Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உருவாகட்டும் புதிய சீலே! பெருங்கவிஞர் பாப்லோ நெருதாவின் நாடான சீலே கடந்த ஆண்டு போராட்டங்களால் கொந்தளித்துக்கொண்டிருந்தபோது அந்த நாட்டின் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கு மரபியரான அதிபர் செபாஸ்தியன் பின்யெரா ஒப்புக்கொண்டார். அதன்படி, சட்டத்திருத்தம் மேற்கொள்ளலாமா வேண்டாமா என்பதற்குக் கடந்த அக்டோபர் 25-ம் தேதியன்று பொதுவாக்கெடுப்பு நடந்தது. அதில் 78% சீலே மக்கள் புதிய அரசமைப்புச் சட்டம் வேண்டும் என்று வாக்களித்தார்கள். ஏற்கெனவே இருக்கும் அரசமைப்புச் சட்டம் அகஸ்தோ பீனஷேவின் ராணுவ ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது. 1990-ல் ஜனநாயக வழியைத் தேர்ந்தெடுத்த அந்த நாடு கொஞ்சம் கொஞ்சமாக அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தியமைத்தது. மரபுத்துவத் தாராளமய சந்தைக் க…

  2. சொர்ணம் சங்கரபாண்டி வாஷிங்டன் டி.சி. , பிபிசி தமிழுக்காக அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாக வழக்கமான நேரத்தைவிடக் கூடுதல் நேரம் ஆகியுள்ளது. கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக அங்கு தபால் வாக்குகள் அதிக அளவில் பதிவாகியுள்ளது அதற்கு காரணம் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். முடிவுகளில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரும் முன்னாள் துணை அதிபருமான ஜோ பைடன் டிரம்பைவிட சற்று முன்னிலை பெற்றுள்ளார். பல இடங்களில் வாக்குப்பதிவை நிறுத்தக்கோரியும், முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் கூறி டிரம்ப் தரப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளது. தெளிவான முடிவுகள் இன்னும் வெளியாகாத சூழலில், இது குறித்து…

    • 3 replies
    • 1.4k views
  3. நோய் எதிர்ப்பு ஆற்றல் இந்தியர்களிடம் அதிகமா? 106 நாடுகளின் தரவுகளின் அடிப்படையில் ஆய்வு Bharati November 5, 2020 நோய் எதிர்ப்பு ஆற்றல் இந்தியர்களிடம் அதிகமா? 106 நாடுகளின் தரவுகளின் அடிப்படையில் ஆய்வு2020-11-05T10:42:44+05:30Breaking news, மருத்துவம் FacebookTwitterMore கொரோனாவுக்கு எதிராக ஆரோக்கியத்தைப் பாதுகாக்க பாதுகாப்பான நீர், சுகாதாரம் மற்றும் சுகாதார நிலைமைகள் அவசியம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிறுவனமான யுனிசெஃப் ஆகியவற்றின் கூட்டு ஆய்வில், கிட்டத்தட்ட 300 கோடி மக்கள் – உலக மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் மற்றும் கிட்டத்தட்ட முழு …

    • 4 replies
    • 1.9k views
  4. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் யார் வென்றாலும் சீனா குறித்த நிலைப்பாடு மாறாது- சீனாவிற்கான முன்னாள் இந்திய தூதுவர் Rajeevan Arasaratnam அமெரிக்க தேர்தல் முடிவுகள் எவ்வாறானவையாக அமைந்தாலும் சீனா தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடுகள் மாற்றமடையப்போவதில்லை என சீனாவிற்கான முன்னாள் இந்திய தூதுவர் கௌதம் பம்பவாலே தெரிவித்துள்ளார் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்றால் அவர் செயற்படும் விதத்தில் வித்தியாசங்கள் இருக்கலாம் ஆனால் அமெரிக்காவின் சீனா குறித்த கொள்கையில் மாற்றங்கள் இருக்காது என முன்னாள் தூதுவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க தேர்தலில் யார் வென்றாலும் சீனா குறித்த கொள்கையும் அணுகுமுறையும் மாறப்போவதில்லை டிரம்பும் பைடனும் செயற்பட…

