Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ரஷ்யா- ஜேர்மனிக்கு இடையே எரிவாயு குழாய் திட்டம்: பைடனின் முடிவுக்கு சொந்தக் கட்சியிலேயே எதிர்ப்பு ரஷ்யா- ஜேர்மனிக்கு இடையே சர்ச்சைக்குரிய எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்துக்கு எதிரான தடைகளை அமெரிக்கா நீக்கியுள்ளது. இந்தநிலையில் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனின் இந்த முடிவுக்கு அவரது சொந்தக்கட்சியான ஜனநாயகக்கட்சியிலேயே எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து செனட் சபையின் வெளியுறவு குழு தலைவரான பாப் மெனண்டெஸ் கூறுகையில், ‘இந்த பொருளாதார தடை இரத்தை திரும்பப்பெற வேண்டும். நாடாளுமன்றத்தினால் கட்டாயப்படுத்தப்பட்ட பொருளாதார தடைகளை ஜோ பைடன் நிர்வாகம் தொடர வேண்டும். இந்த முடிவு, ஐரோப்பாவில் ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிகளை எவ்வாறு முன்னேற்றும்…

  2. இஸ்ரேலின் இரக்கமற்ற கொடூரத் தாக்குதல்கள்: பாலஸ்தீனப் படுகொலையும், இடப்பெயர்வும் – தமிழில் ஜெயந்திரன் 23 Views மருத்துவமனையில் இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்ட அறையில் ஹசன் அல்-அற்றார் (Hasn al-Attar) எதுவுமே பேசாமல் மௌனமாக தனது மகள் லம்யாவினதும் (Lamya) அதே குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய மூன்று பிள்ளைகளினதும் இறந்த உடல்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். தீயணைப்புப் படை வீரருக்குரிய அங்கியை அணிந்திருந்த அவர், குளிரூட்டப்பட்ட அந்த அறையின் கதவுகள் மூடப்படுவதற்கு முன்னர் தனது மகளைக் கொஞ்சுவதற்காகக் குனிந்தார். “அவளுக்காக இறைவனை வேண்டுங்கள்” என்று அவரது தோளைத் தட்டியவாறு அவரது உடன் பணியாளர் ஒருவர் ஹசனுக்குக் கூ…

  3. இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கிடையே போர் நிறுத்தம் கடந்த 11 நாட்களாக தொடர் மோதலின் பின் இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையில் போர் நிறுத்த ஒப்பத்தம் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் நாட்டுடன் பரஸ்பர மற்றும் தொடர்ச்சியான போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டு உள்ளது என ஹமாஸ் அமைப்பின் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தி உள்ளார். இந்த ஒப்பந்தம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணி முதல் அமுலுக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். காசாவின் போர்நிறுத்த ஒப்பந்த முடிவை இஸ்ரேலிய அமைச்சரவையும் உறுதி செய்துள்ளது. ஆனால், எந்த நேரத்தில் இருந்து என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல்…

  4. காஸாவிலிருந்த, கொரோனா பரிசோதனை நிலையம் தாக்கப்பட்டது! காஸாவிலிருந்த கொரோனா பரிசோதனை நிலையம் தாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாகவுள்ள இடங்களில் காஸாவும் ஒன்று. மக்கள் தொகையில் 28 சதவீதமானவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேலுக்கும் பலஸ்தீன ஆயுதக் குழுக்களுக்கும் இடையிலான பூசலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இராஜதந்திர ரீதியிலான முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, போராளித்துவ இலக்குகளைக் குறிவைத்து தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேலியப் பிரதமர் தெரிவித்துள்ளார். கிழக்கு ஜெருசலேமில் இஸ்ரேலியர்களுக்கும் பலஸ்தீனர…

  5. இஸ்ரேல் மீதான பொருளாதாரத் தடைகளுக்கு... ஆதரவு அளிக்குமாறு போப் ஆண்டவரிடம் துருக்கி வலியுறுத்தல்! இஸ்ரேல் மீதான பொருளாதாரத் தடைகளுக்கு ஆதரவு அளிக்குமாறு போப் ஆண்டவரிடம் துருக்கி வலியுறுத்தியுள்ளது. காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்திவரும் சூழலில், போப் ஆண்டவரை நேற்று (திங்கட்கிழமை) தொலைப் பேசியில் தொடர்புக்கொண்டு பேசிய போதே ஜனாதிபதி தயீப் எர்டோகன் இதனை வலியுறுத்தினார். இதுதொடர்பாக துருக்கி ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தொலைபேசி உரையாடலின்போது, பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக போப் ஆண்டவரிடமிருந்து வரும் தொடர்ச்சியான செய்திகளும், எதிர்வினைகளும் கிறிஸ்தவ உலகத்தையும் சர்வதேச சமூகத்தையும் அணிதிரட்டுவதற்கு உதவியாக இருக்கும். இஸ்ரேலுக்கு படிப…

