Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. முடக்கநிலை கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு... இந்தியன் கொவிட், மாறுபாடு கடுமையான இடையூறு: பிரதமர் பொரிஸ் இங்கிலாந்தில் எதிர்வரும் ஜூன் 21ஆம் திகதி முடக்கநிலை கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு இந்தியன் கொவிட் மாறுபாடு கடுமையான இடையூறு ஏற்படுத்தக்கூடும் என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இந்தியன் கொவிட் மாறுபாடு கணிசமாக அதிக அளவில் பரவக்கூடியதாகக் கண்டறியப்பட்டால் சில கடினமான தேர்வுகள் இருக்கக்கூடும் எனவும் எச்சரித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘கொவிட் தடுப்பூசி செலுத்துவதற்கு இடையிலான காத்திருப்பு 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 12 வாரங்களிலிருந்து எட்டு ஆக குறைக்கப்படும்’ என கூறினார். இந்தியன் கொவிட் மாறுபாட்டின் தொற்றுகள் கடந்த வாரத்தி…

  2. பிரான்ஸின்... கட்டாய தனிமைப்படுத்தல் நாடுகளின். பட்டியலில் மேலும் நான்கு நாடுகள் சேர்ப்பு! பிரான்ஸின் கட்டாய தனிமைப்படுத்தல் நாடுகளின் பட்டியலில் மேலும் நான்கு நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, பஹ்ரைன், கொலம்பியா, கோஸ்டா ரிகா, உருகுவே ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் இருந்து மேலும் குறித்த இந்த நான்கு நாடுகள் இந்த பட்டியலில் இணைகின்றன. இந்த நாடுகளில் இருந்து பிரான்சுக்கு வருபவர்கள் அனைவரும் கட்டாயமாக 10 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஏப்ரல் திகதியில் இருந்து, இந்தியா, பிரேஸில், சிலி, தென்னாபிரிக்கா, போன…

  3. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது: சீனா சீனா, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய தியான்வென்-1 ரோவர் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளது. செவ்வாய்கிரகத்தின் மேல், கீழ் பகுதிகளின் புவியியல் அமைப்பு குறித்து இந்த விண்கலம் ஆய்வு செய்ய உள்ளது. செவ்வாய்கிரகம் தொடர்பான படங்களை எடுக்கவும் கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டிருக்கின்றன. மேலும் இந்த தியான்வென்-1 ரோவர் விண்கலத்தில் இணைக்கப்பட்டிருக்கும் ஐந்து கருவிகள், செவ்வாய் கிரகத்தின் பாறை தன்மைகள், நீர் ஆகியவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கின்றன. ஏற்கனவே சீனா விண்வெளிக்கு வீரர்களை அனுப்பியுள்ளது. அதே போல நிலவை ஆய்வு செய்வதற்கும் விண்கலங்களை அனுப்ப…

    • 0 replies
    • 664 views
  4. அமெரிக்காவில்... தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள், முகக்கவசம் அணியத் தேவையில்லை! அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தி கொண்ட மக்கள் பெரும்பாலான உள் மற்றும் வெளி இடங்களுக்கு முகக்கவசம் இல்லாமல் செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் 35 சதவீத மக்கள் இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இந்த புதிய அறிவிப்புபடி இரண்டு அளவுகளையும் செலுத்தி கொண்ட மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க தேவையில்லை. இந்த புதிய தளர்வுகள் குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு சென்ற ஜனாதிபதி பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் பிற ஊழியர்கள் முகக்கவசம் இல்லாமல் சென்றனர். …

  5. இஸ்ரேலை நோக்கி 2,000 ரொக்கெட் தாக்குதல்கள் ; பாலஸ்தீன் சார்பில் 103 பேர் பலி! சமீபத்திய ஆண்டுகளில் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் மிகப்பெரிய விரிவாக்கம் ஐந்தாவது நாளில் நுழைந்ததால் இஸ்ரேல்-காசா எல்லையில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மொத்தத்தில் சுமார் 2,000 ரொக்கெட்டுகள் இஸ்ரேலுக்குள் வீசப்பட்டதில் இருந்து குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் காசா மீது நடந்து வரும் இஸ்ரேலிய தாக்குதல்களில் மொத்தம் 103 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 27 குழந்தைகள் மற்றும் 11 பெண்கள் உள்ளனர், மொத்தம் 580 பேர் காயமடைந்துள்ளனர் என்று அமைச்சின் அறிக்கையில் சு…

