Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தாய்வான் வான் பாதுகாப்பு பகுதிக்குள் 28 சீன இராணுவ விமானங்கள் சுமார் 28 சீன இராணுவ விமானங்கள் செவ்வாயன்று தாய்வானின் வான் பாதுகாப்பு பகுதிக்குள் பறந்தன என்று அதன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த விமானங்களில் ஜே -16 விமானங்கள் பதினான்கும் ஜே -11 விமானங்கள் ஆறும் அணுசக்தி திறன் கொண்ட குண்டு வீச்சு விமானங்கள் உட்பட பல்வேறு வகையான போர் விமானங்களும் இருந்ததாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேட்டோ தலைவர்கள் திங்களன்று சீனா முன் வைக்கும் இராணுவ சவால் குறித்து எச்சரித்ததைஅடுத்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜனநாயக தாய்வான் தன்னை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக பார்க்கும்போதிலும் பீஜங், தாய்வானை பிரிந்து செல்லும் ஒரு மாகாணமாக கருதுகிற…

  2. போர் நிறுத்தத்திற்குப் பின்னர்... காஸா பகுதியில், இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்! காஸா பகுதியில் ஹமாஸ் போராளிகளின் இலக்குகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. குறித்த தாக்குதல்கள் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஹமாஸின் போராளிகளுக்குச் சொந்தமான தளங்கள், அல்-கஸ்ஸாம் படைப்பிரிவுகள் இஸ்ரேலின் தாக்குதலில் இலக்கு வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நேற்று காஸாவிலிருந்து பல பலூன்கள் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டதால் பல தீ விபத்துக்கள் ஏற்பட்டதாக இஸ்ரேலிய தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இருதரப்பிற்கும் இடையே கடந்த மே 21 ஆம் திகதி அன்று முன்னெடுக்கப்பட்ட யுத்த நிறுத்தம் 11 நாள் தாக்குதலை …

  3. நேட்டோவுக்கு.... சீனா, மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது! நேட்டோ அமைப்புக்கு எதிராக சீனா மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது என நேட்டோ தலைவர்கள் எச்சரித்துள்ளனர். பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற நேட்டோ தலைவர்களுக்கான உச்சிமாநாட்டில், நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘சீனா, அதன் அணு ஆயுதங்களை விரைவாக விரிவுபடுத்தி வருகின்றது. ரஷ்யாவுடன் இராணுவ ரீதியாக ஒத்துழைத்து வருகின்றது. அத்துடன், இராணுவ மற்றும் தொழில்நுட்ப அடிப்படையில் சீனா நேட்டோவுடன் நெருங்கி வருகிறது. ஆனால் கூட்டணி சீனாவுடன் புதிய பனிப்போரை விரும்பவில்லை’ என கூறினார். நேட்டோ 30 ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான ஒரு சக்திவாய…

  4. ஜி 7 உச்சிமாநாடு: சீனாவுக்கு போட்டியாக... சிறந்த உட்கட்டமைப்பை உருவாக்கும் திட்டதிற்கு அங்கீகாரம் சீனாவை எதிர்த்து நிற்கும்வகையில், சிறந்த உட்கட்டமைப்பை உருவாக்குவதில் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு ஆதரவளிக்கும் திட்டத்தை ஜி 7 நாடுகளின் தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். சீனத் திட்டத்திற்கு உயர்தர மாற்றாக அமெரிக்க ஆதரவுடன் பில்ட் பேக் பெட்டர் வேர்ல்ட் (பி 3 டபிள்யூ) திட்டம் இருக்க வேண்டும் என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார். சீனாவின் பெல்ட் மற்றும் சாலை முயற்சி என்ற திட்டம் பல நாடுகளில் ரயில்கள், வீதிகள் மற்றும் துறைமுகங்களுக்கு நிதியளிக்க உதவியுள்ள அதேவேளை சில நாடுகளை கடனுக்குள் தள்ளும் முயற்சி என விமர்சிக்கப்பட்டது. இருப்பினும், ஜி 7 திட்டத்திற…

