Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சுவீடனில் குரானை எரித்த தீவிர வலதுசாரி அமைப்பு: கலவரமாக மாறிய போராட்டம் EPA சுவீடனில் தீவிர வலதுசாரி அமைப்பு ஒன்று இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை எரித்ததை எதிர்த்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. சுவீடனின் தெற்கு பகுதியில் இருக்கும் மால்மோவில் பல மணி நேரங்களாக நடந்த அந்த கலவரத்தில், வாகனங்களுக்கு தீயிடப்பட்டது. கடைகள் சேதப்படுத்தப்பட்டன. பலர் அங்கு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்கிறது போலீஸ். போலீஸார் மீது போராட்டக்காரர்கள் கல் எரிவதாகவும், கார் டயர்களுக்கு தீ வைப்பதாகவும் போலீஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார் என்கிறது ராய்ட்டர்ஸ் செய்தி முகமை. மேலும் குரான் எரிக்கப்பட்ட அதே…

  2. கிரேக்கம்- சைப்ரஸுடனான பதற்றங்களைக் குறைக்காவிட்டால் துருக்கிக்கு பொருளாதார தடை: ஐரோப்பிய ஒன்றியம் கிழக்கு மத்தியதரைக் கடலில் கிரேக்கம் மற்றும் சைப்ரஸுடனான அதிகரித்துவரும் பதற்றங்களைக் குறைப்பதில் முன்னேற்றம் காணப்படாவிட்டால், துருக்கிக்கு புதிய பொருளாதாரத் தடைகள் மற்றும் கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை விதிக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் அச்சுறுத்தியுள்ளது. சைப்ரஸ் தீவுக்கு அருகே கடல் எல்லைகள் மற்றும் எரிவாயு துளையிடும் உரிமைகள் தொடர்பான மோதல் அதிகரித்து வருகின்ற நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட இராஜதந்திரி ஜோசப் பொரெல் இந்த எச்சரிக்கையை விடுத்தார். ஜோசப் பொரெல், உரையாடலுக்கு ஒரு தீவிரமான வாய்ப்பை கொடுக்க விரும்புவதாகக் கூறினார். ஆனால் நெருக்கடியில் உறு…

  3. லண்டனில் வாழ மிகவும் ஆபத்தான பகுதிகள் போலீசார் வெளியிட்ட பட்டியல் லண்டன் போலீசாரின் புள்ளி விவரங்களின் படி குரோய்டோன் வாழ மிகவும் ஆபத்தான இடமாக பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கத்தி குத்து சம்பவம், துப்பாக்கிச் சூடு தாக்குதல் என்பது சர்வசாதரணமாகி வருகிறது.வன்முறை மற்றும் குடும்ப சண்டை போன்றவைகளாலும் இறப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தலைநகரான லண்டனில் இருக்கும் குரோய்டோனில் வன்முறை குற்றங்கள் பொதுவாக 5,978 பதிவாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு இதுவரை குரோய்டோனில் கிட்டத்தட்ட 19,000 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இந்த ஆண்டு ஜனவர…

  4. கிறிஸ்ட்சர்ச் மசூதி தாக்குதல்தாரி மூன்றாவது மசூதியிலும் தாக்குதல் நடத்த இருந்தார்: விசாரணையில் தகவல் நியூஸிலாந்தில் இரண்டு மசூதிகளில் 51 பேரைக் கொன்ற தாக்குதல்தாரிக்கு, மூன்றாவது மசூதியைக் குறிவைக்கும் திட்டம் இருந்ததாக அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது. தாக்குதல்தாரியான 29 வயதான ப்ரெண்டன் டாரன்ட், மசூதிகளை எரிக்கவும், முடிந்தவரை பல பேரைக் கொல்லவும் விரும்பியதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவுஸ்ரேலிய குற்றவாளியான ப்ரெண்டன் டாரன்ட் மீது 51 கொலை, 40 கொலை முயற்சிகள் மற்றும் ஒரு பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 15ஆம் திகதி கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள மசூதியில் நுழைந்த ப்ரெண்டன் ட…

