உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26586 topics in this forum
-
அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தக ஒப்பந்தத்தில் உடன்பாடு! அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒரு வர்த்தக ஒப்பந்த கட்டமைப்பை ஞாயிற்றுக்கிழமை (27) எட்டியுள்ளன. இது, உலகின் மிகப்பெரிய பொருளாதார பங்காளிகளில் இருவருக்கு இடையே பல மாதங்களாக நீடித்து வந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து. மேலும், உலகளாவிய வர்த்தகத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கைக் கொண்ட இரு நட்பு நாடுகளுக்கும் இடையே ஒரு பெரிய வர்த்தகப் போரை தவிர்த்தது. ஸ்கொட்லாந்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இடையேயான சமரச பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், அனைத்து ஐரோப்பிய ஒன்றியப் பொருட்களுக்கும் 15% அமெரிக்க வரியை விதிக்க கூட்டாக ஒப்புக் கொள்ளப்பட்டது. இது ஆகஸ…
-
- 0 replies
- 91 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் ஜெர்மி போவன் சர்வதேச ஆசிரியர் 27 ஜூலை 2025, 04:07 GMT புதுப்பிக்கப்பட்டது 27 ஜூலை 2025, 05:31 GMT இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஹமாஸ் இஸ்ரேலைத் தாக்கும் திட்டத்திற்கான இறுதிக்கட்ட பணிகளை மேற்கொண்டு வந்தது. இஸ்ரேலில், அதன் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாலத்தீன பிரச்னை சமாளிக்கக் கூடிய ஒன்று தான் என்று நம்பினார். உண்மையான அச்சுறுத்தல் இரான் என்றும் அவர் வலியுறுத்திக் கூறினார். காஸாவிற்கு நிதி வழங்க கத்தாரை நெதன்யாகு அனுமதித்திருந்தாலும், ஹமாஸுக்கு எதிரான அவரது தீவிரம் கொஞ்சமும் குறையவில்லை. வெளியுறவுக் கொள்கையில் அவரது உண்மையான சிக்கல்களுக்கு முன்னுரிமை கொடுக்க இது அவருக்கு உதவியது. அதாவது, இரானை எதிர்கொள்வது மற்றும் சௌதி அரேபியாவுடனான உ…
-
- 1 reply
- 202 views
- 1 follower
-
-
25 JUL, 2025 | 10:18 AM பாலஸ்தீன தேசத்தை பிரான்ஸ் அங்கீகரிக்கவுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் நியுயோர்க்கில் அடுத்தமாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தில் இந்த விடயம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/220895
-
-
- 10 replies
- 379 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமர் கட்டுரை தகவல் பிரவீன் பிபிசி செய்தியாளர் 29 நிமிடங்களுக்கு முன்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோதியும், பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமரும் ஆறு பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் ஜூலை 24ஆம் தேதி கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின் கீழ், பிரிட்டிஷ் கார்கள் மற்றும் விஸ்கி இந்தியாவில் மலிவாகக் கிடைக்கும். இந்திய உடைகளும் ஆபரணங்களும் பிரிட்டனில் மலிவாகக் கிடைக்கும். இந்தியாவும் பிரிட்டனும் இந்த வர்த்தக ஒப்பந்தத்தால் பயனடையும் என நம்புகின்றன. ஆனால் இந்த ஒப்பந்தத்தால் யார் அதிக லாபம் அடைவார்கள் என்பதுதான் தற்போது எழுகின்ற கேள்வி. பிரிட்டன் உடனான வர்த்தக…
-
- 1 reply
- 146 views
- 1 follower
-
-
காஸாவில் மூன்றில் ஒருவர் பசியால் தவிப்பு - எச்சரிக்கும் ஐ.நா அமைப்பு பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, காஸாவை பஞ்சம் வாட்டி வதைப்பதாக எச்சரிக்கைகள் வந்துள்ளதால் சர்வதேச அளவில் கவலை அதிகரித்துள்ளது. கட்டுரை தகவல் மையா டேவிஸ் பிபிசி செய்திகள் 4 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர் பல நாட்களாக உணவின்றி, பட்டினியில் தவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு உதவித் திட்டம் எச்சரித்துள்ளது. உலக உணவுத் திட்டம் (WFP) வெளியிட்ட அறிக்கையில், "ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருகிறது. 90,000 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம், காஸாவில் பஞ்சம் குறித்து தீவிரமான எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. வ…
