உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26682 topics in this forum
-
காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் நடவடிக்கைகளை ஒடுக்க ராணுவம் அனுப்பப்படுவது குறித்து பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் பிரசாந்த் பூசன் கருத்து தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காசியாபாத்தில் உள்ள அவரது கட்சியின் தலைமை அலுவலகம் மீது நேற்று ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. கெஜ்ரிவால் வீட்டின் அருகே உள்ள இந்த அலுவலகத்திற்கு காலை 11 மணியளவில் வந்த சுமார் 50 பேர், கற்களை வீசி தாக்கியதுடன், அலுவலக ஜன்னலை அடித்து உடைத்தனர். அங்குள்ள ஊழியர்களையும் தாக்க முற்பட்டதுடன் பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. தாக்குதல் நடத்திய நபர்கள், 'இந்து ரக்சா தள்' கொடியை ஏந்தி வந்தனர். இந்த சம்ப…
-
- 0 replies
- 300 views
-
-
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்திருப்பது பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் பரபரப்பு கருத்தை வெளியிட்டுள்ளார். இன்று 48வது பிறந்த நாள் கொண்டாடும் ரஹ்மான் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’உள்ளத்திலிருந்து ஒலிக்கும் நிஜ குரலை கேட்க வேண்டும். இத்தனை புகழ் பெற்றும் அடக்கமாக இருப்பது பற்றி கேட்கிறீர்கள். நான் தேர்ந்தெடுத்துள்ள பாதை என்னை அப்படி இருக்க செய்கிறது. சர்ச்சைகளில் சிக்காமல் இருப்பதற்கு நான் எனக்காக வகுத்துள்ள கொள்கைகளே காரணம். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று, ஆட்சி அமைத்திருப்பது பற்றி கேட்கிறீர்கள். இந்திய மக்கள் விழித்துக்கொண்டிருக்கிறார்கள். இனி யாரும் அவர்களை ஏமாற்ற முடியாது. ஜெய்ஹிந்த்’’என்று கூறனார். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?PVN=11428…
-
- 0 replies
- 2.5k views
-
-
ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் நரேந்திர மோடிக்கு ஆதரவாக செயல்படும் ஊடகவியலாளர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு அவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார். அண்மையில் நாக்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கேஜ்ரிவால், பாஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியிடம் ஊடகங்கள் விலை போய்விட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். மோடியிடம் இந்திய ஊடகங்கள் விலை போய்விட்டன என கேஜ்ரிவால் பேசிய காட்சி, தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஒளிபரப்பானது. ஏற்கெனவெ பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள கேஜ்ரிவாலின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கேஜ்ரிவால் தனது பேச்சில் கூறியது: "கடந்த ஓராண்டாக ஊடகங்கள் மோடி புகழ்பாடுகின்றன. …
-
- 0 replies
- 384 views
-
-
டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சி அடுத்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. இதற்காக நாடு முழுவதும் கட்சியை பலப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. தேர்தலில் போட்டியிடுவோருக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், பாரதீய ஜனதாவுக்கு அடுத்த படியாக 3–வது பெரிய கட்சியாக மாற்றும் நடவடிக்கையில் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் இறங்கி உள்ளனர். இதற்காக இளைஞர்களிடையே ஆதரவு திரட்ட முடிவு செய்துள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாரதீய ஜனதாவுக்கு அடுத்த இடத்தை பிடிக்கவும் வியூகம் வகுத்து வருகிறது. இதற்காக நாடு முழுவதும் 300 தொகுதிகளை தேர்ந்தெடுத்து வேட்பாளர்கள் நிறுத்தப்படுக…