  5. பயங்கரவாதத்துக்கு எதிரான போர்”- மாலியில் பிரான்சு முன்னெடுத்துள்ள நவகாலனீய நடவடிக்கை -தமிழில் ஜெயந்திரன் பிரான்சு நாட்டின் ஆதரவுப் பின்புலத்துடன் ஆபிரிக்காவின் மாலியில் மேற்கொள்ளப்படும் இராணுவமயமாக்கல் பிரான்சு நாட்டின் பொருண்மிய ஈடுபாடுகளைப் பாதுகாப்பதையே இலக்காகக் கொண்டது மட்டுமன்றி, மாலியின் உள்நாட்டுப் பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது. ஜோர்ஜ் ஓர்வெல் (George Orwell) 1984 இல் வெளியிட்ட நூலில் “கடந்த காலத்தைக் கட்டுப்படுத்துபவர் எதிர்காலத்தைக் கட்டுப்படுத்துகிறார். நிகழ்காலத்தைக் கட்டுப்படுத்துபவர் கடந்த காலத்தைக் கட்டுப்படுத்துகிறார்;” என்று குறிப்பிடுகிறார். ஆபிரிக்கக் கண்டத்தில் இஸ்லாம் சமயத்தின் வரலாற்றை எந்த ஒரு பக்கமும் சாயாது, …

  6. அமெரிக்காவுக்கு எச்சரிக்கை: தென்சீனக் கடலில் ஏவுகணை செலுத்தி சீண்டும் சீனா தென் சீனக் கடல் பகுதியில் 2 ஏவுகணைகளைச் செலுத்தி போர்ப் பயிற்சி மேற்கொண்டது, சீன ராணுவம், இதனை அமெரிக்காவுக்கான எச்சரிக்கை என்று சீன ஊடகங்கள் வருணித்துள்ளன. சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல்பகுதியில் சீனாவின் ஆதிக்கம் குறித்து பலதரப்புகளிலிருந்தும் கேள்விகள் பிறந்துள்ள நிலையில் இந்த ஏவுகணைச் சோதனையும் அதை அமெரிக்காவுக்கு எதிரான எச்சரிக்கை என்று சீனா வருணித்துள்ளதும் புதிய சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. ஹைனன் பகுதிக்கும் பாராசெல் தீவுகளுக்கும் இடையே தென் சீனக் கடலில் சீனா ஏவுகணைகளைச் செலுத்தியது. சீனாவின் ராணுவப் பயிற்சி இடத்துக்கு மேலே அமெரிக்க உ…

  7. கருப்புப் பட்டியலிருந்து சூடானை நீக்க 330 மில்லியன் டொலர்கள் கோரும் ட்ரம்ப் அரசாங்கம்! பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கும் நாடுகளின் கருப்புப் பட்டியலிருந்து சூடானை நீக்க 330 மில்லியன் டொலர்களை, டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கம் கோரியுள்ளது. கார்ட்டூமுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ, இந்த கோரிக்கையை முன்வைத்தார். 2005ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு அமெரிக்க வெளியுறவு செயலாளர் சூடானுக்குச் சென்ற முதல் பயணம் இதுவாகும். 1998ஆம் ஆண்டில் கென்யா மற்றும் தான்சானியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் நடந்த அல்-கைதா பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பணம் இழப்பீடாக வழங்கப்படுமென மைக் பொம்பியோ தெரிவித்தார். 2000ஆம் ஆண்டி…

  8. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: அதிகாரிகளுக்கு வடகொரிய தலைவர் எச்சரிக்கை! கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ‘பாவி’ சூறாவளி ஆகியவற்றால் ஏற்படக்கூடும் அபாயங்களை எதிர்கொள்ள தயார்படுத்திக் கொள்ளுமாறு, வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் அந்நாட்டு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கிம்மின் உடல்நலம் குறித்த வதந்திகள் மற்றும் அவர் தனது சகோதரியான கிம் யோ ஜோங்கிற்கு அதிகாரத்தை பகிர்ந்தளித்தார் போன்ற செய்திகள் வெளியான நிலையில், கட்சிக்கூட்டத்தில் கிம் ஜோங் உன் நேற்று (செவ்வாய்க்கிழமை) பங்கேற்றுள்ளார். பொலீட்புரோ கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றிய கிம், ‘வைரஸ் தொற்று பரவாமல் இருக்க அதிகாரிகள் எடுத்த முயற்சியில் சில குறைபாடுகள்’ இருப்பதாக தெரிவித்தார் இதுவரை வடகொரியாவ…