  5. எலிசபெத் ராணியை சந்தித்தனர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் சந்தித்துள்ளனர். பிரிட்டனில் ஜூன் 11 முதல் 13 வரை 'ஜி 7' நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேரடியாக கலந்து கொண்டார். ஜோ பைடன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அவரின் முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவாகும். இப்பயணத்தின் போதே நேற்றையதினம் (13.06.20321) இங்கிலாந்தின் பெர்க் ஷயர் பகுதியில் அமைந்திருக்கும் விண்ட்சர் கோட்டையில் (Windsor castle) பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் ப…

  6. இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்றார் இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்றுள்ளார். இந்நிலையில், இஸ்ரேலில் பெஞ்சமின் நெடன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. இஸ்ரேலில் 2009, மார்ச் 31 ஆம் திகதி பெஞ்சமின்-நெடன்யாகு பிரதமராக இருந்து வந்தார். அங்கு 2 ஆண்டுகளாக 4 முறை பாராளுமன்றத் தேர்தல் நடந்தும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மைப் பலம் கிடைக்கவில்லை. கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலில், மொத்தம் உள்ள 120 இடங்களில் பெஞ்சமின்- நெடன்யாகு கட்சி 30 இடங்களைப் பிடித்தது. தனிப்பெரும் கட்சியாக வந்த போதும் அவரால் கூட்டணி அரசு அமைக்க முடியவில்லை. இதனால் இழுபறி நிலைமை நீடித்தது. இதற்கிடையே, அங்கு 8 எத…

  7. செயற்கை.. பூச்சிக்கொல்லி மருந்துகளை, தடை செய்ய சுவிஸில் வாக்கெடுப்பு ! செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளை முற்றிலுமாக தடை செய்வதற்கான வாக்கெடுப்பை நடத்த சுவிஸர்லாந்து தீர்மானித்துள்ளது. அவ்வாறு தடை விதிக்கப்பட்டால் செயற்கை பூச்சிக்கொல்லிகளை தடைசெய்யும் உலகின் இரண்டாவது நாடாக சுவிஸர்லாந்து விளங்கும். விவசாய வளம் நிறைந்த ஐரோப்பிய நாடுகளின் ஒன்றான சுவிஸர்லாந்தில் செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள் முழுவதுமாக தடை செய்ய்யப்படவுள்ளது. இத் தடைக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் தண்ணீரில் பூச்சிக்கொல்லிகளின் அளவு மற்றும் தாவரங்கள், விலங்குகள் மற்றும் பூச்சிகளுக்கு சேதம் ஏற்படுவதை சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் இதுபோன்ற பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு …

  8. இஸ்ரேலின் புதிய அரசு எப்படி இருக்கும்? இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக ஒருங்கிணைந்துள்ள எதிா்க்கட்சிகளின் திட்டப்படி எல்லாம் நடந்தால், புதிய அரசு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 13) பதவியேற்கும். நெதன்யாகுவின் 12 ஆண்டுகால ஆட்சியும், இரு ஆண்டுகளில் 4 தோ்தல்களைச் சந்தித்ததால் ஏற்பட்ட அரசியல் குழப்பமும் முடிவுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. நாஃப்டாலி பெனட் தலைமையிலான அடுத்த அரசு, நாட்டின் பிளவுகளை குணப்படுத்துவதையும் இயல்பான உணா்வை மீட்டெடுப்பதையும் நோக்கமாக கொண்ட புதிய திட்டத்தை வகுப்பதாக உறுதியளித்துள்ளது. இஸ்ரேலில் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக 8 கட்சிகள் ஒருங்கிணைந்து ஆட்சி அமைக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதில் ஒரு சிறிய…

