Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தடுப்பூசி ஏற்றுமதியில் கடுமையான கட்டுப்பாடுகளை முன்வைக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டம் தடுப்பூசி ஏற்றுமதியில் கடுமையான கட்டுப்பாடுகளை முன்வைக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது. நாடுகளுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தை மதிக்க அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தவறியதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சுமத்தியிருந்த நிலையில் இந்த கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படவுள்ளன. அதன்படி இது குறித்து ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் வியாழக்கிழமை ஏற்றுமதி கட்டுப்பாடுகள் குறித்த திட்டங்களை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவுஸ்ரேலியாவுக்கு 250,000 டோஸ் கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையை இத்தாலிய அரசாங்கம் தடுத்திருந்தது. இந்த நடவடிக்கைக்கு சில வாரங்களுக்குப் பின்னர் மில்…

  2. பிரித்தானியாவில் காரணமின்றி வெளிநாடு செல்ல முயற்சிக்கும் எவருக்கும் 5,000 பவுண்டுகள் அபராதம்! புதிய கொரோனா வைரஸ் சட்டங்களின் ஒரு பகுதியாக, பிரித்தானியாவில் காரணமின்றி வெளிநாடு செல்ல முயற்சிக்கும் எவருக்கும் 5,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கும் சட்டம், அடுத்த வாரம் நடைமுறைக்கு வர உள்ளது. இன்று (திங்கட்கிழமை) வீட்டில் தங்கும் விதி முடிவடைகின்ற போதிலும், வெளிநாட்டு விடுமுறைகள் தற்போது அனுமதிக்கப்படவில்லை. கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான தற்போதைய திட்டத்தின் கீழ், பிரித்தானியாவில் மக்கள் விடுமுறைக்கு வெளிநாடு செல்லக்கூடிய ஆரம்ப திகதி மே 17 ஆகும். இருப்பினும், ஐரோப்பாவில் கொவிட் நிகழ்வுகளின் மற்றொரு எழுச்சி, ஐரோப்பா முழுவதும் தடுப்பூசிகளின் மெதுவான வெளியீடு ஆக…

  3. ஜேர்மனியில்... மூன்று வாரங்கள், நாடளாவிய ரீதியில் முடக்கம் அமுல் ஈஸ்டர் விடுமுறையை நிறுத்தி கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக மூன்று வாரங்கள் நாடளாவிய ரீதியிலான முடக்கத்தை ஜேர்மனி அறிவித்துள்ளது. பிராந்திய தலைவர்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அதிபர் அங்கலா மேர்க்கெல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி ஏப்ரல் முதலாம் திகதி முதல் 5 வரை கட்டுப்பாடுகள் இன்னும் கடுமையானதாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஈஸ்டர் பண்டிகைக்கு ஐந்து நாட்கள், ஜேர்மனியர்கள் வீட்டிலேயே தங்க வேண்டும் என்றும் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. https://athavannew…

  4. சீனாவின் ஷின்ஜியாங் பகுதியில் வாழும் சிறுபான்மை வீகர் முஸ்லிம்கள் மீது, சீனா மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குற்றம்சாட்டி சீன அதிகாரிகள் மீது பல மேற்கத்திய நாடுகள் தடைகளை விதித்திருக்கின்றன. சீனாவின் வட மேற்குப் பகுதியில் இருக்கும் ஷின்ஜியாங் பகுதியில் வீகர் இஸ்லாமியர்களை ஒரு முகாமில் அடைத்து வைத்திருக்கிறது சீனா. அம்முகாமில் அவர்கள் சித்திரவதை செய்யப்படுவதாகவும், கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்படுவதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சியாக, சீன அதிகாரிகள் மீதான தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. சீனாவும் ஐரோப்பிய அதிகாரி…

  5. அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு – போலீஸ் அதிகாரி உள்பட 10 பேர் உயிரிழப்பு அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பவுல்டர் பகுதியில் சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர் ஒருவர், திடீரென சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதனால் அங்கிருந்த மக்கள் அலறியடித்தபடி ஓடினர்.இது குறித்து தகவலறிந்து அங்கு போலீசார் விரைந்து வந்தனர். சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யும் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளே இருந்ததால், போலீசார் அந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். அப்போது அந்த நபர் திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு போலீஸ் அதிகார…