  9. பத்தாயிரத்துக்கும் அதிகமான ஐ.எஸ். தீவிரவாதிகள் செயற்பாட்டில் உள்ளனர்: ஐ.நா. தகவல்! ஈராக் மற்றும் சிரியாவில் பத்தாயிரத்துக்கும் அதிகமான ஐ.எஸ். தீவிரவாதிகள் செயற்பாட்டில் உள்ளதாக, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஐ.எஸ். தீவிரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சிரியா மற்றும் ஈராக்கில் சிறு குழுக்களாக இயங்கத் தொடங்கிள்ளனர். சுமார் பத்தாயிரத்துக்கும்; அதிகமான தீவிரவாதிகள் இவ்விரு நாடுகளில் செயற்பட்டு வருகின்றனர். கொவிட்-19 தொற்று பரவலால் உலகமே முடங்கி இருக்கும் நேரத்தில் ஆட்கள் சேர்ப்பது, நிதி திரட்டல் போன்ற நடவடிக்கைகளில் எப்படி அவர்கள் ஈடுபடுகிற…

    • 0 replies
    • 338 views
  10. சூறையாடப்படுமா அமெரிக்கத் தேர்தல்? பின்வரும் வாக்கியத்தை நான் எழுதவோ படிக்கவோ செய்வேன் என்று ஒருபோதும் நினைத்துப் பார்த்திருக்கவே மாட்டேன்: இந்த நவம்பர் மாதத்தில் அமெரிக்காவால் முதன்முறையாக சுதந்திரமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடத்த முடியாமல் போகலாம். அமெரிக்க அஞ்சல் துறையைத் தற்போதைய ட்ரம்பின் நிர்வாகம் முடக்கக்கூடிய வாய்ப்பிருப்பதால், அமெரிக்காவில் பாதிப் பேர் தங்கள் வாக்குகள் முறையாக எண்ணப்படவில்லை என்று நினைக்கக்கூடும். மீதமுள்ள பாதிப் பேர் அஞ்சல் வழியாக ஜோ பிடனுக்குக் கிடைக்கும் வாக்குகள் போலியானவை என்று அமெரிக்க அதிபரால் நம்ப வைக்கப்படக்கூடும். அது வெறுமனே இதைப் பிரச்சினைக்குரிய தேர்தலாக மட்டும் ஆக்காது. நாமறிந்த அமெரிக்க ஜனநாயகத்தின் அஸ்தமனமாகவும் அம…

  11. உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு: சிவப்பு மண்டலமாக அறிவித்த ஐரோப்பிய நாடு பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஐந்தாயிரத்திற்கும் மேல் தாண்டியுள்ள நிலையில், தலைநகர் பாரிசை ஐரோப்பிய நாடு சிவப்பு மண்டலமாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரான்சில் உலக சுகாதார அமைப்பின் தகவல் படி தற்போது வரை 233,293 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30,411 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால் நாட்டில் கொரோனா பரவலை தடுப்பதற்காக மேக்ரான் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முகக்கவசம் கட்டாயம், சமூக இடைவெளி அவசியம் போன்ற பல புதிய விதிகளையும் கொண்டு வந்துள்ளது. இதன் காரணமாக நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்தது போன்று தெர…

  12. 24 சீன நிறுவனங்களை கருப்புப் பட்டியலில் சேர்த்தது அமெரிக்கா சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதியில் செயற்கைத் தீவுகளை உருவாக்கிய 24 சீன நிறுவனங்களை அமெரிக்கா கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க உள்துறை அமைச்சர் மைக் பொம்பியோ விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 2013ஆம் ஆண்டு முதல் தென்சீனக் கடலில் 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை சீனா அகழ்வாராய்ச்சி செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இத்தகைய போக்கு பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு எதிரானது எனக் குறிப்பிட்டுள்ள அவர், செயற்கைத் தீவுகளை உருவாக்கியதன் மூலம் சீனா சுற்றுச்சூழலுக்கு பெரும் கேட்டினை விளைவித்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக செயற்கைத் தீவை அமைத்ததில் …

