Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பேரழிவை ஏற்படுத்திய சீனா, உலகநாடுகளுக்கு 10 டிரில்லியன் டொலர்கள் வழங்க வேண்டும்: ட்ரம்ப்! கொரோனா வைரஸை உலகுக்கு ஏற்படுத்தி பேரழிவை ஏற்படுத்திய சீனா உலகநாடுகளுக்கு 10 டிரில்லியன் டொலர்கள் வழங்க வேண்டும் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் தோற்றம் எங்கே என்பதைக் கண்டறிய, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிவிப்பின் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக டொனால்ட் ட்ரம்ப் கூறுகையில், ‘சீன வைரஸ் வூஹான் ஆய்வகத்தில் இருந்தே பரவியது என ட்ரம்ப் கூறியது சரியே என தற்போது அனைத்து தரப்பினரும் குறிப்பாக எதிரி என்று சொல்லப்படுபவர்களும் கூறத்தொடங்கியுள்ளனர்.…

  2. 28 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை! அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன், மேலும் 28 சீன நிறுவனங்கள் மீது தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக தடை செய்யப்பட்ட சீன நிறுவனங்களின் எண்ணிக்கை 59ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளின் பாதுகாப்பு அல்லது ஜனநாயக மதிப்புகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அடக்குமுறை அல்லது கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு பயன்படுத்தப்படும் சீன கண்காணிப்பு தொழில்நுட்பத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டிருப்பதாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. ஏற்கனவே சீன இராணுவத்துடன் தொடர்பில் இருப்பதாக கருதப்படும், 31 சீன பெருநிறுவனத்தின் பங்குகளை அமெரிக்க தொழிலதிபர்கள் வாங்…

  3. நெதன்யாகுவை பதவியிலிருந்து நீக்கி அரசாங்கத்தை உருவாக்க முடியும் - இஸ்ரேலிய ஜனாதிபதியிடம் லாப்பிட் உறுதி பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டுகால பிரதமர் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவரும் ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கான உடன்பாட்டை இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் எட்டியுள்ளன. அதற்கு அமைவாக எட்டு பிரிவுகளின் கூட்டணி அமைக்கப்பட்டதாக மய்ய கட்சித் தலைவர் யெய்ர் லாப்பிட் அறிவித்துள்ளார். எனினும் கூட்டணி அரசாங்கம் பதவியேற்பதற்கு முன்னர் பாராளுமன்றமான கெனெசெட்டின் வாக்கெடுப்பு இடம்பெறும். இந்த உடன்பாட்டை பதவியில் உள்ள தற்போதைய ஜனாதிபதி ருவன் ரிவ்லினுக்கு அறிவித்ததாக லாப்பிட் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார். "கூட்டணி அரசாங்கம் அனைத்து இஸ்ரேலிய குடிமக்கள், அரசாங்கத்து…

  4. கொரோனா வைரஸ் வகைகளில்... "டெல்டா" மட்டுமே கவலையளிக்கும் வகையில் உள்ளது – WHO இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் வகைகளில் டெல்டா மட்டுமே கவலையளிக்கும் வகையில் இருப்பதாக உலக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட பி.1.617 என்ற உருமாறிய கொரோனா, தொற்று, பரவல் அடிப்படையில் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வகை கொரோனா வைரஸ் மக்களின் நலுனுக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக கூறியுள்ள குறித்த நிறுவனம் மற்ற இரு வகைகளும் வீரியம் குறைந்தவை எனவும் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2021/1219911

  5. ஈரானின்... மிகப் பெரிய போர்க்கப்பல் தீப்பிடித்து எரிந்து கடலில் மூழ்கியது! ஈரானின் மிகப்பெரிய போர்க்கப்பல்களில் ஒன்றான ‘கார்க்’ போர்க்கப்பல், ஓமன் வளைகுடாவில் ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே தீப்பிடித்து எரிந்து கடலில் மூழ்கியுள்ளது. ஈரானின் ஜாஸ்க் துறைமுகத்துக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த இந்த கப்பலில் நேற்று (புதன்கிழமை) அதிகாலை 2:25 மணியளவில் திடீரென தீ பிடித்தது. இந்த தீயிணை கட்டுப்படுத்த 20 மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்பட்ட போராட்டம், இறுதியில் தோல்வியில் முடிந்தது. கப்பல் கடலில் அப்படியே மூழ்கி கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும் உயிர் காக்கும் ஆடைகளை அணிந்து கப்பலிலிருந்து கடலில் குதித்து உயிர் தப்பினர். கப்பலில் தீ பிடித்ததற்கான காரணம் என்ன என்பத…