  6. ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர்கள் : முரடர்கள் என விமர்சிக்கப்பட்டவர்கள்தான் ஓடிவந்து உதவுகிறார்கள்! மு.பிரதீப் கிருஷ்ணா Australian Cricketers கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேபோகிறது. இதுவரை காணாத இழப்பைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது இந்தியா. கஷ்டப்படும் இந்திய மக்களுக்கு உதவுவதற்காக கைகோர்த்திருக்கிறார்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர்கள். இந்திய மக்களுக்கு உதவுமாறு அனைவருக்கும் யுனிசெஃப் (UNICEF) ஆஸ்திரேலியா மூலம் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்! ஐபிஎல் தொடர் நடந்துகொண்டிருக்கும்போது கொரோனாவின் தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் பலரும் கஷ்டப்படத் தொடங்கினார்கள்…

  7. தன்னை தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு - ஜோ பைடன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான ஒரு தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான வன்முறைச் சம்பவங்கள் விரைவில் முடிவடையும் என்று தான் நம்புவதாக ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார். "எனது எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இந்த வன்முறை விரைவில் முடிவடைய வேண்டும் என்பது, ஆனால் கசா வன்முறை அதிகரிக்கும் போது இஸ்ரேலுக்கு தன்னை தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு" என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார். பைடன் வன்முறைச் சம்பவங்கள் நிறைவடையும் என்ற அவரது நம்பிக்கையின் பின்னணியில் உள்ள காரணங்களை இதன்போது விளக்கவில்லை. …

  8. ஜேர்மனியில்... கொவிட்-19 தொற்றினால், 86ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் மொத்தமாக 86ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றினால் 86ஆயிரத்து 9பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 10ஆவது நாடாக விளங்கும் ஜேர்மனியில், இதுவரை 35இலட்சத்து 58ஆயிரத்து 148பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 13ஆயிரத்து 833பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 252பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டு இலட்சத்து 51ஆயிரத்து 839பே…

  9. இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்: `1948 டு 2021’ ; ஜெருசலேம் புனிதத் தலத்தில் வெடித்த வன்முறை! - என்ன பிரச்னை? Today at 12 PM இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் கிழக்கு ஜெருசலேமின் அல் அக்‌ஷா மசூதிதான் இஸ்லாமியர்களுடைய மூன்றாவது பெரிய புனிதத் தலம். மசூதியைச் சுற்றியிருக்கும் `வெஸ்ட் வால்' என்ற ஒருபக்கச் சுவரான `டெம்பிள் மவுண்ட்' யூதர்களின் புனிதத் தலம்! 1948-ம் ஆண்டு ஒரு தேசம் இரண்டு பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. அதில் ஒரு பிரதேசம் பிரிக்கப்பட்ட தினம் முதலே தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டது. மற்றொரு பிரதேசம் இன்று வரை, தனி நாடு என்கிற அங்கீகாரத்திற்காகப் போராடி வருகிறது. இதில் அங்கீகரிக்கப்பட்ட நாடு இஸ்ரேல். அங்கீகாரத்திற்காகப் போராடி வருவது பாலஸ்தீனம். …

  10. `ஸ்கூல் எப்போ சார் திறப்பீங்க?' - போராட்டத்தில் குதித்த இத்தாலி குழந்தைகள்! #MyVikatan விகடன் வாசகர் Student Protest ( Twitter image ) பள்ளிகளைத் திறக்கக் கூறி ஒரு போராட்டம் கண்டதுண்டா? அதுவும் பள்ளி மாணவர்களே போராடி கண்டதுண்டா? பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்! ஊதிய உயர்வு கோரிக்கையை முன்வைத்து, தொழிலாளர்கள் போராட்டத்தைக் கண்டிருப்பீர்கள். மக்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட அரசாங்க திட்டங…

  11. "அஸ்ட்ராஸெனெகா" தடுப்பூசி ஒப்பந்தங்கள் எதனையும் புதுப்பிக்கப் போவதில்லை: பிரான்ஸ் முடிவு! பிரித்தானியா- சுவீடன் கொரோனா தடுப்பூசியான அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி ஒப்பந்தங்கள் எதனையும் புதுப்பிக்கப் போவதில்லை என பிரான்ஸ் அறிவித்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ‘ஐரோப்பாவின் எதிர்காலம்’ என்ற மாநாட்டில் இந்த அறிவிப்பினை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அறிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘பிரான்ஸில் நாங்களும், ஐரோப்பாவும் தொடர்ந்தும் அஸ்ராஸெனக்காவை உபயோகிக்க வேண்டும். மிகவும் சிக்கலான காலத்தில் அஸ்ராஸெனக்கா எங்களிற்குப் பெரிதும் உதவியது. ஆனால், தற்போதுள்ள புதிய பல மரபணுத்திரிபு வைரஸ்களிற்கான சகத்தியுள்ள வேறு கொரோனா தடுப்பூசிகள் உள்ளன. அவற்றை…

