உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26610 topics in this forum
-
வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் பதவியேற்று 10 ஆண்டுகள் நிறைவு! வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் பதவியேற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வாரம் ஒரு முக்கிய ஆளும் கட்சிக் கூட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார். கொரியாவின் தொழிலாளர் கட்சியின், 8ஆவது மத்திய குழுவின் 4ஆவது முழுமையான கூட்டம் திங்கட்கிழமை கூட்டப்பட்டது. தொற்றுநோய் எதிர்ப்பு முடக்கநிலை, அணு ஆயுதத் திட்டம் மற்றும் இயற்கை பேரழிவுகள் மீதான சர்வதேச தடைகள் ஆகியவற்றால் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளை வட கொரியா எதிர்கொள்ளும் போது கட்சி மற்றும் அரசாங்க அதிகாரிகளின் கூட்டம் நடக்கின்றது. இந்த வார சந்திப்பு எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தெரியவில்லை. ஆனால், 2019இல், ஒரு முழுமையான கூட்டம் நான்கு ந…
-
- 0 replies
- 205 views
-
-
ஒமிக்ரோன் எதிரொலி: கடுமையான கொவிட் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தும் பிரான்ஸ்! ஓமிக்ரோன் மாறுபாடு குறித்த கவலைகளுக்கு மத்தியில், கடுமையான கொவிட் கட்டுப்பாடுகளை பிரான்ஸ் அறிவித்துள்ளது. எதிர்வரும் ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி முதல், தொலைதூரத்தில் பணிபுரிவது கட்டாயமாக்கப்படும். மேலும், பொதுக் கூட்டங்களில் உள்ளரங்க நிகழ்வுகளுக்கு 2,000பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். சனிக்கிழமையன்று பிரான்ஸ் 100,000க்கும் மேற்பட்ட புதிய நோய்த்தொற்றுகளைப் பதிவு செய்ததால் இந்த செய்தி வந்துள்ளது. இதுவே பிரான்ஸில் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து நாட்டில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும். ஆனால், பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மக்ரோன், புத்தாண்டை முன்னிட்டு முடக்கநிலை உத்தரவை கொண்டு …
-
- 0 replies
- 252 views
-
-
ஆப்கான் பெண்கள் வெளியில் செல்லத்தடை : தலிபான்கள் புதிய உத்தரவு ஆண் துணையில்லாமல் பெண்கள் நீண்ட தூர பயணம் மேற்கொள்ள முடியாது என ஆப்கானிஸ்தானை நிர்வகித்து வரும் தலிபான்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் நிர்வாகத்தை சில மாதங்களுக்கு முன் தலிபான் அமைப்பு கைப்பற்றியது. கடந்த 1990களில் பெண்களுக்கு அதிகளவு கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்திருந்தனர். தற்போது மீண்டும் நிர்வாகம் அவர்களிடம் வந்துள்ளதால் பெண்கள் அச்சமடைந்துள்ளனர். பாடசாலைகளில் மேல்நிலைப் படிப்புகளில் பெண்களுக்கு அனுமதி அளிக்கப் படவில்லை. சமீபத்தில் வெளியிட்ட உத்தரவில், தொலைக்காட்சிகளில் பணிப்புரியும் பெண் நிருபர்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், முழு உடலை மறைக்கும் …
-
- 0 replies
- 268 views
-
-