  6. இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவுக்கு புதிய பெயர் ‘காப்பா’, ‘டெல்டா’ - உலக சுகாதார நிறுவனம் சூட்டியது இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ்களுக்கு ‘காப்பா’, ‘டெல்டா’ என உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டி உள்ளது. பதிவு: ஜூன் 02, 2021 09:52 AM ஜெனீவா, கொரோனா வைரஸ் முதன்முதலாக சீனாவின் உகான் நகரத்தில் தோன்றியது. இந்த வைரஸ் உருமாற்றம் அடைந்து வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் என பல நாடுகளிலும் உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் இந்த வைரஸ்களை அந்தந்த நாட்டின் பெயரால் அழைப்பதற்கு ஆட்சேபங்கள் எழுந்தன. இந்த நிலையில் இத்தகைய வைரஸ்களுக்கு உலக சுகாதார நிறுவனம் புதிய பெய…

  7. "எச் 10 என் 3" பறவைக் காய்ச்சலினால்... பாதிக்கப் பட்ட, முதலாவது நபர் சீனாவில் அடையாளம் சீனாவில் பறவைகளிடம் இருந்து H10N3 வைரஸ் மூலம் பறவை காய்ச்சல் ஏற்பட்ட முதலாவது நபரின் விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஜென்ஜியாங்க் நகரில் 41 வயதான ஆண் ஒருவருக்கு பறவையிடம் இருந்து இந்த வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதற்கு முன் வேறு எந்த நாட்டிலும் இது போன்ற வைரஸ் பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக தகவல் வெளியாகவில்லை இந்நிலையில் இது அதிக எண்ணிக்கையில் மனிதர்களிடம் தொற்றுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் சீனா தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட நபரிடம் பரவிய வைரஸின் மரபியல் கூறுகளை ஆராய்ந்த சீன மருத்துவர்கள் பறவை காய்ச்ல் எ…

  8. 3-ம் அலை அச்சம், பயமுறுத்தும் டெல்டா வேரியன்ட்; என்ன நடக்கிறது பிரிட்டனில்? தமிழர் பகிரும் தகவல்கள் ஜெனி ஃப்ரீடா England ( Danny Lawson/PA via AP ) இந்தியாவில் உருவான கொரோனா வைரஸ் வகைதான் (டெல்டா வேரியன்ட்) தற்போது பிரிட்டனில் வேகமாகப் பரவிவருகிறது. மூன்றாம் அலையின் தாக்கம் பிரிட்டனில் எவ்வாறு உள்ளது என்பதை அறிந்துகொள்ள அங்கு வசிக்கும் தமிழரும் செவிலியருமான அருள் நீதிதேவன் தமிழ்குமரனிடம் பேசினோம். பிரிட்டன் தற்போது மூன்றாம் அலையின் தொடக்க நிலையில் உள்ளது. இரண்டாம் அலையைத் திருப்திகரமாக சமாளித்ததால் அங்கு பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. உலக டெஸ்ட் கிரிக்கெட் இறுதிப்போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் அ…

  9. கொரோனா வைரஸ்: சீன வுஹான் ஆய்வக கசிவு கோட்பாட்டை ஏன் இவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்கிறார்கள்? பட மூலாதாரம், GETTY IMAGES சீனாவின் வுஹான் நகரில் கோவிட் -19 முதன்முதலில் கண்டறியப்பட்டு ஒன்றரை வருடங்களுக்குப் பிறகும், ஒரு விஷயம் மர்மமாகவே உள்ளது. இந்த வைரஸ் முதலில் எங்கே, எப்படி தோன்றியது? இந்த வைரஸ் சீனாவில் உள்ள ஒரு ஆய்வகத்தில் இருந்து கசிந்ததாக முன்னர் கூறப்பட்டது. பலரும் இதை ஒரு சதி என்றும் இதில் ஆதாரம் ஏதும் இல்லை என்று கூறினர். ஆனால் சீனாவின் வுஹானில் உள்ள ஒரு ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் கசிந்துள்ளது என்ற இந்த சர்ச்சைக்குரிய கூற்று இப்போது மீண்டும் வலு பெற்றுள்ளது. இந்த வைரஸ் …

