Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஜேர்மனியிடமிருந்து... முக்கிய இறக்குமதிக்கு தடை விதித்தது சீனா! ஜேர்மனியில் இருந்து மற்றும் பன்றி தொடர்பான பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக சீனா அறிவித்துள்ளது. இந்த தடையை சீனாவின் சுங்க நிறுவனம் மற்றும் அதன் விவசாய அமைச்சகம் ஆகியன இன்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளன. கடந்த வாரம் காட்டுப் பன்றியில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதை ஐரோப்பிய நாடான ஜேர்மனி உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து இவ்வாறு தடை விதிக்கப்படுவதாக சீனா குறிப்பிட்டுள்ளது. கொடிய பன்றி நோய்க்கு எதிராக போராட வேண்டியுள்ள நிலையில், சீனாவுக்கான மூன்றாவது பெரிய பன்றி இறைச்சி வழங்குநரான ஜேர்மனியிமிருந்து பன்றி குறித்த இறக்குமதியை சீனா தடை செய்துள்ளது. இந்தத் தடை யை ஏ…

  2. சீனாவிலிருந்து வட கொரியாவிற்குள் நுழைபவர்களை சுடுவதற்கு உத்தரவிட்டார் கிம் ஜொங் உன்! கொரோனா பரவலைத் தடுக்க சீனாவில் இருந்து வட கொரியாவிற்குள் நுழைபவர்களை சுட்டுத்தள்ள வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் கடுமையாக பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில் வடகொரியா மட்டும் கொரோனா பாதிப்புக் குறித்து எந்தவொரு தகவலையும் வெளியிடுவதில்லை. இந்நிலையில், தென் கொரியாவில் உள்ள அமெரிக்க படைத் தளபதி ரொபேர்ட் அம்ரம்ஸ், கொரோனா பரவலைத் தொடர்ந்து ஜனவரியில் சீனாவுடனான எல்லையை வடகொரியா மூடியதாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஜூலையில் அவசர நிலை பிரகடனத்தை வடகொரியா அமுல்படுத்தியதாகவும் அதைத் தொடர்ந்து ச…

  3. ஈரானிய மல்யுத்த வீரர் நவிட் அஃப்காரி தூக்கிலிடப்பட்டார்! ஈரானிய மல்யுத்த வீரர் நவிட் அஃப்காரி, பாதுகாப்பு காவலரைக் குத்திக் கொலை செய்த வழக்கின் தீர்ப்புக்கமைய தூக்கிலிடப்பட்டார். நவிட் அஃப்காரிக்கான மரண தண்டனை இன்று (சனிக்கிழமை) காலை ஷிராஸில் உள்ள அடிலாபாத் சிறையில் நிறைவேற்றப்பட்டதாக ஃபார்ஸ் மாகாணத்தின் தலைமை நீதிபதி காசெம் மௌசவியை மேற்கோள்காட்டி மாநில தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. பெற்றோர் மற்றும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் சார்பில் சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் இன்று காலை அஃப்காரி தூக்கிலிடப்பட்டுள்ளார். தெற்கு நகரமான ஷிராஸில் நீர்வழங்கல் நிறுவன ஊழியரை அஃப்கரி (வயது-27) கத்தியால் குத்தியதாக கொலை செய்ததாக அவர் மீது குற்றஞ்சாட்ட…

  4. தனது மாமாவை கொன்றது எப்படி? ட்ரம்பிடம் விளக்கிய வடகொரிய ஜனாதிபதி கிம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜங், தன் மாமாவிற்கு மரண தண்டனை விதித்து சுட்டுக் கொன்றது உள்ளிட்ட பல விடயங்களை வெளிப்படையாக கூறிய தகவல், தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்டுள்ள புத்தகமொன்றில் இடம்பெற்ற டொனால்ட் ட்ரம்பின் நேரகாணல் பக்கத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அமெரிக்காவில் முதல் முதலாக பரவ ஆரம்பித்த போதே, அதன் வீரியத்தையும், விபரீதத்தையும், ட்ரம்ப் நன்றாக தெரிந்து வைத்திருந்தார் என அந்த நேர்காணலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காற்றில் பரவக் கூடி…