மேற்கு லிபியாவில் படகு விபத்து: 27 புலம்பெயர்ந்தவர்களின் உடல்கள் கரையொதுங்கின! ஐரோப்பிய ஒன்றியம் லிபிய கடலோரக் காவல்படைவில் குறைந்தபட்சம் 27 ஐரோப்பாவிற்குச் செல்லும் புலம்பெயர்ந்தவர்களின் உடல்கள் கரையொதுங்கியுள்ளன. திரிபோலியில் இருந்து 90 கிமீ (55 மைல்) தொலைவில் உள்ள கடற்கரை நகரமான கோம்ஸில் உள்ள இரண்டு தனித்தனி இடங்களில் சனிக்கிழமை பிற்பகுதியில் ஒரு குழந்தை மற்றும் இரண்டு பெண்கள் உட்பட புலம்பெயர்ந்தோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், மூன்று புலம்பெயர்ந்தோர் உயிருடன் மீட்கப்பட்டனர். மற்றவர்களைத் தேடும் முயற்சிகள் நடந்து வருகின்றன. உடல்களின் சிதைவின் மேம்பட்ட நிலை பல நாட்களுக்கு முன்பு கப்பல் விபத்து நடந்ததைக் குறிக்கிறது எனவும் மேலும் எண்ணிக்கை …
-
- 0 replies
- 188 views
-
-
காலநிலை மாற்றம்: விக்கிப்பீடியாவில் பொய் செல்வோருடன் போராடும் தனிப்படை மார்கோ சில்வா காலநிலை மாற்றம் தொடர்பான தவறான தகவலைக் கண்டறியும் நிபுணர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DAVID TETTA படக்குறிப்பு, டேவிட் டெட்டா விக்கிப்பீடியா முழுக்கவே நீண்டகாலமாக, காலநிலை மாற்ற மறுப்பாளர்களுடைய கருத்துளால் நிரம்பியிருந்தது. ஆனால், இப்போது உலகெங்கிலும் இருந்து பங்கெடுத்துள்ள தன்னார்வலர்களைக் கொண்ட குழு, காலநிலை மாற்றத்தை மறுப்பவர்கள் விக்கிப்பீடியாவில் தவறான தகவல்களைப் பகிர்வதைத் தடுக்க தீவிரமாக முயன்று வருகிறது. அண்டை வீடுகளைச் சேர்ந்தவர்கள், ஒருவர் மற்றவரின் வீடுக…
-
- 2 replies
- 307 views
- 1 follower
-
-
இது பல தசாப்தங்களாக உருவாக்கத்தில் இருக்கும் ஒரு தருணம். ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி, அடுத்த தசாப்தத்தில் நாசாவின் முதன்மையான விண்வெளி கண்காணிப்பு, கிறிஸ்துமஸ் காலை வெற்றிகரமாக ஏவப்பட்டது. தொலைநோக்கி 7:20 a.m. ET மணிக்கு பிரெஞ்சு கயானாவில் உள்ள ஐரோப்பாவின் ஸ்பேஸ்போர்ட்டில் இருந்து ஏரியன் 5 ராக்கெட்டின் மேல் உயர்த்தப்பட்டது. "நாசாவெப் விண்வெளி தொலைநோக்கியின் லிஃப்டாஃப் எங்களிடம் உள்ளது!" நாசா ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. "காலை 7:20 மணிக்கு ET (12:20 UTC), அறிவியலின் புதிய, அற்புதமான தசாப்தத்தின் ஆரம்பம் விண்ணில் ஏறியது. #UnfoldTheUniverseக்கான வெப்பின் நோக்கம், விண்வெளி பற்றிய நமது புரிதலை நமக்குத் தெரிந்தபடியே மாற்றிவிடும்." தொற்றுநோய் மற்றும்…
-
- 0 replies
- 309 views
- 1 follower
-
-
கப்பல் கவிழ்ந்த பகுதியில் மீட்பு பணிகளை பார்வையிடுவதற்காக காவல்துறை மந்திரி செர்ஜ் கெல்லே சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. ஆப்பிரிக்க கண்டத்தின் தீவு நாடான மடகாஸ்கரில் சுமார் 130 பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல், நேற்று முன்தினம் இந்திய பெருங்கடலில் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. கடலோர காவல் படையினர் உதவியுடன் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. 45 பேர் உயிருடன் மீட்கப்பட்டு கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். காணாமல் போன 20 பேரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். இதற்கிடையே, மீட்பு பணிகளை பார்வையிடுவதற்காக காவல்துறை மந்திரி செர்ஜ் கெல்லே ஹெலிகாப்டரில் சென்றார். அவருடன் பாதுகாப்புக்கு போலீசார…
