உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26628 topics in this forum
-
2022 இன் தொடக்கத்தில் கொவிட் தாக்கம் முடிவடையும் - உலக சுகாதார ஸ்தாபனம் நம்பிக்கை கொரோனா வைரஸ் பரவலானது 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முடிவடையும் என்று தான் நம்புவதாக ஐரோப்பாவிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) பிராந்திய இயக்குனர் ஹான்ஸ் க்ளூக் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். எனினும் 2021 ஆம் ஆண்டில் கொவிட்-19 இன்னும் பரவலாக இருக்கும் என்றும் அவர், டென்மார்க்கின் ஒலிபரப்புக் கூட்டுத்தானத்திடம் தெரிவித்துள்ளார். மோசமான சூழ்நிலைகள் இப்போது முடிந்துவிட்டதாகக் கூறிய அவர், 2020 ஐ விடவும் 2021 இல் அதன் தாக்கம் குறைவாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் கொவிட்-19 தொற்றுநோய் தாக்கத்தை யாரும் முன்கூட்டியே அறிய முடியாது என்று அவர் எச்சரித்தார்…
-
- 0 replies
- 408 views
-
-
ஈரான் தயாரித்துள்ள தடுப்பூசி 90 வீதம் பயனளிப்பதாக அறிவிப்பு! உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசியை, மனிதர்களிடையே பரிசோதித்துப் பார்த்ததில் 90 வீதம் பயனளிப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. கோவ்-ஈரான் பரேகற் (COV-Iran Barekat) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தடுப்பூசியானது, பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக, குறித்த தடுப்பூசிப் பரிசோதனையின் தலைமை அதிகாரி மொஹமட் ரெசா சலேஹி தெரிவித்துள்ளார். அத்துடன், இந்தத் தடுப்பூசியின் இரண்டு அளவுகளைப் பெற்றவர்களில் 90 வீதத்தினர், நோய் எதிர்ப்பு சக்திக்கான சான்றுகளை வெளிப்படுத்துகிறார்கள் என ஆரம்ப முடிவுகள் காட்டுவதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை, மேலும் துல்லியமான முடிவுகளுக்கு அதிக பரி…
-
- 0 replies
- 422 views
-
-
சர்ச்சைக்குரிய சட்டமூலத்தினை நிறைவேற்றியது பிரான்ஸ்! பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய சட்டமூலம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கமைய இனி வெறுப்பூட்டும் விதமாக பேசுவோரை தடை செய்யவும், இஸ்லாமிய பாடசாலைகளை மூடுவதற்கும் பொலிஸாருக்கு அதிகாரம் அளிக்கப்படவுள்ளது. நேற்று பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழவையில் முன்வைக்கப்பட்ட குறித்த சட்டமூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த சட்டத்தை ஆதரித்து 347 பேரும் எதிர்த்து 151 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர். இனி, குறித்த சட்டமூலம் மேலவையில் வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. பிரான்சில் இஸ்லாமியர்கள் பெருமளவில் வசித்தாலும், அவர்கள் மற்றவர்களுடன் இணைந்து வாழ்கிறார்களா என்பது குறித்த விவகாரம் பல ஆண்டுகளாக பிரிவி…
-
- 2 replies
- 719 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்ந்தும் தடை செய்யப்பட்ட அமைப்புக்களில் இருப்பது என்பது சட்டத்திற்கு முரணான ரீதியில் எட்டப்பட்ட தீர்மானம் என்று கடந்த காலங்களில் பிரித்தானிய நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியிருந்தது. இந்த நிலையில், இன்றைய தினம் பிரித்தானிய நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பின் படி விடுதலைப் புலிகள் அமைப்பை தொடர்ந்தும் தடை பட்டியலில் வைத்திருக்க வேண்டுமா இல்லையா என்பதை உள்துறை அமைச்சர் தான் தீர்மானிக்க வேண்டும் எனவும் அதற்காக 90 நாட்கள் கால அவகாசம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரித்தானியாவில் இருக்கும் சிரேஸ்ட சட்டத்தரணி அருண் கணநாதன் தெரிவித்துள்ளார். எமது செய்தி சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அ…
-
- 1 reply
- 705 views
-
-
மியான்மர் இராணுவத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் மீது பிரித்தானியா, கனடா பொருளாதாரத் தடை 22 Views மியான்மர் இராணுவத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் மீது பிரித்தானியா மற்றும் கனடா நாடுகள் பொருளாதாரத் தடையை விதித்துள்ளன. கடந்த வாரம் மியான்மர் இராணுவ அதிகாரிகள் மீதும் அவர்கள் குடும்பத்தினர் மீது அமெரிக்க பொருளாதாரத் தடையை விதித்தது இந்த நிலையில் பிரித்தானியாவிலும், கனடாவும் மியான்மரின் 9 இராணுவ அதிகாரிகள் மீது பொருளாதார தடை விதித்துள்ளன. இதுகுறித்து பிரித்தானியா வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “ நாங்கள் எங்கள் நட்பு நாடுகளுடன் இணைந்து மியான்மர் மக்களுக்கு நீதி கிடைக்க இராணுவத்திற்கு எதிராக நடவடிக்கைகளை எடு…