  5. இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்குமாறு கனடா கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Garnett Genuis, கனேடிய பிரதமர் Justin Trudeauவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் பெருந்தொகையானவர்கள் காணாமல் போயுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், கனேடிய அரசாங்கம் மெக்னிடிஸ்கி தடை சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். கனேடிய தமிழ் மக்கள் இலங்கையில் நடந்த காணாமல் போனவர்கள் சம்பந்தமாக நீதி விசாரணையை கோரி நடைப் பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் Garnett Genuis, கனேடிய அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார். இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க கோரி கனேடிய தமிழர்கள் டெரொன்டோ மற்றும் மொன்ட்றியலில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி நட…

  6. போடுறா 100 தோப்புக்கரணம் மூன்று நாட்களாக காய்ச்சல். உடம்புக்கு முடியவில்லை. இரவில் வேறு சின்ன தம்பியை பார்க்கவேண்டும். தாய் தந்தையர் வேலையில். நான்காம் நாள் பாடசாலைக்கு போகிறான் சிறுவன், வீட்டுப்பாடம் செய்யாமல். ஆனாலும் மருத்துவரின் சான்றிதழுடன். அதனை வாங்கி பார்க்கிறார் ஆசிரியர். ஒரு பக்கமாக வைக்கிறார். எங்கடா வீட்டுப்பாடம். நாலு நாளுக்கு வராமல் இருந்தால், மறந்துவிடுவேன் என்று நினைத்தாயோ. உடம்புக்கு முடியாததால், செய்யவில்லை சேர்..... அப்படியா.... உனக்கு நல்ல தண்டனை தந்தாள் தான் சரிவரும். இவர்கள் வேறு அடிக்க கூடாது என்று சொல்லி விட்டார்கள். போடுறா 100 தோப்புக்கரணம்.... ஆசிரியர் உத்தரவு போடுகிறார்.... முதலிலேயே பலவீனமாக இர…

  7. ஒக்ஸ்போர்ட் கொரோன தடுப்பு மருந்து பரிசோதனை தற்காலிகமாக இடைநிறுத்தம் Rajeevan ArasaratnamSeptember 9, 2020 ஒக்ஸ்போர்ட் கொரோனா வைரஸ்தடுப்பு மருந்து பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திய நபர் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து தடுப்பு மருந்து பரிசோதனை முயற்சிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அஸ்டிராஜெனேகாவும் ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகமும் இணைந்து உருவாக்கிவரும் கொரோனா வைரஸ் மருந்து பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திய நபர் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். உடல்நிலை பாதிப்புக்கான காரணம் தெரியவில்லை என தெரிவித்துள்ள அஸ்டிரா ஜெனேகா சோதனை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளது. ஓக்ஸ்போர்ட் மருந்தினை சர்வதேச அளவில் ப…

    • 2 replies
    • 671 views
  8. ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீன நாட்டினருக்கான விசாக்களை இரத்து செய்தது அமெரிக்கா! ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட சீன நாட்டினருக்கான விசாக்களை இரத்து செய்துள்ளதாக, அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் சீனாவிலிருந்து நுழைவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கான மே-29 ஜனாதிபதி பிரகடனத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பாதுகாப்பு அபாயங்கள் எனக் கருதப்படுகின்றனர் என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் செயல் தலைவர் சாட் வுல்ஃப் கூறுகையில், ‘சில சீன பட்டதாரி மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு சீனாவின் இராணுவ இணைவ…