-
- 2 replies
- 444 views
-
-
ரஷ்யாவில் 70 குழந்தைகளை தத்தெடுத்த கிறிஸ்தவ பாதிரியார்: பாலியல் வல்லுறவு செய்ததாக 21 ஆண்டுகள் சிறை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,ORENBERG DI ரஷ்யாவில் 70 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்ததாகக் கூறும் பழமைவாத கிறிஸ்தவ பாதிரியாராக இருந்த ஒருவருக்கு குழந்தைகளிடம் பாலியல் வல்லுறவு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு ரஷ்யாவில் யுரல் மலைத் தொடர் அமைந்துள்ள பகுதியில் இருக்கும் இவரது தேவாலயத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பல குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்ததாகவும், அவர்களிடம் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதாகவும் நிக்கோலாய் ஸ்ட்ரெம்ஸ்கை எனும் இவர்மீது …
-
- 0 replies
- 231 views
- 1 follower
-
-
ஒமிக்ரோன் எதிரொலி: கிறிஸ்மஸில் விமான பயணங்களுக்கு இடையூறு! கிறிஸ்மஸில் மில்லியன் கணக்கான மக்கள் பயண இடையூறு மற்றும் அதிகரித்த கொவிட் கட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றனர். அதிகரித்து வரும் ஒமிக்ரோன் மாறுபாடு காரணமாக விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதோடு, பாதுகாப்புக் கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. இத்தாலி, ஸ்பெயின் மற்றும் கிரேக்கம் ஆகிய நாடுகள் மீண்டும் பொதுவெளியில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளன. வடக்கு ஸ்பெயினில் உள்ள கேட்டலோனியா, ஒரே இரவில் முடக்கநிலை உத்தரவை விதித்துள்ளது. மேலும் நெதர்லாந்து கடுமையான முடக்கநிலையில் நிலையில் உள்ளது. மற்ற வகைகளை விட ஓமிக்ரோன் லேசானது என்று ஆரம்பகால கண்டுபிடிப்புகள் இருந்தபோதிலும், விஞ்ஞானிகள் தொற்ற…
-
- 0 replies
- 235 views
-
-
கிழக்கு உக்ரைனில் முழுமையான போர் நிறுத்தம்! கிழக்கு உக்ரைனில் முழுமையான போர் நிறுத்தம் மேற்கொள்ள ரஷ்யா, உக்ரைன், ஐரோப்பிய பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உக்ரைனுக்கான ஐரோப்பிய பாதுகாப்பு ஒத்துழைப்பின் தூதர் மிக்கோ கினூனென் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிழக்கு உக்ரைனில் உக்ரைன் அரசாங்கப் படையினருக்கும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே முழுமையான போர் நிறுத்தம் மேற்கொள்வது தொடர்பாக ரஷ்யா, உக்ரைன், ஐரோப்பிய பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில், கடந்த ஆண்டு ஜூலை 22ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாகவும் உறு…
-
- 0 replies
- 234 views
-
-
ஹொங்கொங்கில் தியானென்மென் சதுக்க படுகொலையை நினைவு கூரும் புகழ்பெற்ற ஸ்தூபி அகற்றம்! ஹொங்கொங் பல்கலைக்கழகத்திலிருந்து தியானென்மென் சதுக்க படுகொலையை நினைவு கூரும் புகழ்பெற்ற ஸ்தூபி, அகற்றப்பட்டுள்ளது. இந்த நினைவுச் சின்னத்தை அகற்றும்படி கடந்த ஒக்டோபர் மாதம், ஹொங்கொங் பல்கலைக்கழகம் ஆணையிட்டதற்கு அமைய நேற்று (புதன்கிழமை) இந்த சிலை அகற்றப்பட்டுள்ளது. ‘இந்த முடிவு, வெளியிலிருந்து வந்த சட்ட அறிவுரை மற்றும் ஆபத்தை ஆராய்ந்து பல்கலைக்கழக நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வலுவிழந்த சிலையால் ஏற்படக்கூடிய ஆபத்தையும் பல்கலைக்கழகம் கருத்தில் கொண்டது’ என பல்கலைக்கழக அறிக்கை தெரிவிக்கிறது. 8 மீட்டர் உயரம் கொண்ட அந்த செம்பு ஸ்தூபி இரவோடு இரவாக கட்டுமானத்…