  12. மியான்மர்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக அறிவித்த இராணுவம் 17 Views மியான்மரில் இராணுவ ஆட்சியை நடைமுறைப்படுத்தியுள்ள அந்நாட்டு இராணுவம், ஆங் சான் சூகி அரசில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது. இராணுவ ஆட்சிக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கம் தொடங்க காரணமாக இருந்ததோடு அதற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதால் முந்தைய அரசின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மியான்மர் இராணுவம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் மியான்மரின் நிழல் அரசாக இயங்கும் சி.ஆர்.பி.எச்-சால் கடந்த வாரம் அமைக்கப்பட்…

  13. அமெரிக்கக் கடற்படையிடம்... சிக்கியது மிகப்பெரிய ஆயுதக் கடத்தல் கப்பல்! வடக்கு அரேபிய கடலின் சர்வதேச கடற்பரப்பில் பயணம் செய்த சட்டவிரோத கப்பலில் இருந்து ரஷ்ய மற்றும் சீன ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளதாக அமெரிக்கக் கடற்படை அறிவித்துள்ளது. யு.எஸ்.எஸ். மொன்டரி என்ற ஏவுகணைக் கப்பலில் சென்ற அமெரிக்கக் கடற்படையே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கடந்த மே 6, 7ஆம் திகதிகளில் வழக்கமான கண்காணிப்பு நடவடிக்கையின் போதே இவ்வாறு ஆயுதங்களுடனான கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பஹ்ரைனைத் தளமாகக் கொண்ட அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது. குறித்த ஆயுதக் கப்பலில், டசின் கணக்கான ரஷ்யா தயாரிப்பிலான ஏவுகணைகள், ஆயிரக்கணக்கான சீன வகை 56ரக துப்பாக்கிகள…

  14. உலக நாடுகளில், வைரஸைப் பரப்புவதற்காக... 5 ஆண்டுகளுக்கு முன்பே அதை தயாரித்த சீனா! கொரோனா வைரஸ் பரவுவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே சார்ஸ் கொரோனா வைரஸ் போன்ற உயிரி ஆயுதத்தை தயாரிக்க சீன இராணுவம் திட்டமிட்டதாக இரகசிய தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவி பெரும் மனிதப் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து, சீனாவின் ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் பரவியதாகவும் இது சீன விஞ்ஞானிகள் செயற்கையாக தயாரித்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளை அந்நாடு மறுத்தது. இந்த நிலையில், சார்ஸ் கொரோனா வைரஸ் என்ற வைரசை செயற்கையாக உருவாக்கி, அதை உயிரி ஆயுதமாக பயன்படுத்த சீனா திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான சீன …

  15. ஜேர்மனியில் வயது வந்த அனைவருக்கும் கொவிட்-19 தடுப்பூசி பரிந்துரை ஜேர்மனியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஒக்ஸ்ஃபோர்ட்- அஸ்ட்ராசெனேகா கொவிட் – 19 தடுப்பூசியை ஏற்றிக் கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் 12 தொடக்கம் 18 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்க எதிர்பார்த்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் (Jens Spahn) தெரிவித்துள்ளார். ஜேர்மனியின் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராசெனேகா தடுப்பூசியை ஏற்றுவதில் இருந்த முன்னைய கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்த முடிவுக்கு அந்நாட்டின் 16 பிராந்தியங்களின் சுகாதார அமைச்சர்களும், தலைமை சுகாதார அமைச்சருடன் இணங்கியுள்ளனர். இதனால், அஸ்ட்ராசெனேக…