  9. பெய்ரூட் துறைமுகத்தில் மீண்டும் தீவிபத்து: தீயை அணைக்கும் முயற்சிகளில் படையினர் தீவிரம்! லெபனானின் தலைநகரான பெய்ரூட் துறைமுகத்தில், மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக, அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. சற்று முன்னர் ஒரு பெரிய வெடிப்பு, துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை) ஏற்பட்ட தீ விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து உடனடி தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. துறைமுகத்தின் பணியாளர்கள் இல்லாத மண்டலத்தில் எண்ணெய் மற்றும் டயர்கள் சேமிக்கப்படும் ஒரு கிடங்கில் தீப்பிடித்ததாக லெபனான் இராணுவம் தெரிவித்துள்ளது. தீயை அணைக்கும் முயற்சிகளில், தீயணைப்பு படையினர் மற்றும் …

  10. இம்முறை தேர்தலிலும் ரஷ்யாவின் தலையீடு இருக்கும் – கமலா ஹாரிஸ் எச்சரிக்கை! அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ரஷ்யா தலையிட்டால் ஜனநாயக கட்சிக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அக்கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க தொலைகாட்சி ஒன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “அமெரிக்காவில் 2016 இல் நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்தது. அது குறித்து ஆய்வு செய்த செனட் புலனாய்வு குழுவில் நான் இருந்தேன். என்ன நடந்தது என்பது குறித்த விரிவான அறிக்கைகளை நாங்கள் வெளியிட்டோம். இந்த தேர்தலிலும், ரஷ்யாவின் தலையீடு இருக்கும் என தெரிகிறது. அவ்வாறு இருந்தால…

  11. ட்ரம்பினால் மாத்திரமே தீவிரவாதிகளிடம் இருந்து அமெரிக்காவை காப்பாற்ற முடியும் – நூர் பின்லேடின் ட்ரம்பினால் மாத்திரமே தீவிரவாதிகளிடம் இருந்து அமெரிக்காவை காப்பாற்ற முடியும் என ஒசாமா பின்லேடனுக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார். ஒசாமா பின்லேடனின் மூத்த சகோதரர் யெஸ்லாம் பின்லேடினின் மகள் நூர் பின்லேடின் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘உலகில் ஒரே ஒரு மனிதனால் மட்டுமே ஒசாமா பின்லேடன் கும்பலிடமிருந்து நம்மைக் காப்பாற்ற முடியும். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பால் மட்டுமே, அமெரிக்காவை காப்பாற்ற முடியும். அவரை எதிர்த்து போட்டியிடும் பைடன், அ…

  12. கருப்பின மக்களுக்கு ஒரு சட்டம்; வெள்ளையின மக்களுக்கு ஒரு சட்டம் - கமலா ஹாரிஸ் விமர்சனம் கருப்பின மக்களுக்கு ஒரு சட்டம், வெள்ளையின மக்களுக்கு ஒரு சட்டம் என அமெரிக்காவில் இரு சட்டங்கள் உள்ளதாக கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் கூறும்போது, “அமெரிக்க நீதி துறையில் நிறவெறி இருக்கிறது. அமெரிக்காவில் தற்போது நாம் பார்க்கும் யதார்த்தம் பல தலைமுறைகள் கடந்து நாம் பார்த்து வருகிறோம். அமெரிக்க நீதி துறையில் கருப்பின மக்களுக்கு ஒரு சட்டம், வெள்ளையின மக்களுக்கு ஒரு சட்டம் என இருவேறு சட்டங்கள் உள்ளன. சட்டத்தின் முன் அனைவரும் சமம்”என்று தெரிவித்தார். அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கு எதிரான காவல் துற…

  13. ஜமால் கஷோகி கொலை: ஐந்து பேருக்கான மரண தண்டனைகளை இரத்து செய்தது சவுதி நீதிமன்றம் சவுதி ஊடகவியாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பாக, ஐந்து பேருக்கான மரண தண்டனைகளை சவுதி நீதிமன்றம் இரத்து செய்துள்ளது. கஷோகியின் மகன்கள் மே மாதத்தில் கொலையாளிகளை மன்னித்துவிட்டதாக கூறியதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தின் மன்னிப்பு கடந்த டிசம்பரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து பேரின் உயிரைக் காப்பாற்றியது. ஆனால், ஐக்கிய நாடுகளின் நிபுணரால், இந்த தீர்ப்;பு கண்டிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம், ஐந்து பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மேலும் மூன்று பேருக்கு ஏழு முதல் 10 ஆண்டுகள் வரையிலும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன…