    • 0 replies
    • 404 views
  9. நாம் எனும் ஆப்பிரிக்க பாண்டு தத்துவம் சி.பேசில் சேவியர் மானுடவியல் ஆய்வாளர் ஒருவர் ஒருமுறை ஆப்பிரிக்கப் பழங்குடிச் சிறுவர்களுக்கு ஒரு போட்டி வைத்தார். ஒரு கூடை நிறைய மிட்டாய்களை வைத்தார். “யார் அதை முதலில் அடைகிறாரோ, அவருக்கே அந்த மிட்டாய்கள் அனைத்தும்” என்றார். அனைத்துச் சிறுவர்களும் கைகோத்தார்கள், இணைந்து ஓடிக் கூடையை அடைந்தார்கள், இனிப்புகளைப் பகிர்ந்து உண்டார்கள். ஆச்சரியப்பட்ட ஆய்வாளர் கேட்டார், “தனியாக ஜெயித்திருந்தால், கூடை முழுவதும் தனி ஆளுக்குக் கிடைத்திருக்குமே?” அதற்கு ஒரு சிறுமி, “பாண்டு” என்று புன்சிரிப்புடன் கூறிவிட்டு ஓடினாள். அதன் அர்த்தம், “எல்லாரும் வருத்தமாக இருக்கும்போது, எப்படி ஒருவர் மட்டும் மகிழ்ச்சியுடன் இருக்க முடி…

  10. பிரித்தானியாவில் குரங்கு அம்மை (Monkey Pox) என்னும் வைரஸ் பரவுவதால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர். வட வேல்ஸில் இரண்டு நோயாளர்களுக்கு ஆட்கொல்லி குரங்கு அம்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பிரித்தானிய சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புச் செயலாளர் மட் ஹென்கொக் (Matt Hancock) தெரிவித்துள்ளார். ஏற்கெனவே கொவிட்-19 தனிமைப்படுத்தலை பராமரித்து வரும் நிலையில், தற்பொழுது இந்த அரிய வகை ஆட்கொல்லிக் கிருமி பிரித்தானிய மக்களை அச்சம் கொள்ளச் செய்துள்ளது. இந்த நோய்த் தாக்கத்துக்குள்ளாகியுள்ள இருவரும், வெளிநாடொன்றிலிருந்தே இந்தக் கிருமியைக் காவிக்கொண்டு வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. நோய்த் தாக்கத்துக்குள்ளான இவர்கள் இருவரில், ஒருவர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை…

  11. 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் எத்தியோப்பியாவில் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ளனர் - ஐ.நா. எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் சுமார் 350,000 மக்கள் பேரழிவு தரும் உணவு பற்றாக்குறையை எதிர்கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் முகவர்கள் மற்றும் உதவி குழுக்களின் பகுப்பாய்வு அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. "டைக்ரேயில் இப்போது பஞ்சம் உள்ளது" என்று ஐ.நா. உதவித் தலைவர் மார்க் லோகாக் வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்ட பின்னர் கூறினார். வடக்கு எத்தியோப்பியாவில் உள்ள டைக்ரே பிராந்தியம், நவம்பர் முதல் மோதலில் மூழ்கியுள்ளது. இராணுவத் தளத்தின் மீது பிராந்திய போரிளிகள் நடத்திய தாக்குதலுக்கு எதிராக கூட்டாட்சி படைகள் பதிலடி கொடுத்தன. ஏழு மாதங்களுக்குப் பிறகு பல்…

  12. கைதொலைபேசியில் அடையாள அட்டை : ஐக்கிய அரபு இராச்சியத்தில் அறிமுகம் புதிய அச்சிடப்பட்ட ஐக்கிய அரபு இராச்சியத்தில் அடையாள அட்டைக்கு காத்திருப்பவர்கள் மின்னணு முறையில் கைத்தொலைபேசியில் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் குடிமக்கள் மற்றும் குடியிருப்பு உரிமை பெற்ற அனைவரும் அமீரக அடையாள அட்டை பெறுவது அவசியமாகும். இதில் விசாவிற்கு விண்ணப்பித்து, உடற்தகுதி காணும் மருத்துவ பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னர் ஐக்கிய அரபு இராச்சிய அடையாள அட்டை தனிநபருக்கு தபால் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ள இந்த அட்டையில் தனிநபர் அடையாளங்கள் அனைத்தும் இடம்பெற்று இருக்கும். ஐக்கிய அரபு இராச்சியத்தை சேர்ந்தவர்கள் மற்றும் …