  5. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், என்றும் இல்லாத அளவிற்கு பிரித்தானியா கடனில் மூழ்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பினால் இந்த ஆண்டு மேலும் 30 லட்சம் பேர் பிரித்தானியாவில் வேலை இழப்பார்கள் எனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் இரண்டாவது ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியானதும், குளிர்காலத்தில் நிலைமை மோசமாக இருக்கும் என தொழில் செய்வோர் கணித்துள்ளனர். அத்துடன், ஏற்கனவே வீழச்சியடைந்திருக்கும் பொருளாதாரத்திற்கு, அது மீண்டும் ஒரு அடியாக இருக்கும் என பொருளாதார நி…

    • 6 replies
    • 1.1k views
  6. இங்கிலாந்தின் 2 ஆம் முடக்கல் நிலைக்கு பாராளுமன்றம் ஒப்புதல் பிரிட்டன் அரசியல் பிரதிநிதிகள் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து, இங்கிலாந்தின் ஒரு மாத கால முடக்கலுக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். மார்ச் மாதத்தில் இங்கிலாந்து முடக்கப்பட்டதைத் தொடர்ந்து இரண்டாவது முடக்கல் நிலையானது வியாழக்கிழமை நடைமுறைக்கு வரவுள்ளது. இந் நிலையிலேயே முடக்கல் நிலைக்கு இங்கிலாந்து பாராளுமன்றம் புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இங்கிலாந்தின் கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்துள்ளமையினாலும், கொவிட்-19 இரண்டாவது அலை ‍தேசிய சுகாதார சேவையை மூழ்கடிக்கும் என்ற அச்சுறுத்தல் காரணமாகவும் போரிஸ் ஜோன்சன் தேசிய முடக்கல் நிலைக்கு உத்தரவிட்டுள்ளார். இங்…

  7. கமலா ஹாரிசின் வெற்றிக்காக தமிழ்நாட்டில் வழிபாடு- டிரம்பின் வெற்றிக்காக புதுடில்லியில் பிரார்த்தனை November 3, 2020 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் தேர்தலில் வெற்றிபெறவேண்டும் என புதுடில்லியில் வழிபாடுகள் இடம்பெற்றுள்ள அதேவேளை ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி கமலாஹாரிசின் வெற்றிக்காக தமிழ்நாட்டில் வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாவதற்கு முன்னதாக கமலா ஹாரிசின் பூர்வீக கிராமமான தமிழ்நாடு மன்னார் குடியில் உள்ளதுளசேந்திரபுரத்தில் ஆலயவழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. உள்ளுர் அரசியல்வாதியொருவர் அபிசேகம் செய்தார் சுமார் 20 பேர் வழிபாடுகளி;ல் கலந்துகொண்டனர் என ஆலயத்திற்கு அருகில் கடைவைத்திருக்கும் மணிகண்டன் என்பவர் தெரிவித்…

  8. பிரித்தானியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை - புதிய கட்டுப்பாடுகள் சாத்தியம் பிரித்தானியா கொவிட் -19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் "இப்போது இரண்டாவது அலைகளைக் காண்கிறது" எனவும் "நாட்டில் இதைப் பார்ப்பது தவிர்க்க முடியாது." எனவும் பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஜோன்சன் இறுக்கமான சமூக இடைவெளி விதிகள் அவசியமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் புதிய மூன்றாம் கட்ட கட்டுப்பாடுகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளார். முன்னதாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து பிரித்தானியாவில் பொதுவெளியில் ஆறு பேருக்கு மேல் கூடத் தடை விதிக்கப்பட்டது. மேலும் பொது நிகழ்வு…

  9. வியன்னா துப்பாக்கி சூடு: 6 இடங்களில் திடீர் தாக்குதல் - என்ன நடந்தது? 3 நவம்பர் 2020, 04:34 GMT பட மூலாதாரம், GETTY IMAGES ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் ஆறு வெவ்வேறு இடங்களில் ஆயுததாரிகள் துப்பாக்கியுடன் வந்து தாக்குதல் நடத்தினார்கள். நடந்த சம்பவத்தில் தாக்குதலில் ஈடுபட்ட குழுவைச் சேர்ந்த ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஆஸ்திரியா ஆட்சித்துறைத் தலைவர் செபாஸ்டியன் குர்ஸ், "இந்த சம்பவத்தை வெறுப்பூட்டும் தீவிரவாத தாக்குதல்" என்று அழைத்துள்ளார். இந்த சம்பவத்தில் ஒரு துப்பாக்கிதாரி கொல்லப்பட்டதாகவும் மற்றொரு கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். அந்த நகரில் பெரும்பாலான ப…