  6. ஃபைஸர்-பயோன்டெக் தடுப்பூசியை... குறைந்த உறைநிலையில், சேமிக்க முடியும்: ஐரோப்பிய மருந்துகள் ஸ்தாபனம்! ஃபைஸர்-பயோன்டெக் தடுப்பூசியை குறைந்த உறைநிலையில் சேமிக்க முடியும் என ஐரோப்பிய மருந்துகள் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஃபைஸர்-பயோன்டெக் தடுப்பூசியினை சேமித்து வைக்க 80°C உறை குளிர் தேவைப்பட்டிருந்தது. பின்னர் அது -20°C தொடக்கம் -20°C வரையான குளிரில் சேமிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அவ்வாற உறை குளிரிலேயே இந்த தடுப்பூசி சேமிக்கப்பட்டு வருகின்றது. இதனால் கொரோனா தடுப்பூசிகளை கொண்டு செல்வதிலும் சேமிப்பு செய்வதிலும் சில சிக்கல்கள் எழுந்திருந்தன. இந்நிலையில், இந்த ஃபைஸர்-பயோன்டெக் தடுப்பூசி மருந்தினை -2°C தொடக்கம் -8°C வரையான குளிர்நிலை…

  7. சிங்கப்பூரில் பள்ளிகளை மூட உத்தரவு: குழந்தைகளை பாதிக்கும் புதிய கொரோனா திரிபால் அச்சம் பட மூலாதாரம், GETTY IMAGES இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்டதாக சொல்லப்படும் கொரோனா வைரஸ் திரிபு போன்று சிங்கப்பூரில் சில திரிபுகள் காணப்படுவதாகவும், அவை குழந்தைகளை அதிகளவில் தாக்குவதாகவும் சிங்கப்பூரர்களை அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. இதையடுத்து சிங்கப்பூரில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இளையர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை விரைவுபடுத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஆரம்ப, உயர்நிலை, ஜூனியர் கல்லூரிகள் நாளை (மே 19) முதல் மே 28ஆம் தேதி வரை மூடப்படும் என அந…

  8. அழுத்தங்களுக்கு மத்தியில் காசாவுடனான போர் நிறுத்தத்திற்கு பைடன் ஆதரவு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான மூன்றாவது தொலைபேசி உரையாடலின் போது ஜனாதிபதி ஜோ பைடன் காசாவுடனான போர் நிறுத்தத்திற்கு ஆதரவை வெளிப்படுத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய-பாலஸ்தீனிய மோதலின் எட்டாவது நாளான திங்களன்று பெஞ்சமின் நெதன்யாகுவும், ஜோ பைடனும் மூன்றாவது தொலைபேசி உரையாடலை மேற்கொண்டதாக வெள்ளை மாளிகை அறிக்கைகள் உறுதிபடுத்தியுள்ளன. தனது சட்டத்தரணிகள் மற்றும் சொந்த ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களிடமிருந்து அதிகரித்து வரும் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ள நிலையிலேயே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் , காசா பகுதியில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போர்நிறுத்தத்திற்கான…

  9. பெப்ரவரி ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர் மியன்மாரில் 800 க்கும் மேற்பட்டோர் பலி பெப்ரவரி மாத ஆட்சி கவிழ்ப்பில் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் நாடு முழுவதும் எதிர்ப்புக்கள் வெடித்ததில் இருந்து 800 க்கும் மேற்பட்டோர் மியான்மரின் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஒரு ஆர்வலர் குழு தெரிவித்துள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை இராணுவம் வெளியேற்றி, அவரையும் அவரது ஜனநாயகக் கட்சிக்கான தேசிய லீக்கின் அதிகாரிகளையும் தடுத்து வைத்ததிலிருந்து மியான்மர் கொந்தளிப்பில் உள்ளது. நகரங்கள் மற்றும் நகரங்களில் ஜனநாயக சார்பு ஆதரவாளர்கள் நடத்திய போராட்டங்களுக்கு இராணுவம் ஆபத்தான சக்தியுடன் பதிலளித்து வருகிற…

