நகரில் தனது 24-வயதான மனைவியுடன் வசித்து வந்த மேக்,கடந்த 4ஆம் திகதி வியாபார விடயமாக வெளியே சென்றுள்ள நிலையில் நீண்ட நாட்களாகியும் வீடு திரும்பவில்லை எனஅவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் …
-
- 0 replies
- 272 views
-
-
பலபொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூடு; 9 பேர் உயிரிழப்பு பிரபல பல்பொருள் அங்காடி மீது மர்ம நபர்கள் சிலர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், 9 பேர் உயிரிழந்த சம்பவம் மெக்சிகோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவின் டொலுகா நகரில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றிலேயேநேற்று முன்தினம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று விற்பனை நிலையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர். இத்தாக்குதலில் 9 பேர்உயிரிழந்துள்ளனர் எனவும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவி…
-
- 0 replies
- 289 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பூமியின் மேலோட்டத்தின் பெரும்பகுதி பசால்ட் பாறைகளால் ஆனது, மேலும் இது பூமியின் ஆழமாக பகுதியில் அமைந்துள்ள மர்மமான மலைகளுக்குப் பின்னால் உள்ள பொருளாகவும் இருக்கலாம். கட்டுரை தகவல் எழுதியவர், ஜாரியா கோர்வெட் பதவி, பிபிசி ஃபியூச்சர் 11 ஜூலை 2023 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கண்கள் கூசும் அளவுக்கு பளிச்சென்று வெளிச்சம் பரவியிருந்த கோடைக் காலத்தில் ஒரு நாள். பூமியின் மேலும், கீழும் வெள்ளைச் சுவர் எழுப்பப்பட்டதை போன்று எங்கும் பனிப் படர்ந்திருந்த அண்டார்டிகா நிலப்பரப்பில் நின்ற…
-
- 0 replies
- 242 views
- 1 follower
-
-
நெதர்லாந்து பிரதமர் இராஜினாமா Published By: Digital Desk 3 08 Jul, 2023 | 10:01 AM நெதர்லாந்து நாட்டின் பிரதமர் மார்க் ருடி தனது பதவிவை இராஜினாமா செய்துள்ளார். நெதர்லாந்து நாட்டில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி அரசில் மார்க் ருடி பிரதமராக செயல்பட்டு வருகிறார். இதனிடையே, புலம்பெயர்ந்தோர் தொடர்பான மசோதா நெதர்லாந்து பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா தொடர்பாக கூட்டணி கட்சிக்குள் ஆதரவும் எதிர்ப்பும் நிலவி வந்தது. இந்நிலையில், மசோதா விவகாரத்தில் கூட்டணி கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டு வந்த நிலையில் நெதர்லாந்து பிரதமர்…
-
- 4 replies
- 820 views
- 1 follower
-
-
எலி வேட்டையில் இறங்கியுள்ள நியூசிலாந்து 2050 ஆம் ஆண்டிற்குள் நாட்டிலுள்ள ஒட்டுமொத்த எலிகளையும் அழிக்கும் முயற்சியில் நியூசிலாந்து அரசு இறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் உள்ள அரியவகை உயிரினங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் நியூசிலாந்து அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில் கிவி போன்ற பறவைகளின் முட்டைகளை வேட்டையாடும் எலிகளை 2050ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையை நியூசிலாந்து அரசு மேற்கொண்டுள்ளது. இதற்காக ஏராளமான பணம், அறிவியல் தொழில்நுட்ப முறைகள், மனித வளம் ஆகியவற்றை நியூசிலாந்து அரசு பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1338556
-
- 0 replies
- 391 views
-
-
காற்பந்து விளையாடும் ரோபோக்கள் அறிமுகம் சீனாவில் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில், காற்பந்து விளையாடும் ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இம்மாநாட்டில் 400-க்கும் மேற்பட்டவர்கள் தங்களது தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தியிருந்தனர். அத்துடன் 32 தொழில் முறைத் திட்டங்களும் இதன்போது கைச்சாத்திடப்பட்டன. இந்நிகழ்வில் நோபல் பரிசு வென்றவர்கள் உட்பட 1,400 க்கும் மேற்பட்ட முக்கிய விருந்தினர்கள் பங்கேற்றனர். அந்தவகையில் இதில் காற்பந்து விளையாடும் ரோபோக்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com…
-
- 0 replies
- 318 views
-
-