  13. "பிட்கொயினை" சட்ட பூர்வ நாணயமாக... அங்கீகரித்தது எல் சால்வடோர்! மெய்நிகர் நாணயமான பிட்கொயினை பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சட்டப்பூர்வ நாணயமாக மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடோர் அங்கீகரித்துள்ளது. இதன்மூலம் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ள முதல் நாடு எல் சால்வடோர் என்ற பெருமையை பெற்றுள்ளது. எல் சால்வடாரின் பொருளாதாரம், அந்த நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று பணியாற்றும் தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தை பெரும்பான்மையாகச் சார்ந்துள்ள நிலையில், பிட் கொயினை சட்டப்பூர்வ நாணயமாக அங்கீகரிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டமூலத்தை ஆதரித்து பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதையடுத்து, எல் சால்வடாரில் அன…

  14. கனடாவில் முஸ்லிம் குடும்பம் மீது வாகனத்தை மோதவிட்டு படுகொலை ReutersCopyright: Reuters கனடாவில் முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் முன்னரே திட்டமிட்டு வாகனத்தால் மோதி படுகொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள லண்டன் நகரில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. அந்தக் குடும்பத்தில் 9 வயதான சிறுவன் மட்டும் உயிர்பிழைத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இந்தப் படுகொலை தொடர்பாக 20 வயதான கனடிய நபர் மீது கொலை வழக்கும் கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டு க்யூபெக் மசூதியில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு நடந்திருக்கும…

  15. பிரித்தானியாவில், 70 சதவீத பல்பொருள் அங்காடிகள் மூடப்படும் அபாயம்! கொவிட்-19 முடக்கநிலை கட்டுப்பாடுகள் காரணமாக பிரித்தானியாவில் 70 சதவீத பல்பொருள் அங்காடிகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மக்களிடையே பொருட்கள் வாங்கும் மனநிலையில் ஏற்பட்ட மாற்றம் குறிப்பாக ஒன்லைனில் பொருட்கள் வாங்குவதால் பல்பொருள் அங்காடிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக சமீபத்திய புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. பல்பொருள் அங்காடிகளில் உள்ள அத்தியாவசியமற்ற கடைகள் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளன. பிரித்தானியாவில் சுமார் 700 பல்பொருள் அங்காடிகள் உள்ளன. இவற்றில் 10 சதவீதம் முற்றிலுமாக மூடப்படும் சூழலில் உள்ளன. சில பல்பொருள் அங்காடிகள் பகுதியளவில் குடியிருப்புகளாகவும், அலுவலகங்களாகவும் மாற்…

  16. டிக்டொக், வீ செட் தடை நீக்கப்பட்டது ; புதிய ஆணையொன்றில் கையெழுத்திட்டார் பைடன் டிக்டொக் மற்றும் வீ செட் ஆகிய சீன செயலிகளுக்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொண்டு வந்த தடைகளை ரத்து செய்யும் நிறைவேற்று ஆணையொன்றில் பதவியில் உள்ள ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். அதேவேளை, அமெரிக்க தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு விநியோக சங்கிலிகளை சீனாவிலிருந்து உள்ளடக்கிய அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க மற்றொரு நிறைவேற்று ஆணையொன்றில் (EO) கையெழுத்திட்டார். டிக்டொக் மற்றும் வீ செட் மற்றும் பிற எட்டு தகவல் தொடர்பு மற்றும் நிதி தொழில்நுட்ப மென்பொருள் பயன்பாடுகளுடனான பரிவர்த்தனைகளைத் தடை செய்யும் நோக்கிலான மூன்று நிறைவேற்று ஆணைகளை ஜனாதிபதி பைடன்…

  17. இஸ்ரேலிய ஏவுகணை தாக்குதலை... முறியடித்துள்ளதாக சிரியா அறிவிப்பு சிரியாவின் வான் பாதுகாப்பு படைகள் நாட்டின் தலைநகர் டமாஸ்கஸுக்கு தெற்கே இஸ்ரேலிய ஏவுகணை தாக்குதலை முறியடித்ததாக சனா என்ற செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இஸ்ரேலின் இந்த தாக்குதல் லெபனான் வான்வெளியில் இருந்து மேற்கொள்ளப்பட்டதாக அந்த செய்தியில் மேலும் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு சிரிய விமான பாதுகாப்பு படைகள், வான்வழி இலக்குகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி, பல ஏவுகணைகளுக்கு பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புச் செயலுக்கு சொத்து சேதம் மாத்திரம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த மாதம் 5 ஆம் திகதி சிரியாவின் லடாகியா நகரின் தென்மேற்க…