  14. நவால்னி விவகாரத்தில் ரஷ்யா ஒத்துழைக்கத் தவறினால் கடலடி குழாய் திட்டம் கைவிடப்படும்: ஜேர்மனி எச்சரிக்கை ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், விசாரணைகளுக்கு ரஷ்யா ஒத்துழைக்கத் தவறினால் ‘நார்ட் ஸ்ட்ரீம் 2’ கடலடி குழாய் திட்டத்தை நாங்கள் கைவிட வேண்டியிருக்கும் என ஜேர்மனி எச்சரித்துள்ளது. அலெக்ஸி நவால்னி விவகாரத்தில் தொடர்ந்து நெருக்கடி கொடுத்துவரும் ஜேர்மனியின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹீக்கோ மாஸ் இதுகுறித்து கூறுகையில், ‘நவால்னி மீது நச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக நாங்கள் நடத்தி வரும் விசாரணையில், ரஷ்யா தனது பங்களிப்பை அளிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அவ்வாறு ரஷ்யா ஒத்துழைக்கத் தவறினால், …

    • 4 replies
    • 611 views
  15. கொவிட்-19: தடுப்பு மருந்துகளைக் காட்சிப்படுத்தியது சீனா! உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாத் தொற்றுக்கான தடுப்பு மருந்துகளை பீஜிங்கில் நடைபெற்று வரும் வர்த்தக கண்காட்சியில் முதன் முறையாக கடந்த 6 ஆம் திகதி சீனா காட்சிப்படுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சினோவக் பயோடெக் (Sinovac Biotech LTD) மற்றும் சினோபார்ம்(Sinopharm) ஆகிய இரு சீன நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள குறித்த மருந்துகளே இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை சந்தையில் விற்பனைக்கு வராத நிலையில், 3 ஆம் கட்ட பரிசோதனைகள் முடிந்து நடப்பு ஆண்டின் இறுதிக்குள் குறித்த மருந்துகளின் விற்பனைக்கு ஒப்புதல் கிடைக்குமென உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. …

  16. விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ் தொடர்ந்த வழக்கு விசாரணை மீண்டும் லண்டன் நீதிமன்றில் ஆரம்பம் விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ் (Julian Assange), அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கு மீண்டும் லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. கொரோனா நெருக்கடி காரணமாக இந்த வழக்கு விசாரணை பல மாதங்களாக நடைபெறாத நிலையில், மீண்டும் ஆரம்பமாகும் வழக்கின் தீர்ப்பு ஜூலியன் அசாஞ்சின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் வழக்கு என்பதால் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்ரேலியாவைப் பூர்வீகமாகக்கொண்ட 49 வயதாகும் ஜூலியன் அசாஞ், உலக நாடுகளின் இரகசிய ஆவணங்கள், மக்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள், முறைகேடுகள், ஊழல் மற்றும் போர்க்குற்ற…

  17. ஜப்பானை அச்சுறுத்தும் சூறாவளி – 8.1 இலட்சம் மக்கள் வெளியேற்றம் ஜப்பானின் தெற்கு பகுதியை நோக்கி ஹாய்ஷென் சூறாவளி நெருங்கி வரும் நிலையில், 8.1 இலட்சம் மக்களை அந்நாட்டு அரசு அங்கிருந்து வெளியேற்றியுள்ளது. இந்த சூறாவளி ஜப்பானின் தெற்கே அமைந்த யகுஷிமா தீவில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்கிருந்து மணிக்கு 35 கி.மீ. வேகத்தில் வடக்கு நோக்கி நகருகிறது என அந்நாட்டு வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த சூறாவளி காற்றின் வேகம் மணிக்கு 162 கி.மீ. இருக்க கூடும் என்றும் மணிக்கு 216 கி.மீ. வரை வேகமெடுக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஹைஷென் புயல் இன்று காலை வடக்கு நோக்கி நகர்ந்து கியூசூ தீவை தாக்கும் என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, கு…