-
- 0 replies
- 310 views
-
-
புதுடெல்லி, ஆம்ஆத்மி கட்சியில் தேசிய அமைப்பாளர் கெஜ்ரிவாலுக்கும், அரசியல் விவகார குழுவில் இருக்கும் யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் ஆகியோருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.கட்சியில் கெஜ்ரிவாலை முன்னிலைப்படுத்துவதாக இருவரும் புகார் கூறி இருந்தனர். இதனால் இன்று நடைபெறும் தேசிய செயற்குழுவில் யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் ஆகியோர் நீக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் ஆம்ஆத்மி கட்சியின் அமைப்பாளர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் திடீரென ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை தேசிய செயற்குழுவுக்கு அனுப்பினார்.இந்த ராஜினாமாவை ஏற்பது குறித்து இன்று பிற்பகல் நடைபெறும் கட்சியின் தேசிய செயற்குழுவில்தான் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறத…
-
- 0 replies
- 280 views
-
-
உத்தர பிரதேசத்தில் அமேதி மாவட்டத்தில் ஜக்தீஷ்பூர் நகரில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாசுக்கு இளைஞர் அமைப்பினர் இன்று கறுப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இது 2வது முறையாக அவருக்கு தெரிவிக்கும் எதிர்ப்பு நடவடிக்கையாகும். லக்னோ நகரில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது, குமார் விஸ்வாஸ் மீது இளைஞர் ஒருவர் முட்டை ஒன்றை தூக்கி வீசினார். இந்நிலையில், அமேதி நகரில் ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் ஜன் விஸ்வாஸ் பேரணியில் கலந்து கொள்வதற்காக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த குமார் விஸ்வாஸ், சஞ்சய் சிங் உள்ளிட்ட மற்ற தலைவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இளைஞர்கள் சிலர் கறுப்பு கொடி காட்டினர். வருக…
-
- 0 replies
- 476 views
-
-
மும்பை, ஆம் ஆத்மி கட்சி பற்றி எங்களுக்கு எந்த வித பயமும் இல்லை என்று சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார். ஆம் ஆத்மி டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, மராட்டியத்தில் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிட போவதாகவும், இதற்காக மாநிலம் முழுவதும் ஒருங்கிணைப்பு கமிட்டி ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவித்தனர். இதனால், மராட்டியத்தில் ஆளும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்–தேசியவாத காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா–சிவசேனா கட்சிகளுக்கு நெருக்கடி முற்றி உள்ளது. தாயார் நினைவு தினம் இந்த நிலையில் நேற்று தனது தாயாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, மும்பை தாதர் சிவாஜி பார்க் பகுதியில் அமைந்து உள்ள…
-
- 0 replies
- 327 views
-
-
ஆம் ஆத்மி கட்சிக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து இதுவரை 5 கோடி ரூபாய் அளவுக்கு நிதியுதவி குவிந்துள்ளதாக அக்கட்சி இணையதளம் குறிப்பிட்டுள்ளது. இன்றுவரை அக்கட்சிக்கு சுமார் 5 கோடியே 8 லட்ச ரூபாய் அளவிற்கு நிதியுதவி குவிந்துள்ளது. இந்தியாவிலிருந்து மட்டும் அக்கட்சிக்கு 3 கோடியே 90 லட்ச ரூபாய் நிதியுதவி கிடைத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து கிடைத்துள்ள நிதியுதவியில் முதலிடத்தை அமெரிக்காவும் அதற்கடுத்து முறையே ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஐக்கிய நாடுகள் மற்றும் கனடா ஆகிய நாடுகள் பிடித்துள்ளன. 2014ல் 2014 ரூபாய் நிதியுதவி வழங்குங்கள் என்ற தங்களது விளம்பர வாசகத்தை பார்த்து 2200 பேர் அத்தொகையை வழங்கியதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. டெல்லி தேர்தலுக்கு பின் ஒரு நாளைக்கு…