  13. பயங்கர லாரா பெரும்புயல்: 5 லட்சத்திற்கும் அதிகமானோர் வெளியேற உத்தரவு- ஆபத்தில் டெக்ஸாஸ், லூசியானா அமெரிக்காவை கரோனா உலுக்கி வரும் இந்தக் காலக்கட்டத்தில் பெரும்புயல் லாரா தனது கோர முகத்தைக் காட்ட தயாராகி வருகிறது. அமெரிக்காவின் கல்ஃப் கடற்கரைப் பகுதியிலிருந்து சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் டெக்ஸாஸ் மற்றும் லூசியானாவை பயங்கர சூறாவளிக் காற்று தாக்குவதோடு கடும் வெள்ள அபாயமும் ராட்சத அலைகள் காரணமாக கடல்நீர் சில மைல்கள் ஊருக்குள் புகும் என்றும் வானிலை முன்னறிவிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெக்ஸாஸ் மாகாணத்தின் பியுமோண்ட், கால்வெஸ்தன், போர்ட் ஆர்தர், நகர்களிலிருந்து 3,85,000 பேர் வெளியேறஅறிவுறுத்த…

  14. ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் உடலில் நச்சுப்பொருள் கலந்துள்ளது – ஜேர்மனி ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவான்லியின் உடலில் நச்சுப்பொருள் கலந்துள்ளதாக அவருக்கு சிகிச்சையளிக்கும் ஜேர்மனி வைத்தியசாலை தெரிவித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கடுமையாக விமர்சிக்கும் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரான 44 வயதான அலெக்ஸி நவல்னி, கடந்த வியாழக்கிழமை, சைபீரியாவில் உள்ள டாம்ஸ்க் நகரிலிருந்து தலைநகர் மாஸ்கோவுக்கு விமானத்தில் சென்ற போது, திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து விமானம் ஓம்ஸ்கில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து நவால்னி விமான நிலையத்தில் பருகிய தேநீரில் நச்சு கலந்திருக்கலாம் என நவால்னியின் ஆ…

  15. ஓவன் ஆமோஸ் பிபிசி 25 ஆகஸ்ட் 2020, 04:06 GMT உலகில் உள்ள 10 நாடுகளை தவிர்த்து மற்ற அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காணப்படுகிறது. இதுவரை ஒருவர் கூட கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்படாத அந்த பத்து நாடுகள் எவை? தற்போது அவை என்ன செய்து கொண்டிருக்கின்றன? உலகின் சிறிய நாடுகளில் ஒன்றான பலாவ், அந்த பத்து நாடுகளில் ஒன்று. 1982ஆம் ஆண்டுதான் அங்கு முதன் முதலில் உணவு விடுதியே திறக்கப்பட்டது. அதன் பெயர் பலாவ் ஹோட்டல். அப்போது முதல் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள அந்த மிகச் சிறிய நாட்டில் சுற்றுலா துறை அதிவேகமாக வளரத் தொடங்கியது. 2019ஆம் ஆண்டில் பலாவுக்கு 90,000 வெளிநாட்டு சுற்றுலாப்பயண…

  16. பிலிப்பைன்ஸில் இரட்டை குண்டுவெடிப்பு – 14 பேர் உயிரிழப்பு UPDATE 02 பிலிப்பைன்ஸில் மேற்கொள்ளப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு குறித்த குண்டு வெடிப்புக்களில் மேலும் 75 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. UPDATE 01 தெற்கு பிலிப்பைன்ஸ் நகரமான ஜோலோவில் பெண் தற்கொலை குண்டுதாரி நடத்தியதாக கூறப்படும் இரட்டை குண்டுவெடிப்பில் இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 10பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு தாக்குதல்களிலும் குறைந்தது 17 அரசாங்க துருப்புக்கள் காயமடைந்தனர். முதல் குண்டுவெடிப்பு மணிலாவிற்கு தெற்கே 1,000 கிலோமீட்டர் (621 மைல்) தொலைவில் சுலு ம…