  10. உலகளவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 34இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 34இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 34இலட்சத்து நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை உலகளவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 16கோடியே 42இலட்சத்து 75ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 14கோடியே 29இலட்சத்து 94ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளனர். உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல் நாடாக அம…

  11. பிரித்தானிய பிளாஸ்டிக் கழிவுகள்... துருக்கியில், சட்டவிரோதமாக கொட்டப்பட்டு எரிக்கப்படுகின்றன: ஆய்வில் தகவல்! பிரித்தானிய பிளாஸ்டிக் கழிவுகள் துருக்கிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு பின்னர் சட்டவிரோதமாக கொட்டப்பட்டு எரிக்கப்படுகின்றன என்று புதிய அறிக்கை கூறுகிறது. கடந்த ஆண்டு பிரித்தானியாவின் பிளாஸ்டிக் கழிவு ஏற்றுமதியில் 40 சதவீதம் – அல்லது 210,000 டன் துருக்கிக்கு அனுப்பப்பட்டதாக கிரீன்பீஸ் தெரிவித்துள்ளது. ஆனால், மறுசுழற்சி செய்வதற்குப் பதிலாக, அதில் சில வீதிகள், வயல்வெளிகள் மற்றும் நீர்வழிகளில் வீசப்படுவதை புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கிரீன்பீஸின் அறிக்கை, துருக்கி ஐரோப்பாவின் மிகப்பெரிய பிளாஸ்டிக் கழிவுப்பொருள் இடமாக மாறி வருவதாக எச்சரித்தது. த…

  12. மியான்மருக்காக பிரார்த்தியுங்கள்’ - மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் பதாகையுடன் பங்கேற்ற போட்டியாளர் வாஷிங்டன், 69-வது ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் ஹாலிவுட் அரங்கில் உள்ள ராக் ஓட்டல் அண்ட் கேசினோவில் நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவலுக்கு இடையில் மிகுந்த பாதுகாப்புடன் மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி நேற்று நடைபெற்றது. 74 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் மெக்சிகோ நாட்டை சேர்ந்த 26 வயதான ஆண்ட்ரியா மெஸாவும், பிரேசிலின் ஜூலியா காமாவும் (28) இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இதில் பிரபஞ்ச அழகியாக மெக்சிகோவின் 26 வயதான ஆண்ட்ரியா மெஸா அறிவிக்கப்பட்டார். இந்நிலைய…

  13. ஆப்கானிஸ்தானில் மசூதியொன்றில் குண்டுவெடிப்பு: 12 பேர் பலி ஆப்கானிஸ்தானில் காபூலின் ஷகர்தரா மாவட்டத்திலுள்ள ஒரு மசூதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், மசூதிக்குள் பயங்கர சத்தத்துடன் குண்டொன்று வெடித்து சிதறியுள்ளது. இதில் அந்த மசூதியில் பிரார்த்தனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதேசமயம் தலீபான் பயங்கரவாதிகள் தாங்கள் இந்த தாக்குதலை நடத்தவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது. இந்நிலைய…

  14. முடக்கநிலை கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு... இந்தியன் கொவிட், மாறுபாடு கடுமையான இடையூறு: பிரதமர் பொரிஸ் இங்கிலாந்தில் எதிர்வரும் ஜூன் 21ஆம் திகதி முடக்கநிலை கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு இந்தியன் கொவிட் மாறுபாடு கடுமையான இடையூறு ஏற்படுத்தக்கூடும் என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இந்தியன் கொவிட் மாறுபாடு கணிசமாக அதிக அளவில் பரவக்கூடியதாகக் கண்டறியப்பட்டால் சில கடினமான தேர்வுகள் இருக்கக்கூடும் எனவும் எச்சரித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘கொவிட் தடுப்பூசி செலுத்துவதற்கு இடையிலான காத்திருப்பு 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 12 வாரங்களிலிருந்து எட்டு ஆக குறைக்கப்படும்’ என கூறினார். இந்தியன் கொவிட் மாறுபாட்டின் தொற்றுகள் கடந்த வாரத்தி…