-
- 0 replies
- 1.6k views
-
-
குஜராத் முதல் மந்திரியும் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி நேற்று கோவாவில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு பிறகு தனது டிவிட்டர் இணையதளத்தில் ஆம் ஆத்மி கட்சி பற்றி கடுமையாக விமர்சித்து இருந்தார். அதில் நாட்டில் நல்ல திட்டங்களை தொடர்ச்சியாக தொலைக்காட்சிகளில் தோன்றுவதால் செய்ய முடியுமா அல்லது ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளால் செய்ய முடியுமா என்று அதில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், நரேந்திர மோடியின் கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் டிவிட்டர் இணையதளத்தில் கருத்து தெரிவித்துள்ள டெல்லி காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஷகில் அகமது, ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சி நரேந்திர மோடியை கலக்கமடைய செய்துள்ளது. மோடி காங்கிரசை குற்றம் சாட்டுவது புரிகிறது. ஆனால் தற்போது ஆம் ஆத்மி …
-
- 1 reply
- 393 views
-
-
ஆம் ஆத்மி கட்சியின் வித்தை நாட்டின் வேறு எந்த பகுதியிலும் செயல்படாது என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் கோபிநாத் முண்டே தெரிவித்துள்ளார். வருகிற பாராளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பெற்ற ஆதரவை பெறாது என்று அவர் கூறியுள்ளார். தானேவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முண்டே செய்தியாளர்களிடம் பேசிய போது “ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் பெற்ற வெற்றி மற்றும் மக்களின் ஆதரவை நாட்டில் வேறு எந்த பகுதியிலும் பெற முடியாது” என்று கூறியுள்ளார். “டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஒன்றும் அதிக இடங்களில் வெற்றி பெறவில்லை. பாரதீய ஜனதா கட்சியே அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி காங்கிரஸ் கூட்டணியுடன் ஆட்சிக்கு வந்துள்ளது”. பாரதீய ஜனதா கட்சி நாட்டின் மற்ற க…
-
- 0 replies
- 299 views
-
-
ஊழலுக்கு எதிராக துவங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்றி உள்ளது. பிற மாநிலங்களிலும் இக்கட்சி வளர ஆரம்பித்துள்ளது. தமிழகத்திலும் இதன் கிளை துவக்கப்பட்டு உறுப்பினர்கள் சேர்க்கப்படுகிறார்கள். நடிகர் நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் ஆம் ஆத்மிக் கட்சியை பாராட்டி கருத்துகள் வெளியிட்டு வருகின்றனர். நடிகை நமீதாவும் பாராட்டினார். அவர் இக்கட்சியில் சேரப்போவதாக செய்திகள் வந்தன. இந்த நிலையில் நடிகர் விஜய்யும் ஆம் ஆத்மி கட்சியில் இணைய முடிவு செய்து இருப்பதாக செய்திகள் பரவி உள்ளன. விஜய் தனிகட்சி துவங்கப் போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. ஆனால் அவர் அதை உறுதிபடுத்தவில்லை. விஜய் ஆம் ஆத்மி கட்சியில் சேரப்போவதாக கூறப்படுவது உண்மையா…
-
- 0 replies
- 2.1k views
-
-
டெல்லி: ஆம் ஆத்மி சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புவோர், தாங்கள் போட்டியிட விரும்பும் லோக்சபா தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியிலும் தலா 100 பேரிடமிருந்து ஆதரவுக் கையெழுத்துப் பெற்று சமர்ப்பித்தால்தான் டிக்கெட்டுக்குப் பரிசீலிக்கப்படுவர் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. இப்படிச் செய்யாமல் யாராவது விண்ணப்பித்தால் அவர்களது பெயர் வேட்பாளர் தேர்வுக்குப் பரிசீலிக்கப்பட மாட்டாது என்றும் அக்கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி டெல்லி சட்டசபைத் தேர்தலில் 2வது இடத்தைப் பிடித்ததோடு, தற்போது காங்கிரஸ் ஆதரவோடு ஆட்சியிலும் அமர்ந்துள்ளது. அடுத்து லோக்சபா தேர்தலிலும் மகத்தான முத்திரையைப் பதிக்க அது ஆயத்தமாகி வருகிறது. இந்த நிலைய…