  16. ஜெருசலேமில் வெடித்த புதிய மோதலால் 100 க்கும் மேற்பட்டோர் காயம் ஜெருசலேமில் பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேலிய பொலிஸாருக்கும் இடையே சனிக்கிழமை வெடித்த புதிய மோதல்களின் விளைவாக 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். பழைய நகரான டமாஸ்கஸ் கேட்டில் எதிர்ப்பாளர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசினர், அதிகாரிகள் கையெறி குண்டுகள், இறப்பர் தோட்டாக்கள் மற்றும் நீர் பீரங்கி மூலம் பதிலளித்துள்ளனர். யூதக் குடியேற்றவாசிகளால் உரிமை கோரப்பட்ட நிலத்திலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவதற்கான அமைதியின்மையாக இது தொடர்கிறது. அல்-அக்ஸா மசூதி அருகே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோதலில் 200 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் மற்றும் குறைந்தது 17 இஸ்ரேலிய பொலிஸார் காயமடைந்ததாக அவச…

  17. பிரேஸில்: ரியோ டி ஜெனிரோ துப்பாக்கிச் சூட்டில் 25 பேர் கொல்லப்பட்டனர்! பிரேஸிலில் போதைப்பொருள் கடத்தர்காரர்களை குறிவைத்து ரியோ டி ஜெனிரோவின் மிகப்பெரிய சேரி பகுதியில் ஆயுதமேந்திய பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது நகர வரலாற்றில் பதிவான மிகக் கொடூரமான சோதனை நடவடிக்கை ஆகும். ரியோவின் சிவில் காவல்துறையின் சுமார் 200 உறுப்பினர்கள் வியாழக்கிழமை அதிகாலையில் குறித்த பகுதிக்குள் நுழைந்து போதைப்பொருள் கடத்தல் காரர்களை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர். இதன்போது மெட்ரோ ரயிலில் இருந்த இரண்டு பயணிகள் தோட்டாக்களால் தாக்கப்பட்டாலும் உயிர் தப்பினர். ரியோவில் நடத்தப்பட்ட பொலிஸ் நடவடிக்கையில் அதிகளவிலான உயிரிழப்பு…

  18. குண்டு வெடிப்பில், சிக்கினார்.... மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி! மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் சபாநாயகருமான மொஹமட் நஷீத் குண்டு வெடிப்பில் சிக்கி காயமடைந்துள்ளார். இந்தக் குண்டு வெடிப்பு, அவரது வீட்டிற்கு வெளியில் இன்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், காயமடைந்த மொஹமட் நஷீத், ஏ.டி.கே. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாக அந்நாட்டு பொலிஸார் ருவிற்றர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தக் குண்டு வெடிப்பில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரும் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குண்டுவெடிப்பு இடம்பெற்ற பகுதி பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது…

  19. சமுக வலைத்தளங்கள் முடக்கம்; புதிய வலைதளத்தை ஆரம்பித்தார் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிதாக வலைதளத்தை ஆரம்பித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் பாராளுமன்றத்துக்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்த போதும் ட்ரம்ப் சமூக வலைதளங்களில் தேர்தல் முறைகேடு தொடர்பாக பல்வேறு பதிவுகளை வெளியிட்டார். இதனால் ட்ரம்ப் வன்முறையை தூண்டியதாகக் கூறி டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ஆகிய சமூக வலைதள நிறுவனங்கள் அனைத்தும் அவரது கணக்கை நிரந்தரமாக முடக்கின. இந்த சூழலில் ட்ரம்ப் மிகவிரைவ…

  20. கட்டுப்பாட்டை... இழந்தது, சீன ரொக்கெட்! விண்ணில் கட்டுப்பாட்டை இழந்த சீன ரொக்கெட் எப்போது வேண்டுமானாலும் பூமியில் விழலாம் எனக் கூறப்படுகின்றது. அமெரிக்காவைப் போல் தங்களுக்கென்று சொந்தமான விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, கடந்த மாத இறுதியில், Long March 5B என்றழைக்கப்படும் 100 அடி உயர ராட்சத ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. தொழில்நுட்பக் கோளாறால் கட்டுப்பாட்டை இழந்த ராக்கெட், மணிக்கு 27,600 கிலோமீட்டர் வேகத்தில், 90 நிமிடங்களுக்கு ஒரு முறை பூமியை சுற்றி வந்து கொண்டிருக்கிறது. 21 டொன் எடையிலான இந்த ரொக்கெட், வரும் ஒன்பதாம் திகதி பல பாகங்களாக உடைந்து மக்கள் வசிக்கும் பகுதிகளில் விழ வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எ…