  18. இராணுவ கட்டமைப்புகளைக் கண்காணிப்பதற்கு வழிவகுக்கும் சர்வதேச ஒப்பந்தத்திலிருந்து ரஷ்யா விலகல்! இராணுவ கட்டமைப்புகளைக் கண்காணிப்பதற்கு வழிவகுக்கும் சர்வதேச ஒப்பந்தத்திலிருந்து ரஷ்யா அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளது. அமெரிக்கா மீண்டும் இந்த ஒப்பந்தத்தில் இணையும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போன நிலையில், நேற்று (திங்கட்கிழமை) சர்வதேச ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகும் ஒப்பந்தத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் கையெழுத்திட்டார். இதன் மூலம் ரஷ்யாவின் இராணுவ கட்டமைப்புகளை மற்ற நாடுகள் கண்காணிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட நாடுகள் இராணுவ கட்டமைப்புகளை மற்ற நாடுகளின் விமானங்கள் கண்காணிக்கும் வகை…

  19. பிரான்ஸ் அதிபரை கன்னத்தில் அறைந்த நபர் கைது AFPCopyright: AFP பிரான்ஸ் நாட்டின் தென் கிழக்கு பகுதிக்கு அதிகாரபூர்வ வருகை தந்த அந்நாட்டின் அதிபர் எமானுவேல் மக்ரோங் கன்னத்தில் அறையப்பட்டார். இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அதில் வேலன்ஸ் நகருக்கு வெளியே உள்ள பகுதியில் இருக்கும் ஓரிடத்திற்கு நடந்து சென்ற போது பச்சை நிற உடை அணிந்த நபர் ஒருவர், அதிபர் மக்ரோங்கின் கன்னத்தில் அறைகிறார். உடனே பாதுகாப்பு அதிகாரிகள் நடுவில் புகுந்தனர். அதிபர் உடனே பின் இழுக்கப்பட்டார். இது தொடர்பாக இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த நபர் அதிபர் மக்ரோங் கன்னத்…

    • 8 replies
    • 1k views
  20. விண்வெளிக்கு செல்கிறார் ஜெப் பெசோஸ் எதிர்வரும் ஜூலை மாதம் 20 ஆம் திகதி புளூ ஓர்ஜின் நிறுவன தலைவர் ஜெப் பெசோஸ் விண்வெளிக்கு பறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த 55 வயதான ஜெப் பெசோஸ் கடந்த 1994 ஆம் ஆண்டில், அமசோன் என்ற, ஓன்லைன்' வர்த்தக நிறுவனத்தை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி , உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார். இவர் சிறுவயதில் விண்வெளிப் பயணம் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 2000 ஆம் ஆண்டு “ப்ளு ஓர்ஜின்” என்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தையும் ஆரம்பித்தார். 2015 ஆம் ஆண்டு ப்ளூ ஓர்ஜின் நிறுவனம் நியூ ஷெப்பர்ட் என்ற ரொக்கெட்டை வெற்றிக்கரமாக விண்வெளிக்குச் செலுத்தியது. இது எதிர்வரும் ஜூலை மாதம் 20 ஆம் திகதி…