-
- 0 replies
- 399 views
-
-
தடுத்து வைக்கப்பட்டுள்ள.. டுபாய் இளவரசி – ஐ.நா விசாரணை! தடுத்து வைக்கப்பட்டுள்ள டுபாய் இளவரசி குறித்து விசாரணை நடத்தவுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திடம் தெரிவித்துள்ளது. டுபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூமின் மகள் இளவரசி ஷேய்க்கா லதீஃபா தாம் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும், தம் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றும் காணொளியில் தெரிவித்துள்ளார். 2018 மார்ச்சில், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிலிருந்து அவர் கடல் மார்க்கமாய்த் தப்ப முயன்றார். அதன் பிறகு அவர் பொது வெளியில் காணப்படவில்லை. அவர் சிறைப்பிடிக்கப்பட்டு சுமார் ஓராண்டுக்குப் பிறகு எடுக்கப்பட்ட காணொளிகளை பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டது. சிறையாக மாற்றப்பட்டுள்…
-
- 1 reply
- 998 views
-
-
மியன்மாரின் இராணுவ சதித்திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் சுமார் 500 பேர் கைது இந்த மாத சதித்திட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் பல அரசாங்க அலுவலகங்களை முடக்கி, வேலைநிறுத்தங்களை ஊக்குவித்ததற்காக மியான்மரின் இராணுவ ஆட்சிக்குழு, ஆறு பிரபலங்களுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதுடன் இதுவரை சுமார் 500 பேரை கைதுசெய்தும் உள்ளது. புதன்கிழமை பிற்பகுதியில், மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலேயில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர், அவர்கள் ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாக ரயில்களை நிறுத்திய ரயில்வே தொழிலாளர்களை எதிர்கொண்டனர். இதன்போது ஒருவர் காயமடைந்ததாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். பெப்ரவரி 1 ஆட்சி கவிழ்ப்பு மற்றும் தேர…
-
- 0 replies
- 472 views
-
-
டொரொன்டோ நகரம் செய்த தவறுக்காக எனது வேலை செய்யுமிடம் அவர்களிடம் நஸ்ட ஈடு கோரியது. அதற்கு அவர்கள் அனுப்பிய பதிலில் ஏழு மொழிகளில் தமிழும் இருந்தது ஆச்சரியமாக இருந்தது.
-
- 3 replies
- 888 views
-
-
பிரித்தானியாவில் மேலும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு! கொரோனா வைரஸின் புதிய வகை ஒன்றை பிரித்தானிய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு ஏற்கனவே கொரோனா வைரஸின் இன்னொரு புதிய வகையை பிரித்தானியாவில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருந்தனர். இந்நிலையில் மேலும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. B.1.525 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வகை கொரோன வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை வைரஸ் தொற்றை ஒத்து அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேல்ஸ்-இல் இருவரும், இங்கிலாந்தில் 36 பேரும் புதிய வகை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக எடின்பரோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். டெ…
-
- 4 replies
- 970 views
- 1 follower
-
-
ஒக்ஸ்போர்ட் மற்றும் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு WHO அனுமதி http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/02/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-720x430.jpg ஒக்ஸ்போர்ட் மற்றும் அஸ்ட்ரா செனகா ஆகிய இரண்டு வகை தடுப்பூசிகளை அவசர கால சிகிச்சைக்குப் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது. சீனாவில் முதல் பாதிப்புகள் டிசம்பர் 2019ல் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் 210 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியது. இந்த வைரஸினால் 10 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதில் சுமார் 25 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவைத் தடுக்க, 30க்கும்…
-
- 0 replies
- 485 views
-
-