  10. ஆப்கான் தலைநகரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு ; 10 பேர் பலி ஆப்கானிய தலைநகர் காபூபில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்கள் குறைந்தது 10 பேரின் உயிரை காவு கொண்டதுடன், நகரத்தை இருளில் மூழ்கடித்தாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் மேற்கு காபூல் சுற்றுப்புறத்தின் தனித்தனி இடங்களில் இரண்டு குண்டுகள் வெடித்தன, அதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர் என்று அந் நாட்டு உள்துறை அமைச்சகத்தின் துணை செய்தித் தொடர்பாளர் சையத் ஹமீத் ருஷன் உறுதிபடுத்தினார். மூன்றாவது குண்டு வெடிப்பு வடக்கு காபூலின் ஒரு மின்சார நிலையத்தை பெரிதும் சேதப்படுத்தியது என்று அரசாங்க மின்சாரம் துறையின் செய்தித் தொடர்பாளர் சங்கர் நயாசாய் தெரி…

  11. நேட்டோ படைகளின் ஆபத்தை எதிர்கொள்ள 20 இராணுவப் பிரிவுகளை ஆரம்பிக்க ரஷ்யா திட்டம்! நேட்டோவின் வளர்ந்து வரும் அச்சுறுத்தல் காரணமாக, ரஷ்யா தனது நாட்டின் மேற்கு பகுதியில் புதிதாக 20 இராணுவப் பிரிவுகளைத் தொடங்கவுள்ளது. உயர் இராணுவ அதிகாரிகளுடன் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற கூட்டத்தின்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கேய் ஷொய்கு இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ரஷ்ய எல்லைகள் அருகே அமெரிக்காவின் போர் விமானங்கள் பறப்பதும், நேட்டோவின் போர்க் கப்பல்கள் நிறுத்தப்படுவதும் அதிகரித்துள்ளது. நேட்டோ கூட்டணி படைகள் அடிக்கடி போர் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் சர்வதேச பாதுகாப்பு நடைமுறையை தகர்க்கின்றன. மேலும், பொருத்…

  12. பிரித்தானிய படைகளுடன் இணைந்து.... பணிபுரிந்த, ஆப்கானியர்களுக்கு குடியுரிமை: பிரித்தானியா அறிவிப்பு! ஆப்கானிஸ்தானில் பிரித்தானிய படைகளுக்கு மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் உதவிய ஆப்கானியர்களுக்கு குடியுரிமை வழங்கவுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானிய படைகளுக்கு உதவிபுரிந்த ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தலிபான்களால் ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மீள் குடியேற்றத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 1,400 மொழிபெயர்ப்பாளர்களும் அவர்களது உறவினர்களும் பிரித்தானியாவில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த விதிமுறைகளில் தளர்வுகளைக் கொண்டுவந்து மேலும் மூவாயிரம் பேர் பிரித்தானியாவில் குடியமர்த்தப்படுவார்கள் என பிரித்தானியா அறிவ…

  13. கறுப்பின அமெரிக்கர்கள் படுகொலை: வன்முறைகளுக்கு எதிரான நடவடிக்கை விரைவில் – ஜோ பைடன் 1921 இல் நூற்றுக்கணக்கான கறுப்பின அமெரிக்கர்கள் படுகொலை செய்யப்பட்ட ஓக்லஹோமாவின் துல்சாவில் உள்ள இடத்தை முதல் அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் சென்று பார்வையிட்டுள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த விஜயத்தை அடுத்து கருத்து தெரிவித்த அவர், இனவெறி வன்முறை மற்றும் வெள்ளை மேலாதிக்க முறை தற்போதும் காணப்படுவதாகவும் கூறினார். துல்சாவின் கிரீன்வுட் மாவட்டத்தின் மீதான தாக்குதலில் தப்பி பிழைத்தவர்கள் முன்பாக பேசிய ஜனாதிபதி, “நல்லது, கெட்டது, எல்லாவற்றையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதுதான் பெரிய நாடுகள் செய்கின்றன” என கூறினார். அதன்படி அமெரிக்க கபிடல் மீதான ஜனவரி 6 ஆம் திகதி…