-
- 0 replies
- 91 views
- 1 follower
-
-
AI மூலம் வங்கிப் பாதுகாப்பு முறியடிக்கப்படும் அபாயம்! தகவல் தொழில் நுட்பத்தில் புதிய புரட்சியை AI தொழில் நுட்பம் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவம், கல்வி, மென்பொருள் என பலதரப்பட்ட துறைகளில் AI ஆதிக்கம் செலுத்தி வருகிறது . இந்நிலையில்” இனி வரும் காலங்களில் (AI) தொழில்நுட்பம் தவறான நோக்கத்துடன் பயன்படுத்தலாம்” என Chat GPT யின் தாய் நிறுவனமான ஓபன் AI நிறுவனத்தின் தலைமை செயற்பாட்டு அதிகாரி சாம் ஆல்ட்மன்( Sam Altman) ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” வரும் காலங்களில், வங்கிகளின் பாதுகாப்பு அம்சங்களை AI முறியடிக்கலாம். அதன் மூலம் பணம் திருடப்படலாம். அத்துடன் அடையாள திருட்டு, இணைய மோசடி, போலி செய்திகள் போன்றனவும் அதிகரிக்கும் அபாய…
-
- 0 replies
- 130 views
-
-
25 JUL, 2025 | 06:44 PM ஆர்.சேதுராமன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய நண்பராக விளங்கிய, உலகின் முதல்நிலை கோடீஸ்வரர் இலோன் மஸ்க், 'அமெரிக்கா கட்சி' எனும் புதிய அரசியல் கட்சியை ஸ்தாபிக்கப்போவதாக அறிவித்துள்ளார். அந்நாட்டு அரசியலில் மஸ்க்கின் கட்சி எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது தொடர்பாக விவாதங்கள் எழுந்துள்ளன. 'டெஸ்லா' மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனம், 'ஸ்பேஸ் எக்ஸ்' எனும் ரொக்கெட் தயாரிப்பு மற்றும் விண்வெளி ஆய்வு நிறுவனம் மற்றும் 'எக்ஸ்' சமூக வலைதள நிறுவனங்களின் அதிபரான இலோன் மஸ்க், உலகின் முதல்நிலை கோடீஸ்வரராக விளங்குகிறார். அவரின் செல்வ மதிப்பு 400 பில்லியன் டொலர்களுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2024 ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்…
-
- 0 replies
- 114 views
- 1 follower
-
-
ரஷ்யாவில் பயணிகள் விமானம் விபத்து! 49 பேர் உயிரிழப்பு! ரஷ்யாவில் 49 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அமூர் மாகாணம் அருகே திண்டா நகரத்தை நோக்கி சென்ற பயணிகள் விமானத்தில் 5 குழந்தைகள் மற்றும் 6 பணியாளர்கள் உட்பட மொத்தம் 49 பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், இந்த விமானம் திண்டா விமான நிலையத்தை அண்மித்த போது , அங்காரா ஏர்லைன்ஸ் விமானம் நேரப்படி பிற்பகல் 1 மணியளவில் விமானக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டதுடன் திடீரென ரேடாரிலிருந்து அந்த விமானம் காணாமல்போனதாக விமான நிலைய ஊழியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழப…
-
- 1 reply
- 117 views
-
-
துருக்கியில் காட்டுத் தீ! 10 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு. துருக்கியின் மத்திய பகுதியில் உள்ள எஸ்கிசெஹிர் மாகாணத்தின் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 14 வீரர்கள் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துருக்கி வனத்துறை அமைச்சர் இப்ராஹிம் யுமக்லி இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் “தீ அணைக்கும் பணியின் போது திடீரென காற்றின் திசை மாற்றமடைந்தது. இதனால் மொத்தம் 24 வீரர்கள் தீயில் சிக்கிக்கொண்டனர். அதில் 10 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ளவர்கள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்” எனத் தெரிவித்தார். தற்போது மத்திய மற்றும் மேற்…