  10. பழங்குடிப் பெண்மணியை வெளிவிவகார அமைச்சராக்கிய ஜெசிந்தா ஆர்டன் நியூசிலாந்தின் முதல் பழங்குடியினப் பெண் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சராக இன்று நியமிக்கப்பட்டார். உலகின் அதி பன்மைத்துவ நாடாளுமன்றை உருவாக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் இன்று குறித்த நியமனத்தை வழங்கினார். நான்கு வருடங்களுக்கு முன்னர் நியூசிலாந்தின் முதல் பழங்குடியின பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான மயோரி பழங்குடியினத்தை சேர்ந்த நனையாஹ் மஹூட்டா எனும் பெண்மணிக்கே குறித்த பதவி வழங்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் முன்னாள் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த வின்ஸ்டன் பீட்டர்ஸும் மயோரி இனத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நிலையில் குறித்த பழங்குடியினத்தை சேர்ந்த பெண்மணிக்கு…

  11. பிரித்தானிய அரச குடும்பத்தில் கொரோனா – மறைக்கப்பட்ட தகவல்? பிரித்தானியாவின் முடிக்குரிய இளவரசர் வில்லியம் இவ்வருட ஆரம்பத்தில் கொரோனா தாக்கத்துக்கு ஆளாகியிருந்ததாக அதிர்ச்சி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பி.பி.சி ஊடகத்தினை மேற்கோள் காட்டி சர்வதேச செய்தி நிறுவனங்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளன. அதன் அடிப்படையில் இளவரசர் வில்லியம் இவ்வருடத்தின் ஆரம்பத்தில் கொரோனா தாக்கத்துக்கு ஆளாகியிருந்ததாகவும், அதன் காரணமாக ஏப்ரல் 09ம் திகதி முதல் 16ம் திகதிவரையான காலப்பகுதியில் அவர் எவ்வித பணிகளிலும் ஈடுபடவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக எவ்விதமான உத்தியோகபூர்வ தகவல்களும் வெளியிடப்படாத போதும், ஏப்ரல் மாதத்தின் ஏழு நாட்களில் இளவரசர் வில்லியம் …

  12. உலக சுகாதார அமைப்பின் தலைவர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கப்ரியேசுஸ் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளதாகவும், வீட்டிலிருந்தே தனது பணிகளை மேற்கொள்வதாகவும் அறிவித்துள்ளார். தன்னுடன் தொடர்பினைப் பேணிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமையினைத் தொடர்ந்து அவர் இவ்வாறு சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பாக தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தான் அறிகுறிகள் ஏதுமற்று உள்ள அதேவேளை நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், நாம் அனைவரும் சுகாதார கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு இணங்கி நடக்க வேண்டியது அவசி…

  13. பிரான்ஸ் தொடர்ச்சியாகப் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள்களுக்கு உள்ளாகிவருவது குறித்து பிரான்ஸ் உள்துறை அமைச்சர் வானொலி ஒன்றில் இன்று இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கும் எதிரிகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இப் போர் இஸ்லாம் மதத்துக்கு எதிரானதல்ல. மாறாக இஸ்லாம் மதக் கோட்பாடுகளுக்கு எதிரானது. அவை எம்மீது திணிக்கும் கலாச்சாரத்துக்கும் வாழ்க்கை முறைக்கும் கொடிய வன்முறை மூலம் அவர்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முறைக்கும் எதிரானது. இதையே அவர்கள் பல நாடுகளிலும் செய்து வருகின்றனர். போரில் இறங்கிவிட்டால் துரதிஸ்டவசமாக இவ்வாறான கொடிய தாக்குதல்கள மேலும் எதிர்நோக்க வேண்டி வரலாம். என்று கூறியுள்ளார். மேலும் அரசாங்க உய…

  14. நாளை ஜனாதிபதி தேர்தல் : அமெரிக்காவில் டிரம்ப் - ஜோ பைடன் இறுதிகட்ட பிரசாரம் வாஷிங்டன்: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றாக விளங்கும் அமெரிக்காவில் நாளை (செவ்வாய்க்கிழமை)ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நடைபெறும் இந்த தேர்தல் சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிட, அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் களம் காண்கிறார். கொரோனா வைரஸ், இனப்பாகுபாடு ஆகிய விவகாரங்கள் இந்த தேர்தலில் முக்கிய பிரச்சினைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தேர்தல் நடந்தால…