  6. 2020ஆம் ஆண்டில் இறப்பு வீதம் ஏழு சதவீதமாக உயர்வு! 2020ஆம் ஆண்டில் பொதுவாக எதிர்பார்க்கப்பட்டதை விட 7 சதவீதம், அதிகமான இறப்புகளை பிரித்தானியா பதிவுசெய்துள்ளது. இது ஐரோப்பாவில் மிக உயர்ந்த எண்ணிக்கையாகும் என தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகத்தின் தரவுகள் காட்டுகின்றன. பிரித்தானியாவிற்குள், இங்கிலாந்தின் இறப்பு வீதம் ஆண்டு முழுவதும் எதிர்பார்த்த அளவை விட 8 சதவீதம், ஸ்கொட்லாந்தில் 6 சதவீதம், வடக்கு அயர்லாந்து 5 சதவீதம் மற்றும் வேல்ஸ் 4 சதவீதம் ஆகும். 2020ஆம் ஆண்டு இலையுதிர்கால அலைகளின் போது, போலந்து, ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளும் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இருந்தன. தேசிய புள்ளிவிபரங்களுக்கான தரவுகள், இந்த ஆண்டு பிரித்தானியா மற்…

  7. உலகின் வலிமையான இராணுவமாக சீனா: அடுத்தடுத்த இடங்களில் அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா! உலகின் வலிமையான இராணுவமாக சீனாவின் இராணுவம் உள்ளதாக பாதுகாப்பு வலைத்தளமான மிலிட்ரி டைரக்ட் (Military Direct) தெரிவித்துள்ளது. குறித்த வலைத்தளத்தின் ஆய்வு அறிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் ரஷ்யா மூன்றாவது இடத்திலும் இராணுவ வலிமையைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியா நான்காம் இடத்திலும் பிரான்ஸ் ஐந்தாமிடத்திலும் பிரித்தானியான ஒன்பதாம் இடத்திலும் உள்ளன. இராணுவத்துக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு, படை வீரர்களின் எண்ணிக்கை, முப்படைகளின் படைக்கலன்களின் தொகை, அணு வளங்கள், நவீன கருவிகள், படை வீரர்கள…

    • 2 replies
    • 943 views
  8. அரை நூற்றாண்டில் அவுஸ்திரேலியாவில் மிக மோசமான வெள்ளப்பெருக்கு வார இறுதியில் அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் பெய்த கனமழையால் சில பகுதிகளில் அரை நூற்றாண்டில் மிக மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். இதனால் ஆயிரக்கணக்கானவர்களை வெளியேற்றப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கான வீடுகளும் சேதமாகியுள்ளன. நியூ சவுத் வேல்ஸில் மட்டும், 12 பகுதிகளுக்கு வெள்ள அபாயமும் வெளியேற்றும் எச்சரிக்கைகளும் வெளியிடப்பட்டன. 8 மில்லியன் மக்களுடன் அவுஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக இது உள்ளது. அவுஸ்திரேலிய வானிலை ஆய்வகத்தைச் சேர்ந்த ஜொனாதன் ஹவ், மழை மற்றும் பலத்த காற்று இரண்டுமே பேரழிவை ஏற்படுத்துவதாகவும், ஞாயிற்று…

  9. மலேசியாவுடனான தூதரக உறவுகளை துண்டித்தது வடகொரியா 35 Views மலேசியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் வட கொரியாவை சேர்ந்த, முன் சோல் மியோங் என்பவர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்துள்ள அமெரிக்கா அவரை தங்களிடம் ஒப்படைக்கும்படி மலேசிய அரசை கேட்டுக்கொண்டது. இதனை ஏற்று, முன் சோல் மியோங்கை அமெரிக்காவுக்கு நாடு கடத்த மலேசிய கோர்ட்டு அண்மையில் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மலேசியாவுடனான தூதரக உறவை துண்டிப்பதாக அறிவித்துள்ளது வட கொரியா. இதுகுறித்து வடகொரியாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மலேசியாவில் வசிக்கும் ஒரு வடகொரியருக்கு எதிராக அமெரிக்கா விதித்த பண மோசடி குற்றச்சா…

  10. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்- இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா? பதிவு: மார்ச் 19, 2021 22:30 IST சுகாதாரம், கல்வி, வேலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் உலகின் மகிழ்ச்சியான நாடுகள் வரிசைப்படுத்தப்படுகின்றன. சென்னை மெரினா கடற்கரை உலகில் மகிழ்ச்சியான முறையில் மக்கள் வாழும் நாடுகளின் பட்டியல், ஐ.நா. நிலையான அபிவிருத்தி தீர்வுகள் நெட்வொர்க் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியல் சமீபத்தில் வெளியானது. மொத்தம் 149 நாடுகள் மதி…