  14. கொரோனாவின் தோற்றம், எங்கே என்பதைக் கண்டறிய... உளவு அமைப்புகளுக்கு 90 நாட்கள் காலக்கெடு! மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் தோற்றம் எங்கே என்பதைக் கண்டறிய, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உளவு அமைப்புகளுக்கு 90 நாட்கள் காலக்கெடு விதித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனா வைரஸின் தோற்றம் தொடர்பான உறுதியான முடிவுக்கு வரத்தக்க வகையில், தகவல்களை சேகரித்து, ஆய்வு செய்வதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குங்கள்’ என கூறியுள்ளார்.’ கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் 2019ஆம் ஆண்டின் கடைசி பகுதியில் சீனாவின் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் இந்த வைரஸ் அந்த நகரத்தின் விலங்கு உணவுச்சந்தையில் இருந்து பரவியதாக கூறப்பட்டது. …

  15. Maggi ( Facebook / Maggi ) நெஸ்ட்லே தயாரிக்கும் பெரும்பாலான உணவுப் பொருள்கள் மற்றும் தின்பண்டங்களுள் 37% உணவுப் பொருள்கள் மட்டுமே ஆஸ்திரேலிய ஹெல்த் ஸ்டார் ரேட்டிங்கில் 3.5-க்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்றுள்ளதாக, அதாவது ஆரோக்கியமானவை என்ற வரையறைக்குள் அடங்குவதாகத் தெரியவந்துள்ளது. நெஸ்ட்லே நிறுவனத்தின் 60%-க்கும் மேற்பட்ட உணவுத் தயாரிப்புகள் ஆரோக்கியமற்றவை என Financial Times ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தி அதிர்வலைகளைக் கிளப்பியிருக்கிறது. இதையடுத்து தங்கள் நிறுவனத்தின் உணவுப் பொருள்களில் மாற்றங்கள் கொண்டுவரவிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்காக தயாரிக்கப்பட்ட பிரசென்டேஷன் ஒன்றில்தான் இந…

  16. டென்மார்க் புலனாய்வு அமைப்பின் உதவியுடன் ஐரோப்பிய தலைவர்களை வேவுபார்த்தது அமெரிக்கா- டென்மார்க் ஊடகம் டென்மார்க்கின் புலனாய்வு பிரிவினர் ஐரோப்பி ஒன்றிய தலைவர்களை வேவு பார்ப்பதற்கு அமெரிக்காவிற்கு உதவினார்கள் என டென்மார்க் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சான்சிலர் அஞ்சலா மேர்கல் உட்பட பல முக்கிய ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை வேவுபார்ப்பதற்காக டென்மார்க் புலனாய்வு பிரிவினரின் உதவியை அமெரிக்கா பெற்றது என டென்மார்க் ஊடகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகவர் அமைப்பு ஐரோப்பாவின் தலைவர்…

    • 0 replies
    • 381 views
  17. பதவியை இழக்கும் நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன் யாகு இஸ்ரேலில் கடந்த 2 வருடங்களில் 4 முறை பாராளுமன்ற தேர்தல் இடம்பெற்றுள்ளது. 4 முறையும் பிரதமர் பெஞ்சமின் நெதன் யாகுவின் லிக்குட் கட்சி வெற்றிபெற்ற போதிலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை அக்கட்சி பெறவில்லை. அதேபோல் வேறு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதைனையடுத்து அங்கு எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் பிரதமர் பெஞ்சமின் நெதன் யாகு காபந்து பிரதமராக இருந்து வருகிறார். இந்தநிலையில் திடீர் திருப்பமாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தேசிய ஒற்றுமை அரசை அமைக்க முடிவு செய்துள்ளன. இந்த எதிர்க்கட்சி கூட்டணியில் வலதுசாரி கட்சி, தீவிர வலதுசாரி கட்சி, மய்ய கட்சி, அரபு ஆதரவு கொண்ட…