-
- 1 reply
- 310 views
-
-
சீனா அமெரிக்க உள்ளிட்ட மேற்கு நாடுகளை ஆயுத போட்டியில் முந்தப்போவது எப்படி? - விரிவான வரைகலை விளக்கம் டேவிட் பிரவுன் பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சீனா தனது படைகளை அதிவேகமாக பெருக்கிக் கொண்டிருக்கிறது. ஏவுகணை தொழில்நுட்பம், அணு ஆயுதங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் அதன் முன்னேறும் வேகம் பல மேற்கத்திய நிபுணர்களிடையே தீவிர கவலையை ஏற்படுத்தியுள்ளன. ராணுவ ஆற்றல் அடிப்படையிலான உலகளாவிய சமநிலையில் திட்டவட்டமான மாற்றம் நடந்து வருவதாக அவர்கள் நம்புகிறார்கள். 2035-ஆம் ஆண்டுக்குள் சீனாவின் படைகளை நவீனமயமாக்குமாறு அதிபர் ஸீ ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். 2049ஆம் ஆண…
-
- 0 replies
- 440 views
- 1 follower
-
-
ஸ்பெயினில் பொதுவெளியில் முகக்கவசம் அணிவது கட்டாயம்: ஜேர்மனி, பின்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் கட்டுப்பாடுகள்! ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், கொவிட்-19 நோய்த்தொற்றுகளின் வியத்தகு உயர்வுக்கு பதிலளிக்கும் விதமாக, வெளியில் கட்டாய முகக்கவசத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். அத்துடன், இராணுவத்தின் அதிக ஈடுபாட்டுடன் தடுப்பூசி பூஸ்டர் திட்டத்தை முடுக்கி விடுவதாகவும் அவர் அறிவித்தார். தற்போது ஸ்பெயினில் கொவிட் தொற்று வேகமெடுத்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஓமிக்ரோன் மாறுபாடு ஐரோப்பா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. மேலும் இப்பகுதி மீண்டும் தொற்றுநோயின் மையத்தில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. ஸ்பெயினில், இந்த மாறுபாடு கிட்டத்தட்ட பா…
-
- 0 replies
- 206 views
-
-
ஒமிக்ரோன் தொற்றால் ஆபத்து குறைவாக இருப்பதாக ஆய்வில் தகவல்! டெல்டா மாறுபாட்டை விட ஓமிக்ரோன் மாறுபாடு லேசான நோயை ஏற்படுத்தக்கூடும் என ஆரம்ப ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆரம்ப ஆய்வுகளை கண்டறிந்த பின்னர், கொவிட் தரவைக் கண்காணித்து வருவதாக பிரித்தானிய அரசாங்கம் கூறுகிறது. இந்த கண்டுபிடிப்புகள் நல்ல செய்தி என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஆனால் ஒரு பெரிய அலை தொற்றுகள் இன்னும் தேசிய சுகாதார சேவையை மூழ்கடிக்கக்கூடும் என்று எச்சரித்தனர். நேற்று (புதன்கிழமை) முதல் முறையாக 100,000க்கும் மேற்பட்ட புதிய தினசரி நோய்த்தொற்றுகளை பிரித்தானியா தெரிவித்துள்ளது. வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் புதிய விதிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இங்கிலாந்தில் மேலும் தடைகள் எதுவும…
-
- 0 replies
- 289 views
-
-