  21. சிறுவர்களின் ஆபாச படங்களை பதிவேற்றி, இரகசியமாக இயங்கிவரும் உலகின் மிகப்பெரிய வலைத்தளங்களில் ஒன்றை ஜேர்மன் பொலிஸார் முடக்கியுள்ளனர். 400,000 க்கும் அதிகமான பயனாளர்களைக்கொண்ட "BOYSTOWN" என்றைக்கப்படும் இந்த வலைத்தளமானது 2019 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த வலைத்தளமானது உலகளாவிய ரீதியில் சிறுவர்களின் ஆபாச புகைப்படங்களை பரிமாற்றிக்கொள்வதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. பகிரப்பட்ட படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளில் இளம் குழந்தைகளின் மிகக் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்தின் பதிவுகளும் உள்ளன என்று அந்நாட்டு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வலைத்தளத்துடன் தொடர்புடைய 4 சந்தேக நபர்களை ஜேர்மன் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் BOYSTOWN தளம் இணையத்தில…

  22. 27 வருடகால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் பில் - மெலிண்டா கேட்ஸ் ஜோடி பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் திருமணமான 27 வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகக் திங்களன்று கூறியுள்ளனர். மைக்ரோசாப்டின் பில்லியனர் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் ஒரு எழுத்தாளரும் வணிகப் பெண்ணுமான மெலிண்டா கேட்ஸ், தங்கள் தனிப்பட்ட டுவிட்டர் கணக்குகளில் வெளியிடப்பட்ட ஒரே மாதிரியான அறிக்கையில் விவாகரத்து முடிவை அறிவித்தனர். "கடந்த 27 ஆண்டுகளில், நாங்கள் மூன்று குழந்தைகளை வளர்த்துள்ளோம், உலகெங்கிலும் வேலை செய்யும் ஒரு அடித்தளத்தை உருவாக்கியுள்ளோம், இது அனைத்து மக்களையும் ஆரோக்கியமான, உற்பத்தி நிறைந்த வாழ்க்கையை நடத்த உதவுகிறது" என்று அந்த பதிவில் கூறியுள்ளன…

  23. மெக்ஸிகோவில் மெட்ரோ ரயில் பாலம் இடிந்து வீழ்ந்ததில் 13 பேர் பலி ; 70 பேர் காயம் மெக்ஸிகோவின் தலைநகரில் ஒரு மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழ்ந்தில் அதில் பயணித்த ரயில் இரண்டாக பிளவடைந்து கோர விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 70 பேர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் செவ்வாயன்று மெக்ஸிகோ நகரின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டெசான்கோ மற்றும் ஒலிவோஸ் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் செவ்வாயன்று உள்ளூர் நேரப்படி இரவு 10.30 மணிக்கு ஏற்பட்டுள்ளதாகவும், விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் மெக்ஸிகோ நகர அரசாங்கத்தின் ச…

  24. விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்தது ரஷியா- வாங்க ஆர்வம் காட்டும் நாடுகள் கொரோனா வைரசானது மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளுக்கும் பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே, விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசியை உருவாக்கும் பணியில் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அவ்வகையில், விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசியான கார்னிவாக்-கோவ் என்ற மருந்தை ரஷியா கண்டுபிடித்து, கடந்த மாதம் பதிவு செய்தது. இதுவே விலங்குகளுக்கான முதல் கொரோனா தடுப்பூசியாகும். நாய்கள், பூனைகள், நரிகள் மற்றும் மிங்க் ஆகிய விலங்குகள் மீது நடத்தப்பட்ட பரிசோதனையில், கொரோனாவுக்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்கியது கண்டறியப்பட்டதையடுத்து, தடுப்…

  25. ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக விலகும் அமெரிக்கத் துருப்புகள்: அங்கே அவர்கள் கொடுத்த விலை என்ன? – தமிழில் ஜெயந்திரன் 6 Views அமெரிக்காவில் நடத்தப்பட்ட செப்ரெம்பர் 11 தாக்குதலின் 20வது நினைவு தினத்தில் ஆப்கானிஸ்தானில் பணிபுரிகின்ற அமெரிக்க இராணுவத்தினர் அனைவரும் நாடுதிரும்பியிருப்பார்கள் என அமெரிக்க அதிபர் பைடன் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருக்கிறார். ஆப்கானிஸ்தானில் பணிபுரிகின்ற கிட்டத்தட்ட 2500 இராணுவத்தினரின் தற்போதைய நிலை தொடர்பாகவும் அவர்களின் கடந்த இருபது வருடப்பணி தொடர்பாகவும் இக்கட்டுரை ஆராய்கிறது. ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்கத் துருப்புகள் ஆப்கான் நாட்டின் பாதுகாப்புப்படையினருக்குத் துணையாக இருந்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.