    • 0 replies
    • 609 views
  11. அல்ஜீரிய சுதந்திரப் போராட்டத்தின் உயர்மட்ட ஆளுமையை பிரெஞ்சு அரசு கொலை செய்தது 35 Views பிரெஞ்சு அதிபரின் ஒப்புதல் அல்ஜீரியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முன்னணி வகித்த முக்கிய ஆளுமை ஒருவரைப் பிரெஞ்சு இராணுவ வீரர்கள் கொலைசெய்து பின்னர் அதனை மூடிமறைத்ததாக பிரெஞ்சு அதிபர் மக்ரோன் (Macron) முதல் தடவையாக ஏற்றுக்கொண்டிருக்கிறார். தமது காலனீய காலத்துக் குற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பிரெஞ்சு அரசின் கொள்கையில் இது மிக அண்மைக்கால முயற்சியாகும். அலி பூமென்ஜெல்லின் (Ali Boumendjel) நான்கு பேரப்பிள்ளைகளைச் சந்தித்த மக்ரோன், குறிப்பிட்ட சட்டத்தரணி தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதைசெய்யப்பட்டு 1957ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் திகதி அல…

    • 1 reply
    • 666 views
  12. கொரோனா தொற்று பல ஆண்டுகளாக தொடர்ந்தால் அது பருவகால நோயாக மாறும் : ஐ.நா. எச்சரிக்கை பதிவு: மார்ச் 18, 2021 09:11 AM கொரோனா தொற்று பல ஆண்டுகளாக தொடர்ந்தால் அது பருவகால நோயாக உருவாகும் என ஐக்கிய நாடுகள் சபை கூறி உள்ளது. ஜெனீவா சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரசால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12.18 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 1…

  13. கோவிட் தொற்று புரளிக்குப் பிறகு இறந்த தான்சானியா அதிபர் ஜான் மகுஃபூலி பட மூலாதாரம், REUTERS படக்குறிப்பு, 2015ம் ஆண்டு முதல் முதலில் அதிபர் ஆன மகுஃபூலி. தான்சானியா அதிபர் ஜான் மகுஃபூலி (வயது 61) இறந்துவிட்டதாக அறிவித்துள்ளார் நாட்டின் துணை அதிப சமியா சுலுஹு ஹாசன். முன்னதாக அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக புரளி பரவியது. இவர் கொரோனா வைரஸ் குறித்தே சந்தேகங்களை எழுப்பிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு வாரங்களாக பொது வெளியில் காணப்படாமல் இருந்த நிலையில் டார் எஸ் சலாம் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் இதயக் கோளாறு காரணமாக அவர் இறந்துவிட்டதாக அரசுத் தொலைக்காட்சி…

  14. ஐஸ்லாந்தில்.. 20 நாட்களில், 40 ஆயிரம் நில அதிர்வுகள்! ஐஸ்லாந்தில் கடந்த 20 நாட்களில் மாத்திரம் 40 ஆயிரம் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக அந்நாட்டின் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. எரிமலைகளால் சூழப்பட்ட ஐஸ்லாந்தில் அண்மைக்காலமாக தொடர்ந்து நில அதிர்வுகள் உணரப்பட்டு வருகிறன. இந்தநிலையில் வழக்கத்திற்கு மாறாக குறுகிய காலத்தில் அதிக அளவில் நில அதிர்வுகள் பதிவாகி இருப்பது அந்நாட்டு மக்களை அச்சமடையச் செய்துள்ளது. நில அதிர்வுகள் காரணமாக எரிமலைகளில் வெடிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். http://athavannews.com/ஐஸ்லாந்தில்-20-நாட்களில்-40-ஆ/

  15. அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து ஆராய நாளை கூடுகிறது உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி விவகாரம் குறித்து ஆலோசிக்க உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு நாளை கூடி ஆலோசனை நடத்தவுள்ளது. உலக அளவில் கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுவரும் தடுப்பூசிகளில், ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசி முக்கியமானது. இந்த தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலருக்கு இரத்தம் உறைதல் ஏற்பட்டதாக தெரிவித்து, குறித்த தடுப்பூசிக்கு டென்மார்க், நோர்வே, ஐஸ்லாந்து போன்ற நாடுகள் தற்காலிகமாக தடை விதித்து ள்ளன. இதனால் ஏனைய நாடுகளிலும் இந்த தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில், அஸ்ட்ரா ஜெ…