  18. சீனாவுக்கும் அமெரிக்காவுகுமிடையில் மோதல் வலுக்கின்றது சீனாவின் தொலைதொடர்பு மற்றும் கட்டுமானப் பணிகள் உட்பட 24 நிறுவனங்கள் மீது அமெரிக்கா கொண்டுவந்த தடையை தொடர்ந்து அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் சிறீலங்கா விவகாரம் தொடர்பில் முரன்பாடுகள் வலுத்துள்ளன. கொழும்பு துறைமுக நகரம், அம்பாந்தோட்டை துறைமுகம், மாத்தளை விமானநிலையங்களை நிறுவிய இந்த நிறுவனம் மீதான தடை சிறீலங்காவின் பொருளாதாரத்தை கடுமையாக பதிக்கும். இந்த நிலையில் சீனாவும் சிறீலங்காவும் இறைமையுள்ள நாடுகள் எனவும்> அமெரிக்காவின் நடவடிக்கை அனைத்துலகவிதிகளுக்கு எதிரானது எனவும் கொழும்பில் உள்ள சீனா தூதரகம் தெரிவித்துள்ளது. உலகத்தை அமெரிக்கா இராணுவமயப்படுத்தி வருவதாகவும், உலகில் உள்ள 70 நாடுகளி…

  19. கிரிஸ் போக்மேன் கேப் டி ஏக்டே, தெற்கு பிரான்ஸ் கடந்த சில நாட்களாக பிரான்சில் அதிக அளவிலான கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. சமீபத்தில் ஒரே நாளில் 7000 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. குறிப்பாக அந்நாட்டின் தென் பகுதியான ஹெரால்ட் மற்றும் கேப் டி ஏக்டேவில் அதிகளவில் கொரோனா தொற்று பதிவாகி உள்ளது. இந்த இரண்டுமே ஐரோப்பாவின் மிகப்பெரிய இயற்கை உல்லாசப் போக்கிடமாகும். இயற்கையுடன் ஒன்றி இன்பத்தை அனுபவிக்கும் நோக்கில் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வருவது வழக்கம். ஆனால், தற்போது இது அதிகளவில் கொரோனா பரவும் இடமாக மாறி வருகிறது. இப்பகுதிகளில் எல்லையில…

  20. 'கடனுக்குப் பாலியல் சேவை' என்பது இதுவரை கேள்விப்படாத ஒன்று. ஆனால் கொரோனா வைரஸ் மலேசியாவில் இதை சாத்தியமாக்கி உள்ளது. கொரோனா விவகாரத்தால் பெரும்பாலானோர் வருமானத்தையும் ஊதியத்தையும் இழந்து தவிக்கின்றனர். இதைப் புரிந்துகொண்டு மலேசியாவில் இயங்கி வந்த சட்டவிரோத பாலியல் கும்பல் ஒன்று வெளியிட்ட நூதன மற்றும் கவர்ச்சிகர அறிவிப்பு, வாடிக்கையாளர்களை பரவசப்படுத்தியிருக்கிறது. "முதலில் எங்கள் சேவையை அனுபவியுங்கள்... கட்டணத்தைப் பிறகு செலுத்துங்கள்," என்பது தான் அந்த அறிவிப்பு. வெளிநாட்டவர்களை குறிவைத்து இந்த அறிவிப்பை ரகசியமாக பரப்பிய அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் தற்போது கைதாகி உள்ளனர். அண்மையில் மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் இந்தக்…