-
- 2 replies
- 577 views
-
-
ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாஸ் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் எதிர்த்து போட்டியிடுவேன் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் ராகுலை எதிர்த்து அமேதி தொகுதியில் கமார் விஸ்வாஸ் தேர்தல் பிரசாரம் செய்கிறார். இந்நிலையில், அமேதி தொகுதியில் அவர் பிரசாரம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல இடங்களில் சுவரெட்டிகள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்களை தேச விரோத சக்திகள் என்று ராஷ்ட்ரீய ராஷ்ட்ரவாடி கட்சி சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. http://www.dinamani.com/latest_news/2014/01/11/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE…
-
- 0 replies
- 256 views
-
-
டெல்லி அரசியலில் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு ட்விட்டரில் வாழ்த்துகள் குவிகின்றன. தொழிலதிபர்கள், நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் எல்லாவற்றுக்கும் மேல் முக்கியமாக ஆம் ஆத்மிகள் (சாமான்ய மனிதர்கள்) கெஜ்ரிவால் கட்சியின் வியப்பூட்டு வெற்றிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டெல்லி சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போதே ஆம் ஆத்மி கட்சி, இணையம் மற்றும் சமூக ஊடகத்தை முக்கிய ஆயுதமாக பயன்படுத்தியது. கட்சியின் அதிகாரபூரவ ஃபேஸ்புக் பக்கத்தின் மூலமும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. குறும்பதிவு சேவையான ட்விட்டரையும் கட்சி தீவிரமாக பயன்படுத்தியது. குறிப்பாக வாக்குப்பதிவு நெருங்கிய நிலையில் கட்சியின் தொண்டர்களும் ஆதரவாளர்களும் …
-
- 0 replies
- 467 views
-
-
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பிரசாந்த் பூஷன் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் சந்திப்பின் போது, காஷ்மீரில் உள்நாட்டு பாதுகாப்பிற்கு ராணுவம் தேவையா இல்லை வேண்டாமா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்று கூறினார். இந்த பிரச்சனைக்குரிய கருத்துக்கு பதில் அளித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இந்த கருத்துக்கு சில அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பூஷனின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காசியாபாத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தை இந்து அமைப்பினர் தாக்கினர். இந்நிலையில் பாரதீய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பிரசாந்த் பூஷன் கடுமைய…
-
- 0 replies
- 351 views
-
-
பாரதீய ஜனதா கட்சி ஆம் ஆத்மியை தீவிர சவாலாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். ஆம் ஆத்மி கட்சியை சாதாரணமாக எடுக்க வேண்டாம் என்று பாரதீய ஜனதாவுக்கு ஆர்.எஸ்.எஸ். எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தொடர்ந்து அமைதியாக இருக்க வேண்டாம் என்றும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ். பாரதீய ஜனதாவுக்கு கூறியுள்ளார். http://www.dailythanthi.com/2014-01-09-BJP-must-take-the-AAP-challenge-seriously-Mohan-Bhagwat
-
- 5 replies
- 467 views
-
-