  16. சீனாவில் 24 வகையான வௌவால் கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிப்பு சீனாவில் கொரோனா வைரஸின் தோற்றம் பற்றிய ஆய்வில், 24 வகையான வௌவால் கொரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் வௌவால் வைரஸ்கள் குறித்து சர்வதேச விஞ்ஞானிகள் பலர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அவற்றில் ஷான்டோங் மருத்துவ பல்கலை கழகத்தின் பேராசிரியர் ஷி வெய்போங் என்பவர் தலைமையில் அண்மையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், தென்மேற்கு சீனாவில் இதற்கு முன்பு அறியப்படாத 24 வகையான வௌவால் கொரோனா வைரஸ்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவற்றில் 4 வைரஸ்கள் உலக நாடுகளில் பெருந்தொற்றை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ்களுடன் தொடர்புடையவை என தெரி…

  17. இரத்தம் உறைதல் குற்றச்சாட்டு: அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் பயன்பாட்டை நிறுத்திய ஐரோப்பிய நாடுகள்! ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பயன்பாட்டை, ஐரோப்பிய நாடுகள் இடைநிறுத்தியுள்ளன. இதன்படி, ஸ்பெயின், ஜேர்மனி, இத்தாலி, போர்த்துகல், ஆஸ்திரியா, லாட்வியா, ஸ்லோவேனியா, நெதர்லாந்து, டென்னமார்க் ஆகிய நாடுகள் இந்த தடுப்பூசிக்கு தற்காலிக தடை விதித்து உள்ளன. அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி போட்டு கொண்ட முதியவர்கள் பலருக்கு இரத்த உறைவு ஏற்பட கூடிய பல சம்பவங்கள் தெரியவந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நிறைவடையாத விசாரணை காரணமாக ஒன்பது ஐரோப்பிய நாடுகள் முடிவை எடுத்துள்ளது. எனினும், அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி உற்பத்தி நிறுவனம், சேகரித்து …

  18. நைஜரில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் 58 பேர் உயிரிழப்பு! மேற்கு ஆபிரிக்க நாடான நைஜரில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் சுமார் 58 பேர் உயிரிழந்துள்ளனர். Tillabéri பிராந்தியத்தில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் கிளர்ச்சியாளர்களினால் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாலி அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று(புதன்கிழமை) முதல் எதிர்வரும் 3 நாட்களுக்கு தேசிய துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், துப்பாக்கிதாரிகளினால் பொதுமக்கள் பயணித்த இரண்டு வாகனங்கள் எரியூட்டப்பட்டதுடன் மேலும் இரண்டு வாகனங்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன எவ்வாறாயினும் இந்த தாக்குதலுக்கு இதுவ…

  19. எங்களைச் சீண்டாமல் இருப்பது நல்லது – அமெரிக்காவுக்கு வடகொரிய அதிபரின் சகோதரி எச்சரிக்கை 7 Views “நீங்கள் அடுத்த நான்கு வருடங்களுக்கு அமைதியாக உறங்க வேண்டும் என்று நினைத்தால் எங்களைச் சீண்டாமல் இருப்பது நல்லது என்று அமெரிக்காவுக்கு வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங் எச்சரிக்கை விடுத்துள்ளார். வடகொரியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் கடற்படை கூட்டுப் பயிற்சி வரும் நாட்களில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிகாரிகள் தென் கொரியாவுக்கு வருகை தந்துள்ளனர். இந்த நிலையில் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங், அமெரிக்காவுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தனது குரலைப் பதிவு செய்துள்ளார். இது…

  20. 70 மில்லியன் டாலருக்கு வாங்கப்பட்ட Jpeg புகைப்படம் - அதில் அப்படி என்ன இருக்கிறது? #NFTCrypto ஜெனிஃபர்.ம.ஆ Everydays: The First 5000 Days கிரிப்டோகரன்சி கொடுத்து ஒரு விர்ச்சுவல் சொத்தை வாங்குவது சமீப காலங்களில் மிகவும் அதிகரித்திருக்கிறது. ஆயிரம் இரண்டாயிரம் என்றில்லாமல் மில்லியன்களில் இந்த என்.எஃப்.டி-க்களின் விற்பனை நடக்கிறது. #Everydays: The First 5000 Days நெருப்பு, சக்கரம், மின்சாரம்... இந்த வரிசையில் மனித குலத்தின் வளர்ச்சியில் அசுர பாய்ச்சல் ஏற்படுத்திய விஷயம் இணையம். சில நூறாண்டுகளுக்கு முன்புவரை, மின்சார ஆற்றலை பற்றி யாரேனும் பேசியிருந்தால் பலருக்குப் புரிந்திருக்காது. ஐம்பதாண்டுகளுக்கு முன்வரை வயர்லெஸ் செல்போன் ப…