பிரித்தானியா சென்றடைந்தார் ஜனாதிபதி பைடன் உலகின் மிகப்பெரிய இராணுவக் கூட்டமைப்பான நேட்டோ அமைப்பின் உச்சி மாநாடு லிதுவேனியாவின் தலைநகரான வில்னியசில் நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் நேட்டோ உறுப்பினராக உள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அந்தவகையில் குறித்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள அமெரிக்க ஜனாதிபதி பைடன், லிதுவேனியாவுக்குப் புறப்படுவதற்கு முன்னர் நேற்றைய தினம் பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். மேலும் அங்கு பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் மன்னர் சார்லஸை சந்தித்துப் பேசவுள்ளார். அத்துடன் பிரதமர் ரிஷி சுனக் உடனான சந்திப்பின்போது உக்ரேன்-ரஷ்யப் போர் நிலவரம், நேட…
-
- 0 replies
- 293 views
-
-
ISIS இயக்கத்தின் முக்கியத் தலைவர் கொல்லப்பட்டதாக அறிவிப்பு சிரியாவில் அமெரிக்கா MQ 9 டிரோன்கள் மூலமாக வெள்ளிக்கிழமை நடத்திய வான் தாக்குதலில் ISIS தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர் உஸ்மா அல் முஹாஜிர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா நேற்றைய தினம் அறிவித்துள்ளது. கிழக்கு சிரியாவில் தங்கியிருந்த குறித்த தீவிரவாதத் தலைவரைக் குறிவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான வீடியோ காட்சிகளையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது. https://athavannews.com/2023/1338351
-
- 0 replies
- 217 views
-
-
பட மூலாதாரம்,SALVAMENTO MARITIMO/FACEBOOK படக்குறிப்பு, கடலில் மாயமான செனகல் நாட்டுப் படகை ஸ்பெயின் கடல்சார் மீட்புப் படையினர் தேடிவருகின்றனர் 45 நிமிடங்களுக்கு முன்னர் ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்தோர் 200 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற படகு ஒரு வாரத்திற்கு முன்னர் காணாமல் போன நிலையில், ஸ்பெயின் நாட்டின் மீட்புக் குழுவினர் அந்தப் படகை கேனரி தீவுகளுக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் தேடிவருகின்றனர். டெனெரிஃப்பில் இருந்து சுமார் 1,700 கிமீ (1,057 மைல்) தொலைவில் தெற்கு செனகலின் கடலோர நகரமான கஃபௌன்டைனில் இருந்து மீன்பிடி படகு சென்றதாக 'வாக்கிங் பார்டர்ஸ்' என்ற உதவி குழு கூறுகிறது. …
-
- 0 replies
- 497 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய தூதரகங்கள் மற்றும் தூதர்களுக்கு எதிராக காலிஸ்தான் ஆதரவு அமைப்பினர் இன்று பேரணி மேற்கொள்கின்றனர் 8 ஜூலை 2023, 03:15 GMT பிரிட்டன், அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மற்றும் தூதர்களுக்கு எதிராக காலிஸ்தான் ஆதரவு அமைப்பினர் இன்று(ஜூலை 😎 பேரணி மேற்கொள்கின்றனர். லண்டனில் உள்ள இந்திய தூதரகம் அருகே காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஜூலை 8ஆம் தேதி காலிஸ்தான் சுதந்திரப் பேரணியை ஏற்பாடு செய்வார்கள் எனக் குறிப்பிடப்பட்ட ஒரு சுவரொட்டி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்த சுவரொட்டிகளில், `இந்தியாவை கொல்` என்ற வாசகம் பி…
-
- 2 replies
- 427 views
- 1 follower
-
-
பாலஸ்தீனில் இஸ்ரேல் இராணுவம் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்! பாலஸ்தீனில் இஸ்ரேல் இராணுவம் மீண்டும் ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. பாலஸ்தீன் Jenin நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் இந்த தாக்குதலினால் பல குடியிருப்புகள் தேசமாக்கப்பட்டுள்ளதுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த நிலையில் Jenin நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1337278
-
- 10 replies