-
- 0 replies
- 108 views
-
-
மனிதனால் உருவாக்கப்பட்ட பட்டினியால் பெரும் துன்பத்தில் காசா - உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் Published By: Rajeeban 24 Jul, 2025 | 10:54 AM மனிதனால் உருவாக்கப்பட்ட பட்டினி நிலையால் காசா துன்பத்தில் சிக்குண்டுள்ளது என உலக சுகாதாரஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோல் அதனோம் கெப்ரயேசஸ் தெரிவித்துள்ளார். காசாவிற்குள் உணவுப்பொருட்கள் செல்வதை தடுக்கும் மனித செயலால் உருவாக்கப்பட்ட பட்டினியால் காசா துன்பத்தில் சிக்குண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். பெரும்பட்டினி நிலை என இதனை அழைப்பதை தவிர வேறு எப்படி இதனை அழைப்பீர்கள் என எனக்கு தெரியாது,ஆனால் இது மனிதனால் உருவாக்கப்பட்டது அது மிகத்தெளிவான விடயம் என அவர் தெரிவித்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கான உணவுவிநியோகம் மக்கள் உயிர்வாழ…
-
- 1 reply
- 130 views
- 1 follower
-
-
காசாவில் மேலும் 10 பேர் பட்டினியால் மரணம் - உதவிக்காக காத்திருந்த 31 பலஸ்தீனர்கள் பலி sachinthaJuly 24, 2025 காசாவில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் தொடர்புபட்டு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு உதவிக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேலியப் படை நேற்று நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வடக்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல்களை அதிகரித்திருக்கும் நிலையில், அங்கு குண்டு வீச்சுகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளுக்கு அப்பால் பட்டினியால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. காசாவுக்காக உதவி விநியோகங்களை இஸ்ரேல் முற்றாக கட்டுப்படுத்தி வருவதோடு கடந்த மார்…
-
- 0 replies
- 126 views
-
-
23 ஜூலை 2025 விண்வெளியின் விளிம்பில் இருந்து குதித்து ஸ்கை டைவிங் சாகசம் செய்து உலக சாதனை படைத்த இத்தாலியைச் சேர்ந்த ஃபெலிக்ஸ் பாம்கார்ட்னர் என்பவர் உயிரிழந்தார். 56 வயதான இவர், கிழக்கு மார்ச்சே பகுதியில் உள்ள போர்டோ சாண்ட் எல்பிடியா என்ற கிராமத்தின் அருகே பாரா-கிளைடிங் செய்து கொண்டிருந்த போது திடீரென விபத்து ஏற்பட்டு, உணவகம் ஒன்றின் நீச்சல் குளத்தில் விழுந்து உயிரிழந்தார். இது குறித்து, போர்டோ சாண்ட் எல்பிடியா கிராமத்தின் மேயர் மிஸிமில்லியானோ சியார்பெல்லா, வானில் பறக்கும் போது இவருக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றார். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் கூட விபத்து ஏற்பட்டிருக்கலாம் என விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2012ம் ஆண்டு 1,28,000 அடி உயரத்தி…
-
- 0 replies
- 92 views
- 1 follower
-
-
"ஒவ்வொரு நாள் காலையிலும் ஒரே கேள்வி மீண்டும் மீண்டும் காசாவில் எதிரொலிக்கின்றது; இன்று எனக்கு உணவு கிடைக்குமா ?; உணவுக்காக சொர்க்கத்திற்கு செல்ல விரும்பும் குழந்தைகள்" - பரவும் பட்டினிநிலை குறித்து மனிதாபிமான அமைப்புகள் எச்சரிக்கை Published By: RAJEEBAN 23 JUL, 2025 | 12:54 PM காசாவின் பல பகுதிகளிற்கு பட்டினிநிலை பரவ ஆரம்பித்துள்ளது என நூற்றிற்கும் மேற்பட்ட மனிதாபிமான அமைப்புகள் கூட்டாக எச்சரித்துள்ளன. சேவ் த சில்ரன் எல்லைகள் அற்ற மருத்துவர்கள் அமைப்பு உட்பட பல சர்வதேச அமைப்புகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன. பாலஸ்தீனியர்கள் நம்பிக்கை மற்றும் மனவேதனையின் பிடியில் சிக்குண்டுள்ளனர். அவர்கள் யுத்தநிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகளிற்காக காத்திருக்கின்றனர். ஆனால் அவர்கள்…