  15. கனடாவில் கத்திக் குத்து ; இருவர் உயிரிழப்பு, ஐவர் காயம் கனேடிய நகரமான கியூபெக்கில் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து தாக்குதலில் குறைந்தது இருவர் உயிரழந்துள்ளனர். சனிக்கிழமை இரவு இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், பொது மக்களை வீட்டிலேயே இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன் இத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்த கத்திக் குத்தில் குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் பொலிசார் இதுவரை எந்த மரணத்தையோ அல்லது காயத்‍தையோ உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும் விரைவில் இது தொடர்பான அறிக்கையொன்றையும் பொலி…

  16. "அமெரிக்காவில் இனவெறி அதிகரிக்க டிரம்ப்தான் காரணம்" - அமெரிக்க வாழ் தமிழ் இளைஞர்கள் சொர்ணம் சங்கரபாண்டி, வாஷிங்டன் டி.சி. பிபிசி தமிழுக்காக பட மூலாதாரம், GETTY IMAGES இன்னும் ஒரு சில நாட்களில் உலகின் சக்திவாய்ந்த நாட்டின் அதிபர் யார் என்று தெரியவரும். பல்வேறு கலாசார மக்களை கொண்ட அமெரிக்கா சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது இனவெறி பிரச்சனை. இதற்கும் யார் அதிபராக தேர்ந்தெடுக்கப்படப் போகிறார் என்பதற்கும் நிச்சயம் தொடர்பில்லாமல் இருக்க முடியாது. இனவெறி பிரச்சனை எப்படி தேர்தலில் எதிரொலிக்கும் என்பது குறித்து அமெரிக்க வாழ் தமிழர்கள், பிபிசி தமிழிடம் பேசி…

  17. பிரான்ஸ் குறித்து இம்ரான் கான்: "மேற்குலக நாடுகளுக்கு இஸ்லாம், முஸ்லிம், நபிகள் பற்றிய புரிதல் இல்லை" பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, இம்ரான் கான் "மேற்குலக நாடுகளுக்கு இஸ்லாம், முஸ்லிம்கள் மற்றும் முகமது நபிகள் குறித்த புரிதல் இல்லை," என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், பிரான்ஸில் இஸ்லாத்திற்கு எதிரான விரோதப் போக்கு நிலவுவதாக கூறி, அந்த நாட்டிற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின்னர் பாகிஸ்தான், வங்கதேசம், லெபனான் மற்றும் பல்வேறு நாடுகளில் பிரான்…

    • 2 replies
    • 670 views
  18. பிரான்ஸ் நகரமான லியோனில் பாதிரியார் மீது துப்பாக்கிச் சூடு! பிரான்ஸ் நகரமான லியோனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பாதிரியார் பலத்த காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். துப்பாக்கி ஏந்திய நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் என்றும் சாட்சிய விசாரணைகளை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் பாதுகாப்பு மற்றும் அவசரகால பணியாளர்கள் சம்பவ இடத்தில் இருப்பதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சு கூறியதுடன், இப்பகுதியைத் தவிர்க்குமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. தாக்குதலுக்கான நோக்கம் தெளிவாக அறிவிக்கப்படாத போதிலும் கொலை முயற்சி தொடர்பான விசாரணையை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். …

  19. ஜேம்ஸ் பாண்டின் சித்தரிப்புக்காக ஸ்காட்டிஷ் நடிகர் மிகவும் பிரபலமானவர், இந்த பாத்திரத்தை முதன்முதலில் பெரிய திரைக்குக் கொண்டுவந்தவர் மற்றும் ஏழு ஸ்பை த்ரில்லர்களில் தோன்றினார். சர் சீன் தூக்கத்தில் நிம்மதியாக இறந்தார், பஹாமாஸில் இருந்தபோது, "சிறிது நேரம் உடல்நிலை சரியில்லாமல்" இருந்ததாக அவரது மகன் கூறினார். அவரது நடிப்பு வாழ்க்கை ஐந்து தசாப்தங்களாக நீடித்தது மற்றும் 1988 ஆம் ஆண்டில் தி அண்டச்சபிள்ஸில் நடித்ததற்காக ஆஸ்கார் விருதை வென்றார். சர் சீனின் மற்ற படங்களில் தி ஹன்ட் ஃபார் ரெட் அக்டோபர், ஹைலேண்டர், இந்தியானா ஜோன்ஸ் மற்றும் தி லாஸ்ட் க்ரூஸேட் மற்றும் தி ராக் ஆகியவை அடங்கும். ஜேசன் கோனரி, நாசாவில் ஒரே இரவில் இறந்தபோது அவரது தந்தை "அவரைச் சுற்றியுள்ள பஹாமாஸி…