  18. நைஜீரியாவில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல்! நைஜீரியாவில் உள்ள ஒரு இஸ்லாமிய பாடசாலையில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ளதாக நைஜீரிய அதிகாரிகள் கூறுகின்றனர். டெஜினா நகரில் உள்ள சாலிகு டாங்கோ இஸ்லாமியா என்ற பாடசாலையில் இருந்த சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஒரு ஆசிரியர் உட்பட 150 மாணவர்களைக் காணவில்லை என மற்ற அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில் தற்போது மாணவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கடத்தல் சம்பவத்துக்கு எந்த தீவிரவாத அமைப்பு உடனடியாக பொறுப்பேற…

  19. கனடா பள்ளியில் 215 குழந்தைகளின் எலும்பு கூடுகள்: கலாசார படுகொலையின் வெளிப்பாடு ஒட்டாவா, கனடா நாட்டில் கடந்த 1840ம் ஆண்டில் கல்வியில் சில நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. இதன்படி, குழந்தைகள் வளர தொடங்கியதும் அவர்களை குடும்பத்தில் இருந்து பிரித்து, பள்ளி கூடத்திலேயே தங்கி படிக்கும் நடைமுறை அது. உறைவிட பள்ளி கூடங்களாக செயல்பட்ட இவை, பெருமளவில் கிறிஸ்தவ தேவாலயங்களால் நடத்தப்பட்டு வந்துள்ளன. இதுபோன்ற பள்ளி கூடங்களில் படித்த குழந்தைகளில் 1.5 லட்சம் பேர் பாலியல் வன்முறை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பிற கொடுமைகளை அனுபவித்து வந்துள்ளனர். இந்த பள்ளி கூடங்களில் படித்தவர்களில் 4,100 குழந்தைகள் உயிரிழந்துள்ளதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதவிர, கண…

  20. தீப்பிடித்த கப்பலில் இருந்து கடலில் குதித்து உயிர்தப்பும் பயணிகள்... வீடியோ பயணிகளை லைப் ஜாக்கெட்டுகள் அணிய வைத்து கடலில் குதிக்க வைத்து பின்னர் உயிர்காக்கும் படகுகளில் ஏற்றி கரைக்கு கொண்டு சென்றனர். ஜகார்த்தா: இந்தோனேசியாவின் வடக்கு மாலுகு மாகாணத்தில் உள்ள டெர்னேட் பகுதியில் இருந்து சுலாப்ஸ் தீவில் உள்ள சனானா நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று சிறிய கப்பல் புறப்பட்டுச் சென்றது. புறப்பட்ட சிறிது நேரத்தில் இந்த கப்பல் திடீரென தீப்பிடித்தது. இதனால் பயணிகளிடையே அச்சமும் பீதியும் ஏற்பட்டது. இதையடுத்து மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கப்பலில் இருந்த பயணிகளை காப்பாற்றும…

  21. வெஸ்ட்மின்ஸ்டரில்... இடம்பெற்ற இரகசிய நிகழ்வில், பொரிஸ் ஜோன்சன் – கேரி சைமண்ட் திருமணம் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நேற்று சனிக்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் கதீட்ரலில் நடந்த ஒரு இரகசிய நிகழ்வில் கேரி சைமண்ட்ஸை திருமணம் செய்துகொண்டதாக சன் மற்றும் மெயில் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும் பொரிஸ் ஜோன்சனின் டவுனிங் ஸ்ட்ரீட் அலுவலகத்தின் ஊடக பேச்சாளர் இந்த செய்திகள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். மத்திய லண்டனில் இடம்பெற்ற குறித்த நிகழ்விற்கு இறுதி நிமிடத்தில் விருந்தினர்கள் அழைக்கப்பட்டதாகவும் ஜோன்சன் அலுவலகத்தின் மூத்த உறுப்பினர்களுக்கு கூட திருமணத் திட்டங்கள் தெரியாது என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்…