-
- 0 replies
- 114 views
- 1 follower
-
-
"என்னிடம் இனிமேலும் ஊடக பணியில் ஈடுபடுவதற்கான வலு இல்லை, எனது உடல் மெலிந்து விட்டது ; காசாவிலிருந்து ஒரு ஊடகவியலாளர் " - உடனடி தலையீடு இல்லாவிட்டால் காசாவில் இறுதியாக உள்ள ஊடகவியலாளர்கள் உயிரிழப்பார்கள் ஏஎவ்பி Published By: RAJEEBAN 23 JUL, 2025 | 11:17 AM காசாவில் எஞ்சியுள்ள ஊடகவியலாளர்கள் மரணிக்கும் ஆபத்தை எதிர்நோக்குகின்றனர் என ஏஎவ்பி ஊடகவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உடனடிதலையீடு இல்லாவிட்டால் காசாவில் இறுதியாக உள்ள ஊடகவியலாளர்கள் உயிரிழப்பார்கள் என அவர்கள் எச்சரித்துள்ளனர். யுத்தத்தின் கோரபிடியில் சிக்குண்டுள்ள காசாவிற்கு வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் செல்வதற்கு இஸ்ரேல் அனுமதி மறுத்து வரும் நிலையில் ரொய்ட்டர்ஸ் ஏஎவ்பி போன்ற நிறுவனங்கள் காசாவில் உள்ள உள்ளுர…
-
- 0 replies
- 112 views
- 1 follower
-
-
22 JUL, 2025 | 01:26 PM இஸ்ரேலிய படையினர் தனது பணியாளர்களை ஆடைகளை களைந்து சோதனையிட்டதுடன் கைதுசெய்துள்ளனர் என உலக சுகாதார ஸ்தாபனம் குற்றம்சாட்டியுள்ளது. இஸ்ரேல் தனது பண்டகசாலை மீது விமானதாக்குதலை மேற்கொண்டது என தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் தனது பணியாளர்களின் வீடுகளையும் இலக்குவைத்தது, இதனால் பெரும் சேதமேற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது. பெண்களும் குழந்தைகளும் மோதல் இடம்பெறும் பகுதியை நோக்கி கால்நடையாக வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். டெய்ர் அல்பலாவில் இஸ்ரேல் மேற்கொண்ட உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆண்பணியாளர்கள் அவர்களது குடும்பத்தவர்களை கைதுசெய்து அவர்களிற்கு கைவிலங்கிட்ட இஸ்ரேலிய படையினர் அந்த இடத்தில…
-
- 0 replies
- 130 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 15 JUN, 2025 | 12:49 PM இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று சனிக்கிழமை (14) இரவு பிரித்தானியாவுக்குச் சொந்தமான F-35 என்ற போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் தாங்கி போர்க் கப்பலில் இருந்து புறப்பட்டதாக நம்பப்படும் இந்த ஜெட் விமானத்தில் எரிபொருள் தீர்ந்ததால் இரவு 9.30 மணியளவில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. சீராகவும் பாதுகாப்பாகவும் தரையிறங்குவதை உறுதி செய்வதற்காக விமான நிலைய அதிகாரிகள் அவசரநிலையை அறிவித்தனர். "விமானத்தில் குறைந்தளவில் எரிபொருள் இருப்பதாக அறிவித்து விமானி தரையிறங்க அனுமதி கேட்டார். தரையிறக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் விரைவாகவும் முறையாகவும் கையாளப்பட்டது என விமான …
-
- 4 replies
- 304 views
- 1 follower
-
-
அமெரிக்காவை சமாளிக்க கைகோர்க்கும் இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா. ரஷ்யா -இந்தியா – சீனா இடையிலான முத்தரப்பு உறவை புதுப்பிக்கும் முன்னெடுப்பை ரஷ்யா எடுத்துள்ளது. அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப் போர், உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால்,அமெரிக்காவை சமாளிக்க, ரஷ்யாவுடன் சீனா நெருக்கம் காட்டி வருகிறது. மேலும் பழைய கசப்புணர்வுகளை மறந்து இந்தியாவுடனும் நட்பு பாராட்டுவதற்கான தருணத்தை சீனா எதிர்பார்த்துள்ளது. அதற்கேற்ப கடந்த 2002ல் நிறுவப்பட்ட ஆர்.ஐ.சி., எனப்படும் ரஷ்யா- இந்தியா- சீனா முத்தரப்பு மன்றத்திற்கு புத்துயிர் அளிக்க, ரஷ்யா முனைப்பு காட்டி வருகிறது. இந்த முத்தரப்பு மன்றம் தான் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா நாடுகளின் ‘பிரிக்ஸ்’ அமைப்ப…