ஆம்! சந்தேகிக்கப்பட்ட குற்றவாளிகளை நான் கொன்றேன்: டுடெர்டே ஒப்புதல் டாவோ நகரின் மேயராக இருந்த போது, குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களை,தானே கொலை செய்ததாக பிலிப்பைன்ஸ் அதிபரான ரொட்ரிகோ டுடெர்டே ஒப்புக் கொண்டுள்ளார். சந்தேகிக்கப்பட்ட குற்றவாளிகளை தானே கொலை செய்ததாக டுடெர்டே ஒப்புதல் பிலிப்பைன்ஸின் அதிபராக பதவியேற்றுக் கொண்ட பின்னர், டுடெர்டே இவ்வாறு வெளிப்படையாக ஒப்புக் கொண்டது இதுவே முதல் முறையாகும். பிலிப்பைன்ஸில் உள்ள பிரத்யேக கொலைப் படைகளில் தான் பங்கு வகித்தது குறித்து முன்னதாக டுடெர்டே ஒப்புக்கொண்டும், மறுத்தும் இருவேறு நிலைகளை வெளிப்படுத்தியிருந்தார். மனிலாவில் தொழில் அதிபர்கள் கூட்டமொன்றில் உரை…
-
- 0 replies
- 480 views
-
-
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதி காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியமான தொகுதியாக உள்ளது. இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி, சோனியாவை தொடர்ந்து அந்த தொகுதியில் ராகுல்காந்தியும் வெற்றி பெற்றார். வரும் பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அந்த தொகுதியின் பிரசார பொறுப்பை பிரியங்கா ஏற்றுள்ளார். இந்த நிலையில் அமேதி தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் குமார் விஸ்வாஸ் என்பவர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமேதி தொகுதியில் ராகுலை தோற்கடித்து காட்டுவேன் என்று சபதமிட்டப்படி இவர் தேர்தல் களத்தில் குதித்துள்ளார். நேற்று குமார் விஸ்வாஸ் அமேதி தொகுதிக்கு சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். சுமார் 100 கார்கள் பின் தொடர சென்ற அ…
-
- 0 replies
- 306 views
-
-
பாராளுமன்றத்துக்கு வரும் ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஊழல் எதிர்ப்பு கோஷம் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஊழலை ஒழிப்போம் என்று கூறி டெல்லியில் ஆட்சிக்கு வந்திருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி, அதே கோஷத்தை முன் வைத்து பாராளுமன்ற தேர்தலையும் சந்திக்க திட்டமிட்டுள்ளது. அந்த கட்சி ஊழல் குற்றச் சாட்டுகளில் சிக்காத, நல்ல இமேஜ் உள்ளவர்களை நாடெங்கும் சுமார் 300 தொகுதிகளில் நிறுத்த ஆலோசித்து வருகிறது. இது காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிகளின் வெற்றியை கணிசமாக பாதிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ், பா.ஜ.க. இரு கட்சிகளும் தங்களது தேர்தல் வியூகத்தை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளன.…
-
- 0 replies
- 334 views
-
-
நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். கடந்த 13ந் தேதி முதல் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து மாறி 7 வது மாடியில் உள்ள தனி வார்டில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது மேல்சிகிச்சைக்காக மனைவி, மகள் மற்றும் மருமகன் தனுஷ் ஆகியோருடன் இன்று (27.05.2011) இரவு 11 மணிக்கு மேல் ரஜினிகாந்த் சிங்கப்பூர் செல்கிறார். ராமச்சந்திரா மருத்துவனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக ரஜினியை அழைத்து செல்கிறார்கள். அந்த ஆம்புலன்ஸ் விமானத்தின் அருகே செல்லும் வகையில் சிறப்பு அனுமதி வாங்கியிருக்கிறார்கள். இதனால் ர…
-
- 0 replies
- 761 views
-
-
[size=4]நெதர்லாந்து ஆம்ஸ்டர்டாம் ஷிபோல் விமான நிலையம், இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட குண்டுகள் மீட்கப்பட்டதையடுத்து, அங்கு ஏர்போர்ட்டின் ஒரு பகுதி மூடப்பட்டது. [/size] [size=4]இதுகுறித்து, ஷிபோல் ஏர்போர்ட் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது, 1945ம் ஆண்டில் நிகழ்ந்த இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட குண்டுகள் கைப்பற்றப்பட்டன. இது, அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, [/size] [size=4]முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏர்போர்ட்டின் சி டெர்மினல் அவசரமாக மூடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, பல்வேறு விமானங்களின் சேவைகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.[/size] http://tamil.yahoo.com/%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%A3%E0%AF%8D%E0%A…