எகிப்து: 5000 ஆண்டுகள் பழைமையான பீர் தொழிற்சாலை கண்டுபிடிப்பு... சொல்லும் செய்தி என்ன?! அந்தோணி அஜய்.ர பண்டைய எகிப்து மது உற்பத்தி தொழிற்சாலை ( The Egyptian Antiquities Ministry | AP ) பழங்கால எகிப்திய மன்னர்களின் இறுதி சடங்குகளிலும் தியாகிகளின் நினைவு நாள் சடங்குகளிலும் பீர் முக்கிய பானமாகப் பருகப்பட்டு வந்திருக்கிறது. மனித நாகரீகத்தின் ஆதி முதலே கலாசாரத்தின் கொண்டாட்டத்தின் முக்கிய பகுதியாக மது இருந்து வருகிறது. நம் வரலாற்று நாவல்களிலும் இலக்கியங்களிலும் பலவகை சோம பானங்கள், கள்வகைகள் பற்றிய குறிப்புகளைக் காண்கிறோம். தற்போது உலகிலேயே மிகப் பழைமையான மது உற்பத்தி தொழிற்சாலையை எகிப்தில் கண்டுபிடித்துள்ளனர். …
-
- 0 replies
- 376 views
-
-
எல்லைக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது ஜேர்மனி!! கொரோனா தொற்றின் புதிய மாறுபாடு நாட்டில் பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சின் ஒருபகுதியாக எல்லைக் கட்டுப்பாடுகளை ஜேர்மனி கடுமையாக்கியுள்ளது. அந்தவகையில் சில விதிவிலக்குகளுடன், ஒஸ்திரியாவின் டைரோல் மாகாணத்துடனான எல்லையுடன் செக் குடியரசின் எல்லையும் ஜேர்மனி மூடியுள்ளது. அதன்படி குறித்த பகுதி ஊடாக, ஜேர்மன் மக்கள், டிரக் ஓட்டுநர்கள், போக்குவரத்து மற்றும் சுகாதார சேவை ஊழியர்கள் மற்றும் இன்னும் சிலருக்கு நுழைவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஜேர்மனிக்கு வெளியே வசிக்கும் எல்லை தாண்டிய தொழிலாளர்களை கோபப்படுத்தியுள்ளது. சமீபத்திய வாரங்களில் ஜேர்மனியில் தொற்று வீதம் படிப்படியாகக் குறைந்துவிட்ட…
-
- 0 replies
- 341 views
-
-
கொரோனா தொற்று பரவலின் ஆரம்ப இடம் குறித்த தகவலை சீனா வெளியிட வேண்டும் – பிரித்தானியா கொரோனா தொற்று பரவலின் ஆரம்ப இடம் குறித்த தகவலை சீனா வெளியிட வேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. முன்னதாக அமெரிக்காவும் இந்த கோரிக்கையை விடுத்திருந்த நிலையில் பிரித்தானியா வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ராப், இந்த விடயத்தில் சந்தேகம் வெளியிட்டுள்ளார். குறிப்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் குழு, சீனாவின் வூஹான் நகருக்குச் சென்று தொற்று தொடர்பாக ஆராயும்போது அந்தக் குழுவுக்குச் சீனாவில் எந்த அளவு சுதந்திரம் வழங்கப்பட்டது என்பது குறித்து அவர் கவலை வெளியிட்டார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் குழுவுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட்டதா என்றும் அவர்களின் …
-
- 0 replies
- 285 views
-
-
பிரித்தானியாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 326பேர் உயிரிழப்பு! பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி செலுத்திக் கொண்ட 326பேர் உயிரிழந்துள்ளதாக மருந்து மற்றும் சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் ஃபைஸர் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை எடுத்துக்கொண்ட 236 பேர் ஒவ்வாமை உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்துள்ளனர். இதேபோல் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்த கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்ட 90 பேரும் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் வயதானவர்கள் என்றும், கொரோனா தடுப்பூசியால்தான் உயிரிழந்தனரா என்பது உறுதியாகவில்லை என்றும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவில் தற்போதுவரை சுமார் 13 மில்லியன் பேருக்கு கொரோனா த…
-
- 0 replies
- 990 views
-
-
கினியாவில் எபோலா தொற்றினால் 2016 க்கு பின்னர் மரணம் பதிவு கினியாவில் எபோலா தொற்றினால் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐந்து பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் இரத்தப்போக்கு காரணமாக அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கினியாவில் தொடங்கிய மேற்கு ஆபிரிக்காவில் பரவிய எபோலா தொற்றுநோயால் 2013 மற்றும் 2016 க்கு இடையில் 11,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சிம்பன்சிகள், பழ வௌவால்கள் மற்றும் வன மான் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பு மூலம் மனிதர்களுக்கு எபோலா தொற்று பரவுகின்றமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கினியாவில்-எபோலா-தொற்…
-
- 0 replies
- 273 views
-
-