-
- 1 reply
- 231 views
- 1 follower
-
-
காசா விவகாரம்: இஸ்ரேலுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த உலக நாடுகள் ! காசா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் கனடா போன்ற முக்கிய நாடுகள் போரை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக காசாவின் முக்கிய நட்பு நாடுகளாகக் கருதப்படும் ஐக்கிய இராச்சியம்,பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகள், இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்கள் குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. நிலைமை சீராகாவிட்டால் ‘தக்க நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு இந்த நாடுகள் எச்சரித்துள்ளதாகத் தெரிகிறது. அதேசமயம் அமெரிக்கா, இஸ்ரேலின் முக்கிய நட்பு நாடாக …
-
- 0 replies
- 169 views
-
-
காசாவில் உணவு குடிநீர் போன்றவற்றை பெற முயலும் சிறுவர்கள் கூட கொல்லப்படுகின்றனர் - உலக நாடுகள் கடும் கண்டனம் - யுத்தத்தை நிறுத்துமாறு வேண்டுகோள் 22 Jul, 2025 | 11:25 AM காசா யுத்தம் தொடர்பில் இஸ்ரேலை கடுமையாக சாடியுள்ள 25 நாடுகள் யுத்தத்தை உடனடியாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரிட்டன் ஜப்பான் கனடா அவுஸ்திரேலியா உட்பட 25 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். காசா மக்களின் துயரங்கள் முன்னர் இல்லாத அழவிற்கு தீவிரமடைந்துள்ளன என தெரிவித்துள்ள அவர்கள்அடிப்படை தேவைகளான உணவு குடிநீர் போன்றவற்றை பெற முயலும் சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் மனிதாபிமானமற்ற முறையில் கொல்லப்படுவதையும்,மிகச்சிறிய அளவில் மனிதாபிமான உதவிகள் வழங்கப்ப…
-
- 0 replies
- 60 views
-
-
டிரம்ப் நிர்வாகத்தின் சமீபத்தில் இயற்றப்பட்ட உள்நாட்டு கொள்கை மசோதாவில் உள்ள ஒரு விதியின்படி, சர்வதேச பார்வையாளர்கள் தற்போதுள்ள விசா விண்ணப்ப செலவுகளுடன் சேர்த்து குறைந்தபட்சம் $250 புதிய "விசா நேர்மை கட்டணம்" செலுத்த வேண்டும் என்று அமெரிக்கா கோரும். அமெரிக்காவிற்குள் நுழைய குடியேறாத விசாக்களைப் பெற வேண்டிய அனைத்து பார்வையாளர்களுக்கும் இந்தக் கட்டணம் பொருந்தும். இதில் பல ஓய்வு மற்றும் வணிகப் பயணிகள், சர்வதேச மாணவர்கள் மற்றும் பிற தற்காலிக பார்வையாளர்கள் அடங்குவர். 2024 நிதியாண்டில், வெளியுறவுத்துறை புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்கா கிட்டத்தட்ட 11 மில்லியன் குடியேறாத விசாக்களை வழங்கியது. https://www.cnn.com/2025/07/21/travel/visa-integrity-fee-usa-international-travelers இத…
-
- 0 replies
- 131 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 21 JUL, 2025 | 02:26 PM இஸ்ரேல் உணவு விநியோகத்தினை முடக்கியுள்ள நிலையில் காசாவில் பட்டினியால் நான்குவயது சிறுமி உயிரிழந்த பரிதாபம் இடம்பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நான்கு வயது ரஜான் அபு ஜகெர் உயிர்வாழ்வதற்கான தனது போராட்டத்தினை முடித்துக்கொண்டுள்ளாள். பட்டினி மற்றும் மந்தபோசாக்கினால் ஏற்பட்ட பாதிப்புகளால் இந்த சிறுமி மத்திய காசாவில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2023 ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் காசாவில் 76 சிறுவர்கள் மந்தபோசாக்கினால் உயிரிழந்துள்ளனர் என காசாவின் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மார்ச் மாதம் இஸ்ரேல் உணவுவிநியோகத்தை தடை செய்த பின்னரே மந்தபோசாக்கு பட்டினியால் அனேக மரணங்கள் இடம்ப…