  21. டென்மார்க்கில் அமையவுள்ள... செயற்கை தீவுக்கான திட்டத்துக்கு ஒப்புதல்! டென்மார்க்கில் அமையவுள்ள மிகப்பெரிய செயற்கை தீவுக்கான திட்டத்துக்கு டென்மார்க்கின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. கோபன்ஹேகனின் வரலாற்றிலேயே மிகப் பெரிய மற்றும் டென்மார்க்கின் வரலாற்றில் மிகப் பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றான இந்த திட்டத்திற்கு 85 வாக்குகள் ஆதரவாகவும், 12 வாக்குகள் எதிராகவும் பதிவாகின. 35,000 பேர் தங்குவதற்கான வீடு மற்றும் கோபன்ஹேகன் துறைமுகத்தை கடல் மட்டம் உயர்வதிலிருந்து பாதுகாக்க இந்த செயற்கை தீவு கைகூடவுள்ளது. லினெட்டெஹோம் (டுலநெவவநாழடஅ) என பெயரிடப்பட்ட இந்த மாபெரும் தீவு, ரிங் ரோட், சுரங்கப் பாதை மற்றும் மெட்ரோ பாதை வழியாக பிரதான நிலத்துடன் இணைக்கப்ப…

  22. இளவரசர் ஹரி- மேகலுக்கு இரண்டாவது குழந்தை! சசெக்ஸ் இளவரசர் மற்றும் சீமாட்டி தங்களது இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். கலிபோர்னியாவின் சாண்டா பார்பராவில் உள்ள மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை பெண் குழந்தை பிறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய் மற்றும் குழந்தை இருவரும் ஆரோக்கியமாக உள்ளனர் என்று தம்பதியினர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி காலை 11:40 மணிக்கு பிறந்த இக்குழந்தை 7 பவுண்ட் 11oz எடை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பெண் குழந்தைக்கு... லிலிபெட் ‘லில்லி’ டயானா மவுண்ட்பேட்டன்- வின்ட்சர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1221008

  23. பாகிஸ்தானில் 2960 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் 2020 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் 2,960 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தன்னார்வ தொண்டு நிறுவனமொன்று மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ஆண்டில் இது வரையிலான காலப்பகுதியில் 2,587 சம்பவங்கள் பொலிஸாரிடத்தில் பதிவாகியுள்ளதாக சாஹில் தனது அறிக்கையில் தெரிவித்தார். அதேநேரம், 1,510 சிறுமிகளும் 1,450 சிறுவர்களும் பாலியல் சுரண்டலுக்கு பலியானார்கள் என்று தன்னார்வ தொண்டு நிறுவனம் ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்ட தகவல்களில் உள்ளதென்று தி நியூஸ் இன்டர்நேஷனல் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தத்தரவின் பிரகாரம், துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை நாளொன்றுக்கு 8 க்கும…

  24. போகோ ஹராம் தலைவர் அபுபக்கர் ஷெகாவ் உயிரிழந்து விட்டதாக தகவல் நைஜீரியாவின் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் ஷெகாவ் உயிரிழந்து விட்டதாக நம்பகத் தகுந்த ஆதாரங்களை மேற்கொள்ளிட்டு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போகோ ஹராமினுக்கும் 'ISWAP' என்ற மேற்கு ஆபிரிக்க மாகாணத்தின் இஸ்லாமிய ஆயுதக் குழுக்களுக்கும் இடையே கடந்த மே 18 ஆம் திகதி மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது அபுபக்கர் ஷெகாவ், மேற்கு ஆபிரிக்க மாகாணத்தின் இஸ்லாமிய ஆயுதக் குழுவினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளார். எதிரிகள் சுற்றி வளைத்ததால் தன்னிடம் இருந்த வெடி‍ பொருட்களை வெடிக்கச்செய்து போகோ ஹராம் தலைவர் அபுபக்கர் ஷெகாவ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தகவலை மேற…

  25. 1967க்கு பின்னர்... ஒரு மில்லியன், பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளால் கைது! 1967 ஆம் ஆண்டு இடம்பெற்ற மத்திய கிழக்குப் போருக்குப் பின்னர் சுமார் ஒரு மில்லியன் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் சுமார் 17,000 பெண்கள் என்றும் 50,000 பேர் சிறுவர்கள் என்றும் கைதிகள் விவகாரங்களுக்கான ஆணைக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 1967 முதல் 54,000 க்கும் மேற்பட்ட நிர்வாக தடுப்பு உத்தரவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை 1967 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேலிய சிறைகளுக்குள் மொத்தம் 226 பாலஸ்தீன் கைதிகள் இறந்துள்ளனர் என்றும் அந்நிறுவனம் மேலும் க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.