  17. இஸ்ரேலில் 16 வயது சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாகக் கூறும் வழக்கை போலீஸார் விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஒரு நபர், 30 பேர் அந்தப் பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டதாக ஒப்புக் கொண்டார். ஆனால், பாலியல் வல்லுறவு என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளார் என்கிறது உள்ளூர் ஊடகங்கள் இந்த சம்பவமானது இஸ்ரேல் ஈலட் நகரத்தில் உள்ள ஒரு விடுதியில் நடந்துள்ளது. அந்த சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் வல்லுறவு செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்ற செயலில் ஈடுபட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ தெரிவித்துள்ளார். இது குறித்து ட்வீட் செய்த அவர், "அதிர்ச்சியாக இருக்க…

  18. தனது சகோதரர் டொனால்டு டிரம்ப் கொடூரமானவர், கொள்கையற்றவர் டிரம்பின் சகோதரி அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் சகோதரி மேரி ஆன் தமது சகோதரர் டொனால்டு டிரம்ப் கொடூரமானவர், கொள்கையற்றவர் என பேசியுள்ள ஆடியோ பதிவு ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற டிரம்பின் மருமகள் மேரி டிரம்ப் என்பவரிடமே 2018 மற்றும் 2019 காலகட்டத்தில் மேரி ஆன் குறித்த அதிர்ச்சியூட்டும் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அந்த உரையாடலை மேரி டிரம்ப் பதிவு செய்து பாதுகாத்து வந்துள்ளார். டொனால்டு டிரம்பின் சர்ச்சைக்குரிய புலம்பெயர்ந்தவர்களுக்கான கொள்கைகள், அவர்களது குழந்தைகள் குடும்பங்களிலிருந்து பிரித்து வைக…

  19. வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் கோமா நிலையில் இருப்பதாக அதிர்ச்சி தகவல்! வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன், கோமா நிலையில் இருப்பதாக தென் கொரியாவின் மறைந்த ஜனாதிபதி கிம் டே ஜங்கின் முன்னாள் உதவியாளரான சாங் சோங் மின் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர், வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன், தமது பொறுப்புகளில் சிலவற்றை தனது சகோதரிக்கு பகிர்ந்து அளித்ததாக வெளியான செய்திக்கு பிறகு, இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சாங் சோங் மின் கூறுகையில், ‘கிம் ஜோங்கின் தற்போதைய நிலை மேலும் நீடித்தால் அது வடகொரியாவுக்கு பேரழிவை ஏற்படுத்தும். தமக்கு கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில், கிம் ஜோங் உன் கோமா நிலையில் தான் இருக்கிறார், ஆனால் உயிருக்கு ஆபத்தான நி…

  20. லிபியாவில் உள்நாட்டு போர் நிறுத்தத்திற்கு இணக்கம்! லிபியாவில் இடம்பெற்று வந்த உள்நாட்டு போரை இடைநிறுத்துவதாக முக்கிய ஆயுதப்படைகள் அறிவித்துள்ளன. லிபியாவில் ஆட்சி தலைவராக இருந்த கடாபி, கடந்த 2011 ஆம் ஆண்டு கொல்லப்பட்டதையடுத்து, அந்நாட்டில் ஆட்சியை கைப்பற்ற பல்வேறு ஆயுதக் குழுக்களிடையே உள்நாட்டு போர் நடைபெற்று வந்தது. குறிப்பாக கொல்லப்பட்ட கடாபியின் ஆதரவாளரான கலிபா கப்தார் தலைமையிலான ஆயுதக் குழுவினர் நாட்டின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த குழுவினர், சர்வதேச அங்கீகாரம் பெற்ற லிபிய அரசுப் படைகளுடன் போரிட்டு வருகின்றனர். அரசுப் படை வசம் உள்ள தலைநகர் திரிபோலியை கைப்பற்றுவதற்காக கலிபா கப்தார் தலைமையிலான ஆயுதக் குழுவினர் கடந…