-
- 0 replies
- 85 views
- 1 follower
-
-
ஜப்பான் மேற்சபை தேர்தல் - பெரும்பான்மையை இழந்தது ஆளும் கட்சி 21 Jul, 2025 | 10:57 AM ஜப்பானின் மேற்சபையில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது அந்த நாட்டு அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் பிரதமர் சிகேரு இசிபா பதவி விலகும் எண்ணம் எதுவுமில்லை என தெரிவித்துள்ளார். அதிகரிக்கும் விலைகள் அமெரிக்காவின் வரி அதிகரிப்பு குறித்த அச்சுறுத்தல் போன்றவற்றினால் ஆளும்கட்சி மீது அதிருப்தியில் உள்ள மக்கள் ஞாயிற்றுக்கிழமை மிகவும் கடுமையான போட்டி நிலவிய தேர்தலில் வாக்களித்தனர். 248 உறுப்பினர்கள் கொண்ட மேற்சபையில் தனது கட்டுப்பாட்டை தக்கவைப்பதற்கு ஆளும் கட்சிக்கு 50 ஆசனங்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த கட்சி 47 ஆசனங்களை மாத்திரம் பெற்றுள்ளது. பிரதான எதிர்க்கட்சியா…
-
- 0 replies
- 278 views
-
-
Published By: DIGITAL DESK 3 20 JUL, 2025 | 05:24 PM அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் இருந்து அட்லாண்டா நோக்கி புறப்பட்ட டெல்டா ஏர்லைன்ஸின் போயிங் 767-400 ரக பயணிகள் விமானத்தின் இயந்திரத்தில் தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானம் புறப்பட்ட பின் அதன் இடதுப்புற இயந்திரத்தில் தீப்பிடித்ததால் அவ்விமானம் மீண்டும் லாஸ் ஏஞ்சல்ஸிலேயே அவசரமாகத் தரையிறங்கியது. விமானி அவசரநிலையை அறிவித்ததையடுத்து, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அறை, விமானம் மீண்டும் விமான நிலையத்திற்கு திரும்ப வழிகாட்டியது. தரையிறங்கியதும் தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இவ்வா…
-
- 0 replies
- 148 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஜூலை 13 அன்று சீனாவிற்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டார். 20 ஜூலை 2025, 04:53 GMT புதுப்பிக்கப்பட்டது 20 ஜூலை 2025, 04:58 GMT இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கடந்த வாரம் சீனா சென்றார். அங்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உள்பட உயர்மட்ட அதிகாரிகளையும் ஜெய்சங்கர் சந்தித்தார். கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவிவரும் நிலையில், இருநாட்டு உறவுகளை மீண்டும் வலுப்படுத்த முயற்சிக்கும் காலகட்டத்தில் ஜெய்சங்கரின் சீன பயணம் அமைந்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்தது குறித்து பெரும் விவாதம் நடைபெற்று வரும…
-
- 0 replies
- 132 views
- 1 follower
-
-
வியட்நாமில் சுற்றுலாப் பயணிகள் படகு விபத்துக்குள்ளானதில் இதுவரை 37 பேர் உயிரிழப்பு! வியட்நாமில் சுற்றுலாப்பயணிகள் படகு ஒன்று புயலில் சிக்கி விபத்துக்குள்ளானதில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். 53பேருடன் பயணித்துக்கொண்டிருந்த வொன்டர் சீ என்ற படகே இவ்வாறு அனர்தத்திற்குள்ளாகியுள்ளது. ஹா லாங் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களை காண தினமும் ஆயிரக்கண சுற்றுலா பயணிகள் வருகை தருகின்ற நிலையில் தலைநகர் ஹனோயில் இருந்து 53 சுற்றுலா பயணிகள் நேற்று பிற்பகல் படகு மூலம் ஹா லாங் வளைகுடா பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதன்போது, தென் சீன கடற்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட புயல்காற்றினால் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது, படகில் பயணித்…
-
- 1 reply
- 129 views
- 1 follower
-