  15. பிரான்ஸின்... கட்டாய தனிமைப்படுத்தல் நாடுகளின். பட்டியலில் மேலும் நான்கு நாடுகள் சேர்ப்பு! பிரான்ஸின் கட்டாய தனிமைப்படுத்தல் நாடுகளின் பட்டியலில் மேலும் நான்கு நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, பஹ்ரைன், கொலம்பியா, கோஸ்டா ரிகா, உருகுவே ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் இருந்து மேலும் குறித்த இந்த நான்கு நாடுகள் இந்த பட்டியலில் இணைகின்றன. இந்த நாடுகளில் இருந்து பிரான்சுக்கு வருபவர்கள் அனைவரும் கட்டாயமாக 10 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஏப்ரல் திகதியில் இருந்து, இந்தியா, பிரேஸில், சிலி, தென்னாபிரிக்கா, போன…

  16. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது: சீனா சீனா, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய தியான்வென்-1 ரோவர் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளது. செவ்வாய்கிரகத்தின் மேல், கீழ் பகுதிகளின் புவியியல் அமைப்பு குறித்து இந்த விண்கலம் ஆய்வு செய்ய உள்ளது. செவ்வாய்கிரகம் தொடர்பான படங்களை எடுக்கவும் கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டிருக்கின்றன. மேலும் இந்த தியான்வென்-1 ரோவர் விண்கலத்தில் இணைக்கப்பட்டிருக்கும் ஐந்து கருவிகள், செவ்வாய் கிரகத்தின் பாறை தன்மைகள், நீர் ஆகியவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கின்றன. ஏற்கனவே சீனா விண்வெளிக்கு வீரர்களை அனுப்பியுள்ளது. அதே போல நிலவை ஆய்வு செய்வதற்கும் விண்கலங்களை அனுப்ப…

    • 0 replies
    • 648 views
  17. அமெரிக்காவில்... தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள், முகக்கவசம் அணியத் தேவையில்லை! அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தி கொண்ட மக்கள் பெரும்பாலான உள் மற்றும் வெளி இடங்களுக்கு முகக்கவசம் இல்லாமல் செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் 35 சதவீத மக்கள் இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இந்த புதிய அறிவிப்புபடி இரண்டு அளவுகளையும் செலுத்தி கொண்ட மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க தேவையில்லை. இந்த புதிய தளர்வுகள் குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு சென்ற ஜனாதிபதி பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் பிற ஊழியர்கள் முகக்கவசம் இல்லாமல் சென்றனர். …

  18. இஸ்ரேலை நோக்கி 2,000 ரொக்கெட் தாக்குதல்கள் ; பாலஸ்தீன் சார்பில் 103 பேர் பலி! சமீபத்திய ஆண்டுகளில் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் மிகப்பெரிய விரிவாக்கம் ஐந்தாவது நாளில் நுழைந்ததால் இஸ்ரேல்-காசா எல்லையில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மொத்தத்தில் சுமார் 2,000 ரொக்கெட்டுகள் இஸ்ரேலுக்குள் வீசப்பட்டதில் இருந்து குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் காசா மீது நடந்து வரும் இஸ்ரேலிய தாக்குதல்களில் மொத்தம் 103 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 27 குழந்தைகள் மற்றும் 11 பெண்கள் உள்ளனர், மொத்தம் 580 பேர் காயமடைந்துள்ளனர் என்று அமைச்சின் அறிக்கையில் சு…

  19. ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர்கள் : முரடர்கள் என விமர்சிக்கப்பட்டவர்கள்தான் ஓடிவந்து உதவுகிறார்கள்! மு.பிரதீப் கிருஷ்ணா Australian Cricketers கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேபோகிறது. இதுவரை காணாத இழப்பைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது இந்தியா. கஷ்டப்படும் இந்திய மக்களுக்கு உதவுவதற்காக கைகோர்த்திருக்கிறார்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர்கள். இந்திய மக்களுக்கு உதவுமாறு அனைவருக்கும் யுனிசெஃப் (UNICEF) ஆஸ்திரேலியா மூலம் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்! ஐபிஎல் தொடர் நடந்துகொண்டிருக்கும்போது கொரோனாவின் தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் பலரும் கஷ்டப்படத் தொடங்கினார்கள்…