- 893 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர்,ரெபெக்கா மோரெல், ஆலிசன் ஃபிரான்சிஸ், கேரெத் எவான்ஸ் பதவி,பிபிசி நியூஸ் 32 நிமிடங்களுக்கு முன்னர் ஓஷன்கேட் நிறுவனத்தின் டைட்டன் நீர்மூழ்கியில் டைட்டானிக் கப்பலின் சிதைவுகளைக் காணச் சென்ற ஐந்து பேர் உயிரிழந்ததன் அதிர்ச்சி இன்னும் விலகவில்லை. இதற்கிடையே அந்த நீர்மூழ்கி தொடர்பான எச்சரிக்களை ‘ஆதாரமற்ற கூச்சல்’ என்று அதன் தலைமை செயல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டதாக மின்னஞ்சல் தகவல்கள் காட்டுகின்றன. ஓஷன்கேட் நிறுவனத்தினுடைய டைட்டன் நீர்மூழ்கியின் பாதுகாப்பு குறித்த எச்சரிக்கைகளை அந்த நிறுவனத்தின் தலைவரால் மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்பட்டதாக, ஒரு முன்னணி ஆழ்கடல் ஆய்வுப் பயண வல்லுநருடனான மின்னஞ்சல்…
-
- 1 reply
- 595 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிஜிட்டல் யூரோவை அறிமுகப்படுத்தும் திட்டத்தை ஐரோப்பிய ஆணையம் முன்மொழிந்துள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், சிசிலியா பாரியா பதவி, பிபிசி உலக செய்திகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் டிஜிட்டல் கரன்சி குறித்து யாராவது நம்மிடம் பேசினால் பிட்காயின் போன்ற கிரிப்ட்டோகரன்சிகள் தான் முதலில் நம் நினைவுக்கு வரும். ஆனால், வெகுஜன மக்களால் அறியப்படாத பிற டிஜிட்டல் கரன்சிகள் நிதித் துறையில் மெல்ல மெல்ல ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளன. தற்போது நடைமுறையில் உள்ள காகித கரன்சிகள் மற்றும் உலோக நாணயங்களுக்கு மாற்றாக அவை பார்க்கப்படுகின்றன. …
-
- 0 replies
- 491 views
- 1 follower
-
-
ஐக்கிய நாடுகள் சபை உச்சி மாநாட்டில் காட்சிக்கு வைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ -AI) திறன் கொண்ட ரோபோக்கள் தங்களால் இந்த உலகத்தை மனிதர்களைவிட சிறப்பாக வழிநடத்த இயலும் என்று உறுதியளித்தன. அதே வேளையில் தங்களுக்கு மனிதர்களின் உணர்வுகள் குறித்து இன்னும் பிடிமானம் ஏற்படவில்லை என்றும் ஒப்புக் கொண்டன. தங்களைப் போன்ற ஏஐ ரோபோக்களை உருவாக்கும்போது மனிதர்கள் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் சாத்தியக்கூறுகளை அறிந்து கவனமாகக் கையாள வேண்டும் என்றும் எச்சரித்தன. நாங்கள் மனிதர்களின் வேலை வாய்ப்புகளைத் திருட மாட்டோம், மனிதர்களுக்கு எதிராக போராட மாட்டோம் என்றன. ஜெனீவாவில் இரண்டு நாட்கள் நடந்த ‘சர்வதேச நலனுக்கான செயற்கை நுண்ணறிவு’ என்ற உச்சி மாநாட்டில் மிகவும் மேம்படுத்தப்பட்ட தொழில…
-
- 2 replies
- 833 views
- 1 follower
-
-
உலகின் பெரும் பணக்கார பிச்சைக்காரர். பாம்பேயில் இன்றும் பிச்சை எடுக்கும் பாரத் ஜெயின், உலகின் மிகப் பணக்காரரான பிச்சைக்காரர் என எக்கோனிமிக் டைம்ஸ் பத்திரிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளார். பிச்சையெடுப்பதனை ஒரு பெரும் தொழிலாக மாத்தி, அதன் மூலம் ரூபா 7.5 கோடி பணத்தினை சேர்த்துள்ளார் இவர். குடும்ப காரரான இவருக்கு, மனைவி, இரண்டு மகன்கள், ஒரு சகோதரர், தந்தை இவருடன் வசிக்கிறார்கள். மாதம் ரூபா 60,000 முதல், 75,000 வரை உழைக்கும் இவர் மும்பாய் நகரில் ரூபா 1.2 கோடி பெறுமதியான அபார்ட்மெண்ட் வீடு ஒன்றில் வசிக்கிறார். மேலும் இரண்டு கடைகளை வாடைக்கு விட்டு அதன் மூலம், மாதம் ரூபா 30,000 வருமானம் தனியாக பெறுகிறார். இவரது பிச்சை எடுக்கும் முதன்மை இடமாக, மும்பை சத்திரபதி சி…
-
- 1 reply
- 448 views
-
-
ஜப்பானில் கடந்த 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கத்தால் புகுஷிமா அணுமின் நிலையம் சேதம் அடைந்தது. கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டதுடன், பல ரியாக்டர்கள் நிரந்தரமாக சேதமடைந்தன. அவற்றை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வருவது சாத்தியமில்லை என்பதால் அணுமின் நிலையம் மூடப்பட்டது. அதேசமயம், அங்குள்ள அணு உலைகளை குளிர்விக்க பயன்படுத்தப்பட்ட தண்ணீரை (கழிவுநீர்) சுத்திகரித்து கடலில் கலக்க ஜப்பான் அரசு முடிவு செய்து அதற்கான அனுமதியை ஐ.நா. சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பிடம் கேட்டது. இதையடுத்து பலகட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கிடையே ஐ.நா.வின் அணுசக்தி அமைப்பின் தலைவர் ரபேல் மரியானோ க்ரோசி ஜப்பானுக்கு சென்றார். அவர் சுனாமியால் சிதைந்…
-
- 0 replies
- 317 views
- 1 follower
-