டென்மார்க்கில் குற்றம் புரிந்தால் இனி கொசோவோ நாட்டில் சிறை December 23, 2021 டென்மார்க் அதன் வெளிநாட்டுச் சிறைக் கைதிகளை கோசோவோ நாட்டில் உள்ள சிறைகளுக்கு மாற்றவுள்ளது. அதற்காக இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஒன்று எட்டப்பட்டிருக்கிறது.முதற் கட்டமாக 300 சிறை அறைகளை டென்மார்க் கைதிகளுக்கு வழங்குவதற்கு கொசோவோ முன்வந்துள்ளது. அடுத்த ஐந்து வருட காலப்பகுதியில் சிறைகளுக்கு வாடகையாக டெனிஷ் அரசு வருடாந்தம் 15 மில்லியன் ஈரோக்களைக் வழங்கும். கொசோவோ தலைநகர் பிரிஸ்டினாவில் இருந்து சுமார் 50 கிலோ மீற்றர்கள் தொலைவில் Gjilan என்ற இடத்தில் அமைந்துள்ள சிறைக்குக் கைதிகளை அனுப்புவது எதிர்வரும் 2023 ஆம் ஆண்டில் இருந்துஆரம்பிக்கப்படும். கைதிகள் டென்மா…
-
- 0 replies
- 302 views
-
-
இளவரசி ஹயா: ரூ.5,500 கோடி ஜீவனாம்சம் தர துபாய் ஷேக்குக்கு உத்தரவு - மலைப்பூட்டும் மண முறிவு வழக்கின் தீர்ப்பு பிராங்க் கார்ட்னர் பிபிசி பாதுகாப்பு செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஷேக் முகமது பின் ரஷித் அல்-மக்தூம் மற்றும் அவரது பிரிந்த மனைவி, இளவரசி ஹயா பின்ட் அல்-ஹுசைன் இது பிரிட்டிஷ் சட்ட வரலாற்றில் மிகப்பெரிய மண முறிவு வழக்கு என்று விவரிக்கப்படுகிறது. துபாயின் பெரும் கோடீஸ்வரர் ஆட்சியாளர் மற்றும் அவரிடம் இருந்து பிரிந்து சென்ற மனைவிக்கு ஜீனவானம்சமாக £550 மில்லியன், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் ஐந்தாயிரத்து ஐநூறு கோடிக…
-
- 0 replies
- 501 views
- 1 follower
-
-
கிறிஸ்துமஸுக்கு முன் இங்கிலாந்தில் புதிய கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படாது – பிரதமர் அறிவிப்பு கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னர் புதிய கட்டுப்பாடுகள் எதுவும் அமுல்படுத்தப்படாது என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். அரசாங்கம் தொடர்ந்தும் நிலைமையை கண்காணித்து வருவதாக குறிப்பிட்ட பிரதமர், தேவை ஏற்பட்டால் கிறிஸ்மஸுக்குப் பின்னர் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரலாம் என கூறினார். ஒமிக்ரோன் தொற்றின் தீவிரத்தன்மை மற்றும் தடுப்பூசிகளின் தாக்கம் ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டு முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்தார். மேலும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் மக்கள் கலந்துகொண்டாலும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என பொரிஸ் ஜோன்சன் கேட்டுக்கொண்டார். ஸ்க…
-
- 0 replies
- 208 views
-
-
நான்காவது தடுப்பூசியை செலுத்த இஸ்ரேல் தீர்மானம் புதிய ஒமிக்ரோன் மாறுபாட்டை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒருபகுதியாக நான்காவது தடுப்பூசியை வழங்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தொற்றுநோய் நிபுணர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு நான்காவது தடுப்பூசியை பரிந்துரைத்துள்ளனர். இந்த திட்டத்தை வரவேற்றுள்ள இஸ்ரேல் பிரதமர் நஃப்டலி பென்னட், அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார். ஒமிக்ரோன் தொற்று உறுதியான முதலாவது மரணம் எங்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து அந்நாட்டு அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. இஸ்ரேலில் குறைந்தது 340 ஒமிக்ரோன் தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 438 views