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு பிரித்தானிய வழக்கறிஞர் நியமனம் 19 Views அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் பிரதம வழக்கறிஞராக பிரித்தானியாவைச் சேர்ந்த கரீம் கான் (50) நியமனம் பெற்றுள்ளார். பிரதான வழக்கறிஞரை தெரிவு செய்வதற்கு இடம்பெற்ற தேர்தலில் 123 உறுப்பு நாடுகளில் 72 நாடுகள் கானுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. இந்த பதவிக்கு பிரித்தானியா, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் போட்டியிட்ருந்தனர். இவரின் நியமனத்தை வரவேற்றுள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டெமினிக் ராப், அனைத்துலக சட்டவிதிகளில் அதிக அனுபவம் வாய்ந்த கான், உலகில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுதருவதற…
-
- 0 replies
- 384 views
-
-
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் மேற்பார்வை ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்துவரும் (Audit Coordinator) 34 வயதுடைய அரோரா அகான்ஷா, ஐ.நா. சபையின் செயலாளர் நாயகப் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். தற்போதய செயலாளர் நாயகமான அன்ரோணியோ குத்தெரெஸின் பதவிக்காலம் இந்த வருட் இறுதியில் முடிவடைகிறது. ஜனவரி 2022 இல் ஆரம்பவிருக்கும் புதிய பதவிக் காலத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட நிலையில் அரோரா அகன்ஷா முதலாவது ஆளாகத் தன் அறிவிப்பைச் செய்திருக்கிறார். தற்போதைய செயலாளர் நாயகமான குத்தேரெஸ் தான் இரண்டாவது தவணையிலும் தொடர்ந்தும் பணியாற்ற விரும்புவதாக சென்ற வாரம் அறிவித்திருந்தார். போட்டியிடும் தனது எண்ணம் குறித்து தனது கருத்துக்களை காணொளி மூலம் அகன்ஷா வெளிய…
-
- 2 replies
- 449 views
- 1 follower
-
-
ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை துண்டிக்க தயார்: ரஷ்யா! பொருளாதார ரீதியாக வலிமிகுந்த பொருளாதாரத் தடைகளை விதித்தால், ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை துண்டிக்க மாஸ்கோ தயாராக உள்ளது என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். அமைச்சின் இணையதளத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்ட ஒரு நேர்காணலின் போது அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘உலகளாவிய வாழ்க்கையிலிருந்து நம்மை தனிமைப்படுத்த நாங்கள் விரும்பவில்லை, ஆனால் அதற்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் அமைதியை விரும்பினால் போருக்குத் தயாராகுங்கள்’ என கூறினார். கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னியை கைது செய்து சிறையில் அடைப்பது தொடர்பாக ரஷ்யாவிற்கும் மேற்கு …
-
- 0 replies
- 472 views
-
-
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; குறைந்தது 100 பேர் காயம் டோஹோகு கடற்கரையில் சனிக்கிழமை பிற்பகுதியில் 7.3 ரிச்டெர் அளவில் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக 'த ஜப்பான் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. 2011 மார்ச் நிலநடுக்கம், சுனாமி மற்றும் அணுசக்தி பேரழிவின் 10 ஆவது ஆண்டு நிறைவுக்கு சில வாரங்களுக்கு முன்பு ஜப்பானில் ஆறு மாகாணங்களில் பதிவான இந்த நிலநடுக்கம் குறைந்தது 100 பேரை காயப்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கம் தோஹோகு பிராந்தியத்தில் மியாகி மற்றும் புகுஷிமா மாகாணங்களைத் தாக்கியது. சுனாமி எச்சரிக்கை எதுவும் இதனால் விடுக்கப்படவில்லை. மியாகி, புகுஷிமா, இபராகி, டோச்சிகி, சைட்டாமா மற்றும் சிபா மாகாணங்களிலுள்ள மக்கள் காயமடைந்ததாக அறிவிக்கப…
-
- 0 replies
- 444 views
-
-
ஜெனீவா கூட்டத் தொடர் இம்முறை இணைய வழியாகவே நடைபெறும் – பல நாடுகள் எதிர்ப்பு 2 Views ஜெனீவாவில் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் பெரும்பாலான நிகழ்ச்சிகள் இணைய வழியாகவே நடைபெறும் எனத் தெரியவருகின்றது. வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவும் கொழும்பிலிருந்து இணைய வழியாக உரையாற்றுவதற்கே திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய கொரோனா நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சுவிட்சர்லாந்தில் தற்போது பெருமளவுக்கு பொது முடக்கம் நடைமுறையில் உள்ளது. வெளிநாட்டவர்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால், பெரும்பாலான நிகழ்வுகளை இணைய வழியாக…
-
- 1 reply
- 386 views
-
-