-
- 7 replies
- 806 views
-
-
ஆயிரக்கணக்கான குழந்தைகளை பலாத்காரம் செய்த அமெரிக்கப் பாதிரியார்கள்: ஜூரிகளின் அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் கோப்புப் படம். டான்சில்ஸ் அறுவை சிகிச்சை முடிந்த 7 வயது சிறுமியைப் பார்க்கச் சென்ற ஒரு பாதிரியார் அந்தச் சிறுமியைப் பலாத்காரம் செய்துள்ளார். இன்னொரு பாதிரியார் 9 வயதுச் சிறுவனை மோசமான முறையில் பலாத்காரம் செய்து பிறகு புனித நீரால் சிறுவனின் வாயைக் கழுவியதும் பெரிய சர்ச்சைக்குள்ளாகியது. இன்னொரு சிறுவனைப் பலாத்காரம் செய்து விட்டு அவரையே பாவமன்னிப்புக் கோர வைத்துள்ளார் இன்னொரு பாதிரி. பென்சில்வேனியாவில்சுமார் 300 ரோமன் கத்தோலிக்க பாதிரிமார்களின் மூலம் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமியர்கள் இவர…
-
- 0 replies
- 365 views
-
-
ஆயிரக்கணக்கான தமிழர்களை பிரிட்டன் திருப்பி அனுப்பவுள்ளது லண்டனிலிருந்து எஸ்.நாதன் பிரிட்டனில் பல வருடங்களுக்கு முன்னர் தஞ்சம்கோரிய ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டு வருகிறார்கள். நாளொன்றுக்கு இருவர் அல்லது மூவர் என்ற எண்ணிக்கையில் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்போதும் பலர் பல இலட்சம் ரூபாவை செலவு செய்து பிரிட்டன் செல்கிறார்கள். அவர்கள் அங்கு தஞ்சம் கோருவதற்கு முன்னர் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக உள்ளனர். இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது: 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை தஞ்சம் கோரி சென்றவர்கள் கடவுச்சீட்டுகளை குடிவரவு அதிகாரிக்கு காட்ட வேண்டும் என்பது அவசியமானதாக இரு…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரையில் தஞ்சம்- ஆபத்தான காட்டு தீயில் சிக்கியது அவுஸ்திரேலிய நகரம் அவுஸ்திரேலியாவின் விக்டோரியவின் மலகூட்டா நகரம் மிகவும் ஆபத்தான காட்டு தீயின் பிடியில் சிக்குண்டுள்ளதை தொடர்ந்து அந்த நகரை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரையில்தஞ்சமடைந்துள்ளனர். மலகூட்டா நகரம் மிகவும் ஆபத்தானகாட்டு தீயில் சிக்குண்டுள்ளதுடன் அந்த நகரத்திலிருந்து வெளியேறுவதற்கான பாதையும் துண்டிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அந்த நகரின் மக்களும் சுற்றுலாப்பயணிகளும்கடற்கரையில் தஞ்சமடைந்துள்ளனர். பெருமளவு மக்கள் வணிக வளாகங்கள்மற்றும் உடற்பயிற்சி நிலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மலகூட்டாவின் வணிகவளாகத்தின் உரிமையாளரான ரொபேர்ட…
-
- 34 replies
- 3.7k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கொசோவோவில் செர்பிய ராணுவப் படைகளிடமிருந்து தப்பித்த அகதிகள் 1999-ல் அல்பேனியா வந்தனர். 25 ஜூலை 2023, 03:26 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தை விட இறுதியில் அதிக யூதர்களைக் கொண்ட வெகு சில ஐரோப்பிய நாடுகளில் ஒன்று அல்பேனியா. ஜெர்மனி, ஆஸ்த்ரியா போன்ற நாடுகளிலிருந்து நாஜி ஆட்சியின் துன்புறுத்தல்களிலிருந்து தப்பித்து ஓடி வந்த ஆயிரக்கணக்கான அகதிகளை, அல்பேனியர்கள் - பெரும்பாலும் இஸ்லாமியர்கள் - தங்கள் இல்லங்களுக்கு வரவேற்று பாதுகாப்பு அளித்தனர். ஏற்கெனவே 1938ல், போருக்கு ஓராண்டு முன்பே, அல்பேனி…
-
- 0 replies
- 284 views
- 1 follower
-