-
-
லிபிய கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்துக்களில் 160 க்கும் மேற்பட்டோர் பலி கடந்த வாரத்தில் லிபியா கடற்பரப்பில் இரண்டு வெவ்வேறு கப்பல் விபத்துகளில் 160 க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஐ.நா குடியேற்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவில் சிறந்த வாழ்க்கையைத் தேடும் அகதிகள் சம்பந்தப்பட்ட மத்தியதரைக் கடலில் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகரமான சம்பவம் இதுவாகும். இந்த இறப்புகளினால் மத்திய மத்தியதரைக் கடல் பாதையில் இந்த ஆண்டு நீரில் மூழ்கி இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 1,500 ஆக உயர்வடைந்துள்ளது. சமீபத்திய மாதங்களில் திரிபோலியில் அகதிகள் மீதான அடக்குமுறையை அந் நாட்டு அதிகாரிகள் முடுக்கிவிட்டதால், லிபியாவிலிருந்து ஐரோப்பிய நடுகள…
-
- 0 replies
- 199 views
-
-
வேல்ஸில் உள்ள அனைத்து விளையாட்டு நிகழ்வுகளிலும் பார்வையாளர்களுக்கு தடை! ஓமிக்ரோன் கொவிட் மாறுபாட்டின் பரவலைக் கட்டுப்படுத்த, எதிர்வரும் டிசம்பர் 26ஆம் திகதி முதல் வேல்ஸில் உள்ள அனைத்து விளையாட்டு நிகழ்வுகளிலும் பார்வையாளர்கள் தடை செய்யப்படுவார்கள் என வேல்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. அனைத்து உட்புற, வெளிப்புற, தொழில்முறை மற்றும் சமூக விளையாட்டு நிகழ்வுகளுக்கும் இது பொருந்தும். விளையாட்டு கழகங்கள் மற்றும் அரங்குகளை ஆதரிக்க மூன்று மில்லியன் பவுண்டுகள் பார்வையாளர் விளையாட்டு நிதி கிடைக்கும் என பொருளாதார அமைச்சர் வாகன் கெதிங் தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸுக்குப் பிந்தைய விருந்தோம்பல் கட்டுப்பாடுகள் குறித்து விவாதிக்க அமைச்சர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) பின்…
-
- 1 reply
- 209 views
-
-
ஹொங்கொங் சட்டசபைத் தேர்தல்: பெய்ஜிங் சார்பு வேட்பாளர்கள் அமோக வெற்றி! ஹொங்கொங்கின் சர்ச்சைக்குரிய சட்ட மேலவை (LegCo) தேர்தலில், பெய்ஜிங் சார்பு வேட்பாளர்கள் அமோக வெற்றியைப் பெற்றுள்ளனர். இந்த வேட்பாளர்களில் சிலர் மத்திய வாக்கு எண்ணும் மையத்தில் மேடையில் ஆரவாரம் செய்து வெற்றி உறுதி என்று கோஷமிட்டனர். மேலும், கிட்டத்தட்ட அனைத்து இடங்களும் பெய்ஜிங் சார்பு மற்றும் ஸ்தாபன சார்பு வேட்பாளர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன. ஹொங்கொங்கின் தேர்தல் முறையில் சீனா மிகப்பெரிய மாற்றங்களைச் செய்த பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். அதிகாரிகளின் கூற்றுப்படி, 30.2 சதவீத வாக்காளர்கள் மட்டுமே வாக்கெடுப்பில் பங்கேற்றனர். 2016ஆம் ஆண்டு சட்டமன்ற வாக்கெடுப்புடன் ஒப்பிடும…
-
- 15 replies
- 651 views
-
-