ஜேர்மனி- நெதர்லாந்தில் கடுமையான பனிப்பெழிவு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! ஜேர்மனி மற்றும் நெதர்லாந்தில் பெய்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக, அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துள்ளது. வடக்கு ஜேர்மனியில் காணப்படும் பனியால் நெதர்லாந்து மற்றும் சில நீண்டதூர இடங்களுக்கு ரயில் போக்குவரத்து இரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜேர்மனியில், மைனஸ் 7 டிகிரி செல்சியசுக்கு வெப்பநிலை பதிவாகும் என்றும் பனிப்புயல்கள் உருவாகும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பெர்லின், ஹனோவர் உள்பட பல்வேறு இடங்களுக்கு மறு உத்தரவு வரும்வரை ரயில்களை இயக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே நெதர்லாந்தில் 9ஆண்டுகளுக்கு பிறகு கடுமையான அளவு பனி…
-
- 6 replies
- 1k views
- 1 follower
-
-
ஆன் சாங் சூகி உள்ளிட்ட அதிகாரிகளின் விடுதலையை வலியுறுத்திய தீர்மானம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றம் மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆன் சாங் சூகி உள்ளிட்ட அதிகாரிகளின் விடுதலையை வலியுறுத்தும் தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மியன்மாரில் இராணுவ ஆட்சி அமுல்படுத்துள்ளமை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவை நேற்று வெள்ளிக்கிழமை அவசரமாகக் கூடி ஆலோசித்தது. இதன்போதே, மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆன் சாங் சூகி உள்ளிட்ட அதிகாரிகளின் விடுதலையை வலியுறுத்தும் தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மியன்மாரில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசைக் கவிழ்த்துவிட்டு, ஆட்சியை இராணுவம் கைப்பற்றியது …
-
- 0 replies
- 341 views
-
-
பி.பி.சி. உலக செய்திச் சேவைக்கு தடை விதித்தது சீனா பிரிட்டிஷ் தொலைக்காட்சி அலைவரிசையான பிபிசி உலக செய்திச் சேவைக்கு சீனாவில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகம் வெள்ளிக்கிழமை கூறியது. தடை குறித்து சீனாவின் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகம் தெரிவிக்கையில், "செய்திகள் உண்மையாகவும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும்", "சீனாவின் தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது" என்று மேற்கோள் காட்டியது. எனவே இந்த அலைவரிசை சீனாவில் ஒளிபரப்பப்படும் வெளிநாட்டு அலைவரிசைகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்யவில்லை, மேலும் ஒரு வருடத்திற்கு ஒளிபரப்ப அதன் விண்ணப்பம் ஏற்கப்படாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. ஐ…
-
- 0 replies
- 559 views
-
-
பிரித்தானியாவில் புதிய கட்டுப்பாடுகளை மீறும் பயணிகளுக்கு10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை! பிரித்தானியாவிற்கு வருகைதரும் பயணிகள் புதிதாக விதிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை மீறி, பொய் கூறினால் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்துடன், 10 ஆயிரம் பவுண்ட்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியப் பொதுமக்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மிகவும் வலுவான செயற்பாட்டை எதிர்பார்க்கிறார்கள் எனவும் குற்றத்தின் அளவுக்கு ஏற்ப அதிகபட்ச தண்டனை தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் போக்குவரத்துச் செயலாளர் கிரான்ட் ஷப்ஸ் (Grant Shapps) தெரிவித்துள்ளார். பிரித்தானிய அரசாங்கம் COVID-19 தொற்று மற்றும் உருமாறி…
-
- 0 replies
- 322 views
-
-
அமெரிக்க மற்றும் சீன ஜனாதிபதிகள் தொலைபேசி வாயிலாக பேச்சு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் தொலைபேசி வாயிலாக பேசியதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். பதவியேற்ற பின்னர் முதன்முறையாக சீன ஜனாதிபதியுடன் பேசிய ஜோ பைடன் இருநாட்டு வர்த்தகம் தொடருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கா-சீன வர்த்தக உறவுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மீட்பதற்கான முயற்சியாக இருதலைவர்களும் ஆலோசனை நடத்தியுள்ளனர். சீனாவின் முறையற்ற பொருளாதார நடவடிக்கைகள், ஹொங்கொங் மீதான அடக்குமுறைகள், மனித உரிமை மீறல்கள் போன்ற பிரச்சினைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி தமது கண்டனத்தை சீனாவுக்குத் தெரிவித்திருப்பதாக வெள்ளை மாளிகை விட…
-
- 0 replies
- 314 views
-