  20. தன்னை தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு - ஜோ பைடன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான ஒரு தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான வன்முறைச் சம்பவங்கள் விரைவில் முடிவடையும் என்று தான் நம்புவதாக ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார். "எனது எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இந்த வன்முறை விரைவில் முடிவடைய வேண்டும் என்பது, ஆனால் கசா வன்முறை அதிகரிக்கும் போது இஸ்ரேலுக்கு தன்னை தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு" என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார். பைடன் வன்முறைச் சம்பவங்கள் நிறைவடையும் என்ற அவரது நம்பிக்கையின் பின்னணியில் உள்ள காரணங்களை இதன்போது விளக்கவில்லை. …

  21. ஜேர்மனியில்... கொவிட்-19 தொற்றினால், 86ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் மொத்தமாக 86ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றினால் 86ஆயிரத்து 9பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 10ஆவது நாடாக விளங்கும் ஜேர்மனியில், இதுவரை 35இலட்சத்து 58ஆயிரத்து 148பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 13ஆயிரத்து 833பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 252பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டு இலட்சத்து 51ஆயிரத்து 839பே…

  22. இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்: `1948 டு 2021’ ; ஜெருசலேம் புனிதத் தலத்தில் வெடித்த வன்முறை! - என்ன பிரச்னை? Today at 12 PM இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் கிழக்கு ஜெருசலேமின் அல் அக்‌ஷா மசூதிதான் இஸ்லாமியர்களுடைய மூன்றாவது பெரிய புனிதத் தலம். மசூதியைச் சுற்றியிருக்கும் `வெஸ்ட் வால்' என்ற ஒருபக்கச் சுவரான `டெம்பிள் மவுண்ட்' யூதர்களின் புனிதத் தலம்! 1948-ம் ஆண்டு ஒரு தேசம் இரண்டு பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. அதில் ஒரு பிரதேசம் பிரிக்கப்பட்ட தினம் முதலே தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டது. மற்றொரு பிரதேசம் இன்று வரை, தனி நாடு என்கிற அங்கீகாரத்திற்காகப் போராடி வருகிறது. இதில் அங்கீகரிக்கப்பட்ட நாடு இஸ்ரேல். அங்கீகாரத்திற்காகப் போராடி வருவது பாலஸ்தீனம். …

  23. `ஸ்கூல் எப்போ சார் திறப்பீங்க?' - போராட்டத்தில் குதித்த இத்தாலி குழந்தைகள்! #MyVikatan விகடன் வாசகர் Student Protest ( Twitter image ) பள்ளிகளைத் திறக்கக் கூறி ஒரு போராட்டம் கண்டதுண்டா? அதுவும் பள்ளி மாணவர்களே போராடி கண்டதுண்டா? பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்! ஊதிய உயர்வு கோரிக்கையை முன்வைத்து, தொழிலாளர்கள் போராட்டத்தைக் கண்டிருப்பீர்கள். மக்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட அரசாங்க திட்டங…

  24. "அஸ்ட்ராஸெனெகா" தடுப்பூசி ஒப்பந்தங்கள் எதனையும் புதுப்பிக்கப் போவதில்லை: பிரான்ஸ் முடிவு! பிரித்தானியா- சுவீடன் கொரோனா தடுப்பூசியான அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி ஒப்பந்தங்கள் எதனையும் புதுப்பிக்கப் போவதில்லை என பிரான்ஸ் அறிவித்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ‘ஐரோப்பாவின் எதிர்காலம்’ என்ற மாநாட்டில் இந்த அறிவிப்பினை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அறிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘பிரான்ஸில் நாங்களும், ஐரோப்பாவும் தொடர்ந்தும் அஸ்ராஸெனக்காவை உபயோகிக்க வேண்டும். மிகவும் சிக்கலான காலத்தில் அஸ்ராஸெனக்கா எங்களிற்குப் பெரிதும் உதவியது. ஆனால், தற்போதுள்ள புதிய பல மரபணுத்திரிபு வைரஸ்களிற்கான சகத்தியுள்ள வேறு கொரோனா தடுப்பூசிகள் உள்ளன. அவற்றை…

  25. மியான்மர்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக அறிவித்த இராணுவம் 17 Views மியான்மரில் இராணுவ ஆட்சியை நடைமுறைப்படுத்தியுள்ள அந்நாட்டு இராணுவம், ஆங் சான் சூகி அரசில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது. இராணுவ ஆட்சிக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கம் தொடங்க காரணமாக இருந்ததோடு அதற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதால் முந்தைய அரசின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மியான்மர் இராணுவம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் மியான்மரின் நிழல் அரசாக இயங்கும் சி.ஆர்.பி.எச்-சால் கடந்த வாரம் அமைக்கப்பட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.