  21. யூத சமூகத் தலைவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒஸ்திரிய அதிபர் கண்டனம் தெற்கு நகரமான கிராஸில் ஒரு யூத சமூகத் தலைவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒஸ்திரிய அதிபர் செபாஸ்டியன் குர்ஸ் மற்றும் பிற மூத்த அரசாங்க அரசியல்வாதிகள் தெரிவித்தனர். மேலும் ஒஸ்திரியாவைச் சுற்றியுள்ள யூத தலங்கள் கடுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். கடந்த வாரத்தில் காழ்ப்புணர்ச்சியால் இரண்டு முறை குறிவைக்கப்பட்ட கிராஸ் யூத சமூகத்தின் தலைவர் எலி ரோசன் மீது ஜெப ஆலயத்தின் வளாகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்போது ரோசன் தனது காரில் தஞ்சமடைந்தார் என்றும் பின்னர் தாக்குதல் நடத்தியவர் தப்பி ஓடிவிட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந…

  22. மாலியில் தன்னை தானே புதிய ஜனாதிபதியாக அறிவித்துக்கொண்ட இராணுவ அதிகாரி அஸிமி கொய்டா! மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் தன்னை தானே புதிய ஜனாதிபதியாக இராணுவ உயரதிகாரி அஸிமி கோய்டா அறிவித்துக் கொண்டுள்ளார். அஸிமி கொய்டாவிற்கு, எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆதரவு அளித்துள்ளனர். நாட்டில் ஆட்சியை இராணுவம் கைப்பற்ற, இவர் முக்கிய காரணமாக இருந்தார் என கூறப்படுகிறது. தலைநகர் பமாகோவில் உள்ள இராணுவ அமைச்சகத்தில், உயரதிகாரிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய கொய்டா, இதன்பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ‘நான் என்னை முதலில் அறிமுகம் செய்துகொள்கிறேன். என் பெயர், கர்னல் அஸிமி கொய்டா. நான், மாலி இராணுவப் படையின் தலைவர். இன்று முதல், மாலி அ…

    • 0 replies
    • 498 views
  23. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: இரு பிரதான வேட்பாளர்களின் தேர்தல் செலவீனங்கள் விபரம்! அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களின் தேர்தல் செலவீனங்கள், குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாகப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியிடுகிறார். இந்நிலையில் குறித்த வேட்பாளர்களின் தேர்தல் செலவீனங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதனடிப்படையில், அமெரிக்க தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் பதிவுகளின்…

    • 0 replies
    • 314 views
  24. அன்றாட வாழ்வை அடியோடு மாற்றிய கொரோனா மனித குலத்தில் இந்த தொற்று ஒரு அசாத்தியமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா- இந்த நூற்றாண்டில் இதுவரையில் பெரும்பாலான மக்களால் அதிகமாக பயன்படுத்தப்படுகிற ஒரு வார்த்தையாக மாறி விட்டிருக்கிறது. அந்த அளவுக்கு மனித குலத்தில் இந்த தொற்று ஒரு அசாத்தியமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கொ.மு., கொ.பி., என்று சொல்லத்தக்க விதத்தில் கொரோனாவுக்கு முந்தைய வாழ்க்கை, கொரோனாவுக்கு பிந்தைய வாழ்க்கை என்று இன்றைய தினம் இந்த கொரோனா மனித வாழ்க்கையை அடியோடு புரட்டிப்போட்டிருப்பது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிற ஜி.ஓ.கியூ.ஐ.ஐ. என்னும் அதிநவீன தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிற ஒருங்கிணைந்த தடுப்ப…

  25. ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற குடியேறிகளின் கப்பல் லிபிய கடல் எல்லையில் விபத்து; 45பேர் உயிரிழப்பு ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற குடியேறிகளின் கப்பல், லிபிய கடல் எல்லையில் மூழ்கியதில் குழந்தைகள் உட்பட 45பேர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உயர் ஆணையம் தெரிவித்துள்ளது. ஸ்வாரா நகரின் கடற்கரையோரத்தில் வைத்து கப்பலின் பொறி இயந்திரம் வெடித்ததினால் இந்த விபத்து சம்பவித்துள்ளது. இந்த கப்பல் விபத்துக்குள்ளானபோது அதில் 80க்கும் மேற்பட்டவர்கள் இருந்ததாகவும் விபத்திலிருந்து உயிர் தப்பிய 37 பேர் உள்ளூர் மீனவர்களால் மீட்கப்பட்டதாகவும் அகதிகள் உயர் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. ஆனால், இன்னொரு சர்வதேச ஊடகம், 117பேர் காணமால் போயுள்ளதாகவும் மூன்று பேர் மீட்கப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.