  21. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: அரசியல் விளம்பரங்களுக்குத் தடை விதித்தது பேஸ்புக்! September 5, 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 03 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே அரசியல் விளம்பரங்கள் எதையும் வெளியிடுவதில்லையென, பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் கொரோனாத் தொற்று மற்றும் வாக்குப் பதிவுகள் தொடர்பானத் தவறான பதிவுகளும் நீக்கப்படவுள்ளதாக அந் நிறுவனம் அறிவித்துள்ளது. அந்தவகையில் வாக்குகளின் எண்ணிக்கை நிலவரம் குறித்த தவறான தகவல்களை தடுக்க வேட்பாளர்களின் அதிகாரபூர்வ பதிவுகளுக்கு மட்டும் இணைப்பினை வழங்கவும் பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://…

  22. விடுதலைப்புலிகளை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்கலாம்: மகாதீர் வலியுறுத்தல் 4 செப்டெம்பர் 2020, 14:34 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,BEHROUZ MEHRI/AFP/GETTY IMAGES படக்குறிப்பு, மகாதீர் தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தை நீக்குமாறு தமது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த மொகிதின் யாசினுக்கு இந்த ஆண்டின் துவக்கத்தில் தாம் கடிதம் எழுதியதாக மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொகமட் தெரிவித்துள்ளார். தாம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரிக்கவில்லை என்றாலும், தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில்…

  23. கொரோனாவால் 2021ஆம் ஆண்டிற்குள் 4.7 கோடி சிறுமிகள், பெண்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள் கொரோனா தாக்கத்தால் வரும் 2021ஆம் ஆண்டிற்குள் 4.7 கோடி பெண்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் தள்ளப்படுவார்கள் என ஐ.நா. ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது ஐ.நா பெண்கள் மற்றும் ஐ.நா. மேம்பாட்டுத் திட்டக் குழு சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வின்படி கொரோனா தொற்று காரணமாக ஆண்களைவிட பெண்கள் அதிகளவில் வறுமைக்கோட்டிற்குகீழ் தள்ளப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற இலக்கினை அடைய கொரோனா தொற்று தடையாக இருக்கின்றது. அத்துடன் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உணவு சேவைகள், வீட்டு வேலைகள், தங்கும் விடுதி…

  24. வெனிசுவேலா ஜனாதிபதியை கொல்ல ட்ரம்ப் திட்டம்: அதிர்ச்சி தகவலால் பரபரப்பு! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தன்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக, வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்ட காணொளி பதிவில் அவர் கூறுகையில், ‘நான் மிகவும் மிருகத்தனமான ஆக்கிரமிப்புக்கு பலியாகினேன். அமெரிக்க அரசு என் தலைக்கு 15 மில்லியன் டொலர்கள் நிர்ணயித்துள்ளது. என்னை கொலை செய்ய ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அவர்கள் என்னை கொல்ல வெனிசுவேலாவில் துப்பாக்கி சுடும் குழுவை நியமிக்க முயற்சிக்கிறார்கள். என்னை கொல்லும் கூலிப்படையை ட்ரம்ப் தேடிக் கொண்டிருக்கிறார்’ என கூறினார். எனினும், வெனிசுவேலா ஜனாதிபதி, அமெரிக்கா தன்னை கொல்வதற்கு முயற…

  25. சவுதியின் வான் எல்லை வழியாக விமானம் பறக்க இஸ்ரேலுக்கு அனுமதி! இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரக உறவு தொடர்பான வரலாற்றில் முதல் முறையாக இரு நாடுகளுக்கு இடையேயும் விமான போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சவுதி தனது வான் எல்லை வழியாக இஸ்ரேல் விமானம் பறக்க அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் இஸ்ரேல் விமானங்கள் இனி சவுதி வான்பரப்பை பயன்படுத்தி நேரடியாக ஐக்கிய அமீரகத்திற்கு செல்லலாம். அதேபோல் அமீரக விமானங்கள் சவுதி வான்பரப்பை பயன்படுத்தி இஸ்ரேல் செல்லலாம். இதன்மூலம் பயண நேரம் பல மணி நேரம் குறையும். இந்த நிகழ்வு சவுதி மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதலை தணித்து அமைதி ஒப்பந்தத்தை மேற்கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்தும் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.