  22. காஸாத் தாக்குதல்கள்: மழையாகப் பொழிந்த குண்டுகளை எதிர்கொண்டவர்களின் கதைகள் – தமிழில்: ஜெயந்திரன் 5 Views காஸாப் பிரதேசத்தில் போர் நிறுத்தம் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், பயப்பீதி, நடப்பது நடக்கட்டும் என்ற மனநிலை, உயிர் பிழைத்தல் போன்ற விடயங்களைக் கூறும் பல்வேறு கதைகள் முற்றுகையிடப்பட்ட இந்தப் பிரதேசத்தில் இருந்து தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. காஸாப் பிரதேசத்தில் அமைந்துள்ள பாலஸ்தீனக் குடியிருப்புகள் மீது என்றுமில்லாத வகையில் பதினொரு நாட்கள் தொடர்ச்சியாக இஸ்ரேலினால் முன்னெடுக்கப்பட்ட மிக மோசமான தாக்குதல்களின் காரணமாக, தாங்கள் இறக்கப் போகின்றோம் என்று நினைத்த பொது மக்கள் பலர் தமது குடும்ப உறவுகளுக்கும், நண்பர்களு…

  23. கலிஃபோர்னியாவில்... பயணிகள் ரயில் நிலையத்தில், துப்பாக்கி சூடு: 8பேர் உயிரிழப்பு- பலர் காயம்! அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பயணிகள் ரயில் நிலையத்தில் துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் எட்டு பேர் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க கலிபோர்னியா மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சாண்டா கிளாரா கவுண்டி ஷெரிப் துறைக்கு அடுத்தபடியாக அமைந்துள்ள ஒரு முக்கிய போக்குவரத்து சேவையான பள்ளத்தாக்கு போக்குவரத்து ஆணையத்தால் (வி.டி.ஏ) இயக்கப்படும் சான் ஜோஸில் உள்ள ரயில் நிலையத்தில் உள்ளூர் நேரப்படி காலை 6.45 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. விடிஏ ஊழியர் என உறுதிப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் நடத்தியவர், தனது உயிரை மாய்த்துக் கொள்வதற்கு ம…

  24. உலகப் பணக்காரர்கள் பட்டியலில்... முதலிடத்தில், பெர்னார்ட் அர்னால்ட்! உலகப் பணக்காரர்கள் பட்டியலில் உள்ள பெயர்கள் கடந்த ஒரு வருடமாகப் பெரிய அளவிலான மாற்றங்களை கண்டு வருகின்றன. முதலில் டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் சொத்து மதிப்பு தாறுமாறாக அதிகரித்ததால், மிக குறுகிய நாளில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தார். ஆனால் அவரை பின்னுக்கு தள்ளி அமேசன் நிறுவனத்தின் ஜெப் பைசோஸ் முன்னுக்கு வந்த நிலையில் இப்போது இவர்கள் இருவரையும் பின்னு தள்ளி விட்டு மூன்றாவது நபர் உலக பணக்காரர் பட்டியலில் சேர்ந்துள்ளார். பிரான்ஸின் ஆடம்பர பொருட்களுகான பிரபல குழுமம் LVMH நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட் (Bernard Arnault) 186.2 ப…

  25. சீனாவுடன் தொடர்பு? அல்பர்ட்டா மாகாணத்தின் நான்கு பல்கலைக்கழகங்களுக்கு கோரிக்கை! சீனா அல்லது சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடைய அமைப்புகளுடன் புதிய அல்லது புதுப்பிக்கப்பட்ட கூட்டாண்மைகளை இடைநிறுத்துமாறு அல்பர்ட்டா மாகாணத்தின் நான்கு பல்கலைக்கழகங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அல்பர்ட்டாவின் மேம்பட்ட கல்வி அமைச்சர் டெமெட்ரியோஸ் நிக்கோலெய்ட்ஸ் ஒரு மின்னஞ்சலில், ‘நான்கு விரிவான கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களையும் மக்கள் சீனக் குடியரசு மற்றும் அதன் ஆளும் கட்சியுடன் தொடர்புபடுத்தக்கூடிய நிறுவனங்களுடனான தங்கள் உறவுகளை முழுமையாக மறுஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். இந்த தொடர்ச்சியான கூட்டாண்மைகள் கடுமையான இடர் மதிப்பீடுகளையும் சரியான விடாமுயற்சியையும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.