  21. மியன்மாரின் பல பகுதிகளில் இராணுவ சட்டம் அறிவிப்பு ; இதுவரை 126 பேர் பலி இராணுவ ஆட்சி மாற்றத்திற்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டங்களின் போது மியான்மர் பாதுகாப்புப் படையினர் குறைந்தது 38 பேரைக் கொலை செய்ததாக மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் நாட்டின் மிகப்பெரிய நகரமான யாங்கோனில் உள்ள பல நகரங்களில் இராணுவச் சட்டம் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் தினமும் தொடரும் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்களைத் தடுக்க பாதுகாப்புப் படையினர் முயன்று வருவதால் 126 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை தன்னிச்சை மற்றும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளினால் உயிரிழந்துள்ளதாக அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் உறுதிபடுத்தியுள்ளது. நேற்யை தினம் ஆர்ப்பாட்டக்காரர்க…

  22. ரத்தம் உறைதலுக்கும்.. தடுப்பூசிக்கும், எந்தத் தொடர்பும் இல்லை – அஸ்ட்ராசெனகா நிறுவனம் ஒஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதில் சிலருக்கு ரத்த உறைவு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், ரத்தம் உறைதலுக்கும் தங்களின் தடுப்பூசிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அஸ்ட்ராசெனகா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஒஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராசெனகா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட டென்மார்க்கைச் சேர்ந்த ஒருவர் வெய்ன் த்ராம்போசிஸ் எனப்படும் நரம்பில் ரத்தம் உறைந்து உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து, நோர்வே, ஐஸ்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி, ஜேர்மன், பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் அஸ்ட்ராசெனகா ஊசி போடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்தன. …

  23. டென்மார்க், நோர்வே ஆகிய நாடுகளில் அஸ்ட்ரா செனேகா தடுப்பூசிப் பயன்பாடு நிறுத்தம்! டென்மார்க்கில் இரண்டு வாரங்களுக்கு அஸ்ட்ரா செனேகாவின் கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்துவது இடைநிறுத்தப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று அறிவித்துள்ளனர். இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களில் சிலருக்கு கடுமையான இரத்த உறைவு ஏற்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்திருக்கலாம் என்பதன் அடிப்படையில் இது இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்படக்கூடிய கடுமையான பக்கவிளைவுகள் குறித்த அறிக்கைகளுக்கு டென்மார்க் மருந்துகள் நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என டென்மார்க் சுகாதார ஆணையத்தின் இயக்குநர் சோரன் ப்ரோஸ்ட்ரோம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த விளைவுகள் கு…

  24. சீனாவில் 24 வகையான வவ்வால் கொரோனா வைரசுகள்; சர்வதேச விஞ்ஞானிகள் குழு அதிர்ச்சி சீனாவில் கொரோனா வைரசின் தோற்றம் பற்றிய ஆய்வில், 24 வகையான வவ்வால் கொரோனா வைரசுகள் கண்டறியப்பட்டது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. பதிவு: மார்ச் 15, 2021 14:16 PM பீஜிங், சீனாவின் உகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. விலங்கு சந்தை ஒன்றில் இருந்து இந்த வைரசானது தோன்றியிருக்க கூடும் என முதலில் கூறப்பட்டது. எனினும், அதற்கு போதிய சான்றுகள் வழங்கப்படவில்லை. இதன்பின்னர் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் கிளை பரப்ப தொடங்கின. இவற்றில் வல்லரசு நாட…

  25. ஜெருசலேமில் தூதரகத்தை முறையாக திறந்து விட்டதாக கொசோவோ அறிவிப்பு! இஸ்ரேல்-பாலஸ்தீனிய மோதலின் மையத்தில் இருக்கும் சர்ச்சைக்குரிய நகரத்தில் தூதரகத்தை நிறுவிய முதல் ஐரோப்பிய நாடாக தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள கொசோவோ மாறியுள்ளது. ஜெருசலேமில் உள்ள தனது தூதரகத்தை முறையாக திறந்து விட்டதாக கொசோவோ உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதும், செப்டம்பர் மாதம் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கொசோவோ-செர்பியா உச்சிமாநாட்டின் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது. கொசோவோ ஜெருசலேமில் தனது தூதரகத்தை நிறுவுவதில் அமெரிக்கா மற்றும் குவ…

    • 0 replies
    • 345 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.