  20. இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட அமெரிக்க பிரஜையை நைஜீரியாவில் மீட்டது அமெரிக்காவின் விசேட படைப்பிரிவு October 31, 2020 இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட அமெரிக்க பிரஜையை நைஜீரியாவில் அமெரிக்காவின் விசேட படைப்பிரிவொன்று மீட்டுள்ளது. நைஜீரியாவின் வடபகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விசேட படைப்பிரிவின் தாக்குதலில் பலர் கொல்லப்பட்;டுள்ளனர். நைஜரில் வீட்டில் வைத்து கடத்தப்பட்ட 27வயது பிலிப்வொல்டன் என்பவரையே அமெரிக்காவின் விசேட நேவி சீல்ஸ் படைப்பிரிவினர் மீட்டுள்ளனர். நைஜர்எல்லையில் பண்ணைதொழில் ஈடுபட்ட பிலிப்வொல்டனை காரில் வந்த ஆறு பேர் கடத்தினார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் கடத்தல்காரர்கள் அவரது குடும்பத்தினரை கடத்திச்…

  21. துருக்கி-கீரிஸ் இடையில் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம்- உயிரிழப்புக்கள் பதிவு! by : Litharsan http://athavannews.com/wp-content/uploads/2020/10/Deadly-Earthquake-Rocks-Western-Turkey-and-Greece-700x450.jpg துருக்கி மற்றும் கீரிஸ் நாடுகள் இடையே, ஏஜியன் கடல்பகுதியை மையமாகக் கொண்டு 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதாகவும், நால்வர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்ததுடன் 120 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் இரு நாடுகளிலும் சேதம் ஏற்பட்டுள்ளது. அங்கு பல கட்டிடங்கள் இடிந்து வீழ்ந…

    • 0 replies
    • 558 views
  22. நீசிலுள்ள தேவாலயத்தில் (Notre-Dame de Nice - Alpes-Maritimes)நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இதுவரை மூவர் பலியாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பேராசிரியர் எமானுவல் பற்றி போல் ஒருவரின் கழுத்து அறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது உடனடியாக தேசியப் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளது. தேவால்ய மலசல கூடத்திற்குள் ஒளிந்திருந்த இஸ்லாமியப் பயங்கரவாதி துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிக் கைது செய்யப்பட்டுள்ளான். தாக்குதல் நடாத்தியபோது பயங்கரவாதி தொடர்ச்சியாக அல்லாஹு அக்பர் எனக் கத்தியுள்ளான். https://www.paristamil.com/tamilnews/francenews-MTcwODQ1OTExNg==.htm

  23. பூமிக்கு அடியில் புதிய அணு உலை அமைக்கும் பணிகளை தொடங்கியது ஈரான்! ஈரான் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த அணு உலை அமைக்கும் பணிகளை, மீண்டும் தொடங்கியுள்ளது. இஸ்பகான் மாகாணத்திலுள்ள நாதன்ஸ் நகரில் புதிய அணு உலையை ஈரான் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கட்டத் தொடங்கியது. இதற்கான பணிகள் தொடங்கிய சில வாரங்களிலேயே புதிய அணு உலை அமையும் இடத்தில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. இதில் ஆலையில் நிறுவுவதற்காக வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த மற்றும் உயர் தொழில்நுட்பம் கொண்ட உற்பத்தி சாதனங்கள் பல தீயில் கருகி நாசமானது. இதையடுத்து அணு உலை கட்டும் பணிகள் கைவிடப்பட்டது. இந்தநிலையில் நாதன்ஸ் நகரில் பூமிக்கு அடியில் புதிய அணு உலை அமைக்கும் பணிகளை ஈரான் தொடங்கியுள்ளதாக ஐ. நா. கண்கா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.