பிலிப்பைன்ஸ் சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208ஆக உயர்வு! பிலிப்பைன்ஸின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை தடம் புரட்டிய, சுப்பர் சூறாவளி ராயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் 239பேர் காயமடைந்திருப்பதாகவும், 52பேர் காணவில்லை என உள்ளூர் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மணிக்கு 195 கிலோமீட்டர் வேகத்தில் பிலிப்பைன்ஸின் தென் கிழக்கு தீவுகளில் வீசிய சுப்பர் ராய் புயலால் சுமார் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு குடியேறியுள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் என்றும் அதனால் கூடுதலாக மக்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. …
-
- 0 replies
- 439 views
-
-
அட்லாண்டிக் தீவில் இருந்து எலிகளை ஒழிக்கும் திட்டம் தோல்வி ஜோனா ஃபிஷர் சுற்றுச்சூழல் செய்தியாளர், பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,RSPB படக்குறிப்பு, கௌக் தீவு தெற்கு அட்லாண்டிக்கில் இருக்கும் கௌக் என்ற தீவில் இருந்து எலிகளை ஒழிக்கும் லட்சியத் திட்டத்தின் தலைவர், இந்தத் திட்டம் தோல்வியடைந்ததால் மனமுடைந்து இருப்பதாகக் கூறியுள்ளார். கௌக் தீவில் பொருத்தப்பட்ட ஒரு தானியங்கி கேமராவில் எடுக்கப்பட்ட காட்சிகள், எலிகளை முழுவதுமாக அகற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்ட முயற்சியிலிருந்து குறைந்தபட்சம் ஒரு எலியாவது உயிர் பிழைத்திருப்பதைச் சுட்டிகாட்டியுள்ளது. …
-
- 0 replies
- 434 views
- 1 follower
-
-
பிலிப்பைன்ஸ் சூறாவளி – உயிரிழப்பு எண்ணிக்கை 75 பிலிப்பைன்ஸைத் தாக்கிய புயல் காரணமாக குறைந்தது 75 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 195 கி.மீ. வேகத்தில் வீசிய புயல் காரணமாக 300,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் இழப்பு குறித்து முழுமையாக அறிவிக்கப்படவில்லை. போஹோலின் தற்போதைய இறப்பு எண்ணிக்கை 49 ஆக உள்ளது, மேலும் குறைந்தது 10 பேரைக் காணவில்லை என்று ஆளுநர் யாப் கூறினார். சனிக்கிழமையன்று, பிலிப்பைன்ஸின் பேரிடர் நிறுவனம், போஹோல் உட்பட இறந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக இருந்ததாகக் கூறியது. இதேவேளை நாட்டின் மிக மோசமாக பாதிக்க…
-
- 0 replies
- 211 views
-
-
கதிரியக்க நெக்லஸ் 5ஜி தாக்கத்தில் இருந்து காக்கும் என கூறி விற்பனை: தடை செய்த அதிகாரிகள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,RIVM படக்குறிப்பு, கதிரியக்கத்திலிருந்து காக்கும் என விற்பனை செய்யப்படும் பதக்கம் 5ஜி இணைய சேவையால் ஏற்படும் கதிரியக்கத்திலிருந்து காக்கும் எனக்கூறி, விற்பனை செய்யப்படும் கழுத்தில் அணியக்கூடிய நெக்லஸ் உள்ளிட்ட பிரத்யேக பொருட்கள் கதிரியக்கத்தன்மை கொண்டவையாக உள்ளன என கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக, டச்சு அணு மற்றும் கதிரியக்க பாதுகாப்பு ஆணையம் (ஏஎன்விஎஸ்), தீங்கு விளைவிக்கும் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் 10 பொருட்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இ…
-
- 0 replies
- 228 views
- 1 follower
-